Wednesday, August 24, 2016

1 Saamuveal 30 | 1 சாமுவேல் 30 | 1 Samuel 30

தாவீதும்  அவன்  மனுஷரும்  மூன்றாம்  நாளிலே,  சிக்லாகுக்கு  வந்து  சேருகிறதற்குள்ளே,  அமலேக்கியர்  தென்புறத்துச்  சீமையின்மேலும்  சிக்லாகின்மேலும்  விழுந்து,  சிக்லாகைக்  கொள்ளையடித்து,  அதை  அக்கினியால்  சுட்டெரித்து,  (1சாமுவேல்  30:1)

thaaveethum  avan  manusharum  moon’raam  naa'lilea,  siklaagukku  vanthu  searugi’ratha’rku'l'lea,  amaleakkiyar  thenpu’raththuch  seemaiyinmealum  siklaakinmealum  vizhunthu,  siklaakaik  ko'l'laiyadiththu,  athai  akkiniyaal  sutteriththu,  (1saamuveal  30:1)

அதிலிருந்த  ஸ்திரீகளாகிய  சிறியவர்களையும்  பெரியவர்களையும்  சிறைபிடித்து,  ஒருவரையும்  கொன்றுபோடாமல்,  அவர்களைப்  பிடித்துக்கொண்டு,  தங்கள்  வழியே  போய்விட்டார்கள்.  (1சாமுவேல்  30:2)

athiliruntha  sthireega'laagiya  si’riyavarga'laiyum  periyavarga'laiyum  si’raipidiththu,  oruvaraiyum  kon’rupoadaamal,  avarga'laip  pidiththukko'ndu,  thangga'l  vazhiyea  poayvittaarga'l.  (1saamuveal  30:2)

தாவீதும்  அவன்  மனுஷரும்  அந்தப்  பட்டணத்திற்கு  வந்தபோது,  இதோ,  அது  அக்கினியினால்  சுட்டெரிக்கப்பட்டது  என்றும்,  தங்கள்  மனைவிகளும்  தங்கள்  குமாரரும்  தங்கள்  குமாரத்திகளும்  சிறைபிடித்துக்  கொண்டுபோகப்பட்டார்கள்  என்றும்  கண்டார்கள்.  (1சாமுவேல்  30:3)

thaaveethum  avan  manusharum  anthap  patta'naththi’rku  vanthapoathu,  ithoa,  athu  akkiniyinaal  sutterikkappattathu  en’rum,  thangga'l  manaiviga'lum  thangga'l  kumaararum  thangga'l  kumaaraththiga'lum  si’raipidiththuk  ko'ndupoagappattaarga'l  en’rum  ka'ndaarga'l.  (1saamuveal  30:3)

அப்பொழுது  தாவீதும்  அவனோடிருந்த  ஜனங்களும்  அழுகிறதற்குத்  தங்களில்  பெலனில்லாமல்  போகுமட்டும்  சத்தமிட்டு  அழுதார்கள்.  (1சாமுவேல்  30:4)

appozhuthu  thaaveethum  avanoadiruntha  janangga'lum  azhugi’ratha’rkuth  thangga'lil  belanillaamal  poagumattum  saththamittu  azhuthaarga'l.  (1saamuveal  30:4)

தாவீதின்  இரண்டு  மனைவிகளாகிய  யெஸ்ரயேல்  ஊராளான  அகினோவாமும்,  கர்மேல்  ஊராளான  நாபாலின்  மனைவியாயிருந்த  அபிகாயிலும்,  சிறைபிடித்துக்  கொண்டுபோகப்பட்டார்கள்.  (1சாமுவேல்  30:5)

thaaveethin  ira'ndu  manaiviga'laagiya  yesrayeal  ooraa'laana  aginoavaamum,  karmeal  ooraa'laana  naabaalin  manaiviyaayiruntha  abikaayilum,  si’raipidiththuk  ko'ndupoagappattaarga'l.  (1saamuveal  30:5)

தாவீது  மிகவும்  நெருக்கப்பட்டான்;  சகல  ஜனங்களும்  தங்கள்  குமாரர்  குமாரத்திகளினிமித்தம்  மனக்கிலேசமானதினால்,  அவனைக்  கல்லெறியவேண்டும்  என்று  சொல்லிக்கொண்டார்கள்;  தாவீது  தன்  தேவனாகிய  கர்த்தருக்குள்ளே  தன்னைத்  திடப்படுத்திக்கொண்டான்.  (1சாமுவேல்  30:6)

thaaveethu  migavum  nerukkappattaan;  sagala  janangga'lum  thangga'l  kumaarar  kumaaraththiga'linimiththam  manakkileasamaanathinaal,  avanaik  kalle’riyavea'ndum  en’ru  sollikko'ndaarga'l;  thaaveethu  than  theavanaagiya  karththarukku'l'lea  thannaith  thidappaduththikko'ndaan.  (1saamuveal  30:6)

தாவீது  அகிமெலேக்கின்  குமாரனாகிய  அபியத்தார்  என்னும்  ஆசாரியனை  நோக்கி:  ஏபோத்தை  என்னிடத்தில்  கொண்டுவா  என்றான்;  அபியத்தார்  ஏபோத்தைத்  தாவீதினிடத்தில்  கொண்டுவந்தான்.  (1சாமுவேல்  30:7)

thaaveethu  agimeleakkin  kumaaranaagiya  abiyaththaar  ennum  aasaariyanai  noakki:  eaboaththai  ennidaththil  ko'nduvaa  en’raan;  abiyaththaar  eaboaththaith  thaaveethinidaththil  ko'nduvanthaan.  (1saamuveal  30:7)

தாவீது  கர்த்தரை  நோக்கி:  நான்  அந்தத்  தண்டைப்  பின்தொடரவேண்டுமா?  அதைப்  பிடிப்பேனா?  என்று  கேட்டான்.  அதற்கு  அவர்:  அதைப்  பின்தொடர்;  அதை  நீ  பிடித்து,  சகலத்தையும்  திருப்பிக்கொள்வாய்  என்றார்.  (1சாமுவேல்  30:8)

thaaveethu  karththarai  noakki:  naan  anthath  tha'ndaip  pinthodaravea'ndumaa?  athaip  pidippeanaa?  en’ru  keattaan.  atha’rku  avar:  athaip  pinthodar;  athai  nee  pidiththu,  sagalaththaiyum  thiruppikko'lvaay  en’raar.  (1saamuveal  30:8)

அப்பொழுது  தாவீதும்  அவனோடிருந்த  அறுநூறுபேரும்  போனார்கள்;  அவர்கள்  பேசோர்  ஆற்றண்டைக்கு  வந்தபோது  அங்கே  சிலர்  நின்றுபோனார்கள்.  (1சாமுவேல்  30:9)

appozhuthu  thaaveethum  avanoadiruntha  a’runoo’rupearum  poanaarga'l;  avarga'l  beasoar  aat’ra'ndaikku  vanthapoathu  anggea  silar  nin’rupoanaarga'l.  (1saamuveal  30:9)

தாவீதோ,  நானூறுபேரோடுங்கூடத்  தொடர்ந்துபோனான்;  இருநூறுபேர்  விடாய்த்துப்போனபடியினால்  பேசோர்  ஆற்றைக்  கடக்கமாட்டாமல்  நின்றுபோனார்கள்.  (1சாமுவேல்  30:10)

thaaveethoa,  naanoo’rupearoadungkoodath  thodarnthupoanaan;  irunoo’rupear  vidaayththuppoanapadiyinaal  beasoar  aat’raik  kadakkamaattaamal  nin’rupoanaarga'l.  (1saamuveal  30:10)

ஒரு  எகிப்தியனை  வெளியில்  அவர்கள்  கண்டு,  அவனைத்  தாவீதினிடத்தில்  கொண்டுவந்து,  புசிக்க  அவனுக்கு  அப்பமும்  குடிக்கத்  தண்ணீரும்  கொடுத்து,  (1சாமுவேல்  30:11)

oru  egipthiyanai  ve'liyil  avarga'l  ka'ndu,  avanaith  thaaveethinidaththil  ko'nduvanthu,  pusikka  avanukku  appamum  kudikkath  tha'n'neerum  koduththu,  (1saamuveal  30:11)

அத்திப்பழ  அடையின்  ஒரு  துண்டையும்,  வற்றலான  இரண்டு  திராட்சப்பழக்  குலைகளையும்  அவனுக்குக்  கொடுத்தார்கள்;  அதை  அவன்  சாப்பிட்ட  பின்பு,  அவனுடைய  உயிர்  திரும்ப  அவனுக்குள்  வந்தது.  அவன்  இராப்பகல்  மூன்றுநாளாய்  அப்பம்  சாப்பிடாமலும்  தண்ணீர்  குடியாமலும்  இருந்தான்.  (1சாமுவேல்  30:12)

aththippazha  adaiyin  oru  thu'ndaiyum,  vat’ralaana  ira'ndu  thiraadchappazhak  kulaiga'laiyum  avanukkuk  koduththaarga'l;  athai  avan  saappitta  pinbu,  avanudaiya  uyir  thirumba  avanukku'l  vanthathu.  avan  iraappagal  moon’runaa'laay  appam  saappidaamalum  tha'n'neer  kudiyaamalum  irunthaan.  (1saamuveal  30:12)

தாவீது  அவனை  நோக்கி:  நீ  யாருடையவன்?  நீ  எவ்விடத்தான்  என்று  கேட்டதற்கு,  அவன்:  நான்  ஒரு  அமலேக்கியனுடைய  வேலைக்காரனாகிய  எகிப்துதேசத்துப்  பிள்ளையாண்டான்;  மூன்று  நாளைக்குமுன்  நான்  வியாதிப்பட்டபோது,  என்  எஜமான்  என்னைக்  கைவிட்டான்.  (1சாமுவேல்  30:13)

thaaveethu  avanai  noakki:  nee  yaarudaiyavan?  nee  evvidaththaan  en’ru  keattatha’rku,  avan:  naan  oru  amaleakkiyanudaiya  vealaikkaaranaagiya  egipthutheasaththup  pi'l'laiyaa'ndaan;  moon’ru  naa'laikkumun  naan  viyaathippattapoathu,  en  ejamaan  ennaik  kaivittaan.  (1saamuveal  30:13)

நாங்கள்  கிரேத்தியருடைய  தென்புறத்தின்மேலும்,  யூதாவுக்கடுத்த  எல்லையின்மேலும்,  காலேபுடைய  தென்புறத்தின்மேலும்,  படையெடுத்துப்போய்  சிக்லாகை  அக்கினியினால்  சுட்டெரித்துப்போட்டோம்  என்றான்.  (1சாமுவேல்  30:14)

naangga'l  kireaththiyarudaiya  thenpu’raththinmealum,  yoothaavukkaduththa  ellaiyinmealum,  kaaleabudaiya  thenpu’raththinmealum,  padaiyeduththuppoay  siklaakai  akkiniyinaal  sutteriththuppoattoam  en’raan.  (1saamuveal  30:14)

தாவீது  அவனை  நோக்கி:  நீ  என்னை  அந்தத்  தண்டினிடத்துக்குக்  கொண்டு  போவாயா  என்று  கேட்டதற்கு:  அவன்,  நீர்  என்னைக்  கொன்றுபோடுவதுமில்லை,  என்னை  என்  எஜமான்  கையில்  ஒப்புக்கொடுப்பதுமில்லை  என்று  தேவன்மேல்  ஆணையிடுவீரானால்,  உம்மை  அந்தத்  தண்டினிடத்துக்குக்  கூட்டிக்கொண்டுபோவேன்  என்றான்.  (1சாமுவேல்  30:15)

thaaveethu  avanai  noakki:  nee  ennai  anthath  tha'ndinidaththukkuk  ko'ndu  poavaayaa  en’ru  keattatha’rku:  avan,  neer  ennaik  kon’rupoaduvathumillai,  ennai  en  ejamaan  kaiyil  oppukkoduppathumillai  en’ru  theavanmeal  aa'naiyiduveeraanaal,  ummai  anthath  tha'ndinidaththukkuk  koottikko'ndupoavean  en’raan.  (1saamuveal  30:15)

இவன்  அவனைக்  கொண்டுபோய்  விட்டபோது,  இதோ,  அவர்கள்  வெளியெங்கும்  பரவி,  புசித்துக்  குடித்து,  தாங்கள்  பெலிஸ்தர்  தேசத்திலும்  யூதாதேசத்திலும்  கொள்ளையிட்டுவந்த  மகா  பெரிதான  அந்த  எல்லாக்  கொள்ளைக்காகவும்  ஆடிப்பாடிக்கொண்டிருந்தார்கள்.  (1சாமுவேல்  30:16)

ivan  avanaik  ko'ndupoay  vittapoathu,  ithoa,  avarga'l  ve'liyenggum  paravi,  pusiththuk  kudiththu,  thaangga'l  pelisthar  theasaththilum  yoothaatheasaththilum  ko'l'laiyittuvantha  mahaa  perithaana  antha  ellaak  ko'l'laikkaagavum  aadippaadikko'ndirunthaarga'l.  (1saamuveal  30:16)

அவர்களைத்  தாவீது  அன்று  சாயங்காலந்தொடங்கி  மறுநாள்  சாயங்காலமட்டும்  முறிய  அடித்தான்;  ஒட்டகங்கள்மேல்  ஏறி  ஓடிப்போன  நானூறு  வாலிபர்  தவிர,  அவர்களில்  வேறொருவரும்  தப்பவில்லை.  (1சாமுவேல்  30:17)

avarga'laith  thaaveethu  an’ru  saayanggaalanthodanggi  ma’runaa'l  saayanggaalamattum  mu’riya  adiththaan;  ottagangga'lmeal  ea’ri  oadippoana  naanoo’ru  vaalibar  thavira,  avarga'lil  vea’roruvarum  thappavillai.  (1saamuveal  30:17)

அமலேக்கியர்  பிடித்துக்கொண்டுபோன  எல்லாவற்றையும்,  தன்னுடைய  இரண்டு  மனைவிகளையும்,  தாவீது  விடுவித்தான்.  (1சாமுவேல்  30:18)

amaleakkiyar  pidiththukko'ndupoana  ellaavat’raiyum,  thannudaiya  ira'ndu  manaiviga'laiyum,  thaaveethu  viduviththaan.  (1saamuveal  30:18)

அவர்கள்  கொள்ளையாடிக்கொண்டுபோன  எல்லாவற்றிலும்,  சிறியதிலும்  பெரியதிலும்,  குமாரரிலும்,  குமாரத்திகளிலும்,  ஒன்றும்  குறைபடாமல்  எல்லாவற்றையும்  தாவீது  திருப்பிக்கொண்டான்.  (1சாமுவேல்  30:19)

avarga'l  ko'l'laiyaadikko'ndupoana  ellaavat’rilum,  si’riyathilum  periyathilum,  kumaararilum,  kumaaraththiga'lilum,  on’rum  ku’raipadaamal  ellaavat’raiyum  thaaveethu  thiruppikko'ndaan.  (1saamuveal  30:19)

எல்லா  ஆடுமாடுகளையும்  தாவீது  பிடித்துக்கொண்டான்;  அவைகளைத்  தங்கள்  மிருகஜீவன்களுக்கு  முன்னாலே  ஓட்டி,  இது  தாவீதின்  கொள்ளை  என்றார்கள்.  (1சாமுவேல்  30:20)

ellaa  aadumaaduga'laiyum  thaaveethu  pidiththukko'ndaan;  avaiga'laith  thangga'l  mirugajeevanga'lukku  munnaalea  oatti,  ithu  thaaveethin  ko'l'lai  en’raarga'l.  (1saamuveal  30:20)

விடாய்த்துப்போனதினாலே  தாவீதுக்குப்  பின்செல்லாமல்,  பேசோர்  ஆற்றண்டையிலே  தங்கியிருந்த  இருநூறுபேரிடத்துக்குத்  தாவீது  வருகிறபோது,  இவர்கள்  தாவீதுக்கும்  அவனோடிருந்த  ஜனத்திற்கும்  எதிர்கொண்டு  வந்தார்கள்;  தாவீது  அந்த  ஜனத்தினிடத்தில்  சேர்ந்து,  அவர்கள்  சுகசெய்தியை  விசாரித்தான்.  (1சாமுவேல்  30:21)

vidaayththuppoanathinaalea  thaaveethukkup  pinsellaamal,  beasoar  aat’ra'ndaiyilea  thanggiyiruntha  irunoo’rupearidaththukkuth  thaaveethu  varugi’rapoathu,  ivarga'l  thaaveethukkum  avanoadiruntha  janaththi’rkum  ethirko'ndu  vanthaarga'l;  thaaveethu  antha  janaththinidaththil  searnthu,  avarga'l  sugaseythiyai  visaariththaan.  (1saamuveal  30:21)

அப்பொழுது  தாவீதோடே  நடந்து  வந்த  மனுஷரில்  பொல்லாதவர்களும்  பேலியாளின்  மக்களுமான  எல்லாரும்:  அவர்கள்  எங்களோடே  வராதபடியினால்  நாங்கள்  திருப்பிக்கொண்ட  கொள்ளையுடைமைகளில்  அவர்களுக்கு  ஒன்றும்  கொடுப்பதில்லை;  அவர்களில்  ஒவ்வொருவனும்  தன்தன்  மனைவியையும்  தன்தன்  பிள்ளைகளையுமே  அழைத்துக்கொண்டு  போகட்டும்  என்றார்கள்.  (1சாமுவேல்  30:22)

appozhuthu  thaaveethoadea  nadanthu  vantha  manusharil  pollaathavarga'lum  bealiyaa'lin  makka'lumaana  ellaarum:  avarga'l  engga'loadea  varaathapadiyinaal  naangga'l  thiruppikko'nda  ko'l'laiyudaimaiga'lil  avarga'lukku  on’rum  koduppathillai;  avarga'lil  ovvoruvanum  thanthan  manaiviyaiyum  thanthan  pi'l'laiga'laiyumea  azhaiththukko'ndu  poagattum  en’raarga'l.  (1saamuveal  30:22)

அதற்குத்  தாவீது:  என்  சகோதரரே,  கர்த்தர்  நமக்குத்  தந்ததை  நீங்கள்  இப்படிச்  செய்யவேண்டாம்;  கர்த்தர்  நம்மைக்  காப்பாற்றி,  நமக்கு  விரோதமாய்  வந்திருந்த  அந்தத்  தண்டை  நம்முடைய  கையில்  ஒப்புக்கொடுத்தார்.  (1சாமுவேல்  30:23)

atha’rkuth  thaaveethu:  en  sagoathararea,  karththar  namakkuth  thanthathai  neengga'l  ippadich  seyyavea'ndaam;  karththar  nammaik  kaappaat’ri,  namakku  viroathamaay  vanthiruntha  anthath  tha'ndai  nammudaiya  kaiyil  oppukkoduththaar.  (1saamuveal  30:23)

இந்தக்  காரியத்தில்  உங்கள்  சொற்கேட்க  யார்  சம்மதிப்பான்?  யுத்தத்திற்குப்  போனவர்களின்  பங்கு  எவ்வளவோ,  அவ்வளவு  ரஸ்துக்களண்டையில்  இருந்தவர்களுக்கும்  பங்குவீதம்  கிடைக்கவேண்டும்;  சரிபங்காகப்  பங்கிடுவார்களாக  என்றான்.  (1சாமுவேல்  30:24)

inthak  kaariyaththil  ungga'l  so’rkeadka  yaar  sammathippaan?  yuththaththi’rkup  poanavarga'lin  panggu  evva'lavoa,  avva'lavu  rasthukka'la'ndaiyil  irunthavarga'lukkum  pangguveetham  kidaikkavea'ndum;  saripanggaagap  panggiduvaarga'laaga  en’raan.  (1saamuveal  30:24)

அப்படியே  அந்நாள்முதற்கொண்டு  நடந்துவருகிறது;  அதை  இஸ்ரவேலிலே  இந்நாள்வரைக்கும்  இருக்கும்  கட்டளையும்  பிரமாணமுமாக  ஏற்படுத்தினான்.  (1சாமுவேல்  30:25)

appadiyea  annaa'lmutha’rko'ndu  nadanthuvarugi’rathu;  athai  isravealilea  innaa'lvaraikkum  irukkum  katta'laiyum  piramaa'namumaaga  ea’rpaduththinaan.  (1saamuveal  30:25)

தாவீது  சிக்லாகுக்கு  வந்தபோது,  அவன்  கொள்ளையாடினவைகளிலே  தன்  சிநேகிதராகிய  யூதாவின்  மூப்பருக்குச்  சிலவற்றை  அனுப்பி:  இதோ,  கர்த்தருடைய  சத்துருக்களின்  கொள்ளையில்  உங்களுக்கு  உண்டாயிருக்கும்  ஆசீர்வாத  பாகம்  என்று  சொல்லச்சொன்னான்.  (1சாமுவேல்  30:26)

thaaveethu  siklaagukku  vanthapoathu,  avan  ko'l'laiyaadinavaiga'lilea  than  sineagitharaagiya  yoothaavin  moopparukkuch  silavat’rai  anuppi:  ithoa,  karththarudaiya  saththurukka'lin  ko'l'laiyil  ungga'lukku  u'ndaayirukkum  aaseervaatha  paagam  en’ru  sollachsonnaan.  (1saamuveal  30:26)

யார்யாருக்கு  அனுப்பினானென்றால்,  பெத்தேலில்  இருக்கிறவர்களுக்கும்,  தெற்கான  ராமோத்தில்  இருக்கிறவர்களுக்கும்,  யாத்தீரில்  இருக்கிறவர்களுக்கும்,  (1சாமுவேல்  30:27)

yaaryaarukku  anuppinaanen’raal,  beththealil  irukki’ravarga'lukkum,  the’rkaana  raamoaththil  irukki’ravarga'lukkum,  yaaththeeril  irukki’ravarga'lukkum,  (1saamuveal  30:27)

ஆரோவேரில்  இருக்கிறவர்களுக்கும்,  சிப்மோத்தில்  இருக்கிறவர்களுக்கும்,  எஸ்தெமோவாவில்  இருக்கிறவர்களுக்கும்,  (1சாமுவேல்  30:28)

aaroavearil  irukki’ravarga'lukkum,  sipmoaththil  irukki’ravarga'lukkum,  esthemoavaavil  irukki’ravarga'lukkum,  (1saamuveal  30:28)

ராக்காலில்  இருக்கிறவர்களுக்கும்,  யெராமியேலியரின்  பட்டணங்களில்  இருக்கிறவர்களுக்கும்,  கேனியரின்  பட்டணங்களில்  இருக்கிறவர்களுக்கும்,  (1சாமுவேல்  30:29)

raakkaalil  irukki’ravarga'lukkum,  yeraamiyealiyarin  patta'nangga'lil  irukki’ravarga'lukkum,  keaniyarin  patta'nangga'lil  irukki’ravarga'lukkum,  (1saamuveal  30:29)

ஒர்மாவில்  இருக்கிறவர்களுக்கும்,  கொராசானில்  இருக்கிறவர்களுக்கும்,  ஆற்றாகில்  இருக்கிறவர்களுக்கும்,  (1சாமுவேல்  30:30)

ormaavil  irukki’ravarga'lukkum,  koraasaanil  irukki’ravarga'lukkum,  aat’raakil  irukki’ravarga'lukkum,  (1saamuveal  30:30)

எப்ரோனில்  இருக்கிறவர்களுக்கும்,  தாவீதும்  அவன்  மனுஷரும்  நடமாடின  எல்லா  இடங்களில்  இருக்கிறவர்களுக்கும்  அனுப்பினான்.  (1சாமுவேல்  30:31)

ebroanil  irukki’ravarga'lukkum,  thaaveethum  avan  manusharum  nadamaadina  ellaa  idangga'lil  irukki’ravarga'lukkum  anuppinaan.  (1saamuveal  30:31)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!