Saturday, August 20, 2016

1 Saamuveal 3 | 1 சாமுவேல் 3 | 1 Samuel 3

சாமுவேல்  என்னும்  பிள்ளையாண்டான்  ஏலிக்கு  முன்பாகக்  கர்த்தருக்குப்  பணிவிடை  செய்துகொண்டிருந்தான்;  அந்நாட்களிலே  கர்த்தருடைய  வசனம்  அபூர்வமாயிருந்தது;  பிரத்தியட்சமான  தரிசனம்  இருந்ததில்லை.  (1சாமுவேல்  3:1)

saamuveal  ennum  pi'l'laiyaa'ndaan  ealikku  munbaagak  karththarukkup  pa'nividai  seythuko'ndirunthaan;  annaadka'lilea  karththarudaiya  vasanam  aboorvamaayirunthathu;  piraththiyadchamaana  tharisanam  irunthathillai.  (1saamuveal  3:1)

ஒருநாள்  ஏலி  தன்னுடைய  ஸ்தானத்திலே  படுத்துக்கொண்டிருந்தான்;  அவன்  பார்க்கக்கூடாதபடிக்கு  அவனுடைய  கண்கள்  இருளடைந்திருந்தது.  (1சாமுவேல்  3:2)

orunaa'l  eali  thannudaiya  sthaanaththilea  paduththukko'ndirunthaan;  avan  paarkkakkoodaathapadikku  avanudaiya  ka'nga'l  iru'ladainthirunthathu.  (1saamuveal  3:2)

தேவனுடைய  பெட்டி  இருக்கிற  கர்த்தருடைய  ஆலயத்தில்  தேவனுடைய  விளக்கு  அணைந்துபோகுமுன்னே  சாமுவேலும்  படுத்துக்கொண்டிருந்தான்.  (1சாமுவேல்  3:3)

theavanudaiya  petti  irukki’ra  karththarudaiya  aalayaththil  theavanudaiya  vi'lakku  a'nainthupoagumunnea  saamuvealum  paduththukko'ndirunthaan.  (1saamuveal  3:3)

அப்பொழுது  கர்த்தர்,  சாமுவேலைக்  கூப்பிட்டார்.  அதற்கு  அவன்:  இதோ,  இருக்கிறேன்  என்று  சொல்லி,  (1சாமுவேல்  3:4)

appozhuthu  karththar,  saamuvealaik  kooppittaar.  atha’rku  avan:  ithoa,  irukki’rean  en’ru  solli,  (1saamuveal  3:4)

ஏலியினிடத்தில்  ஓடி,  இதோ,  இருக்கிறேன்;  என்னைக்  கூப்பிட்டீரே  என்றான்.  அதற்கு  அவன்:  நான்  கூப்பிடவில்லை,  திரும்பிப்போய்ப்  படுத்துக்கொள்  என்றான்;  அவன்  போய்ப்  படுத்துக்கொண்டான்.  (1சாமுவேல்  3:5)

ealiyinidaththil  oadi,  ithoa,  irukki’rean;  ennaik  kooppitteerea  en’raan.  atha’rku  avan:  naan  kooppidavillai,  thirumbippoayp  paduththukko'l  en’raan;  avan  poayp  paduththukko'ndaan.  (1saamuveal  3:5)

மறுபடியும்  கர்த்தர்  சாமுவேலே  என்று  கூப்பிட்டார்;  அப்பொழுது  சாமுவேல்  எழுந்திருந்து  ஏலியினிடத்தில்  போய்:  இதோ,  இருக்கிறேன்;  என்னைக்  கூப்பிட்டீரே  என்றான்.  அதற்கு  அவன்:  என்  மகனே,  நான்  உன்னைக்  கூப்பிடவில்லை,  திரும்பிப்போய்ப்  படுத்துக்கொள்  என்றான்.  (1சாமுவேல்  3:6)

ma’rupadiyum  karththar  saamuvealea  en’ru  kooppittaar;  appozhuthu  saamuveal  ezhunthirunthu  ealiyinidaththil  poay:  ithoa,  irukki’rean;  ennaik  kooppitteerea  en’raan.  atha’rku  avan:  en  maganea,  naan  unnaik  kooppidavillai,  thirumbippoayp  paduththukko'l  en’raan.  (1saamuveal  3:6)

சாமுவேல்  கர்த்தரை  இன்னும்  அறியாதிருந்தான்;  கர்த்தருடைய  வார்த்தை  அவனுக்கு  இன்னும்  வெளிப்படவில்லை.  (1சாமுவேல்  3:7)

saamuveal  karththarai  innum  a’riyaathirunthaan;  karththarudaiya  vaarththai  avanukku  innum  ve'lippadavillai.  (1saamuveal  3:7)

கர்த்தர்  மறுபடியும்  மூன்றாம்விசை:  சாமுவேலே  என்று  கூப்பிட்டார்.  அவன்  எழுந்திருந்து  ஏலியினிடத்தில்  போய்,  இதோ,  இருக்கிறேன்;  என்னைக்  கூப்பிட்டீரே  என்றான்.  அப்பொழுது  கர்த்தர்  பிள்ளையாண்டானைக்  கூப்பிடுகிறார்  என்று  ஏலி  அறிந்து,  (1சாமுவேல்  3:8)

karththar  ma’rupadiyum  moon’raamvisai:  saamuvealea  en’ru  kooppittaar.  avan  ezhunthirunthu  ealiyinidaththil  poay,  ithoa,  irukki’rean;  ennaik  kooppitteerea  en’raan.  appozhuthu  karththar  pi'l'laiyaa'ndaanaik  kooppidugi’raar  en’ru  eali  a’rinthu,  (1saamuveal  3:8)

சாமுவேலை  நோக்கி:  நீ  போய்ப்  படுத்துக்கொள்;  உன்னைக்  கூப்பிட்டால்,  அப்பொழுது  நீ:  கர்த்தாவே  சொல்லும்;  அடியேன்  கேட்கிறேன்  என்று  சொல்  என்றான்;  சாமுவேல்  போய்,  தன்னுடைய  ஸ்தானத்திலே  படுத்துக்கொண்டான்.  (1சாமுவேல்  3:9)

saamuvealai  noakki:  nee  poayp  paduththukko'l;  unnaik  kooppittaal,  appozhuthu  nee:  karththaavea  sollum;  adiyean  keadki’rean  en’ru  sol  en’raan;  saamuveal  poay,  thannudaiya  sthaanaththilea  paduththukko'ndaan.  (1saamuveal  3:9)

அப்பொழுது  கர்த்தர்  வந்து  நின்று,  முன்போல:  சாமுவேலே  சாமுவேலே  என்று  கூப்பிட்டார்;  அதற்குச்  சாமுவேல்:  சொல்லும்;  அடியேன்  கேட்கிறேன்  என்றான்.  (1சாமுவேல்  3:10)

appozhuthu  karththar  vanthu  nin’ru,  munpoala:  saamuvealea  saamuvealea  en’ru  kooppittaar;  atha’rkuch  saamuveal:  sollum;  adiyean  keadki’rean  en’raan.  (1saamuveal  3:10)

கர்த்தர்  சாமுவேலை  நோக்கி:  இதோ,  நான்  இஸ்ரவேலில்  ஒரு  காரியத்தைச்  செய்வேன்;  அதைக்  கேட்கிற  ஒவ்வொருவனுடைய  இரண்டு  காதுகளிலும்  அது  தொனித்துக்கொண்டிருக்கும்.  (1சாமுவேல்  3:11)

karththar  saamuvealai  noakki:  ithoa,  naan  isravealil  oru  kaariyaththaich  seyvean;  athaik  keadki’ra  ovvoruvanudaiya  ira'ndu  kaathuga'lilum  athu  thoniththukko'ndirukkum.  (1saamuveal  3:11)

நான்  ஏலியின்  குடும்பத்திற்கு  விரோதமாகச்  சொன்ன  யாவையும்,  அவன்மேல்  அந்நாளிலே  வரப்பண்ணுவேன்;  அதைத்  தொடங்கவும்  அதை  முடிக்கவும்  போகிறேன்.  (1சாமுவேல்  3:12)

naan  ealiyin  kudumbaththi’rku  viroathamaagach  sonna  yaavaiyum,  avanmeal  annaa'lilea  varappa'n'nuvean;  athaith  thodanggavum  athai  mudikkavum  poagi’rean.  (1saamuveal  3:12)

அவன்  குமாரர்  தங்கள்மேல்  சாபத்தை  வரப்பண்ணுகிறதை  அவன்  அறிந்திருந்தும்,  அவர்களை  அடக்காமற்போன  பாவத்தினிமித்தம்,  நான்  அவன்  குடும்பத்துக்கு  என்றும்  நீங்காத  நியாயத்தீர்ப்புச்  செய்வேன்  என்று  அவனுக்கு  அறிவித்தேன்.  (1சாமுவேல்  3:13)

avan  kumaarar  thangga'lmeal  saabaththai  varappa'n'nugi’rathai  avan  a’rinthirunthum,  avarga'lai  adakkaama’rpoana  paavaththinimiththam,  naan  avan  kudumbaththukku  en’rum  neenggaatha  niyaayaththeerppuch  seyvean  en’ru  avanukku  a’riviththean.  (1saamuveal  3:13)

அதினிமித்தம்  ஏலியின்  குடும்பத்தார்  செய்த  அக்கிரமம்  ஒருபோதும்  பலியினாலாவது  காணிக்கையினாலாவது  நிவிர்த்தியாவதில்லை  என்று  ஏலியின்  குடும்பத்தைக்குறித்து  ஆணையிட்டிருக்கிறேன்  என்றார்.  (1சாமுவேல்  3:14)

athinimiththam  ealiyin  kudumbaththaar  seytha  akkiramam  orupoathum  baliyinaalaavathu  kaa'nikkaiyinaalaavathu  nivirththiyaavathillai  en’ru  ealiyin  kudumbaththaikku’riththu  aa'naiyittirukki’rean  en’raar.  (1saamuveal  3:14)

சாமுவேல்  விடியற்காலமட்டும்  படுத்திருந்து,  கர்த்தருடைய  ஆலயத்தின்  கதவுகளைத்  திறந்தான்;  சாமுவேல்  ஏலிக்கு  அந்தத்  தரிசனத்தை  அறிவிக்கப்  பயந்தான்.  (1சாமுவேல்  3:15)

saamuveal  vidiya’rkaalamattum  paduththirunthu,  karththarudaiya  aalayaththin  kathavuga'laith  thi’ranthaan;  saamuveal  ealikku  anthath  tharisanaththai  a’rivikkap  bayanthaan.  (1saamuveal  3:15)

ஏலியோ:  சாமுவேலே,  என்  மகனே  என்று  சாமுவேலைக்  கூப்பிட்டான்.  அவன்:  இதோ,  இருக்கிறேன்  என்றான்.  (1சாமுவேல்  3:16)

ealiyoa:  saamuvealea,  en  maganea  en’ru  saamuvealaik  kooppittaan.  avan:  ithoa,  irukki’rean  en’raan.  (1saamuveal  3:16)

அப்பொழுது  அவன்:  கர்த்தர்  உன்னிடத்தில்  சொன்ன  காரியம்  என்ன?  எனக்கு  அதை  மறைக்கவேண்டாம்;  அவர்  உன்னிடத்தில்  சொன்ன  சகல  காரியத்திலும்  யாதொன்றை  எனக்கு  மறைத்தாயானால்,  தேவன்  உனக்கு  அதற்குச்  சரியாகவும்  அதற்கு  அதிகமாகவும்  செய்வாராக  என்றான்.  (1சாமுவேல்  3:17)

appozhuthu  avan:  karththar  unnidaththil  sonna  kaariyam  enna?  enakku  athai  ma’raikkavea'ndaam;  avar  unnidaththil  sonna  sagala  kaariyaththilum  yaathon’rai  enakku  ma’raiththaayaanaal,  theavan  unakku  atha’rkuch  sariyaagavum  atha’rku  athigamaagavum  seyvaaraaga  en’raan.  (1saamuveal  3:17)

அப்பொழுது  சாமுவேல்  ஒன்றையும்  அவனுக்கு  மறைக்காமல்,  அந்தக்  காரியங்களையெல்லாம்  அவனுக்கு  அறிவித்தான்.  அதற்கு  அவன்:  அவர்  கர்த்தர்;  அவர்  தமது  பார்வைக்கு  நலமானதைச்  செய்வாராக  என்றான்.  (1சாமுவேல்  3:18)

appozhuthu  saamuveal  on’raiyum  avanukku  ma’raikkaamal,  anthak  kaariyangga'laiyellaam  avanukku  a’riviththaan.  atha’rku  avan:  avar  karththar;  avar  thamathu  paarvaikku  nalamaanathaich  seyvaaraaga  en’raan.  (1saamuveal  3:18)

சாமுவேல்  வளர்ந்தான்;  கர்த்தர்  அவனுடனேகூட  இருந்தார்;  அவர்  தம்முடைய  எல்லா  வார்த்தைகளிலும்  ஒன்றையாகிலும்  தரையிலே  விழுந்துபோக  விடவில்லை.  (1சாமுவேல்  3:19)

saamuveal  va'larnthaan;  karththar  avanudaneakooda  irunthaar;  avar  thammudaiya  ellaa  vaarththaiga'lilum  on’raiyaagilum  tharaiyilea  vizhunthupoaga  vidavillai.  (1saamuveal  3:19)

சாமுவேல்  கர்த்தருடைய  தீர்க்கதரிசிதான்  என்று  தாண்முதல்  பெயெர்செபாமட்டுமுள்ள  சகல  இஸ்ரவேலருக்கும்  விளங்கினது.  (1சாமுவேல்  3:20)

saamuveal  karththarudaiya  theerkkatharisithaan  en’ru  thaa'nmuthal  beyersebaamattumu'l'la  sagala  isravealarukkum  vi'langginathu.  (1saamuveal  3:20)

கர்த்தர்  பின்னும்  சீலோவிலே  தரிசனம்  தந்தருளினார்;  கர்த்தர்  சீலோவிலே  தம்முடைய  வார்த்தையினாலே  சாமுவேலுக்குத்  தம்மை  வெளிப்படுத்தினார்.  (1சாமுவேல்  3:21)

karththar  pinnum  seeloavilea  tharisanam  thantharu'linaar;  karththar  seeloavilea  thammudaiya  vaarththaiyinaalea  saamuvealukkuth  thammai  ve'lippaduththinaar.  (1saamuveal  3:21)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!