Wednesday, August 24, 2016

1 Saamuveal 29 | 1 சாமுவேல் 29 | 1 Samuel 29

பெலிஸ்தர்  தங்கள்  சேனைகளையெல்லாம்  ஆப்பெக்கிலே  கூடிவரச்செய்தார்கள்;  இஸ்ரவேலர்  யெஸ்ரயேலிலிருக்கிற  துரவண்டையிலே  பாளயமிறங்கினார்கள்.  (1சாமுவேல்  29:1)

pelisthar  thangga'l  seanaiga'laiyellaam  aappekkilea  koodivarachseythaarga'l;  isravealar  yesrayealilirukki’ra  thurava'ndaiyilea  paa'layami’rangginaarga'l.  (1saamuveal  29:1)

அப்பொழுது  பெலிஸ்தரின்  அதிபதிகள்  நூறும்  ஆயிரமுமான  சேர்வைகளோடே  போனார்கள்;  தாவீதும்  அவன்  மனுஷரும்  ஆகீசோடே  பின்தண்டிலே  போனார்கள்.  (1சாமுவேல்  29:2)

appozhuthu  pelistharin  athibathiga'l  noo’rum  aayiramumaana  searvaiga'loadea  poanaarga'l;  thaaveethum  avan  manusharum  aakeesoadea  pintha'ndilea  poanaarga'l.  (1saamuveal  29:2)

அப்பொழுது  பெலிஸ்தரின்  பிரபுக்கள்:  இந்த  எபிரெயர்  என்னத்திற்கு  என்றார்கள்;  ஆகீஸ்  அவர்களைப்  பார்த்து:  இஸ்ரவேலின்  ராஜாவாகிய  சவுலின்  ஊழியக்காரனாயிருந்த  இந்தத்  தாவீது  இத்தனை  நாட்களும்  இத்தனை  வருஷங்களும்  என்னோடு  இருக்கவில்லையா?  இவன்  என்னிடத்தில்  வந்து  சேர்ந்த  நாள்முதல்  இந்நாள்வரைக்கும்  ஒரு  குற்றமும்  நான்  இவனில்  கண்டுபிடிக்கவில்லை  என்றான்.  (1சாமுவேல்  29:3)

appozhuthu  pelistharin  pirabukka'l:  intha  ebireyar  ennaththi’rku  en’raarga'l;  aakees  avarga'laip  paarththu:  isravealin  raajaavaagiya  savulin  oozhiyakkaaranaayiruntha  inthath  thaaveethu  iththanai  naadka'lum  iththanai  varushangga'lum  ennoadu  irukkavillaiyaa?  ivan  ennidaththil  vanthu  searntha  naa'lmuthal  innaa'lvaraikkum  oru  kut’ramum  naan  ivanil  ka'ndupidikkavillai  en’raan.  (1saamuveal  29:3)

அதனால்  பெலிஸ்தரின்  பிரபுக்கள்  அவன்மேல்  கடுங்கோபமாகி,  அவனைப்  பார்த்து:  இந்த  மனுஷன்  நீர்  குறித்த  தன்  இடத்திற்குத்  திரும்பிப்போகும்படிக்கு,  அங்கே  அவனை  மறுபடியும்  அனுப்பிவிடும்;  யுத்தத்தில்  இவன்  நமக்குச்  சத்துருவாயிராதபடிக்கு,  இவன்  நம்மோடே  கூட  யுத்தத்திற்கு  வரவேண்டியதில்லை;  இவன்  எதினாலே  தன்  ஆண்டவனோடே  ஒப்புரவாவான்?  இந்த  மனுஷருடைய  தலைகளினால்  அல்லவா?  (1சாமுவேல்  29:4)

athanaal  pelistharin  pirabukka'l  avanmeal  kadungkoabamaagi,  avanaip  paarththu:  intha  manushan  neer  ku’riththa  than  idaththi’rkuth  thirumbippoagumpadikku,  anggea  avanai  ma’rupadiyum  anuppividum;  yuththaththil  ivan  namakkuch  saththuruvaayiraathapadikku,  ivan  nammoadea  kooda  yuththaththi’rku  varavea'ndiyathillai;  ivan  ethinaalea  than  aa'ndavanoadea  oppuravaavaan?  intha  manusharudaiya  thalaiga'linaal  allavaa?  (1saamuveal  29:4)

சவுல்  கொன்றது  ஆயிரம்,  தாவீது  கொன்றது  பதினாயிரம்  என்று  இந்தத்  தாவீதைக்குறித்து  அல்லவோ  ஆடிப்பாடிச்  சொன்னார்கள்  என்றார்கள்.  (1சாமுவேல்  29:5)

savul  kon’rathu  aayiram,  thaaveethu  kon’rathu  pathinaayiram  en’ru  inthath  thaaveethaikku’riththu  allavoa  aadippaadich  sonnaarga'l  en’raarga'l.  (1saamuveal  29:5)

அப்பொழுது  ஆகீஸ்  தாவீதை  அழைத்து:  நீ  உத்தமன்  என்றும்,  நீ  பாளயத்தில்  என்னோடே  போக்கும்  வரத்துமாயிருக்கிறது  என்  பார்வைக்கு  நல்லது  என்றும்,  கர்த்தருடைய  ஜீவனைக்கொண்டு  சொல்லுகிறேன்;  நீ  என்னிடத்தில்  வந்து  சேர்ந்த  நாள்முதல்  இன்றையவரைக்கும்  நான்  உன்னில்  ஒரு  பொல்லாப்பும்  காணவில்லை;  ஆகிலும்  பிரபுக்களின்  பார்வைக்கு  நீ  பிரியமானவன்  அல்ல.  (1சாமுவேல்  29:6)

appozhuthu  aakees  thaaveethai  azhaiththu:  nee  uththaman  en’rum,  nee  paa'layaththil  ennoadea  poakkum  varaththumaayirukki’rathu  en  paarvaikku  nallathu  en’rum,  karththarudaiya  jeevanaikko'ndu  sollugi’rean;  nee  ennidaththil  vanthu  searntha  naa'lmuthal  in’raiyavaraikkum  naan  unnil  oru  pollaappum  kaa'navillai;  aagilum  pirabukka'lin  paarvaikku  nee  piriyamaanavan  alla.  (1saamuveal  29:6)

ஆகையால்  பெலிஸ்தருடைய  பிரபுக்கள்  உன்மேல்  தாங்கல்  அடையாதபடிக்கு,  இப்போது  சமாதானத்தோடே  திரும்பிப்  போய்விடு  என்றான்.  (1சாமுவேல்  29:7)

aagaiyaal  pelistharudaiya  pirabukka'l  unmeal  thaanggal  adaiyaathapadikku,  ippoathu  samaathaanaththoadea  thirumbip  poayvidu  en’raan.  (1saamuveal  29:7)

தாவீது  ஆகீசை  நோக்கி:  ஏன்?  நான்  செய்தது  என்ன?  நான்  வந்து,  ராஜாவாகிய  என்  ஆண்டவனுடைய  சத்துருக்களோடே  யுத்தம்பண்ணாதபடிக்கு,  நான்  உம்மிடத்தில்  வந்த  நாள்முதற்கொண்டு  இன்றையவரைக்கும்  உமது  அடியேனிடத்தில்  கண்டுபிடித்தது  என்ன  என்றான்.  (1சாமுவேல்  29:8)

thaaveethu  aakeesai  noakki:  ean?  naan  seythathu  enna?  naan  vanthu,  raajaavaagiya  en  aa'ndavanudaiya  saththurukka'loadea  yuththampa'n'naathapadikku,  naan  ummidaththil  vantha  naa'lmutha’rko'ndu  in’raiyavaraikkum  umathu  adiyeanidaththil  ka'ndupidiththathu  enna  en’raan.  (1saamuveal  29:8)

ஆகீஸ்  தாவீதுக்குப்  பிரதியுத்தரமாக:  அதை  அறிவேன்;  நீ  தேவனுடைய  தூதனைப்போல  என்  பார்வைக்குப்  பிரியமானவன்;  ஆனாலும்  இவன்  எங்களோடேகூட  யுத்தத்திற்கு  வரக்கூடாது  என்று  பெலிஸ்தரின்  பிரபுக்கள்  சொல்லுகிறார்கள்.  (1சாமுவேல்  29:9)

aakees  thaaveethukkup  pirathiyuththaramaaga:  athai  a’rivean;  nee  theavanudaiya  thoothanaippoala  en  paarvaikkup  piriyamaanavan;  aanaalum  ivan  engga'loadeakooda  yuththaththi’rku  varakkoodaathu  en’ru  pelistharin  pirabukka'l  sollugi’raarga'l.  (1saamuveal  29:9)

இப்போதும்  நீ  நாளை  அதிகாலையில்  உன்னோடே  வந்த  உன்  ஆண்டவனுடைய  வேலைக்காரரைக்  கூட்டிக்கொண்டு,  விடியற்காலத்திலே  வெளிச்சமாகிறபோது,  புறப்பட்டுப்போ  என்றான்.  (1சாமுவேல்  29:10)

ippoathum  nee  naa'lai  athikaalaiyil  unnoadea  vantha  un  aa'ndavanudaiya  vealaikkaararaik  koottikko'ndu,  vidiya’rkaalaththilea  ve'lichchamaagi’rapoathu,  pu’rappattuppoa  en’raan.  (1saamuveal  29:10)

அப்படியே  தாவீது  அதிகாலையில்  தன்  மனுஷரைக்  கூட்டிக்கொண்டு,  பொழுதுவிடிகிற  நேரத்திலே,  பெலிஸ்தரின்  தேசத்திற்குத்  திரும்பிப்போகப்  புறப்பட்டான்;  பெலிஸ்தரோவெனில்  யெஸ்ரயேலுக்குப்  போனார்கள்.  (1சாமுவேல்  29:11)

appadiyea  thaaveethu  athikaalaiyil  than  manusharaik  koottikko'ndu,  pozhuthuvidigi’ra  nearaththilea,  pelistharin  theasaththi’rkuth  thirumbippoagap  pu’rappattaan;  pelistharoavenil  yesrayealukkup  poanaarga'l.  (1saamuveal  29:11)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!