Wednesday, August 24, 2016

1 Saamuveal 28 | 1 சாமுவேல் 28 | 1 Samuel 28


அந்நாட்களிலே  பெலிஸ்தர்  இஸ்ரவேலின்மேல்  யுத்தம்பண்ண,  தங்கள்  சேனைகளைப்  போருக்குக்  கூட்டினார்கள்;  அப்பொழுது  ஆகீஸ்  தாவீதை  நோக்கி:  நீயும்  உன்  மனுஷரும்  எவ்விதத்திலும்  என்னோடேகூட  யுத்தத்துக்கு  வரவேண்டும்  என்று  அறியக்கடவாய்  என்றான்.  (1சாமுவேல்  28:1)

annaadka'lilea  pelisthar  isravealinmeal  yuththampa'n'na,  thangga'l  seanaiga'laip  poarukkuk  koottinaarga'l;  appozhuthu  aakees  thaaveethai  noakki:  neeyum  un  manusharum  evvithaththilum  ennoadeakooda  yuththaththukku  varavea'ndum  en’ru  a’riyakkadavaay  en’raan.  (1saamuveal  28:1)

தாவீது  ஆகீசைப்  பார்த்து:  உம்முடைய  அடியான்  செய்யப்போகிறதை  நீர்  நிச்சயமாய்  அறிந்துகொள்வீர்  என்றான்;  அப்பொழுது  ஆகீஸ்  தாவீதை  நோக்கி:  இதற்காக  உன்னை  எந்நாளும்  எனக்கு  மெய்காவலனாக  வைப்பேன்  என்றான்.  (1சாமுவேல்  28:2)

thaaveethu  aakeesaip  paarththu:  ummudaiya  adiyaan  seyyappoagi’rathai  neer  nichchayamaay  a’rinthuko'lveer  en’raan;  appozhuthu  aakees  thaaveethai  noakki:  itha’rkaaga  unnai  ennaa'lum  enakku  meykaavalanaaga  vaippean  en’raan.  (1saamuveal  28:2)

சாமுவேல்  இதற்கு  முன்னமே  மரித்துப்போனான்;  இஸ்ரவேலர்  எல்லாரும்  அவனுக்குத்  துக்கங்கொண்டாடி,  அவன்  ஊராகிய  ராமாவிலே  அவனை  அடக்கம்  பண்ணினார்கள்.  சவுல்  அஞ்சனம்  பார்க்கிறவர்களையும்  குறிசொல்லுகிறவர்களையும்  தேசத்தில்  இராதபடிக்குத்  துரத்திவிட்டான்.  (1சாமுவேல்  28:3)

saamuveal  itha’rku  munnamea  mariththuppoanaan;  isravealar  ellaarum  avanukkuth  thukkangko'ndaadi,  avan  ooraagiya  raamaavilea  avanai  adakkam  pa'n'ninaarga'l.  savul  agnchanam  paarkki’ravarga'laiyum  ku’risollugi’ravarga'laiyum  theasaththil  iraathapadikkuth  thuraththivittaan.  (1saamuveal  28:3)

பெலிஸ்தர்  கூடிவந்து,  சூநேமிலே  பாளயமிறங்கினார்கள்;  சவுலும்  இஸ்ரவேலர்  எல்லாரையும்  கூட்டினான்;  அவர்கள்  கில்போவாவிலே  பாளயமிறங்கினார்கள்.  (1சாமுவேல்  28:4)

pelisthar  koodivanthu,  sooneamilea  paa'layami’rangginaarga'l;  savulum  isravealar  ellaaraiyum  koottinaan;  avarga'l  kilboavaavilea  paa'layami’rangginaarga'l.  (1saamuveal  28:4)

சவுல்  பெலிஸ்தரின்  பாளயத்தைக்  கண்டபோது  பயந்தான்;  அவன்  இருதயம்  மிகவும்  தத்தளித்துக்கொண்டிருந்தது.  (1சாமுவேல்  28:5)

savul  pelistharin  paa'layaththaik  ka'ndapoathu  bayanthaan;  avan  iruthayam  migavum  thaththa'liththukko'ndirunthathu.  (1saamuveal  28:5)

சவுல்  கர்த்தரிடத்தில்  விசாரிக்கும்போது,  கர்த்தர்  அவனுக்குச்  சொப்பனங்களினாலாவது,  ஊரீமினாலாவது,  தீர்க்கதரிசிகளினாலாவது  மறுஉத்தரவு  அருளவில்லை.  (1சாமுவேல்  28:6)

savul  karththaridaththil  visaarikkumpoathu,  karththar  avanukkuch  soppanangga'linaalaavathu,  ooreeminaalaavathu,  theerkkatharisiga'linaalaavathu  ma’ruuththaravu  aru'lavillai.  (1saamuveal  28:6)

அப்பொழுது  சவுல்  தன்  ஊழியக்காரரை  நோக்கி:  அஞ்சனம்பார்க்கிற  ஒரு  ஸ்திரீயைத்  தேடுங்கள்;  நான்  அவளிடத்தில்  போய்  விசாரிப்பேன்  என்றான்;  அதற்கு  அவனுடைய  ஊழியக்காரர்:  இதோ,  எந்தோரில்  அஞ்சனம்பார்க்கிற  ஒரு  ஸ்திரீ  இருக்கிறாள்  என்றார்கள்.  (1சாமுவேல்  28:7)

appozhuthu  savul  than  oozhiyakkaararai  noakki:  agnchanampaarkki’ra  oru  sthireeyaith  theadungga'l;  naan  ava'lidaththil  poay  visaarippean  en’raan;  atha’rku  avanudaiya  oozhiyakkaarar:  ithoa,  enthoaril  agnchanampaarkki’ra  oru  sthiree  irukki’raa'l  en’raarga'l.  (1saamuveal  28:7)

அப்பொழுது  சவுல்  வேஷம்  மாறி,  வேறு  வஸ்திரம்  தரித்துக்கொண்டு,  அவனும்  அவனோடேகூட  இரண்டுபேரும்  இராத்திரியிலே  அந்த  ஸ்திரீயினிடத்தில்  போய்ச்  சேர்ந்தார்கள்;  அவளை  அவன்  நோக்கி:  நீ  அஞ்சனம்பார்த்து  எனக்குக்  குறிசொல்லி,  நான்  உன்னிடத்தில்  சொல்லுகிறவனை  எழும்பிவரச்செய்  என்றான்.  (1சாமுவேல்  28:8)

appozhuthu  savul  veasham  maa’ri,  vea’ru  vasthiram  thariththukko'ndu,  avanum  avanoadeakooda  ira'ndupearum  iraaththiriyilea  antha  sthireeyinidaththil  poaych  searnthaarga'l;  ava'lai  avan  noakki:  nee  agnchanampaarththu  enakkuk  ku’risolli,  naan  unnidaththil  sollugi’ravanai  ezhumbivarachsey  en’raan.  (1saamuveal  28:8)

அதற்கு  அந்த  ஸ்திரீ:  சவுல்  அஞ்சனம்  பார்க்கிறவர்களையும்,  குறிசொல்லுகிறவர்களையும்,  தேசத்தில்  இராதபடிக்கு  நிர்மூலமாக்கின  செய்தியை  நீர்  அறிவீரே;  என்னைக்  கொன்றுபோடும்படி  நீர்  என்  பிராணனுக்குக்  கண்ணிவைக்கிறது  என்ன  என்றாள்.  (1சாமுவேல்  28:9)

atha’rku  antha  sthiree:  savul  agnchanam  paarkki’ravarga'laiyum,  ku’risollugi’ravarga'laiyum,  theasaththil  iraathapadikku  nirmoolamaakkina  seythiyai  neer  a’riveerea;  ennaik  kon’rupoadumpadi  neer  en  piraa'nanukkuk  ka'n'nivaikki’rathu  enna  en’raa'l.  (1saamuveal  28:9)

அப்பொழுது  சவுல்:  இந்தக்  காரியத்திற்காக  உனக்குப்  பொல்லாப்பு  வராது  என்பதைக்  கர்த்தருடைய  ஜீவனைக்கொண்டு  சொல்லுகிறேன்  என்று  அவளுக்குக்  கர்த்தர்மேல்  ஆணையிட்டான்.  (1சாமுவேல்  28:10)

appozhuthu  savul:  inthak  kaariyaththi’rkaaga  unakkup  pollaappu  varaathu  enbathaik  karththarudaiya  jeevanaikko'ndu  sollugi’rean  en’ru  ava'lukkuk  karththarmeal  aa'naiyittaan.  (1saamuveal  28:10)

அப்பொழுது  அந்த  ஸ்திரீ:  உமக்கு  நான்  யாரை  எழும்பிவரப்பண்ணவேண்டும்  என்றதற்கு,  அவன்:  சாமுவேலை  எழும்பிவரப்பண்ணவேண்டும்  என்றான்.  (1சாமுவேல்  28:11)

appozhuthu  antha  sthiree:  umakku  naan  yaarai  ezhumbivarappa'n'navea'ndum  en’ratha’rku,  avan:  saamuvealai  ezhumbivarappa'n'navea'ndum  en’raan.  (1saamuveal  28:11)

அந்த  ஸ்திரீ  சாமுவேலைக்  கண்டமாத்திரத்தில்  மகா  சத்தமாய்க்  கூப்பிட்டு,  சவுலை  நோக்கி:  ஏன்  என்னை  மோசம்போக்கினீர்?  நீர்தான்  சவுலாச்சுதே  என்றாள்.  (1சாமுவேல்  28:12)

antha  sthiree  saamuvealaik  ka'ndamaaththiraththil  mahaa  saththamaayk  kooppittu,  savulai  noakki:  ean  ennai  moasampoakkineer?  neerthaan  savulaachchuthea  en’raa'l.  (1saamuveal  28:12)

ராஜா  அவளைப்  பார்த்து:  நீ  பயப்படாதே;  நீ  காண்கிறது  என்ன  என்று  கேட்டான்.  அதற்கு  அந்த  ஸ்திரீ:  தேவர்கள்  பூமிக்குள்ளிருந்து  ஏறிவருகிறதைக்  காண்கிறேன்  என்று  சவுலுக்குச்  சொன்னாள்.  (1சாமுவேல்  28:13)

raajaa  ava'laip  paarththu:  nee  bayappadaathea;  nee  kaa'ngi’rathu  enna  en’ru  keattaan.  atha’rku  antha  sthiree:  theavarga'l  boomikku'l'lirunthu  ea’rivarugi’rathaik  kaa'ngi’rean  en’ru  savulukkuch  sonnaa'l.  (1saamuveal  28:13)

அவருடைய  ரூபம்  என்ன  என்று  அவளைக்  கேட்டான்.  அதற்கு  அவள்:  சால்வையைப்  போர்த்துக்கொண்டிருக்கிற  ஒரு  முதிர்ந்த  வயதான  மனுஷன்  எழும்பிவருகிறான்  என்றாள்;  அதினாலே  சவுல்  அவன்  சாமுவேல்  என்று  அறிந்துகொண்டு,  தரைமட்டும்  முகங்குனிந்து  வணங்கினான்.  (1சாமுவேல்  28:14)

avarudaiya  roobam  enna  en’ru  ava'laik  keattaan.  atha’rku  ava'l:  saalvaiyaip  poarththukko'ndirukki’ra  oru  muthirntha  vayathaana  manushan  ezhumbivarugi’raan  en’raa'l;  athinaalea  savul  avan  saamuveal  en’ru  a’rinthuko'ndu,  tharaimattum  mugangkuninthu  va'nangginaan.  (1saamuveal  28:14)

சாமுவேல்  சவுலை  நோக்கி:  நீ  என்னை  எழும்பிவரப்பண்ணி,  என்னைக்  கலைத்தது  என்ன  என்று  கேட்டான்.  அதற்குச்  சவுல்:  நான்  மிகவும்  நெருக்கப்பட்டிருக்கிறேன்;  பெலிஸ்தர்  எனக்கு  விரோதமாய்  யுத்தம்பண்ணுகிறார்கள்;  தேவனும்  என்னைக்  கைவிட்டார்;  அவர்  தீர்க்கதரிசிகளினாலாவது,  சொப்பனங்களினாலாவது  எனக்கு  மறுஉத்தரவு  அருளுகிறதில்லை;  ஆகையால்  நான்  செய்யவேண்டியதை  நீர்  எனக்கு  அறிவிக்கும்படிக்கு,  உம்மை  அழைப்பித்தேன்  என்றான்.  (1சாமுவேல்  28:15)

saamuveal  savulai  noakki:  nee  ennai  ezhumbivarappa'n'ni,  ennaik  kalaiththathu  enna  en’ru  keattaan.  atha’rkuch  savul:  naan  migavum  nerukkappattirukki’rean;  pelisthar  enakku  viroathamaay  yuththampa'n'nugi’raarga'l;  theavanum  ennaik  kaivittaar;  avar  theerkkatharisiga'linaalaavathu,  soppanangga'linaalaavathu  enakku  ma’ruuththaravu  aru'lugi’rathillai;  aagaiyaal  naan  seyyavea'ndiyathai  neer  enakku  a’rivikkumpadikku,  ummai  azhaippiththean  en’raan.  (1saamuveal  28:15)

அதற்குச்  சாமுவேல்:  கர்த்தர்  உன்னைவிட்டு  விலகி,  உனக்குச்  சத்துருவாய்  இருக்கும்போது,  நீ  என்னிடத்தில்  கேட்பானேன்?  (1சாமுவேல்  28:16)

atha’rkuch  saamuveal:  karththar  unnaivittu  vilagi,  unakkuch  saththuruvaay  irukkumpoathu,  nee  ennidaththil  keadpaanean?  (1saamuveal  28:16)

கர்த்தர்  என்னைக்கொண்டு  சொன்னபடியே  செய்து  முடித்து,  ராஜ்யத்தை  உன்  கையிலிருந்து  பறித்து,  அதை  உன்  தோழனாகிய  தாவீதுக்குக்  கொடுத்துவிட்டார்.  (1சாமுவேல்  28:17)

karththar  ennaikko'ndu  sonnapadiyea  seythu  mudiththu,  raajyaththai  un  kaiyilirunthu  pa’riththu,  athai  un  thoazhanaagiya  thaaveethukkuk  koduththuvittaar.  (1saamuveal  28:17)

நீ  கர்த்தருடைய  சொற்கேளாமலும்,  அமலேக்கின்மேல்  அவருக்கு  இருந்த  கோபத்தின்  உக்கிரத்தைத்  தீர்க்காமலும்  போனபடியினால்,  கர்த்தர்  இன்றையதினம்  உனக்கு  இந்தப்பிரகாரமாகச்  செய்தார்.  (1சாமுவேல்  28:18)

nee  karththarudaiya  so’rkea'laamalum,  amaleakkinmeal  avarukku  iruntha  koabaththin  ukkiraththaith  theerkkaamalum  poanapadiyinaal,  karththar  in’raiyathinam  unakku  inthappiragaaramaagach  seythaar.  (1saamuveal  28:18)

கர்த்தர்  உன்னுடைய  ஜனமாகிய  இஸ்ரவேலரையும்  பெலிஸ்தர்  கையில்  ஒப்புக்  கொடுப்பார்;  நாளைக்கு  நீயும்  உன்  குமாரரும்  என்னோடிருப்பீர்கள்;  இஸ்ரவேலின்  பாளயத்தையும்  கர்த்தர்  பெலிஸ்தரின்  கையில்  ஒப்புக்கொடுப்பார்  என்றான்.  (1சாமுவேல்  28:19)

karththar  unnudaiya  janamaagiya  isravealaraiyum  pelisthar  kaiyil  oppuk  koduppaar;  naa'laikku  neeyum  un  kumaararum  ennoadiruppeerga'l;  isravealin  paa'layaththaiyum  karththar  pelistharin  kaiyil  oppukkoduppaar  en’raan.  (1saamuveal  28:19)

அந்தக்ஷணமே  சவுல்  நெடிதாங்கிடையாய்த்  தரையிலே  விழுந்து,  சாமுவேலின்  வார்த்தைகளினாலே  மிகவும்  பயப்பட்டான்;  அவன்  இராப்பகல்  முழுதும்  ஒன்றும்  சாப்பிடாதிருந்தபடியினால்,  அவன்  பலவீனமாயிருந்தான்.  (1சாமுவேல்  28:20)

anthaksha'namea  savul  nedithaanggidaiyaayth  tharaiyilea  vizhunthu,  saamuvealin  vaarththaiga'linaalea  migavum  bayappattaan;  avan  iraappagal  muzhuthum  on’rum  saappidaathirunthapadiyinaal,  avan  balaveenamaayirunthaan.  (1saamuveal  28:20)

அப்பொழுது  அந்த  ஸ்திரீ  சவுலிடத்தில்  வந்து,  அவன்  மிகவும்  கலங்கியிருக்கிறதைக்  கண்டு,  அவனை  நோக்கி:  இதோ,  உம்முடைய  அடியாளாகிய  நான்  உம்முடைய  சொற்கேட்டு,  என்  பிராணனை  என்  கையிலே  பிடித்துக்கொண்டு,  நீர்  எனக்குச்  சொன்ன  உம்முடைய  வார்த்தைகளுக்குக்  கீழ்ப்படிந்தேன்.  (1சாமுவேல்  28:21)

appozhuthu  antha  sthiree  savulidaththil  vanthu,  avan  migavum  kalanggiyirukki’rathaik  ka'ndu,  avanai  noakki:  ithoa,  ummudaiya  adiyaa'laagiya  naan  ummudaiya  so’rkeattu,  en  piraa'nanai  en  kaiyilea  pidiththukko'ndu,  neer  enakkuch  sonna  ummudaiya  vaarththaiga'lukkuk  keezhppadinthean.  (1saamuveal  28:21)

இப்பொழுது  நீர்  உம்முடைய  அடியாளுடைய  சொல்லைக்  கேளும்,  நான்  உமக்கு  முன்பாகக்  கொஞ்சம்  அப்பம்  வைக்கிறேன்,  அதைப்  புசிப்பீராக;  அப்பொழுது  நீர்  வழிநடந்து  போகத்தக்க  பெலன்  உமக்குள்  இருக்கும்  என்றாள்.  (1சாமுவேல்  28:22)

ippozhuthu  neer  ummudaiya  adiyaa'ludaiya  sollaik  kea'lum,  naan  umakku  munbaagak  kogncham  appam  vaikki’rean,  athaip  pusippeeraaga;  appozhuthu  neer  vazhinadanthu  poagaththakka  belan  umakku'l  irukkum  en’raa'l.  (1saamuveal  28:22)

அவனோ  தட்டுதல்பண்ணி,  நான்  புசிக்கமாட்டேன்  என்றான்;  ஆனாலும்  அவனுடைய  ஊழியக்காரரும்  அந்த  ஸ்திரீயும்  அவனை  மிகவும்  வருந்திக்கொண்டதினால்,  அவன்  அவர்கள்  சொற்கேட்டு,  தரையிலிருந்து  எழுந்திருந்து  கட்டிலின்மேல்  உட்கார்ந்தான்.  (1சாமுவேல்  28:23)

avanoa  thattuthalpa'n'ni,  naan  pusikkamaattean  en’raan;  aanaalum  avanudaiya  oozhiyakkaararum  antha  sthireeyum  avanai  migavum  varunthikko'ndathinaal,  avan  avarga'l  so’rkeattu,  tharaiyilirunthu  ezhunthirunthu  kattilinmeal  udkaarnthaan.  (1saamuveal  28:23)

அந்த  ஸ்திரீயினிடத்தில்  கொழுத்த  கன்றுக்குட்டி  ஒன்று  வீட்டில்  இருந்தது;  அதைத்  தீவிரமாய்  அடித்து,  மா  எடுத்துப்  பிசைந்து,  அதைப்  புளிப்பில்லா  அப்பங்களாகச்  சுட்டு,  (1சாமுவேல்  28:24)

antha  sthireeyinidaththil  kozhuththa  kan’rukkutti  on’ru  veettil  irunthathu;  athaith  theeviramaay  adiththu,  maa  eduththup  pisainthu,  athaip  pu'lippillaa  appangga'laagach  suttu,  (1saamuveal  28:24)

சவுலுக்கும்  அவன்  ஊழியக்காரருக்கும்  முன்பாகக்  கொண்டுவந்து  வைத்தாள்;  அவர்கள்  புசித்து  எழுந்திருந்து,  அந்த  இராத்திரியிலேயே  புறப்பட்டுப்போனார்கள்.  (1சாமுவேல்  28:25)

savulukkum  avan  oozhiyakkaararukkum  munbaagak  ko'nduvanthu  vaiththaa'l;  avarga'l  pusiththu  ezhunthirunthu,  antha  iraaththiriyileayea  pu’rappattuppoanaarga'l.  (1saamuveal  28:25)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!