Wednesday, August 24, 2016

1 Saamuveal 27 | 1 சாமுவேல் 27 | 1 Samuel 27

பின்பு  தாவீது:  நான்  எந்த  நாளிலாகிலும்  ஒருநாள்  சவுலின்  கையினால்  மடிந்துபோவேன்;  இனிச்  சவுல்  இஸ்ரவேலின்  எல்லைகளில்  எங்கேயாவது  என்னைக்  கண்டுபிடிக்கலாம்  என்கிற  நம்பிக்கை  அற்றுப்போகும்படிக்கும்,  நான்  அவன்  கைக்கு  நீங்கலாயிருக்கும்படிக்கும்,  நான்  பெலிஸ்தரின்  தேசத்திற்குப்  போய்,  தப்பித்துக்கொள்வதைப்பார்க்கிலும்  நலமான  காரியம்  வேறில்லை  என்று  தன்  இருதயத்தில்  யோசித்தான்.  (1சாமுவேல்  27:1)

pinbu  thaaveethu:  naan  entha  naa'lilaagilum  orunaa'l  savulin  kaiyinaal  madinthupoavean;  inich  savul  isravealin  ellaiga'lil  enggeayaavathu  ennaik  ka'ndupidikkalaam  engi’ra  nambikkai  at’ruppoagumpadikkum,  naan  avan  kaikku  neenggalaayirukkumpadikkum,  naan  pelistharin  theasaththi’rkup  poay,  thappiththukko'lvathaippaarkkilum  nalamaana  kaariyam  vea’rillai  en’ru  than  iruthayaththil  yoasiththaan.  (1saamuveal  27:1)

ஆகையால்  தாவீது  தன்னோடிருந்த  அறுநூறுபேரோடுங்கூட  எழுந்திருந்து,  மாயோகின்  குமாரனாகிய  ஆகீஸ்  என்னும்  காத்தின்  ராஜாவினிடத்தில்  போய்ச்  சேர்ந்தான்.  (1சாமுவேல்  27:2)

aagaiyaal  thaaveethu  thannoadiruntha  a’runoo’rupearoadungkooda  ezhunthirunthu,  maayoakin  kumaaranaagiya  aakees  ennum  kaaththin  raajaavinidaththil  poaych  searnthaan.  (1saamuveal  27:2)

அங்கே  தாவீதும்,  அவன்  மனுஷரும்,  அவரவர்  வீட்டாரும்,  தாவீதோடேகூட  அவன்  இரண்டு  மனைவிகளாகிய  யெஸ்ரயேல்  ஊராளாகிய  அகினோவாமும்;  நாபாலின்  மனைவியாயிருந்த  கர்மேல்  ஊராளாகிய  அபிகாயிலும்,  காத்பட்டணத்தில்  ஆகீசிடத்தில்  தங்கியிருந்தார்கள்.  (1சாமுவேல்  27:3)

anggea  thaaveethum,  avan  manusharum,  avaravar  veettaarum,  thaaveethoadeakooda  avan  ira'ndu  manaiviga'laagiya  yesrayeal  ooraa'laagiya  aginoavaamum;  naabaalin  manaiviyaayiruntha  karmeal  ooraa'laagiya  abikaayilum,  kaathpatta'naththil  aakeesidaththil  thanggiyirunthaarga'l.  (1saamuveal  27:3)

தாவீது  காத்பட்டணத்திற்கு  ஓடிப்போனான்  என்று  சவுலுக்கு  அறிவிக்கப்பட்டபோது,  அவன்  அப்புறம்  அவனைத்  தேடவில்லை.  (1சாமுவேல்  27:4)

thaaveethu  kaathpatta'naththi’rku  oadippoanaan  en’ru  savulukku  a’rivikkappattapoathu,  avan  appu’ram  avanaith  theadavillai.  (1saamuveal  27:4)

தாவீது  ஆகீசை  நோக்கி:  உம்முடைய  கண்களில்  எனக்குத்  தயை  கிடைக்குமானால்,  நான்  வாசம்பண்ணும்படி  நாட்டிலுள்ள  ஊர்களிலே  ஒன்றில்  எனக்கு  இடந்தாரும்;  உம்முடைய  அடியான்  உம்மோடேகூட  ராஜதானி  பட்டணத்திலே  வாசமாயிருப்பானேன்  என்றான்.  (1சாமுவேல்  27:5)

thaaveethu  aakeesai  noakki:  ummudaiya  ka'nga'lil  enakkuth  thayai  kidaikkumaanaal,  naan  vaasampa'n'numpadi  naattilu'l'la  oorga'lilea  on’ril  enakku  idanthaarum;  ummudaiya  adiyaan  ummoadeakooda  raajathaani  patta'naththilea  vaasamaayiruppaanean  en’raan.  (1saamuveal  27:5)

அப்பொழுது  ஆகீஸ்:  அன்றையதினம்  சிக்லாகை  அவனுக்குக்  கொடுத்தான்;  அதினிமித்தம்  சிக்லாக்  இந்நாள்வரைக்கும்  யூதாவின்  ராஜாக்களைச்  சேர்ந்திருக்கிறது.  (1சாமுவேல்  27:6)

appozhuthu  aakees:  an’raiyathinam  siklaakai  avanukkuk  koduththaan;  athinimiththam  siklaak  innaa'lvaraikkum  yoothaavin  raajaakka'laich  searnthirukki’rathu.  (1saamuveal  27:6)

தாவீது  பெலிஸ்தரின்  நாட்டிலே  ஒரு  வருஷமும்  நாலு  மாதமும்  குடியிருந்தான்.  (1சாமுவேல்  27:7)

thaaveethu  pelistharin  naattilea  oru  varushamum  naalu  maathamum  kudiyirunthaan.  (1saamuveal  27:7)

அங்கேயிருந்து  தாவீதும்  அவன்  மனுஷரும்  கெசூரியர்மேலும்  கெஸ்ரியர்மேலும்  அமலேக்கியர்மேலும்  படையெடுத்துப்போனார்கள்;  சூருக்குப்  போகிற  எல்லைதுவக்கி  எகிப்துதேசமட்டும்  இருக்கிற  நாட்டிலே  பூர்வகாலம்  துவக்கிக்  குடியிருந்தவர்கள்  இவர்களே.  (1சாமுவேல்  27:8)

anggeayirunthu  thaaveethum  avan  manusharum  kesooriyarmealum  kesriyarmealum  amaleakkiyarmealum  padaiyeduththuppoanaarga'l;  soorukkup  poagi’ra  ellaithuvakki  egipthutheasamattum  irukki’ra  naattilea  poorvakaalam  thuvakkik  kudiyirunthavarga'l  ivarga'lea.  (1saamuveal  27:8)

தாவீது  அந்த  நாட்டைக்  கொள்ளையடிக்கிறபோது,  புருஷர்களையும்  ஸ்திரீகளையும்  உயிரோடே  வைக்காமல்,  ஆடுமாடுகளையும்  கழுதைகளையும்  ஒட்டகங்களையும்  வஸ்திரங்களையும்  எடுத்துக்கொண்டு,  ஆகீசிடத்துக்குத்  திரும்பிவருவான்.  (1சாமுவேல்  27:9)

thaaveethu  antha  naattaik  ko'l'laiyadikki’rapoathu,  purusharga'laiyum  sthireega'laiyum  uyiroadea  vaikkaamal,  aadumaaduga'laiyum  kazhuthaiga'laiyum  ottagangga'laiyum  vasthirangga'laiyum  eduththukko'ndu,  aakeesidaththukkuth  thirumbivaruvaan.  (1saamuveal  27:9)

இன்று  எத்திசையில்  போய்க்  கொள்ளையடித்தீர்கள்  என்று  ஆகீஸ்  கேட்கும்போது,  தாவீது:  யூதாவுடைய  தென்திசையிலும்,  யெராமியேலருடைய  தென்திசையிலும்,  கேனியருடைய  தென்திசையிலும்  என்பான்.  (1சாமுவேல்  27:10)

in’ru  eththisaiyil  poayk  ko'l'laiyadiththeerga'l  en’ru  aakees  keadkumpoathu,  thaaveethu:  yoothaavudaiya  thenthisaiyilum,  yeraamiyealarudaiya  thenthisaiyilum,  keaniyarudaiya  thenthisaiyilum  enbaan.  (1saamuveal  27:10)

இன்ன  இன்னபடி  தாவீது  செய்தான்  என்று  தங்களுக்கு  விரோதமான  செய்தியை  அறிவிக்கத்தக்க  ஒருவரையும்  தாவீது  காத்பட்டணத்திற்குக்  கொண்டு  வராதபடிக்கு,  ஒரு  புருஷனையாகிலும்  ஸ்திரீயையாகிலும்  உயிரோடே  வைக்காதிருப்பான்;  அவன்  பெலிஸ்தரின்  நாட்டுப்புறத்திலே  குடியிருக்கிற  நாளெல்லாம்  இவ்வண்ணம்  செய்துகொண்டுவந்தான்.  (1சாமுவேல்  27:11)

inna  innapadi  thaaveethu  seythaan  en’ru  thangga'lukku  viroathamaana  seythiyai  a’rivikkaththakka  oruvaraiyum  thaaveethu  kaathpatta'naththi’rkuk  ko'ndu  varaathapadikku,  oru  purushanaiyaagilum  sthireeyaiyaagilum  uyiroadea  vaikkaathiruppaan;  avan  pelistharin  naattuppu’raththilea  kudiyirukki’ra  naa'lellaam  ivva'n'nam  seythuko'nduvanthaan.  (1saamuveal  27:11)

ஆகீஸ்  தாவீதை  நம்பி:  அவன்  இஸ்ரவேலராகிய  தன்னுடைய  ஜனங்கள்  தன்னை  வெறுக்கும்படி  செய்கிறான்;  என்றைக்கும்  அவன்  என்  ஊழியக்காரனாயிருப்பான்  என்பான்.  (1சாமுவேல்  27:12)

aakees  thaaveethai  nambi:  avan  isravealaraagiya  thannudaiya  janangga'l  thannai  ve’rukkumpadi  seygi’raan;  en’raikkum  avan  en  oozhiyakkaaranaayiruppaan  enbaan.  (1saamuveal  27:12)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!