Wednesday, August 24, 2016

1 Saamuveal 25 | 1 சாமுவேல் 25 | 1 Samuel 25

சாமுவேல்  மரணமடைந்தான்.  இஸ்ரவேலர்  எல்லாரும்  கூடிவந்து,  அவனுக்காகத்  துக்கங்கொண்டாடி,  ராமாவிலிருக்கிற  அவனுடைய  வளவிலே  அவனை  அடக்கம்பண்ணினார்கள்;  தாவீது  எழுந்து,  பாரான்  வனாந்தரத்திற்குப்  புறப்பட்டுப்போனான்.  (1சாமுவேல்  25:1)

saamuveal  mara'namadainthaan.  isravealar  ellaarum  koodivanthu,  avanukkaagath  thukkangko'ndaadi,  raamaavilirukki’ra  avanudaiya  va'lavilea  avanai  adakkampa'n'ninaarga'l;  thaaveethu  ezhunthu,  paaraan  vanaantharaththi’rkup  pu’rappattuppoanaan.  (1saamuveal  25:1)

மாகோனிலே  ஒரு  மனுஷன்  இருந்தான்;  அவனுடைய  தொழில்துறை  கர்மேலில்  இருந்தது;  அந்த  மனுஷன்  மகா  பாரிக்  குடித்தனக்காரனாயிருந்தான்;  அவனுக்கு  மூவாயிரம்  ஆடும்,  ஆயிரம்  வெள்ளாடும்  இருந்தது;  அவன்  அப்பொழுது  கர்மேலில்  தன்  ஆடுகளை  மயிர்  கத்தரித்துக்கொண்டிருந்தான்.  (1சாமுவேல்  25:2)

maagoanilea  oru  manushan  irunthaan;  avanudaiya  thozhilthu’rai  karmealil  irunthathu;  antha  manushan  mahaa  paarik  kudiththanakkaaranaayirunthaan;  avanukku  moovaayiram  aadum,  aayiram  ve'l'laadum  irunthathu;  avan  appozhuthu  karmealil  than  aaduga'lai  mayir  kaththariththukko'ndirunthaan.  (1saamuveal  25:2)

அந்த  மனுஷனுக்கு  நாபால்  என்றும்,  அவன்  மனைவிக்கு  அபிகாயில்  என்றும்  பெயர்;  அந்த  ஸ்திரீ  மகா  புத்திசாலியும்  ரூபவதியுமாயிருந்தாள்;  அந்தப்  புருஷனோ  முரடனும்  துராகிருதனுமாயிருந்தான்;  அவன்  காலேபுடைய  சந்ததியான்.  (1சாமுவேல்  25:3)

antha  manushanukku  naabaal  en’rum,  avan  manaivikku  abikaayil  en’rum  peyar;  antha  sthiree  mahaa  buththisaaliyum  roobavathiyumaayirunthaa'l;  anthap  purushanoa  muradanum  thuraakiruthanumaayirunthaan;  avan  kaaleabudaiya  santhathiyaan.  (1saamuveal  25:3)

நாபால்  தன்  ஆடுகளை  மயிர்கத்தரிக்கிற  செய்தியை  வனாந்தரத்தில்  இருக்கிற  தாவீது  கேட்டபோது,  (1சாமுவேல்  25:4)

naabaal  than  aaduga'lai  mayirkaththarikki’ra  seythiyai  vanaantharaththil  irukki’ra  thaaveethu  keattapoathu,  (1saamuveal  25:4)

தாவீது  பத்து  வாலிபரை  அழைத்து:  நீங்கள்  கர்மேலுக்குப்  போய்,  நாபாலிடத்தில்  சென்று,  என்  பேரைச்சொல்லி,  அவன்  சுகசெய்தியை  விசாரித்து,  (1சாமுவேல்  25:5)

thaaveethu  paththu  vaalibarai  azhaiththu:  neengga'l  karmealukkup  poay,  naabaalidaththil  sen’ru,  en  pearaichsolli,  avan  sugaseythiyai  visaariththu,  (1saamuveal  25:5)

அவனை  நோக்கி:  நீர்  வாழ்க,  உமக்குச்  சமாதானமும்,  உம்முடைய  வீட்டுக்குச்  சமாதானமும்,  உமக்கு  உண்டான  எல்லாவற்றிற்கும்  சமாதானமும்  உண்டாவதாக  என்று  அவனை  வாழ்த்தி,  (1சாமுவேல்  25:6)

avanai  noakki:  neer  vaazhga,  umakkuch  samaathaanamum,  ummudaiya  veettukkuch  samaathaanamum,  umakku  u'ndaana  ellaavat’ri’rkum  samaathaanamum  u'ndaavathaaga  en’ru  avanai  vaazhththi,  (1saamuveal  25:6)

இப்பொழுது  ஆடுகளை  மயிர்கத்தரிக்கிறவர்கள்  உம்மிடத்தில்  இருக்கிறார்கள்  என்று  கேள்விப்பட்டேன்;  உம்முடைய  மேய்ப்பர்  எங்களோடேகூட  இருந்தார்கள்;  அவர்கள்  கர்மேலில்  இருந்த  நாளெல்லாம்  நாங்கள்  அவர்களை  வருத்தப்படுத்தவில்லை;  அவர்களுடைய  பொருள்  ஒன்றும்  காணாமற்போனதும்  இல்லை.  (1சாமுவேல்  25:7)

ippozhuthu  aaduga'lai  mayirkaththarikki’ravarga'l  ummidaththil  irukki’raarga'l  en’ru  kea'lvippattean;  ummudaiya  meayppar  engga'loadeakooda  irunthaarga'l;  avarga'l  karmealil  iruntha  naa'lellaam  naangga'l  avarga'lai  varuththappaduththavillai;  avarga'ludaiya  poru'l  on’rum  kaa'naama’rpoanathum  illai.  (1saamuveal  25:7)

உம்முடைய  வேலைக்காரரைக்  கேளும்;  அவர்கள்  உமக்குச்  சொல்லுவார்கள்;  ஆதலால்  இந்த  வாலிபருக்கு  உம்முடைய  கண்களிலே  தயைகிடைக்கவேண்டும்;  நல்ல  நாளில்  வந்தோம்;  உம்முடைய  கைக்கு  உதவுவதை  உம்முடைய  ஊழியக்காரருக்கும்,  உம்முடைய  குமாரனாகிய  தாவீதுக்கும்  கொடுக்கும்படி  வேண்டுகிறேன்  என்று  சொல்லுங்கள்  என்றான்.  (1சாமுவேல்  25:8)

ummudaiya  vealaikkaararaik  kea'lum;  avarga'l  umakkuch  solluvaarga'l;  aathalaal  intha  vaalibarukku  ummudaiya  ka'nga'lilea  thayaikidaikkavea'ndum;  nalla  naa'lil  vanthoam;  ummudaiya  kaikku  uthavuvathai  ummudaiya  oozhiyakkaararukkum,  ummudaiya  kumaaranaagiya  thaaveethukkum  kodukkumpadi  vea'ndugi’rean  en’ru  sollungga'l  en’raan.  (1saamuveal  25:8)

தாவீதின்  வாலிபர்  போய்,  இந்த  வார்த்தைகளையெல்லாம்  தாவீதின்  நாமத்தினாலே  நாபாலிடத்தில்  சொல்லி,  பின்னொன்றும்  பேசாதிருந்தார்கள்.  (1சாமுவேல்  25:9)

thaaveethin  vaalibar  poay,  intha  vaarththaiga'laiyellaam  thaaveethin  naamaththinaalea  naabaalidaththil  solli,  pinnon’rum  peasaathirunthaarga'l.  (1saamuveal  25:9)

நாபால்  தாவீதின்  ஊழியக்காரருக்குப்  பிரதியுத்தரமாக:  தாவீது  என்பவன்  யார்?  ஈசாயின்  குமாரன்  யார்?  தங்கள்  எஜமான்களை  விட்டு  ஓடிப்போகிற  வேலைக்காரர்  இந்நாளில்  அநேகர்  உண்டு.  (1சாமுவேல்  25:10)

naabaal  thaaveethin  oozhiyakkaararukkup  pirathiyuththaramaaga:  thaaveethu  enbavan  yaar?  eesaayin  kumaaran  yaar?  thangga'l  ejamaanga'lai  vittu  oadippoagi’ra  vealaikkaarar  innaa'lil  aneagar  u'ndu.  (1saamuveal  25:10)

நான்  என்  அப்பத்தையும்,  என்  தண்ணீரையும்,  என்  ஆடுகளை  மயிர்கத்தரிக்கிறவர்களுக்காக  நான்  அடித்துச்  சமையல்  பண்ணுவித்ததையும்  எடுத்து,  இன்ன  இடத்தார்  என்று  நான்  அறியாத  மனுஷருக்குக்  கொடுப்பேனோ  என்றான்.  (1சாமுவேல்  25:11)

naan  en  appaththaiyum,  en  tha'n'neeraiyum,  en  aaduga'lai  mayirkaththarikki’ravarga'lukkaaga  naan  adiththuch  samaiyal  pa'n'nuviththathaiyum  eduththu,  inna  idaththaar  en’ru  naan  a’riyaatha  manusharukkuk  koduppeanoa  en’raan.  (1saamuveal  25:11)

தாவீதின்  வாலிபர்  தங்கள்  வழியே  திரும்பி,  மறுபடியும்  தாவீதினிடத்தில்  வந்து,  இந்த  வார்த்தைகளையெல்லாம்  அவனுக்கு  அறிவித்தார்கள்.  (1சாமுவேல்  25:12)

thaaveethin  vaalibar  thangga'l  vazhiyea  thirumbi,  ma’rupadiyum  thaaveethinidaththil  vanthu,  intha  vaarththaiga'laiyellaam  avanukku  a’riviththaarga'l.  (1saamuveal  25:12)

அப்பொழுது  தாவீது  தன்  மனுஷரைப்  பார்த்து:  நீங்கள்  அவரவர்  உங்கள்  பட்டயத்தைக்  கட்டிக்கொள்ளுங்கள்  என்றான்;  அவரவர்  தங்கள்  பட்டயத்தைக்  கட்டிக்கொண்டார்கள்;  தாவீதும்  தன்  பட்டயத்தைக்  கட்டிக்கொண்டான்;  ஏறக்குறைய  நானூறுபேர்  தாவீதுக்குப்  பின்சென்று  புறப்பட்டுப்போனார்கள்;  இருநூறுபேர்  ரஸ்துக்கள்  அண்டையில்  இருந்துவிட்டார்கள்.  (1சாமுவேல்  25:13)

appozhuthu  thaaveethu  than  manusharaip  paarththu:  neengga'l  avaravar  ungga'l  pattayaththaik  kattikko'l'lungga'l  en’raan;  avaravar  thangga'l  pattayaththaik  kattikko'ndaarga'l;  thaaveethum  than  pattayaththaik  kattikko'ndaan;  ea’rakku’raiya  naanoo’rupear  thaaveethukkup  pinsen’ru  pu’rappattuppoanaarga'l;  irunoo’rupear  rasthukka'l  a'ndaiyil  irunthuvittaarga'l.  (1saamuveal  25:13)

அப்பொழுது  வேலைக்காரரில்  ஒருவன்  நாபாலுடைய  மனைவியாகிய  அபிகாயிலை  நோக்கி:  இதோ,  நம்முடைய  எஜமானுடைய  சுகசெய்தி  விசாரிக்கத்  தாவீது  வனாந்தரத்திலிருந்து  ஆட்களை  அனுப்பினான்;  அவர்கள்பேரில்  அவர்  சீறினார்.  (1சாமுவேல்  25:14)

appozhuthu  vealaikkaararil  oruvan  naabaaludaiya  manaiviyaagiya  abikaayilai  noakki:  ithoa,  nammudaiya  ejamaanudaiya  sugaseythi  visaarikkath  thaaveethu  vanaantharaththilirunthu  aadka'lai  anuppinaan;  avarga'lpearil  avar  see’rinaar.  (1saamuveal  25:14)

அந்த  மனுஷரோ  எங்களுக்கு  மிகவும்  உபகாரிகளாயிருந்தார்கள்;  நாங்கள்  வெளிகளில்  இருக்கும்போது,  அவர்கள்  எங்களிடத்தில்  நடமாடின  நாளெல்லாம்  அவர்கள்  எங்களை  வருத்தப்படுத்தினதுமில்லை;  நமது  பொருளில்  ஒன்றும்  காணாமற்  போனதுமில்லை.  (1சாமுவேல்  25:15)

antha  manusharoa  engga'lukku  migavum  ubagaariga'laayirunthaarga'l;  naangga'l  ve'liga'lil  irukkumpoathu,  avarga'l  engga'lidaththil  nadamaadina  naa'lellaam  avarga'l  engga'lai  varuththappaduththinathumillai;  namathu  poru'lil  on’rum  kaa'naama’r  poanathumillai.  (1saamuveal  25:15)

நாங்கள்  ஆடுகளை  மேய்த்து,  அவர்களிடத்தில்  இருந்த  நாளெல்லாம்  அவர்கள்  இரவும்பகலும்  எங்களைச்  சுற்றிலும்  மதிலாயிருந்தார்கள்.  (1சாமுவேல்  25:16)

naangga'l  aaduga'lai  meayththu,  avarga'lidaththil  iruntha  naa'lellaam  avarga'l  iravumpagalum  engga'laich  sut’rilum  mathilaayirunthaarga'l.  (1saamuveal  25:16)

இப்போதும்  நீர்  செய்யவேண்டியதைக்  கவனித்துப்பாரும்;  நம்முடைய  எஜமான்  மேலும்,  அவருடைய  வீட்டார்  யாவர்மேலும்,  நிச்சயமாய்  ஒரு  பொல்லாப்பு  வருகிறதாயிருக்கிறது;  இவரோ,  ஒருவரும்  தம்மோடே  பேசக்கூடாதபடிக்கு,  பேலியாளின்  மகனாயிருக்கிறார்  என்றான்.  (1சாமுவேல்  25:17)

ippoathum  neer  seyyavea'ndiyathaik  kavaniththuppaarum;  nammudaiya  ejamaan  mealum,  avarudaiya  veettaar  yaavarmealum,  nichchayamaay  oru  pollaappu  varugi’rathaayirukki’rathu;  ivaroa,  oruvarum  thammoadea  peasakkoodaathapadikku,  bealiyaa'lin  maganaayirukki’raar  en’raan.  (1saamuveal  25:17)

அப்பொழுது  அபிகாயில்  தீவிரமாய்  இருநூறு  அப்பங்களையும்,  இரண்டு  துருத்தி  திராட்சரசத்தையும்,  சமையல்பண்ணப்பட்ட  ஐந்து  ஆடுகளையும்,  ஐந்து  படி  வறுத்த  பயற்றையும்,  வற்றலாக்கப்பட்ட  நூறு  திராட்சக்குலைகளையும்,  வற்றலான  இருநூறு  அத்திப்பழ  அடைகளையும்  எடுத்து,  கழுதைகள்மேல்  ஏற்றி,  (1சாமுவேல்  25:18)

appozhuthu  abikaayil  theeviramaay  irunoo’ru  appangga'laiyum,  ira'ndu  thuruththi  thiraadcharasaththaiyum,  samaiyalpa'n'nappatta  ainthu  aaduga'laiyum,  ainthu  padi  va’ruththa  payat’raiyum,  vat’ralaakkappatta  noo’ru  thiraadchakkulaiga'laiyum,  vat’ralaana  irunoo’ru  aththippazha  adaiga'laiyum  eduththu,  kazhuthaiga'lmeal  eat’ri,  (1saamuveal  25:18)

தன்  வேலைக்காரரைப்  பார்த்து:  நீங்கள்  எனக்கு  முன்னே  போங்கள்;  இதோ,  நான்  உங்கள்  பின்னே  வருகிறேன்  என்று  சொல்லி  அனுப்பினாள்;  தன்  புருஷனாகிய  நாபாலுக்கு  அதை  அறிவிக்கவில்லை.  (1சாமுவேல்  25:19)

than  vealaikkaararaip  paarththu:  neengga'l  enakku  munnea  poangga'l;  ithoa,  naan  ungga'l  pinnea  varugi’rean  en’ru  solli  anuppinaa'l;  than  purushanaagiya  naabaalukku  athai  a’rivikkavillai.  (1saamuveal  25:19)

அவள்  ஒரு  கழுதையின்மேல்  ஏறி,  மலையின்  மறைவில்  இறங்கிவருகையில்,  இதோ,  தாவீதும்  அவன்  மனுஷரும்  அவளுக்கு  எதிராக  இறங்கிவந்தார்கள்;  அவர்களைச்  சந்தித்தாள்.  (1சாமுவேல்  25:20)

ava'l  oru  kazhuthaiyinmeal  ea’ri,  malaiyin  ma’raivil  i’ranggivarugaiyil,  ithoa,  thaaveethum  avan  manusharum  ava'lukku  ethiraaga  i’ranggivanthaarga'l;  avarga'laich  santhiththaa'l.  (1saamuveal  25:20)

தாவீது  தன்  ஜனங்களை  நோக்கி:  அவனுக்கு  வனாந்தரத்தில்  இருக்கிறதையெல்லாம்  வீணாகவே  காப்பாற்றினேன்;  அவனுக்கு  உண்டானதிலெல்லாம்  ஒன்றும்  காணாமற்போனதில்லை;  என்றாலும்  நன்மைக்குப்  பதிலாக  அவன்  எனக்குத்  தீமை  செய்தான்.  (1சாமுவேல்  25:21)

thaaveethu  than  janangga'lai  noakki:  avanukku  vanaantharaththil  irukki’rathaiyellaam  vee'naagavea  kaappaat’rinean;  avanukku  u'ndaanathilellaam  on’rum  kaa'naama’rpoanathillai;  en’raalum  nanmaikkup  bathilaaga  avan  enakkuth  theemai  seythaan.  (1saamuveal  25:21)

அவனுக்கு  உண்டான  எல்லாவற்றிலும்  சுவரில்  நீர்விடும்  ஒரு  நாயைமுதலாய்ப்  பொழுதுவிடியுமட்டும்  நான்  உயிரோடே  வைத்தால்,  தேவன்  தாவீதின்  சத்துருக்களுக்கு  அதற்குச்  சரியாகவும்  அதற்கு  அதிகமாகவும்  செய்யக்கடவர்  என்று  சொல்லியிருந்தான்.  (1சாமுவேல்  25:22)

avanukku  u'ndaana  ellaavat’rilum  suvaril  neervidum  oru  naayaimuthalaayp  pozhuthuvidiyumattum  naan  uyiroadea  vaiththaal,  theavan  thaaveethin  saththurukka'lukku  atha’rkuch  sariyaagavum  atha’rku  athigamaagavum  seyyakkadavar  en’ru  solliyirunthaan.  (1saamuveal  25:22)

அபிகாயில்  தாவீதைக்  காண்கையில்,  தீவிரமாய்க்  கழுதையை  விட்டு  இறங்கி,  தாவீதுக்கு  நேராகத்  தரையில்  முகங்குப்புற  விழுந்து  பணிந்து,  (1சாமுவேல்  25:23)

abikaayil  thaaveethaik  kaa'ngaiyil,  theeviramaayk  kazhuthaiyai  vittu  i’ranggi,  thaaveethukku  nearaagath  tharaiyil  mugangkuppu’ra  vizhunthu  pa'ninthu,  (1saamuveal  25:23)

அவன்  பாதத்திலே  விழுந்து:  என்  ஆண்டவனே,  இந்தப்  பாதகம்  என்மேல்  சுமரட்டும்;  உம்முடைய  அடியாளுடைய  வார்த்தைகளை  நீர்  கேட்கும்பொருட்டாக  உம்முடைய  அடியாள்  உமது  செவிகேட்கப்  பேசவேண்டும்.  (1சாமுவேல்  25:24)

avan  paathaththilea  vizhunthu:  en  aa'ndavanea,  inthap  paathagam  enmeal  sumarattum;  ummudaiya  adiyaa'ludaiya  vaarththaiga'lai  neer  keadkumporuttaaga  ummudaiya  adiyaa'l  umathu  sevikeadkap  peasavea'ndum.  (1saamuveal  25:24)

என்  ஆண்டவனாகிய  நீர்  நாபால்  என்னும்  இந்தப்  பேலியாளின்  மனுஷனை  ஒரு  பொருட்டாக  எண்ணவேண்டாம்;  அவன்  பெயர்  எப்படியோ  அப்படியே  அவனும்  இருக்கிறான்;  அவன்  பெயர்  நாபால்,  அவனுக்குப்  பயித்தியமும்  இருக்கிறது;  உம்முடைய  அடியாளாகிய  நானோ,  என்  ஆண்டவன்  அனுப்பின  வாலிபரைக்  காணவில்லை.  (1சாமுவேல்  25:25)

en  aa'ndavanaagiya  neer  naabaal  ennum  inthap  bealiyaa'lin  manushanai  oru  poruttaaga  e'n'navea'ndaam;  avan  peyar  eppadiyoa  appadiyea  avanum  irukki’raan;  avan  peyar  naabaal,  avanukkup  payiththiyamum  irukki’rathu;  ummudaiya  adiyaa'laagiya  naanoa,  en  aa'ndavan  anuppina  vaalibaraik  kaa'navillai.  (1saamuveal  25:25)

இப்போதும்  என்  ஆண்டவனே,  நீர்  இரத்தம்  சிந்த  வரவும்,  உம்முடைய  கை  நீதியைச்  சரிக்கட்டவும்,  கர்த்தர்  உமக்கு  இடங்கொடுக்கவில்லை  என்பதைக்  கர்த்தருடைய  ஜீவனைக்கொண்டும்,  உம்முடைய  ஜீவனைக்கொண்டும்  சொல்லுகிறேன்;  இப்போதும்  உம்முடைய  சத்துருக்களும்,  என்  ஆண்டவனுக்கு  விரோதமாகப்  பொல்லாப்புத்  தேடுகிறவர்களும்,  நாபாலைப்போல  ஆகக்கடவர்கள்.  (1சாமுவேல்  25:26)

ippoathum  en  aa'ndavanea,  neer  iraththam  sintha  varavum,  ummudaiya  kai  neethiyaich  sarikkattavum,  karththar  umakku  idangkodukkavillai  enbathaik  karththarudaiya  jeevanaikko'ndum,  ummudaiya  jeevanaikko'ndum  sollugi’rean;  ippoathum  ummudaiya  saththurukka'lum,  en  aa'ndavanukku  viroathamaagap  pollaapputh  theadugi’ravarga'lum,  naabaalaippoala  aagakkadavarga'l.  (1saamuveal  25:26)

இப்போதும்  உமது  அடியாள்  என்  ஆண்டவனுக்குக்  கொண்டுவந்த  காணிக்கையை  ஏற்றுக்கொண்டு,  என்  ஆண்டவனைப்  பின்பற்றுகிற  வாலிபருக்குக்  கொடுப்பீராக.  (1சாமுவேல்  25:27)

ippoathum  umathu  adiyaa'l  en  aa'ndavanukkuk  ko'nduvantha  kaa'nikkaiyai  eat’rukko'ndu,  en  aa'ndavanaip  pinpat’rugi’ra  vaalibarukkuk  koduppeeraaga.  (1saamuveal  25:27)

உமது  அடியாளின்  பாதகத்தை  மன்னியும்,  கர்த்தர்  என்  ஆண்டவனுக்கு  நிலையான  வீட்டை  நிச்சயமாய்க்  கட்டுவார்;  என்  ஆண்டவன்  கர்த்தருடைய  யுத்தங்களை  நடத்துகிறவராமே;  நீர்  உயிரோடே  இருக்கும்  நாளில்  ஒரு  பொல்லாப்பும்  உம்மிலே  காணப்படாதிருப்பதாக.  (1சாமுவேல்  25:28)

umathu  adiyaa'lin  paathagaththai  manniyum,  karththar  en  aa'ndavanukku  nilaiyaana  veettai  nichchayamaayk  kattuvaar;  en  aa'ndavan  karththarudaiya  yuththangga'lai  nadaththugi’ravaraamea;  neer  uyiroadea  irukkum  naa'lil  oru  pollaappum  ummilea  kaa'nappadaathiruppathaaga.  (1saamuveal  25:28)

உம்மைத்  துன்பப்படுத்தவும்,  உம்முடைய  பிராணனை  வாங்க  வகைதேடவும்,  ஒரு  மனுஷன்  எழும்பினாலும்  என்  ஆண்டவனுடைய  ஆத்துமா  உம்முடைய  தேவனாகிய  கர்த்தரின்  ஆதரவில்  இருக்கிற  ஜீவனுள்ளோருடைய  கட்டிலே  கட்டப்பட்டிருக்கும்;  உம்முடைய  சத்துருக்களின்  ஆத்துமாக்களோ  கவணில்  வைத்து  எறிந்தாற்போல  எறியப்பட்டுப்போம்.  (1சாமுவேல்  25:29)

ummaith  thunbappaduththavum,  ummudaiya  piraa'nanai  vaangga  vagaitheadavum,  oru  manushan  ezhumbinaalum  en  aa'ndavanudaiya  aaththumaa  ummudaiya  theavanaagiya  karththarin  aatharavil  irukki’ra  jeevanu'l'loarudaiya  kattilea  kattappattirukkum;  ummudaiya  saththurukka'lin  aaththumaakka'loa  kava'nil  vaiththu  e’rinthaa’rpoala  e’riyappattuppoam.  (1saamuveal  25:29)

கர்த்தர்  உம்மைக்குறித்துச்  சொன்ன  நன்மையின்படி  எல்லாம்  இனி  என்  ஆண்டவனுக்குச்  செய்து,  இஸ்ரவேலுக்கு  அதிபதியாக  உம்மை  நேமிக்கும்  போது,  (1சாமுவேல்  25:30)

karththar  ummaikku’riththuch  sonna  nanmaiyinpadi  ellaam  ini  en  aa'ndavanukkuch  seythu,  isravealukku  athibathiyaaga  ummai  neamikkum  poathu,  (1saamuveal  25:30)

நீர்  விருதாவாய்  இரத்தம்  சிந்தாமலும்,  என்  ஆண்டவனாகிய  நீர்  பழிவாங்காமலும்  இருந்ததுண்டானால்,  அப்பொழுது  என்  ஆண்டவனாகிய  உமக்குத்  துக்கமும்  இராது,  மன  இடறலும்  இராது;  கர்த்தர்  என்  ஆண்டவனுக்கு  நன்மை  செய்யும்போது,  உம்முடைய  அடியாளை  நினைப்பீராக  என்றாள்.  (1சாமுவேல்  25:31)

neer  viruthaavaay  iraththam  sinthaamalum,  en  aa'ndavanaagiya  neer  pazhivaanggaamalum  irunthathu'ndaanaal,  appozhuthu  en  aa'ndavanaagiya  umakkuth  thukkamum  iraathu,  mana  ida’ralum  iraathu;  karththar  en  aa'ndavanukku  nanmai  seyyumpoathu,  ummudaiya  adiyaa'lai  ninaippeeraaga  en’raa'l.  (1saamuveal  25:31)

அப்பொழுது  தாவீது  அபிகாயிலை  நோக்கி:  உன்னை  இன்றையதினம்  என்னைச்  சந்திக்க  அனுப்பின  இஸ்ரவேலின்  தேவனாகிய  கர்த்தருக்கு  ஸ்தோத்திரம்.  (1சாமுவேல்  25:32)

appozhuthu  thaaveethu  abikaayilai  noakki:  unnai  in’raiyathinam  ennaich  santhikka  anuppina  isravealin  theavanaagiya  karththarukku  sthoaththiram.  (1saamuveal  25:32)

நீ  சொல்லிய  யோசனை  ஆசீர்வதிக்கப்படுவதாக;  நான்  இரத்தம்  சிந்த  வராதபடிக்கும்,  என்  கையே  பழிவாங்காதபடிக்கும்,  நீ  இன்றையதினம்  எனக்குத்  தடை  பண்ணினபடியினால்,  நீயும்  ஆசீர்வதிக்கப்படுவாயாக.  (1சாமுவேல்  25:33)

nee  solliya  yoasanai  aaseervathikkappaduvathaaga;  naan  iraththam  sintha  varaathapadikkum,  en  kaiyea  pazhivaanggaathapadikkum,  nee  in’raiyathinam  enakkuth  thadai  pa'n'ninapadiyinaal,  neeyum  aaseervathikkappaduvaayaaga.  (1saamuveal  25:33)

நீ  தீவிரமாய்  என்னைச்  சந்திக்க  வராமல்  இருந்தாயானால்,  பொழுது  விடியுமட்டும்  நாபாலுக்கு  ஒரு  நாயும்  உயிரோடே  வைக்கப்படுவதில்லை  என்று,  உனக்குப்  பொல்லாப்புச்  செய்ய  எனக்கு  இடங்கொடாதிருக்கிற  இஸ்ரவேலின்  தேவனாகிய  கர்த்தரின்  ஜீவனைக்கொண்டு  மெய்யாய்ச்  சொல்லுகிறேன்  என்று  சொல்லி,  (1சாமுவேல்  25:34)

nee  theeviramaay  ennaich  santhikka  varaamal  irunthaayaanaal,  pozhuthu  vidiyumattum  naabaalukku  oru  naayum  uyiroadea  vaikkappaduvathillai  en’ru,  unakkup  pollaappuch  seyya  enakku  idangkodaathirukki’ra  isravealin  theavanaagiya  karththarin  jeevanaikko'ndu  meyyaaych  sollugi’rean  en’ru  solli,  (1saamuveal  25:34)

அவள்  தனக்குக்  கொண்டுவந்ததைத்  தாவீது  அவள்  கையிலே  வாங்கிக்கொண்டு,  அவளைப்  பார்த்து:  நீ  சமாதானத்தோடே  உன்  வீட்டுக்குப்  போ;  இதோ,  நான்  உன்  சொல்லைக்கேட்டு,  உன்  முகத்தைப்  பார்த்து,  இப்படிச்  செய்தேன்  என்றான்.  (1சாமுவேல்  25:35)

ava'l  thanakkuk  ko'nduvanthathaith  thaaveethu  ava'l  kaiyilea  vaanggikko'ndu,  ava'laip  paarththu:  nee  samaathaanaththoadea  un  veettukkup  poa;  ithoa,  naan  un  sollaikkeattu,  un  mugaththaip  paarththu,  ippadich  seythean  en’raan.  (1saamuveal  25:35)

அபிகாயில்  நாபாலிடத்தில்  வந்தபோது,  இதோ,  ராஜவிருந்துக்கு  ஒப்பான  விருந்து  அவன்  வீட்டிலே  நடந்தது;  அவன்  இருதயம்  களித்திருந்தது;  அவன்  மிகவும்  வெறித்துமிருந்தான்;  ஆகையால்  பொழுது  விடியுமட்டும்  சிறிய  காரியமானாலும்  பெரிய  காரியமானாலும்,  ஒன்றையும்  அவனுக்கு  அறிவிக்கவில்லை.  (1சாமுவேல்  25:36)

abikaayil  naabaalidaththil  vanthapoathu,  ithoa,  raajavirunthukku  oppaana  virunthu  avan  veettilea  nadanthathu;  avan  iruthayam  ka'liththirunthathu;  avan  migavum  ve’riththumirunthaan;  aagaiyaal  pozhuthu  vidiyumattum  si’riya  kaariyamaanaalum  periya  kaariyamaanaalum,  on’raiyum  avanukku  a’rivikkavillai.  (1saamuveal  25:36)

பொழுது  விடிந்து,  நாபாலின்  வெறி  தெளிந்தபின்பு,  அவன்  மனைவி  இந்த  வர்த்தமானங்களை  அவனுக்கு  அறிவித்தாள்;  அப்பொழுது  அவன்  இருதயம்  அவனுக்குள்ளே  செத்து,  அவன்  கல்லைப்போலானான்.  (1சாமுவேல்  25:37)

pozhuthu  vidinthu,  naabaalin  ve’ri  the'linthapinbu,  avan  manaivi  intha  varththamaanangga'lai  avanukku  a’riviththaa'l;  appozhuthu  avan  iruthayam  avanukku'l'lea  seththu,  avan  kallaippoalaanaan.  (1saamuveal  25:37)

கர்த்தர்  நாபாலை  வாதித்ததினால்,  ஏறக்குறையப்  பத்து  நாளுக்குப்பின்பு,  அவன்  செத்தான்.  (1சாமுவேல்  25:38)

karththar  naabaalai  vaathiththathinaal,  ea’rakku’raiyap  paththu  naa'lukkuppinbu,  avan  seththaan.  (1saamuveal  25:38)

நாபால்  செத்துப்போனான்  என்று  தாவீது  கேள்விப்பட்டபோது:  என்  நிந்தையின்  வழக்கை  நாபாலின்  கையில்  விசாரித்து,  தம்முடைய  அடியானைப்  பொல்லாப்புச்  செய்யாதபடிக்குத்  தடுத்த  கர்த்தருக்கு  ஸ்தோத்திரம்;  கர்த்தர்  தாமே  நாபாலின்  பொல்லாப்பை  அவன்  தலையின்மேல்  திரும்பப்பண்ணினார்  என்று  சொல்லி,  அபிகாயிலை  விவாகம்பண்ணுகிறதற்காக  அவளோடே  பேச,  தாவீது  ஆட்களை  அனுப்பினான்.  (1சாமுவேல்  25:39)

naabaal  seththuppoanaan  en’ru  thaaveethu  kea'lvippattapoathu:  en  ninthaiyin  vazhakkai  naabaalin  kaiyil  visaariththu,  thammudaiya  adiyaanaip  pollaappuch  seyyaathapadikkuth  thaduththa  karththarukku  sthoaththiram;  karththar  thaamea  naabaalin  pollaappai  avan  thalaiyinmeal  thirumbappa'n'ninaar  en’ru  solli,  abikaayilai  vivaagampa'n'nugi’ratha’rkaaga  ava'loadea  peasa,  thaaveethu  aadka'lai  anuppinaan.  (1saamuveal  25:39)

தாவீதின்  ஊழியக்காரர்  கர்மேலில்  இருக்கிற  அபிகாயிலண்டைக்கு  வந்து,  தாவீது  உன்னை  விவாகம்பண்ண  மனதாய்,  எங்களை  உன்னிடத்தில்  அனுப்பினார்  என்று  அவளோடே  சொல்லுகிறபோது,  (1சாமுவேல்  25:40)

thaaveethin  oozhiyakkaarar  karmealil  irukki’ra  abikaayila'ndaikku  vanthu,  thaaveethu  unnai  vivaagampa'n'na  manathaay,  engga'lai  unnidaththil  anuppinaar  en’ru  ava'loadea  sollugi’rapoathu,  (1saamuveal  25:40)

அவள்  எழுந்திருந்து,  தரைமட்டும்  முகங்குனிந்து,  இதோ,  நான்  என்  ஆண்டவனுடைய  ஊழியக்காரரின்  கால்களைக்  கழுவத்தக்க  பணிவிடைக்காரியாகிய  அவருடைய  அடியாள்  என்றாள்.  (1சாமுவேல்  25:41)

ava'l  ezhunthirunthu,  tharaimattum  mugangkuninthu,  ithoa,  naan  en  aa'ndavanudaiya  oozhiyakkaararin  kaalga'laik  kazhuvaththakka  pa'nividaikkaariyaagiya  avarudaiya  adiyaa'l  en’raa'l.  (1saamuveal  25:41)

பின்பு  அபிகாயில்  தீவிரித்து  எழுந்து,  ஒரு  கழுதையின்மேல்  ஏறி,  ஐந்து  தாதிப்  பெண்களைக்  கூட்டிக்கொண்டு,  தாவீதின்  ஸ்தானாபதிகளுக்குப்  பின்சென்று  போய்,  அவனுக்கு  மனைவியானாள்.  (1சாமுவேல்  25:42)

pinbu  abikaayil  theeviriththu  ezhunthu,  oru  kazhuthaiyinmeal  ea’ri,  ainthu  thaathip  pe'nga'laik  koottikko'ndu,  thaaveethin  sthaanaabathiga'lukkup  pinsen’ru  poay,  avanukku  manaiviyaanaa'l.  (1saamuveal  25:42)

யெஸ்ரயேல்  ஊராளாகிய  அகினோவாமையும்  தாவீது  விவாகம்பண்ணினான்;  அவர்கள்  இருவரும்  அவனுக்கு  மனைவிகளானார்கள்.  (1சாமுவேல்  25:43)

yesrayeal  ooraa'laagiya  aginoavaamaiyum  thaaveethu  vivaagampa'n'ninaan;  avarga'l  iruvarum  avanukku  manaiviga'laanaarga'l.  (1saamuveal  25:43)

சவுல்  தாவீதின்  மனைவியாகிய  மீகாள்  என்னும்  தன்  குமாரத்தியைக்  காலீம்  ஊரானாகிய  லாயீசின்  குமாரனான  பல்த்திக்குக்  கொடுத்திருந்தான்.  (1சாமுவேல்  25:44)

savul  thaaveethin  manaiviyaagiya  meekaa'l  ennum  than  kumaaraththiyaik  kaaleem  ooraanaagiya  laayeesin  kumaaranaana  palththikkuk  koduththirunthaan.  (1saamuveal  25:44)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!