சவுல் பெலிஸ்தரைப் பின்தொடர்ந்து
திரும்பிவந்தபோது, இதோ, தாவீது
என்கேதியின் வனாந்தரத்தில் இருக்கிறான்
என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டது. (1சாமுவேல்
24:1)
savul pelistharaip
pinthodarnthu thirumbivanthapoathu,
ithoa, thaaveethu engeathiyin vanaantharaththil irukki’raan en’ru avanukku
a’rivikkappattathu. (1saamuveal
24:1)
அப்பொழுது
சவுல்: இஸ்ரவேல் அனைத்திலும்
தெரிந்துகொள்ளப்பட்ட மூவாயிரம்பேரைக் கூட்டிக்கொண்டு, தாவீதையும்
அவன் மனுஷரையும் வரையாடுகளுள்ள
கன்மலைகளின்மேல் தேடப்போனான். (1சாமுவேல்
24:2)
appozhuthu
savul: israveal
anaiththilum therinthuko'l'lappatta moovaayirampearaik koottikko'ndu, thaaveethaiyum avan manusharaiyum varaiyaaduga'lu'l'la kanmalaiga'linmeal theadappoanaan. (1saamuveal
24:2)
வழியோரத்திலிருக்கிற ஆட்டுத்தொழுவங்களிடத்தில் அவன் வந்தபோது, அங்கே ஒரு கெபி இருந்தது; அதிலே சவுல் மலஜலாதிக்குப்
போனான்; தாவீதும் அவன் மனுஷரும் அந்தக்
கெபியின் பக்கங்களில் உட்கார்ந்திருந்தார்கள். (1சாமுவேல்
24:3)
vazhiyoaraththilirukki’ra aattuththozhuvangga'lidaththil avan vanthapoathu, anggea oru kebi irunthathu; athilea savul
malajalaathikkup poanaan; thaaveethum
avan manusharum anthak
kebiyin
pakkangga'lil udkaarnthirunthaarga'l. (1saamuveal
24:3)
அப்பொழுது
தாவீதின் மனுஷர் அவனை நோக்கி: இதோ, நான் உன் சத்துருவை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன்; உன் பார்வைக்கு நலமானபடி
அவனுக்குச் செய்வாயாக என்று கர்த்தர் உன்னோடே
சொன்ன நாள் இதுதானே
என்றார்கள்; தாவீது எழுந்திருந்துபோய், சவுலுடைய
சால்வையின் தொங்கலை மெள்ள அறுத்துக்கொண்டான். (1சாமுவேல்
24:4)
appozhuthu thaaveethin
manushar avanai noakki:
ithoa, naan un saththuruvai un kaiyil oppukkoduppean; un paarvaikku nalamaanapadi
avanukkuch seyvaayaaga en’ru karththar
unnoadea sonna
naa'l ithuthaanea en’raarga'l; thaaveethu ezhunthirunthupoay, savuludaiya saalvaiyin thonggalai me'l'la
a’ruththukko'ndaan. (1saamuveal
24:4)
தாவீது
சவுலின் சால்வைத் தொங்கலை
அறுத்துக்கொண்டதினிமித்தம் அவன் மனது அடித்துக்கொண்டிருந்தது. (1சாமுவேல்
24:5)
thaaveethu
savulin saalvaith thonggalai a’ruththukko'ndathinimiththam avan manathu adiththukko'ndirunthathu. (1saamuveal
24:5)
அவன் தன் மனுஷரைப்
பார்த்து: கர்த்தர் அபிஷேகம்பண்ணின என் ஆண்டவன்மேல் என் கையைப் போடும்படியான
இப்படிப்பட்ட காரியத்தை நான் செய்யாதபடிக்கு, கர்த்தர்
என்னைக் காப்பாராக; அவர் கர்த்தரால் அபிஷேகம்
பண்ணப்பட்டவர் என்று சொல்லி,
(1சாமுவேல் 24:6)
avan than manusharaip paarththu:
karththar abisheagampa'n'nina en aa'ndavanmeal en kaiyaip poadumpadiyaana ippadippatta kaariyaththai
naan seyyaathapadikku, karththar
ennaik kaappaaraaga; avar karththaraal
abisheagam pa'n'nappattavar en’ru solli, (1saamuveal
24:6)
தன் மனுஷரைச் சவுலின்மேல்
எழும்ப ஒட்டாமல், இவ்வார்த்தைகளினால் அவர்களைத்
தடைபண்ணினான்; சவுல் எழுந்திருந்து, கெபியைவிட்டு,
வழியே நடந்துபோனான். (1சாமுவேல்
24:7)
than manusharaich savulinmeal ezhumba ottaamal, ivvaarththaiga'linaal avarga'laith thadaipa'n'ninaan; savul
ezhunthirunthu, kebiyaivittu, vazhiyea
nadanthupoanaan. (1saamuveal 24:7)
அப்பொழுது
தாவீதும் எழுந்து, கெபியிலிருந்து புறப்பட்டு,
சவுலுக்குப் பின்னாகப் போய்: ராஜாவாகிய என் ஆண்டவனே என்று கூப்பிட்டான்; சவுல் திரும்பிப்பார்த்தபோது, தாவீது
தரைமட்டும் முகங்குனிந்து வணங்கி,
(1சாமுவேல் 24:8)
appozhuthu thaaveethum
ezhunthu, kebiyilirunthu pu’rappattu, savulukkup pinnaagap poay: raajaavaagiya en aa'ndavanea
en’ru
kooppittaan; savul
thirumbippaarththapoathu, thaaveethu
tharaimattum mugangkuninthu va'nanggi, (1saamuveal
24:8)
சவுலை நோக்கி: தாவீது
உமக்குப் பொல்லாப்புச் செய்யப்பார்க்கிறான் என்று சொல்லுகிற மனுஷருடைய
வார்த்தைகளை ஏன் கேட்கிறீர்?
(1சாமுவேல் 24:9)
savulai noakki:
thaaveethu umakkup pollaappuch seyyappaarkki’raan en’ru sollugi’ra manusharudaiya vaarththaiga'lai ean keadki’reer? (1saamuveal 24:9)
இதோ, கர்த்தர் இன்று கெபியில் உம்மை என் கையில்
ஒப்புக்கொடுத்தார் என்பதை இன்றையதினம்
உம்முடைய கண்கள் கண்டதே,
உம்மைக் கொன்றுபோடவேண்டும் என்று சிலர் சொன்னார்கள்;
ஆனாலும் என் கை உம்மைத் தப்பவிட்டது;
என் ஆண்டவன்மேல் என் கையைப் போடேன்;
அவர் கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்பட்டவராமே என்றேன்.
(1சாமுவேல் 24:10)
ithoa, karththar
in’ru
kebiyil
ummai en kaiyil
oppukkoduththaar enbathai in’raiyathinam ummudaiya ka'nga'l ka'ndathea,
ummaik kon’rupoadavea'ndum en’ru silar sonnaarga'l; aanaalum
en kai ummaith
thappavittathu; en aa'ndavanmeal en kaiyaip poadean;
avar karththaraal abisheagampa'n'nappattavaraamea en’rean. (1saamuveal
24:10)
என் தகப்பனே பாரும்;
என் கையிலிருக்கிற உம்முடைய
சால்வையின் தொங்கலைப் பாரும்;
உம்மைக் கொன்றுபோடாமல், உம்முடைய
சால்வையின் தொங்கலை அறுத்துக்கொண்டேன்; என் கையிலே பொல்லாப்பும்
துரோகமும் இல்லை என்றும்,
உமக்கு நான் குற்றம்
செய்யவில்லை என்றும் அறிந்துகொள்ளும்; நீரோ என் பிராணனை
வாங்க, அதை வேட்டையாடுகிறீர். (1சாமுவேல்
24:11)
en thagappanea paarum;
en kaiyilirukki’ra ummudaiya saalvaiyin thonggalaip paarum;
ummaik kon’rupoadaamal, ummudaiya saalvaiyin thonggalai a’ruththukko'ndean; en kaiyilea pollaappum
thuroagamum illai en’rum, umakku naan kut’ram seyyavillai en’rum a’rinthuko'l'lum; neeroa
en piraa'nanai vaangga, athai veattaiyaadugi’reer. (1saamuveal
24:11)
கர்த்தர்
எனக்கும் உமக்கும் நடுநின்று
நியாயம் விசாரித்து, கர்த்தர்
தாமே என் காரியத்தில்
உமக்கு நீதியைச் சரிக்கட்டுவாராக; உம்முடைய
பேரில் நான் கைபோடுவதில்லை. (1சாமுவேல்
24:12)
karththar enakkum
umakkum nadunin’ru niyaayam visaariththu, karththar
thaamea en kaariyaththil
umakku neethiyaich sarikkattuvaaraaga; ummudaiya pearil
naan kaipoaduvathillai. (1saamuveal
24:12)
முதியோர்
மொழிப்படியே, ஆகாதவர்களிடத்திலே ஆகாமியம்
பிறக்கும்; ஆகையால் உம்முடையபேரில் நான் கைபோடுவதில்லை. (1சாமுவேல்
24:13)
muthiyoar mozhippadiyea, aagaathavarga'lidaththilea
aagaamiyam pi’rakkum; aagaiyaal ummudaiyapearil naan kaipoaduvathillai. (1saamuveal
24:13)
இஸ்ரவேலின்
ராஜா யாரைத் தேடப் புறப்பட்டார்? ஒரு செத்த நாயையா,
ஒரு தெள்ளுப்பூச்சியையா, நீர் யாரைப் பின்தொடருகிறீர்? (1சாமுவேல்
24:14)
isravealin raajaa
yaaraith theadap pu’rappattaar? oru seththa naayaiyaa,
oru the'l'luppoochchiyaiyaa, neer yaaraip
pinthodarugi’reer? (1saamuveal
24:14)
கர்த்தர்
நியாயாதிபதியாயிருந்து, எனக்கும் உமக்கும்
நியாயந்தீர்த்து, எனக்காக வழக்காடி,
நான் உம்முடைய கைக்குத்
தப்ப என்னை விடுவிப்பாராக
என்றான். (1சாமுவேல் 24:15)
karththar niyaayaathibathiyaayirunthu, enakkum
umakkum niyaayantheerththu, enakkaaga vazhakkaadi,
naan ummudaiya kaikkuth
thappa ennai viduvippaaraaga en’raan. (1saamuveal
24:15)
தாவீது
இந்த வார்த்தைகளைச் சவுலோடே
சொல்லி முடிந்தபின்பு, சவுல்:
என் குமாரனாகிய தாவீதே,
இது உன்னுடைய சத்தமல்லவா
என்று சொல்லி, சத்தமிட்டு
அழுது, (1சாமுவேல் 24:16)
thaaveethu intha vaarththaiga'laich savuloadea solli mudinthapinbu,
savul: en kumaaranaagiya thaaveethea, ithu unnudaiya
saththamallavaa en’ru solli, saththamittu azhuthu, (1saamuveal
24:16)
தாவீதைப்
பார்த்து: நீ என்னைப்பார்க்கிலும் நீதிமான்;
நீ எனக்கு நன்மை செய்தாய்; நானோ உனக்கு தீமை செய்தேன். (1சாமுவேல்
24:17)
thaaveethaip paarththu:
nee ennaippaarkkilum neethimaan;
nee enakku nanmai seythaay; naanoa
unakku theemai seythean. (1saamuveal
24:17)
நீ எனக்கு நன்மை செய்ததை இன்று விளங்கப்பண்ணினாய்; கர்த்தர்
என்னை உன் கையில்
ஒப்புக்கொடுத்திருந்தும், நீ என்னைக்
கொன்றுபோடவில்லை. (1சாமுவேல் 24:18)
nee enakku
nanmai seythathai in’ru vi'langgappa'n'ninaay; karththar
ennai un kaiyil
oppukkoduththirunthum, nee ennaik
kon’rupoadavillai. (1saamuveal
24:18)
ஒருவன்
தன் மாற்றானைக் கண்டுபிடித்தால், அவனைச்
சுகமே போகவிடுவானோ? இன்று நீ எனக்குச்
செய்த நன்மைக்காகக் கர்த்தர்
உனக்கு நன்மை செய்வாராக.
(1சாமுவேல் 24:19)
oruvan than maat’raanaik ka'ndupidiththaal, avanaich sugamea poagaviduvaanoa? in’ru nee enakkuch seytha
nanmaikkaagak karththar
unakku nanmai seyvaaraaga. (1saamuveal 24:19)
நீ நிச்சயமாக ராஜாவாய்
இருப்பாய் என்றும், இஸ்ரவேலின்
ராஜ்யபாரம் உன் கையில்
நிலைவரப்படும் என்றும் அறிவேன்.
(1சாமுவேல் 24:20)
nee nichchayamaaga raajaavaay iruppaay
en’rum,
isravealin raajyabaaram un kaiyil
nilaivarappadum en’rum a’rivean. (1saamuveal 24:20)
இப்போதும்
நீ எனக்குப் பின்னிருக்கும் என் சந்ததியை வேரறுப்பதில்லை என்றும்,
என் தகப்பன் வீட்டாரில்
என் பெயரை அழித்துப்போடுவதில்லை என்றும்
கர்த்தர்மேல் எனக்கு ஆணையிட்டுக்
கொடு என்றான். (1சாமுவேல்
24:21)
ippoathum nee enakkup pinnirukkum
en santhathiyai veara’ruppathillai en’rum, en thagappan veettaaril en peyarai
azhiththuppoaduvathillai en’rum karththarmeal enakku
aa'naiyittuk kodu en’raan. (1saamuveal 24:21)
அப்பொழுது
தாவீது சவுலுக்கு ஆணையிட்டுக்
கொடுத்தான்; பின்பு, சவுல் தன் வீட்டுக்குப்
புறப்பட்டுப்போனான்; தாவீதும் அவன் மனுஷரும் அரணிப்பான
இடத்திற்கு ஏறிப்போனார்கள். (1சாமுவேல்
24:22)
appozhuthu thaaveethu savulukku aa'naiyittuk koduththaan;
pinbu, savul
than veettukkup pu’rappattuppoanaan; thaaveethum avan manusharum ara'nippaana
idaththi’rku ea’rippoanaarga'l. (1saamuveal 24:22)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!