Wednesday, August 24, 2016

1 Saamuveal 21 | 1 சாமுவேல் 21 | 1 Samuel 21

தாவீது  நோபிலிருக்கிற  ஆசாரியனாகிய  அகிமெலேக்கினிடத்தில்  போனான்;  அகிமெலேக்கு  நடுக்கத்தோடே  தாவீதுக்கு  எதிர்கொண்டுபோய்:  ஒருவரும்  உம்மோடே  கூடவராமல்,  நீர்  ஒண்டியாய்  வருகிறது  என்ன  என்று  அவனைக்  கேட்டான்.  (1சாமுவேல்  21:1)

thaaveethu  noabilirukki’ra  aasaariyanaagiya  agimeleakkinidaththil  poanaan;  agimeleakku  nadukkaththoadea  thaaveethukku  ethirko'ndupoay:  oruvarum  ummoadea  koodavaraamal,  neer  o'ndiyaay  varugi’rathu  enna  en’ru  avanaik  keattaan.  (1saamuveal  21:1)

தாவீது  ஆசாரியனாகிய  அகிமெலேக்கைப்  பார்த்து:  ராஜா  எனக்கு  ஒரு  காரியத்தைக்  கட்டளையிட்டு,  நான்  உன்னை  அனுப்பின  காரியமும்  உனக்குக்  கட்டளையிட்டதும்  இன்னதென்று  ஒருவரும்  அறியாதிருக்கவேண்டும்  என்று  என்னோடே  சொன்னார்;  இன்ன  இடத்திற்கு  வரவேண்டும்  என்று  சேவகருக்குச்  சொல்லியிருக்கிறேன்.  (1சாமுவேல்  21:2)

thaaveethu  aasaariyanaagiya  agimeleakkaip  paarththu:  raajaa  enakku  oru  kaariyaththaik  katta'laiyittu,  naan  unnai  anuppina  kaariyamum  unakkuk  katta'laiyittathum  innathen’ru  oruvarum  a’riyaathirukkavea'ndum  en’ru  ennoadea  sonnaar;  inna  idaththi’rku  varavea'ndum  en’ru  seavagarukkuch  solliyirukki’rean.  (1saamuveal  21:2)

இப்போதும்  உம்முடைய  கையில்  இருக்கிறது  என்ன?  ஐந்து  அப்பமாகிலும்,  என்னவாகிலும்,  இருக்கிறதை  என்  கையிலே  கொடும்  என்றான்.  (1சாமுவேல்  21:3)

ippoathum  ummudaiya  kaiyil  irukki’rathu  enna?  ainthu  appamaagilum,  ennavaagilum,  irukki’rathai  en  kaiyilea  kodum  en’raan.  (1saamuveal  21:3)

ஆசாரியன்  தாவீதுக்குப்  பிரதியுத்தரமாக:  பரிசுத்த  அப்பம்  இருக்கிறதே  ஒழிய,  சாதாரண  அப்பம்  என்  கையில்  இல்லை;  வாலிபர்  ஸ்திரீகளோடேமாத்திரம்  சேராதிருந்தால்  கொடுப்பேன்  என்றான்.  (1சாமுவேல்  21:4)

aasaariyan  thaaveethukkup  pirathiyuththaramaaga:  parisuththa  appam  irukki’rathea  ozhiya,  saathaara'na  appam  en  kaiyil  illai;  vaalibar  sthireega'loadeamaaththiram  searaathirunthaal  koduppean  en’raan.  (1saamuveal  21:4)

தாவீது  ஆசாரியனுக்குப்  பிரதியுத்தரமாக:  நான்  புறப்படுகிறதற்கு  முன்  நேற்றும்  முந்தாநாளும்  ஸ்திரீகள்  எங்களுக்கு  விலக்கமாயிருந்தார்கள்;  வாலிபருடைய  அசம்பிகளும்  சுத்தமாயிருக்கிறது;  இன்றையதினம்  வேறே  அப்பம்  பாத்திரத்தில்  பிரதிஷ்டைபண்ணப்பட்டதினால்,  இது  சாதாரணமாயிற்றே  என்றான்.  (1சாமுவேல்  21:5)

thaaveethu  aasaariyanukkup  pirathiyuththaramaaga:  naan  pu’rappadugi’ratha’rku  mun  neat’rum  munthaanaa'lum  sthireega'l  engga'lukku  vilakkamaayirunthaarga'l;  vaalibarudaiya  asambiga'lum  suththamaayirukki’rathu;  in’raiyathinam  vea’rea  appam  paaththiraththil  pirathishdaipa'n'nappattathinaal,  ithu  saathaara'namaayit’rea  en’raan.  (1saamuveal  21:5)

அப்பொழுது  கர்த்தருடைய  சந்நிதியிலிருந்து  எடுக்கப்பட்ட  சமுகத்தப்பங்களைத்தவிர,  வேறே  அப்பம்  அங்கே  இராதபடியினால்  ஆசாரியன்  அவனுக்குப்  பரிசுத்த  அப்பத்தைக்  கொடுத்தான்;  அவைகள்  எடுக்கப்படுகிற  நாளிலே  அதற்குப்  பதிலாகச்  சூடான  அப்பம்  வைக்கப்படும்.  (1சாமுவேல்  21:6)

appozhuthu  karththarudaiya  sannithiyilirunthu  edukkappatta  samugaththappangga'laiththavira,  vea’rea  appam  anggea  iraathapadiyinaal  aasaariyan  avanukkup  parisuththa  appaththaik  koduththaan;  avaiga'l  edukkappadugi’ra  naa'lilea  atha’rkup  bathilaagach  soodaana  appam  vaikkappadum.  (1saamuveal  21:6)

சவுலுடைய  வேலைக்காரரில்  ஏதோமியனாகிய  தோவேக்கு  என்னும்  பேருள்ள  ஒருவன்  அன்றையதினம்  அங்கே  கர்த்தருடைய  சந்நிதியில்  தடைபட்டிருந்தான்;  அவன்  சவுலுடைய  மேய்ப்பருக்குத்  தலைவனாயிருந்தான்.  (1சாமுவேல்  21:7)

savuludaiya  vealaikkaararil  eathoamiyanaagiya  thoaveakku  ennum  pearu'l'la  oruvan  an’raiyathinam  anggea  karththarudaiya  sannithiyil  thadaipattirunthaan;  avan  savuludaiya  meaypparukkuth  thalaivanaayirunthaan.  (1saamuveal  21:7)

தாவீது  அகிமெலேக்கைப்  பார்த்து:  இங்கே  உம்முடைய  வசத்தில்  ஒரு  ஈட்டியானாலும்  பட்டயமானாலும்  இல்லையா?  ராஜாவின்  காரியம்  அவசரமானபடியினால்,  என்  பட்டயத்தையாகிலும்,  என்  ஆயுதங்களையாகிலும்,  நான்  எடுத்துக்  கொண்டுவரவில்லை  என்றான்.  (1சாமுவேல்  21:8)

thaaveethu  agimeleakkaip  paarththu:  inggea  ummudaiya  vasaththil  oru  eettiyaanaalum  pattayamaanaalum  illaiyaa?  raajaavin  kaariyam  avasaramaanapadiyinaal,  en  pattayaththaiyaagilum,  en  aayuthangga'laiyaagilum,  naan  eduththuk  ko'nduvaravillai  en’raan.  (1saamuveal  21:8)

அதற்கு  ஆசாரியன்:  நீர்  ஏலே  பள்ளத்தாக்கிலே  கொன்ற  பெலிஸ்தனாகிய  கோலியாத்தின்  பட்டயம்,  இதோ,  ஏபோத்துக்குப்  பின்னாக  ஒரு  புடவையிலே  சுருட்டி  வைத்திருக்கிறது;  அதை  நீர்  எடுக்க  மனதானால்  எடுத்துக்கொண்டுபோம்,  அதுவே  அல்லாமல்  வேறொன்றும்  இங்கே  இல்லை  என்றான்;  அப்பொழுது  தாவீது:  அதற்கு  நிகரில்லை;  அதை  எனக்குத்  தாரும்  என்றான்.  (1சாமுவேல்  21:9)

atha’rku  aasaariyan:  neer  ealea  pa'l'laththaakkilea  kon’ra  pelisthanaagiya  koaliyaaththin  pattayam,  ithoa,  eaboaththukkup  pinnaaga  oru  pudavaiyilea  surutti  vaiththirukki’rathu;  athai  neer  edukka  manathaanaal  eduththukko'ndupoam,  athuvea  allaamal  vea’ron’rum  inggea  illai  en’raan;  appozhuthu  thaaveethu:  atha’rku  nigarillai;  athai  enakkuth  thaarum  en’raan.  (1saamuveal  21:9)

அன்றையதினம்  தாவீது  எழுந்து  சவுலுக்குத்  தப்பியோடி,  காத்தின்  ராஜாவாகிய  ஆகீசிடத்தில்  போனான்.  (1சாமுவேல்  21:10)

an’raiyathinam  thaaveethu  ezhunthu  savulukkuth  thappiyoadi,  kaaththin  raajaavaagiya  aakeesidaththil  poanaan.  (1saamuveal  21:10)

ஆகீசின்  ஊழியக்காரர்  அவனைப்  பார்த்து:  தேசத்து  ராஜாவாகிய  தாவீது  இவன்  அல்லவோ?  சவுல்  கொன்றது  ஆயிரம்,  தாவீது  கொன்றது  பதினாயிரம்  என்று  இவனைக்குறித்தல்லவோ  ஆடல்பாடலோடே  கொண்டாடினார்கள்  என்றார்கள்.  (1சாமுவேல்  21:11)

aakeesin  oozhiyakkaarar  avanaip  paarththu:  theasaththu  raajaavaagiya  thaaveethu  ivan  allavoa?  savul  kon’rathu  aayiram,  thaaveethu  kon’rathu  pathinaayiram  en’ru  ivanaikku’riththallavoa  aadalpaadaloadea  ko'ndaadinaarga'l  en’raarga'l.  (1saamuveal  21:11)

இந்த  வார்த்தைகளைத்  தாவீது  தன்  மனதிலே  வைத்துக்கொண்டு,  காத்தின்  ராஜாவாகிய  ஆகீசுக்கு  மிகவும்  பயப்பட்டு,  (1சாமுவேல்  21:12)

intha  vaarththaiga'laith  thaaveethu  than  manathilea  vaiththukko'ndu,  kaaththin  raajaavaagiya  aakeesukku  migavum  bayappattu,  (1saamuveal  21:12)

அவர்கள்  கண்களுக்கு  முன்பாகத்  தன்  முகநாடியை  வேறுபடுத்தி,  அவர்களிடத்தில்  பித்தங்கொண்டவன்போலக்  காண்பித்து,  வாசற்கதவுகளிலே  கீறிக்கொண்டிருந்து,  தன்  வாயிலிருந்து  நுரையைத்  தன்  தாடியில்  விழப்பண்ணிக்  கொண்டிருந்தான்.  (1சாமுவேல்  21:13)

avarga'l  ka'nga'lukku  munbaagath  than  muganaadiyai  vea’rupaduththi,  avarga'lidaththil  piththangko'ndavanpoalak  kaa'nbiththu,  vaasa’rkathavuga'lilea  kee’rikko'ndirunthu,  than  vaayilirunthu  nuraiyaith  than  thaadiyil  vizhappa'n'nik  ko'ndirunthaan.  (1saamuveal  21:13)

அப்பொழுது  ஆகீஸ்:  தன்  ஊழியக்காரரை  நோக்கி:  இதோ,  இந்த  மனுஷன்  பித்தங்கொண்டவன்  என்று  காண்கிறீர்களே;  இவனை  நீங்கள்  என்னிடத்தில்  கொண்டுவந்தது  என்ன?  (1சாமுவேல்  21:14)

appozhuthu  aakees:  than  oozhiyakkaararai  noakki:  ithoa,  intha  manushan  piththangko'ndavan  en’ru  kaa'ngi’reerga'lea;  ivanai  neengga'l  ennidaththil  ko'nduvanthathu  enna?  (1saamuveal  21:14)

எனக்கு  முன்பாகப்  பயித்திய  சேஷ்டை  செய்ய,  நீங்கள்  இவனைக்  கொண்டுவருகிறதற்கு,  பயித்தியக்காரர்  எனக்குக்  குறைவாயிருக்கிறார்களோ?  இவன்  என்  வீட்டிலே  வரலாமா  என்றான்.  (1சாமுவேல்  21:15)

enakku  munbaagap  payiththiya  seashdai  seyya,  neengga'l  ivanaik  ko'nduvarugi’ratha’rku,  payiththiyakkaarar  enakkuk  ku’raivaayirukki’raarga'loa?  ivan  en  veettilea  varalaamaa  en’raan.  (1saamuveal  21:15)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!