Saturday, August 20, 2016

1 Saamuveal 2 | 1 சாமுவேல் 2 | 1 Samuel 2


அப்பொழுது  அன்னாள்  ஜெபம்பண்ணி:  என்  இருதயம்  கர்த்தருக்குள்  களிகூருகிறது;  என்  கொம்பு  கர்த்தருக்குள்  உயர்ந்திருக்கிறது;  என்  பகைஞரின்மேல்  என்  வாய்  திறந்திருக்கிறது;  உம்முடைய  இரட்சிப்பினாலே  சந்தோஷப்படுகிறேன்.  (1சாமுவேல்  2:1)

appozhuthu  annaa'l  jebampa'n'ni:  en  iruthayam  karththarukku'l  ka'likoorugi’rathu;  en  kombu  karththarukku'l  uyarnthirukki’rathu;  en  pagaignarinmeal  en  vaay  thi’ranthirukki’rathu;  ummudaiya  iradchippinaalea  santhoashappadugi’rean.  (1saamuveal  2:1)

கர்த்தரைப்போலப்  பரிசுத்தமுள்ளவர்  இல்லை;  உம்மையல்லாமல்  வேறொருவரும்  இல்லை;  எங்கள்  தேவனைப்போல  ஒரு  கன்மலையும்  இல்லை.  (1சாமுவேல்  2:2)

karththaraippoalap  parisuththamu'l'lavar  illai;  ummaiyallaamal  vea’roruvarum  illai;  engga'l  theavanaippoala  oru  kanmalaiyum  illai.  (1saamuveal  2:2)

இனி  மேட்டிமையான  பேச்சைப்  பேசாதிருங்கள்;  அகந்தையான  பேச்சு  உங்கள்  வாயிலிருந்து  புறப்படவேண்டாம்;  கர்த்தர்  ஞானமுள்ள  தேவன்;  அவர்  செய்கைகள்  யதார்த்தமல்லவோ?  (1சாமுவேல்  2:3)

ini  meattimaiyaana  peachchaip  peasaathirungga'l;  aganthaiyaana  peachchu  ungga'l  vaayilirunthu  pu’rappadavea'ndaam;  karththar  gnaanamu'l'la  theavan;  avar  seygaiga'l  yathaarththamallavoa?  (1saamuveal  2:3)

பலவான்களின்  வில்  முறிந்தது;  தள்ளாடினவர்களோ  பலத்தினால்  இடைகட்டப்பட்டார்கள்.  (1சாமுவேல்  2:4)

balavaanga'lin  vil  mu’rinthathu;  tha'l'laadinavarga'loa  balaththinaal  idaikattappattaarga'l.  (1saamuveal  2:4)

திருப்தியாயிருந்தவர்கள்  அப்பத்துக்காக  கூலிவேலை  செய்கிறார்கள்;  பசியாயிருந்தவர்களோ  இனிப்  பசியாயிரார்கள்;  மலடியாயிருந்தவள்  ஏழு  பெற்றாள்;  அநேகம்  பிள்ளைகளைப்  பெற்றவளோ  பலட்சயப்பட்டாள்.  (1சாமுவேல்  2:5)

thirupthiyaayirunthavarga'l  appaththukkaaga  koolivealai  seygi’raarga'l;  pasiyaayirunthavarga'loa  inip  pasiyaayiraarga'l;  maladiyaayirunthava'l  eazhu  pet’raa'l;  aneagam  pi'l'laiga'laip  pet’rava'loa  paladchayappattaa'l.  (1saamuveal  2:5)

கர்த்தர்  கொல்லுகிறவரும்  உயிர்ப்பிக்கிறவருமாயிருக்கிறார்;  அவரே  பாதாளத்தில்  இறங்கவும்  அதிலிருந்து  ஏறவும்  பண்ணுகிறவர்.  (1சாமுவேல்  2:6)

karththar  kollugi’ravarum  uyirppikki’ravarumaayirukki’raar;  avarea  paathaa'laththil  i’ranggavum  athilirunthu  ea’ravum  pa'n'nugi’ravar.  (1saamuveal  2:6)

கர்த்தர்  தரித்திரம்  அடையச்செய்கிறவரும்,  ஐசுவரியம்  அடையப்பண்ணுகிறவருமாயிருக்கிறார்;  அவர்  தாழ்த்துகிறவரும்,  உயர்த்துகிறவருமானவர்.  (1சாமுவேல்  2:7)

karththar  thariththiram  adaiyachseygi’ravarum,  aisuvariyam  adaiyappa'n'nugi’ravarumaayirukki’raar;  avar  thaazhththugi’ravarum,  uyarththugi’ravarumaanavar.  (1saamuveal  2:7)

அவர்  சிறியவனைப்  புழுதியிலிருந்து  எடுத்து,  எளியவனைக்  குப்பையிலிருந்து  உயர்த்துகிறார்;  அவர்களைப்  பிரபுக்களோடே  உட்காரவும்,  மகிமையுள்ள  சிங்காசனத்தைச்  சுதந்தரிக்கவும்  பண்ணுகிறார்;  பூமியின்  அஸ்திபாரங்கள்  கர்த்தருடையவைகள்;  அவரே  அவைகளின்மேல்  பூச்சக்கரத்தை  வைத்தார்.  (1சாமுவேல்  2:8)

avar  si’riyavanaip  puzhuthiyilirunthu  eduththu,  e'liyavanaik  kuppaiyilirunthu  uyarththugi’raar;  avarga'laip  pirabukka'loadea  udkaaravum,  magimaiyu'l'la  singgaasanaththaich  suthantharikkavum  pa'n'nugi’raar;  boomiyin  asthibaarangga'l  karththarudaiyavaiga'l;  avarea  avaiga'linmeal  poochchakkaraththai  vaiththaar.  (1saamuveal  2:8)

அவர்  தமது  பரிசுத்தவான்களின்  பாதங்களைக்  காப்பார்;  துன்மார்க்கர்  இருளிலே  மௌனமாவார்கள்;  பெலத்தினால்  ஒருவனும்  மேற்கொள்வதில்லை.  (1சாமுவேல்  2:9)

avar  thamathu  parisuththavaanga'lin  paathangga'laik  kaappaar;  thunmaarkkar  iru'lilea  maunamaavaarga'l;  belaththinaal  oruvanum  mea’rko'lvathillai.  (1saamuveal  2:9)

கர்த்தரோடே  வழக்காடுகிறவர்கள்  நொறுக்கப்படுவார்கள்;  வானத்திலிருந்து  அவர்கள்மேல்  முழங்குவார்;  கர்த்தர்  பூமியின்  கடையாந்தரங்களை  நியாயந்தீர்த்து,  தாம்  ஏற்படுத்தின  ராஜாவுக்குப்  பெலன்  அளித்து,  தாம்  அபிஷேகம்  பண்ணினவரின்  கொம்பை  உயரப்பண்ணுவார்  என்று  துதித்தாள்.  (1சாமுவேல்  2:10)

karththaroadea  vazhakkaadugi’ravarga'l  no’rukkappaduvaarga'l;  vaanaththilirunthu  avarga'lmeal  muzhangguvaar;  karththar  boomiyin  kadaiyaantharangga'lai  niyaayantheerththu,  thaam  ea’rpaduththina  raajaavukkup  belan  a'liththu,  thaam  abisheagam  pa'n'ninavarin  kombai  uyarappa'n'nuvaar  en’ru  thuthiththaa'l.  (1saamuveal  2:10)

பின்பு  எல்க்கானா  ராமாவிலிருக்கிற  தன்  வீட்டுக்குப்  போனான்;  அந்தப்  பிள்ளையோ,  ஆசாரியனாகிய  ஏலிக்கு  முன்பாகக்  கர்த்தருக்குப்  பணிவிடை  செய்துகொண்டிருந்தான்.  (1சாமுவேல்  2:11)

pinbu  elkkaanaa  raamaavilirukki’ra  than  veettukkup  poanaan;  anthap  pi'l'laiyoa,  aasaariyanaagiya  ealikku  munbaagak  karththarukkup  pa'nividai  seythuko'ndirunthaan.  (1saamuveal  2:11)

ஏலியின்  குமாரர்  பேலியாளின்  மக்களாயிருந்தார்கள்;  அவர்கள்  கர்த்தரை  அறியவில்லை.  (1சாமுவேல்  2:12)

ealiyin  kumaarar  bealiyaa'lin  makka'laayirunthaarga'l;  avarga'l  karththarai  a’riyavillai.  (1saamuveal  2:12)

அந்த  ஆசாரியர்கள்  ஜனங்களை  நடப்பித்த  விதம்  என்னவென்றால்,  எவனாகிலும்  ஒரு  பலியைச்  செலுத்துங்காலத்தில்  இறைச்சி  வேகும்போது,  ஆசாரியனுடைய  வேலைக்காரன்  மூன்று  கூறுள்ள  ஒரு  ஆயுதத்தைத்  தன்  கையிலே  பிடித்துவந்து,  (1சாமுவேல்  2:13)

antha  aasaariyarga'l  janangga'lai  nadappiththa  vitham  ennaven’raal,  evanaagilum  oru  baliyaich  seluththungkaalaththil  i’raichchi  veagumpoathu,  aasaariyanudaiya  vealaikkaaran  moon’ru  koo’ru'l'la  oru  aayuthaththaith  than  kaiyilea  pidiththuvanthu,  (1saamuveal  2:13)

அதினாலே,  கொப்பரையிலாவது  பானையிலாவது  சருவத்திலாவது  சட்டியிலாவது  குத்துவான்;  அந்த  ஆயுதத்தில்  வருகிறதையெல்லாம்  ஆசாரியன்  எடுத்துக்கொள்ளுவான்;  அப்படி  அங்கே  சீலோவிலே  வருகிற  இஸ்ரவேலருக்கெல்லாம்  செய்தார்கள்.  (1சாமுவேல்  2:14)

athinaalea,  kopparaiyilaavathu  paanaiyilaavathu  saruvaththilaavathu  sattiyilaavathu  kuththuvaan;  antha  aayuthaththil  varugi’rathaiyellaam  aasaariyan  eduththukko'l'luvaan;  appadi  anggea  seeloavilea  varugi’ra  isravealarukkellaam  seythaarga'l.  (1saamuveal  2:14)

கொழுப்பைத்  தகனிக்கிறதற்கு  முன்னும்,  ஆசாரியனுடைய  வேலைக்காரன்  வந்து  பலியிடுகிற  மனுஷனை  நோக்கி:  ஆசாரியனுக்குப்  பொரிக்கும்படி  இறைச்சி  கொடு;  பச்சை  இறைச்சியே  அல்லாமல்,  அவித்ததை  உன்  கையிலே  வாங்குகிறதில்லை  என்பான்.  (1சாமுவேல்  2:15)

kozhuppaith  thaganikki’ratha’rku  munnum,  aasaariyanudaiya  vealaikkaaran  vanthu  baliyidugi’ra  manushanai  noakki:  aasaariyanukkup  porikkumpadi  i’raichchi  kodu;  pachchai  i’raichchiyea  allaamal,  aviththathai  un  kaiyilea  vaanggugi’rathillai  enbaan.  (1saamuveal  2:15)

அதற்கு  அந்த  மனுஷன்:  இன்று  செய்யவேண்டியபடி  முதலாவது  கொழுப்பைத்  தகனித்துவிடட்டும்;  பிற்பாடு  உன்  மனவிருப்பத்தின்படி  எடுத்துக்கொள்  என்று  சொன்னாலும்;  அவன்:  அப்படியல்ல,  இப்பொழுதே  கொடு,  இல்லாவிட்டால்  பலவந்தமாய்  எடுத்துக்கொள்ளுவேன்  என்பான்.  (1சாமுவேல்  2:16)

atha’rku  antha  manushan:  in’ru  seyyavea'ndiyapadi  muthalaavathu  kozhuppaith  thaganiththuvidattum;  pi’rpaadu  un  manaviruppaththinpadi  eduththukko'l  en’ru  sonnaalum;  avan:  appadiyalla,  ippozhuthea  kodu,  illaavittaal  balavanthamaay  eduththukko'l'luvean  enbaan.  (1saamuveal  2:16)

ஆதலால்  அந்த  வாலிபரின்  பாவம்  கர்த்தருடைய  சந்நிதியில்  மிகவும்  பெரிதாயிருந்தது;  மனுஷர்  கர்த்தரின்  காணிக்கையை  வெறுப்பாய்  எண்ணினார்கள்.  (1சாமுவேல்  2:17)

aathalaal  antha  vaalibarin  paavam  karththarudaiya  sannithiyil  migavum  perithaayirunthathu;  manushar  karththarin  kaa'nikkaiyai  ve’ruppaay  e'n'ninaarga'l.  (1saamuveal  2:17)

சாமுவேல்  என்னும்  பிள்ளையாண்டான்  சணல்நூல்  ஏபோத்தைத்  தரித்தவனாய்க்  கர்த்தருக்கு  முன்பாகப்  பணிவிடை  செய்தான்.  (1சாமுவேல்  2:18)

saamuveal  ennum  pi'l'laiyaa'ndaan  sa'nalnool  eaboaththaith  thariththavanaayk  karththarukku  munbaagap  pa'nividai  seythaan.  (1saamuveal  2:18)

அவனுடைய  தாய்  வருஷந்தோறும்  செலுத்தும்  பலியைச்  செலுத்துகிறதற்காக,  தன்  புருஷனோடேகூட  வருகிறபோதெல்லாம்,  அவனுக்கு  ஒரு  சின்னச்  சட்டையைத்  தைத்துக்கொண்டு  வருவாள்.  (1சாமுவேல்  2:19)

avanudaiya  thaay  varushanthoa’rum  seluththum  baliyaich  seluththugi’ratha’rkaaga,  than  purushanoadeakooda  varugi’rapoathellaam,  avanukku  oru  sinnach  sattaiyaith  thaiththukko'ndu  varuvaa'l.  (1saamuveal  2:19)

ஏலி  எல்க்கானாவையும்  அவன்  மனைவியையும்  ஆசீர்வதித்து:  இந்த  ஸ்திரீ  கர்த்தருக்கென்று  ஒப்புக்கொடுத்ததற்குப்  பதிலாகக்  கர்த்தர்  உனக்கு  அவளாலே  சந்தானம்  கட்டளையிடுவாராக  என்றான்;  அவர்கள்  தங்கள்  ஸ்தானத்திற்குத்  திரும்பப்  போய்விட்டார்கள்.  (1சாமுவேல்  2:20)

eali  elkkaanaavaiyum  avan  manaiviyaiyum  aaseervathiththu:  intha  sthiree  karththarukken’ru  oppukkoduththatha’rkup  bathilaagak  karththar  unakku  ava'laalea  santhaanam  katta'laiyiduvaaraaga  en’raan;  avarga'l  thangga'l  sthaanaththi’rkuth  thirumbap  poayvittaarga'l.  (1saamuveal  2:20)

அப்படியே  கர்த்தர்  அன்னாளைக்  கடாட்சித்தார்;  அவள்  கர்ப்பந்தரித்து  மூன்று  குமாரரையும்  இரண்டு  குமாரத்திகளையும்  பெற்றாள்;  சாமுவேல்  என்னும்  பிள்ளையாண்டான்  கர்த்தருடைய  சந்நிதியில்  வளர்ந்தான்.  (1சாமுவேல்  2:21)

appadiyea  karththar  annaa'laik  kadaadchiththaar;  ava'l  karppanthariththu  moon’ru  kumaararaiyum  ira'ndu  kumaaraththiga'laiyum  pet’raa'l;  saamuveal  ennum  pi'l'laiyaa'ndaan  karththarudaiya  sannithiyil  va'larnthaan.  (1saamuveal  2:21)

ஏலி  மிகுந்த  கிழவனாயிருந்தான்;  அவன்  தன்  குமாரர்  இஸ்ரவேலுக்கெல்லாம்  செய்கிற  எல்லாவற்றையும்,  அவர்கள்  ஆசரிப்புக்  கூடாரத்தின்  வாசலில்  கூட்டங்கூடுகிற  ஸ்திரீகளோடே  சயனிக்கிறதையும்  கேள்விப்பட்டு,  (1சாமுவேல்  2:22)

eali  miguntha  kizhavanaayirunthaan;  avan  than  kumaarar  isravealukkellaam  seygi’ra  ellaavat’raiyum,  avarga'l  aasarippuk  koodaaraththin  vaasalil  koottangkoodugi’ra  sthireega'loadea  sayanikki’rathaiyum  kea'lvippattu,  (1saamuveal  2:22)

அவர்களை  நோக்கி:  நீங்கள்  இப்படிப்பட்ட  காரியங்களைச்  செய்கிறது  என்ன?  இந்த  ஜனங்கள்  எல்லாரும்  உங்கள்  பொல்லாத  நடக்கைகளைச்  சொல்லக்கேட்கிறேன்.  (1சாமுவேல்  2:23)

avarga'lai  noakki:  neengga'l  ippadippatta  kaariyangga'laich  seygi’rathu  enna?  intha  janangga'l  ellaarum  ungga'l  pollaatha  nadakkaiga'laich  sollakkeadki’rean.  (1saamuveal  2:23)

என்  குமாரரே,  வேண்டாம்;  நான்  கேள்விப்படுகிற  இந்தச்  செய்தி  நல்லதல்ல;  கர்த்தருடைய  ஜனங்கள்  மீறி  நடக்கிறதற்குக்  காரணமாயிருக்கிறீர்களே.  (1சாமுவேல்  2:24)

en  kumaararea,  vea'ndaam;  naan  kea'lvippadugi’ra  inthach  seythi  nallathalla;  karththarudaiya  janangga'l  mee’ri  nadakki’ratha’rkuk  kaara'namaayirukki’reerga'lea.  (1saamuveal  2:24)

மனுஷனுக்கு  விரோதமாக  மனுஷன்  பாவஞ்செய்தால்,  நியாயாதிபதிகள்  அதைத்  தீர்ப்பார்கள்;  ஒருவன்  கர்த்தருக்கு  விரோதமாகப்  பாவஞ்செய்வானேயாகில்,  அவனுக்காக  விண்ணப்பஞ்செய்யத்தக்கவன்  யார்  என்றான்;  அவர்களோ  தங்கள்  தகப்பன்  சொல்லைக்  கேளாமற்போனார்கள்;  அவர்களைச்  சங்கரிக்கக்  கர்த்தர்  சித்தமாயிருந்தார்.  (1சாமுவேல்  2:25)

manushanukku  viroathamaaga  manushan  paavagnseythaal,  niyaayaathibathiga'l  athaith  theerppaarga'l;  oruvan  karththarukku  viroathamaagap  paavagnseyvaaneayaagil,  avanukkaaga  vi'n'nappagnseyyaththakkavan  yaar  en’raan;  avarga'loa  thangga'l  thagappan  sollaik  kea'laama’rpoanaarga'l;  avarga'laich  sanggarikkak  karththar  siththamaayirunthaar.  (1saamuveal  2:25)

சாமுவேல்  என்னும்  பிள்ளையாண்டானோ,  பெரியவனாக  வளர்ந்து,  கர்த்தருக்கும்  மனுஷருக்கும்  பிரியமாக  நடந்துகொண்டான்.  (1சாமுவேல்  2:26)

saamuveal  ennum  pi'l'laiyaa'ndaanoa,  periyavanaaga  va'larnthu,  karththarukkum  manusharukkum  piriyamaaga  nadanthuko'ndaan.  (1saamuveal  2:26)

தேவனுடைய  மனுஷன்  ஒருவன்  ஏலியினிடத்தில்  வந்து:  கர்த்தர்  உரைக்கிறது  என்னவென்றால்,  உன்  பிதாவின்  வீட்டார்  எகிப்திலே  பார்வோனின்  வீட்டில்  இருக்கையில்,  நான்  என்னை  அவர்களுக்கு  வெளிப்படுத்தி,  (1சாமுவேல்  2:27)

theavanudaiya  manushan  oruvan  ealiyinidaththil  vanthu:  karththar  uraikki’rathu  ennaven’raal,  un  pithaavin  veettaar  egipthilea  paarvoanin  veettil  irukkaiyil,  naan  ennai  avarga'lukku  ve'lippaduththi,  (1saamuveal  2:27)

என்  பலிபீடத்தின்மேல்  பலியிடவும்,  தூபங்காட்டவும்,  என்  சமுகத்தில்  ஏபோத்தைத்  தரிக்கவும்,  இஸ்ரவேல்  கோத்திரங்களிலெல்லாம்  அவனை  எனக்கு  ஆசாரியனாகத்  தெரிந்துகொண்டு,  உன்  பிதாவின்  வீட்டாருக்கு  இஸ்ரவேல்  புத்திரருடைய  தகனபலிகளையெல்லாம்  கொடுக்கவில்லையா?  (1சாமுவேல்  2:28)

en  balipeedaththinmeal  baliyidavum,  thoobangkaattavum,  en  samugaththil  eaboaththaith  tharikkavum,  israveal  koaththirangga'lilellaam  avanai  enakku  aasaariyanaagath  therinthuko'ndu,  un  pithaavin  veettaarukku  israveal  puththirarudaiya  thaganabaliga'laiyellaam  kodukkavillaiyaa?  (1saamuveal  2:28)

என்  வாசஸ்தலத்திலே  செலுத்தும்படி  நான்  கட்டளையிட்ட  என்  பலியையும்,  என்  காணிக்கையையும்,  நீங்கள்  உதைப்பானேன்?  என்  ஜனமாகிய  இஸ்ரவேலின்  காணிக்கைகளிலெல்லாம்  பிரதானமானவைகளைக்  கொண்டு  உங்களைக்  கொழுக்கப்பண்ணும்படிக்கு,  நீ  என்னைப்பார்க்கிலும்  உன்  குமாரரை  மதிப்பானேன்  என்கிறார்.  (1சாமுவேல்  2:29)

en  vaasasthalaththilea  seluththumpadi  naan  katta'laiyitta  en  baliyaiyum,  en  kaa'nikkaiyaiyum,  neengga'l  uthaippaanean?  en  janamaagiya  isravealin  kaa'nikkaiga'lilellaam  pirathaanamaanavaiga'laik  ko'ndu  ungga'laik  kozhukkappa'n'numpadikku,  nee  ennaippaarkkilum  un  kumaararai  mathippaanean  engi’raar.  (1saamuveal  2:29)

ஆகையால்  இஸ்ரவேலின்  தேவனாகிய  கர்த்தர்  சொல்லுகிறதாவது:  உன்  வீட்டாரும்  உன்  பிதாவின்  வீட்டாரும்  என்றைக்கும்  என்  சந்நிதியில்  நடந்து  கொள்வார்கள்  என்று  நான்  நிச்சயமாய்ச்  சொல்லியிருந்தும்,  இனி  அது  எனக்குத்  தூரமாயிருப்பதாக;  என்னைக்  கனம்பண்ணுகிறவர்களை  நான்  கனம்  பண்ணுவேன்;  என்னை  அசட்டைபண்ணுகிறவர்கள்  கனஈனப்படுவார்கள்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (1சாமுவேல்  2:30)

aagaiyaal  isravealin  theavanaagiya  karththar  sollugi’rathaavathu:  un  veettaarum  un  pithaavin  veettaarum  en’raikkum  en  sannithiyil  nadanthu  ko'lvaarga'l  en’ru  naan  nichchayamaaych  solliyirunthum,  ini  athu  enakkuth  thooramaayiruppathaaga;  ennaik  kanampa'n'nugi’ravarga'lai  naan  kanam  pa'n'nuvean;  ennai  asattaipa'n'nugi’ravarga'l  kanaeenappaduvaarga'l  en’ru  karththar  sollugi’raar.  (1saamuveal  2:30)

உன்  வீட்டில்  ஒரு  கிழவனும்  இராதபடிக்கு  உன்  புயத்தையும்  உன்  பிதாவின்  வீட்டாருடைய  புயத்தையும்  நான்  தறித்துப்போடும்  நாட்கள்  வரும்.  (1சாமுவேல்  2:31)

un  veettil  oru  kizhavanum  iraathapadikku  un  puyaththaiyum  un  pithaavin  veettaarudaiya  puyaththaiyum  naan  tha’riththuppoadum  naadka'l  varum.  (1saamuveal  2:31)

இஸ்ரவேலுக்குச்  செய்யப்படும்  சகல  நன்மைக்கும்  மாறாக  என்  வாசஸ்தலத்திலே  உபத்திரவத்தைக்  காண்பாய்;  ஒருபோதும்  உன்  வீட்டில்  ஒரு  கிழவனும்  இருப்பதில்லை.  (1சாமுவேல்  2:32)

isravealukkuch  seyyappadum  sagala  nanmaikkum  maa’raaga  en  vaasasthalaththilea  ubaththiravaththaik  kaa'nbaay;  orupoathum  un  veettil  oru  kizhavanum  iruppathillai.  (1saamuveal  2:32)

என்  பலிபீடத்தில்  சேவிக்க,  நான்  உன்  சந்ததியில்  நிர்மூலமாக்காதவர்களோ,  உன்  கண்களைப்  பூத்துப்போகப்பண்ணவும்,  உன்  ஆத்துமாவை  வேதனைப்படுத்தவும்  வைக்கப்படுவார்கள்;  உன்  வம்சத்திலுள்ள  யாவரும்  வாலவயதிலே  சாவார்கள்.  (1சாமுவேல்  2:33)

en  balipeedaththil  seavikka,  naan  un  santhathiyil  nirmoolamaakkaathavarga'loa,  un  ka'nga'laip  pooththuppoagappa'n'navum,  un  aaththumaavai  veathanaippaduththavum  vaikkappaduvaarga'l;  un  vamsaththilu'l'la  yaavarum  vaalavayathilea  saavaarga'l.  (1saamuveal  2:33)

ஓப்னி  பினெகாஸ்  என்னும்  உன்  இரண்டு  குமாரரின்மேல்  வருவதே  உனக்கு  அடையாளமாயிருக்கும்;  அவர்கள்  இருவரும்  ஒரேநாளில்  சாவார்கள்.  (1சாமுவேல்  2:34)

oapni  pinegaas  ennum  un  ira'ndu  kumaararinmeal  varuvathea  unakku  adaiyaa'lamaayirukkum;  avarga'l  iruvarum  oreanaa'lil  saavaarga'l.  (1saamuveal  2:34)

நான்  என்  உள்ளத்துக்கும்  என்  சித்தத்துக்கும்  ஏற்றபடி  செய்யத்தக்க  உண்மையான  ஒரு  ஆசாரியனை  எழும்பப்பண்ணி,  அவனுக்கு  நிலையான  வீட்டைக்  கட்டுவேன்;  அவன்  என்னால்  அபிஷேகம்பண்ணப்பட்டவனுக்கு  முன்பாகச்  சகல  நாளும்  நடந்துகொள்ளுவான்.  (1சாமுவேல்  2:35)

naan  en  u'l'laththukkum  en  siththaththukkum  eat’rapadi  seyyaththakka  u'nmaiyaana  oru  aasaariyanai  ezhumbappa'n'ni,  avanukku  nilaiyaana  veettaik  kattuvean;  avan  ennaal  abisheagampa'n'nappattavanukku  munbaagach  sagala  naa'lum  nadanthuko'l'luvaan.  (1saamuveal  2:35)

அப்பொழுது  உன்  வீட்டாரில்  மீதியாயிருப்பவன்  எவனும்  ஒரு  வெள்ளிப்பணத்துக்காகவும்  ஒரு  அப்பத்துணிக்கைக்காகவும்  அவனிடத்தில்  வந்து  பணிந்து:  நான்  கொஞ்சம்  அப்பம்  சாப்பிட  யாதொரு  ஆசாரிய  ஊழியத்தில்  என்னைச்  சேர்த்துக்கொள்ளும்  என்று  கெஞ்சுவான்  என்று  சொல்லுகிறார்  என்றான்.  (1சாமுவேல்  2:36)

appozhuthu  un  veettaaril  meethiyaayiruppavan  evanum  oru  ve'l'lippa'naththukkaagavum  oru  appaththu'nikkaikkaagavum  avanidaththil  vanthu  pa'ninthu:  naan  kogncham  appam  saappida  yaathoru  aasaariya  oozhiyaththil  ennaich  searththukko'l'lum  en’ru  kegnchuvaan  en’ru  sollugi’raar  en’raan.  (1saamuveal  2:36)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!