Monday, August 22, 2016

1 Saamuveal 19 | 1 சாமுவேல் 19 | 1 Samuel 19

தாவீதைக்  கொன்றுபோடும்படிக்கு,  சவுல்  தன்  குமாரனாகிய  யோனத்தானோடும்  தன்  ஊழியக்காரர்  எல்லாரோடும்  பேசினான்.  (1சாமுவேல்  19:1)

thaaveethaik  kon’rupoadumpadikku,  savul  than  kumaaranaagiya  yoanaththaanoadum  than  oozhiyakkaarar  ellaaroadum  peasinaan.  (1saamuveal  19:1)

சவுலின்  குமாரனாகிய  யோனத்தானோ,  தாவீதின்மேல்  மிகவும்  பிரியமாயிருந்தான்;  அதனால்  யோனத்தான்  தாவீதுக்கு  அதை  அறிவித்து:  என்  தகப்பனாகிய  சவுல்  உம்மைக்  கொன்றுபோட  வகைதேடுகிறார்;  இப்போதும்  நாளைக்காலமே  நீர்  எச்சரிக்கையாயிருந்து,  மறைவான  இடத்தில்  ஒளித்துக்கொண்டிரும்.  (1சாமுவேல்  19:2)

savulin  kumaaranaagiya  yoanaththaanoa,  thaaveethinmeal  migavum  piriyamaayirunthaan;  athanaal  yoanaththaan  thaaveethukku  athai  a’riviththu:  en  thagappanaagiya  savul  ummaik  kon’rupoada  vagaitheadugi’raar;  ippoathum  naa'laikkaalamea  neer  echcharikkaiyaayirunthu,  ma’raivaana  idaththil  o'liththukko'ndirum.  (1saamuveal  19:2)

நான்  புறப்பட்டுவந்து,  நீர்  வெளியிலிருக்கும்  இடத்தில்  என்  தகப்பன்  பக்கத்திலே  நின்று,  உமக்காக  என்  தகப்பனோடே  பேசி,  நடக்கும்  காரியத்தைக்  கண்டு,  உமக்கு  அறிவிப்பேன்  என்றான்.  (1சாமுவேல்  19:3)

naan  pu’rappattuvanthu,  neer  ve'liyilirukkum  idaththil  en  thagappan  pakkaththilea  nin’ru,  umakkaaga  en  thagappanoadea  peasi,  nadakkum  kaariyaththaik  ka'ndu,  umakku  a’rivippean  en’raan.  (1saamuveal  19:3)

அப்படியே  யோனத்தான்  தன்  தகப்பனாகிய  சவுலோடே  தாவீதுக்காக  நலமாய்ப்  பேசி,  ராஜா  தம்முடைய  அடியானாகிய  தாவீதுக்கு  விரோதமாய்ப்  பாவஞ்செய்யாதிருப்பாராக;  அவன்  உமக்கு  விரோதமாகப்  பாவஞ்செய்யவில்லை;  அவன்  செய்கைகள்  உமக்கு  மெத்த  உபயோகமாயிருக்கிறதே.  (1சாமுவேல்  19:4)

appadiyea  yoanaththaan  than  thagappanaagiya  savuloadea  thaaveethukkaaga  nalamaayp  peasi,  raajaa  thammudaiya  adiyaanaagiya  thaaveethukku  viroathamaayp  paavagnseyyaathiruppaaraaga;  avan  umakku  viroathamaagap  paavagnseyyavillai;  avan  seygaiga'l  umakku  meththa  ubayoagamaayirukki’rathea.  (1saamuveal  19:4)

அவன்  தன்  பிராணனைத்  தன்  கையிலே  வைத்துக்கொண்டு,  அந்தப்  பெலிஸ்தனைக்  கொன்றதினாலே,  கர்த்தர்  இஸ்ரவேலுக்கெல்லாம்  பெரிய  இரட்சிப்பைக்  கட்டளையிட்டதை  நீர்  கண்டு,  சந்தோஷப்பட்டீரே;  இப்போதும்  முகாந்தரமில்லாமல்  தாவீதைக்  கொல்லுகிறதினால்,  குற்றமில்லாத  இரத்தத்திற்கு  விரோதமாக  நீர்  பாவஞ்செய்வானேன்  என்றான்.  (1சாமுவேல்  19:5)

avan  than  piraa'nanaith  than  kaiyilea  vaiththukko'ndu,  anthap  pelisthanaik  kon’rathinaalea,  karththar  isravealukkellaam  periya  iradchippaik  katta'laiyittathai  neer  ka'ndu,  santhoashappatteerea;  ippoathum  mugaantharamillaamal  thaaveethaik  kollugi’rathinaal,  kut’ramillaatha  iraththaththi’rku  viroathamaaga  neer  paavagnseyvaanean  en’raan.  (1saamuveal  19:5)

சவுல்  யோனத்தானுடைய  சொல்லைக்  கேட்டு:  அவன்  கொலைசெய்யப்படுவதில்லை  என்று  கர்த்தருடைய  ஜீவனைக்கொண்டு  ஆணையிட்டான்.  (1சாமுவேல்  19:6)

savul  yoanaththaanudaiya  sollaik  keattu:  avan  kolaiseyyappaduvathillai  en’ru  karththarudaiya  jeevanaikko'ndu  aa'naiyittaan.  (1saamuveal  19:6)

பின்பு  யோனத்தான்  தாவீதை  அழைத்து,  அந்த  வார்த்தைகளையெல்லாம்  அவனுக்கு  அறிவித்து,  அவனைச்  சவுலண்டையிலே  கூட்டிக்கொண்டுபோய்  விட்டான்;  அப்படியே  அவன்  முன்போலவே  அவனுடைய  சமுகத்தில்  இருந்தான்.  (1சாமுவேல்  19:7)

pinbu  yoanaththaan  thaaveethai  azhaiththu,  antha  vaarththaiga'laiyellaam  avanukku  a’riviththu,  avanaich  savula'ndaiyilea  koottikko'ndupoay  vittaan;  appadiyea  avan  munpoalavea  avanudaiya  samugaththil  irunthaan.  (1saamuveal  19:7)

மறுபடியும்  ஒரு  யுத்தம்  உண்டாயிற்று;  அப்பொழுது  தாவீது  புறப்பட்டுப்போய்,  பெலிஸ்தரோடே  யுத்தம்பண்ணி,  அவர்களுக்குள்  மகா  சங்காரம்பண்ணினதினால்  அவர்கள்  அவனுக்கு  முன்பாக  முறிந்தோடிப்போனார்கள்.  (1சாமுவேல்  19:8)

ma’rupadiyum  oru  yuththam  u'ndaayit’ru;  appozhuthu  thaaveethu  pu’rappattuppoay,  pelistharoadea  yuththampa'n'ni,  avarga'lukku'l  mahaa  sanggaarampa'n'ninathinaal  avarga'l  avanukku  munbaaga  mu’rinthoadippoanaarga'l.  (1saamuveal  19:8)

கர்த்தரால்  விடப்பட்ட  பொல்லாத  ஆவி  சவுலின்மேல்  வந்தது;  அவன்  தன்  வீட்டில்  உட்கார்ந்து,  தன்  ஈட்டியைக்  கையிலே  பிடித்துக்கொண்டிருந்தான்;  தாவீது  தன்  கையினாலே  சுரமண்டலம்  வாசித்தான்.  (1சாமுவேல்  19:9)

karththaraal  vidappatta  pollaatha  aavi  savulinmeal  vanthathu;  avan  than  veettil  udkaarnthu,  than  eettiyaik  kaiyilea  pidiththukko'ndirunthaan;  thaaveethu  than  kaiyinaalea  surama'ndalam  vaasiththaan.  (1saamuveal  19:9)

அப்பொழுது  சவுல்:  தாவீதை  ஈட்டியினாலே  சுவரோடே  சேர்த்து  உருவக்  குத்திப்போடப்  பார்த்தான்;  ஆனாலும்  இவன்  சவுலுக்கு  விலகினதினாலே,  அவன்  எறிந்த  ஈட்டி  சுவரிலே  பட்டது;  தாவீதோ  அன்று  இராத்திரி  ஓடிப்போய்,  தன்னைத்  தப்புவித்துக்கொண்டான்.  (1சாமுவேல்  19:10)

appozhuthu  savul:  thaaveethai  eettiyinaalea  suvaroadea  searththu  uruvak  kuththippoadap  paarththaan;  aanaalum  ivan  savulukku  vilaginathinaalea,  avan  e’rintha  eetti  suvarilea  pattathu;  thaaveethoa  an’ru  iraaththiri  oadippoay,  thannaith  thappuviththukko'ndaan.  (1saamuveal  19:10)

தாவீதைக்  காவல்பண்ணி,  மறுநாள்  காலமே  அவனைக்  கொன்றுபோடும்படிக்கு,  சவுல்  அவன்  வீட்டிற்குச்  சேவகரை  அனுப்பினான்;  இதைத்  தாவீதுக்கு  அவன்  மனைவியாகிய  மீகாள்  அறிவித்து:  நீர்  இன்று  இராத்திரியில்  உம்முடைய  பிராணனைத்  தப்புவித்துக்கொள்ளாவிட்டால்,  நாளைக்கு  நீர்  கொன்றுபோடப்படுவீர்  என்று  சொல்லி,  (1சாமுவேல்  19:11)

thaaveethaik  kaavalpa'n'ni,  ma’runaa'l  kaalamea  avanaik  kon’rupoadumpadikku,  savul  avan  veetti’rkuch  seavagarai  anuppinaan;  ithaith  thaaveethukku  avan  manaiviyaagiya  meekaa'l  a’riviththu:  neer  in’ru  iraaththiriyil  ummudaiya  piraa'nanaith  thappuviththukko'l'laavittaal,  naa'laikku  neer  kon’rupoadappaduveer  en’ru  solli,  (1saamuveal  19:11)

மீகாள்  தாவீதை  ஜன்னல்வழியாய்  இறக்கிவிட்டாள்;  அவன்  தப்பி  ஓடிப்போனான்.  (1சாமுவேல்  19:12)

meekaa'l  thaaveethai  jannalvazhiyaay  i’rakkivittaa'l;  avan  thappi  oadippoanaan.  (1saamuveal  19:12)

மீகாளோ  ஒரு  சுரூபத்தை  எடுத்து,  கட்டிலின்மேல்  வைத்து,  அதின்  தலைமாட்டிலே  ஒரு  வெள்ளாட்டுத்தோலைப்போட்டு,  துப்பட்டியினால்  மூடிவைத்தாள்.  (1சாமுவேல்  19:13)

meekaa'loa  oru  suroobaththai  eduththu,  kattilinmeal  vaiththu,  athin  thalaimaattilea  oru  ve'l'laattuththoalaippoattu,  thuppattiyinaal  moodivaiththaa'l.  (1saamuveal  19:13)

தாவீதைக்  கொண்டுவரச்  சவுல்  சேவகரை  அனுப்பினபோது,  அவர்  வியாதியாயிருக்கிறார்  என்றாள்.  (1சாமுவேல்  19:14)

thaaveethaik  ko'nduvarach  savul  seavagarai  anuppinapoathu,  avar  viyaathiyaayirukki’raar  en’raa'l.  (1saamuveal  19:14)

அப்பொழுது  தாவீதைப்  பார்க்கிறதற்குச்  சவுல்  சேவகரை  அனுப்பி,  அவனைக்  கொன்றுபோடும்படிக்கு,  கட்டிலோடே  அவனை  என்னிடத்திற்கு  எடுத்துக்கொண்டுவாருங்கள்  என்றான்.  (1சாமுவேல்  19:15)

appozhuthu  thaaveethaip  paarkki’ratha’rkuch  savul  seavagarai  anuppi,  avanaik  kon’rupoadumpadikku,  kattiloadea  avanai  ennidaththi’rku  eduththukko'nduvaarungga'l  en’raan.  (1saamuveal  19:15)

சேவகர்  வந்தபோது,  இதோ,  சுரூபம்  கட்டிலின்மேலும்,  வெள்ளாட்டுத்தோல்  அதின்  தலைமாட்டிலும்  கிடக்கக்  கண்டார்கள்.  (1சாமுவேல்  19:16)

seavagar  vanthapoathu,  ithoa,  suroobam  kattilinmealum,  ve'l'laattuththoal  athin  thalaimaattilum  kidakkak  ka'ndaarga'l.  (1saamuveal  19:16)

அப்பொழுது  சவுல்:  நீ  இப்படி  என்னை  ஏய்த்து,  என்  பகைஞனைத்  தப்பவிட்டு  அனுப்பினது  என்ன  என்று  மீகாளிடத்தில்  கேட்டான்.  மீகாள்  சவுலை  நோக்கி:  என்னைப்  போகவிடு,  நான்  உன்னை  ஏன்  கொல்லவேண்டும்  என்று  அவர்  என்னிடத்தில்  சொன்னார்  என்றாள்.  (1சாமுவேல்  19:17)

appozhuthu  savul:  nee  ippadi  ennai  eayththu,  en  pagaignanaith  thappavittu  anuppinathu  enna  en’ru  meekaa'lidaththil  keattaan.  meekaa'l  savulai  noakki:  ennaip  poagavidu,  naan  unnai  ean  kollavea'ndum  en’ru  avar  ennidaththil  sonnaar  en’raa'l.  (1saamuveal  19:17)

தாவீது  தப்பி,  ராமாவிலிருந்த  சாமுவேலிடத்திற்குப்  போய்,  சவுல்  தனக்குச்  செய்தது  எல்லாவற்றையும்  அவனுக்கு  அறிவித்தான்;  பின்பு  அவனும்  சாமுவேலும்  போய்,  நாயோதிலே  தங்கியிருந்தார்கள்.  (1சாமுவேல்  19:18)

thaaveethu  thappi,  raamaaviliruntha  saamuvealidaththi’rkup  poay,  savul  thanakkuch  seythathu  ellaavat’raiyum  avanukku  a’riviththaan;  pinbu  avanum  saamuvealum  poay,  naayoathilea  thanggiyirunthaarga'l.  (1saamuveal  19:18)

தாவீது  ராமாவுக்கடுத்த  நாயோதிலே  இருக்கிறான்  என்று  சவுலுக்கு  அறிவிக்கப்பட்டது.  (1சாமுவேல்  19:19)

thaaveethu  raamaavukkaduththa  naayoathilea  irukki’raan  en’ru  savulukku  a’rivikkappattathu.  (1saamuveal  19:19)

அப்பொழுது  சவுல்:  தாவீதைக்  கொண்டுவரச்  சேவகரை  அனுப்பினான்;  அவர்கள்  தீர்க்கதரிசனம்  சொல்லுகிற  தீர்க்கதரிசிகளின்  கூட்டத்தையும்,  சாமுவேல்  அவர்களின்  தலைவனாக  நிற்கிறதையும்  கண்டார்கள்;  அப்பொழுது  சவுலினுடைய  சேவகரின்மேல்  தேவனுடைய  ஆவி  இறங்கினதினால்  அவர்களும்  தீர்க்கதரிசனம்  சொன்னார்கள்.  (1சாமுவேல்  19:20)

appozhuthu  savul:  thaaveethaik  ko'nduvarach  seavagarai  anuppinaan;  avarga'l  theerkkatharisanam  sollugi’ra  theerkkatharisiga'lin  koottaththaiyum,  saamuveal  avarga'lin  thalaivanaaga  ni’rki’rathaiyum  ka'ndaarga'l;  appozhuthu  savulinudaiya  seavagarinmeal  theavanudaiya  aavi  i’rangginathinaal  avarga'lum  theerkkatharisanam  sonnaarga'l.  (1saamuveal  19:20)

இது  சவுலுக்கு  அறிவிக்கப்பட்டபோது,  அவன்  வேறே  சேவகரை  அனுப்பினான்;  அவர்களும்  தீர்க்கதரிசனம்  சொன்னார்கள்;  மூன்றாந்தரமும்  சவுல்  சேவகரை  அனுப்பினான்;  அவர்களும்  தீர்க்கதரிசனம்  சொன்னார்கள்.  (1சாமுவேல்  19:21)

ithu  savulukku  a’rivikkappattapoathu,  avan  vea’rea  seavagarai  anuppinaan;  avarga'lum  theerkkatharisanam  sonnaarga'l;  moon’raantharamum  savul  seavagarai  anuppinaan;  avarga'lum  theerkkatharisanam  sonnaarga'l.  (1saamuveal  19:21)

அப்பொழுது  அவனும்  ராமாவுக்குப்  போய்,  சேக்குவிலிருக்கிற  பெரிய  கிணற்றண்டையிலே  வந்து,  சாமுவேலும்  தாவீதும்  எங்கே  என்று  கேட்டான்;  அதோ  ராமாவுக்கடுத்த  நாயோதிலே  இருக்கிறார்கள்  என்று  சொல்லப்பட்டது.  (1சாமுவேல்  19:22)

appozhuthu  avanum  raamaavukkup  poay,  seakkuvilirukki’ra  periya  ki'nat’ra'ndaiyilea  vanthu,  saamuvealum  thaaveethum  enggea  en’ru  keattaan;  athoa  raamaavukkaduththa  naayoathilea  irukki’raarga'l  en’ru  sollappattathu.  (1saamuveal  19:22)

அப்பொழுது  ராமாவுக்கடுத்த  நாயோதிற்குப்  போனான்;  அவன்மேலும்  தேவனுடைய  ஆவி  இறங்கினதினால்  அவன்  ராமாவுக்கடுத்த  நாயோதிலே  சேருமட்டும்,  தீர்க்கதரிசனம்  சொல்லிக்கொண்டே  நடந்துவந்து,  (1சாமுவேல்  19:23)

appozhuthu  raamaavukkaduththa  naayoathi’rkup  poanaan;  avanmealum  theavanudaiya  aavi  i’rangginathinaal  avan  raamaavukkaduththa  naayoathilea  searumattum,  theerkkatharisanam  sollikko'ndea  nadanthuvanthu,  (1saamuveal  19:23)

தானும்  தன்  வஸ்திரங்களைக்  கழற்றிப்போட்டு,  சாமுவேலுக்கு  முன்பாகத்  தீர்க்கதரிசனம்  சொல்லி,  அன்று  பகல்  முழுவதும்  இராமுழுவதும்  வஸ்திரம்  இல்லாமல்  விழுந்துகிடந்தான்;  ஆகையினாலே  சவுலும்  தீர்க்கதரிசிகளில்  ஒருவனோ  என்பார்கள்.  (1சாமுவேல்  19:24)

thaanum  than  vasthirangga'laik  kazhat’rippoattu,  saamuvealukku  munbaagath  theerkkatharisanam  solli,  an’ru  pagal  muzhuvathum  iraamuzhuvathum  vasthiram  illaamal  vizhunthukidanthaan;  aagaiyinaalea  savulum  theerkkatharisiga'lil  oruvanoa  enbaarga'l.  (1saamuveal  19:24)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!