Monday, August 22, 2016

1 Saamuveal 16 | 1 சாமுவேல் 16 | 1 Samuel 16

கர்த்தர்  சாமுவேலை  நோக்கி:  இஸ்ரவேலின்மேல்  ராஜாவாயிராதபடிக்கு,  நான்  புறக்கணித்துத்  தள்ளின  சவுலுக்காக  நீ  எந்தமட்டும்  துக்கித்துக்கொண்டிருப்பாய்;  நீ  உன்  கொம்பை  தைலத்தால்  நிரப்பிக்கொண்டுவா;  பெத்லெகேமியனாகிய  ஈசாயினிடத்துக்கு  உன்னை  அனுப்புவேன்;  அவன்  குமாரரில்  ஒருவனை  நான்  ராஜாவாகத்  தெரிந்துகொண்டேன்  என்றார்.  (1சாமுவேல்  16:1)

karththar  saamuvealai  noakki:  isravealinmeal  raajaavaayiraathapadikku,  naan  pu’rakka'niththuth  tha'l'lina  savulukkaaga  nee  enthamattum  thukkiththukko'ndiruppaay;  nee  un  kombai  thailaththaal  nirappikko'nduvaa;  bethleheamiyanaagiya  eesaayinidaththukku  unnai  anuppuvean;  avan  kumaararil  oruvanai  naan  raajaavaagath  therinthuko'ndean  en’raar.  (1saamuveal  16:1)

அதற்குச்  சாமுவேல்:  நான்  எப்படிப்  போவேன்;  சவுல்  இதைக்  கேள்விப்பட்டால்,  என்னைக்  கொன்றுபோடுவானே  என்றான்;  அப்பொழுது  கர்த்தர்:  நீ  ஒரு  காளையைக்  கையோடே  கொண்டுபோய்,  கர்த்தருக்குப்  பலியிடவந்தேன்  என்று  சொல்லி,  (1சாமுவேல்  16:2)

atha’rkuch  saamuveal:  naan  eppadip  poavean;  savul  ithaik  kea'lvippattaal,  ennaik  kon’rupoaduvaanea  en’raan;  appozhuthu  karththar:  nee  oru  kaa'laiyaik  kaiyoadea  ko'ndupoay,  karththarukkup  baliyidavanthean  en’ru  solli,  (1saamuveal  16:2)

ஈசாயைப்  பலிவிருந்துக்கு  அழைப்பாயாக;  அப்பொழுது  நீ  செய்யவேண்டியதை  நான்  உனக்கு  அறிவிப்பேன்;  நான்  உனக்குச்  சொல்லுகிறவனை  எனக்காக  அபிஷேகம்பண்ணுவாயாக  என்றார்.  (1சாமுவேல்  16:3)

eesaayaip  balivirunthukku  azhaippaayaaga;  appozhuthu  nee  seyyavea'ndiyathai  naan  unakku  a’rivippean;  naan  unakkuch  sollugi’ravanai  enakkaaga  abisheagampa'n'nuvaayaaga  en’raar.  (1saamuveal  16:3)

கர்த்தர்  சொன்னபடியே  சாமுவேல்  செய்து,  பெத்லெகேமுக்குப்  போனான்;  அப்பொழுது  அவ்வூரின்  மூப்பர்  தத்தளிப்போடே  அவனுக்கு  எதிர்கொண்டுவந்து,  நீர்  வருகிறது  சமாதானமா  என்றார்கள்.  (1சாமுவேல்  16:4)

karththar  sonnapadiyea  saamuveal  seythu,  bethleheamukkup  poanaan;  appozhuthu  avvoorin  mooppar  thaththa'lippoadea  avanukku  ethirko'nduvanthu,  neer  varugi’rathu  samaathaanamaa  en’raarga'l.  (1saamuveal  16:4)

அதற்கு  அவன்:  சமாதானந்தான்;  கர்த்தருக்குப்  பலியிடவந்தேன்;  நீங்கள்  உங்களைப்  பரிசுத்தம்பண்ணிக்கொண்டு,  என்னுடனேகூடப்  பலிவிருந்துக்கு  வாருங்கள்  என்றான்;  மேலும்  ஈசாயையும்  அவன்  குமாரரையும்  பரிசுத்தம்பண்ணி,  அவர்களைப்  பலிவிருந்துக்கு  அழைத்தான்.  (1சாமுவேல்  16:5)

atha’rku  avan:  samaathaananthaan;  karththarukkup  baliyidavanthean;  neengga'l  ungga'laip  parisuththampa'n'nikko'ndu,  ennudaneakoodap  balivirunthukku  vaarungga'l  en’raan;  mealum  eesaayaiyum  avan  kumaararaiyum  parisuththampa'n'ni,  avarga'laip  balivirunthukku  azhaiththaan.  (1saamuveal  16:5)

அவர்கள்  வந்தபோது,  அவன்  எலியாபைப்  பார்த்தவுடனே:  கர்த்தரால்  அபிஷேகம்பண்ணப்படுபவன்  இவன்தானாக்கும்  என்றான்.  (1சாமுவேல்  16:6)

avarga'l  vanthapoathu,  avan  eliyaabaip  paarththavudanea:  karththaraal  abisheagampa'n'nappadupavan  ivanthaanaakkum  en’raan.  (1saamuveal  16:6)

கர்த்தர்  சாமுவேலை  நோக்கி:  நீ  இவனுடைய  முகத்தையும்,  இவனுடைய  சரீரவளர்ச்சியையும்  பார்க்கவேண்டாம்;  நான்  இவனைப்  புறக்கணித்தேன்;  மனுஷன்  பார்க்கிறபடி  நான்  பாரேன்;  மனுஷன்  முகத்தைப்  பார்ப்பான்;  கர்த்தரோ  இருதயத்தைப்  பார்க்கிறார்  என்றார்.  (1சாமுவேல்  16:7)

karththar  saamuvealai  noakki:  nee  ivanudaiya  mugaththaiyum,  ivanudaiya  sareerava'larchchiyaiyum  paarkkavea'ndaam;  naan  ivanaip  pu’rakka'niththean;  manushan  paarkki’rapadi  naan  paarean;  manushan  mugaththaip  paarppaan;  karththaroa  iruthayaththaip  paarkki’raar  en’raar.  (1saamuveal  16:7)

அப்பொழுது  ஈசாய்  அபினதாபை  அழைத்து,  அவனைச்  சாமுவேலுக்கு  முன்பாகக்  கடந்துபோகப்பண்ணினான்;  அவன்:  இவனையும்  கர்த்தர்  தெரிந்துகொள்ளவில்லை  என்றான்.  (1சாமுவேல்  16:8)

appozhuthu  eesaay  abinathaabai  azhaiththu,  avanaich  saamuvealukku  munbaagak  kadanthupoagappa'n'ninaan;  avan:  ivanaiyum  karththar  therinthuko'l'lavillai  en’raan.  (1saamuveal  16:8)

ஈசாய்  சம்மாவையும்  கடந்துபோகப்பண்ணினான்;  அவன்:  இவனையும்  கர்த்தர்  தெரிந்துகொள்ளவில்லை  என்றான்.  (1சாமுவேல்  16:9)

eesaay  sammaavaiyum  kadanthupoagappa'n'ninaan;  avan:  ivanaiyum  karththar  therinthuko'l'lavillai  en’raan.  (1saamuveal  16:9)

இப்படி  ஈசாய்  தன்  குமாரரில்  ஏழுபேரை  சாமுவேலுக்கு  முன்பாகக்  கடந்து  போகப்பண்ணினான்;  பின்பு  சாமுவேல்  ஈசாயைப்  பார்த்து:  கர்த்தர்  இவர்களில்  ஒருவனையும்  தெரிந்துகொள்ளவில்லை  என்று  சொல்லி;  (1சாமுவேல்  16:10)

ippadi  eesaay  than  kumaararil  eazhupearai  saamuvealukku  munbaagak  kadanthu  poagappa'n'ninaan;  pinbu  saamuveal  eesaayaip  paarththu:  karththar  ivarga'lil  oruvanaiyum  therinthuko'l'lavillai  en’ru  solli;  (1saamuveal  16:10)

உன்  பிள்ளைகள்  இவ்வளவுதானா  என்று  ஈசாயைக்  கேட்டான்.  அதற்கு  அவன்:  இன்னும்  எல்லாருக்கும்  இளையவன்  ஒருவன்  இருக்கிறான்;  அவன்  ஆடுகளை  மேய்த்துக்கொண்டிருக்கிறான்  என்றான்;  அப்பொழுது  சாமுவேல்  ஈசாயை  நோக்கி:  ஆள்  அனுப்பி  அவனை  அழைப்பி;  அவன்  இங்கே  வருமட்டும்  நான்  பந்தியிருக்கமாட்டேன்  என்றான்.  (1சாமுவேல்  16:11)

un  pi'l'laiga'l  ivva'lavuthaanaa  en’ru  eesaayaik  keattaan.  atha’rku  avan:  innum  ellaarukkum  i'laiyavan  oruvan  irukki’raan;  avan  aaduga'lai  meayththukko'ndirukki’raan  en’raan;  appozhuthu  saamuveal  eesaayai  noakki:  aa'l  anuppi  avanai  azhaippi;  avan  inggea  varumattum  naan  panthiyirukkamaattean  en’raan.  (1saamuveal  16:11)

ஆள்  அனுப்பி  அவனை  அழைப்பித்தான்;  அவன்  சிவந்தமேனியும்,  அழகிய  கண்களும்,  நல்ல  ரூபமுமுள்ளவனாயிருந்தான்;  அப்பொழுது  கர்த்தர்:  இவன்தான்,  நீ  எழுந்து  இவனை  அபிஷேகம்பண்ணு  என்றார்.  (1சாமுவேல்  16:12)

aa'l  anuppi  avanai  azhaippiththaan;  avan  sivanthameaniyum,  azhagiya  ka'nga'lum,  nalla  roobamumu'l'lavanaayirunthaan;  appozhuthu  karththar:  ivanthaan,  nee  ezhunthu  ivanai  abisheagampa'n'nu  en’raar.  (1saamuveal  16:12)

அப்பொழுது  சாமுவேல்:  தைலக்கொம்பை  எடுத்து,  அவனை  அவன்  சகோதரர்  நடுவிலே  அபிஷேகம்பண்ணினான்;  அந்நாள்முதற்கொண்டு,  கர்த்தருடைய  ஆவியானவர்  தாவீதின்மேல்  வந்து  இறங்கியிருந்தார்;  சாமுவேல்  எழுந்து  ராமாவுக்குப்  போய்விட்டான்.  (1சாமுவேல்  16:13)

appozhuthu  saamuveal:  thailakkombai  eduththu,  avanai  avan  sagoatharar  naduvilea  abisheagampa'n'ninaan;  annaa'lmutha’rko'ndu,  karththarudaiya  aaviyaanavar  thaaveethinmeal  vanthu  i’ranggiyirunthaar;  saamuveal  ezhunthu  raamaavukkup  poayvittaan.  (1saamuveal  16:13)

கர்த்தருடைய  ஆவி  சவுலை  விட்டு  நீங்கினார்;  கர்த்தரால்  வரவிடப்பட்ட  ஒரு  பொல்லாத  ஆவி  அவனைக்  கலங்கப்பண்ணிக்கொண்டிருந்தது.  (1சாமுவேல்  16:14)

karththarudaiya  aavi  savulai  vittu  neengginaar;  karththaraal  varavidappatta  oru  pollaatha  aavi  avanaik  kalanggappa'n'nikko'ndirunthathu.  (1saamuveal  16:14)

அப்பொழுது  சவுலின்  ஊழியக்காரர்  அவனை  நோக்கி:  இதோ,  தேவனால்  விடப்பட்ட  ஒரு  பொல்லாத  ஆவி  உம்மைக்  கலங்கப்பண்ணுகிறதே.  (1சாமுவேல்  16:15)

appozhuthu  savulin  oozhiyakkaarar  avanai  noakki:  ithoa,  theavanaal  vidappatta  oru  pollaatha  aavi  ummaik  kalanggappa'n'nugi’rathea.  (1saamuveal  16:15)

சுரமண்டலம்  வாசிக்கிறதில்  தேறின  ஒருவனைத்  தேடும்படிக்கு,  எங்கள்  ஆண்டவனாகிய  நீர்  உமக்கு  முன்பாக  நிற்கிற  உம்முடைய  அடியாருக்குக்  கட்டளையிடும்;  அப்பொழுது  தேவனால்  விடப்பட்ட  பொல்லாத  ஆவி  உம்மேல்  இறங்குகையில்,  அவன்  தன்  கையினால்  அதை  வாசித்தால்  உமக்குச்  சவுக்கியமுண்டாகும்  என்றார்கள்.  (1சாமுவேல்  16:16)

surama'ndalam  vaasikki’rathil  thea’rina  oruvanaith  theadumpadikku,  engga'l  aa'ndavanaagiya  neer  umakku  munbaaga  ni’rki’ra  ummudaiya  adiyaarukkuk  katta'laiyidum;  appozhuthu  theavanaal  vidappatta  pollaatha  aavi  ummeal  i’ranggugaiyil,  avan  than  kaiyinaal  athai  vaasiththaal  umakkuch  savukkiyamu'ndaagum  en’raarga'l.  (1saamuveal  16:16)

சவுல்  தன்  ஊழியக்காரரைப்  பார்த்து:  நன்றாய்  வாசிக்கத்தக்க  ஒருவனைத்  தேடி,  என்னிடத்தில்  கொண்டுவாருங்கள்  என்றான்.  (1சாமுவேல்  16:17)

savul  than  oozhiyakkaararaip  paarththu:  nan’raay  vaasikkaththakka  oruvanaith  theadi,  ennidaththil  ko'nduvaarungga'l  en’raan.  (1saamuveal  16:17)

அப்பொழுது  அந்த  வேலைக்காரரில்  ஒருவன்  பிரதியுத்தரமாக:  இதோ,  பெத்லெகேமியனாகிய  ஈசாயின்  குமாரன்  ஒருவனைக்  கண்டிருக்கிறேன்;  அவன்  வாசிப்பதில்  தேறினவன்,  அவன்  பராக்கிரமசாலி,  யுத்தவீரன்,  காரியசமர்த்தன்,  சவுந்தரியமுள்ளவன்;  கர்த்தர்  அவனோடேகூட  இருக்கிறார்  என்றான்.  (1சாமுவேல்  16:18)

appozhuthu  antha  vealaikkaararil  oruvan  pirathiyuththaramaaga:  ithoa,  bethleheamiyanaagiya  eesaayin  kumaaran  oruvanaik  ka'ndirukki’rean;  avan  vaasippathil  thea’rinavan,  avan  baraakkiramasaali,  yuththaveeran,  kaariyasamarththan,  savunthariyamu'l'lavan;  karththar  avanoadeakooda  irukki’raar  en’raan.  (1saamuveal  16:18)

அப்பொழுது  சவுல்:  ஈசாயினிடத்தில்  ஆட்களை  அனுப்பி,  ஆட்டுமந்தையில்  இருக்கிற  உன்  குமாரனாகிய  தாவீதை  என்னிடத்தில்  அனுப்பு  என்று  சொல்லச்சொன்னான்.  (1சாமுவேல்  16:19)

appozhuthu  savul:  eesaayinidaththil  aadka'lai  anuppi,  aattumanthaiyil  irukki’ra  un  kumaaranaagiya  thaaveethai  ennidaththil  anuppu  en’ru  sollachsonnaan.  (1saamuveal  16:19)

அப்பொழுது  ஈசாய்:  அப்பத்தையும்,  ஒரு  துருத்தி  திராட்சரசத்தையும்,  ஒரு  வெள்ளாட்டுக்குட்டியையும்  கழுதையின்மேல்  ஏற்றி,  தன்  குமாரனாகிய  தாவீதின்  வசமாய்  சவுலுக்கு  அனுப்பினான்.  (1சாமுவேல்  16:20)

appozhuthu  eesaay:  appaththaiyum,  oru  thuruththi  thiraadcharasaththaiyum,  oru  ve'l'laattukkuttiyaiyum  kazhuthaiyinmeal  eat’ri,  than  kumaaranaagiya  thaaveethin  vasamaay  savulukku  anuppinaan.  (1saamuveal  16:20)

அப்படியே  தாவீது  சவுலிடத்தில்  வந்து,  அவனுக்கு  முன்பாக  நின்றான்;  அவன்  இவனை  மிகவும்  சிநேகித்தான்;  அவனுக்கு  இவன்  ஆயுததாரியானான்.  (1சாமுவேல்  16:21)

appadiyea  thaaveethu  savulidaththil  vanthu,  avanukku  munbaaga  nin’raan;  avan  ivanai  migavum  sineagiththaan;  avanukku  ivan  aayuthathaariyaanaan.  (1saamuveal  16:21)

சவுல்  ஈசாயினிடத்தில்  ஆள்  அனுப்பி,  தாவீது  எனக்கு  முன்பாக  நிற்கட்டும்;  என்  கண்களில்  அவனுக்குத்  தயவுகிடைத்தது  என்று  சொல்லச்சொன்னான்.  (1சாமுவேல்  16:22)

savul  eesaayinidaththil  aa'l  anuppi,  thaaveethu  enakku  munbaaga  ni’rkattum;  en  ka'nga'lil  avanukkuth  thayavukidaiththathu  en’ru  sollachsonnaan.  (1saamuveal  16:22)

அப்படியே  தேவனால்  விடப்பட்ட  ஆவி  சவுலைப்  பிடிக்கும்போது,  தாவீது  சுரமண்டலத்தை  எடுத்து,  தன்  கையினால்  வாசிப்பான்;  அதினாலே  பொல்லாத  ஆவி  அவனைவிட்டு  நீங்க,  சவுல்  ஆறுதலடைந்து,  சொஸ்தமாவான்.  (1சாமுவேல்  16:23)

appadiyea  theavanaal  vidappatta  aavi  savulaip  pidikkumpoathu,  thaaveethu  surama'ndalaththai  eduththu,  than  kaiyinaal  vaasippaan;  athinaalea  pollaatha  aavi  avanaivittu  neengga,  savul  aa’ruthaladainthu,  sosthamaavaan.  (1saamuveal  16:23)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!