Monday, August 22, 2016

1 Saamuveal 15 | 1 சாமுவேல் 15 | 1 Samuel 15

பின்பு  சாமுவேல்  சவுலை  நோக்கி:  இஸ்ரவேலராகிய  தம்முடைய  ஜனங்கள்மேல்  உம்மை  ராஜாவாக  அபிஷேகம்  பண்ணுகிறதற்குக்  கர்த்தர்  என்னை  அனுப்பினாரே;  இப்போதும்  கர்த்தருடைய  வார்த்தைகளின்  சத்தத்தைக்  கேளும்:  (1சாமுவேல்  15:1)

pinbu  saamuveal  savulai  noakki:  isravealaraagiya  thammudaiya  janangga'lmeal  ummai  raajaavaaga  abisheagam  pa'n'nugi’ratha’rkuk  karththar  ennai  anuppinaarea;  ippoathum  karththarudaiya  vaarththaiga'lin  saththaththaik  kea'lum:  (1saamuveal  15:1)

சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறது  என்னவென்றால்,  இஸ்ரவேலர்  எகிப்திலிருந்து  வந்தபோது,  அமலேக்கு  அவர்களுக்கு  வழிமறித்த  செய்கையை  மனதிலே  வைத்திருக்கிறேன்.  (1சாமுவேல்  15:2)

seanaiga'lin  karththar  sollugi’rathu  ennaven’raal,  isravealar  egipthilirunthu  vanthapoathu,  amaleakku  avarga'lukku  vazhima’riththa  seygaiyai  manathilea  vaiththirukki’rean.  (1saamuveal  15:2)

இப்போதும்  நீ  போய்,  அமலேக்கை  மடங்கடித்து,  அவனுக்கு  உண்டான  எல்லாவற்றையும்  சங்கரித்து,  அவன்மேல்  இரக்கம்  வைக்காமல்,  புருஷரையும்,  ஸ்திரீகளையும்,  பிள்ளைகளையும்,  குழந்தைகளையும்,  மாடுகளையும்,  ஆடுகளையும்,  ஒட்டகங்களையும்,  கழுதைகளையும்  கொன்றுபோடக்கடவாய்  என்கிறார்  என்று  சொன்னான்.  (1சாமுவேல்  15:3)

ippoathum  nee  poay,  amaleakkai  madanggadiththu,  avanukku  u'ndaana  ellaavat’raiyum  sanggariththu,  avanmeal  irakkam  vaikkaamal,  purusharaiyum,  sthireega'laiyum,  pi'l'laiga'laiyum,  kuzhanthaiga'laiyum,  maaduga'laiyum,  aaduga'laiyum,  ottagangga'laiyum,  kazhuthaiga'laiyum  kon’rupoadakkadavaay  engi’raar  en’ru  sonnaan.  (1saamuveal  15:3)

அப்பொழுது  சவுல்:  இதை  ஜனங்களுக்கு  அறியப்படுத்தி,  தெலாயிமிலே  அவர்களைத்  தொகைபார்த்தான்;  அவர்கள்  இரண்டு  லட்சம்  காலாட்களும்,  யூதா  ஜனங்கள்  பதினாயிரம்பேருமாயிருந்தார்கள்.  (1சாமுவேல்  15:4)

appozhuthu  savul:  ithai  janangga'lukku  a’riyappaduththi,  thelaayimilea  avarga'laith  thogaipaarththaan;  avarga'l  ira'ndu  ladcham  kaalaadka'lum,  yoothaa  janangga'l  pathinaayirampearumaayirunthaarga'l.  (1saamuveal  15:4)

சவுல்  அமலேக்குடைய  பட்டணமட்டும்  வந்து,  பள்ளத்தாக்கிலே  ஒரு  பதிவிடையை  வைத்தான்.  (1சாமுவேல்  15:5)

savul  amaleakkudaiya  patta'namattum  vanthu,  pa'l'laththaakkilea  oru  pathividaiyai  vaiththaan.  (1saamuveal  15:5)

சவுல்  கேனியரை  நோக்கி:  நான்  அமலேக்கியரோடேகூட  உங்களையும்  வாரிக்கொள்ளாதபடிக்கு,  நீங்கள்  அவர்கள்  நடுவிலிருந்து  புறப்பட்டு  விலகிப்போங்கள்;  இஸ்ரவேல்  எகிப்திலிருந்து  வந்தபோது,  நீங்கள்  அவர்கள்  எல்லாருக்கும்  தயவுசெய்தீர்கள்  என்றான்;  அப்படியே  கேனியர்  அமலேக்கியரின்  நடுவிலிருந்து  விலகிப்போனார்கள்.  (1சாமுவேல்  15:6)

savul  keaniyarai  noakki:  naan  amaleakkiyaroadeakooda  ungga'laiyum  vaarikko'l'laathapadikku,  neengga'l  avarga'l  naduvilirunthu  pu’rappattu  vilagippoangga'l;  israveal  egipthilirunthu  vanthapoathu,  neengga'l  avarga'l  ellaarukkum  thayavuseytheerga'l  en’raan;  appadiyea  keaniyar  amaleakkiyarin  naduvilirunthu  vilagippoanaarga'l.  (1saamuveal  15:6)

அப்பொழுது  சவுல்:  ஆவிலா  துவக்கி  எகிப்திற்கு  எதிரேயிருக்கிற  சூருக்குப்  போகும்  எல்லைமட்டும்  இருந்த  அமலேக்கியரை  மடங்கடித்து,  (1சாமுவேல்  15:7)

appozhuthu  savul:  aavilaa  thuvakki  egipthi’rku  ethireayirukki’ra  soorukkup  poagum  ellaimattum  iruntha  amaleakkiyarai  madanggadiththu,  (1saamuveal  15:7)

அமலேக்கியரின்  ராஜாவாகிய  ஆகாகை  உயிரோடே  பிடித்தான்;  ஜனங்கள்  யாவரையும்  பட்டயக்  கருக்கினாலே  சங்காரம்பண்ணினான்.  (1சாமுவேல்  15:8)

amaleakkiyarin  raajaavaagiya  aagaakai  uyiroadea  pidiththaan;  janangga'l  yaavaraiyum  pattayak  karukkinaalea  sanggaarampa'n'ninaan.  (1saamuveal  15:8)

சவுலும்  ஜனங்களும்  ஆகாகையும்,  ஆடுமாடுகளில்  முதல்தரமானவைகளையும்,  இரண்டாந்தரமானவைகளையும்,  ஆட்டுக்குட்டிகளையும்,  நலமான  எல்லாவற்றையும்,  அழித்துப்போட  மனதில்லாமல்  தப்பவைத்து,  அற்பமானவைகளும்  உதவாதவைகளுமான  சகல  வஸ்துக்களையும்  முற்றிலும்  அழித்துப்போட்டார்கள்.  (1சாமுவேல்  15:9)

savulum  janangga'lum  aagaakaiyum,  aadumaaduga'lil  muthaltharamaanavaiga'laiyum,  ira'ndaantharamaanavaiga'laiyum,  aattukkuttiga'laiyum,  nalamaana  ellaavat’raiyum,  azhiththuppoada  manathillaamal  thappavaiththu,  a’rpamaanavaiga'lum  uthavaathavaiga'lumaana  sagala  vasthukka'laiyum  mut’rilum  azhiththuppoattaarga'l.  (1saamuveal  15:9)

அப்பொழுது  கர்த்தருடைய  வார்த்தை  சாமுவேலுக்கு  உண்டாகி,  அவர்  சொன்னது:  (1சாமுவேல்  15:10)

appozhuthu  karththarudaiya  vaarththai  saamuvealukku  u'ndaagi,  avar  sonnathu:  (1saamuveal  15:10)

நான்  சவுலை  ராஜாவாக்கினது  எனக்கு  மனஸ்தாபமாயிருக்கிறது;  அவன்  என்னைவிட்டுத்  திரும்பி,  என்  வார்த்தைகளை  நிறைவேற்றாமற்போனான்  என்றார்;  அப்பொழுது  சாமுவேல்  மனம்  நொந்து,  இராமுழுதும்  கர்த்தரை  நோக்கிக்  கூப்பிட்டான்.  (1சாமுவேல்  15:11)

naan  savulai  raajaavaakkinathu  enakku  manasthaabamaayirukki’rathu;  avan  ennaivittuth  thirumbi,  en  vaarththaiga'lai  ni’raiveat’raama’rpoanaan  en’raar;  appozhuthu  saamuveal  manam  nonthu,  iraamuzhuthum  karththarai  noakkik  kooppittaan.  (1saamuveal  15:11)

மறுநாள்  அதிகாலமே  சாமுவேல்  சவுலைச்  சந்திக்கப்போனான்;  அப்பொழுது  சவுல்  கர்மேலுக்கு  வந்து,  தனக்கு  ஒரு  ஜெயஸ்தம்பம்  நாட்டி,  பின்பு  பல  இடங்களில்  சென்று  கில்காலுக்குப்  போனான்  என்று,  சாமுவேலுக்கு  அறிவிக்கப்பட்டது.  (1சாமுவேல்  15:12)

ma’runaa'l  athikaalamea  saamuveal  savulaich  santhikkappoanaan;  appozhuthu  savul  karmealukku  vanthu,  thanakku  oru  jeyasthambam  naatti,  pinbu  pala  idangga'lil  sen’ru  kilgaalukkup  poanaan  en’ru,  saamuvealukku  a’rivikkappattathu.  (1saamuveal  15:12)

சாமுவேல்  சவுலினிடத்தில்  போனான்;  சவுல்  அவனை  நோக்கி:  நீர்  கர்த்தரால்  ஆசீர்வதிக்கப்பட்டவர்;  கர்த்தருடைய  வார்த்தையை  நிறைவேற்றினேன்  என்றான்.  (1சாமுவேல்  15:13)

saamuveal  savulinidaththil  poanaan;  savul  avanai  noakki:  neer  karththaraal  aaseervathikkappattavar;  karththarudaiya  vaarththaiyai  ni’raiveat’rinean  en’raan.  (1saamuveal  15:13)

அதற்குச்  சாமுவேல்:  அப்படியானால்  என்  காதுகளில்  விழுகிற  ஆடுகளின்  சத்தமும்,  எனக்குக்  கேட்கிற  மாடுகளின்  சத்தமும்  என்ன  என்றான்.  (1சாமுவேல்  15:14)

atha’rkuch  saamuveal:  appadiyaanaal  en  kaathuga'lil  vizhugi’ra  aaduga'lin  saththamum,  enakkuk  keadki’ra  maaduga'lin  saththamum  enna  en’raan.  (1saamuveal  15:14)

அதற்குச்  சவுல்:  அமலேக்கியரிடத்திலிருந்து  அவைகளைக்  கொண்டுவந்தார்கள்;  ஜனங்கள்  ஆடுமாடுகளில்  நலமானவைகளை  உம்முடைய  தேவனாகிய  கர்த்தருக்குப்  பலியிடும்படிக்குத்  தப்பவைத்தார்கள்;  மற்றவைகளை  முற்றிலும்  அழித்துப்போட்டோம்  என்றான்.  (1சாமுவேல்  15:15)

atha’rkuch  savul:  amaleakkiyaridaththilirunthu  avaiga'laik  ko'nduvanthaarga'l;  janangga'l  aadumaaduga'lil  nalamaanavaiga'lai  ummudaiya  theavanaagiya  karththarukkup  baliyidumpadikkuth  thappavaiththaarga'l;  mat’ravaiga'lai  mut’rilum  azhiththuppoattoam  en’raan.  (1saamuveal  15:15)

அப்பொழுது  சாமுவேல்:  அந்தப்  பேச்சை  விடும்,  கர்த்தர்  இந்த  இராத்திரியிலே  எனக்குச்  சொன்னதை  உமக்கு  அறிவிக்கிறேன்  என்று  சவுலோடே  சொன்னான்.  அவன்:  சொல்லும்  என்றான்.  (1சாமுவேல்  15:16)

appozhuthu  saamuveal:  anthap  peachchai  vidum,  karththar  intha  iraaththiriyilea  enakkuch  sonnathai  umakku  a’rivikki’rean  en’ru  savuloadea  sonnaan.  avan:  sollum  en’raan.  (1saamuveal  15:16)

அப்பொழுது  சாமுவேல்:  நீர்  உம்முடைய  பார்வைக்குச்  சிறியவராயிருந்தபோது  அல்லவோ  இஸ்ரவேல்  கோத்திரங்களுக்குத்  தலைவரானீர்;  கர்த்தர்  உம்மை  இஸ்ரவேலின்மேல்  ராஜாவாக  அபிஷேகம்  பண்ணுவித்தாரே.  (1சாமுவேல்  15:17)

appozhuthu  saamuveal:  neer  ummudaiya  paarvaikkuch  si’riyavaraayirunthapoathu  allavoa  israveal  koaththirangga'lukkuth  thalaivaraaneer;  karththar  ummai  isravealinmeal  raajaavaaga  abisheagam  pa'n'nuviththaarea.  (1saamuveal  15:17)

இப்போதும்  கர்த்தர்:  நீ  போய்  அமலேக்கியராகிய  அந்தப்  பாவிகளைச்  சங்கரித்து,  அவர்களை  நிர்மூலமாக்கித்  தீருமட்டும்,  அவர்களோடு  யுத்தம்பண்ணு  என்று  சொல்லி,  உம்மை  அந்த  வழியாய்  அனுப்பினார்.  (1சாமுவேல்  15:18)

ippoathum  karththar:  nee  poay  amaleakkiyaraagiya  anthap  paaviga'laich  sanggariththu,  avarga'lai  nirmoolamaakkith  theerumattum,  avarga'loadu  yuththampa'n'nu  en’ru  solli,  ummai  antha  vazhiyaay  anuppinaar.  (1saamuveal  15:18)

இப்படியிருக்க,  நீர்  கர்த்தருடைய  சொல்லைக்கேளாமல்,  கொள்ளையின்மேல்  பறந்து,  கர்த்தருடைய  பார்வைக்குப்  பொல்லாப்பானதைச்  செய்தது  என்ன  என்றான்.  (1சாமுவேல்  15:19)

ippadiyirukka,  neer  karththarudaiya  sollaikkea'laamal,  ko'l'laiyinmeal  pa’ranthu,  karththarudaiya  paarvaikkup  pollaappaanathaich  seythathu  enna  en’raan.  (1saamuveal  15:19)

சவுல்  சாமுவேலை  நோக்கி:  நான்  கர்த்தருடைய  சொல்லைக்  கேட்டு,  கர்த்தர்  என்னை  அனுப்பின  வழியாய்ப்  போய்,  அமலேக்கின்  ராஜாவாகிய  ஆகாகைக்  கொண்டுவந்து,  அமலேக்கியரைச்  சங்காரம்  பண்ணினேன்.  (1சாமுவேல்  15:20)

savul  saamuvealai  noakki:  naan  karththarudaiya  sollaik  keattu,  karththar  ennai  anuppina  vazhiyaayp  poay,  amaleakkin  raajaavaagiya  aagaakaik  ko'nduvanthu,  amaleakkiyaraich  sanggaaram  pa'n'ninean.  (1saamuveal  15:20)

ஜனங்களோ  உம்முடைய  தேவனாகிய  கர்த்தருக்குக்  கில்காலிலே  பலியிடுகிறதற்காக,  கொள்ளையிலே  சாபத்தீடாகும்  ஆடுமாடுகளிலே  பிரதானமானவைகளைப்  பிடித்துக்கொண்டு  வந்தார்கள்  என்றான்.  (1சாமுவேல்  15:21)

janangga'loa  ummudaiya  theavanaagiya  karththarukkuk  kilgaalilea  baliyidugi’ratha’rkaaga,  ko'l'laiyilea  saabaththeedaagum  aadumaaduga'lilea  pirathaanamaanavaiga'laip  pidiththukko'ndu  vanthaarga'l  en’raan.  (1saamuveal  15:21)

அதற்குச்  சாமுவேல்:  கர்த்தருடைய  சத்தத்திற்குக்  கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும்,  சர்வாங்க  தகனங்களும்  பலிகளும்  கர்த்தருக்குப்  பிரியமாயிருக்குமோ?  பலியைப்பார்க்கிலும்  கீழ்ப்படிதலும்,  ஆட்டுக்கடாக்களின்  நிணத்தைப்பார்க்கிலும்  செவிகொடுத்தலும்  உத்தமம்.  (1சாமுவேல்  15:22)

atha’rkuch  saamuveal:  karththarudaiya  saththaththi’rkuk  keezhppadigi’rathaippaarkkilum,  sarvaangga  thaganangga'lum  baliga'lum  karththarukkup  piriyamaayirukkumoa?  baliyaippaarkkilum  keezhppadithalum,  aattukkadaakka'lin  ni'naththaippaarkkilum  sevikoduththalum  uththamam.  (1saamuveal  15:22)

இரண்டகம்பண்ணுதல்  பில்லிசூனிய  பாவத்திற்கும்,  முரட்டாட்டம்பண்ணுதல்  அவபக்திக்கும்  விக்கிரகாராதனைக்கும்  சரியாய்  இருக்கிறது;  நீர்  கர்த்தருடைய  வார்த்தையைப்  புறக்கணித்தபடியினாலே,  அவர்  உம்மை  ராஜாவாயிராதபடிக்குப்  புறக்கணித்துத்  தள்ளினார்  என்றான்.  (1சாமுவேல்  15:23)

ira'ndagampa'n'nuthal  pillisooniya  paavaththi’rkum,  murattaattampa'n'nuthal  avabakthikkum  vikkiragaaraathanaikkum  sariyaay  irukki’rathu;  neer  karththarudaiya  vaarththaiyaip  pu’rakka'niththapadiyinaalea,  avar  ummai  raajaavaayiraathapadikkup  pu’rakka'niththuth  tha'l'linaar  en’raan.  (1saamuveal  15:23)

அப்பொழுது  சவுல்  சாமுவேலை  நோக்கி:  நான்  கர்த்தருடைய  கட்டளையையும்  உம்முடைய  வார்த்தைகளையும்  மீறினதினாலே  பாவஞ்செய்தேன்;  நான்  ஜனங்களுக்குப்  பயந்து,  அவர்கள்  சொல்லைக்  கேட்டேன்.  (1சாமுவேல்  15:24)

appozhuthu  savul  saamuvealai  noakki:  naan  karththarudaiya  katta'laiyaiyum  ummudaiya  vaarththaiga'laiyum  mee’rinathinaalea  paavagnseythean;  naan  janangga'lukkup  bayanthu,  avarga'l  sollaik  keattean.  (1saamuveal  15:24)

இப்போதும்  நீர்  என்  பாவத்தை  மன்னித்து,  நான்  கர்த்தரைப்  பணிந்துகொள்ளும்படிக்கு,  என்னோடேகூடத்  திரும்பிவாரும்  என்றான்.  (1சாமுவேல்  15:25)

ippoathum  neer  en  paavaththai  manniththu,  naan  karththaraip  pa'ninthuko'l'lumpadikku,  ennoadeakoodath  thirumbivaarum  en’raan.  (1saamuveal  15:25)

சாமுவேல்  சவுலைப்  பார்த்து:  நான்  உம்மோடேகூடத்  திரும்பிவருவதில்லை;  கர்த்தருடைய  வார்த்தையைப்  புறக்கணித்தீர்;  நீர்  இஸ்ரவேலின்மேல்  ராஜாவாயிராதபடிக்கு,  கர்த்தர்  உம்மையும்  புறக்கணித்துத்  தள்ளினார்  என்றான்.  (1சாமுவேல்  15:26)

saamuveal  savulaip  paarththu:  naan  ummoadeakoodath  thirumbivaruvathillai;  karththarudaiya  vaarththaiyaip  pu’rakka'niththeer;  neer  isravealinmeal  raajaavaayiraathapadikku,  karththar  ummaiyum  pu’rakka'niththuth  tha'l'linaar  en’raan.  (1saamuveal  15:26)

போகும்படி  சாமுவேல்  திரும்புகிறபோது,  சவுல்,  அவன்  சால்வையின்  தொங்கலைப்  பிடித்துக்கொண்டான்,  அது  கிழிந்துபோயிற்று.  (1சாமுவேல்  15:27)

poagumpadi  saamuveal  thirumbugi’rapoathu,  savul,  avan  saalvaiyin  thonggalaip  pidiththukko'ndaan,  athu  kizhinthupoayit’ru.  (1saamuveal  15:27)

அப்பொழுது  சாமுவேல்  அவனை  நோக்கி:  கர்த்தர்  இன்று  உம்மிடத்திலிருந்த  இஸ்ரவேலின்  ராஜ்யத்தைக்  கிழித்துப்போட்டு;  உம்மைப்பார்க்கிலும்  உத்தமனாயிருக்கிற  உம்முடைய  தோழனுக்கு  அதைக்  கொடுத்தார்.  (1சாமுவேல்  15:28)

appozhuthu  saamuveal  avanai  noakki:  karththar  in’ru  ummidaththiliruntha  isravealin  raajyaththaik  kizhiththuppoattu;  ummaippaarkkilum  uththamanaayirukki’ra  ummudaiya  thoazhanukku  athaik  koduththaar.  (1saamuveal  15:28)

இஸ்ரவேலின்  ஜெயபலமானவர்  பொய்சொல்லுகிறதும்  இல்லை;  தாம்  சொன்னதைப்பற்றி  மனஸ்தாபப்படுகிறதும்  இல்லை;  மனம்மாற  அவர்  மனுஷன்  அல்ல  என்றான்.  (1சாமுவேல்  15:29)

isravealin  jeyabalamaanavar  poysollugi’rathum  illai;  thaam  sonnathaippat’ri  manasthaabappadugi’rathum  illai;  manammaa’ra  avar  manushan  alla  en’raan.  (1saamuveal  15:29)

அதற்கு  அவன்:  நான்  பாவஞ்செய்தேன்;  இப்போது  என்  ஜனத்தின்  மூப்பருக்கு  முன்பாகவும்,  இஸ்ரவேலுக்கு  முன்பாகவும்  நீர்  என்னைக்  கனம்பண்ணி,  நான்  உம்முடைய  தேவனாகிய  கர்த்தரைப்  பணிந்துகொள்ளும்படிக்கு,  என்னோடேகூடத்  திரும்பிவாரும்  என்றான்.  (1சாமுவேல்  15:30)

atha’rku  avan:  naan  paavagnseythean;  ippoathu  en  janaththin  moopparukku  munbaagavum,  isravealukku  munbaagavum  neer  ennaik  kanampa'n'ni,  naan  ummudaiya  theavanaagiya  karththaraip  pa'ninthuko'l'lumpadikku,  ennoadeakoodath  thirumbivaarum  en’raan.  (1saamuveal  15:30)

அப்பொழுது  சாமுவேல்  திரும்பிச்  சவுலுக்குப்  பின்சென்றான்;  சவுல்  கர்த்தரைப்  பணிந்துகொண்டான்.  (1சாமுவேல்  15:31)

appozhuthu  saamuveal  thirumbich  savulukkup  pinsen’raan;  savul  karththaraip  pa'ninthuko'ndaan.  (1saamuveal  15:31)

பின்பு  சாமுவேல்:  அமலேக்கின்  ராஜாவாகிய  ஆகாகை  என்னிடத்தில்  கொண்டுவாருங்கள்  என்றான்;  ஆகாக்  சந்தோஷமாய்  அவனிடத்தில்  வந்து,  மரணத்தின்  கசப்பு  அற்றுப்போனது  நிச்சயம்  என்றான்.  (1சாமுவேல்  15:32)

pinbu  saamuveal:  amaleakkin  raajaavaagiya  aagaakai  ennidaththil  ko'nduvaarungga'l  en’raan;  aagaak  santhoashamaay  avanidaththil  vanthu,  mara'naththin  kasappu  at’ruppoanathu  nichchayam  en’raan.  (1saamuveal  15:32)

சாமுவேல்:  உன்  பட்டயம்  ஸ்திரீகளைப்  பிள்ளையற்றவர்களாக்கினதுபோல,  ஸ்திரீகளுக்குள்ளே  உன்  தாயும்  பிள்ளையற்றவளாவாள்  என்று  சொல்லி;  சாமுவேல்  கில்காலிலே  கர்த்தருக்கு  முன்பாக  ஆகாகைத்  துண்டித்துப்போட்டான்.  (1சாமுவேல்  15:33)

saamuveal:  un  pattayam  sthireega'laip  pi'l'laiyat’ravarga'laakkinathupoala,  sthireega'lukku'l'lea  un  thaayum  pi'l'laiyat’rava'laavaa'l  en’ru  solli;  saamuveal  kilgaalilea  karththarukku  munbaaga  aagaakaith  thu'ndiththuppoattaan.  (1saamuveal  15:33)

பின்பு  சாமுவேல்  ராமாவுக்குப்  போனான்;  சவுலோ  தன்  ஊராகிய  கிபியாவிலிருக்கிற  தன்  வீட்டுக்குப்  போய்விட்டான்.  (1சாமுவேல்  15:34)

pinbu  saamuveal  raamaavukkup  poanaan;  savuloa  than  ooraagiya  kibiyaavilirukki’ra  than  veettukkup  poayvittaan.  (1saamuveal  15:34)

சவுல்  மரணமடையும்  நாள்மட்டும்  சாமுவேல்  அப்புறம்  அவனைக்  கண்டு  பேசவில்லை;  இஸ்ரவேலின்மேல்  சவுலை  ராஜாவாக்கினதற்காகக்  கர்த்தர்  மனஸ்தாபப்பட்டதினிமித்தம்,  சாமுவேல்  சவுலுக்காகத்  துக்கித்துக்கொண்டிருந்தான்.  (1சாமுவேல்  15:35)

savul  mara'namadaiyum  naa'lmattum  saamuveal  appu’ram  avanaik  ka'ndu  peasavillai;  isravealinmeal  savulai  raajaavaakkinatha’rkaagak  karththar  manasthaabappattathinimiththam,  saamuveal  savulukkaagath  thukkiththukko'ndirunthaan.  (1saamuveal  15:35)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!