Monday, August 22, 2016

1 Saamuveal 14 | 1 சாமுவேல் 14 | 1 Samuel 14

ஒருநாள்  சவுலின்  குமாரனாகிய  யோனத்தான்  தன்  ஆயுததாரியாகிய  வாலிபனை  நோக்கி:  நமக்கு  எதிராக  அந்தப்  பக்கத்தில்  இருக்கிற  பெலிஸ்தரின்  தாணையத்திற்குப்  போவோம்  வா  என்று  சொன்னான்;  அதை  அவன்  தன்  தகப்பனுக்கு  அறிவிக்கவில்லை.  (1சாமுவேல்  14:1)

orunaa'l  savulin  kumaaranaagiya  yoanaththaan  than  aayuthathaariyaagiya  vaalibanai  noakki:  namakku  ethiraaga  anthap  pakkaththil  irukki’ra  pelistharin  thaa'naiyaththi’rkup  poavoam  vaa  en’ru  sonnaan;  athai  avan  than  thagappanukku  a’rivikkavillai.  (1saamuveal  14:1)

சவுல்  கிபியாவின்  கடைசிமுனையாகிய  மிக்ரோனிலே  ஒரு  மாதளமரத்தின்கீழ்  இருந்தான்;  அவனோடேகூட  இருந்த  ஜனங்கள்  ஏறக்குறைய  அறுநூறுபேராயிருந்தார்கள்.  (1சாமுவேல்  14:2)

savul  kibiyaavin  kadaisimunaiyaagiya  mikroanilea  oru  maatha'lamaraththinkeezh  irunthaan;  avanoadeakooda  iruntha  janangga'l  ea’rakku’raiya  a’runoo’rupearaayirunthaarga'l.  (1saamuveal  14:2)

சீலோவிலே  கர்த்தருடைய  ஆசாரியனாயிருந்த  ஏலியின்  குமாரனாகிய  பினெகாசுக்குப்  பிறந்த  இக்கபோத்தின்  சகோதரனும்  அகிதூபின்  குமாரனுமாகிய  அகியா  என்பவன்  ஏபோத்தைத்  தரித்தவனாயிருந்தான்;  யோனத்தான்  போனதை  ஜனங்கள்  அறியாதிருந்தார்கள்.  (1சாமுவேல்  14:3)

seeloavilea  karththarudaiya  aasaariyanaayiruntha  ealiyin  kumaaranaagiya  pinegaasukkup  pi’rantha  ikkaboaththin  sagoatharanum  agithoobin  kumaaranumaagiya  agiyaa  enbavan  eaboaththaith  thariththavanaayirunthaan;  yoanaththaan  poanathai  janangga'l  a’riyaathirunthaarga'l.  (1saamuveal  14:3)

யோனத்தான்  பெலிஸ்தரின்  தாணையத்திற்குப்  போகப்பார்த்த  வழிகளின்  நடுவே,  இந்தப்பக்கம்  ஒரு  செங்குத்தான  பாறையும்,  அந்தப்பக்கம்  ஒரு  செங்குத்தான  பாறையும்  இருந்தது;  ஒன்றுக்குப்  போசேஸ்  என்று  பேர்,  மற்றொன்றுக்குச்  சேனே  என்று  பேர்.  (1சாமுவேல்  14:4)

yoanaththaan  pelistharin  thaa'naiyaththi’rkup  poagappaarththa  vazhiga'lin  naduvea,  inthappakkam  oru  sengguththaana  paa’raiyum,  anthappakkam  oru  sengguththaana  paa’raiyum  irunthathu;  on’rukkup  boaseas  en’ru  pear,  mat’ron’rukkuch  seanea  en’ru  pear.  (1saamuveal  14:4)

அந்தப்  பாறைகளில்  ஒன்று  வடக்கே  மிக்மாசுக்கு  எதிராகவும்,  மற்றொன்று  தெற்கே  கிபியாவுக்கு  எதிராகவும்  இருந்தது.  (1சாமுவேல்  14:5)

anthap  paa’raiga'lil  on’ru  vadakkea  mikmaasukku  ethiraagavum,  mat’ron’ru  the’rkea  kibiyaavukku  ethiraagavum  irunthathu.  (1saamuveal  14:5)

யோனத்தான்  தன்  ஆயுததாரியாகிய  வாலிபனை  நோக்கி:  விருத்தசேதனம்  இல்லாதவர்களுடைய  அந்தத்  தாணையத்திற்குப்  போவோம்  வா;  ஒருவேளை  கர்த்தர்  நமக்காக  ஒரு  காரியம்  செய்வார்;  அநேகம்பேரைக்  கொண்டாகிலும்,  கொஞ்சம்பேரைக்  கொண்டாகிலும்,  ரட்சிக்கக்  கர்த்தருக்குத்  தடையில்லை  என்றான்.  (1சாமுவேல்  14:6)

yoanaththaan  than  aayuthathaariyaagiya  vaalibanai  noakki:  viruththaseathanam  illaathavarga'ludaiya  anthath  thaa'naiyaththi’rkup  poavoam  vaa;  oruvea'lai  karththar  namakkaaga  oru  kaariyam  seyvaar;  aneagampearaik  ko'ndaagilum,  kognchampearaik  ko'ndaagilum,  radchikkak  karththarukkuth  thadaiyillai  en’raan.  (1saamuveal  14:6)

அப்பொழுது  அவன்  ஆயுததாரி  அவனைப்  பார்த்து:  உம்முடைய  இருதயத்தில்  இருக்கிறபடியெல்லாம்  செய்யும்;  அப்படியே  போம்;  இதோ,  உம்முடைய  மனதுக்கு  ஏற்றபடி  நானும்  உம்மோடேகூட  வருகிறேன்  என்றான்.  (1சாமுவேல்  14:7)

appozhuthu  avan  aayuthathaari  avanaip  paarththu:  ummudaiya  iruthayaththil  irukki’rapadiyellaam  seyyum;  appadiyea  poam;  ithoa,  ummudaiya  manathukku  eat’rapadi  naanum  ummoadeakooda  varugi’rean  en’raan.  (1saamuveal  14:7)

அதற்கு  யோனத்தான்:  இதோ,  நாம்  கடந்து,  அந்த  மனுஷரிடத்திற்குப்  போகிறவர்கள்போல  அவர்களுக்கு  நம்மைக்  காண்பிப்போம்.  (1சாமுவேல்  14:8)

atha’rku  yoanaththaan:  ithoa,  naam  kadanthu,  antha  manusharidaththi’rkup  poagi’ravarga'lpoala  avarga'lukku  nammaik  kaa'nbippoam.  (1saamuveal  14:8)

நாங்கள்  உங்களிடத்துக்கு  வருமட்டும்  நில்லுங்கள்  என்று  நம்மோடே  சொல்வார்களானால்,  நாம்  அவர்களிடத்துக்கு  ஏறிப்போகாமல்,  நம்முடைய  நிலையிலே  நிற்போம்.  (1சாமுவேல்  14:9)

naangga'l  ungga'lidaththukku  varumattum  nillungga'l  en’ru  nammoadea  solvaarga'laanaal,  naam  avarga'lidaththukku  ea’rippoagaamal,  nammudaiya  nilaiyilea  ni’rpoam.  (1saamuveal  14:9)

எங்களிடத்துக்கு  ஏறிவாருங்கள்  என்று  சொல்வார்களானால்,  ஏறிப்போவோம்;  கர்த்தர்  அவர்களை  நம்முடைய  கையில்  ஒப்புக்கொடுத்தார்;  இது  நமக்கு  அடையாளம்  என்றான்.  (1சாமுவேல்  14:10)

engga'lidaththukku  ea’rivaarungga'l  en’ru  solvaarga'laanaal,  ea’rippoavoam;  karththar  avarga'lai  nammudaiya  kaiyil  oppukkoduththaar;  ithu  namakku  adaiyaa'lam  en’raan.  (1saamuveal  14:10)

அப்படியே  அவர்கள்  இருவரும்  பெலிஸ்தரின்  தாணையத்திற்முன்  தங்களைக்  காண்பித்தார்கள்;  அப்பொழுது  பெலிஸ்தர்:  இதோ,  எபிரெயர்  ஒளித்துக்கொண்டிருந்த  வளைகளைவிட்டுப்  புறப்படுகிறார்கள்  என்று  சொல்லி,  (1சாமுவேல்  14:11)

appadiyea  avarga'l  iruvarum  pelistharin  thaa'naiyaththi’rmun  thangga'laik  kaa'nbiththaarga'l;  appozhuthu  pelisthar:  ithoa,  ebireyar  o'liththukko'ndiruntha  va'laiga'laivittup  pu’rappadugi’raarga'l  en’ru  solli,  (1saamuveal  14:11)

தாணையம்  இருக்கிற  மனுஷர்  யோனத்தானையும்  அவன்  ஆயுததாரியையும்  பார்த்து:  எங்களிடத்துக்கு  ஏறிவாருங்கள்,  உங்களுக்குப்  புத்தி  கற்பிப்போம்  என்றார்கள்;  அப்பொழுது  யோனத்தான்  தன்  ஆயுததாரியை  நோக்கி:  என்  பின்னாலே  ஏறிவா;  கர்த்தர்  அவர்களை  இஸ்ரவேலின்  கையில்  ஒப்புக்கொடுத்தார்  என்று  சொல்லி,  (1சாமுவேல்  14:12)

thaa'naiyam  irukki’ra  manushar  yoanaththaanaiyum  avan  aayuthathaariyaiyum  paarththu:  engga'lidaththukku  ea’rivaarungga'l,  ungga'lukkup  buththi  ka’rpippoam  en’raarga'l;  appozhuthu  yoanaththaan  than  aayuthathaariyai  noakki:  en  pinnaalea  ea’rivaa;  karththar  avarga'lai  isravealin  kaiyil  oppukkoduththaar  en’ru  solli,  (1saamuveal  14:12)

யோனத்தான்  தன்  கைகளாலும்  தன்  கால்களாலும்  தவழ்ந்து  ஏறினான்;  அவன்  ஆயுததாரி  அவன்  பின்னாலே  ஏறினான்;  அப்பொழுது  அவர்கள்  யோனத்தானுக்கு  முன்பாக  மடிந்து  விழுந்தார்கள்;  அவன்  ஆயுததாரியும்  அவன்  பின்னாலே  வெட்டிக்கொண்டே  போனான்.  (1சாமுவேல்  14:13)

yoanaththaan  than  kaiga'laalum  than  kaalga'laalum  thavazhnthu  ea’rinaan;  avan  aayuthathaari  avan  pinnaalea  ea’rinaan;  appozhuthu  avarga'l  yoanaththaanukku  munbaaga  madinthu  vizhunthaarga'l;  avan  aayuthathaariyum  avan  pinnaalea  vettikko'ndea  poanaan.  (1saamuveal  14:13)

யோனத்தானும்  அவன்  ஆயுததாரியும்  அடித்த  அந்த  முந்தின  அடியிலே  ஏறக்குறைய  இருபதுபேர்  அரையேர்  நிலமான  விசாலத்திலே  விழுந்தார்கள்.  (1சாமுவேல்  14:14)

yoanaththaanum  avan  aayuthathaariyum  adiththa  antha  munthina  adiyilea  ea’rakku’raiya  irubathupear  araiyear  nilamaana  visaalaththilea  vizhunthaarga'l.  (1saamuveal  14:14)

அப்பொழுது  பாளயத்திலும்  வெளியிலும்,  சகல  ஜனங்களிலும்,  பயங்கரம்  உண்டாகி,  தாணையம்  இருந்தவர்களும்  கொள்ளையிடப்போன  தண்டிலுள்ளவர்களுங்கூடத்  திகில்  அடைந்தார்கள்;  பூமியும்  அதிர்ந்தது;  அது  தேவனால்  உண்டான  பயங்கரமாயிருந்தது.  (1சாமுவேல்  14:15)

appozhuthu  paa'layaththilum  ve'liyilum,  sagala  janangga'lilum,  bayanggaram  u'ndaagi,  thaa'naiyam  irunthavarga'lum  ko'l'laiyidappoana  tha'ndilu'l'lavarga'lungkoodath  thigil  adainthaarga'l;  boomiyum  athirnthathu;  athu  theavanaal  u'ndaana  bayanggaramaayirunthathu.  (1saamuveal  14:15)

பென்யமீன்  நாட்டிலுள்ள  கிபியாவிலே  சவுலுக்கு  இருந்த  ஜாமக்காரர்  பார்த்து:  இதோ,  அந்த  ஏராளமான  கூட்டம்  கலைந்து,  ஒருவர்மேல்  ஒருவர்  விழுகிறதைக்  கண்டார்கள்.  (1சாமுவேல்  14:16)

benyameen  naattilu'l'la  kibiyaavilea  savulukku  iruntha  jaamakkaarar  paarththu:  ithoa,  antha  earaa'lamaana  koottam  kalainthu,  oruvarmeal  oruvar  vizhugi’rathaik  ka'ndaarga'l.  (1saamuveal  14:16)

அப்பொழுது  சவுல்  தன்னோடேகூட  இருக்கிற  ஜனங்களை  நோக்கி:  நம்மிடத்திலிருந்து  போனவர்கள்  யார்  என்று  இலக்கம்பாருங்கள்  என்றான்;  அவர்கள்  இலக்கம்  பார்க்கிறபோது,  இதோ,  யோனத்தானும்  அவன்  ஆயுததாரியும்  அங்கே  இல்லை  என்று  கண்டார்கள்.  (1சாமுவேல்  14:17)

appozhuthu  savul  thannoadeakooda  irukki’ra  janangga'lai  noakki:  nammidaththilirunthu  poanavarga'l  yaar  en’ru  ilakkampaarungga'l  en’raan;  avarga'l  ilakkam  paarkki’rapoathu,  ithoa,  yoanaththaanum  avan  aayuthathaariyum  anggea  illai  en’ru  ka'ndaarga'l.  (1saamuveal  14:17)

அப்பொழுது  சவுல்  அகீயாவை  நோக்கி:  தேவனுடைய  பெட்டியைக்  கொண்டுவா  என்றான்;  தேவனுடைய  பெட்டி  அந்நாட்களில்  இஸ்ரவேல்  புத்திரரிடத்தில்  இருந்தது.  (1சாமுவேல்  14:18)

appozhuthu  savul  ageeyaavai  noakki:  theavanudaiya  pettiyaik  ko'nduvaa  en’raan;  theavanudaiya  petti  annaadka'lil  israveal  puththiraridaththil  irunthathu.  (1saamuveal  14:18)

இப்படிச்  சவுல்  ஆசாரியனோடே  பேசுகையில்,  பெலிஸ்தரின்  பாளயத்தில்  உண்டான  கலகம்  வரவர  அதிகரித்தது;  அப்பொழுது  சவுல்  ஆசாரியனைப்  பார்த்து:  இருக்கட்டும்  என்றான்.  (1சாமுவேல்  14:19)

ippadich  savul  aasaariyanoadea  peasugaiyil,  pelistharin  paa'layaththil  u'ndaana  kalagam  varavara  athigariththathu;  appozhuthu  savul  aasaariyanaip  paarththu:  irukkattum  en’raan.  (1saamuveal  14:19)

சவுலும்  அவனோடிருந்த  ஜனங்களும்  கூட்டங்கூடிப்  போர்க்களத்திற்குப்  போனார்கள்;  ஒருவர்  பட்டயம்  ஒருவருக்கு  விரோதமாயிருந்தபடியால்  மகா  அமளியுண்டாயிற்று.  (1சாமுவேல்  14:20)

savulum  avanoadiruntha  janangga'lum  koottangkoodip  poarkka'laththi’rkup  poanaarga'l;  oruvar  pattayam  oruvarukku  viroathamaayirunthapadiyaal  mahaa  ama'liyu'ndaayit’ru.  (1saamuveal  14:20)

இதற்குமுன்  பெலிஸ்தருடன்  கூடி  அவர்களோடேகூடப்  பாளயத்திலே  திரிந்து  வந்த  எபிரெயரும்,  சவுலோடும்  யோனத்தானோடும்  இருக்கிற  இஸ்ரவேலரோடே  கூடிக்கொண்டார்கள்.  (1சாமுவேல்  14:21)

itha’rkumun  pelistharudan  koodi  avarga'loadeakoodap  paa'layaththilea  thirinthu  vantha  ebireyarum,  savuloadum  yoanaththaanoadum  irukki’ra  isravealaroadea  koodikko'ndaarga'l.  (1saamuveal  14:21)

எப்பிராயீம்  மலைகளில்  ஒளித்துக்கொண்டிருந்த  சகல  இஸ்ரவேலரும்  பெலிஸ்தர்  முறிந்தோடுகிறதைக்  கேள்விப்பட்டபோது,  யுத்தத்திலே  அவர்களை  நெருங்கித்  தொடர்ந்தார்கள்.  (1சாமுவேல்  14:22)

eppiraayeem  malaiga'lil  o'liththukko'ndiruntha  sagala  isravealarum  pelisthar  mu’rinthoadugi’rathaik  kea'lvippattapoathu,  yuththaththilea  avarga'lai  nerunggith  thodarnthaarga'l.  (1saamuveal  14:22)

இப்படிக்  கர்த்தர்  அன்றையதினம்  இஸ்ரவேலை  ரட்சித்தார்;  அந்த  யுத்தம்  பெத்தாவேன்மட்டும்  நடந்தது.  (1சாமுவேல்  14:23)

ippadik  karththar  an’raiyathinam  isravealai  radchiththaar;  antha  yuththam  beththaaveanmattum  nadanthathu.  (1saamuveal  14:23)

இஸ்ரவேலர்  அன்றையதினம்  மிகுந்த  வருத்தம்  அடைந்தார்கள்:  நான்  என்  சத்துருக்கள்  கையிலே  பழிவாங்கவேண்டும்,  சாயங்காலமட்டும்  பொறுக்காமல்  எவன்  போஜனம்  செய்கிறானோ,  அவன்  சபிக்கப்பட்டவன்  என்று  சவுல்  ஜனங்களுக்கு  ஆணையிட்டுச்  சொல்லியிருந்தபடியால்,  ஜனங்களில்  ஒருவரும்  எவ்வளவேனும்  போஜனம்பண்ணாதிருந்தார்கள்.  (1சாமுவேல்  14:24)

isravealar  an’raiyathinam  miguntha  varuththam  adainthaarga'l:  naan  en  saththurukka'l  kaiyilea  pazhivaanggavea'ndum,  saayanggaalamattum  po’rukkaamal  evan  poajanam  seygi’raanoa,  avan  sabikkappattavan  en’ru  savul  janangga'lukku  aa'naiyittuch  solliyirunthapadiyaal,  janangga'lil  oruvarum  evva'laveanum  poajanampa'n'naathirunthaarga'l.  (1saamuveal  14:24)

தேசத்து  ஜனங்கள்  எல்லாரும்  ஒரு  காட்டிலே  வந்தார்கள்;  அங்கே  வெளியிலே  தேன்கூடு  கட்டியிருந்தது.  (1சாமுவேல்  14:25)

theasaththu  janangga'l  ellaarum  oru  kaattilea  vanthaarga'l;  anggea  ve'liyilea  theankoodu  kattiyirunthathu.  (1saamuveal  14:25)

ஜனங்கள்  காட்டிலே  வந்தபோது,  இதோ,  தேன்  ஒழுகிக்கொண்டிருந்தது;  ஆனாலும்  ஒருவனும்  அதைத்  தன்  கையினாலே  தொட்டுத்  தன்  வாயில்  வைக்கவில்லை;  ஜனங்கள்  அந்த  ஆணையினிமித்தம்  பயப்பட்டார்கள்.  (1சாமுவேல்  14:26)

janangga'l  kaattilea  vanthapoathu,  ithoa,  thean  ozhugikko'ndirunthathu;  aanaalum  oruvanum  athaith  than  kaiyinaalea  thottuth  than  vaayil  vaikkavillai;  janangga'l  antha  aa'naiyinimiththam  bayappattaarga'l.  (1saamuveal  14:26)

யோனத்தான்  தன்  தகப்பன்  ஜனங்களுக்கு  ஆணையிட்டதைக்  கேள்விப்படவில்லை;  அவன்  தன்  கையிலிருந்த  கோலை  நீட்டி,  அதின்  நுனியினாலே  தேன்கூட்டைக்  குத்தி,  அதை  எடுத்துத்  தன்  வாயிலே  போட்டுக்கொண்டான்;  அதினால்  அவன்  கண்கள்  தெளிந்தது.  (1சாமுவேல்  14:27)

yoanaththaan  than  thagappan  janangga'lukku  aa'naiyittathaik  kea'lvippadavillai;  avan  than  kaiyiliruntha  koalai  neetti,  athin  nuniyinaalea  theankoottaik  kuththi,  athai  eduththuth  than  vaayilea  poattukko'ndaan;  athinaal  avan  ka'nga'l  the'linthathu.  (1saamuveal  14:27)

அப்பொழுது  ஜனங்களில்  ஒருவன்:  இன்றைக்கு  போஜனம்  சாப்பிடுகிறவன்  சபிக்கப்பட்டவன்  என்று  உம்முடைய  தகப்பனார்  ஜனங்களுக்கு  உறுதியாய்  ஆணையிட்டிருக்கிறார்;  ஆகையினால்  ஜனங்கள்  விடாய்த்திருக்கிறார்கள்  என்றான்.  (1சாமுவேல்  14:28)

appozhuthu  janangga'lil  oruvan:  in’raikku  poajanam  saappidugi’ravan  sabikkappattavan  en’ru  ummudaiya  thagappanaar  janangga'lukku  u’ruthiyaay  aa'naiyittirukki’raar;  aagaiyinaal  janangga'l  vidaayththirukki’raarga'l  en’raan.  (1saamuveal  14:28)

அப்பொழுது  யோனத்தான்:  என்  தகப்பன்  தேசத்தின்  ஜனங்களைக்  கலக்கப்படுத்தினார்;  நான்  இந்தத்  தேனிலே  கொஞ்சம்  ருசிபார்த்ததினாலே,  என்  கண்கள்  தெளிந்ததைப்  பாருங்கள்.  (1சாமுவேல்  14:29)

appozhuthu  yoanaththaan:  en  thagappan  theasaththin  janangga'laik  kalakkappaduththinaar;  naan  inthath  theanilea  kogncham  rusipaarththathinaalea,  en  ka'nga'l  the'linthathaip  paarungga'l.  (1saamuveal  14:29)

இன்றையதினம்  ஜனங்கள்  தங்களுக்கு  அகப்பட்ட  தங்கள்  சத்துருக்களின்  கொள்ளையிலே  ஏதாகிலும்  புசித்திருந்தால்,  எத்தனை  நலமாயிருக்கும்;  பெலிஸ்தருக்குள்  உண்டான  சங்காரம்  மிகவும்  அதிகமாயிருக்குமே  என்றான்.  (1சாமுவேல்  14:30)

in’raiyathinam  janangga'l  thangga'lukku  agappatta  thangga'l  saththurukka'lin  ko'l'laiyilea  eathaagilum  pusiththirunthaal,  eththanai  nalamaayirukkum;  pelistharukku'l  u'ndaana  sanggaaram  migavum  athigamaayirukkumea  en’raan.  (1saamuveal  14:30)

அவர்கள்  அன்றையதினம்  மிக்மாசிலிருந்து  ஆயலோன்மட்டும்  பெலிஸ்தரை  முறிய  அடித்தபோது,  ஜனங்கள்  மிகவும்  விடாய்த்திருந்தார்கள்.  (1சாமுவேல்  14:31)

avarga'l  an’raiyathinam  mikmaasilirunthu  aayaloanmattum  pelistharai  mu’riya  adiththapoathu,  janangga'l  migavum  vidaayththirunthaarga'l.  (1saamuveal  14:31)

அப்பொழுது  ஜனங்கள்  கொள்ளையின்மேல்  பாய்ந்து,  ஆடுகளையும்  மாடுகளையும்  கன்றுக்குட்டிகளையும்  பிடித்து,  தரையிலே  போட்டு  அடித்து,  இரத்தத்தோடும்  புசித்தார்கள்.  (1சாமுவேல்  14:32)

appozhuthu  janangga'l  ko'l'laiyinmeal  paaynthu,  aaduga'laiyum  maaduga'laiyum  kan’rukkuttiga'laiyum  pidiththu,  tharaiyilea  poattu  adiththu,  iraththaththoadum  pusiththaarga'l.  (1saamuveal  14:32)

அப்பொழுது:  இதோ,  இரத்தத்தோடிருக்கிறதைப்  புசிக்கிறதினால்  ஜனங்கள்  கர்த்தருக்கு  ஏலாத  பாவம்  செய்கிறார்கள்  என்று  சவுலுக்கு  அறிவித்தார்கள்;  அவன்:  நீங்கள்  துரோகம்பண்ணினீர்கள்;  இப்போதே  ஒரு  பெரிய  கல்லை  என்னிடத்தில்  உருட்டிக்கொண்டுவாருங்கள்.  (1சாமுவேல்  14:33)

appozhuthu:  ithoa,  iraththaththoadirukki’rathaip  pusikki’rathinaal  janangga'l  karththarukku  ealaatha  paavam  seygi’raarga'l  en’ru  savulukku  a’riviththaarga'l;  avan:  neengga'l  thuroagampa'n'nineerga'l;  ippoathea  oru  periya  kallai  ennidaththil  uruttikko'nduvaarungga'l.  (1saamuveal  14:33)

நீங்கள்  ஜனத்திற்குள்ளே  போய்,  இரத்தத்தோடிருக்கிறதைச்  சாப்பிடுகிறதினாலே,  கர்த்தருக்கு  ஏலாத  பாவம்  செய்யாதபடிக்கு,  அவரவர்  தங்கள்  மாட்டையும்  அவரவர்  தங்கள்  ஆட்டையும்  என்னிடத்தில்  கொண்டுவந்து,  இங்கே  அடித்து,  பின்பு  சாப்பிடவேண்டும்  என்று  அவர்களுக்குச்  சொல்லுங்கள்  என்று  கட்டளையிட்டான்;  ஆகையால்  ஜனங்கள்  எல்லாரும்  அவரவர்  தங்கள்  மாடுகளை  அன்று  இராத்திரி  தாங்களே  கொண்டுவந்து,  அங்கே  அடித்தார்கள்.  (1சாமுவேல்  14:34)

neengga'l  janaththi’rku'l'lea  poay,  iraththaththoadirukki’rathaich  saappidugi’rathinaalea,  karththarukku  ealaatha  paavam  seyyaathapadikku,  avaravar  thangga'l  maattaiyum  avaravar  thangga'l  aattaiyum  ennidaththil  ko'nduvanthu,  inggea  adiththu,  pinbu  saappidavea'ndum  en’ru  avarga'lukkuch  sollungga'l  en’ru  katta'laiyittaan;  aagaiyaal  janangga'l  ellaarum  avaravar  thangga'l  maaduga'lai  an’ru  iraaththiri  thaangga'lea  ko'nduvanthu,  anggea  adiththaarga'l.  (1saamuveal  14:34)

பின்பு  சவுல்  கர்த்தருக்கு  ஒரு  பலிபீடத்தைக்  கட்டினான்;  அது  அவன்  கர்த்தருக்குக்  கட்டின  முதலாவது  பலிபீடம்.  (1சாமுவேல்  14:35)

pinbu  savul  karththarukku  oru  balipeedaththaik  kattinaan;  athu  avan  karththarukkuk  kattina  muthalaavathu  balipeedam.  (1saamuveal  14:35)

அதற்குப்பின்பு  சவுல்:  நாம்  இந்த  இராத்திரியிலே  பெலிஸ்தரைத்  தொடர்ந்துபோய்,  விடியற்கால  வெளிச்சமாகுமட்டும்  அவர்களைக்  கொள்ளையிட்டு,  அவர்களில்  ஒருவரையும்  மீதியாக  வைக்காதிருப்போமாக  என்றான்.  அதற்கு  அவர்கள்:  உம்முடைய  கண்களுக்கு  நலமானபடியெல்லாம்  செய்யும்  என்றார்கள்.  ஆசாரியனோ:  நாம்  இங்கே  தேவசந்நிதியில்  சேரக்கடவோம்  என்றான்.  (1சாமுவேல்  14:36)

atha’rkuppinbu  savul:  naam  intha  iraaththiriyilea  pelistharaith  thodarnthupoay,  vidiya’rkaala  ve'lichchamaagumattum  avarga'laik  ko'l'laiyittu,  avarga'lil  oruvaraiyum  meethiyaaga  vaikkaathiruppoamaaga  en’raan.  atha’rku  avarga'l:  ummudaiya  ka'nga'lukku  nalamaanapadiyellaam  seyyum  en’raarga'l.  aasaariyanoa:  naam  inggea  theavasannithiyil  searakkadavoam  en’raan.  (1saamuveal  14:36)

அப்படியே:  பெலிஸ்தரைத்  தொடர்ந்துபோகலாமா?  அவர்களை  இஸ்ரவேலின்  கையில்  ஒப்புக்கொடுப்பீரா?  என்று  சவுல்  தேவனிடத்தில்  விசாரித்தான்;  அவர்  அந்த  நாளிலே  அவனுக்கு  மறுஉத்தரவு  அருளவில்லை.  (1சாமுவேல்  14:37)

appadiyea:  pelistharaith  thodarnthupoagalaamaa?  avarga'lai  isravealin  kaiyil  oppukkoduppeeraa?  en’ru  savul  theavanidaththil  visaariththaan;  avar  antha  naa'lilea  avanukku  ma’ruuththaravu  aru'lavillai.  (1saamuveal  14:37)

அப்பொழுது  சவுல்:  ஜனத்தின்  தலைவர்களே,  நீங்கள்  எல்லாரும்  இங்கே  சேர்ந்துவந்து,  இன்று  இந்தப்  பாவம்  எதினாலே  உண்டாயிற்று  என்று  பார்த்தறியுங்கள்.  (1சாமுவேல்  14:38)

appozhuthu  savul:  janaththin  thalaivarga'lea,  neengga'l  ellaarum  inggea  searnthuvanthu,  in’ru  inthap  paavam  ethinaalea  u'ndaayit’ru  en’ru  paarththa’riyungga'l.  (1saamuveal  14:38)

அது  என்  குமாரனாகிய  யோனத்தானிடத்தில்  காணப்பட்டாலும்,  அவன்  சாகவே  சாகவேண்டும்  என்று  இஸ்ரவேலை  ரட்சிக்கிற  கர்த்தருடைய  ஜீவனைக்கொண்டு  சொல்லுகிறேன்  என்றான்;  சகல  ஜனங்களுக்குள்ளும்  ஒருவனும்  அவனுக்குப்  பிரதியுத்தரம்  சொல்லவில்லை.  (1சாமுவேல்  14:39)

athu  en  kumaaranaagiya  yoanaththaanidaththil  kaa'nappattaalum,  avan  saagavea  saagavea'ndum  en’ru  isravealai  radchikki’ra  karththarudaiya  jeevanaikko'ndu  sollugi’rean  en’raan;  sagala  janangga'lukku'l'lum  oruvanum  avanukkup  pirathiyuththaram  sollavillai.  (1saamuveal  14:39)

அதற்குப்பின்  அவன்  இஸ்ரவேலர்  எல்லாரையும்  நோக்கி:  நீங்கள்  அந்தப்பக்கத்திலே  இருங்கள்;  நானும்  என்  குமாரனாகிய  யோனத்தானும்  இந்தப்பக்கத்தில்  இருப்போம்  என்றான்;  ஜனங்கள்  சவுலைப்  பார்த்து:  உம்முடைய  கண்களுக்கு  நலமானபடி  செய்யும்  என்றார்கள்.  (1சாமுவேல்  14:40)

atha’rkuppin  avan  isravealar  ellaaraiyum  noakki:  neengga'l  anthappakkaththilea  irungga'l;  naanum  en  kumaaranaagiya  yoanaththaanum  inthappakkaththil  iruppoam  en’raan;  janangga'l  savulaip  paarththu:  ummudaiya  ka'nga'lukku  nalamaanapadi  seyyum  en’raarga'l.  (1saamuveal  14:40)

அப்பொழுது  சவுல்  இஸ்ரவேலின்  தேவனாகிய  கர்த்தரை  நோக்கி:  நிதானமாய்க்  கட்டளையிட்டு  யதார்த்தத்தை  விளங்கப்பண்ணும்  என்றான்;  அப்பொழுது  யோனத்தான்மேலும்  சவுலின்மேலும்  சீட்டு  விழுந்தது,  ஜனங்களோ  தப்பினார்கள்.  (1சாமுவேல்  14:41)

appozhuthu  savul  isravealin  theavanaagiya  karththarai  noakki:  nithaanamaayk  katta'laiyittu  yathaarththaththai  vi'langgappa'n'num  en’raan;  appozhuthu  yoanaththaanmealum  savulinmealum  seettu  vizhunthathu,  janangga'loa  thappinaarga'l.  (1saamuveal  14:41)

எனக்கும்  என்  குமாரனாகிய  யோனத்தானுக்கும்  சீட்டுப்போடுங்கள்  என்று  சவுல்  சொன்னபோது,  யோனத்தான்மேல்  சீட்டு  விழுந்தது.  (1சாமுவேல்  14:42)

enakkum  en  kumaaranaagiya  yoanaththaanukkum  seettuppoadungga'l  en’ru  savul  sonnapoathu,  yoanaththaanmeal  seettu  vizhunthathu.  (1saamuveal  14:42)

அப்பொழுது  சவுல்  யோனத்தானைப்  பார்த்து:  நீ  செய்தது  என்ன?  எனக்குச்  சொல்  என்று  கேட்டான்.  அதற்கு  யோனத்தான்:  என்  கையில்  இருக்கிற  கோலின்  நுனியினாலே  கொஞ்சம்  தேன்  எடுத்து  ருசிபார்த்தேன்;  அதற்காக  நான்  சாகவேண்டும்  என்றான்.  (1சாமுவேல்  14:43)

appozhuthu  savul  yoanaththaanaip  paarththu:  nee  seythathu  enna?  enakkuch  sol  en’ru  keattaan.  atha’rku  yoanaththaan:  en  kaiyil  irukki’ra  koalin  nuniyinaalea  kogncham  thean  eduththu  rusipaarththean;  atha’rkaaga  naan  saagavea'ndum  en’raan.  (1saamuveal  14:43)

அப்பொழுது  சவுல்:  யோனத்தானே,  நீ  சாகத்தான்வேண்டும்;  இல்லாவிட்டால்  தேவன்  எனக்கு  அதற்குச்  சரியாகவும்  அதற்கு  அதிகமாகவும்  செய்யக்கடவர்  என்றான்.  (1சாமுவேல்  14:44)

appozhuthu  savul:  yoanaththaanea,  nee  saagaththaanvea'ndum;  illaavittaal  theavan  enakku  atha’rkuch  sariyaagavum  atha’rku  athigamaagavum  seyyakkadavar  en’raan.  (1saamuveal  14:44)

ஜனங்களோ  சவுலை  நோக்கி:  இஸ்ரவேலிலே  இந்தப்  பெரிய  இரட்சிப்பைச்  செய்த  யோனத்தான்  கொலைசெய்யப்படலாமா?  அது  கூடாது;  அவன்  தலையில்  இருக்கிற  ஒரு  மயிரும்  தரையிலே  விழப்போகிறதில்லை  என்று  கர்த்தருடைய  ஜீவனைக்கொண்டு  ஆணையிட்டுச்  சொல்லுகிறோம்;  தேவன்  துணை  நிற்க  அவன்  இன்று  காரியத்தை  நடப்பித்தான்  என்றார்கள்;  அப்படியே  யோனத்தான்  சாகாதபடிக்கு,  ஜனங்கள்  அவனைத்  தப்புவித்தார்கள்.  (1சாமுவேல்  14:45)

janangga'loa  savulai  noakki:  isravealilea  inthap  periya  iradchippaich  seytha  yoanaththaan  kolaiseyyappadalaamaa?  athu  koodaathu;  avan  thalaiyil  irukki’ra  oru  mayirum  tharaiyilea  vizhappoagi’rathillai  en’ru  karththarudaiya  jeevanaikko'ndu  aa'naiyittuch  sollugi’roam;  theavan  thu'nai  ni’rka  avan  in’ru  kaariyaththai  nadappiththaan  en’raarga'l;  appadiyea  yoanaththaan  saagaathapadikku,  janangga'l  avanaith  thappuviththaarga'l.  (1saamuveal  14:45)

சவுல்  பெலிஸ்தரைத்  தொடராமல்  திரும்பிவிட்டான்;  பெலிஸ்தரும்  தங்கள்  ஸ்தலத்திற்குப்  போய்விட்டார்கள்.  (1சாமுவேல்  14:46)

savul  pelistharaith  thodaraamal  thirumbivittaan;  pelistharum  thangga'l  sthalaththi’rkup  poayvittaarga'l.  (1saamuveal  14:46)

இப்படிச்  சவுல்  இஸ்ரவேலை  ஆளுகிற  ராஜ்யபாரத்தைப்  பெற்றுக்கொண்டு,  சுற்றிலும்  இருக்கிற  தன்னுடைய  எல்லாச்  சத்துருக்களுமாகிய  மோவாபியருக்கும்,  அம்மோன்  புத்திரருக்கும்,  ஏதோமியருக்கும்,  சோபாவின்  ராஜாக்களுக்கும்,  பெலிஸ்தருக்கும்  விரோதமாக  யுத்தம்பண்ணி,  எவர்கள்மேல்  படையெடுத்தானோ,  அவர்களையெல்லாம்  அடக்கினான்.  (1சாமுவேல்  14:47)

ippadich  savul  isravealai  aa'lugi’ra  raajyabaaraththaip  pet’rukko'ndu,  sut’rilum  irukki’ra  thannudaiya  ellaach  saththurukka'lumaagiya  moavaabiyarukkum,  ammoan  puththirarukkum,  eathoamiyarukkum,  soabaavin  raajaakka'lukkum,  pelistharukkum  viroathamaaga  yuththampa'n'ni,  evarga'lmeal  padaiyeduththaanoa,  avarga'laiyellaam  adakkinaan.  (1saamuveal  14:47)

அவன்  பலத்து,  அமலேக்கியரை  முறிய  அடித்து,  இஸ்ரவேலரைக்  கொள்ளையிடுகிற  யாவர்  கைக்கும்  அவர்களை  நீங்கலாக்கி  இரட்சித்தான்.  (1சாமுவேல்  14:48)

avan  balaththu,  amaleakkiyarai  mu’riya  adiththu,  isravealaraik  ko'l'laiyidugi’ra  yaavar  kaikkum  avarga'lai  neenggalaakki  iradchiththaan.  (1saamuveal  14:48)

சவுலுக்கு  இருந்த  குமாரர்:  யோனத்தான்,  இஸ்வி,  மல்கிசூவா  என்பவர்கள்;  அவனுடைய  இரண்டு  குமாரத்திகளில்,  மூத்தவள்  பேர்  மேரப்,  இளையவள்  பேர்  மீகாள்.  (1சாமுவேல்  14:49)

savulukku  iruntha  kumaarar:  yoanaththaan,  isvi,  malkisoovaa  enbavarga'l;  avanudaiya  ira'ndu  kumaaraththiga'lil,  mooththava'l  pear  mearab,  i'laiyava'l  pear  meekaa'l.  (1saamuveal  14:49)

சவுலுடைய  மனைவியின்  பேர்  அகினோவாம்,  அவள்  அகிமாசின்  குமாரத்தி;  அவனுடைய  சேனாபதியின்  பேர்  அப்னேர்,  அவன்  சவுலுடைய  சிறியதகப்பனாகிய  நேரின்  குமாரன்.  (1சாமுவேல்  14:50)

savuludaiya  manaiviyin  pear  aginoavaam,  ava'l  agimaasin  kumaaraththi;  avanudaiya  seanaabathiyin  pear  abnear,  avan  savuludaiya  si’riyathagappanaagiya  nearin  kumaaran.  (1saamuveal  14:50)

கீஸ்  சவுலின்  தகப்பன்;  அப்னேரின்  தகப்பனாகிய  நேர்  ஆபியேலின்  குமாரன்.  (1சாமுவேல்  14:51)

kees  savulin  thagappan;  abnearin  thagappanaagiya  near  aabiyealin  kumaaran.  (1saamuveal  14:51)

சவுல்  இருந்த  நாளெல்லாம்  பெலிஸ்தரின்மேல்  கடினமான  யுத்தம்  நடந்தது;  சவுல்  ஒரு  பராக்கிரமசாலியையாகிலும்  ஒரு  பலசாலியையாகிலும்  காணும்போது,  அவர்கள்  எல்லாரையும்  தன்னிடமாகச்  சேர்த்துக்கொள்ளுவான்.  (1சாமுவேல்  14:52)

savul  iruntha  naa'lellaam  pelistharinmeal  kadinamaana  yuththam  nadanthathu;  savul  oru  baraakkiramasaaliyaiyaagilum  oru  balasaaliyaiyaagilum  kaa'numpoathu,  avarga'l  ellaaraiyum  thannidamaagach  searththukko'l'luvaan.  (1saamuveal  14:52)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!