Monday, August 22, 2016

1 Saamuveal 13 | 1 சாமுவேல் 13 | 1 Samuel 13

சவுல்  ராஜ்யபாரம்பண்ணி,  ஒரு  வருஷமாயிற்று;  அவன்  இஸ்ரவேலை  இரண்டாம்  வருஷம்  அரசாண்டபோது,  (1சாமுவேல்  13:1)

savul  raajyabaarampa'n'ni,  oru  varushamaayit’ru;  avan  isravealai  ira'ndaam  varusham  arasaa'ndapoathu,  (1saamuveal  13:1)

இஸ்ரவேலில்  மூவாயிரம்பேரைத்  தனக்குத்  தெரிந்துகொண்டான்;  அவர்களில்  இரண்டாயிரம்பேர்  சவுலோடேகூட  மிக்மாசிலும்  பெத்தேல்  மலையிலும்,  ஆயிரம்பேர்  யோனத்தானோடேகூடப்  பென்யமீன்  நாட்டிலுள்ள  கிபியாவிலும்  இருந்தார்கள்;  மற்ற  ஜனங்களை  அவரவர்  கூடாரங்களுக்கு  அனுப்பிவிட்டான்.  (1சாமுவேல்  13:2)

isravealil  moovaayirampearaith  thanakkuth  therinthuko'ndaan;  avarga'lil  ira'ndaayirampear  savuloadeakooda  mikmaasilum  beththeal  malaiyilum,  aayirampear  yoanaththaanoadeakoodap  benyameen  naattilu'l'la  kibiyaavilum  irunthaarga'l;  mat’ra  janangga'lai  avaravar  koodaarangga'lukku  anuppivittaan.  (1saamuveal  13:2)

யோனத்தான்  கேபாவிலே  தாணையம்  இருந்த  பெலிஸ்தரை  முறிய  அடித்தான்;  பெலிஸ்தர்  அதைக்  கேள்விப்பட்டார்கள்;  ஆகையினால்  இதை  எபிரெயர்  கேட்கக்கடவர்கள்  என்று  சவுல்  தேசமெங்கும்  எக்காளம்  ஊதுவித்தான்.  (1சாமுவேல்  13:3)

yoanaththaan  keabaavilea  thaa'naiyam  iruntha  pelistharai  mu’riya  adiththaan;  pelisthar  athaik  kea'lvippattaarga'l;  aagaiyinaal  ithai  ebireyar  keadkakkadavarga'l  en’ru  savul  theasamenggum  ekkaa'lam  oothuviththaan.  (1saamuveal  13:3)

தாணையம்  இருந்த  பெலிஸ்தரைச்  சவுல்  முறிய  அடித்தான்  என்றும்,  இஸ்ரவேலர்  பெலிஸ்தருக்கு  அருவருப்பானார்கள்  என்றும்,  இஸ்ரவேலெல்லாம்  கேள்விப்பட்டபோது,  ஜனங்கள்  சவுலுக்குப்  பின்செல்லும்படி  கில்காலுக்கு  வரவழைக்கப்பட்டார்கள்.  (1சாமுவேல்  13:4)

thaa'naiyam  iruntha  pelistharaich  savul  mu’riya  adiththaan  en’rum,  isravealar  pelistharukku  aruvaruppaanaarga'l  en’rum,  isravealellaam  kea'lvippattapoathu,  janangga'l  savulukkup  pinsellumpadi  kilgaalukku  varavazhaikkappattaarga'l.  (1saamuveal  13:4)

பெலிஸ்தர்  இஸ்ரவேலோடு  யுத்தம்பண்ணும்படி  முப்பதினாயிரம்  இரதங்களோடும்,  ஆறாயிரம்  குதிரைவீரரோடும்,  கடற்கரை  மணலத்தனை  ஜனங்களோடும்  கூடிக்கொண்டுவந்து,  பெத்தாவேலுக்குக்  கிழக்கான  மிக்மாசிலே  பாளயமிறங்கினார்கள்.  (1சாமுவேல்  13:5)

pelisthar  isravealoadu  yuththampa'n'numpadi  muppathinaayiram  irathangga'loadum,  aa’raayiram  kuthiraiveeraroadum,  kada’rkarai  ma'nalaththanai  janangga'loadum  koodikko'nduvanthu,  beththaavealukkuk  kizhakkaana  mikmaasilea  paa'layami’rangginaarga'l.  (1saamuveal  13:5)

அப்பொழுது  இஸ்ரவேலர்  தங்களுக்கு  உண்டான  இக்கட்டைக்  கண்டபோது,  ஜனங்கள்  தங்களுக்கு  உண்டான  நெருக்கத்தினாலே  கெபிகளிலும்,  முட்காடுகளிலும்,  கன்மலைகளிலும்,  துருக்கங்களிலும்,  குகைகளிலும்  ஒளித்துக்கொண்டார்கள்.  (1சாமுவேல்  13:6)

appozhuthu  isravealar  thangga'lukku  u'ndaana  ikkattaik  ka'ndapoathu,  janangga'l  thangga'lukku  u'ndaana  nerukkaththinaalea  kebiga'lilum,  mudkaaduga'lilum,  kanmalaiga'lilum,  thurukkangga'lilum,  kugaiga'lilum  o'liththukko'ndaarga'l.  (1saamuveal  13:6)

எபிரெயரில்  சிலர்  யோர்தானையும்  கடந்து,  காத்  நாட்டிற்கும்  கீலேயாத்  தேசத்திற்கும்  போனார்கள்;  சவுலோ  இன்னும்  கில்காலில்  இருந்தான்;  சகல  ஜனங்களும்  பயந்துகொண்டு  அவனுக்குப்  பின்சென்றார்கள்.  (1சாமுவேல்  13:7)

ebireyaril  silar  yoarthaanaiyum  kadanthu,  kaath  naatti’rkum  keeleayaath  theasaththi’rkum  poanaarga'l;  savuloa  innum  kilgaalil  irunthaan;  sagala  janangga'lum  bayanthuko'ndu  avanukkup  pinsen’raarga'l.  (1saamuveal  13:7)

அவன்  தனக்குச்  சாமுவேல்  குறித்த  காலத்தின்படி  ஏழுநாள்மட்டும்  காத்திருந்தான்;  சாமுவேல்  கில்காலுக்கு  வரவில்லை,  ஜனங்கள்  அவனை  விட்டுச்  சிதறிப்போனார்கள்.  (1சாமுவேல்  13:8)

avan  thanakkuch  saamuveal  ku’riththa  kaalaththinpadi  eazhunaa'lmattum  kaaththirunthaan;  saamuveal  kilgaalukku  varavillai,  janangga'l  avanai  vittuch  sitha’rippoanaarga'l.  (1saamuveal  13:8)

அப்பொழுது  சவுல்:  சர்வாங்க  தகனபலியையும்  சமாதானபலிகளையும்  என்னிடத்தில்  கொண்டுவாருங்கள்  என்று  சொல்லி,  சர்வாங்க  தகனபலியைச்  செலுத்தினான்.  (1சாமுவேல்  13:9)

appozhuthu  savul:  sarvaangga  thaganabaliyaiyum  samaathaanabaliga'laiyum  ennidaththil  ko'nduvaarungga'l  en’ru  solli,  sarvaangga  thaganabaliyaich  seluththinaan.  (1saamuveal  13:9)

அவன்  சர்வாங்க  தகனபலியிட்டு  முடிகிறபோது,  இதோ,  சாமுவேல்  வந்தான்;  சவுல்  அவனைச்  சந்தித்து  வந்தனஞ்செய்ய  அவனுக்கு  எதிர்கொண்டுபோனான்.  (1சாமுவேல்  13:10)

avan  sarvaangga  thaganabaliyittu  mudigi’rapoathu,  ithoa,  saamuveal  vanthaan;  savul  avanaich  santhiththu  vanthanagnseyya  avanukku  ethirko'ndupoanaan.  (1saamuveal  13:10)

நீர்  செய்தது  என்ன  என்று  சாமுவேல்  கேட்டதற்கு,  சவுல்:  ஜனங்கள்  என்னைவிட்டுச்  சிதறிப்போகிறதையும்,  குறித்த  நாட்களின்  திட்டத்திலே  நீர்  வராததையும்,  பெலிஸ்தர்  மிக்மாசிலே  கூடிவந்திருக்கிறதையும்,  நான்  கண்டபடியினாலே,  (1சாமுவேல்  13:11)

neer  seythathu  enna  en’ru  saamuveal  keattatha’rku,  savul:  janangga'l  ennaivittuch  sitha’rippoagi’rathaiyum,  ku’riththa  naadka'lin  thittaththilea  neer  varaathathaiyum,  pelisthar  mikmaasilea  koodivanthirukki’rathaiyum,  naan  ka'ndapadiyinaalea,  (1saamuveal  13:11)

கில்காலில்  பெலிஸ்தர்  எனக்கு  விரோதமாய்  வந்துவிடுவார்கள்  என்றும்,  நான்  இன்னும்  கர்த்தருடைய  சமுகத்தை  நோக்கி  விண்ணப்பம்பண்ணவில்லை  என்றும்,  எண்ணித்  துணிந்து,  சர்வாங்க  தகனபலியைச்  செலுத்தினேன்  என்றான்.  (1சாமுவேல்  13:12)

kilgaalil  pelisthar  enakku  viroathamaay  vanthuviduvaarga'l  en’rum,  naan  innum  karththarudaiya  samugaththai  noakki  vi'n'nappampa'n'navillai  en’rum,  e'n'nith  thu'ninthu,  sarvaangga  thaganabaliyaich  seluththinean  en’raan.  (1saamuveal  13:12)

சாமுவேல்  சவுலைப்  பார்த்து:  புத்தியீனமாய்ச்  செய்தீர்;  உம்முடைய  தேவனாகிய  கர்த்தர்  உமக்கு  விதித்த  கட்டளையைக்  கைக்கொள்ளாமற்போனீர்;  மற்றப்படி  கர்த்தர்  இஸ்ரவேலின்மேல்  உம்முடைய  ராஜ்யபாரத்தை  என்றைக்கும்  ஸ்திரப்படுத்துவார்.  (1சாமுவேல்  13:13)

saamuveal  savulaip  paarththu:  buththiyeenamaaych  seytheer;  ummudaiya  theavanaagiya  karththar  umakku  vithiththa  katta'laiyaik  kaikko'l'laama’rpoaneer;  mat’rappadi  karththar  isravealinmeal  ummudaiya  raajyabaaraththai  en’raikkum  sthirappaduththuvaar.  (1saamuveal  13:13)

இப்போதோ  உம்முடைய  ராஜ்யபாரம்  நிலைநிற்காது;  கர்த்தர்  தம்முடைய  இருதயத்திற்கு  ஏற்ற  ஒரு  மனுஷனைத்  தமக்குத்  தேடி,  அவனைக்  கர்த்தர்  தம்முடைய  ஜனங்கள்மேல்  தலைவனாயிருக்கக்  கட்டளையிட்டார்;  கர்த்தர்  உமக்கு  விதித்த  கட்டளையை  நீர்  கைக்கொள்ளவில்லையே  என்று  சொன்னான்.  (1சாமுவேல்  13:14)

ippoathoa  ummudaiya  raajyabaaram  nilaini’rkaathu;  karththar  thammudaiya  iruthayaththi’rku  eat’ra  oru  manushanaith  thamakkuth  theadi,  avanaik  karththar  thammudaiya  janangga'lmeal  thalaivanaayirukkak  katta'laiyittaar;  karththar  umakku  vithiththa  katta'laiyai  neer  kaikko'l'lavillaiyea  en’ru  sonnaan.  (1saamuveal  13:14)

சாமுவேல்  எழுந்திருந்து,  கில்காலை  விட்டு,  பென்யமீன்  நாட்டிலுள்ள  கிபியாவுக்குப்  போனான்;  சவுல்  தன்னோடேகூட  இருக்கிற  ஜனத்தைத்  தொகைபார்க்கிறபோது,  ஏறக்குறைய  அறுநூறுபேர்  இருந்தார்கள்.  (1சாமுவேல்  13:15)

saamuveal  ezhunthirunthu,  kilgaalai  vittu,  benyameen  naattilu'l'la  kibiyaavukkup  poanaan;  savul  thannoadeakooda  irukki’ra  janaththaith  thogaipaarkki’rapoathu,  ea’rakku’raiya  a’runoo’rupear  irunthaarga'l.  (1saamuveal  13:15)

சவுலும்  அவன்  குமாரனாகிய  யோனத்தானும்  அவர்களோடேகூட  இருக்கிற  ஜனங்களும்  பென்யமீன்  நாட்டிலுள்ள  கிபியாவில்  இருந்துவிட்டார்கள்;  பெலிஸ்தரோ  மிக்மாசிலே  பாளயமிறங்கியிருந்தார்கள்.  (1சாமுவேல்  13:16)

savulum  avan  kumaaranaagiya  yoanaththaanum  avarga'loadeakooda  irukki’ra  janangga'lum  benyameen  naattilu'l'la  kibiyaavil  irunthuvittaarga'l;  pelistharoa  mikmaasilea  paa'layami’ranggiyirunthaarga'l.  (1saamuveal  13:16)

கொள்ளைக்காரர்  பெலிஸ்தரின்  பாளயத்திலிருந்து  மூன்று  படையாய்ப்  புறப்பட்டுவந்தார்கள்;  ஒரு  படை  ஒப்ராவழியாய்ச்  சூவால்  நாட்டிற்கு  நேராகப்  போயிற்று.  (1சாமுவேல்  13:17)

ko'l'laikkaarar  pelistharin  paa'layaththilirunthu  moon’ru  padaiyaayp  pu’rappattuvanthaarga'l;  oru  padai  opraavazhiyaaych  soovaal  naatti’rku  nearaagap  poayit’ru.  (1saamuveal  13:17)

வேறொரு  படை  பெத்தொரோன்  வழியாய்ப்  போயிற்று;  வேறொருபடை  வனாந்தரத்தில்  இருக்கிற  செபோயீமின்  பள்ளத்தாக்குக்கு  எதிரான  எல்லைவழியாய்ப்  போயிற்று.  (1சாமுவேல்  13:18)

vea’roru  padai  beththoroan  vazhiyaayp  poayit’ru;  vea’rorupadai  vanaantharaththil  irukki’ra  seboayeemin  pa'l'laththaakkukku  ethiraana  ellaivazhiyaayp  poayit’ru.  (1saamuveal  13:18)

எபிரெயர்  பட்டயங்களையாகிலும்  ஈட்டிகளையாகிலும்  உண்டுபண்ணாதபடிக்குப்  பார்த்துக்கொள்ளவேண்டும்  என்று  பெலிஸ்தர்  சொல்லியிருந்தபடியால்,  இஸ்ரவேல்  தேசத்தில்  எங்கும்  ஒரு  கொல்லன்  அகப்படவில்லை.  (1சாமுவேல்  13:19)

ebireyar  pattayangga'laiyaagilum  eettiga'laiyaagilum  u'ndupa'n'naathapadikkup  paarththukko'l'lavea'ndum  en’ru  pelisthar  solliyirunthapadiyaal,  israveal  theasaththil  enggum  oru  kollan  agappadavillai.  (1saamuveal  13:19)

இஸ்ரவேலர்  யாவரும்  அவரவர்  தங்கள்  கொழுவிரும்புகளையும்,  தங்கள்  மண்வெட்டிகளையும்,  தங்கள்  கோடரிகளையும்,  தங்கள்  கடப்பாரைகளையும்  தீட்டிக்  கூர்மையாக்குகிறதற்கு,  பெலிஸ்தரிடத்துக்குப்  போகவேண்டியதாயிருந்தது.  (1சாமுவேல்  13:20)

isravealar  yaavarum  avaravar  thangga'l  kozhuvirumbuga'laiyum,  thangga'l  ma'nvettiga'laiyum,  thangga'l  koadariga'laiyum,  thangga'l  kadappaaraiga'laiyum  theettik  koormaiyaakkugi’ratha’rku,  pelistharidaththukkup  poagavea'ndiyathaayirunthathu.  (1saamuveal  13:20)

கடப்பாரைகளையும்,  மண்வெட்டிகளையும்,  முக்கூருள்ள  ஆயுதங்களையும்,  கோடரிகளையும்,  தாற்றுக்கோல்களையும்  கூர்மையாக்குகிறதற்கு  அரங்கள்  மாத்திரம்  அவர்களிடத்தில்  இருந்தது.  (1சாமுவேல்  13:21)

kadappaaraiga'laiyum,  ma'nvettiga'laiyum,  mukkooru'l'la  aayuthangga'laiyum,  koadariga'laiyum,  thaat’rukkoalga'laiyum  koormaiyaakkugi’ratha’rku  arangga'l  maaththiram  avarga'lidaththil  irunthathu.  (1saamuveal  13:21)

யுத்தநாள்  வந்தபோது,  சவுலுக்கும்  அவன்  குமாரனாகிய  யோனத்தானுக்குமேயன்றி,  சவுலோடும்  யோனத்தானோடும்  இருக்கிற  ஜனங்களில்  ஒருவர்  கையிலும்  பட்டயமும்  ஈட்டியும்  இல்லாதிருந்தது.  (1சாமுவேல்  13:22)

yuththanaa'l  vanthapoathu,  savulukkum  avan  kumaaranaagiya  yoanaththaanukkumeayan’ri,  savuloadum  yoanaththaanoadum  irukki’ra  janangga'lil  oruvar  kaiyilum  pattayamum  eettiyum  illaathirunthathu.  (1saamuveal  13:22)

பெலிஸ்தரின்  பாளயம்  மிக்மாசிலிருந்து  போகிற  வழிமட்டும்  பரம்பியிருந்தது.  (1சாமுவேல்  13:23)

pelistharin  paa'layam  mikmaasilirunthu  poagi’ra  vazhimattum  parambiyirunthathu.  (1saamuveal  13:23)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!