Monday, August 22, 2016

1 Saamuveal 12 | 1 சாமுவேல் 12 | 1 Samuel 12

அப்பொழுது  சாமுவேல்  இஸ்ரவேலர்  அனைவரையும்  நோக்கி:  இதோ,  நீங்கள்  எனக்குச்  சொன்னபடியெல்லாம்  உங்கள்  சொற்கேட்டு  உங்களுக்கு  ஒரு  ராஜாவை  ஏற்படுத்தினேன்.  (1சாமுவேல்  12:1)

appozhuthu  saamuveal  isravealar  anaivaraiyum  noakki:  ithoa,  neengga'l  enakkuch  sonnapadiyellaam  ungga'l  so’rkeattu  ungga'lukku  oru  raajaavai  ea’rpaduththinean.  (1saamuveal  12:1)

இப்போதும்  இதோ,  ராஜாவானவர்  உங்களுக்கு  முன்பாகச்  சஞ்சரித்துவருகிறார்;  நானோ  கிழவனும்  நரைத்தவனுமானேன்;  என்  குமாரர்  உங்களோடிருப்பார்கள்;  நான்  என்  சிறுவயதுமுதல்  இந்நாள்வரைக்கும்  உங்களுக்கு  முன்பாகச்  சஞ்சரித்துவந்தேன்.  (1சாமுவேல்  12:2)

ippoathum  ithoa,  raajaavaanavar  ungga'lukku  munbaagach  sagnchariththuvarugi’raar;  naanoa  kizhavanum  naraiththavanumaanean;  en  kumaarar  ungga'loadiruppaarga'l;  naan  en  si’ruvayathumuthal  innaa'lvaraikkum  ungga'lukku  munbaagach  sagnchariththuvanthean.  (1saamuveal  12:2)

இதோ,  இருக்கிறேன்;  கர்த்தரின்  சந்நிதியிலும்  அவர்  அபிஷேகம்பண்ணி  வைத்தவருக்கு  முன்பாகவும்  என்னைக்குறித்துச்  சாட்சி  சொல்லுங்கள்;  நான்  யாருடைய  எருதை  எடுத்துக்கொண்டேன்?  யாருடைய  கழுதையை  எடுத்துக்கொண்டேன்?  யாருக்கு  அநியாயஞ்செய்தேன்?  யாருக்கு  இடுக்கண்செய்தேன்?  யார்  கையில்  பரிதானம்  வாங்கிக்கொண்டு  கண்சாடையாயிருந்தேன்?  சொல்லுங்கள்;  அப்படியுண்டானால்  அதை  உங்களுக்குத்  திரும்பக்  கொடுப்பேன்  என்றான்.  (1சாமுவேல்  12:3)

ithoa,  irukki’rean;  karththarin  sannithiyilum  avar  abisheagampa'n'ni  vaiththavarukku  munbaagavum  ennaikku’riththuch  saadchi  sollungga'l;  naan  yaarudaiya  eruthai  eduththukko'ndean?  yaarudaiya  kazhuthaiyai  eduththukko'ndean?  yaarukku  aniyaayagnseythean?  yaarukku  idukka'nseythean?  yaar  kaiyil  parithaanam  vaanggikko'ndu  ka'nsaadaiyaayirunthean?  sollungga'l;  appadiyu'ndaanaal  athai  ungga'lukkuth  thirumbak  koduppean  en’raan.  (1saamuveal  12:3)

அதற்கு  அவர்கள்:  நீர்  எங்களுக்கு  அநியாயஞ்  செய்யவும்  இல்லை;  எங்களுக்கு  இடுக்கண்  செய்யவும்  இல்லை;  ஒருவர்  கையிலும்  ஒன்றும்  வாங்கவும்  இல்லை  என்றார்கள்.  (1சாமுவேல்  12:4)

atha’rku  avarga'l:  neer  engga'lukku  aniyaayagn  seyyavum  illai;  engga'lukku  idukka'n  seyyavum  illai;  oruvar  kaiyilum  on’rum  vaanggavum  illai  en’raarga'l.  (1saamuveal  12:4)

அதற்கு  அவன்:  நீங்கள்  என்  கையில்  ஒன்றும்  கண்டுபிடிக்கவில்லை  என்பதற்குக்  கர்த்தர்  உங்களுக்கு  எதிராகச்  சாட்சியாயிருக்கிறார்;  அவர்  அபிஷேகம்பண்ணினவரும்  இன்று  அதற்குச்  சாட்சி  என்றான்;  அதற்கு  அவர்கள்:  அவர்  சாட்சிதான்  என்றார்கள்.  (1சாமுவேல்  12:5)

atha’rku  avan:  neengga'l  en  kaiyil  on’rum  ka'ndupidikkavillai  enbatha’rkuk  karththar  ungga'lukku  ethiraagach  saadchiyaayirukki’raar;  avar  abisheagampa'n'ninavarum  in’ru  atha’rkuch  saadchi  en’raan;  atha’rku  avarga'l:  avar  saadchithaan  en’raarga'l.  (1saamuveal  12:5)

அப்புறம்  சாமுவேல்  ஜனங்களை  நோக்கி:  மோசேயையும்  ஆரோனையும்  ஏற்படுத்தினவரும்,  உங்கள்  பிதாக்களை  எகிப்துதேசத்திலிருந்து  புறப்படப்பண்ணினவரும்  கர்த்தரே.  (1சாமுவேல்  12:6)

appu’ram  saamuveal  janangga'lai  noakki:  moaseayaiyum  aaroanaiyum  ea’rpaduththinavarum,  ungga'l  pithaakka'lai  egipthutheasaththilirunthu  pu’rappadappa'n'ninavarum  karththarea.  (1saamuveal  12:6)

இப்போதும்  கர்த்தர்  உங்களுக்கும்  உங்கள்  பிதாக்களுக்கும்  செய்துவந்த  எல்லா  நீதியான  கிரியைகளைக்குறித்தும்,  நான்  கர்த்தருடைய  சந்நிதியில்  உங்களோடே  நியாயம்  பேசும்படிக்கு  நீங்கள்  நில்லுங்கள்.  (1சாமுவேல்  12:7)

ippoathum  karththar  ungga'lukkum  ungga'l  pithaakka'lukkum  seythuvantha  ellaa  neethiyaana  kiriyaiga'laikku’riththum,  naan  karththarudaiya  sannithiyil  ungga'loadea  niyaayam  peasumpadikku  neengga'l  nillungga'l.  (1saamuveal  12:7)

யாக்கோபு  எகிப்திலே  போயிருக்கும்போது,  உங்கள்  பிதாக்கள்  கர்த்தரை  நோக்கி  முறையிட்டார்கள்,  அப்பொழுது  கர்த்தர்  மோசேயையும்  ஆரோனையும்  அனுப்பினார்;  அவர்கள்  உங்கள்  பிதாக்களை  எகிப்திலிருந்து  அழைத்துவந்து,  அவர்களை  இந்த  ஸ்தலத்திலே  குடியிருக்கப்பண்ணினார்கள்.  (1சாமுவேல்  12:8)

yaakkoabu  egipthilea  poayirukkumpoathu,  ungga'l  pithaakka'l  karththarai  noakki  mu’raiyittaarga'l,  appozhuthu  karththar  moaseayaiyum  aaroanaiyum  anuppinaar;  avarga'l  ungga'l  pithaakka'lai  egipthilirunthu  azhaiththuvanthu,  avarga'lai  intha  sthalaththilea  kudiyirukkappa'n'ninaarga'l.  (1saamuveal  12:8)

அவர்கள்  தங்கள்  தேவனாகிய  கர்த்தரை  மறந்துபோகிறபோது,  அவர்  அவர்களை  ஆத்சோரின்  சேனாபதியாகிய  சிசெராவின்  கையிலும்,  பெலிஸ்தரின்  கையிலும்,  மோவாபிய  ராஜாவின்  கையிலும்  விற்றுப்போட்டார்;  இவர்கள்  அவர்களுக்கு  விரோதமாக  யுத்தம்பண்ணினார்கள்.  (1சாமுவேல்  12:9)

avarga'l  thangga'l  theavanaagiya  karththarai  ma’ranthupoagi’rapoathu,  avar  avarga'lai  aathsoarin  seanaabathiyaagiya  siseraavin  kaiyilum,  pelistharin  kaiyilum,  moavaabiya  raajaavin  kaiyilum  vit’ruppoattaar;  ivarga'l  avarga'lukku  viroathamaaga  yuththampa'n'ninaarga'l.  (1saamuveal  12:9)

ஆகையால்  அவர்கள்  கர்த்தரை  நோக்கி  முறையிட்டு:  நாங்கள்  கர்த்தரை  விட்டுப்  பாகால்களையும்  அஸ்தரோத்தையும்  சேவித்ததினாலே,  பாவஞ்செய்தோம்;  இப்போதும்  எங்கள்  சத்துருக்களின்  கைக்கு  எங்களை  நீங்கலாக்கி  ரட்சியும்;  இனி  உம்மைச்  சேவிப்போம்  என்றார்கள்.  (1சாமுவேல்  12:10)

aagaiyaal  avarga'l  karththarai  noakki  mu’raiyittu:  naangga'l  karththarai  vittup  baagaalga'laiyum  astharoaththaiyum  seaviththathinaalea,  paavagnseythoam;  ippoathum  engga'l  saththurukka'lin  kaikku  engga'lai  neenggalaakki  radchiyum;  ini  ummaich  seavippoam  en’raarga'l.  (1saamuveal  12:10)

அப்பொழுது  கர்த்தர்  எருபாகாலையும்  பேதானையும்  யெப்தாவையும்  சாமுவேலையும்  அனுப்பி,  நீங்கள்  பயமில்லாமல்  குடியிருக்கும்படிக்குச்  சுற்றிலும்  இருந்த  உங்கள்  சத்துருக்களின்  கைக்கும்  உங்களை  நீங்கலாக்கி  ரட்சித்தார்.  (1சாமுவேல்  12:11)

appozhuthu  karththar  erubaagaalaiyum  beathaanaiyum  yepthaavaiyum  saamuvealaiyum  anuppi,  neengga'l  bayamillaamal  kudiyirukkumpadikkuch  sut’rilum  iruntha  ungga'l  saththurukka'lin  kaikkum  ungga'lai  neenggalaakki  radchiththaar.  (1saamuveal  12:11)

அம்மோன்  புத்திரரின்  ராஜாவாகிய  நாகாஸ்  உங்களுக்கு  விரோதமாய்  வருகிறதை  நீங்கள்  கண்டபோது,  உங்கள்  தேவனாகிய  கர்த்தரே  உங்களுக்கு  ராஜாவாயிருந்தும்,  நீங்கள்  என்னை  நோக்கி:  அப்படியல்ல,  ஒரு  ராஜா  எங்கள்மேல்  ஆளவேண்டும்  என்றீர்கள்.  (1சாமுவேல்  12:12)

ammoan  puththirarin  raajaavaagiya  naagaas  ungga'lukku  viroathamaay  varugi’rathai  neengga'l  ka'ndapoathu,  ungga'l  theavanaagiya  karththarea  ungga'lukku  raajaavaayirunthum,  neengga'l  ennai  noakki:  appadiyalla,  oru  raajaa  engga'lmeal  aa'lavea'ndum  en’reerga'l.  (1saamuveal  12:12)

இப்போதும்  நீங்கள்  வேண்டும்  என்று  விரும்பித்  தெரிந்துகொண்ட  ராஜா,  இதோ,  இருக்கிறார்;  இதோ,  கர்த்தர்  உங்களுக்கு  ஒரு  ராஜாவை  ஏற்படுத்தினார்.  (1சாமுவேல்  12:13)

ippoathum  neengga'l  vea'ndum  en’ru  virumbith  therinthuko'nda  raajaa,  ithoa,  irukki’raar;  ithoa,  karththar  ungga'lukku  oru  raajaavai  ea’rpaduththinaar.  (1saamuveal  12:13)

நீங்கள்  கர்த்தருடைய  வாக்குக்கு  விரோதமாய்க்  கலகம்பண்ணாமல்  கர்த்தருக்குப்  பயந்து,  அவரைச்  சேவித்து,  அவருடைய  சத்தத்திற்குக்  கீழ்ப்படிந்தால்,  நீங்களும்  உங்களை  ஆளுகிற  ராஜாவும்  உங்கள்  தேவனாகிய  கர்த்தரைப்  பின்பற்றுகிறவர்களாயிருப்பீர்கள்.  (1சாமுவேல்  12:14)

neengga'l  karththarudaiya  vaakkukku  viroathamaayk  kalagampa'n'naamal  karththarukkup  bayanthu,  avaraich  seaviththu,  avarudaiya  saththaththi’rkuk  keezhppadinthaal,  neengga'lum  ungga'lai  aa'lugi’ra  raajaavum  ungga'l  theavanaagiya  karththaraip  pinpat’rugi’ravarga'laayiruppeerga'l.  (1saamuveal  12:14)

நீங்கள்  கர்த்தருடைய  சத்தத்திற்குக்  கீழ்ப்படியாமல்,  கர்த்தருடைய  வாக்குக்கு  விரோதமாய்க்  கலகம்பண்ணினீர்களானால்,  கர்த்தருடைய  கை  உங்கள்  பிதாக்களுக்கு  விரோதமாயிருந்தது  போல  உங்களுக்கும்  விரோதமாயிருக்கும்.  (1சாமுவேல்  12:15)

neengga'l  karththarudaiya  saththaththi’rkuk  keezhppadiyaamal,  karththarudaiya  vaakkukku  viroathamaayk  kalagampa'n'nineerga'laanaal,  karththarudaiya  kai  ungga'l  pithaakka'lukku  viroathamaayirunthathu  poala  ungga'lukkum  viroathamaayirukkum.  (1saamuveal  12:15)

இப்பொழுது  கர்த்தர்  உங்கள்  கண்களுக்கு  முன்பாகச்  செய்யும்  பெரிய  காரியத்தை  நின்று  பாருங்கள்.  (1சாமுவேல்  12:16)

ippozhuthu  karththar  ungga'l  ka'nga'lukku  munbaagach  seyyum  periya  kaariyaththai  nin’ru  paarungga'l.  (1saamuveal  12:16)

இன்று  கோதுமை  அறுப்பின்  நாள்  அல்லவா?  நீங்கள்  உங்களுக்கு  ஒரு  ராஜாவைக்  கேட்டதினால்,  கர்த்தரின்  பார்வைக்குச்  செய்த  உங்களுடைய  பொல்லாப்புப்  பெரியதென்று  நீங்கள்  கண்டு  உணரும்படிக்கு,  நான்  கர்த்தரை  நோக்கி  விண்ணப்பம்பண்ணுவேன்;  அப்பொழுது  இடிமுழக்கங்களையும்  மழையையும்  கட்டளையிடுவார்  என்று  சொல்லி,  (1சாமுவேல்  12:17)

in’ru  koathumai  a’ruppin  naa'l  allavaa?  neengga'l  ungga'lukku  oru  raajaavaik  keattathinaal,  karththarin  paarvaikkuch  seytha  ungga'ludaiya  pollaappup  periyathen’ru  neengga'l  ka'ndu  u'narumpadikku,  naan  karththarai  noakki  vi'n'nappampa'n'nuvean;  appozhuthu  idimuzhakkangga'laiyum  mazhaiyaiyum  katta'laiyiduvaar  en’ru  solli,  (1saamuveal  12:17)

சாமுவேல்  கர்த்தரை  நோக்கி  விண்ணப்பம்பண்ணினான்;  அன்றையதினமே  கர்த்தர்  இடிமுழக்கங்களையும்  மழையையும்  கட்டளையிட்டார்;  அப்பொழுது  ஜனங்கள்  எல்லாரும்  கர்த்தருக்கும்  சாமுவேலுக்கும்  மிகவும்  பயந்து;  (1சாமுவேல்  12:18)

saamuveal  karththarai  noakki  vi'n'nappampa'n'ninaan;  an’raiyathinamea  karththar  idimuzhakkangga'laiyum  mazhaiyaiyum  katta'laiyittaar;  appozhuthu  janangga'l  ellaarum  karththarukkum  saamuvealukkum  migavum  bayanthu;  (1saamuveal  12:18)

சாமுவேலைப்  பார்த்து:  நாங்கள்  சாகாதபடிக்கு  உம்முடைய  தேவனாகிய  கர்த்தரிடத்தில்  உம்முடைய  அடியாருக்காக  விண்ணப்பம்  செய்யும்;  நாங்கள்  செய்த  எல்லாப்  பாவங்களோடும்  எங்களுக்கு  ஒரு  ராஜா  வேண்டும்  என்று  கேட்ட  இந்தப்  பாவத்தையும்  கூட்டிக்கொண்டோம்  என்று  ஜனங்கள்  எல்லாரும்  சொன்னார்கள்.  (1சாமுவேல்  12:19)

saamuvealaip  paarththu:  naangga'l  saagaathapadikku  ummudaiya  theavanaagiya  karththaridaththil  ummudaiya  adiyaarukkaaga  vi'n'nappam  seyyum;  naangga'l  seytha  ellaap  paavangga'loadum  engga'lukku  oru  raajaa  vea'ndum  en’ru  keatta  inthap  paavaththaiyum  koottikko'ndoam  en’ru  janangga'l  ellaarum  sonnaarga'l.  (1saamuveal  12:19)

அப்பொழுது  சாமுவேல்  ஜனங்களை  நோக்கி:  பயப்படாதேயுங்கள்;  நீங்கள்  இந்தப்  பொல்லாப்பையெல்லாம்  செய்தீர்கள்;  ஆகிலும்  கர்த்தரை  விட்டுப்  பின்வாங்காமல்  கர்த்தரை  உங்கள்  முழு  இருதயத்தோடும்  சேவியுங்கள்.  (1சாமுவேல்  12:20)

appozhuthu  saamuveal  janangga'lai  noakki:  bayappadaatheayungga'l;  neengga'l  inthap  pollaappaiyellaam  seytheerga'l;  aagilum  karththarai  vittup  pinvaanggaamal  karththarai  ungga'l  muzhu  iruthayaththoadum  seaviyungga'l.  (1saamuveal  12:20)

விலகிப்போகாதிருங்கள்;  மற்றப்படி  பிரயோஜனமற்றதும்  ரட்சிக்கமாட்டாததுமாயிருக்கிற  வீணானவைகளைப்  பின்பற்றுவீர்கள்;  அவைகள்  வீணானவைகளே.  (1சாமுவேல்  12:21)

vilagippoagaathirungga'l;  mat’rappadi  pirayoajanamat’rathum  radchikkamaattaathathumaayirukki’ra  vee'naanavaiga'laip  pinpat’ruveerga'l;  avaiga'l  vee'naanavaiga'lea.  (1saamuveal  12:21)

கர்த்தர்  உங்களைத்  தமக்கு  ஜனமாக்கிக்கொள்ளப்  பிரியமானபடியினால்,  கர்த்தர்  தம்முடைய  மகத்துவமான  நாமத்தினிமித்தம்  தமது  ஜனத்தைக்  கைவிடமாட்டார்.  (1சாமுவேல்  12:22)

karththar  ungga'laith  thamakku  janamaakkikko'l'lap  piriyamaanapadiyinaal,  karththar  thammudaiya  magaththuvamaana  naamaththinimiththam  thamathu  janaththaik  kaividamaattaar.  (1saamuveal  12:22)

நானும்  உங்களுக்காக  விண்ணப்பம்  செய்யாதிருப்பேனாகில்  கர்த்தருக்கு  விரோதமாகப்  பாவஞ்செய்கிறவனாயிருப்பேன்;  அது  எனக்குத்  தூரமாயிருப்பதாக;  நன்மையும்  செவ்வையுமான  வழியை  நான்  உங்களுக்குப்  போதிப்பேன்.  (1சாமுவேல்  12:23)

naanum  ungga'lukkaaga  vi'n'nappam  seyyaathiruppeanaagil  karththarukku  viroathamaagap  paavagnseygi’ravanaayiruppean;  athu  enakkuth  thooramaayiruppathaaga;  nanmaiyum  sevvaiyumaana  vazhiyai  naan  ungga'lukkup  poathippean.  (1saamuveal  12:23)

நீங்கள்  எப்படியும்  கர்த்தருக்குப்  பயந்து,  உங்கள்  முழு  இருதயத்தோடும்  உண்மையாய்  அவரைச்  சேவிக்கக்கடவீர்கள்;  அவர்  உங்களிடத்தில்  எவ்வளவு  மகிமையான  காரியங்களைச்  செய்தார்  என்பதைச்  சிந்தித்துப்பாருங்கள்.  (1சாமுவேல்  12:24)

neengga'l  eppadiyum  karththarukkup  bayanthu,  ungga'l  muzhu  iruthayaththoadum  u'nmaiyaay  avaraich  seavikkakkadaveerga'l;  avar  ungga'lidaththil  evva'lavu  magimaiyaana  kaariyangga'laich  seythaar  enbathaich  sinthiththuppaarungga'l.  (1saamuveal  12:24)

நீங்கள்  இன்னும்  பொல்லாப்பைச்  செய்யவே  செய்வீர்களானால்,  நீங்களும்  உங்கள்  ராஜாவும்  நாசமடைவீர்கள்  என்றான்.  (1சாமுவேல்  12:25)

neengga'l  innum  pollaappaich  seyyavea  seyveerga'laanaal,  neengga'lum  ungga'l  raajaavum  naasamadaiveerga'l  en’raan.  (1saamuveal  12:25)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!