Monday, August 22, 2016

1 Saamuveal 11 | 1 சாமுவேல் 11 | 1 Samuel 11

அக்காலத்தில்  நாகாஸ்  என்னும்  அம்மோனியன்  வந்து,  கீலேயாத்திலிருக்கிற  யாபேசை  முற்றிக்கைபோட்டான்;  அப்பொழுது  யாபேசின்  மனுஷர்  எல்லாரும்  நாகாசை  நோக்கி:  எங்களோடே  உடன்படிக்கைபண்ணும்;  அப்பொழுது  உம்மைச்  சேவிப்போம்  என்றார்கள்.  (1சாமுவேல்  11:1)

akkaalaththil  naagaas  ennum  ammoaniyan  vanthu,  keeleayaaththilirukki’ra  yaabeasai  mut’rikkaipoattaan;  appozhuthu  yaabeasin  manushar  ellaarum  naagaasai  noakki:  engga'loadea  udanpadikkaipa'n'num;  appozhuthu  ummaich  seavippoam  en’raarga'l.  (1saamuveal  11:1)

அதற்கு  அம்மோனியனாகிய  நாகாஸ்:  நான்  உங்கள்  ஒவ்வொருவருடைய  வலது  கண்ணையும்  பிடுங்கி,  இதினாலே  இஸ்ரவேல்  எல்லாவற்றின்மேலும்  நிந்தைவரப்பண்ணுவதே  நான்  உங்களோடே  பண்ணும்  உடன்படிக்கை  என்றான்.  (1சாமுவேல்  11:2)

atha’rku  ammoaniyanaagiya  naagaas:  naan  ungga'l  ovvoruvarudaiya  valathu  ka'n'naiyum  pidunggi,  ithinaalea  israveal  ellaavat’rinmealum  ninthaivarappa'n'nuvathea  naan  ungga'loadea  pa'n'num  udanpadikkai  en’raan.  (1saamuveal  11:2)

அதற்கு  யாபேசின்  மூப்பர்கள்:  நாங்கள்  இஸ்ரவேல்  நாடெங்கும்  ஸ்தானாபதிகளை  அனுப்பும்படி,  ஏழுநாள்  எங்களுக்குத்  தவணைகொடும்,  எங்களை  ரட்சிப்பார்  இல்லாவிட்டால்,  அப்பொழுது  உம்மிடத்தில்  வருவோம்  என்றார்கள்.  (1சாமுவேல்  11:3)

atha’rku  yaabeasin  moopparga'l:  naangga'l  israveal  naadenggum  sthaanaabathiga'lai  anuppumpadi,  eazhunaa'l  engga'lukkuth  thava'naikodum,  engga'lai  radchippaar  illaavittaal,  appozhuthu  ummidaththil  varuvoam  en’raarga'l.  (1saamuveal  11:3)

அந்த  ஸ்தானாபதிகள்  சவுலின்  ஊராகிய  கிபியாவிலே  வந்து,  ஜனங்களின்  காதுகேட்க  அந்தச்  செய்திகளைச்  சொன்னார்கள்;  அப்பொழுது  ஜனங்களெல்லாரும்  சத்தமிட்டு  அழுதார்கள்.  (1சாமுவேல்  11:4)

antha  sthaanaabathiga'l  savulin  ooraagiya  kibiyaavilea  vanthu,  janangga'lin  kaathukeadka  anthach  seythiga'laich  sonnaarga'l;  appozhuthu  janangga'lellaarum  saththamittu  azhuthaarga'l.  (1saamuveal  11:4)

இதோ,  சவுல்  மாடுகளின்  பின்னாலே  வயலிலிருந்து  வந்து,  ஜனங்கள்  அழுகிற  முகாந்தரம்  என்ன  என்று  கேட்டான்;  யாபேசின்  மனுஷர்  சொல்லிய  செய்திகளை  அவனுக்குத்  தெரிவித்தார்கள்.  (1சாமுவேல்  11:5)

ithoa,  savul  maaduga'lin  pinnaalea  vayalilirunthu  vanthu,  janangga'l  azhugi’ra  mugaantharam  enna  en’ru  keattaan;  yaabeasin  manushar  solliya  seythiga'lai  avanukkuth  theriviththaarga'l.  (1saamuveal  11:5)

சவுல்  இந்தச்  செய்திகளைக்  கேட்டவுடனே,  தேவனுடைய  ஆவி  அவன்மேல்  இறங்கினதினால்  அவன்  மிகவும்  கோபம்  மூண்டவனாகி,  (1சாமுவேல்  11:6)

savul  inthach  seythiga'laik  keattavudanea,  theavanudaiya  aavi  avanmeal  i’rangginathinaal  avan  migavum  koabam  moo'ndavanaagi,  (1saamuveal  11:6)

ஓரிணைமாட்டைப்  பிடித்து,  துண்டித்து,  அந்த  ஸ்தானாபதிகள்  கையிலே  கொடுத்து,  இஸ்ரவேலின்  நாடுகளுக்கெல்லாம்  அனுப்பி:  சவுலின்  பின்னாலேயும்,  சாமுவேலின்  பின்னாலேயும்  புறப்படாதவன்  எவனோ,  அவனுடைய  மாடுகளுக்கு  இப்படிச்  செய்யப்படும்  என்று  சொல்லியனுப்பினான்;  அப்பொழுது  கர்த்தரால்  உண்டான  பயங்கரம்  ஜனத்தின்மேல்  வந்ததினால்,  ஒருமனப்பட்டுப்  புறப்பட்டு  வந்தார்கள்.  (1சாமுவேல்  11:7)

oari'naimaattaip  pidiththu,  thu'ndiththu,  antha  sthaanaabathiga'l  kaiyilea  koduththu,  isravealin  naaduga'lukkellaam  anuppi:  savulin  pinnaaleayum,  saamuvealin  pinnaaleayum  pu’rappadaathavan  evanoa,  avanudaiya  maaduga'lukku  ippadich  seyyappadum  en’ru  solliyanuppinaan;  appozhuthu  karththaraal  u'ndaana  bayanggaram  janaththinmeal  vanthathinaal,  orumanappattup  pu’rappattu  vanthaarga'l.  (1saamuveal  11:7)

அவர்களைப்  பேசேக்கிலே  இலக்கம்பார்த்தான்;  இஸ்ரவேல்  புத்திரரில்  மூன்றுலட்சம்பேரும்,  யூதா  மனுஷரில்  முப்பதினாயிரம்பேரும்  இருந்தார்கள்.  (1சாமுவேல்  11:8)

avarga'laip  beaseakkilea  ilakkampaarththaan;  israveal  puththiraril  moon’ruladchampearum,  yoothaa  manusharil  muppathinaayirampearum  irunthaarga'l.  (1saamuveal  11:8)

வந்த  ஸ்தானாபதிகளை  அவர்கள்  நோக்கி:  நாளைக்கு  வெயில்  ஏறுகிறதற்கு  முன்னே  உங்களுக்கு  ரட்சிப்புக்  கிடைக்கும்  என்று  கீலேயாத்திலிருக்கிற  யாபேசின்  மனுஷருக்குச்  சொல்லுங்கள்  என்றார்கள்;  ஸ்தானாபதிகள்  வந்து  யாபேசின்  மனுஷரிடத்தில்  அதை  அறிவித்தார்கள்;  அதற்கு  அவர்கள்  சந்தோஷப்பட்டார்கள்.  (1சாமுவேல்  11:9)

vantha  sthaanaabathiga'lai  avarga'l  noakki:  naa'laikku  veyil  ea’rugi’ratha’rku  munnea  ungga'lukku  radchippuk  kidaikkum  en’ru  keeleayaaththilirukki’ra  yaabeasin  manusharukkuch  sollungga'l  en’raarga'l;  sthaanaabathiga'l  vanthu  yaabeasin  manusharidaththil  athai  a’riviththaarga'l;  atha’rku  avarga'l  santhoashappattaarga'l.  (1saamuveal  11:9)

பின்பு  யாபேசின்  மனுஷர்:  நாளைக்கு  உங்களிடத்தில்  வருவோம்,  அப்பொழுது  உங்கள்  இஷ்டப்படியெல்லாம்  எங்களுக்குச்  செய்யுங்கள்  என்றார்கள்.  (1சாமுவேல்  11:10)

pinbu  yaabeasin  manushar:  naa'laikku  ungga'lidaththil  varuvoam,  appozhuthu  ungga'l  ishdappadiyellaam  engga'lukkuch  seyyungga'l  en’raarga'l.  (1saamuveal  11:10)

மறுநாளிலே  சவுல்  ஜனங்களை  மூன்று  படையாக  வகுத்து,  கிழக்கு  வெளுத்துவரும்  ஜாமத்தில்  பாளயத்திற்குள்  வந்து  வெயில்  ஏறும்வரைக்கும்  அம்மோனியரை  முறிய  அடித்தான்;  தப்பினவர்களில்  இரண்டுபேராகிலும்  சேர்ந்து  ஓடிப்போகாதபடி  எல்லாரும்  சிதறிப்போனார்கள்.  (1சாமுவேல்  11:11)

ma’runaa'lilea  savul  janangga'lai  moon’ru  padaiyaaga  vaguththu,  kizhakku  ve'luththuvarum  jaamaththil  paa'layaththi’rku'l  vanthu  veyil  ea’rumvaraikkum  ammoaniyarai  mu’riya  adiththaan;  thappinavarga'lil  ira'ndupearaagilum  searnthu  oadippoagaathapadi  ellaarum  sitha’rippoanaarga'l.  (1saamuveal  11:11)

அப்பொழுது  ஜனங்கள்  சாமுவேலை  நோக்கி:  சவுலா  நமக்கு  ராஜாவாயிருக்கப்போகிறவன்  என்று  சொன்னவர்கள்  யார்?  அந்த  மனுஷரை  நாங்கள்  கொன்றுபோடும்படிக்கு  ஒப்புக்கொடுங்கள்  என்றார்கள்.  (1சாமுவேல்  11:12)

appozhuthu  janangga'l  saamuvealai  noakki:  savulaa  namakku  raajaavaayirukkappoagi’ravan  en’ru  sonnavarga'l  yaar?  antha  manusharai  naangga'l  kon’rupoadumpadikku  oppukkodungga'l  en’raarga'l.  (1saamuveal  11:12)

அதற்குச்  சவுல்:  இன்றையதினம்  ஒருவரும்  கொல்லப்படலாகாது;  இன்று  கர்த்தர்  இஸ்ரவேலுக்கு  இரட்சிப்பை  அருளினார்  என்றான்.  (1சாமுவேல்  11:13)

atha’rkuch  savul:  in’raiyathinam  oruvarum  kollappadalaagaathu;  in’ru  karththar  isravealukku  iradchippai  aru'linaar  en’raan.  (1saamuveal  11:13)

அப்பொழுது  சாமுவேல்  ஜனங்களை  நோக்கி:  நாம்  கில்காலுக்குப்  போய்,  அங்கே  ராஜ்யபாரத்தை  ஸ்திரப்படுத்துவோம்  வாருங்கள்  என்றான்.  (1சாமுவேல்  11:14)

appozhuthu  saamuveal  janangga'lai  noakki:  naam  kilgaalukkup  poay,  anggea  raajyabaaraththai  sthirappaduththuvoam  vaarungga'l  en’raan.  (1saamuveal  11:14)

அப்படியே  ஜனங்கள்  எல்லாரும்  கில்காலுக்குப்  போய்,  அவ்விடத்திலே  கர்த்தருடைய  சந்நிதியில்  சவுலை  ராஜாவாக  ஏற்படுத்தி,  அங்கே  கர்த்தருடைய  சந்நிதியில்  சமாதானபலிகளைச்  செலுத்தி,  அங்கே  சவுலும்  இஸ்ரவேல்  மனுஷர்  யாவரும்  மிகவும்  சந்தோஷங்கொண்டாடினார்கள்.  (1சாமுவேல்  11:15)

appadiyea  janangga'l  ellaarum  kilgaalukkup  poay,  avvidaththilea  karththarudaiya  sannithiyil  savulai  raajaavaaga  ea’rpaduththi,  anggea  karththarudaiya  sannithiyil  samaathaanabaliga'laich  seluththi,  anggea  savulum  israveal  manushar  yaavarum  migavum  santhoashangko'ndaadinaarga'l.  (1saamuveal  11:15)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!