Saturday, August 20, 2016

1 Saamuveal 10 | 1 சாமுவேல் 10 | 1 Samuel 10

அப்பொழுது  சாமுவேல்  தைலக்குப்பியை  எடுத்து,  அவன்  தலையின்மேல்  வார்த்து,  அவனை  முத்தஞ்செய்து:  கர்த்தர்  உன்னைத்  தம்முடைய  சுதந்தரத்தின்மேல்  தலைவனாக  அபிஷேகம்  பண்ணினார்  அல்லவா?  (1சாமுவேல்  10:1)

appozhuthu  saamuveal  thailakkuppiyai  eduththu,  avan  thalaiyinmeal  vaarththu,  avanai  muththagnseythu:  karththar  unnaith  thammudaiya  suthantharaththinmeal  thalaivanaaga  abisheagam  pa'n'ninaar  allavaa?  (1saamuveal  10:1)

நீ  இன்றைக்கு  என்னைவிட்டுப்  போகிறபோது,  பென்யமீன்  எல்லையாகிய  செல்சாகில்  ராகேலின்  கல்லறையண்டையில்  இரண்டு  மனுஷரைக்  காண்பாய்;  அவர்கள்  உன்னைப்  பார்த்து:  நீ  தேடப்போன  கழுதைகள்  அகப்பட்டது;  இதோ,  உன்  தகப்பன்  கழுதைகளின்மேலிருந்த  கவலையை  விட்டு,  உங்களுக்காக  விசாரப்பட்டு,  என்  மகனுக்காக  என்னசெய்வேன்?  என்கிறான்  என்று  சொல்லுவார்கள்.  (1சாமுவேல்  10:2)

nee  in’raikku  ennaivittup  poagi’rapoathu,  benyameen  ellaiyaagiya  selsaagil  raakealin  kalla’raiya'ndaiyil  ira'ndu  manusharaik  kaa'nbaay;  avarga'l  unnaip  paarththu:  nee  theadappoana  kazhuthaiga'l  agappattathu;  ithoa,  un  thagappan  kazhuthaiga'linmealiruntha  kavalaiyai  vittu,  ungga'lukkaaga  visaarappattu,  en  maganukkaaga  ennaseyvean?  engi’raan  en’ru  solluvaarga'l.  (1saamuveal  10:2)

நீ  அவ்விடத்தை  விட்டு  அப்புறம்  கடந்துபோய்,  தாபோரிலுள்ள  சமபூமியில்  சேரும்போது,  தேவனைப்  பணியும்படி  பெத்தேலுக்குப்  போகிற  மூன்று  மனுஷர்  அங்கே  உன்னைக்  கண்டு  சந்திப்பார்கள்;  ஒருவன்  மூன்று  ஆட்டுக்குட்டிகளையும்,  இன்னொருவன்  மூன்று  அப்பங்களையும்,  வேறொருவன்  திராட்சரசமுள்ள  ஒரு  துருத்தியையும்  கொண்டுவந்து,  (1சாமுவேல்  10:3)

nee  avvidaththai  vittu  appu’ram  kadanthupoay,  thaaboarilu'l'la  samaboomiyil  searumpoathu,  theavanaip  pa'niyumpadi  beththealukkup  poagi’ra  moon’ru  manushar  anggea  unnaik  ka'ndu  santhippaarga'l;  oruvan  moon’ru  aattukkuttiga'laiyum,  innoruvan  moon’ru  appangga'laiyum,  vea’roruvan  thiraadcharasamu'l'la  oru  thuruththiyaiyum  ko'nduvanthu,  (1saamuveal  10:3)

உன்னுடைய  சுகசெய்தியை  விசாரித்து,  உனக்கு  இரண்டு  அப்பங்களைக்  கொடுப்பார்கள்;  அவைகளை  நீ  அவர்கள்  கையிலே  வாங்கவேண்டும்.  (1சாமுவேல்  10:4)

unnudaiya  sugaseythiyai  visaariththu,  unakku  ira'ndu  appangga'laik  koduppaarga'l;  avaiga'lai  nee  avarga'l  kaiyilea  vaanggavea'ndum.  (1saamuveal  10:4)

பின்பு  பெலிஸ்தரின்  தாணையம்  இருக்கிற  தேவனுடைய  மலைக்குப்  போவாய்;  அங்கே  நீ  பட்டணத்திற்குள்  பிரவேசிக்கையில்,  மேடையிலிருந்து  இறங்கிவருகிற  தீர்க்கதரிசிகளின்  கூட்டத்திற்கு  எதிர்ப்படுவாய்;  அவர்களுக்கு  முன்பாகத்  தம்புரும்  மேளமும்  நாகசுரமும்  சுரமண்டலமும்  போகும்;  அவர்கள்  தீர்க்கதரிசனம்  சொல்லுவார்கள்.  (1சாமுவேல்  10:5)

pinbu  pelistharin  thaa'naiyam  irukki’ra  theavanudaiya  malaikkup  poavaay;  anggea  nee  patta'naththi’rku'l  piraveasikkaiyil,  meadaiyilirunthu  i’ranggivarugi’ra  theerkkatharisiga'lin  koottaththi’rku  ethirppaduvaay;  avarga'lukku  munbaagath  thamburum  mea'lamum  naagasuramum  surama'ndalamum  poagum;  avarga'l  theerkkatharisanam  solluvaarga'l.  (1saamuveal  10:5)

அப்பொழுது  கர்த்தருடைய  ஆவி  உன்மேல்  இறங்குவார்;  நீ  அவர்களோடேகூடத்  தீர்க்கதரிசனம்  சொல்லி,  வேறு  மனுஷனாவாய்.  (1சாமுவேல்  10:6)

appozhuthu  karththarudaiya  aavi  unmeal  i’rangguvaar;  nee  avarga'loadeakoodath  theerkkatharisanam  solli,  vea’ru  manushanaavaay.  (1saamuveal  10:6)

இந்த  அடையாளங்கள்  உனக்கு  நேரிடும்போது,  சமயத்துக்கு  ஏற்றபடி  நீ  செய்;  தேவன்  உன்னோடே  இருக்கிறார்.  (1சாமுவேல்  10:7)

intha  adaiyaa'langga'l  unakku  nearidumpoathu,  samayaththukku  eat’rapadi  nee  sey;  theavan  unnoadea  irukki’raar.  (1saamuveal  10:7)

நீ  எனக்கு  முன்னே  கில்காலுக்கு  இறங்கிப்போ;  சர்வாங்க  தகனபலிகளையும்  சமாதானபலிகளையும்  செலுத்தும்படிக்கு,  நான்  உன்னிடத்தில்  வருவேன்;  நான்  உன்னிடத்தில்  வந்து,  நீ  செய்ய  வேண்டியதை  உனக்கு  அறிவிக்குமட்டும்,  ஏழுநாள்  காத்திரு  என்றான்.  (1சாமுவேல்  10:8)

nee  enakku  munnea  kilgaalukku  i’ranggippoa;  sarvaangga  thaganabaliga'laiyum  samaathaanabaliga'laiyum  seluththumpadikku,  naan  unnidaththil  varuvean;  naan  unnidaththil  vanthu,  nee  seyya  vea'ndiyathai  unakku  a’rivikkumattum,  eazhunaa'l  kaaththiru  en’raan.  (1saamuveal  10:8)

அவன்  சாமுவேலை  விட்டுப்  போகும்படி  திரும்பினபோது,  தேவன்  அவனுக்கு  வேறே  இருதயத்தைக்  கொடுத்தார்;  அந்த  அடையாளங்கள்  எல்லாம்  அன்றையதினமே  நேரிட்டது.  (1சாமுவேல்  10:9)

avan  saamuvealai  vittup  poagumpadi  thirumbinapoathu,  theavan  avanukku  vea’rea  iruthayaththaik  koduththaar;  antha  adaiyaa'langga'l  ellaam  an’raiyathinamea  nearittathu.  (1saamuveal  10:9)

அவர்கள்  அந்த  மலைக்கு  வந்தபோது,  இதோ,  தீர்க்கதரிசிகளின்  கூட்டம்  அவனுக்கு  எதிராக  வந்தது;  அப்பொழுது  தேவனுடைய  ஆவி  அவன்மேல்  இறங்கினதினால்,  அவனும்  அவர்களுக்குள்ளே  தீர்க்கதரிசனம்  சொன்னான்.  (1சாமுவேல்  10:10)

avarga'l  antha  malaikku  vanthapoathu,  ithoa,  theerkkatharisiga'lin  koottam  avanukku  ethiraaga  vanthathu;  appozhuthu  theavanudaiya  aavi  avanmeal  i’rangginathinaal,  avanum  avarga'lukku'l'lea  theerkkatharisanam  sonnaan.  (1saamuveal  10:10)

அதற்கு  முன்னே  அவனை  அறிந்தவர்கள்  எல்லாரும்  அவன்  தீர்க்கதரிசிகளோடிருந்து,  தீர்க்கதரிசனம்  சொல்லுகிறதைக்  கண்டபோது:  கீசின்  குமாரனுக்கு  வந்தது  என்ன?  சவுலும்  தீர்க்கதரிசிகளில்  ஒருவனோ?  என்று  அந்த  ஜனங்கள்  ஒருவரோடொருவர்  சொல்லிக்கொண்டார்கள்.  (1சாமுவேல்  10:11)

atha’rku  munnea  avanai  a’rinthavarga'l  ellaarum  avan  theerkkatharisiga'loadirunthu,  theerkkatharisanam  sollugi’rathaik  ka'ndapoathu:  keesin  kumaaranukku  vanthathu  enna?  savulum  theerkkatharisiga'lil  oruvanoa?  en’ru  antha  janangga'l  oruvaroadoruvar  sollikko'ndaarga'l.  (1saamuveal  10:11)

அதற்கு  அங்கே  இருக்கிறவர்களில்  ஒருவன்:  இவர்களுக்குத்  தகப்பன்  யார்  என்றான்;  ஆதலால்  சவுலும்  தீர்க்கதரிசிகளில்  ஒருவனோ?  என்பது  பழமொழியாயிற்று.  (1சாமுவேல்  10:12)

atha’rku  anggea  irukki’ravarga'lil  oruvan:  ivarga'lukkuth  thagappan  yaar  en’raan;  aathalaal  savulum  theerkkatharisiga'lil  oruvanoa?  enbathu  pazhamozhiyaayit’ru.  (1saamuveal  10:12)

அவன்  தீர்க்கதரிசனம்  சொல்லி  முடிந்தபின்பு,  மேடையின்மேல்  வந்தான்.  (1சாமுவேல்  10:13)

avan  theerkkatharisanam  solli  mudinthapinbu,  meadaiyinmeal  vanthaan.  (1saamuveal  10:13)

அப்பொழுது  சவுலுடைய  சிறிய  தகப்பன்:  நீங்கள்  எங்கே  போனீர்கள்  என்று  அவனையும்  அவன்  வேலைக்காரனையும்  கேட்டான்.  அதற்கு  அவன்:  நாங்கள்  கழுதைகளைத்  தேடப்போய்,  அவைகளை  எங்குங்  காணாதபடியினால்,  சாமுவேலிடத்துக்குப்  போனோம்  என்றான்.  (1சாமுவேல்  10:14)

appozhuthu  savuludaiya  si’riya  thagappan:  neengga'l  enggea  poaneerga'l  en’ru  avanaiyum  avan  vealaikkaaranaiyum  keattaan.  atha’rku  avan:  naangga'l  kazhuthaiga'laith  theadappoay,  avaiga'lai  enggung  kaa'naathapadiyinaal,  saamuvealidaththukkup  poanoam  en’raan.  (1saamuveal  10:14)

அப்பொழுது  சவுலின்  சிறியதகப்பன்:  சாமுவேல்  உங்களுக்குச்  சொன்னது  என்ன?  அதைச்  சொல்  என்றான்.  (1சாமுவேல்  10:15)

appozhuthu  savulin  si’riyathagappan:  saamuveal  ungga'lukkuch  sonnathu  enna?  athaich  sol  en’raan.  (1saamuveal  10:15)

சவுல்  தன்  சிறியதகப்பனைப்  பார்த்து:  கழுதைகள்  அகப்பட்டது  என்று  எங்களுக்குத்  தீர்மானமாய்ச்  சொன்னார்  என்றான்;  ஆனாலும்  ராஜ்யபாரத்தைப்பற்றிச்  சாமுவேல்  சொன்னதை  அவனுக்கு  அறிவிக்கவில்லை.  (1சாமுவேல்  10:16)

savul  than  si’riyathagappanaip  paarththu:  kazhuthaiga'l  agappattathu  en’ru  engga'lukkuth  theermaanamaaych  sonnaar  en’raan;  aanaalum  raajyabaaraththaippat’rich  saamuveal  sonnathai  avanukku  a’rivikkavillai.  (1saamuveal  10:16)

சாமுவேல்  ஜனங்களை  மிஸ்பாவிலே  கர்த்தரிடத்தில்  வரவழைத்து,  (1சாமுவேல்  10:17)

saamuveal  janangga'lai  mispaavilea  karththaridaththil  varavazhaiththu,  (1saamuveal  10:17)

இஸ்ரவேல்  புத்திரரை  நோக்கி:  இஸ்ரவேலின்  தேவனாகிய  கர்த்தர்  சொல்லுகிறது  என்னவென்றால்,  நான்  இஸ்ரவேலை  எகிப்திலிருந்து  புறப்படப்பண்ணி,  உங்களை  எகிப்தியர்  கைக்கும்,  உங்களை  இறுகப்பிடித்த  எல்லா  ராஜ்யத்தாரின்  கைக்கும்  நீங்கலாக்கிவிட்டேன்.  (1சாமுவேல்  10:18)

israveal  puththirarai  noakki:  isravealin  theavanaagiya  karththar  sollugi’rathu  ennaven’raal,  naan  isravealai  egipthilirunthu  pu’rappadappa'n'ni,  ungga'lai  egipthiyar  kaikkum,  ungga'lai  i’rugappidiththa  ellaa  raajyaththaarin  kaikkum  neenggalaakkivittean.  (1saamuveal  10:18)

நீங்களோ  உங்களுடைய  எல்லாத்  தீங்குகளுக்கும்  நெருக்கங்களுக்கும்  உங்களை  நீங்கலாக்கி  ரட்சித்த  உங்கள்  தேவனை  இந்நாளிலே  புறக்கணித்து,  ஒரு  ராஜாவை  எங்கள்மேல்  ஏற்படுத்தும்  என்று  அவரிடத்தில்  கேட்டுக்கொண்டீர்கள்;  இப்பொழுது  கர்த்தருடைய  சந்நிதியில்  உங்கள்  வம்சங்களின்படியேயும்,  ஆயிரங்களான  உங்கள்  சேர்வைகளின்படியேயும்,  வந்து  நில்லுங்கள்  என்றான்.  (1சாமுவேல்  10:19)

neengga'loa  ungga'ludaiya  ellaath  theengguga'lukkum  nerukkangga'lukkum  ungga'lai  neenggalaakki  radchiththa  ungga'l  theavanai  innaa'lilea  pu’rakka'niththu,  oru  raajaavai  engga'lmeal  ea’rpaduththum  en’ru  avaridaththil  keattukko'ndeerga'l;  ippozhuthu  karththarudaiya  sannithiyil  ungga'l  vamsangga'linpadiyeayum,  aayirangga'laana  ungga'l  searvaiga'linpadiyeayum,  vanthu  nillungga'l  en’raan.  (1saamuveal  10:19)

சாமுவேல்  இஸ்ரவேலின்  கோத்திரங்களையெல்லாம்  சேரப்பண்ணினபின்பு  பென்யமீன்  கோத்திரத்தின்மேல்  சீட்டு  விழுந்தது.  (1சாமுவேல்  10:20)

saamuveal  isravealin  koaththirangga'laiyellaam  searappa'n'ninapinbu  benyameen  koaththiraththinmeal  seettu  vizhunthathu.  (1saamuveal  10:20)

அவன்  பென்யமீன்  கோத்திரத்தை  அதினுடைய  குடும்பங்களின்படியே  சேரப்பண்ணினபின்பு,  மாத்திரி  குடும்பத்தின்மேலும்,  அதிலே  கீசின்  குமாரனாகிய  சவுலின்மேலும்,  சீட்டு  விழுந்தது;  அவனைத்  தேடினபோது,  அவன்  அகப்படவில்லை.  (1சாமுவேல்  10:21)

avan  benyameen  koaththiraththai  athinudaiya  kudumbangga'linpadiyea  searappa'n'ninapinbu,  maaththiri  kudumbaththinmealum,  athilea  keesin  kumaaranaagiya  savulinmealum,  seettu  vizhunthathu;  avanaith  theadinapoathu,  avan  agappadavillai.  (1saamuveal  10:21)

அவன்  இனி  இங்கே  வருவானா  என்று  அவர்கள்  திரும்பக்  கர்த்தரிடத்தில்  விசாரித்தபோது:  இதோ,  அவன்  தளவாடங்களிருக்கிற  இடத்திலே  ஒளித்துக்கொண்டிருக்கிறான்  என்று  கர்த்தர்  சொன்னார்.  (1சாமுவேல்  10:22)

avan  ini  inggea  varuvaanaa  en’ru  avarga'l  thirumbak  karththaridaththil  visaariththapoathu:  ithoa,  avan  tha'lavaadangga'lirukki’ra  idaththilea  o'liththukko'ndirukki’raan  en’ru  karththar  sonnaar.  (1saamuveal  10:22)

அப்பொழுது  அவர்கள்  ஓடி,  அங்கேயிருந்து  அவனை  அழைத்துக்கொண்டுவந்தார்கள்;  அவன்  ஜனங்கள்  நடுவே  வந்து  நின்றபோது,  எல்லா  ஜனங்களும்  அவன்  தோளுக்குக்  கீழாயிருக்கத்தக்க  உயரமுள்ளவனாயிருந்தான்.  (1சாமுவேல்  10:23)

appozhuthu  avarga'l  oadi,  anggeayirunthu  avanai  azhaiththukko'nduvanthaarga'l;  avan  janangga'l  naduvea  vanthu  nin’rapoathu,  ellaa  janangga'lum  avan  thoa'lukkuk  keezhaayirukkaththakka  uyaramu'l'lavanaayirunthaan.  (1saamuveal  10:23)

அப்பொழுது  சாமுவேல்  எல்லா  ஜனங்களையும்  நோக்கி:  கர்த்தர்  தெரிந்துகொண்டவனைப்  பாருங்கள்,  சமஸ்த  ஜனங்களுக்குள்ளும்  அவனுக்குச்  சமானமானவன்  இல்லை  என்றான்;  அப்பொழுது  ஜனங்கள்  எல்லாரும்  ஆர்ப்பரித்து:  ராஜா  வாழ்க  என்றார்கள்.  (1சாமுவேல்  10:24)

appozhuthu  saamuveal  ellaa  janangga'laiyum  noakki:  karththar  therinthuko'ndavanaip  paarungga'l,  samastha  janangga'lukku'l'lum  avanukkuch  samaanamaanavan  illai  en’raan;  appozhuthu  janangga'l  ellaarum  aarppariththu:  raajaa  vaazhga  en’raarga'l.  (1saamuveal  10:24)

சாமுவேல்  ராஜாங்கத்தின்  முறையை  ஜனங்களுக்குத்  தெரிவித்து,  அதை  ஒரு  புஸ்தகத்தில்  எழுதி,  கர்த்தருடைய  சந்நிதியில்  வைத்து,  ஜனங்களையெல்லாம்  அவரவர்  வீட்டுக்கு  அனுப்பிவிட்டான்.  (1சாமுவேல்  10:25)

saamuveal  raajaanggaththin  mu’raiyai  janangga'lukkuth  theriviththu,  athai  oru  pusthagaththil  ezhuthi,  karththarudaiya  sannithiyil  vaiththu,  janangga'laiyellaam  avaravar  veettukku  anuppivittaan.  (1saamuveal  10:25)

சவுலும்  கிபியாவிலிருக்கிற  தன்  வீட்டுக்குப்  போனான்;  இராணுவத்தில்  தேவன்  எவர்கள்  மனதை  ஏவினாரோ,  அவர்களும்  அவனோடேகூடப்  போனார்கள்.  (1சாமுவேல்  10:26)

savulum  kibiyaavilirukki’ra  than  veettukkup  poanaan;  iraa'nuvaththil  theavan  evarga'l  manathai  eavinaaroa,  avarga'lum  avanoadeakoodap  poanaarga'l.  (1saamuveal  10:26)

ஆனாலும்  பேலியாளின்  மக்கள்:  இவனா  நம்மை  ரட்சிக்கப்போகிறவன்  என்று  சொல்லி,  அவனுக்குக்  காணிக்கை  கொண்டுவராமல்  அவனை  அசட்டைபண்ணினார்கள்;  அவனோ  காதுகேளாதவன்போல  இருந்தான்.  (1சாமுவேல்  10:27)

aanaalum  bealiyaa'lin  makka'l:  ivanaa  nammai  radchikkappoagi’ravan  en’ru  solli,  avanukkuk  kaa'nikkai  ko'nduvaraamal  avanai  asattaipa'n'ninaarga'l;  avanoa  kaathukea'laathavanpoala  irunthaan.  (1saamuveal  10:27)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!