Saturday, August 20, 2016

1 Saamuveal 1 | 1 சாமுவேல் 1 | 1 Samuel 1

எப்பிராயீம்  மலைத்தேசத்திலிருக்கிற  சோப்பீம்  என்னப்பட்ட  ராமதாயீம்  ஊரானாகிய  ஒரு  மனுஷன்  இருந்தான்;  அவனுக்கு  எல்க்கானா  என்று  பேர்;  அவன்  எப்பிராயீமியனாகிய  சூப்புக்குப்  பிறந்த  தோகுவின்  குமாரனாகிய  எலிகூவின்  மகனான  எரோகாமின்  புத்திரன்.  (1சாமுவேல்  1:1)

eppiraayeem  malaiththeasaththilirukki’ra  soappeem  ennappatta  raamathaayeem  ooraanaagiya  oru  manushan  irunthaan;  avanukku  elkkaanaa  en’ru  pear;  avan  eppiraayeemiyanaagiya  sooppukkup  pi’rantha  thoaguvin  kumaaranaagiya  eligoovin  maganaana  eroagaamin  puththiran.  (1saamuveal  1:1)

அவனுக்கு  இரண்டு  மனைவிகள்  இருந்தார்கள்;  ஒருத்திபேர்  அன்னாள்,  மற்றவள்பேர்  பெனின்னாள்;  பெனின்னாளுக்குப்  பிள்ளைகள்  இருந்தார்கள்;  அன்னாளுக்கோ  பிள்ளை  இல்லை.  (1சாமுவேல்  1:2)

avanukku  ira'ndu  manaiviga'l  irunthaarga'l;  oruththipear  annaa'l,  mat’rava'lpear  peninnaa'l;  peninnaa'lukkup  pi'l'laiga'l  irunthaarga'l;  annaa'lukkoa  pi'l'lai  illai.  (1saamuveal  1:2)

அந்த  மனுஷன்  சீலோவிலே  சேனைகளின்  கர்த்தரைப்  பணிந்துகொள்ளவும்  அவருக்குப்  பலியிடவும்  வருஷந்தோறும்  தன்  ஊரிலிருந்து  போய்வருவான்;  அங்கே  கர்த்தரின்  ஆசாரியரான  ஏலியின்  இரண்டு  குமாரராகிய  ஓப்னியும்  பினெகாசும்  இருந்தார்கள்.  (1சாமுவேல்  1:3)

antha  manushan  seeloavilea  seanaiga'lin  karththaraip  pa'ninthuko'l'lavum  avarukkup  baliyidavum  varushanthoa’rum  than  oorilirunthu  poayvaruvaan;  anggea  karththarin  aasaariyaraana  ealiyin  ira'ndu  kumaararaagiya  oapniyum  pinegaasum  irunthaarga'l.  (1saamuveal  1:3)

அங்கே  எல்க்கானா  பலியிடும்  நாளிலே,  அவன்  தன்  மனைவியாகிய  பெனின்னாளுக்கும்,  அவளுடைய  எல்லாக்  குமாரருக்கும்  குமாரத்திகளுக்கும்,  பங்குபோட்டுக்  கொடுப்பான்.  (1சாமுவேல்  1:4)

anggea  elkkaanaa  baliyidum  naa'lilea,  avan  than  manaiviyaagiya  peninnaa'lukkum,  ava'ludaiya  ellaak  kumaararukkum  kumaaraththiga'lukkum,  panggupoattuk  koduppaan.  (1saamuveal  1:4)

அன்னாளைச்  சிநேகித்தபடியினால்,  அவளுக்கு  இரட்டிப்பான  பங்கு  கொடுப்பான்;  கர்த்தரோ  அவள்  கர்ப்பத்தை  அடைத்திருந்தார்.  (1சாமுவேல்  1:5)

annaa'laich  sineagiththapadiyinaal,  ava'lukku  irattippaana  panggu  koduppaan;  karththaroa  ava'l  karppaththai  adaiththirunthaar.  (1saamuveal  1:5)

கர்த்தர்  அவள்  கர்ப்பத்தை  அடைத்தபடியினால்,  அவளுடைய  சக்களத்தி  அவள்  துக்கப்படும்படியாக  அவளை  மிகவும்  விசனப்படுத்துவாள்.  (1சாமுவேல்  1:6)

karththar  ava'l  karppaththai  adaiththapadiyinaal,  ava'ludaiya  sakka'laththi  ava'l  thukkappadumpadiyaaga  ava'lai  migavum  visanappaduththuvaa'l.  (1saamuveal  1:6)

அவள்  கர்த்தருடைய  ஆலயத்திற்குப்  போகும்  சமயத்தில்,  அவன்  வருஷந்தோறும்  அந்தப்பிரகாரமாய்ச்  செய்வான்;  இவள்  அவளை  மனமடிவாக்குவாள்;  அப்பொழுது  அவள்  சாப்பிடாமல்  அழுதுகொண்டிருப்பாள்.  (1சாமுவேல்  1:7)

ava'l  karththarudaiya  aalayaththi’rkup  poagum  samayaththil,  avan  varushanthoa’rum  anthappiragaaramaaych  seyvaan;  iva'l  ava'lai  manamadivaakkuvaa'l;  appozhuthu  ava'l  saappidaamal  azhuthuko'ndiruppaa'l.  (1saamuveal  1:7)

அவள்  புருஷனாகிய  எல்க்கானா  அவளைப்  பார்த்து:  அன்னாளே,  ஏன்  அழுகிறாய்?  ஏன்  சாப்பிடாதிருக்கிறாய்?  ஏன்  சஞ்சலப்படுகிறாய்?  பத்துக்  குமாரரைப்பார்க்கிலும்  நான்  உனக்கு  அதிகமல்லவா  என்றான்.  (1சாமுவேல்  1:8)

ava'l  purushanaagiya  elkkaanaa  ava'laip  paarththu:  annaa'lea,  ean  azhugi’raay?  ean  saappidaathirukki’raay?  ean  sagnchalappadugi’raay?  paththuk  kumaararaippaarkkilum  naan  unakku  athigamallavaa  en’raan.  (1saamuveal  1:8)

சீலோவிலே  அவர்கள்  புசித்துக்  குடித்தபின்பு,  அன்னாள்  எழுந்திருந்தாள்;  ஆசாரியனாகிய  ஏலி  கர்த்தருடைய  ஆலயத்தின்  வாசல்  நிலையண்டையிலே  ஒரு  ஆசனத்தின்மேல்  உட்கார்ந்திருந்தான்.  (1சாமுவேல்  1:9)

seeloavilea  avarga'l  pusiththuk  kudiththapinbu,  annaa'l  ezhunthirunthaa'l;  aasaariyanaagiya  eali  karththarudaiya  aalayaththin  vaasal  nilaiya'ndaiyilea  oru  aasanaththinmeal  udkaarnthirunthaan.  (1saamuveal  1:9)

அவள்  போய்,  மனங்கசந்து,  மிகவும்  அழுது,  கர்த்தரை  நோக்கி  விண்ணப்பம்பண்ணி:  (1சாமுவேல்  1:10)

ava'l  poay,  manangkasanthu,  migavum  azhuthu,  karththarai  noakki  vi'n'nappampa'n'ni:  (1saamuveal  1:10)

சேனைகளின்  கர்த்தாவே,  தேவரீர்  உம்முடைய  அடியாளின்  சிறுமையைக்  கண்ணோக்கிப்  பார்த்து,  உம்முடைய  அடியாளை  மறவாமல்  நினைந்தருளி,  உமது  அடியாளுக்கு  ஒரு  ஆண்  பிள்ளையைக்  கொடுத்தால்,  அவன்  உயிரோடிருக்கும்  சகல  நாளும்  நான்  அவனைக்  கர்த்தருக்கு  ஒப்புக்கொடுப்பேன்;  அவன்  தலையின்மேல்  சவரகன்  கத்தி  படுவதில்லை  என்று  ஒரு  பொருத்தனை  பண்ணினாள்.  (1சாமுவேல்  1:11)

seanaiga'lin  karththaavea,  theavareer  ummudaiya  adiyaa'lin  si’rumaiyaik  ka'n'noakkip  paarththu,  ummudaiya  adiyaa'lai  ma’ravaamal  ninaintharu'li,  umathu  adiyaa'lukku  oru  aa'n  pi'l'laiyaik  koduththaal,  avan  uyiroadirukkum  sagala  naa'lum  naan  avanaik  karththarukku  oppukkoduppean;  avan  thalaiyinmeal  savaragan  kaththi  paduvathillai  en’ru  oru  poruththanai  pa'n'ninaa'l.  (1saamuveal  1:11)

அவள்  கர்த்தருடைய  சந்நிதியில்  வெகுநேரம்  விண்ணப்பம்பண்ணுகிறபோது,  ஏலி  அவள்  வாயைக்  கவனித்துக்கொண்டிருந்தான்.  (1சாமுவேல்  1:12)

ava'l  karththarudaiya  sannithiyil  vegunearam  vi'n'nappampa'n'nugi’rapoathu,  eali  ava'l  vaayaik  kavaniththukko'ndirunthaan.  (1saamuveal  1:12)

அன்னாள்  தன்  இருதயத்திலே  பேசினாள்;  அவளுடைய  உதடுகள்  மாத்திரம்  அசைந்தது,  அவள்  சத்தமோ  கேட்கப்படவில்லை;  ஆகையால்  அவள்  வெறித்திருக்கிறாள்  என்று  ஏலி  நினைத்து,  (1சாமுவேல்  1:13)

annaa'l  than  iruthayaththilea  peasinaa'l;  ava'ludaiya  uthaduga'l  maaththiram  asainthathu,  ava'l  saththamoa  keadkappadavillai;  aagaiyaal  ava'l  ve’riththirukki’raa'l  en’ru  eali  ninaiththu,  (1saamuveal  1:13)

அவளை  நோக்கி:  நீ  எதுவரைக்கும்  வெறித்திருப்பாய்?  உன்  குடியை  உன்னைவிட்டு  விலக்கு  என்றான்.  (1சாமுவேல்  1:14)

ava'lai  noakki:  nee  ethuvaraikkum  ve’riththiruppaay?  un  kudiyai  unnaivittu  vilakku  en’raan.  (1saamuveal  1:14)

அதற்கு  அன்னாள்  பிரதியுத்தரமாக:  அப்படியல்ல,  என்  ஆண்டவனே,  நான்  மனக்கிலேசமுள்ள  ஸ்திரீ;  நான்  திராட்சரசமாகிலும்  மதுவாகிலும்  குடிக்கவில்லை;  நான்  கர்த்தருடைய  சந்நிதியில்  என்  இருதயத்தை  ஊற்றிவிட்டேன்.  (1சாமுவேல்  1:15)

atha’rku  annaa'l  pirathiyuththaramaaga:  appadiyalla,  en  aa'ndavanea,  naan  manakkileasamu'l'la  sthiree;  naan  thiraadcharasamaagilum  mathuvaagilum  kudikkavillai;  naan  karththarudaiya  sannithiyil  en  iruthayaththai  oot’rivittean.  (1saamuveal  1:15)

உம்முடைய  அடியாளைப்  பேலியாளின்  மகளாக  எண்ணாதேயும்;  மிகுதியான  விசாரத்தினாலும்  கிலேசத்தினாலும்  இந்நேரமட்டும்  விண்ணப்பம்பண்ணினேன்  என்றாள்.  (1சாமுவேல்  1:16)

ummudaiya  adiyaa'laip  bealiyaa'lin  maga'laaga  e'n'naatheayum;  miguthiyaana  visaaraththinaalum  kileasaththinaalum  innearamattum  vi'n'nappampa'n'ninean  en’raa'l.  (1saamuveal  1:16)

அதற்கு  ஏலி  சமாதானத்துடனே  போ;  நீ  இஸ்ரவேலின்  தேவனிடத்தில்  கேட்ட  உன்  விண்ணப்பத்தின்படி  அவர்  உனக்குக்  கட்டளையிடுவாராக  என்றான்.  (1சாமுவேல்  1:17)

atha’rku  eali  samaathaanaththudanea  poa;  nee  isravealin  theavanidaththil  keatta  un  vi'n'nappaththinpadi  avar  unakkuk  katta'laiyiduvaaraaga  en’raan.  (1saamuveal  1:17)

அப்பொழுது  அவள்:  உம்முடைய  அடியாளுக்கு  உம்முடைய  கண்களிலே  தயைகிடைக்கக்கடவது  என்றாள்;  பின்பு  அந்த  ஸ்திரீ  புறப்பட்டுப்போய்,  போஜனஞ்செய்தாள்;  அப்புறம்  அவள்  துக்கமுகமாயிருக்கவில்லை.  (1சாமுவேல்  1:18)

appozhuthu  ava'l:  ummudaiya  adiyaa'lukku  ummudaiya  ka'nga'lilea  thayaikidaikkakkadavathu  en’raa'l;  pinbu  antha  sthiree  pu’rappattuppoay,  poajanagnseythaa'l;  appu’ram  ava'l  thukkamugamaayirukkavillai.  (1saamuveal  1:18)

அவர்கள்  அதிகாலையில்  எழுந்து,  கர்த்தரைப்  பணிந்துகொண்டு,  ராமாவிலிருக்கிற  தங்கள்  வீட்டுக்குத்  திரும்பிப்போனார்கள்;  எல்க்கானா  தன்  மனைவியாகிய  அன்னாளை  அறிந்தான்;  கர்த்தர்  அவளை  நினைந்தருளினார்.  (1சாமுவேல்  1:19)

avarga'l  athikaalaiyil  ezhunthu,  karththaraip  pa'ninthuko'ndu,  raamaavilirukki’ra  thangga'l  veettukkuth  thirumbippoanaarga'l;  elkkaanaa  than  manaiviyaagiya  annaa'lai  a’rinthaan;  karththar  ava'lai  ninaintharu'linaar.  (1saamuveal  1:19)

சிலநாள்  சென்றபின்பு  அன்னாள்  கர்ப்பவதியாகி,  ஒரு  குமாரனைப்  பெற்று,  கர்த்தரிடத்தில்  அவனைக்  கேட்டேன்  என்று  சொல்லி,  அவனுக்கு  சாமுவேல்  என்று  பேரிட்டாள்.  (1சாமுவேல்  1:20)

silanaa'l  sen’rapinbu  annaa'l  karppavathiyaagi,  oru  kumaaranaip  pet’ru,  karththaridaththil  avanaik  keattean  en’ru  solli,  avanukku  saamuveal  en’ru  pearittaa'l.  (1saamuveal  1:20)

எல்க்கானா  என்பவன்  கர்த்தருக்கு  வருஷாந்தரம்  செலுத்தும்  பலியையும்  தன்  பொருத்தனையையும்  செலுத்தும்படியாக,  தன்  வீட்டார்  அனைவரோடுங்கூடப்  போனான்.  (1சாமுவேல்  1:21)

elkkaanaa  enbavan  karththarukku  varushaantharam  seluththum  baliyaiyum  than  poruththanaiyaiyum  seluththumpadiyaaga,  than  veettaar  anaivaroadungkoodap  poanaan.  (1saamuveal  1:21)

அன்னாள்  கூடப்போகவில்லை;  அவள்:  பிள்ளை  பால்மறந்தபின்பு,  அவன்  கர்த்தரின்  சந்நிதியிலே  காணப்படவும்,  அங்கே  எப்பொழுதும்  இருக்கவும்,  நான்  அவனைக்  கொண்டுபோய்  விடுவேன்  என்று  தன்  புருஷனிடத்தில்  சொன்னாள்.  (1சாமுவேல்  1:22)

annaa'l  koodappoagavillai;  ava'l:  pi'l'lai  paalma’ranthapinbu,  avan  karththarin  sannithiyilea  kaa'nappadavum,  anggea  eppozhuthum  irukkavum,  naan  avanaik  ko'ndupoay  viduvean  en’ru  than  purushanidaththil  sonnaa'l.  (1saamuveal  1:22)

அப்பொழுது  அவள்  புருஷனாகிய  எல்க்கானா  அவளை  நோக்கி:  நீ  உன்  இஷ்டப்படி  செய்து,  அவனைப்  பால்மறக்கப்பண்ணுமட்டும்  இரு;  கர்த்தர்  தம்முடைய  வார்த்தையைமாத்திரம்  நிறைவேற்றுவாராக  என்றான்;  அப்படியே  அந்த  ஸ்திரீ  தன்  பிள்ளையைப்  பால்  மறக்கப்பண்ணுமட்டும்  அதற்கு  முலைகொடுத்தாள்.  (1சாமுவேல்  1:23)

appozhuthu  ava'l  purushanaagiya  elkkaanaa  ava'lai  noakki:  nee  un  ishdappadi  seythu,  avanaip  paalma’rakkappa'n'numattum  iru;  karththar  thammudaiya  vaarththaiyaimaaththiram  ni’raiveat’ruvaaraaga  en’raan;  appadiyea  antha  sthiree  than  pi'l'laiyaip  paal  ma’rakkappa'n'numattum  atha’rku  mulaikoduththaa'l.  (1saamuveal  1:23)

அவள்  அவனைப்  பால்மறக்கப்  பண்ணினபின்பு,  மூன்று  காளைகளையும்,  ஒரு  மரக்கால்  மாவையும்,  ஒரு  துருத்தி  திராட்சரசத்தையும்  எடுத்துக்கொண்டு,  அவனையும்  கூட்டிக்கொண்டு,  சீலோவிலிருக்கிற  கர்த்தருடைய  ஆலயத்துக்குப்  போனாள்;  பிள்ளை  இன்னும்  குழந்தையாயிருந்தது.  (1சாமுவேல்  1:24)

ava'l  avanaip  paalma’rakkap  pa'n'ninapinbu,  moon’ru  kaa'laiga'laiyum,  oru  marakkaal  maavaiyum,  oru  thuruththi  thiraadcharasaththaiyum  eduththukko'ndu,  avanaiyum  koottikko'ndu,  seeloavilirukki’ra  karththarudaiya  aalayaththukkup  poanaa'l;  pi'l'lai  innum  kuzhanthaiyaayirunthathu.  (1saamuveal  1:24)

அவர்கள்  ஒரு  காளையைப்  பலியிட்டு,  பிள்ளையை  ஏலியினிடத்தில்  கொண்டுவந்து  விட்டார்கள்.  (1சாமுவேல்  1:25)

avarga'l  oru  kaa'laiyaip  baliyittu,  pi'l'laiyai  ealiyinidaththil  ko'nduvanthu  vittaarga'l.  (1saamuveal  1:25)

அப்பொழுது  அவள்:  என்  ஆண்டவனே,  இங்கே  உம்மண்டையிலே  நின்று  கர்த்தரை  நோக்கி  விண்ணப்பம்பண்ணின  ஸ்திரீ  நான்தான்  என்று  என்  ஆண்டவனாகிய  உம்முடைய  ஜீவனைக்கொண்டு  சொல்லுகிறேன்.  (1சாமுவேல்  1:26)

appozhuthu  ava'l:  en  aa'ndavanea,  inggea  umma'ndaiyilea  nin’ru  karththarai  noakki  vi'n'nappampa'n'nina  sthiree  naanthaan  en’ru  en  aa'ndavanaagiya  ummudaiya  jeevanaikko'ndu  sollugi’rean.  (1saamuveal  1:26)

இந்தப்  பிள்ளைக்காக  விண்ணப்பம்பண்ணினேன்;  நான்  கர்த்தரிடத்தில்  கேட்ட  என்  விண்ணப்பத்தின்படி  எனக்குக்  கட்டளையிட்டார்.  (1சாமுவேல்  1:27)

inthap  pi'l'laikkaaga  vi'n'nappampa'n'ninean;  naan  karththaridaththil  keatta  en  vi'n'nappaththinpadi  enakkuk  katta'laiyittaar.  (1saamuveal  1:27)

ஆகையால்  அவன்  கர்த்தருக்கென்று  கேட்கப்பட்டபடியினால்,  அவன்  உயிரோடிருக்கும்  சகல  நாளும்  அவனைக்  கர்த்தருக்கே  ஒப்புக்கொடுக்கிறேன்  என்றாள்;  அவன்  அங்கே  கர்த்தரைப்  பணிந்துகொண்டான்.  (1சாமுவேல்  1:28)

aagaiyaal  avan  karththarukken’ru  keadkappattapadiyinaal,  avan  uyiroadirukkum  sagala  naa'lum  avanaik  karththarukkea  oppukkodukki’rean  en’raa'l;  avan  anggea  karththaraip  pa'ninthuko'ndaan.  (1saamuveal  1:28)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!