Sunday, July 10, 2016

Yoaveal 3 | யோவேல் 3 | Joel 3

இதோ,  யூதாவுக்கும்  எருசலேமுக்கும்  உண்டாயிருக்கிற  சிறையிருப்பை  நான்  திருப்பும்  அந்நாட்களிலும்  அக்காலத்திலும்,  (யோவேல்  3:1)

ithoa,  yoothaavukkum  erusaleamukkum  u'ndaayirukki’ra  si’raiyiruppai  naan  thiruppum  annaadka'lilum  akkaalaththilum,  (yoaveal  3:1)

நான்  சகல  ஜாதியாரையும்  கூட்டி,  யோசபாத்தின்  பள்ளத்தாக்கிலே  அவர்களை  இறங்கிப்போகப்பண்ணி,  அவர்கள்  என்  ஜனத்தையும்  இஸ்ரவேலென்னும்  என்  சுதந்தரத்தையும்  புறஜாதிகளுக்குள்ளே  சிதறடித்து  என்  தேசத்தைப்  பங்கிட்டுக்கொண்டதினிமித்தமும்,  (யோவேல்  3:2)

naan  sagala  jaathiyaaraiyum  kootti,  yoasapaaththin  pa'l'laththaakkilea  avarga'lai  i’ranggippoagappa'n'ni,  avarga'l  en  janaththaiyum  isravealennum  en  suthantharaththaiyum  pu’rajaathiga'lukku'l'lea  sitha’radiththu  en  theasaththaip  panggittukko'ndathinimiththamum,  (yoaveal  3:2)

அவர்கள்  என்  ஜனத்தின்பேரில்  சீட்டுப்போட்டு,  ஆண்குழந்தைகளை  வேசிப்பணையமாகக்  கொடுத்து,  மதுபானம்  பண்ணும்படி,  பெண்  குழந்தைகளைத்  திராட்சரசத்துக்குக்  கிரயமாகக்  கொடுத்ததினிமித்தமும்,  அங்கே  அவர்களோடு  வழக்காடுவேன்.  (யோவேல்  3:3)

avarga'l  en  janaththinpearil  seettuppoattu,  aa'nkuzhanthaiga'lai  veasippa'naiyamaagak  koduththu,  mathubaanam  pa'n'numpadi,  pe'n  kuzhanthaiga'laith  thiraadcharasaththukkuk  kirayamaagak  koduththathinimiththamum,  anggea  avarga'loadu  vazhakkaaduvean.  (yoaveal  3:3)

தீருவே,  சீதோனே,  பெலிஸ்தியாவின்  சகல  எல்லைகளே,  உங்களுக்கும்  எனக்கும்  என்ன?  இப்படி  எனக்குச்  சரிக்கட்டுகிறீர்களோ?  இப்படி  எனக்குச்  சரிக்கட்டுவீர்களாகில்,  நான்  தாமதமின்றி  அதிசீக்கிரமாய்  நீங்கள்  சரிக்கட்டுகிறதை  உங்கள்  தலையின்மேல்  திரும்பும்படி  செய்வேன்.  (யோவேல்  3:4)

theeruvea,  seethoanea,  pelisthiyaavin  sagala  ellaiga'lea,  ungga'lukkum  enakkum  enna?  ippadi  enakkuch  sarikkattugi’reerga'loa?  ippadi  enakkuch  sarikkattuveerga'laagil,  naan  thaamathamin’ri  athiseekkiramaay  neengga'l  sarikkattugi’rathai  ungga'l  thalaiyinmeal  thirumbumpadi  seyvean.  (yoaveal  3:4)

நீங்கள்  என்  வெள்ளியையும்  என்  பொன்னையும்  எடுத்து,  இன்பமும்  உச்சிதமுமான  என்  பொருள்களை  உங்கள்  கோவில்களிலே  கொண்டுபோய்,  (யோவேல்  3:5)

neengga'l  en  ve'l'liyaiyum  en  ponnaiyum  eduththu,  inbamum  uchchithamumaana  en  poru'lga'lai  ungga'l  koavilga'lilea  ko'ndupoay,  (yoaveal  3:5)

யூதாவின்  குமாரரையும்  எருசலேமின்  குமாரரையும்  அவர்களுடைய  எல்லைகளுக்குத்  தூரமாக்கும்படிக்கு,  கிரேக்கரிடத்தில்  விற்றுப்போட்டீர்கள்.  (யோவேல்  3:6)

yoothaavin  kumaararaiyum  erusaleamin  kumaararaiyum  avarga'ludaiya  ellaiga'lukkuth  thooramaakkumpadikku,  kireakkaridaththil  vit’ruppoatteerga'l.  (yoaveal  3:6)

இதோ,  நீங்கள்  அவர்களை  விற்றுப்போட்ட  அவ்விடத்திலிருந்து  நான்  அவர்களை  எழும்பிவரப்பண்ணி,  நீங்கள்  சரிக்கட்டினதை  உங்கள்  தலையின்மேல்  திரும்பும்படி  செய்து,  (யோவேல்  3:7)

ithoa,  neengga'l  avarga'lai  vit’ruppoatta  avvidaththilirunthu  naan  avarga'lai  ezhumbivarappa'n'ni,  neengga'l  sarikkattinathai  ungga'l  thalaiyinmeal  thirumbumpadi  seythu,  (yoaveal  3:7)

உங்கள்  குமாரரையும்  உங்கள்  குமாரத்திகளையும்  யூதா  புத்திரரின்  கையிலே  விற்பேன்;  இவர்கள்  அவர்களைத்  தூரதேசத்தாராகிய  சபேயரிடத்தில்  விற்றுப்போடுவார்கள்;  கர்த்தர்  இதைச்  சொன்னார்.  (யோவேல்  3:8)

ungga'l  kumaararaiyum  ungga'l  kumaaraththiga'laiyum  yoothaa  puththirarin  kaiyilea  vi’rpean;  ivarga'l  avarga'laith  thooratheasaththaaraagiya  sabeayaridaththil  vit’ruppoaduvaarga'l;  karththar  ithaich  sonnaar.  (yoaveal  3:8)

இதைப்  புறஜாதிகளுக்குள்ளே  கூறுங்கள்;  யுத்தத்துக்கு  ஆயத்தம்பண்ணுங்கள்,  பராக்கிரமசாலிகளை  எழுப்புங்கள்;  யுத்தவீரர்  எல்லாரும்  சேர்ந்து  ஏறிவரக்கடவர்கள்.  (யோவேல்  3:9)

ithaip  pu’rajaathiga'lukku'l'lea  koo’rungga'l;  yuththaththukku  aayaththampa'n'nungga'l,  baraakkiramasaaliga'lai  ezhuppungga'l;  yuththaveerar  ellaarum  searnthu  ea’rivarakkadavarga'l.  (yoaveal  3:9)

உங்கள்  மண்வெட்டிகளைப்  பட்டயங்களாகவும்,  உங்கள்  அரிவாள்களை  ஈட்டிகளாகவும்  அடியுங்கள்;  பலவீனனும்  தன்னைப்  பலவான்  என்று  சொல்வானாக.  (யோவேல்  3:10)

ungga'l  ma'nvettiga'laip  pattayangga'laagavum,  ungga'l  arivaa'lga'lai  eettiga'laagavum  adiyungga'l;  balaveenanum  thannaip  balavaan  en’ru  solvaanaaga.  (yoaveal  3:10)

சகல  ஜாதிகளே,  நீங்கள்  சுற்றிலுமிருந்து  ஏகமாய்  வந்து  கூடுங்கள்;  கர்த்தாவே,  நீரும்  அங்கே  உம்முடைய  பராக்கிரமசாலிகளை  இறங்கப்பண்ணுவீராக.  (யோவேல்  3:11)

sagala  jaathiga'lea,  neengga'l  sut’rilumirunthu  eagamaay  vanthu  koodungga'l;  karththaavea,  neerum  anggea  ummudaiya  baraakkiramasaaliga'lai  i’ranggappa'n'nuveeraaga.  (yoaveal  3:11)

ஜாதிகள்  எழும்பி  யோசபாத்தின்  பள்ளத்தாக்குக்கு  வருவார்களாக;  சுற்றிலுமுள்ள  ஜாதிகளை  நியாயந்தீர்க்க  அங்கே  நான்  வீற்றிருப்பேன்.  (யோவேல்  3:12)

jaathiga'l  ezhumbi  yoasapaaththin  pa'l'laththaakkukku  varuvaarga'laaga;  sut’rilumu'l'la  jaathiga'lai  niyaayantheerkka  anggea  naan  veet’riruppean.  (yoaveal  3:12)

பயிர்  முதிர்ந்தது,  அரிவாளை  நீட்டி  அறுங்கள்,  வந்து  இறங்குங்கள்;  ஆலை  நிரம்பியிருக்கிறது,  ஆலையின்  தொட்டிகள்  வழிந்தோடுகிறது;  அவர்களுடைய  பாதகம்  பெரியது.  (யோவேல்  3:13)

payir  muthirnthathu,  arivaa'lai  neetti  a’rungga'l,  vanthu  i’ranggungga'l;  aalai  nirambiyirukki’rathu,  aalaiyin  thottiga'l  vazhinthoadugi’rathu;  avarga'ludaiya  paathagam  periyathu.  (yoaveal  3:13)

நியாயத்தீர்ப்பின்  பள்ளத்தாக்கிலே  ஜனங்கள்  திரள்திரளாய்  இருக்கிறார்கள்;  நியாயத்தீர்ப்பின்  பள்ளத்தாக்கிலே  கர்த்தரின்  நாள்  சமீபமாயிருக்கிறது.  (யோவேல்  3:14)

niyaayaththeerppin  pa'l'laththaakkilea  janangga'l  thira'lthira'laay  irukki’raarga'l;  niyaayaththeerppin  pa'l'laththaakkilea  karththarin  naa'l  sameebamaayirukki’rathu.  (yoaveal  3:14)

சூரியனும்  சந்திரனும்  இருண்டுபோகும்,  நட்சத்திரங்கள்  ஒளிமழுங்கும்.  (யோவேல்  3:15)

sooriyanum  santhiranum  iru'ndupoagum,  nadchaththirangga'l  o'limazhunggum.  (yoaveal  3:15)

கர்த்தர்  சீயோனிலிருந்து  கெர்ச்சித்து,  எருசலேமிலிருந்து  சத்தமிடுவார்;  வானமும்  பூமியும்  அதிரும்;  ஆனாலும்  கர்த்தர்  தமது  ஜனத்துக்கு  அடைக்கலமும்  இஸ்ரவேல்  புத்திரருக்கு  அரணான  கோட்டையுமாயிருப்பார்.  (யோவேல்  3:16)

karththar  seeyoanilirunthu  kerchchiththu,  erusaleamilirunthu  saththamiduvaar;  vaanamum  boomiyum  athirum;  aanaalum  karththar  thamathu  janaththukku  adaikkalamum  israveal  puththirarukku  ara'naana  koattaiyumaayiruppaar.  (yoaveal  3:16)

என்  பரிசுத்த  பர்வதமாகிய  சீயோனிலே  வாசமாயிருக்கிற  நான்  உங்கள்  தேவனாகிய  கர்த்தர்  என்று  அப்பொழுது  அறிந்துகொள்வீர்கள்;  அப்பொழுது  எருசலேம்  பரிசுத்தமாயிருக்கும்;  அந்நியர்  இனி  அதைக்  கடந்துபோவதில்லை.  (யோவேல்  3:17)

en  parisuththa  parvathamaagiya  seeyoanilea  vaasamaayirukki’ra  naan  ungga'l  theavanaagiya  karththar  en’ru  appozhuthu  a’rinthuko'lveerga'l;  appozhuthu  erusaleam  parisuththamaayirukkum;  anniyar  ini  athaik  kadanthupoavathillai.  (yoaveal  3:17)

அக்காலத்தில்  பர்வதங்கள்  திராட்சரசத்தைப்  பொழியும்,  மலைகள்  பாலாய்  ஓடும்,  யூதாவின்  ஆறுகள்  எல்லாம்  பிரவாகித்து  ஓடும்;  ஒரு  ஊற்று  கர்த்தருடைய  ஆலயத்திலிருந்து  புறப்பட்டுச்  சித்தீம்  என்னும்  பள்ளத்தாக்கை  நீர்ப்பாய்ச்சலாக்கும்.  (யோவேல்  3:18)

akkaalaththil  parvathangga'l  thiraadcharasaththaip  pozhiyum,  malaiga'l  paalaay  oadum,  yoothaavin  aa’ruga'l  ellaam  piravaagiththu  oadum;  oru  oot’ru  karththarudaiya  aalayaththilirunthu  pu’rappattuch  siththeem  ennum  pa'l'laththaakkai  neerppaaychchalaakkum.  (yoaveal  3:18)

யூதா  புத்திரரின்  தேசத்திலே  குற்றமில்லாத  இரத்தத்தைச்  சிந்தி,  அவர்களுக்குச்  செய்த  கொடுமையினிமித்தம்  எகிப்து  பாழாய்ப்போகும்,  ஏதோம்  பாழான  வனாந்தரமாகும்.  (யோவேல்  3:19)

yoothaa  puththirarin  theasaththilea  kut’ramillaatha  iraththaththaich  sinthi,  avarga'lukkuch  seytha  kodumaiyinimiththam  egipthu  paazhaayppoagum,  eathoam  paazhaana  vanaantharamaagum.  (yoaveal  3:19)

ஆனால்  யூதாவோ  சதாகாலமாகவும்,  எருசலேம்  தலைமுறை  தலைமுறையாகவும்  குடியேற்றப்பட்டிருக்கும்.  (யோவேல்  3:20)

aanaal  yoothaavoa  sathaakaalamaagavum,  erusaleam  thalaimu’rai  thalaimu’raiyaagavum  kudiyeat’rappattirukkum.  (yoaveal  3:20)

நான்  தண்டியாமல்  விட்டிருந்த  அவர்களுடைய  இரத்தப்பழியைத்  தண்டியாமல்  விடேன்;  கர்த்தர்  சீயோனிலே  வாசமாயிருக்கிறார்.  (யோவேல்  3:21)

naan  tha'ndiyaamal  vittiruntha  avarga'ludaiya  iraththappazhiyaith  tha'ndiyaamal  videan;  karththar  seeyoanilea  vaasamaayirukki’raar.  (yoaveal  3:21)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!