Friday, July 08, 2016

Yoanaa 4 | யோனா 4 | Jonah 4

யோனாவுக்கு  இது  மிகவும்  விசனமாயிருந்தது;  அவன்  கடுங்கோபங்கொண்டு,  (யோனா  4:1)

yoanaavukku  ithu  migavum  visanamaayirunthathu;  avan  kadungkoabangko'ndu,  (yoanaa  4:1)

கர்த்தரை  நோக்கி  விண்ணப்பம்பண்ணி:    கர்த்தாவே,  நான்  என்  தேசத்தில்  இருக்கும்போதே  நான்  இதைச்  சொல்லவில்லையா?  இதினிமித்தமே  நான்  முன்னமே  தர்ஷீசுக்கு  ஓடிப்போனேன்;  நீர்  இரக்கமும்  மன  உருக்கமும்  நீடிய  சாந்தமும்  மிகுந்த  கிருபையுமுள்ளவரும்,  தீங்குக்கு  மனஸ்தாபப்படுகிறவருமான  தேவனென்று  அறிவேன்.  (யோனா  4:2)

karththarai  noakki  vi'n'nappampa'n'ni:  aa  karththaavea,  naan  en  theasaththil  irukkumpoathea  naan  ithaich  sollavillaiyaa?  ithinimiththamea  naan  munnamea  tharsheesukku  oadippoanean;  neer  irakkamum  mana  urukkamum  neediya  saanthamum  miguntha  kirubaiyumu'l'lavarum,  theenggukku  manasthaabappadugi’ravarumaana  theavanen’ru  a’rivean.  (yoanaa  4:2)

இப்போதும்  கர்த்தாவே,  என்  பிராணனை  என்னைவிட்டு  எடுத்துக்கொள்ளும்;  நான்  உயிரோடிருக்கிறதைப்பார்க்கிலும்  சாகிறது  நலமாயிருக்கும்  என்றான்.  (யோனா  4:3)

ippoathum  karththaavea,  en  piraa'nanai  ennaivittu  eduththukko'l'lum;  naan  uyiroadirukki’rathaippaarkkilum  saagi’rathu  nalamaayirukkum  en’raan.  (yoanaa  4:3)

அதற்குக்  கர்த்தர்:  நீ  எரிச்சலாயிருக்கிறது  நல்லதோ  என்றார்.  (யோனா  4:4)

atha’rkuk  karththar:  nee  erichchalaayirukki’rathu  nallathoa  en’raar.  (yoanaa  4:4)

பின்பு  யோனா  நகரத்திலிருந்து  புறப்பட்டு,  நகரத்துக்குக்  கிழக்கேபோய்,  அங்கே  தனக்கு  ஒரு  குடிசையைப்  போட்டு,  நகரத்துக்குச்  சம்பவிக்கப்போகிறதைத்  தான்  பார்க்குமட்டும்  அதின்  கீழ்  நிழலில்  உட்கார்ந்திருந்தான்.  (யோனா  4:5)

pinbu  yoanaa  nagaraththilirunthu  pu’rappattu,  nagaraththukkuk  kizhakkeapoay,  anggea  thanakku  oru  kudisaiyaip  poattu,  nagaraththukkuch  sambavikkappoagi’rathaith  thaan  paarkkumattum  athin  keezh  nizhalil  udkaarnthirunthaan.  (yoanaa  4:5)

யோனாவுடைய  தலையின்மேல்  நிழலுண்டாயிருக்கவும்,  அவனை  அவனுடைய  மனமடிவுக்கு  நீங்கலாக்கவும்  தேவனாகிய  கர்த்தர்  ஒரு  ஆமணக்குச்  செடியை  முளைக்கக்  கட்டளையிட்டு,  அதை  அவன்மேல்  ஓங்கி  வளரப்பண்ணினார்;  அந்த  ஆமணக்கின்மேல்  யோனா  மிகவும்  சந்தோஷப்பட்டான்.  (யோனா  4:6)

yoanaavudaiya  thalaiyinmeal  nizhalu'ndaayirukkavum,  avanai  avanudaiya  manamadivukku  neenggalaakkavum  theavanaagiya  karththar  oru  aama'nakkuch  sediyai  mu'laikkak  katta'laiyittu,  athai  avanmeal  oanggi  va'larappa'n'ninaar;  antha  aama'nakkinmeal  yoanaa  migavum  santhoashappattaan.  (yoanaa  4:6)

மறுநாளிலோ  கிழக்கு  வெளுக்கும்  நேரத்தில்  தேவன்  ஒரு  பூச்சியைக்  கட்டளையிட்டார்;  அது  ஆமணக்குச்  செடியை  அரித்துப்போட்டது;  அதினால்  அது  காய்ந்துபோயிற்று.  (யோனா  4:7)

ma’runaa'liloa  kizhakku  ve'lukkum  nearaththil  theavan  oru  poochchiyaik  katta'laiyittaar;  athu  aama'nakkuch  sediyai  ariththuppoattathu;  athinaal  athu  kaaynthupoayit’ru.  (yoanaa  4:7)

சூரியன்  உதித்தபோது  தேவன்  உஷ்ணமான  கீழ்க்காற்றைக்  கட்டளையிட்டார்;  அப்பொழுது  வெயில்  யோனாவுடைய  தலையில்  படுகிறதினால்  அவன்  சோர்ந்துபோய்,  தனக்குள்ளே  சாவை  விரும்பி:  நான்  உயிரோடிருக்கிறதைப்பார்க்கிலும்  சாகிறது  நலமாயிருக்கும்  என்றான்.  (யோனா  4:8)

sooriyan  uthiththapoathu  theavan  ush'namaana  keezhkkaat’raik  katta'laiyittaar;  appozhuthu  veyil  yoanaavudaiya  thalaiyil  padugi’rathinaal  avan  soarnthupoay,  thanakku'l'lea  saavai  virumbi:  naan  uyiroadirukki’rathaippaarkkilum  saagi’rathu  nalamaayirukkum  en’raan.  (yoanaa  4:8)

அப்பொழுது  தேவன்  யோனாவை  நோக்கி:  நீ  ஆமணக்கினிமித்தம்  எரிச்சலாயிருக்கிறது  நல்லதோ  என்றார்;  அதற்கு  அவன்:  நான்  மரணபரியந்தமும்  எரிச்சலாயிருக்கிறது  நல்லதுதான்  என்றான்.  (யோனா  4:9)

appozhuthu  theavan  yoanaavai  noakki:  nee  aama'nakkinimiththam  erichchalaayirukki’rathu  nallathoa  en’raar;  atha’rku  avan:  naan  mara'napariyanthamum  erichchalaayirukki’rathu  nallathuthaan  en’raan.  (yoanaa  4:9)

அதற்குக்  கர்த்தர்:  நீ  பிரயாசப்படாததும்,  நீ  வளர்க்காததும்,  ஒரு  இராத்திரியிலே  முளைத்ததும்,  ஒரு  இராத்திரியிலே  அழிந்துபோனதுமான  ஆமணக்குக்காகப்  பரிதபிக்கிறாயே.  (யோனா  4:10)

atha’rkuk  karththar:  nee  pirayaasappadaathathum,  nee  va'larkkaathathum,  oru  iraaththiriyilea  mu'laiththathum,  oru  iraaththiriyilea  azhinthupoanathumaana  aama'nakkukkaagap  parithabikki’raayea.  (yoanaa  4:10)

வலதுகைக்கும்  இடதுகைக்கும்  வித்தியாசம்  அறியாத  இலட்சத்து  இருபதினாயிரம்பேருக்கு  அதிகமான  மனுஷரும்  அநேக  மிருகஜீவன்களும்  இருக்கிற  மகா  நகரமாகிய  நினிவேக்காக  நான்  பரிதபியாமலிருப்பேனோ  என்றார்.  (யோனா  4:11)

valathukaikkum  idathukaikkum  viththiyaasam  a’riyaatha  iladchaththu  irubathinaayirampearukku  athigamaana  manusharum  aneaga  mirugajeevanga'lum  irukki’ra  mahaa  nagaramaagiya  niniveakkaaga  naan  parithabiyaamaliruppeanoa  en’raar.  (yoanaa  4:11)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!