Friday, July 08, 2016

Yoanaa 3 | யோனா 3 | Jonah 3

இரண்டாந்தரம்  கர்த்தருடைய  வார்த்தை  யோனாவுக்கு  உண்டாகி,  அவர்:  (யோனா  3:1)

ira'ndaantharam  karththarudaiya  vaarththai  yoanaavukku  u'ndaagi,  avar:  (yoanaa  3:1)

நீ  எழுந்து  மகா  நகரமாகிய  நினிவேக்குப்  போய்,  நான்  உனக்குக்  கற்பிக்கும்  வார்த்தையை  அதற்கு  விரோதமாய்ப்  பிரசங்கி  என்றார்.  (யோனா  3:2)

nee  ezhunthu  mahaa  nagaramaagiya  niniveakkup  poay,  naan  unakkuk  ka’rpikkum  vaarththaiyai  atha’rku  viroathamaayp  pirasanggi  en’raar.  (yoanaa  3:2)

யோனா  எழுந்து,  கர்த்தருடைய  வார்த்தையின்படியே  நினிவேக்குப்  போனான்;  நினிவே  மூன்றுநாள்  பிரயாண  விஸ்தாரமான  மகா  பெரிய  நகரமாயிருந்தது.  (யோனா  3:3)

yoanaa  ezhunthu,  karththarudaiya  vaarththaiyinpadiyea  niniveakkup  poanaan;  ninivea  moon’runaa'l  pirayaa'na  visthaaramaana  mahaa  periya  nagaramaayirunthathu.  (yoanaa  3:3)

யோனா  நகரத்தில்  பிரவேசித்து,  ஒருநாள்  பிரயாணம்பண்ணி:  இன்னும்  நாற்பதுநாள்  உண்டு,  அப்பொழுது  நினிவே  கவிழ்க்கப்பட்டுப்போம்  என்று  கூறினான்.  (யோனா  3:4)

yoanaa  nagaraththil  piraveasiththu,  orunaa'l  pirayaa'nampa'n'ni:  innum  naa’rpathunaa'l  u'ndu,  appozhuthu  ninivea  kavizhkkappattuppoam  en’ru  koo’rinaan.  (yoanaa  3:4)

அப்பொழுது  நினிவேயிலுள்ள  ஜனங்கள்  தேவனை  விசுவாசித்து,  உபவாசஞ்செய்யும்படிக்  கூறினார்கள்;  பெரியோர்முதல்  சிறியோர்மட்டும்  இரட்டுடுத்திக்கொண்டார்கள்.  (யோனா  3:5)

appozhuthu  niniveayilu'l'la  janangga'l  theavanai  visuvaasiththu,  ubavaasagnseyyumpadik  koo’rinaarga'l;  periyoarmuthal  si’riyoarmattum  irattuduththikko'ndaarga'l.  (yoanaa  3:5)

இந்தச்  செய்தி  நினிவேயின்  ராஜாவுக்கு  எட்டினபோது,  அவன்  தன்  சிங்காசனத்தைவிட்டு  எழுந்து,  தான்  உடுத்தியிருந்த  உடுப்பைக்  கழற்றிப்போட்டு,  இரட்டை  உடுத்திக்கொண்டு,  சாம்பலிலே  உட்கார்ந்தான்.  (யோனா  3:6)

inthach  seythi  niniveayin  raajaavukku  ettinapoathu,  avan  than  singgaasanaththaivittu  ezhunthu,  thaan  uduththiyiruntha  uduppaik  kazhat’rippoattu,  irattai  uduththikko'ndu,  saambalilea  udkaarnthaan.  (yoanaa  3:6)

மேலும்  ராஜா,  தானும்  தன்  பிரதானிகளும்  நிர்ணயம்பண்ணின  கட்டளையாக,  நினிவேயிலெங்கும்  மனுஷரும்  மிருகங்களும்,  மாடுகளும்  ஆடுகளும்  ஒன்றும்  ருசிபாராதிருக்கவும்,  மேயாமலும்  தண்ணீர்  குடியாமலும்  இருக்கவும்,  (யோனா  3:7)

mealum  raajaa,  thaanum  than  pirathaaniga'lum  nir'nayampa'n'nina  katta'laiyaaga,  niniveayilenggum  manusharum  mirugangga'lum,  maaduga'lum  aaduga'lum  on’rum  rusipaaraathirukkavum,  meayaamalum  tha'n'neer  kudiyaamalum  irukkavum,  (yoanaa  3:7)

மனுஷரும்  மிருகங்களும்  இரட்டினால்  மூடிக்கொண்டு,  தேவனை  நோக்கி  உரத்த  சத்தமாய்க்  கூப்பிடவும்,  அவரவர்  தம்தம்  பொல்லாத  வழியையும்  தம்தம்  கைகளிலுள்ள  கொடுமையையும்  விட்டுத்  திரும்பவுங்கடவர்கள்.  (யோனா  3:8)

manusharum  mirugangga'lum  irattinaal  moodikko'ndu,  theavanai  noakki  uraththa  saththamaayk  kooppidavum,  avaravar  thamtham  pollaatha  vazhiyaiyum  thamtham  kaiga'lilu'l'la  kodumaiyaiyum  vittuth  thirumbavungkadavarga'l.  (yoanaa  3:8)

யாருக்குத்  தெரியும்;  நாம்  அழிந்து  போகாதபடிக்கு  ஒருவேளை  தேவன்  மனஸ்தாபப்பட்டு,  தம்முடைய  உக்கிர  கோபத்தைவிட்டுத்  திரும்பினாலும்  திரும்புவார்  என்று  கூறச்சொன்னான்.  (யோனா  3:9)

yaarukkuth  theriyum;  naam  azhinthu  poagaathapadikku  oruvea'lai  theavan  manasthaabappattu,  thammudaiya  ukkira  koabaththaivittuth  thirumbinaalum  thirumbuvaar  en’ru  koo’rachsonnaan.  (yoanaa  3:9)

அவர்கள்  தங்கள்  பொல்லாத  வழியைவிட்டுத்  திரும்பினார்களென்று  தேவன்  அவர்களுடைய  கிரியைகளைப்  பார்த்து,  தாம்  அவர்களுக்குச்  செய்வேன்  என்று  சொல்லியிருந்த  தீங்கைக்  குறித்து  மனஸ்தாபப்பட்டு,  அதைச்  செய்யாதிருந்தார்.  (யோனா  3:10)

avarga'l  thangga'l  pollaatha  vazhiyaivittuth  thirumbinaarga'len’ru  theavan  avarga'ludaiya  kiriyaiga'laip  paarththu,  thaam  avarga'lukkuch  seyvean  en’ru  solliyiruntha  theenggaik  ku’riththu  manasthaabappattu,  athaich  seyyaathirunthaar.  (yoanaa  3:10)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!