Friday, July 08, 2016

Yoanaa 1 | யோனா 1 | Jonah 1

அமித்தாயின்  குமாரனாகிய  யோனாவுக்குக்  கர்த்தருடைய  வார்த்தை  உண்டாகி,  அவர்:  (யோனா  1:1)

amiththaayin  kumaaranaagiya  yoanaavukkuk  karththarudaiya  vaarththai  u'ndaagi,  avar:  (yoanaa  1:1)

நீ  எழுந்து  மகா  நகரமாகிய  நினிவேக்குப்  போய்,  அதற்கு  விரோதமாகப்  பிரசங்கி;  அவர்களுடைய  அக்கிரமம்  என்  சமுகத்தில்  வந்து  எட்டினது  என்றார்.  (யோனா  1:2)

nee  ezhunthu  mahaa  nagaramaagiya  niniveakkup  poay,  atha’rku  viroathamaagap  pirasanggi;  avarga'ludaiya  akkiramam  en  samugaththil  vanthu  ettinathu  en’raar.  (yoanaa  1:2)

அப்பொழுது  யோனா  கர்த்தருடைய  சமுகத்தினின்று  விலகி,  தர்ஷீசுக்கு  ஓடிப்போகும்படி  எழுந்து,  யோப்பாவுக்குப்  போய்,  தர்ஷீசுக்குப்  போகிற  ஒரு  கப்பலைக்கண்டு,  கூலி  கொடுத்து,  தான்  கர்த்தருடைய  சமுகத்தினின்று  விலகும்படி,  அவர்களோடே  தர்ஷீசுக்குப்  போகக்  கப்பல்  ஏறினான்.  (யோனா  1:3)

appozhuthu  yoanaa  karththarudaiya  samugaththinin’ru  vilagi,  tharsheesukku  oadippoagumpadi  ezhunthu,  yoappaavukkup  poay,  tharsheesukkup  poagi’ra  oru  kappalaikka'ndu,  kooli  koduththu,  thaan  karththarudaiya  samugaththinin’ru  vilagumpadi,  avarga'loadea  tharsheesukkup  poagak  kappal  ea’rinaan.  (yoanaa  1:3)

கர்த்தர்  சமுத்திரத்தின்மேல்  பெருங்காற்றை  வரவிட்டார்;  அதினால்  கடலிலே  கப்பல்  உடையுமென்று  நினைக்கத்தக்க  பெரிய  கொந்தளிப்பு  உண்டாயிற்று.  (யோனா  1:4)

karththar  samuththiraththinmeal  perungkaat’rai  varavittaar;  athinaal  kadalilea  kappal  udaiyumen’ru  ninaikkaththakka  periya  kontha'lippu  u'ndaayit’ru.  (yoanaa  1:4)

அப்பொழுது  கப்பற்காரர்  பயந்து,  அவனவன்  தன்தன்  தேவனை  நோக்கி  வேண்டுதல்செய்து,  பாரத்தை  லேசாக்கும்படிக்  கப்பலில்  இருந்த  சரக்குகளைச்  சமுத்திரத்தில்  எறிந்துவிட்டார்கள்;  யோனாவோவென்றால்  கப்பலின்  கீழ்த்தட்டில்  இறங்கிபோய்ப்  படுத்துக்கொண்டு,  அயர்ந்த  நித்திரைபண்ணினான்.  (யோனா  1:5)

appozhuthu  kappa’rkaarar  bayanthu,  avanavan  thanthan  theavanai  noakki  vea'nduthalseythu,  baaraththai  leasaakkumpadik  kappalil  iruntha  sarakkuga'laich  samuththiraththil  e’rinthuvittaarga'l;  yoanaavoaven’raal  kappalin  keezhththattil  i’ranggipoayp  paduththukko'ndu,  ayarntha  niththiraipa'n'ninaan.  (yoanaa  1:5)

அப்பொழுது  மாலுமி  அவனிடத்தில்  வந்து:  நீ  நித்திரைபண்ணுகிறது  என்ன?  எழுந்திருந்து  உன்  தேவனை  நோக்கி  வேண்டிக்கொள்;  நாம்  அழிந்துபோகாதபடிக்குச்  சுவாமி  ஒருவேளை  நம்மை  நினைத்தருளுவார்  என்றான்.  (யோனா  1:6)

appozhuthu  maalumi  avanidaththil  vanthu:  nee  niththiraipa'n'nugi’rathu  enna?  ezhunthirunthu  un  theavanai  noakki  vea'ndikko'l;  naam  azhinthupoagaathapadikkuch  suvaami  oruvea'lai  nammai  ninaiththaru'luvaar  en’raan.  (yoanaa  1:6)

அவர்கள்  யார்நிமித்தம்  இந்த  ஆபத்து  நமக்கு  நேரிட்டதென்று  நாம்  அறியும்படிக்குச்  சீட்டுப்போடுவோம்  வாருங்கள்  என்று  ஒருவரோடொருவர்  சொல்லிக்கொண்டு  சீட்டுப்போட்டார்கள்;  யோனாவின்  பேருக்குச்  சீட்டு  விழுந்தது.  (யோனா  1:7)

avarga'l  yaarnimiththam  intha  aabaththu  namakku  nearittathen’ru  naam  a’riyumpadikkuch  seettuppoaduvoam  vaarungga'l  en’ru  oruvaroadoruvar  sollikko'ndu  seettuppoattaarga'l;  yoanaavin  pearukkuch  seettu  vizhunthathu.  (yoanaa  1:7)

அப்பொழுது  அவர்கள்  அவனை  நோக்கி:  யார்நிமித்தம்  இந்த  ஆபத்து  நமக்கு  நேரிட்டதென்று  நீ  எங்களுக்குச்  சொல்லவேண்டும்;  உன்  தொழிலென்ன?  நீ  எங்கேயிருந்து  வருகிறாய்?  உன்  தேசம்  எது?  நீ  என்ன  ஜாதியான்  என்று  கேட்டார்கள்.  (யோனா  1:8)

appozhuthu  avarga'l  avanai  noakki:  yaarnimiththam  intha  aabaththu  namakku  nearittathen’ru  nee  engga'lukkuch  sollavea'ndum;  un  thozhilenna?  nee  enggeayirunthu  varugi’raay?  un  theasam  ethu?  nee  enna  jaathiyaan  en’ru  keattaarga'l.  (yoanaa  1:8)

அதற்கு  அவன்:  நான்  எபிரெயன்;  சமுத்திரத்தையும்  பூமியையும்  உண்டாக்கின  பரலோகத்தின்  தேவனாகிய  கர்த்தர்  இடத்தில்  பயபக்தியுள்ளவன்  என்றான்.  (யோனா  1:9)

atha’rku  avan:  naan  ebireyan;  samuththiraththaiyum  boomiyaiyum  u'ndaakkina  paraloagaththin  theavanaagiya  karththar  idaththil  bayabakthiyu'l'lavan  en’raan.  (yoanaa  1:9)

அவன்  கர்த்தருடைய  சமுகத்தினின்று  விலகி  ஓடிப்போகிறவன்  என்று  தங்களுக்கு  அறிவித்ததினால்,  அந்த  மனுஷர்  மிகவும்  பயந்து,  அவனை  நோக்கி:  நீ  ஏன்  இதைச்  செய்தாய்  என்றார்கள்.  (யோனா  1:10)

avan  karththarudaiya  samugaththinin’ru  vilagi  oadippoagi’ravan  en’ru  thangga'lukku  a’riviththathinaal,  antha  manushar  migavum  bayanthu,  avanai  noakki:  nee  ean  ithaich  seythaay  en’raarga'l.  (yoanaa  1:10)

பின்னும்  சமுத்திரம்  அதிகமாய்க்  கொந்தளித்துக்கொண்டிருந்தபடியால்,  அவர்கள்  அவனை  நோக்கி:  சமுத்திரம்  நமக்கு  அமரும்படி  நாங்கள்  உனக்கு  என்ன  செய்யவேண்டும்  என்று  கேட்டார்கள்.  (யோனா  1:11)

pinnum  samuththiram  athigamaayk  kontha'liththukko'ndirunthapadiyaal,  avarga'l  avanai  noakki:  samuththiram  namakku  amarumpadi  naangga'l  unakku  enna  seyyavea'ndum  en’ru  keattaarga'l.  (yoanaa  1:11)

அதற்கு  அவன்:  நீங்கள்  என்னை  எடுத்துச்  சமுத்திரத்திலே  போட்டுவிடுங்கள்;  அப்பொழுது  சமுத்திரம்  உங்களுக்கு  அமர்ந்திருக்கும்;  என்னிமித்தம்  இந்தப்  பெரிய  கொந்தளிப்பு  உங்கள்மேல்  வந்ததென்பதை  நான்  அறிவேன்  என்றான்.  (யோனா  1:12)

atha’rku  avan:  neengga'l  ennai  eduththuch  samuththiraththilea  poattuvidungga'l;  appozhuthu  samuththiram  ungga'lukku  amarnthirukkum;  ennimiththam  inthap  periya  kontha'lippu  ungga'lmeal  vanthathenbathai  naan  a’rivean  en’raan.  (yoanaa  1:12)

அந்த  மனுஷர்  கரைசேரும்படி  வேகமாய்த்  தண்டுவலித்தார்கள்;  ஆனாலும்  சமுத்திரம்  வெகு  மும்முரமாய்க்  கொந்தளித்துக்கொண்டேயிருந்தபடியால்  அவர்களால்  கூடாமற்போயிற்று.  (யோனா  1:13)

antha  manushar  karaisearumpadi  veagamaayth  tha'nduvaliththaarga'l;  aanaalum  samuththiram  vegu  mummuramaayk  kontha'liththukko'ndeayirunthapadiyaal  avarga'laal  koodaama’rpoayit’ru.  (yoanaa  1:13)

அப்பொழுது  அவர்கள்  கர்த்தரை  நோக்கிக்  கூப்பிட்டு:    கர்த்தாவே,  இந்த  மனுஷனுடைய  ஜீவனிமித்தம்  எங்களை  அழித்துப்போடாதேயும்;  குற்றமில்லாத  இரத்தப்பழியை  எங்கள்மேல்  சுமத்தாதேயும்;  தேவரீர்  கர்த்தர்;  உமக்குச்  சித்தமாயிருக்கிறபடி  செய்கிறீர்  என்று  சொல்லி,  (யோனா  1:14)

appozhuthu  avarga'l  karththarai  noakkik  kooppittu:  aa  karththaavea,  intha  manushanudaiya  jeevanimiththam  engga'lai  azhiththuppoadaatheayum;  kut’ramillaatha  iraththappazhiyai  engga'lmeal  sumaththaatheayum;  theavareer  karththar;  umakkuch  siththamaayirukki’rapadi  seygi’reer  en’ru  solli,  (yoanaa  1:14)

யோனாவை  எடுத்துச்  சமுத்திரத்திலே  போட்டுவிட்டார்கள்;  சமுத்திரம்  தன்  மும்முரத்தைவிட்டு  அமர்ந்தது.  (யோனா  1:15)

yoanaavai  eduththuch  samuththiraththilea  poattuvittaarga'l;  samuththiram  than  mummuraththaivittu  amarnthathu.  (yoanaa  1:15)

அப்பொழுது  அந்த  மனுஷர்  கர்த்தருக்கு  மிகவும்  பயந்து,  கர்த்தருக்குப்  பலியிட்டுப்  பொருத்தனைகளைப்  பண்ணினார்கள்.  (யோனா  1:16)

appozhuthu  antha  manushar  karththarukku  migavum  bayanthu,  karththarukkup  baliyittup  poruththanaiga'laip  pa'n'ninaarga'l.  (yoanaa  1:16)

யோனாவை  விழுங்கும்படி  ஒரு  பெரிய  மீனைக்  கர்த்தர்  ஆயத்தப்படுத்தியிருந்தார்;  அந்த  மீன்  வயிற்றிலே  யோனா  இராப்பகல்  மூன்றுநாள்  இருந்தான்.  (யோனா  1:17)

yoanaavai  vizhunggumpadi  oru  periya  meenaik  karththar  aayaththappaduththiyirunthaar;  antha  meen  vayit’rilea  yoanaa  iraappagal  moon’runaa'l  irunthaan.  (yoanaa  1:17)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!