Saturday, July 09, 2016

Yoabu 2 | யோபு 2 | Job 2

பின்னொருநாளிலே  தேவபுத்திரர்  கர்த்தருடைய  சந்நிதியில்  வந்து  நின்றபோது,  சாத்தானும்  அவர்கள்  நடுவிலே  கர்த்தருடைய  சந்நிதியில்  வந்து  நின்றான்.  (யோபு  2:1)

pinnorunaa'lilea  theavapuththirar  karththarudaiya  sannithiyil  vanthu  nin’rapoathu,  saaththaanum  avarga'l  naduvilea  karththarudaiya  sannithiyil  vanthu  nin’raan.  (yoabu  2:1)

கர்த்தர்  சாத்தானைப்  பார்த்து:  நீ  எங்கேயிருந்து  வருகிறாய்  என்றார்;  சாத்தான்  கர்த்தருக்குப்  பிரதியுத்தரமாக:  பூமியெங்கும்  உலாவி,  அதில்  சுற்றித்திரிந்து  வருகிறேன்  என்றான்.  (யோபு  2:2)

karththar  saaththaanaip  paarththu:  nee  enggeayirunthu  varugi’raay  en’raar;  saaththaan  karththarukkup  pirathiyuththaramaaga:  boomiyenggum  ulaavi,  athil  sut’riththirinthu  varugi’rean  en’raan.  (yoabu  2:2)

அப்பொழுது  கர்த்தர்  சாத்தானை  நோக்கி:  நீ  என்  தாசனாகிய  யோபின்மேல்  கவனம்  வைத்தாயோ?  உத்தமனும்  சன்மார்க்கனும்,  தேவனுக்குப்  பயந்து,  பொல்லாப்புக்கு  விலகுகிறவனுமான  மனுஷனாகிய  அவனைப்போல  பூமியில்  ஒருவனுமில்லை;  முகாந்தரமில்லாமல்  அவனை  நிர்மூலமாக்கும்படி  நீ  என்னை  ஏவினபோதிலும்,  அவன்  இன்னும்  தன்  உத்தமத்திலே  உறுதியாய்  நிற்கிறான்  என்றார்.  (யோபு  2:3)

appozhuthu  karththar  saaththaanai  noakki:  nee  en  thaasanaagiya  yoabinmeal  kavanam  vaiththaayoa?  uththamanum  sanmaarkkanum,  theavanukkup  bayanthu,  pollaappukku  vilagugi’ravanumaana  manushanaagiya  avanaippoala  boomiyil  oruvanumillai;  mugaantharamillaamal  avanai  nirmoolamaakkumpadi  nee  ennai  eavinapoathilum,  avan  innum  than  uththamaththilea  u’ruthiyaay  ni’rki’raan  en’raar.  (yoabu  2:3)

சாத்தான்  கர்த்தருக்குப்  பிரதியுத்தரமாக:  தோலுக்குப்  பதிலாகத்  தோலையும்,  தன்  ஜீவனுக்குப்  பதிலாகத்  தனக்கு  உண்டான  எல்லாவற்றையும்,  மனுஷன்  கொடுத்துவிடுவான்.  (யோபு  2:4)

saaththaan  karththarukkup  pirathiyuththaramaaga:  thoalukkup  bathilaagath  thoalaiyum,  than  jeevanukkup  bathilaagath  thanakku  u'ndaana  ellaavat’raiyum,  manushan  koduththuviduvaan.  (yoabu  2:4)

ஆனாலும்  நீர்  உம்முடைய  கையை  நீட்டி,  அவன்  எலும்பையும்  அவன்  மாம்சத்தையும்  தொடுவீரானால்,  அப்பொழுது  அவன்  உமது  முகத்துக்கு  எதிரே  உம்மைத்  தூஷிக்கானோ  பாரும்  என்றான்.  (யோபு  2:5)

aanaalum  neer  ummudaiya  kaiyai  neetti,  avan  elumbaiyum  avan  maamsaththaiyum  thoduveeraanaal,  appozhuthu  avan  umathu  mugaththukku  ethirea  ummaith  thooshikkaanoa  paarum  en’raan.  (yoabu  2:5)

அப்பொழுது  கர்த்தர்  சாத்தானை  நோக்கி:  இதோ,  அவன்  உன்  கையிலிருக்கிறான்;  ஆகிலும்  அவன்  பிராணனைமாத்திரம்  தப்பவிடு  என்றார்.  (யோபு  2:6)

appozhuthu  karththar  saaththaanai  noakki:  ithoa,  avan  un  kaiyilirukki’raan;  aagilum  avan  piraa'nanaimaaththiram  thappavidu  en’raar.  (yoabu  2:6)

அப்பொழுது  சாத்தான்  கர்த்தருடைய  சந்நிதியைவிட்டுப்  புறப்பட்டு,  யோபின்  உள்ளங்கால்தொடங்கி  அவன்  உச்சந்தலைமட்டும்  கொடிய  பருக்களால்  அவனை  வாதித்தான்.  (யோபு  2:7)

appozhuthu  saaththaan  karththarudaiya  sannithiyaivittup  pu’rappattu,  yoabin  u'l'langkaalthodanggi  avan  uchchanthalaimattum  kodiya  parukka'laal  avanai  vaathiththaan.  (yoabu  2:7)

அவன்  ஒரு  ஓட்டை  எடுத்து,  தன்னைச்  சுறண்டிக்கொண்டு  சாம்பலில்  உட்கார்ந்தான்.  (யோபு  2:8)

avan  oru  oattai  eduththu,  thannaich  su’ra'ndikko'ndu  saambalil  udkaarnthaan.  (yoabu  2:8)

அப்பொழுது  அவன்  மனைவி  அவனைப்  பார்த்து:  நீர்  இன்னும்  உம்முடைய  உத்தமத்தில்  உறுதியாய்  நிற்கிறீரோ?  தேவனைத்  தூஷித்து  ஜீவனை  விடும்  என்றாள்.  (யோபு  2:9)

appozhuthu  avan  manaivi  avanaip  paarththu:  neer  innum  ummudaiya  uththamaththil  u’ruthiyaay  ni’rki’reeroa?  theavanaith  thooshiththu  jeevanai  vidum  en’raa'l.  (yoabu  2:9)

அதற்கு  அவன்:  நீ  பயித்தியக்காரி  பேசுகிறதுபோலப்  பேசுகிறாய்;  தேவன்  கையிலே  நன்மையைப்  பெற்ற  நாம்  தீமையையும்  பெறவேண்டாமோ  என்றான்;  இவைகள்  எல்லாவற்றிலும்  யோபு  தன்  உதடுகளினால்  பாவஞ்செய்யவில்லை.  (யோபு  2:10)

atha’rku  avan:  nee  payiththiyakkaari  peasugi’rathupoalap  peasugi’raay;  theavan  kaiyilea  nanmaiyaip  pet’ra  naam  theemaiyaiyum  pe’ravea'ndaamoa  en’raan;  ivaiga'l  ellaavat’rilum  yoabu  than  uthaduga'linaal  paavagnseyyavillai.  (yoabu  2:10)

யோபுடைய  மூன்று  சிநேகிதராகிய  தேமானியனான  எலிப்பாசும்,  சூகியனான  பில்தாதும்,  நாகமாத்தியனான  சோப்பாரும்,  யோபுக்கு  நேரிட்ட  தீமைகள்  யாவையும்  கேள்விப்பட்டபோது,  அவனுக்காகப்  பரிதபிக்கவும்,  அவனுக்கு  ஆறுதல்சொல்லவும்,  ஒருவரோடொருவர்  யோசனைபண்ணிக்கொண்டு,  அவரவர்  தங்கள்  ஸ்தலங்களிலிருந்து  வந்தார்கள்.  (யோபு  2:11)

yoabudaiya  moon’ru  sineagitharaagiya  theamaaniyanaana  elippaasum,  soogiyanaana  bilthaathum,  naagamaaththiyanaana  soappaarum,  yoabukku  nearitta  theemaiga'l  yaavaiyum  kea'lvippattapoathu,  avanukkaagap  parithabikkavum,  avanukku  aa’ruthalsollavum,  oruvaroadoruvar  yoasanaipa'n'nikko'ndu,  avaravar  thangga'l  sthalangga'lilirunthu  vanthaarga'l.  (yoabu  2:11)

அவர்கள்  தூரத்தில்  வருகையில்  தங்கள்  கண்களை  ஏறெடுத்துப்  பார்த்தபோது,  அவனை  உருத்தெரியாமல்,  சத்தமிட்டு  அழுது,  அவரவர்  தங்கள்  சால்வையைக்  கிழித்து,  வானத்தைப்  பார்த்து:  தங்கள்  தலைகள்மேல்  புழுதியைத்  தூற்றிக்கொண்டு,  (யோபு  2:12)

avarga'l  thooraththil  varugaiyil  thangga'l  ka'nga'lai  ea’reduththup  paarththapoathu,  avanai  uruththeriyaamal,  saththamittu  azhuthu,  avaravar  thangga'l  saalvaiyaik  kizhiththu,  vaanaththaip  paarththu:  thangga'l  thalaiga'lmeal  puzhuthiyaith  thoot’rikko'ndu,  (yoabu  2:12)

வந்து,  அவன்  துக்கம்  மகாகொடிய  துக்கம்  என்று  கண்டு,  ஒருவரும்  அவனோடு  ஒரு  வார்த்தையையும்  பேசாமல்,  இரவுபகல்  ஏழுநாள்,  அவனோடுகூடத்  தரையிலே  உட்கார்ந்திருந்தார்கள்.  (யோபு  2:13)

vanthu,  avan  thukkam  mahaakodiya  thukkam  en’ru  ka'ndu,  oruvarum  avanoadu  oru  vaarththaiyaiyum  peasaamal,  iravupagal  eazhunaa'l,  avanoadukoodath  tharaiyilea  udkaarnthirunthaarga'l.  (yoabu  2:13)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!