Saturday, July 09, 2016

Yoabu 1 | யோபு 1 | Job 1

ஊத்ஸ்  தேசத்திலே  யோபு  என்னும்  பேர்கொண்ட  ஒரு  மனுஷன்  இருந்தான்;  அந்த  மனுஷன்  உத்தமனும்  சன்மார்க்கனும்,  தேவனுக்குப்  பயந்து,  பொல்லாப்புக்கு  விலகுகிறவனுமாயிருந்தான்.  (யோபு  1:1)

ooths  theasaththilea  yoabu  ennum  pearko'nda  oru  manushan  irunthaan;  antha  manushan  uththamanum  sanmaarkkanum,  theavanukkup  bayanthu,  pollaappukku  vilagugi’ravanumaayirunthaan.  (yoabu  1:1)

அவனுக்கு  ஏழு  குமாரரும்,  மூன்று  குமாரத்திகளும்  பிறந்தார்கள்.  (யோபு  1:2)

avanukku  eazhu  kumaararum,  moon’ru  kumaaraththiga'lum  pi’ranthaarga'l.  (yoabu  1:2)

அவனுக்கு  ஏழாயிரம்  ஆடுகளும்,  மூவாயிரம்  ஒட்டகங்களும்,  ஐந்நூறு  ஏர்மாடுகளும்,  ஐந்நூறு  கழுதைகளுமாகிய  மிருகஜீவன்கள்  இருந்ததுமன்றி,  திரளான  பணிவிடைக்காரரும்  இருந்தார்கள்;  அதினால்  அந்த  மனுஷன்  கிழக்கத்திப்  புத்திரர்  எல்லாரிலும்  பெரியவனாயிருந்தான்.  (யோபு  1:3)

avanukku  eazhaayiram  aaduga'lum,  moovaayiram  ottagangga'lum,  ainnoo’ru  earmaaduga'lum,  ainnoo’ru  kazhuthaiga'lumaagiya  mirugajeevanga'l  irunthathuman’ri,  thira'laana  pa'nividaikkaararum  irunthaarga'l;  athinaal  antha  manushan  kizhakkaththip  puththirar  ellaarilum  periyavanaayirunthaan.  (yoabu  1:3)

அவன்  குமாரர்,  அவனவன்  தன்தன்  நாளிலே  தன்தன்  வீட்டிலே  விருந்துசெய்து,  தங்கள்  மூன்று  சகோதரிகளையும்  தங்களோடே  போஜனம்  பண்ணும்படி  அழைப்பார்கள்.  (யோபு  1:4)

avan  kumaarar,  avanavan  thanthan  naa'lilea  thanthan  veettilea  virunthuseythu,  thangga'l  moon’ru  sagoathariga'laiyum  thangga'loadea  poajanam  pa'n'numpadi  azhaippaarga'l.  (yoabu  1:4)

விருந்துசெய்கிற  அவரவருடைய  நாள்முறை  முடிகிறபோது,  யோபு:  ஒருவேளை  என்  குமாரர்  பாவஞ்செய்து,  தேவனைத்  தங்கள்  இருதயத்திலே  தூஷித்திருப்பார்கள்  என்று  சொல்லி,  அவர்களை  அழைத்தனுப்பி,  பரிசுத்தப்படுத்தி,  அதிகாலமே  எழுந்து,  அவர்கள்  எல்லாருடைய  இலக்கத்தின்படியேயும்  சர்வாங்க  தகனபலிகளைச்  செலுத்துவான்;  இந்தப்பிரகாரமாக  யோபு  அந்நாட்களிலெல்லாம்  செய்துவருவான்.  (யோபு  1:5)

virunthuseygi’ra  avaravarudaiya  naa'lmu’rai  mudigi’rapoathu,  yoabu:  oruvea'lai  en  kumaarar  paavagnseythu,  theavanaith  thangga'l  iruthayaththilea  thooshiththiruppaarga'l  en’ru  solli,  avarga'lai  azhaiththanuppi,  parisuththappaduththi,  athikaalamea  ezhunthu,  avarga'l  ellaarudaiya  ilakkaththinpadiyeayum  sarvaangga  thaganabaliga'laich  seluththuvaan;  inthappiragaaramaaga  yoabu  annaadka'lilellaam  seythuvaruvaan.  (yoabu  1:5)

ஒருநாள்  தேவபுத்திரர்  கர்த்தருடைய  சந்நிதியில்  வந்து  நின்றபோது,  சாத்தானும்  அவர்கள்  நடுவிலே  வந்து  நின்றான்.  (யோபு  1:6)

orunaa'l  theavapuththirar  karththarudaiya  sannithiyil  vanthu  nin’rapoathu,  saaththaanum  avarga'l  naduvilea  vanthu  nin’raan.  (yoabu  1:6)

கர்த்தர்  சாத்தானைப்  பார்த்து:  நீ  எங்கேயிருந்து  வருகிறாய்  என்றார்.  சாத்தான்  கர்த்தருக்குப்  பிரதியுத்தரமாக:  பூமியெங்கும்  உலாவி,  அதில்  சுற்றித்திரிந்து  வருகிறேன்  என்றான்.  (யோபு  1:7)

karththar  saaththaanaip  paarththu:  nee  enggeayirunthu  varugi’raay  en’raar.  saaththaan  karththarukkup  pirathiyuththaramaaga:  boomiyenggum  ulaavi,  athil  sut’riththirinthu  varugi’rean  en’raan.  (yoabu  1:7)

கர்த்தர்  சாத்தானை  நோக்கி:  என்  தாசனாகிய  யோபின்மேல்  கவனம்  வைத்தாயோ?  உத்தமனும்  சன்மார்க்கனும்,  தேவனுக்குப்  பயந்து,  பொல்லாப்புக்கு  விலகுகிறவனுமாகிய  அவனைப்போலப்  பூமியில்  ஒருவனும்  இல்லை  என்றார்.  (யோபு  1:8)

karththar  saaththaanai  noakki:  en  thaasanaagiya  yoabinmeal  kavanam  vaiththaayoa?  uththamanum  sanmaarkkanum,  theavanukkup  bayanthu,  pollaappukku  vilagugi’ravanumaagiya  avanaippoalap  boomiyil  oruvanum  illai  en’raar.  (yoabu  1:8)

அதற்குச்  சாத்தான்  கர்த்தருக்குப்  பிரதியுத்தரமாக:  யோபு  விருதாவாகவா  தேவனுக்குப்  பயந்து  நடக்கிறான்?  (யோபு  1:9)

atha’rkuch  saaththaan  karththarukkup  pirathiyuththaramaaga:  yoabu  viruthaavaagavaa  theavanukkup  bayanthu  nadakki’raan?  (yoabu  1:9)

நீர்  அவனையும்  அவன்  வீட்டையும்  அவனுக்கு  உண்டான  எல்லாவற்றையும்  சுற்றி  வேலியடைக்கவில்லையோ?  அவன்  கைகளின்  கிரியையை  ஆசீர்வதித்தீர்;  அவனுடைய  சம்பத்து  தேசத்தில்  பெருகிற்று.  (யோபு  1:10)

neer  avanaiyum  avan  veettaiyum  avanukku  u'ndaana  ellaavat’raiyum  sut’ri  vealiyadaikkavillaiyoa?  avan  kaiga'lin  kiriyaiyai  aaseervathiththeer;  avanudaiya  sambaththu  theasaththil  perugit’ru.  (yoabu  1:10)

ஆனாலும்  உம்முடைய  கையை  நீட்டி  அவனுக்கு  உண்டானவையெல்லாம்  தொடுவீரானால்,  அப்பொழுது  அவன்  உமது  முகத்துக்கு  எதிரே  உம்மைத்  தூஷிக்கானோ  பாரும்  என்றான்.  (யோபு  1:11)

aanaalum  ummudaiya  kaiyai  neetti  avanukku  u'ndaanavaiyellaam  thoduveeraanaal,  appozhuthu  avan  umathu  mugaththukku  ethirea  ummaith  thooshikkaanoa  paarum  en’raan.  (yoabu  1:11)

கர்த்தர்  சாத்தானை  நோக்கி:  இதோ,  அவனுக்கு  உண்டானவையெல்லாம்  உன்  கையிலிருக்கிறது;  அவன்மேல்மாத்திரம்  உன்  கையை  நீட்டாதே  என்றார்;  அப்பொழுது  சாத்தான்  கர்த்தருடைய  சந்நிதியைவிட்டுப்  புறப்பட்டுப்போனான்.  (யோபு  1:12)

karththar  saaththaanai  noakki:  ithoa,  avanukku  u'ndaanavaiyellaam  un  kaiyilirukki’rathu;  avanmealmaaththiram  un  kaiyai  neettaathea  en’raar;  appozhuthu  saaththaan  karththarudaiya  sannithiyaivittup  pu’rappattuppoanaan.  (yoabu  1:12)

பின்பு  ஒருநாள்  யோபுடைய  குமாரரும்,  அவன்  குமாரத்திகளும்,  தங்கள்  மூத்த  சகோதரன்  வீட்டிலே  புசித்து,  திராட்சரசம்  குடிக்கிறபோது,  (யோபு  1:13)

pinbu  orunaa'l  yoabudaiya  kumaararum,  avan  kumaaraththiga'lum,  thangga'l  mooththa  sagoatharan  veettilea  pusiththu,  thiraadcharasam  kudikki’rapoathu,  (yoabu  1:13)

ஒரு  ஆள்  அவனிடத்தில்  வந்து:  எருதுகள்  உழுகிறபோது,  கழுதைகள்  அவைகளின்  பக்கத்திலே  மேய்ந்துகொண்டிருக்கையில்,  (யோபு  1:14)

oru  aa'l  avanidaththil  vanthu:  eruthuga'l  uzhugi’rapoathu,  kazhuthaiga'l  avaiga'lin  pakkaththilea  meaynthuko'ndirukkaiyil,  (yoabu  1:14)

சபேயர்  அவைகள்மேல்  விழுந்து,  அவைகளைச்  சாய்த்துக்கொண்டுபோனார்கள்;  வேலையாட்களையும்  பட்டயக்கருக்கினால்  வெட்டிப்போட்டார்கள்;  நான்  ஒருவன்மாத்திரம்  தப்பி,  அதை  உமக்கு  அறிவிக்கும்படி  வந்தேன்  என்றான்.  (யோபு  1:15)

sabeayar  avaiga'lmeal  vizhunthu,  avaiga'laich  saayththukko'ndupoanaarga'l;  vealaiyaadka'laiyum  pattayakkarukkinaal  vettippoattaarga'l;  naan  oruvanmaaththiram  thappi,  athai  umakku  a’rivikkumpadi  vanthean  en’raan.  (yoabu  1:15)

இவன்  இப்படிப்  பேசிக்கொண்டிருக்கையில்,  வேறொருவன்  வந்து:  வானத்திலிருந்து  தேவனுடைய  அக்கினி  விழுந்து,  ஆடுகளையும்  வேலையாட்களையும்  சுட்டெரித்துப்போட்டது;  நான்  ஒருவன்மாத்திரம்  தப்பி,  அதை  உமக்கு  அறிவிக்கும்படி  வந்தேன்  என்றான்.  (யோபு  1:16)

ivan  ippadip  peasikko'ndirukkaiyil,  vea’roruvan  vanthu:  vaanaththilirunthu  theavanudaiya  akkini  vizhunthu,  aaduga'laiyum  vealaiyaadka'laiyum  sutteriththuppoattathu;  naan  oruvanmaaththiram  thappi,  athai  umakku  a’rivikkumpadi  vanthean  en’raan.  (yoabu  1:16)

இவன்  இப்படிப்  பேசிக்கொண்டிருக்கையில்,  வேறொருவன்  வந்து:  கல்தேயர்  மூன்று  பவுஞ்சாய்  வந்து,  ஒட்டகங்கள்மேல்  விழுந்து,  அவைகளை  ஓட்டிக்கொண்டுபோனார்கள்;  வேலையாட்களையும்  பட்டயக்கருக்கினால்  வெட்டிப்போட்டார்கள்;  நான்  ஒருவன்மாத்திரம்  தப்பி,  அதை  உமக்கு  அறிவிக்கும்படி  வந்தேன்  என்றான்.  (யோபு  1:17)

ivan  ippadip  peasikko'ndirukkaiyil,  vea’roruvan  vanthu:  kaltheayar  moon’ru  pavugnchaay  vanthu,  ottagangga'lmeal  vizhunthu,  avaiga'lai  oattikko'ndupoanaarga'l;  vealaiyaadka'laiyum  pattayakkarukkinaal  vettippoattaarga'l;  naan  oruvanmaaththiram  thappi,  athai  umakku  a’rivikkumpadi  vanthean  en’raan.  (yoabu  1:17)

இவன்  இப்படிப்  பேசிக்கொண்டிருக்கையில்,  வேறொருவன்  வந்து:  உம்முடைய  குமாரரும்  உம்முடைய  குமாரத்திகளும்,  தங்கள்  மூத்த  சகோதரன்  வீட்டிலே  புசித்துத்  திராட்சரசம்  குடிக்கிறபோது,  (யோபு  1:18)

ivan  ippadip  peasikko'ndirukkaiyil,  vea’roruvan  vanthu:  ummudaiya  kumaararum  ummudaiya  kumaaraththiga'lum,  thangga'l  mooththa  sagoatharan  veettilea  pusiththuth  thiraadcharasam  kudikki’rapoathu,  (yoabu  1:18)

வனாந்தரவழியாய்ப்  பெருங்காற்று  வந்து,  அந்த  வீட்டின்  நாலு  மூலையிலும்  அடிக்க,  அது  பிள்ளைகளின்மேல்  விழுந்ததினால்  அவர்கள்  இறந்துபோனார்கள்;  நான்  ஒருவன்மாத்திரம்  தப்பி,  அதை  உமக்கு  அறிவிக்கும்படி  வந்தேன்  என்றான்.  (யோபு  1:19)

vanaantharavazhiyaayp  perungkaat’ru  vanthu,  antha  veettin  naalu  moolaiyilum  adikka,  athu  pi'l'laiga'linmeal  vizhunthathinaal  avarga'l  i’ranthupoanaarga'l;  naan  oruvanmaaththiram  thappi,  athai  umakku  a’rivikkumpadi  vanthean  en’raan.  (yoabu  1:19)

அப்பொழுது  யோபு  எழுந்திருந்து,  தன்  சால்வையைக்  கிழித்து,  தன்  தலையைச்  சிரைத்து,  தரையிலே  விழுந்து  பணிந்து:  (யோபு  1:20)

appozhuthu  yoabu  ezhunthirunthu,  than  saalvaiyaik  kizhiththu,  than  thalaiyaich  siraiththu,  tharaiyilea  vizhunthu  pa'ninthu:  (yoabu  1:20)

நிர்வாணியாய்  என்  தாயின்  கர்ப்பத்திலிருந்து  வந்தேன்;  நிர்வாணியாய்  அவ்விடத்துக்குத்  திரும்புவேன்;  கர்த்தர்  கொடுத்தார்,  கர்த்தர்  எடுத்தார்;  கர்த்தருடைய  நாமத்துக்கு  ஸ்தோத்திரம்  என்றான்.  (யோபு  1:21)

nirvaa'niyaay  en  thaayin  karppaththilirunthu  vanthean;  nirvaa'niyaay  avvidaththukkuth  thirumbuvean;  karththar  koduththaar,  karththar  eduththaar;  karththarudaiya  naamaththukku  sthoaththiram  en’raan.  (yoabu  1:21)

இவையெல்லாவற்றிலும்  யோபு  பாவஞ்செய்யவுமில்லை,  தேவனைப்பற்றிக்  குறைசொல்லவுமில்லை.  (யோபு  1:22)

ivaiyellaavat’rilum  yoabu  paavagnseyyavumillai,  theavanaippat’rik  ku’raisollavumillai.  (yoabu  1:22)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!