Saturday, July 16, 2016

Yaaththiraagamam 9 | யாத்திராகமம் 9 | Exodus 9

பின்பு,  கர்த்தர்  மோசேயை  நோக்கி:  நீ  பார்வோனிடத்தில்  போய்:  எனக்கு  ஆராதனைசெய்ய  என்  ஜனங்களைப்  போகவிடு.  (யாத்திராகமம்  9:1)

pinbu,  karththar  moaseayai  noakki:  nee  paarvoanidaththil  poay:  enakku  aaraathanaiseyya  en  janangga'laip  poagavidu.  (yaaththiraagamam  9:1)

நீ  அவர்களை  விடமாட்டேன்  என்று  இன்னும்  நிறுத்திவைத்தாயாகில்,  (யாத்திராகமம்  9:2)

nee  avarga'lai  vidamaattean  en’ru  innum  ni’ruththivaiththaayaagil,  (yaaththiraagamam  9:2)

கர்த்தருடைய  கரம்  வெளியிலிருக்கிற  உன்  மிருகஜீவன்களாகிய  குதிரைகளின்மேலும்  கழுதைகளின்மேலும்  ஒட்டகங்களின்மேலும்  ஆடுமாடுகளின்மேலும்  இருக்கும்;  மகா  கொடிதான  கொள்ளைநோய்  உண்டாகும்.  (யாத்திராகமம்  9:3)

karththarudaiya  karam  ve'liyilirukki’ra  un  mirugajeevanga'laagiya  kuthiraiga'linmealum  kazhuthaiga'linmealum  ottagangga'linmealum  aadumaaduga'linmealum  irukkum;  mahaa  kodithaana  ko'l'lainoay  u'ndaagum.  (yaaththiraagamam  9:3)

கர்த்தர்  இஸ்ரவேலரின்  மிருகஜீவன்களுக்கும்  எகிப்தியரின்  மிருகஜீவன்களுக்கும்  வித்தியாசம்  பண்ணுவார்;  இஸ்ரவேல்  புத்திரருக்கு  உரியவைகள்  எல்லாவற்றிலும்  ஒன்றும்  சாவதில்லை  என்றார்.  (யாத்திராகமம்  9:4)

karththar  isravealarin  mirugajeevanga'lukkum  egipthiyarin  mirugajeevanga'lukkum  viththiyaasam  pa'n'nuvaar;  israveal  puththirarukku  uriyavaiga'l  ellaavat’rilum  on’rum  saavathillai  en’raar.  (yaaththiraagamam  9:4)

மேலும்,  நாளைக்குக்  கர்த்தர்  இந்தக்  காரியத்தை  தேசத்தில்  செய்வார்  என்று  சொல்லி,  கர்த்தர்  ஒரு  காலத்தைக்  குறித்தார்  என்றும்,  எபிரெயருடைய  தேவனாகிய  கர்த்தர்  சொல்லுகிறார்  என்றும்  அவனிடத்தில்  சொல்  என்றார்.  (யாத்திராகமம்  9:5)

mealum,  naa'laikkuk  karththar  inthak  kaariyaththai  theasaththil  seyvaar  en’ru  solli,  karththar  oru  kaalaththaik  ku’riththaar  en’rum,  ebireyarudaiya  theavanaagiya  karththar  sollugi’raar  en’rum  avanidaththil  sol  en’raar.  (yaaththiraagamam  9:5)

மறுநாளில்  கர்த்தர்  அந்தக்  காரியத்தைச்  செய்தார்;  எகிப்தியருடைய  மிருகஜீவன்கள்  எல்லாம்  செத்துப்போயிற்று;  இஸ்ரவேல்  புத்திரரின்  மிருகஜீவன்களில்  ஒன்றாகிலும்  சாகவில்லை.  (யாத்திராகமம்  9:6)

ma’runaa'lil  karththar  anthak  kaariyaththaich  seythaar;  egipthiyarudaiya  mirugajeevanga'l  ellaam  seththuppoayit’ru;  israveal  puththirarin  mirugajeevanga'lil  on’raagilum  saagavillai.  (yaaththiraagamam  9:6)

பார்வோன்  விசாரித்து,  இஸ்ரவேலரின்  மிருகஜீவன்களில்  ஒன்றாகிலும்  சாகவில்லை  என்று  அறிந்தான்.  பார்வோனுடைய  இருதயமோ  கடினப்பட்டது;  அவன்  ஜனங்களைப்  போகவிடவில்லை.  (யாத்திராகமம்  9:7)

paarvoan  visaariththu,  isravealarin  mirugajeevanga'lil  on’raagilum  saagavillai  en’ru  a’rinthaan.  paarvoanudaiya  iruthayamoa  kadinappattathu;  avan  janangga'laip  poagavidavillai.  (yaaththiraagamam  9:7)

அப்பொழுது  கர்த்தர்  மோசேயையும்  ஆரோனையும்  நோக்கி:  உங்கள்  கைப்பிடி  நிறைய  சூளையின்  சாம்பலை  அள்ளிக்  கொள்ளுங்கள்;  மோசே  அதைப்  பார்வோனுடைய  கண்களுக்குமுன்  வானத்திற்கு  நேராக  இறைக்கக்கடவன்.  (யாத்திராகமம்  9:8)

appozhuthu  karththar  moaseayaiyum  aaroanaiyum  noakki:  ungga'l  kaippidi  ni’raiya  soo'laiyin  saambalai  a'l'lik  ko'l'lungga'l;  moasea  athaip  paarvoanudaiya  ka'nga'lukkumun  vaanaththi’rku  nearaaga  i’raikkakkadavan.  (yaaththiraagamam  9:8)

அது  எகிப்து  தேசம்  மீதெங்கும்  தூசியாகி,  எகிப்து  தேசமெங்கும்  மனிதர்மேலும்  மிருகஜீவன்கள்மேலும்  எரிபந்தமான  கொப்புளங்களை  எழும்பப்பண்ணும்  என்றார்.  (யாத்திராகமம்  9:9)

athu  egipthu  theasam  meethenggum  thoosiyaagi,  egipthu  theasamenggum  manitharmealum  mirugajeevanga'lmealum  eripanthamaana  koppu'langga'lai  ezhumbappa'n'num  en’raar.  (yaaththiraagamam  9:9)

அப்படியே  அவர்கள்  சூளையின்  சாம்பலை  அள்ளிக்கொண்டு,  பார்வோனுக்கு  முன்பாக  வந்து  நின்றார்கள்.  மோசே  அதை  வானத்துக்கு  நேராக  இறைத்தான்;  அப்பொழுது  மனிதர்மேலும்  மிருகஜீவன்கள்மேலும்  எரிபந்தமான  கொப்புளங்கள்  எழும்பிற்று.  (யாத்திராகமம்  9:10)

appadiyea  avarga'l  soo'laiyin  saambalai  a'l'likko'ndu,  paarvoanukku  munbaaga  vanthu  nin’raarga'l.  moasea  athai  vaanaththukku  nearaaga  i’raiththaan;  appozhuthu  manitharmealum  mirugajeevanga'lmealum  eripanthamaana  koppu'langga'l  ezhumbit’ru.  (yaaththiraagamam  9:10)

அந்தக்  கொப்புளங்கள்  மந்திரவாதிகள்மேலும்  எகிப்தியர்  எல்லார்மேலும்  உண்டானதினால்,  அந்தக்  கொப்புளங்களினிமித்தம்  மந்திரவாதிகளும்  மோசேக்கு  முன்பாக  நிற்கக்கூடாதிருந்தது.  (யாத்திராகமம்  9:11)

anthak  koppu'langga'l  manthiravaathiga'lmealum  egipthiyar  ellaarmealum  u'ndaanathinaal,  anthak  koppu'langga'linimiththam  manthiravaathiga'lum  moaseakku  munbaaga  ni’rkakkoodaathirunthathu.  (yaaththiraagamam  9:11)

ஆனாலும்,  கர்த்தர்  மோசேயோடே  சொல்லியிருந்தபடியே,  கர்த்தர்  பார்வோனின்  இருதயத்தைக்  கடினப்படுத்தினார்;  அவன்  அவர்களுக்குச்  செவிகொடுக்கவில்லை.  (யாத்திராகமம்  9:12)

aanaalum,  karththar  moaseayoadea  solliyirunthapadiyea,  karththar  paarvoanin  iruthayaththaik  kadinappaduththinaar;  avan  avarga'lukkuch  sevikodukkavillai.  (yaaththiraagamam  9:12)

அப்பொழுது  கர்த்தர்  மோசேயை  நோக்கி:  நீ  அதிகாலமே  எழுந்திருந்து  போய்,  பார்வோனுக்கு  முன்பாக  நின்று:  எனக்கு  ஆராதனைசெய்ய  என்  ஜனங்களை  அனுப்பிவிடு.  (யாத்திராகமம்  9:13)

appozhuthu  karththar  moaseayai  noakki:  nee  athikaalamea  ezhunthirunthu  poay,  paarvoanukku  munbaaga  nin’ru:  enakku  aaraathanaiseyya  en  janangga'lai  anuppividu.  (yaaththiraagamam  9:13)

விடாதிருந்தால்,  பூமியெங்கும்  என்னைப்போல  வேறொருவரும்  இல்லை  என்பதை  நீ  அறியும்படிக்கு,  இந்தமுறை  நான்  சகலவித  வாதைகளையும்  உன்  இருதயத்திலும்,  உன்  ஊழியக்காரர்மேலும்  உன்  ஜனங்கள்மேலும்  அனுப்புவேன்.  (யாத்திராகமம்  9:14)

vidaathirunthaal,  boomiyenggum  ennaippoala  vea’roruvarum  illai  enbathai  nee  a’riyumpadikku,  inthamu’rai  naan  sagalavitha  vaathaiga'laiyum  un  iruthayaththilum,  un  oozhiyakkaararmealum  un  janangga'lmealum  anuppuvean.  (yaaththiraagamam  9:14)

நீ  பூமியில்  இராமல்  நாசமாய்ப்  போகும்படி  நான்  என்  கையை  நீட்டி,  உன்னையும்  உன்  ஜனங்களையும்  கொள்ளை  நோயினால்  வாதிப்பேன்.  (யாத்திராகமம்  9:15)

nee  boomiyil  iraamal  naasamaayp  poagumpadi  naan  en  kaiyai  neetti,  unnaiyum  un  janangga'laiyum  ko'l'lai  noayinaal  vaathippean.  (yaaththiraagamam  9:15)

என்னுடைய  வல்லமையை  உன்னிடத்தில்  காண்பிக்கும்படியாகவும்,  என்  நாமம்  பூமியிலெங்கும்  பிரஸ்தாபமாகும்படியாகவும்  உன்னை  நிலைநிறுத்தினேன்.  (யாத்திராகமம்  9:16)

ennudaiya  vallamaiyai  unnidaththil  kaa'nbikkumpadiyaagavum,  en  naamam  boomiyilenggum  pirasthaabamaagumpadiyaagavum  unnai  nilaini’ruththinean.  (yaaththiraagamam  9:16)

நீ  என்  ஜனங்களைப்  போகவிடாமல்,  இன்னும்  அவர்களுக்கு  விரோதமாய்  உன்னை  உயர்த்துகிறாயா?  (யாத்திராகமம்  9:17)

nee  en  janangga'laip  poagavidaamal,  innum  avarga'lukku  viroathamaay  unnai  uyarththugi’raayaa?  (yaaththiraagamam  9:17)

எகிப்து  தோன்றிய  நாள்முதல்  இதுவரைக்கும்  அதில்  பெய்யாத  மிகவும்  கொடிய  கல்மழையை  நாளை  இந்நேரம்  பெய்யப்பண்ணுவேன்.  (யாத்திராகமம்  9:18)

egipthu  thoan’riya  naa'lmuthal  ithuvaraikkum  athil  peyyaatha  migavum  kodiya  kalmazhaiyai  naa'lai  innearam  peyyappa'n'nuvean.  (yaaththiraagamam  9:18)

இப்பொழுதே  ஆள்  அனுப்பி,  உன்  மிருகஜீவன்களையும்  வெளியில்  உனக்கு  இருக்கிற  யாவையும்  சேர்த்துக்கொள்;  வீட்டிலே  சேர்க்கப்படாமல்  வெளியிலிருக்கும்  ஒவ்வொரு  மனிதனும்  மிருகமும்  செத்துப்போகத்தக்கதாய்  அந்தக்  கல்மழை  பெய்யும்  என்று  எபிரெயரின்  தேவனாகிய  கர்த்தர்  சொல்லுகிறார்  என்று  அவனுக்குச்  சொல்  என்றார்.  (யாத்திராகமம்  9:19)

ippozhuthea  aa'l  anuppi,  un  mirugajeevanga'laiyum  ve'liyil  unakku  irukki’ra  yaavaiyum  searththukko'l;  veettilea  searkkappadaamal  ve'liyilirukkum  ovvoru  manithanum  mirugamum  seththuppoagaththakkathaay  anthak  kalmazhai  peyyum  en’ru  ebireyarin  theavanaagiya  karththar  sollugi’raar  en’ru  avanukkuch  sol  en’raar.  (yaaththiraagamam  9:19)

பார்வோனுடைய  ஊழியக்காரரில்  எவன்  கர்த்தருடைய  வார்த்தைக்குப்  பயப்பட்டானோ,  அவன்  தன்  வேலைக்காரரையும்  தன்  மிருகஜீவன்களையும்  வீடுகளுக்கு  ஓடிவரப்பண்ணினான்.  (யாத்திராகமம்  9:20)

paarvoanudaiya  oozhiyakkaararil  evan  karththarudaiya  vaarththaikkup  bayappattaanoa,  avan  than  vealaikkaararaiyum  than  mirugajeevanga'laiyum  veeduga'lukku  oadivarappa'n'ninaan.  (yaaththiraagamam  9:20)

எவன்  கர்த்தருடைய  வார்த்தையை  மதியாமற்போனானோ,  அவன்  தன்  வேலைக்காரரையும்  தன்  மிருகஜீவன்களையும்  வெளியிலே  விட்டுவிட்டான்.  (யாத்திராகமம்  9:21)

evan  karththarudaiya  vaarththaiyai  mathiyaama’rpoanaanoa,  avan  than  vealaikkaararaiyum  than  mirugajeevanga'laiyum  ve'liyilea  vittuvittaan.  (yaaththiraagamam  9:21)

அப்பொழுது  கர்த்தர்  மோசேயை  நோக்கி:  எகிப்து  தேசம்  எங்கும்  மனிதர்மேலும்  மிருகஜீவன்கள்மேலும்  எகிப்து  தேசத்திலிருக்கிற  சகலவிதமான  பயிர்வகைகள்மேலும்  கல்மழை  பெய்ய,  உன்  கையை  வானத்திற்கு  நேராக  நீட்டு  என்றார்.  (யாத்திராகமம்  9:22)

appozhuthu  karththar  moaseayai  noakki:  egipthu  theasam  enggum  manitharmealum  mirugajeevanga'lmealum  egipthu  theasaththilirukki’ra  sagalavithamaana  payirvagaiga'lmealum  kalmazhai  peyya,  un  kaiyai  vaanaththi’rku  nearaaga  neettu  en’raar.  (yaaththiraagamam  9:22)

அப்படியே  மோசே  தன்  கோலை  வானத்திற்கு  நேராக  நீட்டினான்.  அப்பொழுது  கர்த்தர்  இடிமுழக்கங்களையும்  கல்மழையையும்  அனுப்பினார்;  அக்கினி  தரையின்மேல்  வேகமாய்  ஓடிற்று;  எகிப்து  தேசத்தின்மேல்  கர்த்தர்  கல்மழையைப்  பெய்யப்பண்ணினார்;  (யாத்திராகமம்  9:23)

appadiyea  moasea  than  koalai  vaanaththi’rku  nearaaga  neettinaan.  appozhuthu  karththar  idimuzhakkangga'laiyum  kalmazhaiyaiyum  anuppinaar;  akkini  tharaiyinmeal  veagamaay  oadit’ru;  egipthu  theasaththinmeal  karththar  kalmazhaiyaip  peyyappa'n'ninaar;  (yaaththiraagamam  9:23)

கல்மழையும்  கல்மழையோடே  கலந்த  அக்கினியும்  மிகவும்  கொடிதாயிருந்தது;  எகிப்து  தேசம்  குடியேற்றப்பட்ட  நாள்முதல்  அதில்  அப்படி  ஒருபோதும்  உண்டானதில்லை.  (யாத்திராகமம்  9:24)

kalmazhaiyum  kalmazhaiyoadea  kalantha  akkiniyum  migavum  kodithaayirunthathu;  egipthu  theasam  kudiyeat’rappatta  naa'lmuthal  athil  appadi  orupoathum  u'ndaanathillai.  (yaaththiraagamam  9:24)

எகிப்து  தேசம்  எங்கும்  மனிதரையும்  மிருகஜீவன்களையும்,  வெளியிலே  இருந்தவைகள்  எவைகளோ  அவைகள்  எல்லாவற்றையும்  அந்தக்  கல்மழை  அழித்துப்போட்டது;  அது  வெளியின்  பயிர்வகைகளையெல்லாம்  அழித்து,  வெளியின்  மரங்களையெல்லாம்  முறித்துப்போட்டது.  (யாத்திராகமம்  9:25)

egipthu  theasam  enggum  manitharaiyum  mirugajeevanga'laiyum,  ve'liyilea  irunthavaiga'l  evaiga'loa  avaiga'l  ellaavat’raiyum  anthak  kalmazhai  azhiththuppoattathu;  athu  ve'liyin  payirvagaiga'laiyellaam  azhiththu,  ve'liyin  marangga'laiyellaam  mu’riththuppoattathu.  (yaaththiraagamam  9:25)

இஸ்ரவேல்  புத்திரர்  இருந்த  கோசேன்  நாட்டிலேமாத்திரம்  கல்மழை  இல்லாதிருந்தது.  (யாத்திராகமம்  9:26)

israveal  puththirar  iruntha  koasean  naattileamaaththiram  kalmazhai  illaathirunthathu.  (yaaththiraagamam  9:26)

அப்பொழுது  பார்வோன்  மோசேயையும்  ஆரோனையும்  அழைப்பித்து:  நான்  இந்த  முறை  பாவம்  செய்தேன்;  கர்த்தர்  நீதியுள்ளவர்;  நானும்  என்  ஜனமும்  துன்மார்க்கர்.  (யாத்திராகமம்  9:27)

appozhuthu  paarvoan  moaseayaiyum  aaroanaiyum  azhaippiththu:  naan  intha  mu’rai  paavam  seythean;  karththar  neethiyu'l'lavar;  naanum  en  janamum  thunmaarkkar.  (yaaththiraagamam  9:27)

இது  போதும்;  இந்த  மகா  இடிமுழக்கங்களும்  கல்மழையும்  ஒழியும்படிக்கு,  கர்த்தரை  நோக்கி  விண்ணப்பம்பண்ணுங்கள்;  நான்  உங்களைப்  போகவிடுவேன்,  இனி  உங்களுக்குத்  தடையில்லை  என்றான்.  (யாத்திராகமம்  9:28)

ithu  poathum;  intha  mahaa  idimuzhakkangga'lum  kalmazhaiyum  ozhiyumpadikku,  karththarai  noakki  vi'n'nappampa'n'nungga'l;  naan  ungga'laip  poagaviduvean,  ini  ungga'lukkuth  thadaiyillai  en’raan.  (yaaththiraagamam  9:28)

மோசே  அவனை  நோக்கி:  நான்  பட்டணத்திலிருந்து  புறப்பட்டவுடனே,  என்  கைகளைக்  கர்த்தருக்கு  நேராக  விரிப்பேன்;  அப்பொழுது  இடிமுழக்கங்கள்  ஓய்ந்து  கல்மழை  நின்றுபோம்;  அதினால்  பூமி  கர்த்தருடையது  என்பதை  நீர்  அறிவீர்.  (யாத்திராகமம்  9:29)

moasea  avanai  noakki:  naan  patta'naththilirunthu  pu’rappattavudanea,  en  kaiga'laik  karththarukku  nearaaga  virippean;  appozhuthu  idimuzhakkangga'l  oaynthu  kalmazhai  nin’rupoam;  athinaal  boomi  karththarudaiyathu  enbathai  neer  a’riveer.  (yaaththiraagamam  9:29)

ஆகிலும்  நீரும்  உம்முடைய  ஊழியக்காரரும்  இன்னும்  தேவனாகிய  கர்த்தருக்குப்  பயப்படமாட்டீர்கள்  என்பதை  அறிவேன்  என்றான்.  (யாத்திராகமம்  9:30)

aagilum  neerum  ummudaiya  oozhiyakkaararum  innum  theavanaagiya  karththarukkup  bayappadamaatteerga'l  enbathai  a’rivean  en’raan.  (yaaththiraagamam  9:30)

அப்பொழுது  வாற்கோதுமை  கதிர்ப்பயிரும்  சணல்  தாள்ப்பயிருமாயிருந்தது;  அதினால்  சணலும்  வாற்கோதுமையும்  அழிக்கப்பட்டுப்போயிற்று.  (யாத்திராகமம்  9:31)

appozhuthu  vaa’rkoathumai  kathirppayirum  sa'nal  thaa'lppayirumaayirunthathu;  athinaal  sa'nalum  vaa’rkoathumaiyum  azhikkappattuppoayit’ru.  (yaaththiraagamam  9:31)

கோதுமையும்  கம்பும்  கதிர்விடாதிருந்ததால்,  அவைகள்  அழிக்கப்படவில்லை.  (யாத்திராகமம்  9:32)

koathumaiyum  kambum  kathirvidaathirunthathaal,  avaiga'l  azhikkappadavillai.  (yaaththiraagamam  9:32)

மோசே  பார்வோனைவிட்டுப்  பட்டணத்திலிருந்து  புறப்பட்டு,  தன்  கைகளைக்  கர்த்தருக்கு  நேராக  விரித்தான்;  அப்பொழுது  இடிமுழக்கமும்  கல்மழையும்  நின்றது;  மழையும்  பூமியில்  பெய்யாமலிருந்தது.  (யாத்திராகமம்  9:33)

moasea  paarvoanaivittup  patta'naththilirunthu  pu’rappattu,  than  kaiga'laik  karththarukku  nearaaga  viriththaan;  appozhuthu  idimuzhakkamum  kalmazhaiyum  nin’rathu;  mazhaiyum  boomiyil  peyyaamalirunthathu.  (yaaththiraagamam  9:33)

மழையும்  கல்மழையும்  இடிமுழக்கமும்  நின்றுபோனதைப்  பார்வோன்  கண்டபோது,  அவனும்  அவன்  ஊழியக்காரரும்  பின்னும்  பாவம்செய்து,  தங்கள்  இருதயத்தைக்  கடினப்படுத்தினார்கள்.  (யாத்திராகமம்  9:34)

mazhaiyum  kalmazhaiyum  idimuzhakkamum  nin’rupoanathaip  paarvoan  ka'ndapoathu,  avanum  avan  oozhiyakkaararum  pinnum  paavamseythu,  thangga'l  iruthayaththaik  kadinappaduththinaarga'l.  (yaaththiraagamam  9:34)

கர்த்தர்  மோசேயைக்கொண்டு  சொல்லியிருந்தபடியே,  பார்வோனின்  இருதயம்  கடினப்பட்டது;  அவன்  இஸ்ரவேல்  புத்திரரைப்  போகவிடவில்லை.  (யாத்திராகமம்  9:35)

karththar  moaseayaikko'ndu  solliyirunthapadiyea,  paarvoanin  iruthayam  kadinappattathu;  avan  israveal  puththiraraip  poagavidavillai.  (yaaththiraagamam  9:35)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!