Saturday, July 16, 2016

Yaaththiraagamam 8 | யாத்திராகமம் 8 | Exodus 8

அப்பொழுது  கர்த்தர்  மோசேயை  நோக்கி:  நீ  பார்வோனிடத்தில்  போய்:  எனக்கு  ஆராதனைசெய்ய  என்  ஜனங்களை  அனுப்பிவிடு.  (யாத்திராகமம்  8:1)

appozhuthu  karththar  moaseayai  noakki:  nee  paarvoanidaththil  poay:  enakku  aaraathanaiseyya  en  janangga'lai  anuppividu.  (yaaththiraagamam  8:1)

நீ  அவர்களை  அனுப்பிவிடமாட்டேன்  என்பாயாகில்,  உன்  எல்லை  அடங்கலையும்  தவளைகளால்  வாதிப்பேன்.  (யாத்திராகமம்  8:2)

nee  avarga'lai  anuppividamaattean  enbaayaagil,  un  ellai  adanggalaiyum  thava'laiga'laal  vaathippean.  (yaaththiraagamam  8:2)

நதி  தவளைகளைத்  திரளாய்ப்  பிறப்பிக்கும்;  அவைகள்  உன்  வீட்டிலும்  உன்  படுக்கை  அறையிலும்,  உன்  மஞ்சத்தின்  மேலும்,  உன்  ஊழியக்காரர்  வீடுகளிலும்,  உன்  ஜனங்களிடத்திலும்,  உன்  அடுப்புகளிலும்,  மாப்பிசைகிற  உன்  தொட்டிகளிலும்  வந்து  ஏறும்.  (யாத்திராகமம்  8:3)

nathi  thava'laiga'laith  thira'laayp  pi’rappikkum;  avaiga'l  un  veettilum  un  padukkai  a’raiyilum,  un  magnchaththin  mealum,  un  oozhiyakkaarar  veeduga'lilum,  un  janangga'lidaththilum,  un  aduppuga'lilum,  maappisaigi’ra  un  thottiga'lilum  vanthu  ea’rum.  (yaaththiraagamam  8:3)

அந்தத்  தவளைகள்  உன்மேலும்,  உன்  ஜனங்கள்மேலும்,  உன்  ஊழியக்காரர்  எல்லார்மேலும்  வந்து  ஏறும்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்  என்று  சொல்  என்றார்.  (யாத்திராகமம்  8:4)

anthath  thava'laiga'l  unmealum,  un  janangga'lmealum,  un  oozhiyakkaarar  ellaarmealum  vanthu  ea’rum  en’ru  karththar  sollugi’raar  en’ru  sol  en’raar.  (yaaththiraagamam  8:4)

மேலும்  கர்த்தர்  மோசேயினிடத்தில்  நீ  ஆரோனை  நோக்கி:  நீ  உன்  கையில்  இருக்கிற  கோலை  நதிகள்மேலும்  வாய்க்கால்கள்மேலும்  குளங்கள்மேலும்  நீட்டி,  எகிப்து  தேசத்தின்மேல்  தவளைகளை  வரும்படி  செய்  என்று  சொல்  என்றார்.  (யாத்திராகமம்  8:5)

mealum  karththar  moaseayinidaththil  nee  aaroanai  noakki:  nee  un  kaiyil  irukki’ra  koalai  nathiga'lmealum  vaaykkaalga'lmealum  ku'langga'lmealum  neetti,  egipthu  theasaththinmeal  thava'laiga'lai  varumpadi  sey  en’ru  sol  en’raar.  (yaaththiraagamam  8:5)

அப்படியே  ஆரோன்  தன்  கையை  எகிப்திலுள்ள  தண்ணீர்கள்மேல்  நீட்டினான்;  அப்பொழுது  தவளைகள்  வந்து,  எகிப்து  தேசத்தை  மூடிக்கொண்டது.  (யாத்திராகமம்  8:6)

appadiyea  aaroan  than  kaiyai  egipthilu'l'la  tha'n'neerga'lmeal  neettinaan;  appozhuthu  thava'laiga'l  vanthu,  egipthu  theasaththai  moodikko'ndathu.  (yaaththiraagamam  8:6)

மந்திரவாதிகளும்  தங்கள்  மந்திரவித்தையினால்  அப்படிச்  செய்து,  எகிப்து  தேசத்தின்மேல்  தவளைகளை  வரப்பண்ணினார்கள்.  (யாத்திராகமம்  8:7)

manthiravaathiga'lum  thangga'l  manthiraviththaiyinaal  appadich  seythu,  egipthu  theasaththinmeal  thava'laiga'lai  varappa'n'ninaarga'l.  (yaaththiraagamam  8:7)

பார்வோன்  மோசேயையும்  ஆரோனையும்  அழைப்பித்து:  அந்தத்  தவளைகள்  என்னையும்  என்  ஜனங்களையும்  விட்டு  நீங்கும்படி  கர்த்தரை  நோக்கி  வேண்டிக்கொள்ளுங்கள்;  கர்த்தருக்குப்  பலியிடும்படி  ஜனங்களைப்  போகவிடுவேன்  என்றான்.  (யாத்திராகமம்  8:8)

paarvoan  moaseayaiyum  aaroanaiyum  azhaippiththu:  anthath  thava'laiga'l  ennaiyum  en  janangga'laiyum  vittu  neenggumpadi  karththarai  noakki  vea'ndikko'l'lungga'l;  karththarukkup  baliyidumpadi  janangga'laip  poagaviduvean  en’raan.  (yaaththiraagamam  8:8)

அப்பொழுது  மோசே  பார்வோனை  நோக்கி:  தவளைகள்  நதியிலேமாத்திரம்  இருக்கத்தக்கதாய்  அவைகளை  உம்மிடத்திலும்  உம்முடைய  வீட்டிலும்  இல்லாமல்  ஒழிந்துபோகும்படி  செய்ய,  உமக்காகவும்  உம்முடைய  ஊழியக்காரருக்காகவும்  உம்முடைய  ஜனங்களுக்காகவும்  நான்  விண்ணப்பம்பண்ணவேண்டிய  காலத்தைக்  குறிக்கும்  மேன்மை  உமக்கே  இருப்பதாக  என்றான்.  (யாத்திராகமம்  8:9)

appozhuthu  moasea  paarvoanai  noakki:  thava'laiga'l  nathiyileamaaththiram  irukkaththakkathaay  avaiga'lai  ummidaththilum  ummudaiya  veettilum  illaamal  ozhinthupoagumpadi  seyya,  umakkaagavum  ummudaiya  oozhiyakkaararukkaagavum  ummudaiya  janangga'lukkaagavum  naan  vi'n'nappampa'n'navea'ndiya  kaalaththaik  ku’rikkum  meanmai  umakkea  iruppathaaga  en’raan.  (yaaththiraagamam  8:9)

அதற்கு  அவன்:  நாளைக்கு  என்றான்.  அப்பொழுது  இவன்:  எங்கள்  தேவனாகிய  கர்த்தருக்கு  ஒப்பானவர்  இல்லை  என்பதை  நீர்  அறியும்படிக்கு  உம்முடைய  வார்த்தையின்படி  ஆகக்கடவது.  (யாத்திராகமம்  8:10)

atha’rku  avan:  naa'laikku  en’raan.  appozhuthu  ivan:  engga'l  theavanaagiya  karththarukku  oppaanavar  illai  enbathai  neer  a’riyumpadikku  ummudaiya  vaarththaiyinpadi  aagakkadavathu.  (yaaththiraagamam  8:10)

தவளைகள்  உம்மையும்  உம்முடைய  வீட்டையும்  உம்முடைய  ஊழியக்காரரையும்  உம்முடைய  ஜனங்களையும்  விட்டு  நீங்கி,  நதியிலே  மாத்திரம்  இருக்கும்  என்றான்.  (யாத்திராகமம்  8:11)

thava'laiga'l  ummaiyum  ummudaiya  veettaiyum  ummudaiya  oozhiyakkaararaiyum  ummudaiya  janangga'laiyum  vittu  neenggi,  nathiyilea  maaththiram  irukkum  en’raan.  (yaaththiraagamam  8:11)

மோசேயும்  ஆரோனும்  பார்வோனைவிட்டுப்  புறப்பட்டார்கள்.  பார்வோனுக்கு  விரோதமாக  வரப்பண்ணின  தவளைகள்நிமித்தம்  மோசே  கர்த்தரை  நோக்கிக்  கூப்பிட்டான்.  (யாத்திராகமம்  8:12)

moaseayum  aaroanum  paarvoanaivittup  pu’rappattaarga'l.  paarvoanukku  viroathamaaga  varappa'n'nina  thava'laiga'lnimiththam  moasea  karththarai  noakkik  kooppittaan.  (yaaththiraagamam  8:12)

கர்த்தர்  மோசேயின்  சொற்படி  செய்தார்;  வீடுகளிலும்  முற்றங்களிலும்  வயல்களிலும்  இருந்த  தவளைகள்  செத்துப்போயிற்று.  (யாத்திராகமம்  8:13)

karththar  moaseayin  so’rpadi  seythaar;  veeduga'lilum  mut’rangga'lilum  vayalga'lilum  iruntha  thava'laiga'l  seththuppoayit’ru.  (yaaththiraagamam  8:13)

அவைகளைக்  குவியல்  குவியலாகச்  சேர்த்தார்கள்;  அதினால்  பூமியெங்கும்  நாற்றம்  எடுத்தது.  (யாத்திராகமம்  8:14)

avaiga'laik  kuviyal  kuviyalaagach  searththaarga'l;  athinaal  boomiyenggum  naat’ram  eduththathu.  (yaaththiraagamam  8:14)

இலகுவுண்டாயிற்றென்று  பார்வோன்  கண்டபோதோ,  தன்  இருதயத்தைக்  கடினப்படுத்தி,  அவர்களுக்குச்  செவிகொடாமற்போனான்;  கர்த்தர்  சொல்லியிருந்தபடி  ஆயிற்று.  (யாத்திராகமம்  8:15)

ilaguvu'ndaayit’ren’ru  paarvoan  ka'ndapoathoa,  than  iruthayaththaik  kadinappaduththi,  avarga'lukkuch  sevikodaama’rpoanaan;  karththar  solliyirunthapadi  aayit’ru.  (yaaththiraagamam  8:15)

அப்பொழுது  கர்த்தர்  மோசேயினிடத்தில்:  நீ  ஆரோனை  நோக்கி:  உன்  கோலை  நீட்டி,  பூமியின்  புழுதியின்மேல்  அடி;  அப்பொழுது  அது  எகிப்து  தேசம்  எங்கும்  பேன்களாய்ப்  போம்  என்று  சொல்  என்றார்.  (யாத்திராகமம்  8:16)

appozhuthu  karththar  moaseayinidaththil:  nee  aaroanai  noakki:  un  koalai  neetti,  boomiyin  puzhuthiyinmeal  adi;  appozhuthu  athu  egipthu  theasam  enggum  peanga'laayp  poam  en’ru  sol  en’raar.  (yaaththiraagamam  8:16)

அப்படியே  செய்தார்கள்;  ஆரோன்  தன்  கையில்  இருந்த  தன்  கோலை  நீட்டி,  பூமியின்  புழுதியின்மேல்  அடித்தான்;  அப்பொழுது  அது  மனிதர்மேலும்  மிருகஜீவன்கள்மேலும்  பேன்களாய்  எகிப்துதேசம்  எங்கும்  பூமியின்  புழுதியெல்லாம்  பேன்களாயிற்று.  (யாத்திராகமம்  8:17)

appadiyea  seythaarga'l;  aaroan  than  kaiyil  iruntha  than  koalai  neetti,  boomiyin  puzhuthiyinmeal  adiththaan;  appozhuthu  athu  manitharmealum  mirugajeevanga'lmealum  peanga'laay  egipthutheasam  enggum  boomiyin  puzhuthiyellaam  peanga'laayit’ru.  (yaaththiraagamam  8:17)

மந்திரவாதிகளும்  தங்கள்  மந்திரவித்தையினால்  பேன்களைப்  பிறப்பிக்கும்படிப்  பிரயத்தனஞ்செய்தார்கள்;  செய்தும்,  அவர்களால்  கூடாமற்போயிற்று;  பேன்கள்  மனிதர்மேலும்  மிருகஜீவன்கள்மேலும்  இருந்தது.  (யாத்திராகமம்  8:18)

manthiravaathiga'lum  thangga'l  manthiraviththaiyinaal  peanga'laip  pi’rappikkumpadip  pirayaththanagnseythaarga'l;  seythum,  avarga'laal  koodaama’rpoayit’ru;  peanga'l  manitharmealum  mirugajeevanga'lmealum  irunthathu.  (yaaththiraagamam  8:18)

அப்பொழுது  மந்திரவாதிகள்  பார்வோனை  நோக்கி:  இது  தேவனுடைய  விரல்  என்றார்கள்.  ஆனாலும்,  கர்த்தர்  சொல்லியிருந்தபடி  பார்வோனுடைய  இருதயம்  கடினப்பட்டது;  அவர்களுக்குச்  செவிகொடாமற்போனான்.  (யாத்திராகமம்  8:19)

appozhuthu  manthiravaathiga'l  paarvoanai  noakki:  ithu  theavanudaiya  viral  en’raarga'l.  aanaalum,  karththar  solliyirunthapadi  paarvoanudaiya  iruthayam  kadinappattathu;  avarga'lukkuch  sevikodaama’rpoanaan.  (yaaththiraagamam  8:19)

அப்பொழுது  கர்த்தர்  மோசேயை  நோக்கி:  நாளை  அதிகாலமே  நீ  எழுந்து  போய்,  பார்வோன்  நதிக்குப்  புறப்பட்டு  வரும்போது,  அவனுக்கு  முன்பாக  நின்று:  எனக்கு  ஆராதனை  செய்யும்படி  என்  ஜனங்களைப்  போகவிடு.  (யாத்திராகமம்  8:20)

appozhuthu  karththar  moaseayai  noakki:  naa'lai  athikaalamea  nee  ezhunthu  poay,  paarvoan  nathikkup  pu’rappattu  varumpoathu,  avanukku  munbaaga  nin’ru:  enakku  aaraathanai  seyyumpadi  en  janangga'laip  poagavidu.  (yaaththiraagamam  8:20)

என்  ஜனங்களைப்  போகவிடாயாகில்,  நான்  உன்மேலும்,  உன்  ஊழியக்காரர்மேலும்,  உன்  ஜனங்கள்மேலும்,  உன்  வீடுகள்மேலும்  பலவித  வண்டுகளை  அனுப்புவேன்;  எகிப்தியர்  வீடுகளும்  அவர்கள்  இருக்கிற  தேசமும்  அந்த  வண்டுகளால்  நிறையும்.  (யாத்திராகமம்  8:21)

en  janangga'laip  poagavidaayaagil,  naan  unmealum,  un  oozhiyakkaararmealum,  un  janangga'lmealum,  un  veeduga'lmealum  palavitha  va'nduga'lai  anuppuvean;  egipthiyar  veeduga'lum  avarga'l  irukki’ra  theasamum  antha  va'nduga'laal  ni’raiyum.  (yaaththiraagamam  8:21)

பூமியின்  நடுவில்  நானே  கர்த்தர்  என்பதை  நீ  அறியும்படி  என்  ஜனங்கள்  இருக்கிற  கோசேன்  நாட்டில்  அந்நாளிலே  வண்டுகள்  வராதபடிக்கு,  அந்த  நாட்டை  விசேஷப்படுத்தி,  (யாத்திராகமம்  8:22)

boomiyin  naduvil  naanea  karththar  enbathai  nee  a’riyumpadi  en  janangga'l  irukki’ra  koasean  naattil  annaa'lilea  va'nduga'l  varaathapadikku,  antha  naattai  viseashappaduththi,  (yaaththiraagamam  8:22)

என்  ஜனங்களுக்கும்  உன்  ஜனங்களுக்கும்  வித்தியாசம்  உண்டாகும்படி  செய்வேன்;  இந்த  அடையாளம்  நாளைக்கு  உண்டாகும்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்  என்று  சொல்  என்றார்.  (யாத்திராகமம்  8:23)

en  janangga'lukkum  un  janangga'lukkum  viththiyaasam  u'ndaagumpadi  seyvean;  intha  adaiyaa'lam  naa'laikku  u'ndaagum  en’ru  karththar  sollugi’raar  en’ru  sol  en’raar.  (yaaththiraagamam  8:23)

அப்படியே  கர்த்தர்  செய்தார்;  மகா  திரளான  வண்டு  ஜாதிகள்  பார்வோன்  வீட்டிலும்,  அவன்  ஊழியக்காரர்  வீடுகளிலும்,  எகிப்து  தேசம்  முழுவதிலும்  வந்தது;  வண்டுகளினாலே  தேசம்  கெட்டுப்போயிற்று.  (யாத்திராகமம்  8:24)

appadiyea  karththar  seythaar;  mahaa  thira'laana  va'ndu  jaathiga'l  paarvoan  veettilum,  avan  oozhiyakkaarar  veeduga'lilum,  egipthu  theasam  muzhuvathilum  vanthathu;  va'nduga'linaalea  theasam  kettuppoayit’ru.  (yaaththiraagamam  8:24)

அப்பொழுது  பார்வோன்  மோசேயையும்  ஆரோனையும்  அழைப்பித்து:  நீங்கள்  போய்,  உங்கள்  தேவனுக்கு  தேசத்திலேதானே  பலியிடுங்கள்  என்றான்.  (யாத்திராகமம்  8:25)

appozhuthu  paarvoan  moaseayaiyum  aaroanaiyum  azhaippiththu:  neengga'l  poay,  ungga'l  theavanukku  theasaththileathaanea  baliyidungga'l  en’raan.  (yaaththiraagamam  8:25)

அதற்கு  மோசே:  அப்படிச்  செய்யத்தகாது;  எங்கள்  தேவனாகிய  கர்த்தருக்கு  நாங்கள்  எகிப்தியருடைய  அருவருப்பைப்  பலியிடுகிறதாயிருக்குமே,  எகிப்தியருடைய  அருவருப்பை  நாங்கள்  அவர்கள்  கண்களுக்கு  முன்பாகப்  பலியிட்டால்,  எங்களைக்  கல்லெறிவார்கள்  அல்லவா?  (யாத்திராகமம்  8:26)

atha’rku  moasea:  appadich  seyyaththagaathu;  engga'l  theavanaagiya  karththarukku  naangga'l  egipthiyarudaiya  aruvaruppaip  baliyidugi’rathaayirukkumea,  egipthiyarudaiya  aruvaruppai  naangga'l  avarga'l  ka'nga'lukku  munbaagap  baliyittaal,  engga'laik  kalle’rivaarga'l  allavaa?  (yaaththiraagamam  8:26)

நாங்கள்  வனாந்தரத்தில்  மூன்றுநாள்  பிரயாணம்போய்,  எங்கள்  தேவனாகிய  கர்த்தர்  எங்களுக்கு  விதிக்கிறபடியே  அவருக்குப்  பலியிடுவோம்  என்றான்.  (யாத்திராகமம்  8:27)

naangga'l  vanaantharaththil  moon’runaa'l  pirayaa'nampoay,  engga'l  theavanaagiya  karththar  engga'lukku  vithikki’rapadiyea  avarukkup  baliyiduvoam  en’raan.  (yaaththiraagamam  8:27)

அப்பொழுது  பார்வோன்:  நீங்கள்  உங்கள்  தேவனாகிய  கர்த்தருக்கு  வனாந்தரத்தில்  பலியிடும்படிக்கு,  நான்  உங்களைப்  போகவிடுவேன்;  ஆனாலும்,  நீங்கள்  அதிக  தூரமாய்ப்  போகவேண்டாம்;  எனக்காக  வேண்டுதல்  செய்யுங்கள்  என்றான்.  (யாத்திராகமம்  8:28)

appozhuthu  paarvoan:  neengga'l  ungga'l  theavanaagiya  karththarukku  vanaantharaththil  baliyidumpadikku,  naan  ungga'laip  poagaviduvean;  aanaalum,  neengga'l  athiga  thooramaayp  poagavea'ndaam;  enakkaaga  vea'nduthal  seyyungga'l  en’raan.  (yaaththiraagamam  8:28)

அதற்கு  மோசே:  நான்  உம்மை  விட்டுப்  புறப்பட்டபின்,  நாளைக்கு  வண்டுகள்  பார்வோனையும்  அவர்  ஊழியக்காரரையும்  அவர்  ஜனங்களையும்  விட்டு  நீங்கும்படி,  நான்  கர்த்தரை  நோக்கி  வேண்டுதல்  செய்வேன்;  ஆனாலும்,  கர்த்தருக்குப்  பலியிடுகிறதற்கு  ஜனங்களைப்  போகவிடாதபடிப்  பார்வோன்  இனி  வஞ்சனை  செய்யாதிருப்பாராக  என்றான்.  (யாத்திராகமம்  8:29)

atha’rku  moasea:  naan  ummai  vittup  pu’rappattapin,  naa'laikku  va'nduga'l  paarvoanaiyum  avar  oozhiyakkaararaiyum  avar  janangga'laiyum  vittu  neenggumpadi,  naan  karththarai  noakki  vea'nduthal  seyvean;  aanaalum,  karththarukkup  baliyidugi’ratha’rku  janangga'laip  poagavidaathapadip  paarvoan  ini  vagnchanai  seyyaathiruppaaraaga  en’raan.  (yaaththiraagamam  8:29)

மோசே  பார்வோனை  விட்டுப்  புறப்பட்டுப்போய்,  கர்த்தரை  நோக்கி  வேண்டுதல்  செய்தான்.  (யாத்திராகமம்  8:30)

moasea  paarvoanai  vittup  pu’rappattuppoay,  karththarai  noakki  vea'nduthal  seythaan.  (yaaththiraagamam  8:30)

அப்பொழுது  கர்த்தர்  மோசேயின்  சொற்படி,  வண்டு  ஜாதிகள்  பார்வோனையும்  அவன்  ஊழியக்காரரையும்  அவன்  ஜனங்களையும்  விட்டு  நீங்கும்படி  செய்தார்;  ஒன்றாகிலும்  மீந்திருக்கவில்லை.  (யாத்திராகமம்  8:31)

appozhuthu  karththar  moaseayin  so’rpadi,  va'ndu  jaathiga'l  paarvoanaiyum  avan  oozhiyakkaararaiyum  avan  janangga'laiyum  vittu  neenggumpadi  seythaar;  on’raagilum  meenthirukkavillai.  (yaaththiraagamam  8:31)

பார்வோனோ,  இந்த  முறையும்  தன்  இருதயத்தைக்  கடினப்படுத்தி,  ஜனங்களைப்  போகவிடாதிருந்தான்.  (யாத்திராகமம்  8:32)

paarvoanoa,  intha  mu’raiyum  than  iruthayaththaik  kadinappaduththi,  janangga'laip  poagavidaathirunthaan.  (yaaththiraagamam  8:32)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!