Saturday, July 16, 2016

Yaaththiraagamam 7 | யாத்திராகமம் 7 | Exodus 7

கர்த்தர்  மோசேயை  நோக்கி:  பார்,  உன்னை  நான்  பார்வோனுக்கு  தேவனாக்கினேன்;  உன்  சகோதரனாகிய  ஆரோன்  உன்  தீர்க்கதரிசியாயிருப்பான்.  (யாத்திராகமம்  7:1)

karththar  moaseayai  noakki:  paar,  unnai  naan  paarvoanukku  theavanaakkinean;  un  sagoatharanaagiya  aaroan  un  theerkkatharisiyaayiruppaan.  (yaaththiraagamam  7:1)

நான்  உனக்குக்  கட்டளையிடும்  யாவையும்  நீ  சொல்லவேண்டும்;  பார்வோன்  இஸ்ரவேல்  புத்திரரைத்  தன்  தேசத்திலிருந்து  அனுப்பிவிடும்படி  உன்  சகோதரனாகிய  ஆரோன்  அவனிடத்தில்  பேசவேண்டும்.  (யாத்திராகமம்  7:2)

naan  unakkuk  katta'laiyidum  yaavaiyum  nee  sollavea'ndum;  paarvoan  israveal  puththiraraith  than  theasaththilirunthu  anuppividumpadi  un  sagoatharanaagiya  aaroan  avanidaththil  peasavea'ndum.  (yaaththiraagamam  7:2)

நான்  பார்வோனின்  இருதயத்தைக்  கடினப்படுத்தி,  எகிப்து  தேசத்தில்  என்  அடையாளங்களையும்  அற்புதங்களையும்  மிகுதியாய்  நடப்பிப்பேன்.  (யாத்திராகமம்  7:3)

naan  paarvoanin  iruthayaththaik  kadinappaduththi,  egipthu  theasaththil  en  adaiyaa'langga'laiyum  a’rputhangga'laiyum  miguthiyaay  nadappippean.  (yaaththiraagamam  7:3)

பார்வோன்  உங்களுக்குச்  செவிகொடுக்கமாட்டான்;  ஆகையால்  எகிப்துக்கு  விரோதமாக  நான்  என்  கையை  நீட்டி,  மகா  தண்டனையினால்  என்  சேனைகளும்  என்  ஜனங்களுமாகிய  இஸ்ரவேல்  புத்திரரை  எகிப்து  தேசத்திலிருந்து  புறப்படப்பண்ணுவேன்.  (யாத்திராகமம்  7:4)

paarvoan  ungga'lukkuch  sevikodukkamaattaan;  aagaiyaal  egipthukku  viroathamaaga  naan  en  kaiyai  neetti,  mahaa  tha'ndanaiyinaal  en  seanaiga'lum  en  janangga'lumaagiya  israveal  puththirarai  egipthu  theasaththilirunthu  pu’rappadappa'n'nuvean.  (yaaththiraagamam  7:4)

நான்  எகிப்தின்மேல்  என்  கையை  நீட்டி,  இஸ்ரவேல்  புத்திரரை  அவர்கள்  நடுவிலிருந்து  புறப்படப்பண்ணும்போது,  நானே  கர்த்தர்  என்று  எகிப்தியர்  அறிவார்கள்  என்றார்.  (யாத்திராகமம்  7:5)

naan  egipthinmeal  en  kaiyai  neetti,  israveal  puththirarai  avarga'l  naduvilirunthu  pu’rappadappa'n'numpoathu,  naanea  karththar  en’ru  egipthiyar  a’rivaarga'l  en’raar.  (yaaththiraagamam  7:5)

மோசேயும்  ஆரோனும்  கர்த்தர்  தங்களுக்குக்  கட்டளையிட்டபடியே  செய்தார்கள்.  (யாத்திராகமம்  7:6)

moaseayum  aaroanum  karththar  thangga'lukkuk  katta'laiyittapadiyea  seythaarga'l.  (yaaththiraagamam  7:6)

அவர்கள்  பார்வோனோடே  பேசும்போது,  மோசேக்கு  எண்பது  வயதும்,  ஆரோனுக்கு  எண்பத்துமூன்று  வயதுமாயிருந்தது.  (யாத்திராகமம்  7:7)

avarga'l  paarvoanoadea  peasumpoathu,  moaseakku  e'nbathu  vayathum,  aaroanukku  e'nbaththumoon’ru  vayathumaayirunthathu.  (yaaththiraagamam  7:7)

கர்த்தர்  மோசேயையும்  ஆரோனையும்  நோக்கி:  (யாத்திராகமம்  7:8)

karththar  moaseayaiyum  aaroanaiyum  noakki:  (yaaththiraagamam  7:8)

உங்கள்  பட்சத்திற்கு  ஒரு  அற்புதம்  காட்டுங்கள்  என்று  பார்வோன்  உங்களோடே  சொன்னால்;  அப்பொழுது  நீ  ஆரோனை  நோக்கி:  உன்  கோலை  எடுத்து  அதைப்  பார்வோனுக்கு  முன்பாகப்  போடு  என்பாயாக;  அது  சர்ப்பமாகும்  என்றார்.  (யாத்திராகமம்  7:9)

ungga'l  padchaththi’rku  oru  a’rputham  kaattungga'l  en’ru  paarvoan  ungga'loadea  sonnaal;  appozhuthu  nee  aaroanai  noakki:  un  koalai  eduththu  athaip  paarvoanukku  munbaagap  poadu  enbaayaaga;  athu  sarppamaagum  en’raar.  (yaaththiraagamam  7:9)

மோசேயும்  ஆரோனும்  பார்வோனிடத்தில்  போய்,  கர்த்தர்  தங்களுக்குக்  கட்டளையிட்டபடி  செய்தார்கள்.  ஆரோன்  பார்வோனுக்கு  முன்பாகவும்,  அவன்  ஊழியக்காரருக்கு  முன்பாகவும்  தன்  கோலைப்  போட்டான்,  அது  சர்ப்பமாயிற்று.  (யாத்திராகமம்  7:10)

moaseayum  aaroanum  paarvoanidaththil  poay,  karththar  thangga'lukkuk  katta'laiyittapadi  seythaarga'l.  aaroan  paarvoanukku  munbaagavum,  avan  oozhiyakkaararukku  munbaagavum  than  koalaip  poattaan,  athu  sarppamaayit’ru.  (yaaththiraagamam  7:10)

அப்பொழுது  பார்வோன்  சாஸ்திரிகளையும்  சூனியக்காரரையும்  அழைப்பித்தான்.  எகிப்தின்  மந்திரவாதிகளும்  தங்கள்  மந்திரவித்தையினால்  அப்படிச்  செய்தார்கள்.  (யாத்திராகமம்  7:11)

appozhuthu  paarvoan  saasthiriga'laiyum  sooniyakkaararaiyum  azhaippiththaan.  egipthin  manthiravaathiga'lum  thangga'l  manthiraviththaiyinaal  appadich  seythaarga'l.  (yaaththiraagamam  7:11)

அவர்கள்  ஒவ்வொருவனாகத்  தன்  தன்  கோலைப்  போட்டபோது,  அவைகள்  சர்ப்பங்களாயின;  ஆரோனுடைய  கோலோ  அவர்களுடைய  கோல்களை  விழுங்கிற்று.  (யாத்திராகமம்  7:12)

avarga'l  ovvoruvanaagath  than  than  koalaip  poattapoathu,  avaiga'l  sarppangga'laayina;  aaroanudaiya  koaloa  avarga'ludaiya  koalga'lai  vizhunggit’ru.  (yaaththiraagamam  7:12)

கர்த்தர்  சொல்லியிருந்தபடி  பார்வோனின்  இருதயம்  கடினப்பட்டது,  அவர்களுக்குச்  செவிகொடாமற்போனான்.  (யாத்திராகமம்  7:13)

karththar  solliyirunthapadi  paarvoanin  iruthayam  kadinappattathu,  avarga'lukkuch  sevikodaama’rpoanaan.  (yaaththiraagamam  7:13)

அப்பொழுது  கர்த்தர்  மோசேயை  நோக்கி:  பார்வோனின்  இருதயம்  கடினமாயிற்று;  ஜனங்களை  விடமாட்டேன்  என்கிறான்.  (யாத்திராகமம்  7:14)

appozhuthu  karththar  moaseayai  noakki:  paarvoanin  iruthayam  kadinamaayit’ru;  janangga'lai  vidamaattean  engi’raan.  (yaaththiraagamam  7:14)

காலமே  நீ  பார்வோனிடத்துக்குப்  போ,  அவன்  நதிக்குப்  புறப்பட்டு  வருவான்;  நீ  அவனுக்கு  எதிராக  நதியோரத்திலே  நின்று,  சர்ப்பமாக  மாறின  கோலை  உன்  கையிலே  பிடித்துக்கொண்டு,  (யாத்திராகமம்  7:15)

kaalamea  nee  paarvoanidaththukkup  poa,  avan  nathikkup  pu’rappattu  varuvaan;  nee  avanukku  ethiraaga  nathiyoaraththilea  nin’ru,  sarppamaaga  maa’rina  koalai  un  kaiyilea  pidiththukko'ndu,  (yaaththiraagamam  7:15)

அவனை  நோக்கி:  வனாந்தரத்தில்  எனக்கு  ஆராதனைசெய்ய  என்  ஜனங்களை  அனுப்பிவிடவேண்டும்  என்று  சொல்லும்படி  எபிரெயருடைய  தேவனாகிய  கர்த்தர்  என்னை  உம்மிடத்துக்கு  அனுப்பியும்,  இதுவரைக்கும்  நீர்  கேளாமற்போனீர்.  (யாத்திராகமம்  7:16)

avanai  noakki:  vanaantharaththil  enakku  aaraathanaiseyya  en  janangga'lai  anuppividavea'ndum  en’ru  sollumpadi  ebireyarudaiya  theavanaagiya  karththar  ennai  ummidaththukku  anuppiyum,  ithuvaraikkum  neer  kea'laama’rpoaneer.  (yaaththiraagamam  7:16)

இதோ,  என்  கையில்  இருக்கிற  கோலினால்  நதியில்  இருக்கிற  தண்ணீர்மேல்  அடிப்பேன்;  அப்பொழுது  அது  இரத்தமாய்  மாறி,  (யாத்திராகமம்  7:17)

ithoa,  en  kaiyil  irukki’ra  koalinaal  nathiyil  irukki’ra  tha'n'neermeal  adippean;  appozhuthu  athu  iraththamaay  maa’ri,  (yaaththiraagamam  7:17)

நதியில்  இருக்கிற  மீன்கள்  செத்து,  நதி  நாறிப்போம்;  அப்பொழுது  நதியில்  இருக்கிற  தண்ணீரை  எகிப்தியர்  குடிக்கக்கூடாமல்  அரோசிப்பார்கள்;  இதினால்  நானே  கர்த்தர்  என்பதை  அறிந்துகொள்வாய்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்  என்று  சொல்  என்றார்.  (யாத்திராகமம்  7:18)

nathiyil  irukki’ra  meenga'l  seththu,  nathi  naa’rippoam;  appozhuthu  nathiyil  irukki’ra  tha'n'neerai  egipthiyar  kudikkakkoodaamal  aroasippaarga'l;  ithinaal  naanea  karththar  enbathai  a’rinthuko'lvaay  en’ru  karththar  sollugi’raar  en’ru  sol  en’raar.  (yaaththiraagamam  7:18)

மேலும்,  கர்த்தர்  மோசேயை  நோக்கி:  நீ  ஆரோனிடத்தில்  உன்  கோலை  எடுத்துக்கொண்டு  எகிப்தின்  நீர்நிலைகளாகிய  அவர்கள்  வாய்க்கால்கள்மேலும்  நதிகள்மேலும்  குளங்கள்மேலும்  தண்ணீர்  நிற்கிற  எல்லா  இடங்கள்மேலும்,  அவைகள்  இரத்தமாகும்படிக்கு,  உன்  கையை  நீட்டு;  அப்பொழுது  எகிப்து  தேசம்  எங்கும்  மரப்பாத்திரங்களிலும்  கற்பாத்திரங்களிலும்  இரத்தம்  உண்டாயிருக்கும்  என்று  சொல்  என்றார்.  (யாத்திராகமம்  7:19)

mealum,  karththar  moaseayai  noakki:  nee  aaroanidaththil  un  koalai  eduththukko'ndu  egipthin  neernilaiga'laagiya  avarga'l  vaaykkaalga'lmealum  nathiga'lmealum  ku'langga'lmealum  tha'n'neer  ni’rki’ra  ellaa  idangga'lmealum,  avaiga'l  iraththamaagumpadikku,  un  kaiyai  neettu;  appozhuthu  egipthu  theasam  enggum  marappaaththirangga'lilum  ka’rpaaththirangga'lilum  iraththam  u'ndaayirukkum  en’ru  sol  en’raar.  (yaaththiraagamam  7:19)

கர்த்தர்  கட்டளையிட்டபடி  மோசேயும்  ஆரோனும்  செய்தார்கள்;  பார்வோனுடைய  கண்களுக்கு  முன்பாகவும்,  அவன்  ஊழியக்காரரின்  கண்களுக்கு  முன்பாகவும்  கோலை  ஓங்கி,  நதியிலுள்ள  தண்ணீரை  அடிக்க,  நதியிலுள்ள  தண்ணீரெல்லாம்  இரத்தமாய்  மாறிப்போயிற்று.  (யாத்திராகமம்  7:20)

karththar  katta'laiyittapadi  moaseayum  aaroanum  seythaarga'l;  paarvoanudaiya  ka'nga'lukku  munbaagavum,  avan  oozhiyakkaararin  ka'nga'lukku  munbaagavum  koalai  oanggi,  nathiyilu'l'la  tha'n'neerai  adikka,  nathiyilu'l'la  tha'n'neerellaam  iraththamaay  maa’rippoayit’ru.  (yaaththiraagamam  7:20)

நதியின்  மீன்கள்  செத்து,  நதி  நாறிப்போயிற்று;  நதியின்  தண்ணீரைக்  குடிக்க  எகிப்தியருக்குக்  கூடாமற்போயிற்று;  எகிப்து  தேசம்  எங்கும்  இரத்தமாயிருந்தது.  (யாத்திராகமம்  7:21)

nathiyin  meenga'l  seththu,  nathi  naa’rippoayit’ru;  nathiyin  tha'n'neeraik  kudikka  egipthiyarukkuk  koodaama’rpoayit’ru;  egipthu  theasam  enggum  iraththamaayirunthathu.  (yaaththiraagamam  7:21)

எகிப்தின்  மந்திரவாதிகளும்  தங்கள்  மந்திரவித்தையினால்  அப்படிச்  செய்தார்கள்;  கர்த்தர்  சொல்லியிருந்தபடி  பார்வோனின்  இருதயம்  கடினப்பட்டது;  அவர்களுக்குச்  செவிகொடாமற்போனான்.  (யாத்திராகமம்  7:22)

egipthin  manthiravaathiga'lum  thangga'l  manthiraviththaiyinaal  appadich  seythaarga'l;  karththar  solliyirunthapadi  paarvoanin  iruthayam  kadinappattathu;  avarga'lukkuch  sevikodaama’rpoanaan.  (yaaththiraagamam  7:22)

பார்வோன்  இதையும்  சிந்தியாமல்,  தன்  வீட்டிற்குத்  திரும்பிப்போனான்.  (யாத்திராகமம்  7:23)

paarvoan  ithaiyum  sinthiyaamal,  than  veetti’rkuth  thirumbippoanaan.  (yaaththiraagamam  7:23)

நதியின்  தண்ணீர்  குடிக்க  உதவாதபடியால்,  குடிக்கத்தக்க  தண்ணீருக்காக  எகிப்தியர்  எல்லாரும்  நதியோரத்தில்  ஊற்றுத்  தோண்டினார்கள்.  (யாத்திராகமம்  7:24)

nathiyin  tha'n'neer  kudikka  uthavaathapadiyaal,  kudikkaththakka  tha'n'neerukkaaga  egipthiyar  ellaarum  nathiyoaraththil  oot’ruth  thoa'ndinaarga'l.  (yaaththiraagamam  7:24)

கர்த்தர்  நதியை  அடித்து  ஏழுநாள்  ஆயிற்று.  (யாத்திராகமம்  7:25)

karththar  nathiyai  adiththu  eazhunaa'l  aayit’ru.  (yaaththiraagamam  7:25)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!