Saturday, July 16, 2016

Yaaththiraagamam 6 | யாத்திராகமம் 6 | Exodus 6

அப்பொழுது  கர்த்தர்  மோசேயை  நோக்கி:  நான்  பார்வோனுக்குச்  செய்வதை  இப்பொழுது  காண்பாய்;  பலத்த  கையைக்  கண்டு  அவர்களைப்  போகவிட்டு,  பலத்த  கையைக்  கண்டு  அவர்களைத்  தன்  தேசத்திலிருந்து  துரத்திவிடுவான்  என்றார்.  (யாத்திராகமம்  6:1)

appozhuthu  karththar  moaseayai  noakki:  naan  paarvoanukkuch  seyvathai  ippozhuthu  kaa'nbaay;  balaththa  kaiyaik  ka'ndu  avarga'laip  poagavittu,  balaththa  kaiyaik  ka'ndu  avarga'laith  than  theasaththilirunthu  thuraththividuvaan  en’raar.  (yaaththiraagamam  6:1)

மேலும்,  தேவன்  மோசேயை  நோக்கி:  நான்  யேகோவா,  (யாத்திராகமம்  6:2)

mealum,  theavan  moaseayai  noakki:  naan  yeagoavaa,  (yaaththiraagamam  6:2)

சர்வவல்லமையுள்ள  தேவன்  என்னும்  நாமத்தினால்  நான்  ஆபிரகாமுக்கும்  ஈசாக்குக்கும்  யாக்கோபுக்கும்  தரிசனமானேன்;  ஆனாலும்  யேகோவா  என்னும்  என்  நாமத்தினால்  நான்  அவர்களுக்கு  அறியப்படவில்லை.  (யாத்திராகமம்  6:3)

sarvavallamaiyu'l'la  theavan  ennum  naamaththinaal  naan  aabirahaamukkum  eesaakkukkum  yaakkoabukkum  tharisanamaanean;  aanaalum  yeagoavaa  ennum  en  naamaththinaal  naan  avarga'lukku  a’riyappadavillai.  (yaaththiraagamam  6:3)

அவர்கள்  பரதேசிகளாய்த்  தங்கின  தேசமாகிய  கானான்தேசத்தை  அவர்களுக்குக்  கொடுப்பேன்  என்று  நான்  அவர்களோடே  என்  உடன்படிக்கையையும்  ஏற்படுத்தியிருக்கிறேன்.  (யாத்திராகமம்  6:4)

avarga'l  paratheasiga'laayth  thanggina  theasamaagiya  kaanaantheasaththai  avarga'lukkuk  koduppean  en’ru  naan  avarga'loadea  en  udanpadikkaiyaiyum  ea’rpaduththiyirukki’rean.  (yaaththiraagamam  6:4)

எகிப்தியர்  அடிமைகொள்ளுகிற  இஸ்ரவேல்  புத்திரரின்  பெருமூச்சையும்  நான்  கேட்டு,  என்  உடன்படிக்கையை  நினைத்தேன்.  (யாத்திராகமம்  6:5)

egipthiyar  adimaiko'l'lugi’ra  israveal  puththirarin  perumoochchaiyum  naan  keattu,  en  udanpadikkaiyai  ninaiththean.  (yaaththiraagamam  6:5)

ஆதலால்,  இஸ்ரவேல்  புத்திரரை  நோக்கி:  நானே  கர்த்தர்;  உங்கள்மேல்  எகிப்தியர்  சுமத்தின  சுமைகளை  நீக்கி  நான்  உங்களை  விடுவித்து,  உங்களை  அவர்கள்  அடிமைத்தனத்திற்கு  நீங்கலாக்கி,  ஓங்கிய  கையினாலும்,  மகா  தண்டனைகளினாலும்  உங்களை  மீட்டு,  (யாத்திராகமம்  6:6)

aathalaal,  israveal  puththirarai  noakki:  naanea  karththar;  ungga'lmeal  egipthiyar  sumaththina  sumaiga'lai  neekki  naan  ungga'lai  viduviththu,  ungga'lai  avarga'l  adimaiththanaththi’rku  neenggalaakki,  oanggiya  kaiyinaalum,  mahaa  tha'ndanaiga'linaalum  ungga'lai  meettu,  (yaaththiraagamam  6:6)

உங்களை  எனக்கு  ஜனங்களாகச்  சேர்த்துக்கொண்டு,  உங்களுக்கு  தேவனாயிருப்பேன்;  உங்கள்மேல்  எகிப்தியர்  சுமத்தின  சுமைகளை  நீக்கி  உங்களை  விடுவிக்கிற  உங்கள்  தேவனாகிய  கர்த்தர்  நான்  என்று  அறிவீர்கள்.  (யாத்திராகமம்  6:7)

ungga'lai  enakku  janangga'laagach  searththukko'ndu,  ungga'lukku  theavanaayiruppean;  ungga'lmeal  egipthiyar  sumaththina  sumaiga'lai  neekki  ungga'lai  viduvikki’ra  ungga'l  theavanaagiya  karththar  naan  en’ru  a’riveerga'l.  (yaaththiraagamam  6:7)

ஆபிரகாமுக்கும்  ஈசாக்குக்கும்  யாக்கோபுக்கும்  கொடுப்பேன்  என்று  நான்  ஆணையிட்ட  தேசத்தில்  உங்களைக்  கொண்டுபோய்,  அதை  உங்களுக்குச்  சுதந்தரமாகக்  கொடுப்பேன்;  நான்  கர்த்தர்  என்று  அவர்களுக்குச்  சொல்  என்றார்.  (யாத்திராகமம்  6:8)

aabirahaamukkum  eesaakkukkum  yaakkoabukkum  koduppean  en’ru  naan  aa'naiyitta  theasaththil  ungga'laik  ko'ndupoay,  athai  ungga'lukkuch  suthantharamaagak  koduppean;  naan  karththar  en’ru  avarga'lukkuch  sol  en’raar.  (yaaththiraagamam  6:8)

இந்தப்பிரகாரமாக  மோசே  இஸ்ரவேல்  புத்திரருக்குச்  சொன்னான்;  அவர்களோ  மனமடிவினாலும்  கொடுமையான  வேலையினாலும்  மோசேக்குச்  செவிகொடாமற்போனார்கள்.  (யாத்திராகமம்  6:9)

inthappiragaaramaaga  moasea  israveal  puththirarukkuch  sonnaan;  avarga'loa  manamadivinaalum  kodumaiyaana  vealaiyinaalum  moaseakkuch  sevikodaama’rpoanaarga'l.  (yaaththiraagamam  6:9)

பின்பு,  கர்த்தர்  மோசேயை  நோக்கி:  (யாத்திராகமம்  6:10)

pinbu,  karththar  moaseayai  noakki:  (yaaththiraagamam  6:10)

நீ  எகிப்தின்  ராஜாவாகிய  பார்வோனிடத்தில்  போய்,  அவன்  தன்  தேசத்திலிருந்து  இஸ்ரவேல்  புத்திரரைப்  போகவிடும்படி  அவனோடே  பேசு  என்றார்.  (யாத்திராகமம்  6:11)

nee  egipthin  raajaavaagiya  paarvoanidaththil  poay,  avan  than  theasaththilirunthu  israveal  puththiraraip  poagavidumpadi  avanoadea  peasu  en’raar.  (yaaththiraagamam  6:11)

மோசே  கர்த்தருடைய  சந்நிதானத்தில்  நின்று,  இஸ்ரவேல்  புத்திரரே  எனக்குச்  செவிகொடுக்கவில்லை;  பார்வோன்  எனக்கு  எப்படிச்  செவிகொடுப்பான்?  நான்  விருத்தசேதனமில்லாத  உதடுகளுள்ளவன்  என்றான்.  (யாத்திராகமம்  6:12)

moasea  karththarudaiya  sannithaanaththil  nin’ru,  israveal  puththirarea  enakkuch  sevikodukkavillai;  paarvoan  enakku  eppadich  sevikoduppaan?  naan  viruththaseathanamillaatha  uthaduga'lu'l'lavan  en’raan.  (yaaththiraagamam  6:12)

கர்த்தர்  மோசேயோடும்  ஆரோனோடும்  பேசி,  இஸ்ரவேல்  புத்திரரை  எகிப்து  தேசத்திலிருந்து  அழைத்துக்கொண்டு  போகும்படிக்கு,  அவர்களை  இஸ்ரவேல்  புத்திரரிடத்துக்கும்  எகிப்தின்  ராஜாவாகிய  பார்வோனிடத்துக்கும்  கட்டளைகொடுத்து  அனுப்பினார்.  (யாத்திராகமம்  6:13)

karththar  moaseayoadum  aaroanoadum  peasi,  israveal  puththirarai  egipthu  theasaththilirunthu  azhaiththukko'ndu  poagumpadikku,  avarga'lai  israveal  puththiraridaththukkum  egipthin  raajaavaagiya  paarvoanidaththukkum  katta'laikoduththu  anuppinaar.  (yaaththiraagamam  6:13)

அவர்களுடைய  பிதாக்கள்  வீட்டாரின்  தலைவர்  யாரென்றால்,  இஸ்ரவேலுக்கு  முதல்  பிறந்தவனாகிய  ரூபனுடைய  குமாரர்  ஆனோக்கு,  பல்லூ,  எஸ்ரோன்,  கர்மீ;  இவர்கள்  ரூபனுடைய  வம்சங்களின்  தலைவர்.  (யாத்திராகமம்  6:14)

avarga'ludaiya  pithaakka'l  veettaarin  thalaivar  yaaren’raal,  isravealukku  muthal  pi’ranthavanaagiya  roobanudaiya  kumaarar  aanoakku,  palloo,  esroan,  karmee;  ivarga'l  roobanudaiya  vamsangga'lin  thalaivar.  (yaaththiraagamam  6:14)

சிமியோனின்  குமாரர்  எமுவேல்,  யாமின்,  ஓகாத்,  யாகீன்,  சோகார்,  கானானிய  ஸ்திரீயின்  குமாரனாகிய  சவுல்;  சிமியோனுடைய  வம்சங்களின்  தலைவர்  இவர்களே.  (யாத்திராகமம்  6:15)

simiyoanin  kumaarar  emuveal,  yaamin,  oakaath,  yaakeen,  soagaar,  kaanaaniya  sthireeyin  kumaaranaagiya  savul;  simiyoanudaiya  vamsangga'lin  thalaivar  ivarga'lea.  (yaaththiraagamam  6:15)

உற்பத்திக்கிரமப்படி  பிறந்த  லேவியின்  குமாரருடைய  நாமங்களாவன,  கெர்சோன்,  கோகாத்,  மெராரி  என்பவைகள்.  லேவி  நூற்று  முப்பத்தேழு  வருஷம்  உயிரோடிருந்தான்.  (யாத்திராகமம்  6:16)

u’rpaththikkiramappadi  pi’rantha  leaviyin  kumaararudaiya  naamangga'laavana,  kersoan,  koagaath,  meraari  enbavaiga'l.  leavi  noot’ru  muppaththeazhu  varusham  uyiroadirunthaan.  (yaaththiraagamam  6:16)

அவரவர்  வம்சங்களின்படி  பிறந்த  கெர்சோனின்  குமாரர்  லிப்னீ,  சிமேயீ  என்பவர்கள்.  (யாத்திராகமம்  6:17)

avaravar  vamsangga'linpadi  pi’rantha  kersoanin  kumaarar  libnee,  simeayee  enbavarga'l.  (yaaththiraagamam  6:17)

கோகாத்தின்  குமாரர்  அம்ராம்,  இத்சேயார்,  எப்ரோன்,  ஊசியேல்  என்பவர்கள்;  கோகாத்  நூற்று  முப்பத்துமூன்று  வருஷம்  உயிரோடிருந்தான்.  (யாத்திராகமம்  6:18)

koagaaththin  kumaarar  amraam,  ithseayaar,  ebroan,  oosiyeal  enbavarga'l;  koagaath  noot’ru  muppaththumoon’ru  varusham  uyiroadirunthaan.  (yaaththiraagamam  6:18)

மெராரியின்  குமாரர்  மகேலி,  மூசி  என்பவர்கள்;  அவரவர்  சந்ததியின்படி  லேவியினுடைய  வம்சங்களின்  தலைவர்  இவர்களே.  (யாத்திராகமம்  6:19)

meraariyin  kumaarar  mageali,  moosi  enbavarga'l;  avaravar  santhathiyinpadi  leaviyinudaiya  vamsangga'lin  thalaivar  ivarga'lea.  (yaaththiraagamam  6:19)

அம்ராம்  தன்  அத்தையாகிய  யோகெபேத்தை  விவாகம்பண்ணினான்;  அவள்  அவனுக்கு  ஆரோனையும்  மோசேயையும்  பெற்றாள்;  அம்ராம்  நூற்றுமுப்பத்தேழு  வருஷம்  உயிரோடிருந்தான்.  (யாத்திராகமம்  6:20)

amraam  than  aththaiyaagiya  yoagebeaththai  vivaagampa'n'ninaan;  ava'l  avanukku  aaroanaiyum  moaseayaiyum  pet’raa'l;  amraam  noot’rumuppaththeazhu  varusham  uyiroadirunthaan.  (yaaththiraagamam  6:20)

இத்சேயாரின்  குமாரர்  கோராகு,  நெப்பேக்,  சித்ரி  என்பவர்கள்.  (யாத்திராகமம்  6:21)

ithseayaarin  kumaarar  koaraagu,  neppeak,  sithri  enbavarga'l.  (yaaththiraagamam  6:21)

ஊசியேலின்  குமாரர்  மீசவேல்,  எல்சாபான்,  சித்ரி  என்பவர்கள்.  (யாத்திராகமம்  6:22)

oosiyealin  kumaarar  meesaveal,  elsaapaan,  sithri  enbavarga'l.  (yaaththiraagamam  6:22)

ஆரோன்  அம்மினதாபின்  குமாரத்தியும்  நகசோனின்  சகோதரியுமாகிய  எலிசபாளை  விவாகம்பண்ணினான்;  இவள்  அவனுக்கு  நாதாபையும்,  அபியூவையும்,  எலேயாசாரையும்,  இத்தாமாரையும்  பெற்றாள்.  (யாத்திராகமம்  6:23)

aaroan  amminathaabin  kumaaraththiyum  nagasoanin  sagoathariyumaagiya  elisabaa'lai  vivaagampa'n'ninaan;  iva'l  avanukku  naathaabaiyum,  abiyoovaiyum,  eleayaasaaraiyum,  iththaamaaraiyum  pet’raa'l.  (yaaththiraagamam  6:23)

கோராகின்  குமாரர்  ஆசீர்,  எல்க்கானா,  அபியாசாப்  என்பவர்கள்;  கோராகியரின்  வம்சத்தலைவர்  இவர்களே.  (யாத்திராகமம்  6:24)

koaraakin  kumaarar  aaseer,  elkkaanaa,  abiyaasaap  enbavarga'l;  koaraagiyarin  vamsaththalaivar  ivarga'lea.  (yaaththiraagamam  6:24)

ஆரோனின்  குமாரனாகிய  எலெயாசார்  பூத்தியேலுடைய  குமாரத்திகளில்  ஒருத்தியை  விவாகம்பண்ணினான்,  அவள்  அவனுக்குப்  பினெகாசைப்  பெற்றாள்;  அவரவர்  வம்சங்களின்படி  லேவியருடைய  பிதாக்களாகிய  தலைவர்  இவர்களே.  (யாத்திராகமம்  6:25)

aaroanin  kumaaranaagiya  eleyaasaar  pooththiyealudaiya  kumaaraththiga'lil  oruththiyai  vivaagampa'n'ninaan,  ava'l  avanukkup  pinegaasaip  pet’raa'l;  avaravar  vamsangga'linpadi  leaviyarudaiya  pithaakka'laagiya  thalaivar  ivarga'lea.  (yaaththiraagamam  6:25)

இஸ்ரவேல்  புத்திரரை  அணியணியாய்  எகிப்து  தேசத்திலிருந்து  நடத்திக்கொண்டுபோவதற்குக்  கர்த்தரால்  கட்டளைபெற்ற  ஆரோனும்  மோசேயும்  இவர்களே.  (யாத்திராகமம்  6:26)

israveal  puththirarai  a'niya'niyaay  egipthu  theasaththilirunthu  nadaththikko'ndupoavatha’rkuk  karththaraal  katta'laipet’ra  aaroanum  moaseayum  ivarga'lea.  (yaaththiraagamam  6:26)

இஸ்ரவேல்  புத்திரரை  எகிப்திலிருந்து  நடத்திக்கொண்டுபோவதற்கு,  எகிப்தின்  ராஜாவாகிய  பார்வோனோடே  பேசின  மோசேயும்  ஆரோனும்  இவர்களே.  (யாத்திராகமம்  6:27)

israveal  puththirarai  egipthilirunthu  nadaththikko'ndupoavatha’rku,  egipthin  raajaavaagiya  paarvoanoadea  peasina  moaseayum  aaroanum  ivarga'lea.  (yaaththiraagamam  6:27)

கர்த்தர்  எகிப்துதேசத்திலே  மோசேயோடே  பேசின  நாளில்;  (யாத்திராகமம்  6:28)

karththar  egipthutheasaththilea  moaseayoadea  peasina  naa'lil;  (yaaththiraagamam  6:28)

கர்த்தர்  மோசேயை  நோக்கி:  நானே  கர்த்தர்;  நான்  உன்னோடே  சொல்லுகிறவைகளையெல்லாம்  நீ  எகிப்து  ராஜாவாகிய  பார்வோனுக்குச்  சொல்  என்று  சொன்னபோது,  (யாத்திராகமம்  6:29)

karththar  moaseayai  noakki:  naanea  karththar;  naan  unnoadea  sollugi’ravaiga'laiyellaam  nee  egipthu  raajaavaagiya  paarvoanukkuch  sol  en’ru  sonnapoathu,  (yaaththiraagamam  6:29)

மோசே  கர்த்தருடைய  சந்நிதானத்தில்:  நான்  விருத்தசேதனமில்லாத  உதடுகளுள்ளவன்;  பார்வோன்  எனக்கு  எப்படிச்  செவிகொடுப்பான்  என்றான்.  (யாத்திராகமம்  6:30)

moasea  karththarudaiya  sannithaanaththil:  naan  viruththaseathanamillaatha  uthaduga'lu'l'lavan;  paarvoan  enakku  eppadich  sevikoduppaan  en’raan.  (yaaththiraagamam  6:30)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!