Wednesday, July 06, 2016

Yaaththiraagamam 5 | யாத்திராகமம் 5 | Exodus 5


பின்பு,  மோசேயும்  ஆரோனும்  பார்வோனிடத்தில்  போய்:  இஸ்ரவேலின்  தேவனாகிய  கர்த்தர்  வனாந்தரத்திலே  எனக்குப்  பண்டிகை  கொண்டாடும்படி  என்  ஜனங்களைப்  போகவிடவேண்டும்  என்று  சொல்லுகிறார்  என்றார்கள்.  (யாத்திராகமம்  5:1)

pinbu,  moaseayum  aaroanum  paarvoanidaththil  poay:  isravealin  theavanaagiya  karththar  vanaantharaththilea  enakkup  pa'ndigai  ko'ndaadumpadi  en  janangga'laip  poagavidavea'ndum  en’ru  sollugi’raar  en’raarga'l.  (yaaththiraagamam  5:1)

அதற்குப்  பார்வோன்:  நான்  இஸ்ரவேலைப்  போகவிடக்  கர்த்தரின்  வார்த்தையைக்  கேட்கிறதற்கு  அவர்  யார்?  நான்  கர்த்தரை  அறியேன்;  நான்  இஸ்ரவேலைப்  போகவிடுவதில்லை  என்றான்.  (யாத்திராகமம்  5:2)

atha’rkup  paarvoan:  naan  isravealaip  poagavidak  karththarin  vaarththaiyaik  keadki’ratha’rku  avar  yaar?  naan  karththarai  a’riyean;  naan  isravealaip  poagaviduvathillai  en’raan.  (yaaththiraagamam  5:2)

அப்பொழுது  அவர்கள்:  எபிரெயருடைய  தேவன்  எங்களைச்  சந்தித்தார்;  நாங்கள்  வனாந்தரத்தில்  மூன்றுநாள்  பிரயாணம்  போய்,  எங்கள்  தேவனாகிய  கர்த்தருக்குப்  பலியிடும்படி  போகவிடவேண்டும்;  போகாதிருந்தால்,  அவர்  கொள்ளைநோயும்  பட்டயமும்  எங்கள்மேல்  வரப்பண்ணுவார்  என்றார்கள்.  (யாத்திராகமம்  5:3)

appozhuthu  avarga'l:  ebireyarudaiya  theavan  engga'laich  santhiththaar;  naangga'l  vanaantharaththil  moon’runaa'l  pirayaa'nam  poay,  engga'l  theavanaagiya  karththarukkup  baliyidumpadi  poagavidavea'ndum;  poagaathirunthaal,  avar  ko'l'lainoayum  pattayamum  engga'lmeal  varappa'n'nuvaar  en’raarga'l.  (yaaththiraagamam  5:3)

எகிப்தின்  ராஜா  அவர்களை  நோக்கி:  மோசேயும்  ஆரோனுமாகிய  நீங்கள்  ஜனங்களைத்  தங்கள்  வேலைகளை  விட்டுக்  கலையப்பண்ணுகிறது  என்ன?  உங்கள்  சுமைகளைச்  சுமக்கப்போங்கள்  என்றான்.  (யாத்திராகமம்  5:4)

egipthin  raajaa  avarga'lai  noakki:  moaseayum  aaroanumaagiya  neengga'l  janangga'laith  thangga'l  vealaiga'lai  vittuk  kalaiyappa'n'nugi’rathu  enna?  ungga'l  sumaiga'laich  sumakkappoangga'l  en’raan.  (yaaththiraagamam  5:4)

பின்னும்  பார்வோன்:  இதோ,  தேசத்தில்  ஜனங்கள்  மிகுதியாயிருக்கிறார்கள்;  அவர்கள்  சுமை  சுமக்கிறதை  விட்டு  ஓய்ந்திருக்கும்படி  செய்கிறீர்களே  என்றான்.  (யாத்திராகமம்  5:5)

pinnum  paarvoan:  ithoa,  theasaththil  janangga'l  miguthiyaayirukki’raarga'l;  avarga'l  sumai  sumakki’rathai  vittu  oaynthirukkumpadi  seygi’reerga'lea  en’raan.  (yaaththiraagamam  5:5)

அன்றியும்,  அந்நாளிலே  பார்வோன்  ஜனங்களின்  ஆளோட்டிகளையும்  அவர்கள்  தலைவரையும்  நோக்கி:  (யாத்திராகமம்  5:6)

an’riyum,  annaa'lilea  paarvoan  janangga'lin  aa'loattiga'laiyum  avarga'l  thalaivaraiyum  noakki:  (yaaththiraagamam  5:6)

செங்கல்  வேலைக்கு  நீங்கள்  முன்போல  இனி  ஜனங்களுக்கு  வைக்கோல்  கொடுக்கவேண்டாம்;  அவர்கள்  தாங்களே  போய்த்  தங்களுக்கு  வைக்கோல்  சேர்க்கட்டும்.  (யாத்திராகமம்  5:7)

senggal  vealaikku  neengga'l  munpoala  ini  janangga'lukku  vaikkoal  kodukkavea'ndaam;  avarga'l  thaangga'lea  poayth  thangga'lukku  vaikkoal  searkkattum.  (yaaththiraagamam  5:7)

அவர்கள்  முன்  செய்துகொடுத்த  கணக்கின்படியே  செங்கல்  செய்யும்படி  சொல்லுங்கள்;  அதிலே  நீங்கள்  ஒன்றும்  குறைக்கவேண்டாம்,  அவர்கள்  சோம்பலாயிருக்கிறார்கள்;  அதினால்  நாங்கள்  போய்  எங்கள்  தேவனுக்குப்  பலியிடுவோம்  என்று  கூக்குரலிடுகிறார்கள்.  (யாத்திராகமம்  5:8)

avarga'l  mun  seythukoduththa  ka'nakkinpadiyea  senggal  seyyumpadi  sollungga'l;  athilea  neengga'l  on’rum  ku’raikkavea'ndaam,  avarga'l  soambalaayirukki’raarga'l;  athinaal  naangga'l  poay  engga'l  theavanukkup  baliyiduvoam  en’ru  kookkuralidugi’raarga'l.  (yaaththiraagamam  5:8)

அந்த  மனிதர்மேல்  முன்னிலும்  அதிகவேலையைச்  சுமத்துங்கள்,  அதில்  அவர்கள்  கஷ்டப்படட்டும்;  வீண்வார்த்தைகளுக்கு  அவர்கள்  செவிகொடுக்க  விடாதிருங்கள்  என்று  கட்டளையிட்டான்.  (யாத்திராகமம்  5:9)

antha  manitharmeal  munnilum  athigavealaiyaich  sumaththungga'l,  athil  avarga'l  kashdappadattum;  vee'nvaarththaiga'lukku  avarga'l  sevikodukka  vidaathirungga'l  en’ru  katta'laiyittaan.  (yaaththiraagamam  5:9)

அப்பொழுது  ஜனங்களின்  ஆளோட்டிகளும்  அவர்கள்  தலைவர்களும்  புறப்பட்டுப்போய்  ஜனங்களை  நோக்கி:  உங்களுக்கு  வைக்கோல்  கொடுப்பதில்லை;  (யாத்திராகமம்  5:10)

appozhuthu  janangga'lin  aa'loattiga'lum  avarga'l  thalaivarga'lum  pu’rappattuppoay  janangga'lai  noakki:  ungga'lukku  vaikkoal  koduppathillai;  (yaaththiraagamam  5:10)

நீங்களே  போய்  உங்களுக்கு  அகப்படுகிற  இடங்களில்  வைக்கோல்  சம்பாதியுங்கள்;  ஆனாலும்  உங்கள்  வேலையில்  ஒன்றும்  குறைக்கப்படுவதில்லை  என்று  பார்வோன்  சொல்லுகிறார்  என்றார்கள்.  (யாத்திராகமம்  5:11)

neengga'lea  poay  ungga'lukku  agappadugi’ra  idangga'lil  vaikkoal  sambaathiyungga'l;  aanaalum  ungga'l  vealaiyil  on’rum  ku’raikkappaduvathillai  en’ru  paarvoan  sollugi’raar  en’raarga'l.  (yaaththiraagamam  5:11)

அப்பொழுது  வைக்கோலுக்குப்  பதிலாகத்  தாளடிகளைச்  சேர்க்கும்படி  ஜனங்கள்  எகிப்து  தேசம்  எங்கும்  சிதறிப்போனார்கள்.  (யாத்திராகமம்  5:12)

appozhuthu  vaikkoalukkup  bathilaagath  thaa'ladiga'laich  searkkumpadi  janangga'l  egipthu  theasam  enggum  sitha’rippoanaarga'l.  (yaaththiraagamam  5:12)

ஆளோட்டிகள்  அவர்களை  நோக்கி:  வைக்கோலிருந்த  நாளில்  செய்தபடியே  உங்கள்  வேலைகளை  ஒவ்வொரு  நாளிலும்  செய்து  முடியுங்கள்  என்று  சொல்லி,  அவர்களைத்  துரிதப்படுத்தினார்கள்.  (யாத்திராகமம்  5:13)

aa'loattiga'l  avarga'lai  noakki:  vaikkoaliruntha  naa'lil  seythapadiyea  ungga'l  vealaiga'lai  ovvoru  naa'lilum  seythu  mudiyungga'l  en’ru  solli,  avarga'laith  thurithappaduththinaarga'l.  (yaaththiraagamam  5:13)

பார்வோனுடைய  ஆளோட்டிகள்  இஸ்ரவேல்  புத்திரர்மேல்  வைத்த  அவர்களுடைய  தலைவர்களை  நோக்கி:  செங்கல்  வேலையில்  நீங்கள்  முன்செய்ததுபோல  நேற்றும்  இன்றும்  ஏன்  செய்யவில்லை  என்று  கேட்டு,  அவர்களை  அடித்தார்கள்.  (யாத்திராகமம்  5:14)

paarvoanudaiya  aa'loattiga'l  israveal  puththirarmeal  vaiththa  avarga'ludaiya  thalaivarga'lai  noakki:  senggal  vealaiyil  neengga'l  munseythathupoala  neat’rum  in’rum  ean  seyyavillai  en’ru  keattu,  avarga'lai  adiththaarga'l.  (yaaththiraagamam  5:14)

அப்பொழுது  இஸ்ரவேல்  புத்திரரின்  தலைவர்  பார்வோனிடத்தில்  போய்ச்  சத்தமிட்டு:  உமது  அடியாருக்கு  நீர்  இப்படிச்  செய்கிறது  என்ன?  (யாத்திராகமம்  5:15)

appozhuthu  israveal  puththirarin  thalaivar  paarvoanidaththil  poaych  saththamittu:  umathu  adiyaarukku  neer  ippadich  seygi’rathu  enna?  (yaaththiraagamam  5:15)

உமது  அடியாருக்கு  வைக்கோல்  கொடாதிருந்தும்,  செங்கல்  அறுத்துத்  தீரவேண்டும்  என்று  எங்களுக்குச்  சொல்லுகிறார்கள்;  உம்முடைய  ஜனங்களிடத்தில்  குற்றம்  இருக்க,  உமது  அடியாராகிய  நாங்கள்  அடிக்கப்படுகிறோம்  என்றார்கள்.  (யாத்திராகமம்  5:16)

umathu  adiyaarukku  vaikkoal  kodaathirunthum,  senggal  a’ruththuth  theeravea'ndum  en’ru  engga'lukkuch  sollugi’raarga'l;  ummudaiya  janangga'lidaththil  kut’ram  irukka,  umathu  adiyaaraagiya  naangga'l  adikkappadugi’roam  en’raarga'l.  (yaaththiraagamam  5:16)

அதற்கு  அவன்:  நீங்கள்  சோம்பலாயிருக்கிறீர்கள்,  சோம்பலாயிருக்கிறீர்கள்;  அதினால்தான்  போகவேண்டும்,  கர்த்தருக்குப்  பலியிடவேண்டும்  என்கிறீர்கள்.  (யாத்திராகமம்  5:17)

atha’rku  avan:  neengga'l  soambalaayirukki’reerga'l,  soambalaayirukki’reerga'l;  athinaalthaan  poagavea'ndum,  karththarukkup  baliyidavea'ndum  engi’reerga'l.  (yaaththiraagamam  5:17)

போய்,  வேலைசெய்யுங்கள்,  உங்களுக்கு  வைக்கோல்  கொடுக்கப்படுவதில்லை;  ஆனாலும்  கணக்கின்படியே  நீங்கள்  செங்கலை  ஒப்புவிக்கவேண்டும்  என்றான்.  (யாத்திராகமம்  5:18)

poay,  vealaiseyyungga'l,  ungga'lukku  vaikkoal  kodukkappaduvathillai;  aanaalum  ka'nakkinpadiyea  neengga'l  senggalai  oppuvikkavea'ndum  en’raan.  (yaaththiraagamam  5:18)

நீங்கள்  ஒவ்வொரு  நாளிலும்  அறுத்துத்  தீரவேண்டிய  செங்கலிலே  ஒன்றும்  குறைக்கப்படாது  என்று  சொல்லப்பட்டதினாலே,  இஸ்ரவேல்  புத்திரரின்  தலைவர்  தங்களுக்கு  இக்கட்டு  வந்தது  என்று  கண்டார்கள்.  (யாத்திராகமம்  5:19)

neengga'l  ovvoru  naa'lilum  a’ruththuth  theeravea'ndiya  senggalilea  on’rum  ku’raikkappadaathu  en’ru  sollappattathinaalea,  israveal  puththirarin  thalaivar  thangga'lukku  ikkattu  vanthathu  en’ru  ka'ndaarga'l.  (yaaththiraagamam  5:19)

அவர்கள்  பார்வோனுடைய  சமுகத்தை  விட்டுப்  புறப்படுகையில்,  வழியில்  நின்ற  மோசேக்கும்  ஆரோனுக்கும்  எதிர்ப்பட்டு,  (யாத்திராகமம்  5:20)

avarga'l  paarvoanudaiya  samugaththai  vittup  pu’rappadugaiyil,  vazhiyil  nin’ra  moaseakkum  aaroanukkum  ethirppattu,  (yaaththiraagamam  5:20)

அவர்களை  நோக்கி:  நீங்கள்  பார்வோனின்  கண்களுக்கு  முன்பாகவும்  அவருடைய  ஊழியக்காரரின்  கண்களுக்கு  முன்பாகவும்  எங்கள்  வாசனையைக்  கெடுத்து,  எங்களைக்  கொல்லும்படி  அவர்கள்  கையிலே  பட்டயத்தைக்  கொடுத்ததினிமித்தம்,  கர்த்தர்  உங்களைப்  பார்த்து  நியாயந்தீர்க்கக்கடவர்  என்றார்கள்.  (யாத்திராகமம்  5:21)

avarga'lai  noakki:  neengga'l  paarvoanin  ka'nga'lukku  munbaagavum  avarudaiya  oozhiyakkaararin  ka'nga'lukku  munbaagavum  engga'l  vaasanaiyaik  keduththu,  engga'laik  kollumpadi  avarga'l  kaiyilea  pattayaththaik  koduththathinimiththam,  karththar  ungga'laip  paarththu  niyaayantheerkkakkadavar  en’raarga'l.  (yaaththiraagamam  5:21)

அப்பொழுது  மோசே  கர்த்தரிடத்தில்  திரும்பிப்போய்:  ஆண்டவரே,  இந்த  ஜனங்களுக்குத்  தீங்குவரப்பண்ணினதென்ன?  ஏன்  என்னை  அனுப்பினீர்?  (யாத்திராகமம்  5:22)

appozhuthu  moasea  karththaridaththil  thirumbippoay:  aa'ndavarea,  intha  janangga'lukkuth  theengguvarappa'n'ninathenna?  ean  ennai  anuppineer?  (yaaththiraagamam  5:22)

நான்  உமது  நாமத்தைக்கொண்டு  பேசும்படி  பார்வோனிடத்தில்  பிரவேசித்ததுமுதல்  அவன்  இந்த  ஜனங்களை  உபத்திரவப்படுத்துகிறான்;  நீர்  உம்முடைய  ஜனங்களை  விடுதலையாக்கவில்லையே  என்றான்.  (யாத்திராகமம்  5:23)

naan  umathu  naamaththaikko'ndu  peasumpadi  paarvoanidaththil  piraveasiththathumuthal  avan  intha  janangga'lai  ubaththiravappaduththugi’raan;  neer  ummudaiya  janangga'lai  viduthalaiyaakkavillaiyea  en’raan.  (yaaththiraagamam  5:23)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!