Saturday, July 23, 2016

Yaaththiraagamam 40 | யாத்திராகமம் 40 | Exodus 40

கர்த்தர்  மோசேயை  நோக்கி:  (யாத்திராகமம்  40:1)

karththar  moaseayai  noakki:  (yaaththiraagamam  40:1)

நீ  முதலாம்  மாதம்  முதல்  தேதியில்  ஆசரிப்புக்  கூடாரத்தின்  வாசஸ்தலத்தை  ஸ்தாபனம்பண்ணு.  (யாத்திராகமம்  40:2)

nee  muthalaam  maatham  muthal  theathiyil  aasarippuk  koodaaraththin  vaasasthalaththai  sthaabanampa'n'nu.  (yaaththiraagamam  40:2)

அதிலே  சாட்சிப்பெட்டியை  வைத்து,  பெட்டியைத்  திரையினால்  மறைத்து,  (யாத்திராகமம்  40:3)

athilea  saadchippettiyai  vaiththu,  pettiyaith  thiraiyinaal  ma’raiththu,  (yaaththiraagamam  40:3)

மேஜையைக்  கொண்டுவந்து,  அதில்  வைக்கவேண்டியதைக்  கிரமமாய்  வைத்து,  குத்துவிளக்கைக்  கொண்டுவந்து,  அதின்  விளக்குகளை  ஏற்றி,  (யாத்திராகமம்  40:4)

meajaiyaik  ko'nduvanthu,  athil  vaikkavea'ndiyathaik  kiramamaay  vaiththu,  kuththuvi'lakkaik  ko'nduvanthu,  athin  vi'lakkuga'lai  eat’ri,  (yaaththiraagamam  40:4)

பொன்  தூபபீடத்தைச்  சாட்சிப்பெட்டிக்கு  முன்னே  வைத்து,  வாசஸ்தலத்து  வாசலின்  தொங்குதிரையைத்  தூக்கிவைக்கக்கடவாய்.  (யாத்திராகமம்  40:5)

pon  thoobapeedaththaich  saadchippettikku  munnea  vaiththu,  vaasasthalaththu  vaasalin  thongguthiraiyaith  thookkivaikkakkadavaay.  (yaaththiraagamam  40:5)

பின்பு,  தகன  பலிபீடத்தை  ஆசரிப்புக்  கூடாரமாகிய  வாசஸ்தலத்தின்  வாசலுக்கு  முன்பாக  வைத்து,  (யாத்திராகமம்  40:6)

pinbu,  thagana  balipeedaththai  aasarippuk  koodaaramaagiya  vaasasthalaththin  vaasalukku  munbaaga  vaiththu,  (yaaththiraagamam  40:6)

தொட்டியை  ஆசரிப்புக்  கூடாரத்துக்கும்  பலிபீடத்துக்கும்  நடுவே  வைத்து,  அதிலே  தண்ணீர்  வார்த்து,  (யாத்திராகமம்  40:7)

thottiyai  aasarippuk  koodaaraththukkum  balipeedaththukkum  naduvea  vaiththu,  athilea  tha'n'neer  vaarththu,  (yaaththiraagamam  40:7)

சுற்றுப்  பிராகாரத்தை  நிறுத்தி,  பிராகாரவாசல்  தொங்குதிரையைத்  தூக்கிவைத்து,  (யாத்திராகமம்  40:8)

sut’rup  piraagaaraththai  ni’ruththi,  piraagaaravaasal  thongguthiraiyaith  thookkivaiththu,  (yaaththiraagamam  40:8)

அபிஷேக  தைலத்தை  எடுத்து,  வாசஸ்தலத்தையும்  அதிலுள்ள  யாவையும்  அபிஷேகம்பண்ணி,  அதையும்  அதிலுள்ள  சகல  பணிமுட்டுகளையும்  பரிசுத்தப்படுத்துவாயாக;  அப்பொழுது  பரிசுத்தமாயிருக்கும்.  (யாத்திராகமம்  40:9)

abisheaga  thailaththai  eduththu,  vaasasthalaththaiyum  athilu'l'la  yaavaiyum  abisheagampa'n'ni,  athaiyum  athilu'l'la  sagala  pa'nimuttuga'laiyum  parisuththappaduththuvaayaaga;  appozhuthu  parisuththamaayirukkum.  (yaaththiraagamam  40:9)

தகனபலிபீடத்தையும்  அதின்  சகல  பணிமுட்டுகளையும்  அபிஷேகம்பண்ணி,  அதைப்  பரிசுத்தப்படுத்துவாயாக;  அப்பொழுது  அது  மகா  பரிசுத்தமான  பலிபீடமாயிருக்கும்.  (யாத்திராகமம்  40:10)

thaganabalipeedaththaiyum  athin  sagala  pa'nimuttuga'laiyum  abisheagampa'n'ni,  athaip  parisuththappaduththuvaayaaga;  appozhuthu  athu  mahaa  parisuththamaana  balipeedamaayirukkum.  (yaaththiraagamam  40:10)

தொட்டியையும்  அதின்  பாதத்தையும்  அபிஷேகம்பண்ணி,  பரிசுத்தப்படுத்துவாயாக.  (யாத்திராகமம்  40:11)

thottiyaiyum  athin  paathaththaiyum  abisheagampa'n'ni,  parisuththappaduththuvaayaaga.  (yaaththiraagamam  40:11)

பின்பு  ஆரோனையும்  அவன்  குமாரரையும்  ஆசரிப்புக்  கூடாரவாசலில்  வரச்செய்து,  அவர்களை  ஜலத்தினால்  ஸ்நானம்பண்ணுவித்து,  (யாத்திராகமம்  40:12)

pinbu  aaroanaiyum  avan  kumaararaiyum  aasarippuk  koodaaravaasalil  varachseythu,  avarga'lai  jalaththinaal  snaanampa'n'nuviththu,  (yaaththiraagamam  40:12)

ஆரோனுக்குப்  பரிசுத்த  வஸ்திரங்களை  உடுத்தி,  எனக்கு  ஆசாரிய  ஊழியம்  செய்யும்படிக்கு  அவனை  அபிஷேகம்பண்ணி,  அவனைப்  பரிசுத்தப்படுத்துவாயாக.  (யாத்திராகமம்  40:13)

aaroanukkup  parisuththa  vasthirangga'lai  uduththi,  enakku  aasaariya  oozhiyam  seyyumpadikku  avanai  abisheagampa'n'ni,  avanaip  parisuththappaduththuvaayaaga.  (yaaththiraagamam  40:13)

அவன்  குமாரரையும்  வரச்செய்து,  அவர்களுக்கு  அங்கிகளை  உடுத்தி,  (யாத்திராகமம்  40:14)

avan  kumaararaiyum  varachseythu,  avarga'lukku  anggiga'lai  uduththi,  (yaaththiraagamam  40:14)

அவர்கள்  எனக்கு  ஆசாரிய  ஊழியம்  செய்யும்படி,  அவர்களையும்,  அவர்கள்  தகப்பனை  அபிஷேகம்பண்ணினபடியே,  அபிஷேகம்பண்ணுவாயாக;  அவர்கள்  பெறும்  அந்த  அபிஷேகம்  தலைமுறைதோறும்  நித்திய  ஆசாரியத்துவத்துக்கு  ஏதுவாயிருக்கும்  என்றார்.  (யாத்திராகமம்  40:15)

avarga'l  enakku  aasaariya  oozhiyam  seyyumpadi,  avarga'laiyum,  avarga'l  thagappanai  abisheagampa'n'ninapadiyea,  abisheagampa'n'nuvaayaaga;  avarga'l  pe’rum  antha  abisheagam  thalaimu’raithoa’rum  niththiya  aasaariyaththuvaththukku  eathuvaayirukkum  en’raar.  (yaaththiraagamam  40:15)

கர்த்தர்  தனக்குக்  கற்பித்தபடியெல்லாம்  மோசே  செய்தான்.  (யாத்திராகமம்  40:16)

karththar  thanakkuk  ka’rpiththapadiyellaam  moasea  seythaan.  (yaaththiraagamam  40:16)

இரண்டாம்  வருஷம்  முதலாம்  மாதம்  முதல்  தேதியில்  வாசஸ்தலம்  ஸ்தாபனம்பண்ணப்பட்டது.  (யாத்திராகமம்  40:17)

ira'ndaam  varusham  muthalaam  maatham  muthal  theathiyil  vaasasthalam  sthaabanampa'n'nappattathu.  (yaaththiraagamam  40:17)

மோசே  கூடாரத்தை  எடுப்பித்தான்;  அவன்  அதின்  பாதங்களை  வைத்து,  அதின்  பலகைகளை  நிறுத்தி,  அதின்  தாழ்ப்பாள்களைப்  பாய்ச்சி,  அதின்  தூண்களை  நாட்டி,  (யாத்திராகமம்  40:18)

moasea  koodaaraththai  eduppiththaan;  avan  athin  paathangga'lai  vaiththu,  athin  palagaiga'lai  ni’ruththi,  athin  thaazhppaa'lga'laip  paaychchi,  athin  thoo'nga'lai  naatti,  (yaaththiraagamam  40:18)

வாசஸ்தலத்தின்மேல்  கூடாரத்தை  விரித்து,  அதின்மேல்  கூடாரத்தின்  மூடியை,  கர்த்தர்  தனக்குக்  கற்பித்தபடியே  போட்டான்.  (யாத்திராகமம்  40:19)

vaasasthalaththinmeal  koodaaraththai  viriththu,  athinmeal  koodaaraththin  moodiyai,  karththar  thanakkuk  ka’rpiththapadiyea  poattaan.  (yaaththiraagamam  40:19)

பின்பு,  கர்த்தர்  மோசேக்குக்  கற்பித்தபடியே,  சாட்சிப்பிரமாணத்தை  எடுத்து,  அதைப்  பெட்டியிலே  வைத்து,  பெட்டியில்  தண்டுகளைப்பாய்ச்சி,  பெட்டியின்மேல்  கிருபாசன  மூடியை  வைத்து,  (யாத்திராகமம்  40:20)

pinbu,  karththar  moaseakkuk  ka’rpiththapadiyea,  saadchippiramaa'naththai  eduththu,  athaip  pettiyilea  vaiththu,  pettiyil  tha'nduga'laippaaychchi,  pettiyinmeal  kirubaasana  moodiyai  vaiththu,  (yaaththiraagamam  40:20)

பெட்டியை  வாசஸ்தலத்துக்குள்ளே  கொண்டுபோய்,  மறைவின்  திரைச்சீலையைத்  தொங்கவைத்து,  சாட்சிப்பெட்டியை  மறைத்துவைத்தான்.  (யாத்திராகமம்  40:21)

pettiyai  vaasasthalaththukku'l'lea  ko'ndupoay,  ma’raivin  thiraichseelaiyaith  thonggavaiththu,  saadchippettiyai  ma’raiththuvaiththaan.  (yaaththiraagamam  40:21)

பின்பு,  கர்த்தர்  மோசேக்குக்  கற்பித்தபடியே,  மேஜையை  ஆசரிப்புக்  கூடாரத்தில்  வாசஸ்தலத்தின்  வடபுறமாய்த்  திரைக்குப்  புறம்பாக  வைத்து,  (யாத்திராகமம்  40:22)

pinbu,  karththar  moaseakkuk  ka’rpiththapadiyea,  meajaiyai  aasarippuk  koodaaraththil  vaasasthalaththin  vadapu’ramaayth  thiraikkup  pu’rambaaga  vaiththu,  (yaaththiraagamam  40:22)

அதின்மேல்  கர்த்தருடைய  சமுகத்தில்  அப்பத்தை  வரிசையாக  அடுக்கி  வைத்தான்.  (யாத்திராகமம்  40:23)

athinmeal  karththarudaiya  samugaththil  appaththai  varisaiyaaga  adukki  vaiththaan.  (yaaththiraagamam  40:23)

பின்பு,  கர்த்தர்  மோசேக்குக்  கற்பித்தபடியே,  குத்துவிளக்கை  ஆசரிப்புக்  கூடாரத்தில்  மேஜைக்கு  எதிராக  வாசஸ்தலத்தின்  தென்புறத்திலே  வைத்து,  (யாத்திராகமம்  40:24)

pinbu,  karththar  moaseakkuk  ka’rpiththapadiyea,  kuththuvi'lakkai  aasarippuk  koodaaraththil  meajaikku  ethiraaga  vaasasthalaththin  thenpu’raththilea  vaiththu,  (yaaththiraagamam  40:24)

கர்த்தருடைய  சந்நிதியில்  விளக்குகளை  ஏற்றினான்.  (யாத்திராகமம்  40:25)

karththarudaiya  sannithiyil  vi'lakkuga'lai  eat’rinaan.  (yaaththiraagamam  40:25)

பின்பு,  கர்த்தர்  மோசேக்குக்  கற்பித்தபடியே,  ஆசரிப்புக்  கூடாரத்தில்  திரைக்கு  முன்பாகப்  பொற்பீடத்தை  வைத்து,  (யாத்திராகமம்  40:26)

pinbu,  karththar  moaseakkuk  ka’rpiththapadiyea,  aasarippuk  koodaaraththil  thiraikku  munbaagap  po’rpeedaththai  vaiththu,  (yaaththiraagamam  40:26)

அதின்மேல்  சுகந்தவர்க்கத்தினால்  தூபங்காட்டினான்.  (யாத்திராகமம்  40:27)

athinmeal  suganthavarkkaththinaal  thoobangkaattinaan.  (yaaththiraagamam  40:27)

பின்பு,  கர்த்தர்  மோசேக்குக்  கற்பித்தபடியே,  வாசஸ்தலத்தின்  தொங்குதிரையைத்  தூக்கிவைத்து,  (யாத்திராகமம்  40:28)

pinbu,  karththar  moaseakkuk  ka’rpiththapadiyea,  vaasasthalaththin  thongguthiraiyaith  thookkivaiththu,  (yaaththiraagamam  40:28)

தகனபலிபீடத்தை  ஆசரிப்புக்  கூடாரமான  வாசஸ்தலத்தின்  வாசலுக்கு  முன்பாக  வைத்து,  அதின்மேல்  சர்வாங்க  தகனபலியையும்  போஜனபலியையும்  செலுத்தினான்.  (யாத்திராகமம்  40:29)

thaganabalipeedaththai  aasarippuk  koodaaramaana  vaasasthalaththin  vaasalukku  munbaaga  vaiththu,  athinmeal  sarvaangga  thaganabaliyaiyum  poajanabaliyaiyum  seluththinaan.  (yaaththiraagamam  40:29)

அவன்  ஆசரிப்புக்  கூடாரத்துக்கும்  பலிபீடத்துக்கும்  நடுவே  தொட்டியை  வைத்து,  கழுவுகிறதற்கு  அதிலே  தண்ணீர்  வார்த்தான்.  (யாத்திராகமம்  40:30)

avan  aasarippuk  koodaaraththukkum  balipeedaththukkum  naduvea  thottiyai  vaiththu,  kazhuvugi’ratha’rku  athilea  tha'n'neer  vaarththaan.  (yaaththiraagamam  40:30)

அவ்விடத்திலே  மோசேயும்  ஆரோனும்  அவன்  குமாரரும்  தங்கள்  கைகளையும்  கால்களையும்  கழுவினார்கள்.  (யாத்திராகமம்  40:31)

avvidaththilea  moaseayum  aaroanum  avan  kumaararum  thangga'l  kaiga'laiyum  kaalga'laiyum  kazhuvinaarga'l.  (yaaththiraagamam  40:31)

கர்த்தர்  மோசேக்குக்  கற்பித்தபடியே,  அவர்கள்  ஆசரிப்புக்  கூடாரத்துக்குள்ளே  பிரவேசிக்கிறபோதும்,  பலிபீடத்தண்டையில்  சேருகிறபோதும்,  அவர்கள்  கழுவிக்கொள்ளுவார்கள்.  (யாத்திராகமம்  40:32)

karththar  moaseakkuk  ka’rpiththapadiyea,  avarga'l  aasarippuk  koodaaraththukku'l'lea  piraveasikki’rapoathum,  balipeedaththa'ndaiyil  searugi’rapoathum,  avarga'l  kazhuvikko'l'luvaarga'l.  (yaaththiraagamam  40:32)

பின்பு,  அவன்  வாசஸ்தலத்தையும்  பலிபீடத்தையும்  சுற்றிப்  பிராகாரத்தை  நிறுத்தி,  பிராகாரத்தின்  தொங்குதிரையைத்  தொங்கவைத்தான்;  இவ்விதமாய்  மோசே  வேலையை  முடித்தான்.  (யாத்திராகமம்  40:33)

pinbu,  avan  vaasasthalaththaiyum  balipeedaththaiyum  sut’rip  piraagaaraththai  ni’ruththi,  piraagaaraththin  thongguthiraiyaith  thonggavaiththaan;  ivvithamaay  moasea  vealaiyai  mudiththaan.  (yaaththiraagamam  40:33)

அப்பொழுது  ஒரு  மேகம்  ஆசரிப்புக்  கூடாரத்தை  மூடினது;  கர்த்தருடைய  மகிமை  வாசஸ்தலத்தை  நிரப்பிற்று.  (யாத்திராகமம்  40:34)

appozhuthu  oru  meagam  aasarippuk  koodaaraththai  moodinathu;  karththarudaiya  magimai  vaasasthalaththai  nirappit’ru.  (yaaththiraagamam  40:34)

மேகம்  அதின்மேல்  தங்கி,  கர்த்தருடைய  மகிமை  வாசஸ்தலத்தை  நிரப்பினதினால்,  மோசே  ஆசரிப்புக்  கூடாரத்துக்குள்  பிரவேசிக்கக்கூடாமல்  இருந்தது.  (யாத்திராகமம்  40:35)

meagam  athinmeal  thanggi,  karththarudaiya  magimai  vaasasthalaththai  nirappinathinaal,  moasea  aasarippuk  koodaaraththukku'l  piraveasikkakkoodaamal  irunthathu.  (yaaththiraagamam  40:35)

வாசஸ்தலத்திலிருந்து  மேகம்  மேலே  எழும்பும்போது,  இஸ்ரவேல்  புத்திரர்  பிரயாணம்  பண்ணப்  புறப்படுவார்கள்.  (யாத்திராகமம்  40:36)

vaasasthalaththilirunthu  meagam  mealea  ezhumbumpoathu,  israveal  puththirar  pirayaa'nam  pa'n'nap  pu’rappaduvaarga'l.  (yaaththiraagamam  40:36)

மேகம்  எழும்பாதிருந்தால்,  அது  எழும்பும்  நாள்வரைக்கும்  பிரயாணம்  பண்ணாதிருப்பார்கள்.  (யாத்திராகமம்  40:37)

meagam  ezhumbaathirunthaal,  athu  ezhumbum  naa'lvaraikkum  pirayaa'nam  pa'n'naathiruppaarga'l.  (yaaththiraagamam  40:37)

இஸ்ரவேல்  வம்சத்தார்  பண்ணும்  எல்லாப்  பிரயாணங்களிலும்  அவர்களெல்லாருடைய  கண்களுக்கும்  பிரத்தியட்சமாகப்  பகலில்  கர்த்தருடைய  மேகமும்,  இரவில்  அக்கினியும்,  வாசஸ்தலத்தின்மேல்  தங்கியிருந்தது.  (யாத்திராகமம்  40:38)

israveal  vamsaththaar  pa'n'num  ellaap  pirayaa'nangga'lilum  avarga'lellaarudaiya  ka'nga'lukkum  piraththiyadchamaagap  pagalil  karththarudaiya  meagamum,  iravil  akkiniyum,  vaasasthalaththinmeal  thanggiyirunthathu.  (yaaththiraagamam  40:38)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!