Wednesday, July 06, 2016

Yaaththiraagamam 4 | யாத்திராகமம் 4 | Exodus 4


அப்பொழுது  மோசே:  அவர்கள்  என்னை  நம்பார்கள்;  என்  வாக்குக்குச்  செவிகொடார்கள்;  கர்த்தர்  உனக்குத்  தரிசனமாகவில்லை  என்று  சொல்லுவார்கள்  என்றான்.  (யாத்திராகமம்  4:1)

appozhuthu  moasea:  avarga'l  ennai  nambaarga'l;  en  vaakkukkuch  sevikodaarga'l;  karththar  unakkuth  tharisanamaagavillai  en’ru  solluvaarga'l  en’raan.  (yaaththiraagamam  4:1)

கர்த்தர்  அவனை  நோக்கி:  உன்  கையிலிருக்கிறது  என்ன  என்றார்.  ஒரு  கோல்  என்றான்.  (யாத்திராகமம்  4:2)

karththar  avanai  noakki:  un  kaiyilirukki’rathu  enna  en’raar.  oru  koal  en’raan.  (yaaththiraagamam  4:2)

அதைத்  தரையிலே  போடு  என்றார்;  அவன்  அதைத்  தரையிலே  போட்டபோது,  அது  சர்ப்பமாயிற்று;  மோசே  அதற்கு  விலகியோடினான்.  (யாத்திராகமம்  4:3)

athaith  tharaiyilea  poadu  en’raar;  avan  athaith  tharaiyilea  poattapoathu,  athu  sarppamaayit’ru;  moasea  atha’rku  vilagiyoadinaan.  (yaaththiraagamam  4:3)

அப்பொழுது  கர்த்தர்  மோசேயை  நோக்கி:  உன்  கையை  நீட்டி,  அதின்  வாலைப்  பிடி  என்றார்;  அவன்  தன்  கையை  நீட்டி,  அதைப்  பிடித்தபோது,  அது  அவன்  கையிலே  கோலாயிற்று.  (யாத்திராகமம்  4:4)

appozhuthu  karththar  moaseayai  noakki:  un  kaiyai  neetti,  athin  vaalaip  pidi  en’raar;  avan  than  kaiyai  neetti,  athaip  pidiththapoathu,  athu  avan  kaiyilea  koalaayit’ru.  (yaaththiraagamam  4:4)

ஆபிரகாமின்  தேவனும்  ஈசாக்கின்  தேவனும்  யாக்கோபின்  தேவனுமாயிருக்கிற  தங்கள்  பிதாக்களுடைய  தேவனாகிய  கர்த்தர்  உனக்குத்  தரிசனமானதை  அவர்கள்  நம்புவதற்கு  இதுவே  அடையாளம்  என்றார்.  (யாத்திராகமம்  4:5)

aabirahaamin  theavanum  eesaakkin  theavanum  yaakkoabin  theavanumaayirukki’ra  thangga'l  pithaakka'ludaiya  theavanaagiya  karththar  unakkuth  tharisanamaanathai  avarga'l  nambuvatha’rku  ithuvea  adaiyaa'lam  en’raar.  (yaaththiraagamam  4:5)

மேலும்,  கர்த்தர்  அவனை  நோக்கி:  உன்  கையை  உன்  மடியிலே  போடு  என்றார்;  அவன்  தன்  கையைத்  தன்  மடியிலே  போட்டு,  அதை  வெளியே  எடுக்கும்போது,  இதோ,  அவன்  கை  உறைந்த  மழையைப்போல  வெண்குஷ்டம்  பிடித்திருந்தது.  (யாத்திராகமம்  4:6)

mealum,  karththar  avanai  noakki:  un  kaiyai  un  madiyilea  poadu  en’raar;  avan  than  kaiyaith  than  madiyilea  poattu,  athai  ve'liyea  edukkumpoathu,  ithoa,  avan  kai  u’raintha  mazhaiyaippoala  ve'nkushdam  pidiththirunthathu.  (yaaththiraagamam  4:6)

அவர்:  உன்  கையைத்  திரும்பவும்  உன்  மடியிலே  போடு  என்றார்.  அவன்  தன்  கையைத்  திரும்பத்  தன்  மடியிலே  போட்டு,  தன்  மடியிலிருந்து  அதை  வெளியே  எடுத்தபோது,  அது  திரும்ப  அவனுடைய  மற்றச்  சதையைப்போலாயிற்று.  (யாத்திராகமம்  4:7)

avar:  un  kaiyaith  thirumbavum  un  madiyilea  poadu  en’raar.  avan  than  kaiyaith  thirumbath  than  madiyilea  poattu,  than  madiyilirunthu  athai  ve'liyea  eduththapoathu,  athu  thirumba  avanudaiya  mat’rach  sathaiyaippoalaayit’ru.  (yaaththiraagamam  4:7)

அப்பொழுது  அவர்:  முந்தின  அடையாளத்தை  அவர்கள்  கண்டு,  உன்னை  நம்பாமலும்  உனக்குச்  செவிகொடாமலும்  போனால்,  பிந்தின  அடையாளத்தைக்  கண்டு  நம்புவார்கள்.  (யாத்திராகமம்  4:8)

appozhuthu  avar:  munthina  adaiyaa'laththai  avarga'l  ka'ndu,  unnai  nambaamalum  unakkuch  sevikodaamalum  poanaal,  pinthina  adaiyaa'laththaik  ka'ndu  nambuvaarga'l.  (yaaththiraagamam  4:8)

இவ்விரண்டு  அடையாளங்களையும்  அவர்கள்  நம்பாமலும்,  உன்  வாக்குக்குச்  செவிகொடாமலும்  இருப்பார்களானால்,  அப்பொழுது  நீ  நதியின்  தண்ணீரை  மொண்டு  நிலத்தில்  ஊற்றுவாயாக;  நதியில்  மொண்ட  தண்ணீர்  வெட்டாந்தரையிலே  இரத்தமாகும்  என்றார்.  (யாத்திராகமம்  4:9)

ivvira'ndu  adaiyaa'langga'laiyum  avarga'l  nambaamalum,  un  vaakkukkuch  sevikodaamalum  iruppaarga'laanaal,  appozhuthu  nee  nathiyin  tha'n'neerai  mo'ndu  nilaththil  oot’ruvaayaaga;  nathiyil  mo'nda  tha'n'neer  vettaantharaiyilea  iraththamaagum  en’raar.  (yaaththiraagamam  4:9)

அப்பொழுது  மோசே  கர்த்தரை  நோக்கி:  ஆண்டவரே,  இதற்கு  முன்னாவது,  தேவரீர்  உமது  அடியேனோடே  பேசினதற்குப்  பின்னாவது  நான்  வாக்குவல்லவன்  அல்ல;  நான்  திக்குவாயும்  மந்தநாவும்  உள்ளவன்  என்றான்.  (யாத்திராகமம்  4:10)

appozhuthu  moasea  karththarai  noakki:  aa'ndavarea,  itha’rku  munnaavathu,  theavareer  umathu  adiyeanoadea  peasinatha’rkup  pinnaavathu  naan  vaakkuvallavan  alla;  naan  thikkuvaayum  manthanaavum  u'l'lavan  en’raan.  (yaaththiraagamam  4:10)

அப்பொழுது  கர்த்தர்  அவனை  நோக்கி:  மனுஷனுக்கு  வாயை  உண்டாக்கினவர்  யார்?  ஊமையனையும்  செவிடனையும்  பார்வையுள்ளவனையும்  குருடனையும்  உண்டாக்கினவர்  யார்?  கர்த்தராகிய  நான்  அல்லவா?  (யாத்திராகமம்  4:11)

appozhuthu  karththar  avanai  noakki:  manushanukku  vaayai  u'ndaakkinavar  yaar?  oomaiyanaiyum  sevidanaiyum  paarvaiyu'l'lavanaiyum  kurudanaiyum  u'ndaakkinavar  yaar?  karththaraagiya  naan  allavaa?  (yaaththiraagamam  4:11)

ஆதலால்,  நீ  போ;  நான்  உன்  வாயோடே  இருந்து,  நீ  பேசவேண்டியதை  உனக்குப்  போதிப்பேன்  என்றார்.  (யாத்திராகமம்  4:12)

aathalaal,  nee  poa;  naan  un  vaayoadea  irunthu,  nee  peasavea'ndiyathai  unakkup  poathippean  en’raar.  (yaaththiraagamam  4:12)

அதற்கு  அவன்:  ஆண்டவரே,  நீர்  அனுப்பச்  சித்தமாயிருக்கிற  யாரையாகிலும்  அனுப்பும்  என்றான்.  (யாத்திராகமம்  4:13)

atha’rku  avan:  aa'ndavarea,  neer  anuppach  siththamaayirukki’ra  yaaraiyaagilum  anuppum  en’raan.  (yaaththiraagamam  4:13)

அப்பொழுது  கர்த்தர்  மோசேயின்மேல்  கோபம்மூண்டவராகி:  லேவியனாகிய  ஆரோன்  உன்  சகோதரன்  அல்லவா?  அவன்  நன்றாய்ப்  பேசுகிறவன்  என்று  அறிவேன்;  அவன்  உன்னைச்  சந்திக்கப்  புறப்பட்டுவருகிறான்;  உன்னைக்  காணும்போது  அவன்  இருதயம்  மகிழும்.  (யாத்திராகமம்  4:14)

appozhuthu  karththar  moaseayinmeal  koabammoo'ndavaraagi:  leaviyanaagiya  aaroan  un  sagoatharan  allavaa?  avan  nan’raayp  peasugi’ravan  en’ru  a’rivean;  avan  unnaich  santhikkap  pu’rappattuvarugi’raan;  unnaik  kaa'numpoathu  avan  iruthayam  magizhum.  (yaaththiraagamam  4:14)

நீ  அவனோடே  பேசி,  அவன்  வாயில்  வார்த்தைகளைப்  போடு;  நான்  உன்  வாயிலும்  அவன்  வாயிலும்  இருந்து,  நீங்கள்  செய்யவேண்டியதை  உங்களுக்கு  உணர்த்துவேன்.  (யாத்திராகமம்  4:15)

nee  avanoadea  peasi,  avan  vaayil  vaarththaiga'laip  poadu;  naan  un  vaayilum  avan  vaayilum  irunthu,  neengga'l  seyyavea'ndiyathai  ungga'lukku  u'narththuvean.  (yaaththiraagamam  4:15)

அவன்  உனக்குப்  பதிலாக  ஜனங்களோடே  பேசுவான்;  இவ்விதமாய்  அவன்  உனக்கு  வாயாக  இருப்பான்;  நீ  அவனுக்குத்  தேவனாக  இருப்பாய்.  (யாத்திராகமம்  4:16)

avan  unakkup  bathilaaga  janangga'loadea  peasuvaan;  ivvithamaay  avan  unakku  vaayaaga  iruppaan;  nee  avanukkuth  theavanaaga  iruppaay.  (yaaththiraagamam  4:16)

இந்தக்  கோலையும்  உன்  கையிலே  பிடித்துக்கொண்டுபோ,  இதனால்  நீ  அடையாளங்களைச்  செய்வாய்  என்றார்.  (யாத்திராகமம்  4:17)

inthak  koalaiyum  un  kaiyilea  pidiththukko'ndupoa,  ithanaal  nee  adaiyaa'langga'laich  seyvaay  en’raar.  (yaaththiraagamam  4:17)

மோசே  தன்  மாமனாகிய  எத்திரோவினிடத்துக்கு  வந்து:  நான்  எகிப்திலிருக்கிற  என்  சகோதரரிடத்துக்குத்  திரும்பிப்போய்,  அவர்கள்  இன்னும்  உயிரோடே  இருக்கிறார்களா  என்று  பார்க்கும்படிப்  புறப்பட்டுப்போக  உத்தரவு  தரவேண்டும்  என்றான்.  அப்பொழுது  எத்திரோ  மோசேயை  நோக்கி:  சுகமாய்ப்  போய்வாரும்  என்றான்.  (யாத்திராகமம்  4:18)

moasea  than  maamanaagiya  eththiroavinidaththukku  vanthu:  naan  egipthilirukki’ra  en  sagoathararidaththukkuth  thirumbippoay,  avarga'l  innum  uyiroadea  irukki’raarga'laa  en’ru  paarkkumpadip  pu’rappattuppoaga  uththaravu  tharavea'ndum  en’raan.  appozhuthu  eththiroa  moaseayai  noakki:  sugamaayp  poayvaarum  en’raan.  (yaaththiraagamam  4:18)

பின்னும்  கர்த்தர்  மீதியானிலே  மோசேயை  நோக்கி:  நீ  எகிப்துக்குத்  திரும்பிப்  போ,  உன்  பிராணனை  வாங்கத்  தேடின  மனிதர்  எல்லாரும்  இறந்துபோனார்கள்  என்றார்.  (யாத்திராகமம்  4:19)

pinnum  karththar  meethiyaanilea  moaseayai  noakki:  nee  egipthukkuth  thirumbip  poa,  un  piraa'nanai  vaanggath  theadina  manithar  ellaarum  i’ranthupoanaarga'l  en’raar.  (yaaththiraagamam  4:19)

அப்பொழுது  மோசே  தன்  மனைவியையும்  தன்  பிள்ளைகளையும்  கழுதையின்மேல்  ஏற்றிக்கொண்டு,  எகிப்து  தேசத்துக்குத்  திரும்பினான்;  தேவனுடைய  கோலையும்  மோசே  தன்  கையிலே  பிடித்துக்கொண்டுபோனான்.  (யாத்திராகமம்  4:20)

appozhuthu  moasea  than  manaiviyaiyum  than  pi'l'laiga'laiyum  kazhuthaiyinmeal  eat’rikko'ndu,  egipthu  theasaththukkuth  thirumbinaan;  theavanudaiya  koalaiyum  moasea  than  kaiyilea  pidiththukko'ndupoanaan.  (yaaththiraagamam  4:20)

அப்பொழுது  கர்த்தர்  மோசேயை  நோக்கி:  நீ  எகிப்திலே  திரும்பிப்போய்ச்  சேர்ந்தபின்,  நான்  உன்  கையில்  அளித்திருக்கிற  அற்புதங்கள்  யாவையும்  பார்வோனுக்கு  முன்பாகச்  செய்யும்படி  எச்சரிக்கையாயிரு;  ஆகிலும்,  நான்  அவன்  இருதயத்தைக்  கடினப்படுத்துவேன்;  அவன்  ஜனத்தைப்  போகவிடான்.  (யாத்திராகமம்  4:21)

appozhuthu  karththar  moaseayai  noakki:  nee  egipthilea  thirumbippoaych  searnthapin,  naan  un  kaiyil  a'liththirukki’ra  a’rputhangga'l  yaavaiyum  paarvoanukku  munbaagach  seyyumpadi  echcharikkaiyaayiru;  aagilum,  naan  avan  iruthayaththaik  kadinappaduththuvean;  avan  janaththaip  poagavidaan.  (yaaththiraagamam  4:21)

அப்பொழுது  நீ  பார்வோனோடே  சொல்லவேண்டியது  என்னவென்றால்:  இஸ்ரவேல்  என்னுடைய  குமாரன்,  என்  சேஷ்டபுத்திரன்.  (யாத்திராகமம்  4:22)

appozhuthu  nee  paarvoanoadea  sollavea'ndiyathu  ennaven’raal:  israveal  ennudaiya  kumaaran,  en  seashdapuththiran.  (yaaththiraagamam  4:22)

எனக்கு  ஆராதனை  செய்யும்படி  என்  குமாரனை  அனுப்பிவிடு  என்று  கட்டளையிடுகிறேன்;  அவனை  விடமாட்டேன்  என்பாயாகில்  நான்  உன்னுடைய  குமாரனை,  உன்  சேஷ்டபுத்திரனைச்  சங்கரிப்பேன்  என்று  கர்த்தர்  சொன்னார்  என்று  சொல்  என்றார்.  (யாத்திராகமம்  4:23)

enakku  aaraathanai  seyyumpadi  en  kumaaranai  anuppividu  en’ru  katta'laiyidugi’rean;  avanai  vidamaattean  enbaayaagil  naan  unnudaiya  kumaaranai,  un  seashdapuththiranaich  sanggarippean  en’ru  karththar  sonnaar  en’ru  sol  en’raar.  (yaaththiraagamam  4:23)

வழியிலே  தங்கும்  இடத்தில்  கர்த்தர்  அவனுக்கு  எதிர்ப்பட்டு,  அவனைக்  கொல்லப்பார்த்தார்.  (யாத்திராகமம்  4:24)

vazhiyilea  thanggum  idaththil  karththar  avanukku  ethirppattu,  avanaik  kollappaarththaar.  (yaaththiraagamam  4:24)

அப்பொழுது  சிப்போராள்  கருக்கான  ஒரு  கல்லை  எடுத்து,  தன்  புத்திரனுடைய  நுனித்தோலை  அறுத்து,  அதை  அவன்  கால்களுக்கு  முன்பாக  எறிந்து:  நீர்  எனக்கு  இரத்தசம்பந்தமான  புருஷன்  என்றாள்.  (யாத்திராகமம்  4:25)

appozhuthu  sippoaraa'l  karukkaana  oru  kallai  eduththu,  than  puththiranudaiya  nuniththoalai  a’ruththu,  athai  avan  kaalga'lukku  munbaaga  e’rinthu:  neer  enakku  iraththasambanthamaana  purushan  en’raa'l.  (yaaththiraagamam  4:25)

பின்பு  அவர்  அவனைவிட்டு  விலகினார்.  அப்பொழுது  அவள்:  விருத்தசேதனத்தினிமித்தம்  நீர்  எனக்கு  இரத்தசம்பந்தமான  புருஷன்  என்றாள்.  (யாத்திராகமம்  4:26)

pinbu  avar  avanaivittu  vilaginaar.  appozhuthu  ava'l:  viruththaseathanaththinimiththam  neer  enakku  iraththasambanthamaana  purushan  en’raa'l.  (yaaththiraagamam  4:26)

கர்த்தர்  ஆரோனை  நோக்கி:  நீ  வனாந்தரத்தில்  மோசேக்கு  எதிர்கொண்டுபோ  என்றார்.  அவன்  போய்,  தேவபர்வதத்தில்  அவனைச்  சந்தித்து,  அவனை  முத்தஞ்செய்தான்.  (யாத்திராகமம்  4:27)

karththar  aaroanai  noakki:  nee  vanaantharaththil  moaseakku  ethirko'ndupoa  en’raar.  avan  poay,  theavaparvathaththil  avanaich  santhiththu,  avanai  muththagnseythaan.  (yaaththiraagamam  4:27)

அப்பொழுது  மோசே  தன்னை  அனுப்பின  கர்த்தருடைய  சகல  வார்த்தைகளையும்  அவர்  தனக்குக்  கட்டளையிட்ட  சகல  அடையாளங்களையும்  ஆரோனுக்குத்  தெரிவித்தான்.  (யாத்திராகமம்  4:28)

appozhuthu  moasea  thannai  anuppina  karththarudaiya  sagala  vaarththaiga'laiyum  avar  thanakkuk  katta'laiyitta  sagala  adaiyaa'langga'laiyum  aaroanukkuth  theriviththaan.  (yaaththiraagamam  4:28)

மோசேயும்  ஆரோனும்  போய்,  இஸ்ரவேல்  புத்திரரின்  மூப்பர்  எல்லாரையும்  கூடிவரச்  செய்தார்கள்.  (யாத்திராகமம்  4:29)

moaseayum  aaroanum  poay,  israveal  puththirarin  mooppar  ellaaraiyum  koodivarach  seythaarga'l.  (yaaththiraagamam  4:29)

கர்த்தர்  மோசேக்குச்  சொல்லிய  சகல  வார்த்தைகளையும்  ஆரோன்  சொல்லி,  ஜனங்களின்  கண்களுக்கு  முன்பாக  அந்த  அடையாளங்களையும்  செய்தான்.  (யாத்திராகமம்  4:30)

karththar  moaseakkuch  solliya  sagala  vaarththaiga'laiyum  aaroan  solli,  janangga'lin  ka'nga'lukku  munbaaga  antha  adaiyaa'langga'laiyum  seythaan.  (yaaththiraagamam  4:30)

ஜனங்கள்  விசுவாசித்தார்கள்;  கர்த்தர்  இஸ்ரவேல்  புத்திரரைச்  சந்தித்தார்  என்றும்,  அவர்கள்  படும்  உபத்திரவங்களைக்  கண்ணோக்கிப்பார்த்தார்  என்றும்,  அவர்கள்  கேட்டபோது,  தலைகுனிந்துத்  தொழுதுகொண்டார்கள்.  (யாத்திராகமம்  4:31)

janangga'l  visuvaasiththaarga'l;  karththar  israveal  puththiraraich  santhiththaar  en’rum,  avarga'l  padum  ubaththiravangga'laik  ka'n'noakkippaarththaar  en’rum,  avarga'l  keattapoathu,  thalaikuninthuth  thozhuthuko'ndaarga'l.  (yaaththiraagamam  4:31)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!