Saturday, July 23, 2016

Yaaththiraagamam 34 | யாத்திராகமம் 34 | Exodus 34


கர்த்தர்  மோசேயை  நோக்கி:  முந்தின  கற்பலகைகளுக்கு  ஒத்த  இரண்டு  கற்பலகைகளை  இழைத்துக்கொள்;  நீ  உடைத்துப்போட்ட  முந்தின  பலகைகளில்  இருந்த  வார்த்தைகளை  அவைகளில்  எழுதுவேன்.  (யாத்திராகமம்  34:1)

karththar  moaseayai  noakki:  munthina  ka’rpalagaiga'lukku  oththa  ira'ndu  ka’rpalagaiga'lai  izhaiththukko'l;  nee  udaiththuppoatta  munthina  palagaiga'lil  iruntha  vaarththaiga'lai  avaiga'lil  ezhuthuvean.  (yaaththiraagamam  34:1)

விடியற்காலத்தில்  நீ  ஆயத்தமாகி,  சீனாய்  மலையில்  ஏறி,  அங்கே  மலையின்  உச்சியில்  காலமே  என்  சமுகத்தில்  வந்து  நில்.  (யாத்திராகமம்  34:2)

vidiya’rkaalaththil  nee  aayaththamaagi,  seenaay  malaiyil  ea’ri,  anggea  malaiyin  uchchiyil  kaalamea  en  samugaththil  vanthu  nil.  (yaaththiraagamam  34:2)

உன்னோடே  ஒருவனும்  அங்கே  வரக்கூடாது;  மலையிலெங்கும்  ஒருவனும்  காணப்படவுங்கூடாது;  இந்த  மலையின்  சமீபத்தில்  ஆடுமாடு  மேயவுங்கூடாது  என்றார்.  (யாத்திராகமம்  34:3)

unnoadea  oruvanum  anggea  varakkoodaathu;  malaiyilenggum  oruvanum  kaa'nappadavungkoodaathu;  intha  malaiyin  sameebaththil  aadumaadu  meayavungkoodaathu  en’raar.  (yaaththiraagamam  34:3)

அப்பொழுது  மோசே  முந்தின  கற்பலகைகளுக்கு  ஒத்த  இரண்டு  கற்பலகைகளை  இழைத்து,  அதிகாலமே  எழுந்திருந்து,  கர்த்தர்  தனக்குக்  கட்டளையிட்டபடியே  அவ்விரண்டு  கற்பலகைகளையும்  தன்  கையிலே  எடுத்துக்கொண்டு,  சீனாய்மலையில்  ஏறினான்.  (யாத்திராகமம்  34:4)

appozhuthu  moasea  munthina  ka’rpalagaiga'lukku  oththa  ira'ndu  ka’rpalagaiga'lai  izhaiththu,  athikaalamea  ezhunthirunthu,  karththar  thanakkuk  katta'laiyittapadiyea  avvira'ndu  ka’rpalagaiga'laiyum  than  kaiyilea  eduththukko'ndu,  seenaaymalaiyil  ea’rinaan.  (yaaththiraagamam  34:4)

கர்த்தர்  ஒரு  மேகத்தில்  இறங்கி,  அங்கே  அவன்  அருகே  நின்று,  கர்த்தருடைய  நாமத்தைக்  கூறினார்.  (யாத்திராகமம்  34:5)

karththar  oru  meagaththil  i’ranggi,  anggea  avan  arugea  nin’ru,  karththarudaiya  naamaththaik  koo’rinaar.  (yaaththiraagamam  34:5)

கர்த்தர்  அவனுக்கு  முன்பாகக்  கடந்துபோகிறபோது,  அவர்:  கர்த்தர்,  கர்த்தர்;  இரக்கமும்,  கிருபையும்,  நீடிய  சாந்தமும்,  மகா  தயையும்,  சத்தியமுமுள்ள  தேவன்.  (யாத்திராகமம்  34:6)

karththar  avanukku  munbaagak  kadanthupoagi’rapoathu,  avar:  karththar,  karththar;  irakkamum,  kirubaiyum,  neediya  saanthamum,  mahaa  thayaiyum,  saththiyamumu'l'la  theavan.  (yaaththiraagamam  34:6)

ஆயிரம்  தலைமுறைகளுக்கு  இரக்கத்தைக்  காக்கிறவர்;  அக்கிரமத்தையும்  மீறுதலையும்  பாவத்தையும்  மன்னிக்கிறவர்;  குற்றவாளியைக்  குற்றமற்றவனாக  விடாமல்,  பிதாக்கள்  செய்த  அக்கிரமத்தைப்  பிள்ளைகளிடத்திலும்,  பிள்ளைகளுடைய  பிள்ளைகளிடத்திலும்  மூன்றாம்  நான்காம்  தலைமுறைமட்டும்  விசாரிக்கிறவர்  என்று  கூறினார்.  (யாத்திராகமம்  34:7)

aayiram  thalaimu’raiga'lukku  irakkaththaik  kaakki’ravar;  akkiramaththaiyum  mee’ruthalaiyum  paavaththaiyum  mannikki’ravar;  kut’ravaa'liyaik  kut’ramat’ravanaaga  vidaamal,  pithaakka'l  seytha  akkiramaththaip  pi'l'laiga'lidaththilum,  pi'l'laiga'ludaiya  pi'l'laiga'lidaththilum  moon’raam  naangaam  thalaimu’raimattum  visaarikki’ravar  en’ru  koo’rinaar.  (yaaththiraagamam  34:7)

மோசே  தீவிரமாகத்  தரைமட்டும்  குனிந்து  பணிந்துகொண்டு:  (யாத்திராகமம்  34:8)

moasea  theeviramaagath  tharaimattum  kuninthu  pa'ninthuko'ndu:  (yaaththiraagamam  34:8)

ஆண்டவரே,  உம்முடைய  கண்களில்  எனக்குக்  கிருபை  கிடைத்ததானால்,  எங்கள்  நடுவில்  ஆண்டவர்  எழுந்தருளவேண்டும்;  இந்த  ஜனங்கள்  வணங்காக்  கழுத்துள்ளவர்கள்;  நீரோ,  எங்கள்  அக்கிரமத்தையும்  எங்கள்  பாவத்தையும்  மன்னித்து,  எங்களை  உமக்குச்  சுதந்தரமாக  ஏற்றுக்கொள்ளும்  என்றான்.  (யாத்திராகமம்  34:9)

aa'ndavarea,  ummudaiya  ka'nga'lil  enakkuk  kirubai  kidaiththathaanaal,  engga'l  naduvil  aa'ndavar  ezhuntharu'lavea'ndum;  intha  janangga'l  va'nanggaak  kazhuththu'l'lavarga'l;  neeroa,  engga'l  akkiramaththaiyum  engga'l  paavaththaiyum  manniththu,  engga'lai  umakkuch  suthantharamaaga  eat’rukko'l'lum  en’raan.  (yaaththiraagamam  34:9)

அதற்கு  அவர்:  இதோ,  நான்  ஒரு  உடன்படிக்கைபண்ணுகிறேன்;  பூமியெங்கும்  எந்த  ஜாதிகளிடத்திலும்  செய்யப்படாத  அதிசயங்களை  உன்  ஜனங்கள்  எல்லாருக்கு  முன்பாகவும்  செய்வேன்;  உன்னோடேகூட  இருக்கிற  ஜனங்கள்  எல்லாரும்  கர்த்தருடைய  செய்கையைக்  காண்பார்கள்;  உன்னோடேகூட  இருந்து,  நான்  செய்யும்  காரியம்  பயங்கரமாயிருக்கும்.  (யாத்திராகமம்  34:10)

atha’rku  avar:  ithoa,  naan  oru  udanpadikkaipa'n'nugi’rean;  boomiyenggum  entha  jaathiga'lidaththilum  seyyappadaatha  athisayangga'lai  un  janangga'l  ellaarukku  munbaagavum  seyvean;  unnoadeakooda  irukki’ra  janangga'l  ellaarum  karththarudaiya  seygaiyaik  kaa'nbaarga'l;  unnoadeakooda  irunthu,  naan  seyyum  kaariyam  bayanggaramaayirukkum.  (yaaththiraagamam  34:10)

இன்று  நான்  உனக்குக்  கட்டளையிடுகிறதைக்  கைக்கொள்;  எமோரியனையும்,  கானானியனையும்,  ஏத்தியனையும்,  பெரிசியனையும்,  ஏவியனையும்,  எபூசியனையும்  உனக்கு  முன்பாகத்  துரத்திவிடுகிறேன்.  (யாத்திராகமம்  34:11)

in’ru  naan  unakkuk  katta'laiyidugi’rathaik  kaikko'l;  emoariyanaiyum,  kaanaaniyanaiyum,  eaththiyanaiyum,  perisiyanaiyum,  eaviyanaiyum,  eboosiyanaiyum  unakku  munbaagath  thuraththividugi’rean.  (yaaththiraagamam  34:11)

நீ  போய்ச்  சேருகிற  தேசத்தின்  குடிகளோடு  உடன்படிக்கைபண்ணாதபடிக்கு  எச்சரிக்கையாயிரு;  பண்ணினால்  அது  உன்  நடுவில்  கண்ணியாயிருக்கும்.  (யாத்திராகமம்  34:12)

nee  poaych  searugi’ra  theasaththin  kudiga'loadu  udanpadikkaipa'n'naathapadikku  echcharikkaiyaayiru;  pa'n'ninaal  athu  un  naduvil  ka'n'niyaayirukkum.  (yaaththiraagamam  34:12)

அவர்களுடைய  பலிபீடங்களை  இடித்து,  அவர்கள்  சிலைகளைத்  தகர்த்து,  அவர்கள்  தோப்புகளை  வெட்டிப்போடுங்கள்.  (யாத்திராகமம்  34:13)

avarga'ludaiya  balipeedangga'lai  idiththu,  avarga'l  silaiga'laith  thagarththu,  avarga'l  thoappuga'lai  vettippoadungga'l.  (yaaththiraagamam  34:13)

கர்த்தருடைய  நாமம்  எரிச்சலுள்ளவர்  என்பது,  அவர்  எரிச்சலுள்ள  தேவனே;  ஆகையால்,  அந்நிய  தேவனை  நீ  பணிந்துகொள்ளவேண்டாம்.  (யாத்திராகமம்  34:14)

karththarudaiya  naamam  erichchalu'l'lavar  enbathu,  avar  erichchalu'l'la  theavanea;  aagaiyaal,  anniya  theavanai  nee  pa'ninthuko'l'lavea'ndaam.  (yaaththiraagamam  34:14)

அந்தத்  தேசத்தின்  குடிகளோடே  உடன்படிக்கைபண்ணுவாயானால்,  அவர்கள்  தங்கள்  தேவர்களைச்  சோரமார்க்கமாய்ப்  பின்பற்றி,  தங்களுடைய  தேவர்களுக்குப்  பலியிடுவார்கள்;  ஒருவன்  உன்னை  அழைக்கையில்,  நீ  போய்,  அவன்  பலியிட்டதிலே  புசிப்பாய்;  (யாத்திராகமம்  34:15)

anthath  theasaththin  kudiga'loadea  udanpadikkaipa'n'nuvaayaanaal,  avarga'l  thangga'l  theavarga'laich  soaramaarkkamaayp  pinpat’ri,  thangga'ludaiya  theavarga'lukkup  baliyiduvaarga'l;  oruvan  unnai  azhaikkaiyil,  nee  poay,  avan  baliyittathilea  pusippaay;  (yaaththiraagamam  34:15)

அவர்கள்  குமாரத்திகளில்  உன்  குமாரருக்குப்  பெண்களைக்  கொள்ளுவாய்;  அவர்கள்  குமாரத்திகள்  தங்கள்  தேவர்களைச்  சோரமார்க்கமாய்ப்  பின்பற்றுவதும்  அல்லாமல்,  உன்  குமாரரையும்  தங்கள்  தேவர்களைச்  சோரமார்க்கமாய்ப்  பின்பற்றும்படி  செய்வார்கள்.  (யாத்திராகமம்  34:16)

avarga'l  kumaaraththiga'lil  un  kumaararukkup  pe'nga'laik  ko'l'luvaay;  avarga'l  kumaaraththiga'l  thangga'l  theavarga'laich  soaramaarkkamaayp  pinpat’ruvathum  allaamal,  un  kumaararaiyum  thangga'l  theavarga'laich  soaramaarkkamaayp  pinpat’rumpadi  seyvaarga'l.  (yaaththiraagamam  34:16)

வார்ப்பிக்கப்பட்ட  தெய்வங்களை  உங்களுக்கு  உண்டாக்கவேண்டாம்.  (யாத்திராகமம்  34:17)

vaarppikkappatta  theyvangga'lai  ungga'lukku  u'ndaakkavea'ndaam.  (yaaththiraagamam  34:17)

புளிப்பில்லா  அப்பப்பண்டிகையை  நீங்கள்  கைக்கொண்டு,  நான்  உங்களுக்குக்  கட்டளையிட்டபடியே,  ஆபீப்  மாதத்தில்  குறித்த  காலத்திலே  ஏழுநாள்  புளிப்பில்லா  அப்பம்  புசிக்கக்கடவீர்கள்;  ஆபீப்  மாதத்திலே  எகிப்திலிருந்து  புறப்பட்டாயே.  (யாத்திராகமம்  34:18)

pu'lippillaa  appappa'ndigaiyai  neengga'l  kaikko'ndu,  naan  ungga'lukkuk  katta'laiyittapadiyea,  aabeeb  maathaththil  ku’riththa  kaalaththilea  eazhunaa'l  pu'lippillaa  appam  pusikkakkadaveerga'l;  aabeeb  maathaththilea  egipthilirunthu  pu’rappattaayea.  (yaaththiraagamam  34:18)

கர்ப்பந்திறந்து  பிறக்கிற  யாவும்,  உன்  ஆடுமாடுகளின்  தலையீற்றான  ஆண்கள்  யாவும்  என்னுடையவைகள்.  (யாத்திராகமம்  34:19)

karppanthi’ranthu  pi’rakki’ra  yaavum,  un  aadumaaduga'lin  thalaiyeet’raana  aa'nga'l  yaavum  ennudaiyavaiga'l.  (yaaththiraagamam  34:19)

கழுதையின்  தலையீற்றை  ஒரு  ஆட்டுக்குட்டியால்  மீட்டுக்கொள்வாயாக;  அதை  மீட்டுக்கொள்ளாதிருந்தால்  அதின்  கழுத்தை  முறித்துப்போடு;  உன்  பிள்ளைகளில்  முதற்பேறானவைகளையெல்லாம்  மீட்டுக்கொள்ளவேண்டும்.  வெறுங்கையோடே  என்  சந்நிதியில்  ஒருவனும்  வரக்கூடாது.  (யாத்திராகமம்  34:20)

kazhuthaiyin  thalaiyeet’rai  oru  aattukkuttiyaal  meettukko'lvaayaaga;  athai  meettukko'l'laathirunthaal  athin  kazhuththai  mu’riththuppoadu;  un  pi'l'laiga'lil  mutha’rpea’raanavaiga'laiyellaam  meettukko'l'lavea'ndum.  ve’rungkaiyoadea  en  sannithiyil  oruvanum  varakkoodaathu.  (yaaththiraagamam  34:20)

ஆறுநாள்  வேலைசெய்து,  ஏழாம்  நாளிலே  ஓய்ந்திருப்பாயாக;  விதைப்புக்காலத்திலும்  அறுப்புக்காலத்திலும்  ஓய்ந்திருப்பாயாக.  (யாத்திராகமம்  34:21)

aa’runaa'l  vealaiseythu,  eazhaam  naa'lilea  oaynthiruppaayaaga;  vithaippukkaalaththilum  a’ruppukkaalaththilum  oaynthiruppaayaaga.  (yaaththiraagamam  34:21)

கோதுமை  அறுப்பின்  முதற்பலனைச்  செலுத்தும்  ஏழு  வாரங்களின்  பண்டிகையையும்,  வருஷமுடிவிலே  சேர்ப்புக்கால  பண்டிகையையும்  ஆசரிப்பாயாக.  (யாத்திராகமம்  34:22)

koathumai  a’ruppin  mutha’rpalanaich  seluththum  eazhu  vaarangga'lin  pa'ndigaiyaiyum,  varushamudivilea  searppukkaala  pa'ndigaiyaiyum  aasarippaayaaga.  (yaaththiraagamam  34:22)

வருஷத்தில்  மூன்றுதரம்  உங்கள்  ஆண்மக்கள்  எல்லாரும்  இஸ்ரவேலின்  தேவனாயிருக்கிற  கர்த்தராகிய  ஆண்டவரின்  சந்நிதியில்  வரக்கடவர்கள்.  (யாத்திராகமம்  34:23)

varushaththil  moon’rutharam  ungga'l  aa'nmakka'l  ellaarum  isravealin  theavanaayirukki’ra  karththaraagiya  aa'ndavarin  sannithiyil  varakkadavarga'l.  (yaaththiraagamam  34:23)

நான்  புறஜாதிகளை  உங்கள்  முன்னின்று  துரத்திவிட்டு,  உங்கள்  எல்லைகளை  விஸ்தாரமாக்குவேன்;  வருஷத்தில்  மூன்றுதரம்  உங்கள்  தேவனாகிய  கர்த்தருடைய  சந்நிதிக்கு  முன்பாகக்  காணப்படப்  போயிருக்கும்போது  ஒருவரும்  உங்கள்  தேசத்தை  இச்சிப்பதில்லை.  (யாத்திராகமம்  34:24)

naan  pu’rajaathiga'lai  ungga'l  munnin’ru  thuraththivittu,  ungga'l  ellaiga'lai  visthaaramaakkuvean;  varushaththil  moon’rutharam  ungga'l  theavanaagiya  karththarudaiya  sannithikku  munbaagak  kaa'nappadap  poayirukkumpoathu  oruvarum  ungga'l  theasaththai  ichchippathillai.  (yaaththiraagamam  34:24)

எனக்கு  இடும்  பலியின்  இரத்தத்தைப்  புளித்தமாவுடன்  செலுத்தவேண்டாம்;  பஸ்கா  பண்டிகையின்  பலியை  விடியற்காலம்வரைக்கும்  வைக்கவும்  வேண்டாம்.  (யாத்திராகமம்  34:25)

enakku  idum  baliyin  iraththaththaip  pu'liththamaavudan  seluththavea'ndaam;  paskaa  pa'ndigaiyin  baliyai  vidiya’rkaalamvaraikkum  vaikkavum  vea'ndaam.  (yaaththiraagamam  34:25)

உங்கள்  நிலத்தில்  முதல்  முதல்  விளைந்த  முதற்பலத்தை  உங்கள்  தேவனாகிய  கர்த்தரின்  ஆலயத்துக்குக்  கொண்டுவாருங்கள்.  வெள்ளாட்டுக்குட்டியை  அதின்  தாயின்  பாலிலே  சமைக்கவேண்டாம்  என்றார்.  (யாத்திராகமம்  34:26)

ungga'l  nilaththil  muthal  muthal  vi'laintha  mutha’rbalaththai  ungga'l  theavanaagiya  karththarin  aalayaththukkuk  ko'nduvaarungga'l.  ve'l'laattukkuttiyai  athin  thaayin  paalilea  samaikkavea'ndaam  en’raar.  (yaaththiraagamam  34:26)

பின்னும்  கர்த்தர்  மோசேயை  நோக்கி:  இந்த  வார்த்தைகளை  நீ  எழுது;  இந்த  வார்த்தைகளின்படியே  உன்னோடும்  இஸ்ரவேலோடும்  உடன்படிக்கைபண்ணினேன்  என்றார்.  (யாத்திராகமம்  34:27)

pinnum  karththar  moaseayai  noakki:  intha  vaarththaiga'lai  nee  ezhuthu;  intha  vaarththaiga'linpadiyea  unnoadum  isravealoadum  udanpadikkaipa'n'ninean  en’raar.  (yaaththiraagamam  34:27)

அங்கே  அவன்  அப்பம்  புசியாமலும்  தண்ணீர்  குடியாமலும்  இரவும்  பகலும்  நாற்பதுநாள்  கர்த்தரோடே  இருந்தான்;  அவன்  பத்துக்கற்பனைகளாகிய  உடன்படிக்கையின்  வார்த்தைகளைப்  பலகைகளில்  எழுதினான்.  (யாத்திராகமம்  34:28)

anggea  avan  appam  pusiyaamalum  tha'n'neer  kudiyaamalum  iravum  pagalum  naa’rpathunaa'l  karththaroadea  irunthaan;  avan  paththukka’rpanaiga'laagiya  udanpadikkaiyin  vaarththaiga'laip  palagaiga'lil  ezhuthinaan.  (yaaththiraagamam  34:28)

மோசே  சாட்சிப்  பலகைகள்  இரண்டையும்  தன்  கையில்  எடுத்துக்கொண்டு,  சீனாய்மலையிலிருந்து  இறங்குகிறபோது,  தன்னோடே  அவர்  பேசினதினாலே  தன்  முகம்  பிரகாசித்திருப்பதை  அவன்  அறியாதிருந்தான்.  (யாத்திராகமம்  34:29)

moasea  saadchip  palagaiga'l  ira'ndaiyum  than  kaiyil  eduththukko'ndu,  seenaaymalaiyilirunthu  i’ranggugi’rapoathu,  thannoadea  avar  peasinathinaalea  than  mugam  piragaasiththiruppathai  avan  a’riyaathirunthaan.  (yaaththiraagamam  34:29)

ஆரோனும்  இஸ்ரவேல்  புத்திரர்  எல்லாரும்  மோசேயைப்  பார்க்கும்போது,  அவன்  முகம்  பிரகாசித்திருப்பதைக்  கண்டு,  அவன்  சமீபத்தில்  சேரப்பயந்தார்கள்.  (யாத்திராகமம்  34:30)

aaroanum  israveal  puththirar  ellaarum  moaseayaip  paarkkumpoathu,  avan  mugam  piragaasiththiruppathaik  ka'ndu,  avan  sameebaththil  searapbayanthaarga'l.  (yaaththiraagamam  34:30)

மோசே  அவர்களை  அழைத்தான்;  அப்பொழுது  ஆரோனும்  சபையிலுள்ள  பிரபுக்கள்  யாவரும்  அவனிடத்திற்குத்  திரும்பிவந்தார்கள்;  மோசே  அவர்களோடே  பேசினான்.  (யாத்திராகமம்  34:31)

moasea  avarga'lai  azhaiththaan;  appozhuthu  aaroanum  sabaiyilu'l'la  pirabukka'l  yaavarum  avanidaththi’rkuth  thirumbivanthaarga'l;  moasea  avarga'loadea  peasinaan.  (yaaththiraagamam  34:31)

பின்பு  இஸ்ரவேல்  புத்திரர்  எல்லாரும்  அவனிடத்தில்  சேர்ந்தார்கள்;  அப்பொழுது  அவன்  சீனாய்மலையில்  கர்த்தர்  தன்னோடே  பேசினவைகளையெல்லாம்  அவர்களுக்குக்  கற்பித்தான்.  (யாத்திராகமம்  34:32)

pinbu  israveal  puththirar  ellaarum  avanidaththil  searnthaarga'l;  appozhuthu  avan  seenaaymalaiyil  karththar  thannoadea  peasinavaiga'laiyellaam  avarga'lukkuk  ka’rpiththaan.  (yaaththiraagamam  34:32)

மோசே  அவர்களோடே  பேசி  முடியுமளவும்,  தன்  முகத்தின்மேல்  முக்காடு  போட்டிருந்தான்.  (யாத்திராகமம்  34:33)

moasea  avarga'loadea  peasi  mudiyuma'lavum,  than  mugaththinmeal  mukkaadu  poattirunthaan.  (yaaththiraagamam  34:33)

மோசே  கர்த்தருடைய  சந்நிதியில்  அவரோடே  பேசும்படிக்கு  உட்பிரவேசித்ததுமுதல்  வெளியே  புறப்படும்மட்டும்  முக்காடு  போடாதிருந்தான்;  அவன்  வெளியே  வந்து  தனக்குக்  கற்பிக்கப்பட்டதை  இஸ்ரவேல்  புத்திரரோடே  சொல்லும்போது,  (யாத்திராகமம்  34:34)

moasea  karththarudaiya  sannithiyil  avaroadea  peasumpadikku  udpiraveasiththathumuthal  ve'liyea  pu’rappadummattum  mukkaadu  poadaathirunthaan;  avan  ve'liyea  vanthu  thanakkuk  ka’rpikkappattathai  israveal  puththiraroadea  sollumpoathu,  (yaaththiraagamam  34:34)

இஸ்ரவேல்  புத்திரர்  அவன்  முகம்  பிரகாசித்திருப்பதைக்  கண்டார்கள்.  மோசே  அவரோடே  பேசும்படிக்கு  உள்ளே  பிரவேசிக்கும்வரைக்கும்,  முக்காட்டைத்  திரும்பத்  தன்  முகத்தின்மேல்  போட்டுக்கொள்ளுவான்.  (யாத்திராகமம்  34:35)

israveal  puththirar  avan  mugam  piragaasiththiruppathaik  ka'ndaarga'l.  moasea  avaroadea  peasumpadikku  u'l'lea  piraveasikkumvaraikkum,  mukkaattaith  thirumbath  than  mugaththinmeal  poattukko'l'luvaan.  (yaaththiraagamam  34:35)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!