Tuesday, July 19, 2016

Yaaththiraagamam 33 | யாத்திராகமம் 33 | Exodus 33

கர்த்தர்  மோசேயை  நோக்கி:  நீயும்,  எகிப்து  தேசத்திலிருந்து  நீ  அழைத்துக்கொண்டுவந்த  ஜனங்களும்  இவ்விடத்தை  விட்டுப்  புறப்பட்டு,  உன்  சந்ததிக்குக்  கொடுப்பேன்  என்று  நான்  ஆபிரகாமுக்கும்  ஈசாக்குக்கும்  யாக்கோபுக்கும்  ஆணையிட்டுக்கொடுத்த  பாலும்  தேனும்  ஓடுகிற  தேசத்துக்குப்  போங்கள்.  (யாத்திராகமம்  33:1)

karththar  moaseayai  noakki:  neeyum,  egipthu  theasaththilirunthu  nee  azhaiththukko'nduvantha  janangga'lum  ivvidaththai  vittup  pu’rappattu,  un  santhathikkuk  koduppean  en’ru  naan  aabirahaamukkum  eesaakkukkum  yaakkoabukkum  aa'naiyittukkoduththa  paalum  theanum  oadugi’ra  theasaththukkup  poangga'l.  (yaaththiraagamam  33:1)

நான்  ஒரு  தூதனை  உங்களுக்கு  முன்பாக  அனுப்பி,  கானானியனையும்  எமோரியனையும்  ஏத்தியனையும்  பெரிசியனையும்  ஏவியனையும்  எபூசியனையும்  துரத்திவிடுவேன்.  (யாத்திராகமம்  33:2)

naan  oru  thoothanai  ungga'lukku  munbaaga  anuppi,  kaanaaniyanaiyum  emoariyanaiyum  eaththiyanaiyum  perisiyanaiyum  eaviyanaiyum  eboosiyanaiyum  thuraththividuvean.  (yaaththiraagamam  33:2)

ஆனாலும்,  வழியிலே  நான்  உங்களை  நிர்மூலம்பண்ணாதபடிக்கு,  நான்  உங்கள்  நடுவே  செல்லமாட்டேன்,  நீங்கள்  வணங்காக்  கழுத்துள்ள  ஜனங்கள்  என்றார்.  (யாத்திராகமம்  33:3)

aanaalum,  vazhiyilea  naan  ungga'lai  nirmoolampa'n'naathapadikku,  naan  ungga'l  naduvea  sellamaattean,  neengga'l  va'nanggaak  kazhuththu'l'la  janangga'l  en’raar.  (yaaththiraagamam  33:3)

துக்கமான  இவ்வார்த்தைகளை  ஜனங்கள்  கேட்டபோது,  ஒருவரும்  தங்கள்  ஆபரணங்களைப்  போட்டுக்கொள்ளாமல்  துக்கித்துக்கொண்டிருந்தார்கள்.  (யாத்திராகமம்  33:4)

thukkamaana  ivvaarththaiga'lai  janangga'l  keattapoathu,  oruvarum  thangga'l  aabara'nangga'laip  poattukko'l'laamal  thukkiththukko'ndirunthaarga'l.  (yaaththiraagamam  33:4)

ஏனென்றால்,  நீங்கள்  வணங்காக்  கழுத்துள்ள  ஜனங்கள்,  நான்  ஒரு  நிமிஷத்தில்  உங்கள்  நடுவில்  எழும்பி,  உங்களை  நிர்மூலம்பண்ணுவேன்;  ஆகையால்,  நீங்கள்  போட்டிருக்கிற  உங்கள்  ஆபரணங்களைக்  கழற்றிப்போடுங்கள்;  அப்பொழுது  நான்  உங்களுக்குச்  செய்யவேண்டியதை  அறிவேன்  என்று  இஸ்ரவேல்  புத்திரருக்குச்  சொல்  என்று  கர்த்தர்  மோசேயோடே  சொல்லியிருந்தார்.  (யாத்திராகமம்  33:5)

eanen’raal,  neengga'l  va'nanggaak  kazhuththu'l'la  janangga'l,  naan  oru  nimishaththil  ungga'l  naduvil  ezhumbi,  ungga'lai  nirmoolampa'n'nuvean;  aagaiyaal,  neengga'l  poattirukki’ra  ungga'l  aabara'nangga'laik  kazhat’rippoadungga'l;  appozhuthu  naan  ungga'lukkuch  seyyavea'ndiyathai  a’rivean  en’ru  israveal  puththirarukkuch  sol  en’ru  karththar  moaseayoadea  solliyirunthaar.  (yaaththiraagamam  33:5)

ஆகையால்,  இஸ்ரவேல்  புத்திரர்  ஓரேப்  மலையருகே  தங்கள்  ஆபரணங்களைக்  கழற்றிப்போட்டார்கள்.  (யாத்திராகமம்  33:6)

aagaiyaal,  israveal  puththirar  oareab  malaiyarugea  thangga'l  aabara'nangga'laik  kazhat’rippoattaarga'l.  (yaaththiraagamam  33:6)

மோசே  கூடாரத்தைப்  பெயர்த்து,  அதைப்  பாளயத்துக்குப்  புறம்பே  தூரத்திலே  போட்டு,  அதற்கு  ஆசரிப்புக்  கூடாரம்  என்று  பேரிட்டான்.  கர்த்தரைத்  தேடும்  யாவரும்  பாளயத்துக்குப்  புறம்பான  ஆசரிப்புக்  கூடாரத்துக்குப்  போவார்கள்.  (யாத்திராகமம்  33:7)

moasea  koodaaraththaip  peyarththu,  athaip  paa'layaththukkup  pu’rambea  thooraththilea  poattu,  atha’rku  aasarippuk  koodaaram  en’ru  pearittaan.  karththaraith  theadum  yaavarum  paa'layaththukkup  pu’rambaana  aasarippuk  koodaaraththukkup  poavaarga'l.  (yaaththiraagamam  33:7)

மோசே  கூடாரத்துக்குப்  போகும்போது,  ஜனங்கள்  எல்லாரும்  எழுந்திருந்து,  தங்கள்  தங்கள்  கூடாரவாசலில்  நின்றுகொண்டு,  அவன்  கூடாரத்துக்குள்  பிரவேசிக்குமட்டும்,  அவன்  பின்னே  பார்த்துக்கொண்டிருந்தார்கள்.  (யாத்திராகமம்  33:8)

moasea  koodaaraththukkup  poagumpoathu,  janangga'l  ellaarum  ezhunthirunthu,  thangga'l  thangga'l  koodaaravaasalil  nin’ruko'ndu,  avan  koodaaraththukku'l  piraveasikkumattum,  avan  pinnea  paarththukko'ndirunthaarga'l.  (yaaththiraagamam  33:8)

மோசே  கூடாரத்துக்குள்  பிரவேசிக்கையில்,  மேகஸ்தம்பம்  இறங்கி,  கூடாரவாசலில்  நின்றது;  கர்த்தர்  மோசேயோடே  பேசினார்.  (யாத்திராகமம்  33:9)

moasea  koodaaraththukku'l  piraveasikkaiyil,  meagasthambam  i’ranggi,  koodaaravaasalil  nin’rathu;  karththar  moaseayoadea  peasinaar.  (yaaththiraagamam  33:9)

ஜனங்கள்  எல்லாரும்  மேகஸ்தம்பம்  கூடாரவாசலில்  நிற்கக்கண்டார்கள்;  ஜனங்கள்  எல்லாரும்  எழுந்திருந்து,  தங்கள்தங்கள்  கூடாரவாசலில்  பணிந்துகொண்டார்கள்.  (யாத்திராகமம்  33:10)

janangga'l  ellaarum  meagasthambam  koodaaravaasalil  ni’rkakka'ndaarga'l;  janangga'l  ellaarum  ezhunthirunthu,  thangga'lthangga'l  koodaaravaasalil  pa'ninthuko'ndaarga'l.  (yaaththiraagamam  33:10)

ஒருவன்  தன்  சிநேகிதனோடே  பேசுவதுபோல,  கர்த்தர்  மோசேயோடே  முகமுகமாய்ப்  பேசினார்;  பின்பு,  அவன்  பாளயத்துக்குத்  திரும்பினான்;  நூனின்  குமாரனாகிய  யோசுவா  என்னும்  அவனுடைய  பணிவிடைக்காரனாகிய  வாலிபன்  ஆசரிப்புக்  கூடாரத்தை  விட்டுப்  பிரியாதிருந்தான்.  (யாத்திராகமம்  33:11)

oruvan  than  sineagithanoadea  peasuvathupoala,  karththar  moaseayoadea  mugamugamaayp  peasinaar;  pinbu,  avan  paa'layaththukkuth  thirumbinaan;  noonin  kumaaranaagiya  yoasuvaa  ennum  avanudaiya  pa'nividaikkaaranaagiya  vaaliban  aasarippuk  koodaaraththai  vittup  piriyaathirunthaan.  (yaaththiraagamam  33:11)

மோசே  கர்த்தரை  நோக்கி:  தேவரீர்  இந்த  ஜனங்களை  அழைத்துக்கொண்டு  போ  என்று  சொன்னீர்;  ஆகிலும்,  என்னோடேகூட  இன்னாரை  அனுப்புவேன்  என்பதை  எனக்கு  நீர்  அறிவிக்கவில்லை;  என்றாலும்,  உன்னைப்  பேர்சொல்லி  அழைத்து  அறிந்திருக்கிறேன்  என்றும்,  என்  கண்களில்  உனக்குக்  கிருபை  கிடைத்தது  என்றும்,  தேவரீர்  சொன்னதுண்டே;  (யாத்திராகமம்  33:12)

moasea  karththarai  noakki:  theavareer  intha  janangga'lai  azhaiththukko'ndu  poa  en’ru  sonneer;  aagilum,  ennoadeakooda  innaarai  anuppuvean  enbathai  enakku  neer  a’rivikkavillai;  en’raalum,  unnaip  pearsolli  azhaiththu  a’rinthirukki’rean  en’rum,  en  ka'nga'lil  unakkuk  kirubai  kidaiththathu  en’rum,  theavareer  sonnathu'ndea;  (yaaththiraagamam  33:12)

உம்முடைய  கண்களில்  இப்பொழுது  எனக்குக்  கிருபை  கிடைத்ததானால்  நான்  உம்மை  அறிவதற்கும்,  உம்முடைய  கண்களில்  எனக்குக்  கிருபை  கிடைப்பதற்கும்,  உம்முடைய  வழியை  எனக்கு  அறிவியும்;  இந்த  ஜாதி  உம்முடைய  ஜனமென்று  நினைத்தருளும்  என்றான்.  (யாத்திராகமம்  33:13)

ummudaiya  ka'nga'lil  ippozhuthu  enakkuk  kirubai  kidaiththathaanaal  naan  ummai  a’rivatha’rkum,  ummudaiya  ka'nga'lil  enakkuk  kirubai  kidaippatha’rkum,  ummudaiya  vazhiyai  enakku  a’riviyum;  intha  jaathi  ummudaiya  janamen’ru  ninaiththaru'lum  en’raan.  (yaaththiraagamam  33:13)

அதற்கு  அவர்:  என்  சமுகம்  உனக்கு  முன்பாகச்  செல்லும்,  நான்  உனக்கு  இளைப்பாறுதல்  தருவேன்  என்றார்.  (யாத்திராகமம்  33:14)

atha’rku  avar:  en  samugam  unakku  munbaagach  sellum,  naan  unakku  i'laippaa’ruthal  tharuvean  en’raar.  (yaaththiraagamam  33:14)

அப்பொழுது  அவன்  அவரை  நோக்கி:  உம்முடைய  சமுகம்  என்னோடேகூடச்  செல்லாமற்போனால்,  எங்களை  இவ்விடத்திலிருந்து  கொண்டுபோகாதிரும்.  (யாத்திராகமம்  33:15)

appozhuthu  avan  avarai  noakki:  ummudaiya  samugam  ennoadeakoodach  sellaama’rpoanaal,  engga'lai  ivvidaththilirunthu  ko'ndupoagaathirum.  (yaaththiraagamam  33:15)

எனக்கும்  உமது  ஜனங்களுக்கும்  உம்முடைய  கண்களிலே  கிருபை  கிடைத்ததென்பது  எதினால்  அறியப்படும்;  நீர்  எங்களோடே  வருவதினால்  அல்லவா?  இப்படியே  பூமியின்மேலுள்ள  ஜனங்கள்  எல்லாரிலும்,  நானும்  உம்முடைய  ஜனங்களும்  விசேஷித்தவர்கள்  என்று  விளங்கும்  என்றான்.  (யாத்திராகமம்  33:16)

enakkum  umathu  janangga'lukkum  ummudaiya  ka'nga'lilea  kirubai  kidaiththathenbathu  ethinaal  a’riyappadum;  neer  engga'loadea  varuvathinaal  allavaa?  ippadiyea  boomiyinmealu'l'la  janangga'l  ellaarilum,  naanum  ummudaiya  janangga'lum  viseashiththavarga'l  en’ru  vi'langgum  en’raan.  (yaaththiraagamam  33:16)

அப்பொழுது  கர்த்தர்  மோசேயை  நோக்கி:  நீ  சொன்ன  இந்த  வார்த்தையின்படியே  செய்வேன்;  என்  கண்களில்  உனக்குக்  கிருபை  கிடைத்தது;  உன்னைப்  பேர்சொல்லி  அழைத்து  அறிந்திருக்கிறேன்  என்றார்.  (யாத்திராகமம்  33:17)

appozhuthu  karththar  moaseayai  noakki:  nee  sonna  intha  vaarththaiyinpadiyea  seyvean;  en  ka'nga'lil  unakkuk  kirubai  kidaiththathu;  unnaip  pearsolli  azhaiththu  a’rinthirukki’rean  en’raar.  (yaaththiraagamam  33:17)

அப்பொழுது  அவன்:  உம்முடைய  மகிமையை  எனக்குக்  காண்பித்தருளும்  என்றான்.  (யாத்திராகமம்  33:18)

appozhuthu  avan:  ummudaiya  magimaiyai  enakkuk  kaa'nbiththaru'lum  en’raan.  (yaaththiraagamam  33:18)

அதற்கு  அவர்:  என்னுடைய  தயையை  எல்லாம்  நான்  உனக்கு  முன்பாகக்  கடந்துபோகப்பண்ணி,  கர்த்தருடைய  நாமத்தை  உனக்கு  முன்பாகக்  கூறுவேன்;  எவன்மேல்  கிருபையாயிருக்கச்  சித்தமாயிருப்பேனோ,  அவன்மேல்  கிருபையாயிருப்பேன்;  எவன்மேல்  இரக்கமாயிருக்கச்  சித்தமாயிருப்பேனோ,  அவன்மேல்  இரக்கமாயிருப்பேன்  என்று  சொல்லி,  (யாத்திராகமம்  33:19)

atha’rku  avar:  ennudaiya  thayaiyai  ellaam  naan  unakku  munbaagak  kadanthupoagappa'n'ni,  karththarudaiya  naamaththai  unakku  munbaagak  koo’ruvean;  evanmeal  kirubaiyaayirukkach  siththamaayiruppeanoa,  avanmeal  kirubaiyaayiruppean;  evanmeal  irakkamaayirukkach  siththamaayiruppeanoa,  avanmeal  irakkamaayiruppean  en’ru  solli,  (yaaththiraagamam  33:19)

நீ  என்  முகத்தைக்  காணமாட்டாய்,  ஒரு  மனுஷனும்  என்னைக்  கண்டு  உயிரோடிருக்கக்கூடாது  என்றார்.  (யாத்திராகமம்  33:20)

nee  en  mugaththaik  kaa'namaattaay,  oru  manushanum  ennaik  ka'ndu  uyiroadirukkakkoodaathu  en’raar.  (yaaththiraagamam  33:20)

பின்னும்  கர்த்தர்:  இதோ,  என்னண்டையில்  ஒரு  இடம்  உண்டு;  நீ  அங்கே  கன்மலையில்  நில்லு.  (யாத்திராகமம்  33:21)

pinnum  karththar:  ithoa,  enna'ndaiyil  oru  idam  u'ndu;  nee  anggea  kanmalaiyil  nillu.  (yaaththiraagamam  33:21)

என்  மகிமை  கடந்துபோகும்போது,  நான்  உன்னை  அந்தக்  கன்மலையின்  வெடிப்பிலே  வைத்து,  நான்  கடந்துபோகுமட்டும்  என்  கரத்தினால்  உன்னை  மூடுவேன்;  (யாத்திராகமம்  33:22)

en  magimai  kadanthupoagumpoathu,  naan  unnai  anthak  kanmalaiyin  vedippilea  vaiththu,  naan  kadanthupoagumattum  en  karaththinaal  unnai  mooduvean;  (yaaththiraagamam  33:22)

பின்பு,  என்  கரத்தை  எடுப்பேன்;  அப்பொழுது  என்  பின்பக்கத்தைக்  காண்பாய்;  என்  முகமோ  காணப்படாது  என்றார்.  (யாத்திராகமம்  33:23)

pinbu,  en  karaththai  eduppean;  appozhuthu  en  pinpakkaththaik  kaa'nbaay;  en  mugamoa  kaa'nappadaathu  en’raar.  (yaaththiraagamam  33:23)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!