Saturday, July 23, 2016

Yaaththiraagamam 31 | யாத்திராகமம் 31 | Exodus 31

பின்னும்  கர்த்தர்  மோசேயை  நோக்கி:  (யாத்திராகமம்  31:1)

pinnum  karththar  moaseayai  noakki:  (yaaththiraagamam  31:1)

நான்  யூதாவின்  கோத்திரத்தில்  ஊருடைய  மகனான  ஊரியின்  குமாரன்  பெசலெயேலைப்  பேர்சொல்லி  அழைத்து,  (யாத்திராகமம்  31:2)

naan  yoothaavin  koaththiraththil  oorudaiya  maganaana  ooriyin  kumaaran  besaleyealaip  pearsolli  azhaiththu,  (yaaththiraagamam  31:2)

விநோதமான  வேலைகளை  அவன்  யோசித்துச்  செய்கிறதற்கும்,  பொன்னிலும்  வெள்ளியிலும்  வெண்கலத்திலும்  வேலைசெய்கிறதற்கும்,  (யாத்திராகமம்  31:3)

vinoathamaana  vealaiga'lai  avan  yoasiththuch  seygi’ratha’rkum,  ponnilum  ve'l'liyilum  ve'ngalaththilum  vealaiseygi’ratha’rkum,  (yaaththiraagamam  31:3)

இரத்தினங்களை  முத்திரைவெட்டாக  வெட்டிப்  பதிக்கிறதற்கும்,  மரத்தில்  சித்திரவேலைகளைச்  செய்கிறதற்கும்,  (யாத்திராகமம்  31:4)

iraththinangga'lai  muththiraivettaaga  vettip  pathikki’ratha’rkum,  maraththil  siththiravealaiga'laich  seygi’ratha’rkum,  (yaaththiraagamam  31:4)

மற்றும்  சகலவித  வேலைகளையும்  யூகித்துச்  செய்கிறதற்கும்  வேண்டிய  ஞானமும்  புத்தியும்  அறிவும்  அவனுக்கு  உண்டாக,  அவனை  தேவஆவியினால்  நிரப்பினேன்.  (யாத்திராகமம்  31:5)

mat’rum  sagalavitha  vealaiga'laiyum  yoogiththuch  seygi’ratha’rkum  vea'ndiya  gnaanamum  buththiyum  a’rivum  avanukku  u'ndaaga,  avanai  theavaaaviyinaal  nirappinean.  (yaaththiraagamam  31:5)

மேலும்,  தாண்  கோத்திரத்திலுள்ள  அகிசாமாகின்  குமாரனாகிய  அகோலியாபையும்  அவனோடே  துணையாகக்  கூட்டினதுமன்றி,  ஞான  இருதயமுள்ள  யாவருடைய  இருதயத்திலும்  ஞானத்தை  அருளினேன்;  நான்  உனக்குக்  கட்டளையிட்ட  யாவையும்  அவர்கள்  செய்வார்கள்.  (யாத்திராகமம்  31:6)

mealum,  thaa'n  koaththiraththilu'l'la  agisaamaakin  kumaaranaagiya  agoaliyaabaiyum  avanoadea  thu'naiyaagak  koottinathuman’ri,  gnaana  iruthayamu'l'la  yaavarudaiya  iruthayaththilum  gnaanaththai  aru'linean;  naan  unakkuk  katta'laiyitta  yaavaiyum  avarga'l  seyvaarga'l.  (yaaththiraagamam  31:6)

ஆசரிப்புக்  கூடாரத்தையும்  சாட்சிப்பெட்டியையும்  அதின்மேலுள்ள  கிருபாசனத்தையும்,  கூடாரத்திலுள்ள  சகல  பணிமுட்டுகளையும்,  (யாத்திராகமம்  31:7)

aasarippuk  koodaaraththaiyum  saadchippettiyaiyum  athinmealu'l'la  kirubaasanaththaiyum,  koodaaraththilu'l'la  sagala  pa'nimuttuga'laiyum,  (yaaththiraagamam  31:7)

மேஜையையும்  அதின்  பணிமுட்டுகளையும்,  சுத்தமான  குத்துவிளக்கையும்  அதின்  சகல  கருவிகளையும்,  தூபபீடத்தையும்,  (யாத்திராகமம்  31:8)

meajaiyaiyum  athin  pa'nimuttuga'laiyum,  suththamaana  kuththuvi'lakkaiyum  athin  sagala  karuviga'laiyum,  thoobapeedaththaiyum,  (yaaththiraagamam  31:8)

தகனபலிபீடத்தையும்  அதின்  சகல  பணிமுட்டுகளையும்,  தொட்டியையும்  அதின்  பாதத்தையும்,  (யாத்திராகமம்  31:9)

thaganabalipeedaththaiyum  athin  sagala  pa'nimuttuga'laiyum,  thottiyaiyum  athin  paathaththaiyum,  (yaaththiraagamam  31:9)

ஆராதனை  வஸ்திரங்களையும்,  ஆசாரிய  ஊழியம்  செய்வதற்கான  ஆசாரியனாகிய  ஆரோனின்  பரிசுத்த  வஸ்திரங்களையும்,  அவன்  குமாரரின்  வஸ்திரங்களையும்,  (யாத்திராகமம்  31:10)

aaraathanai  vasthirangga'laiyum,  aasaariya  oozhiyam  seyvatha’rkaana  aasaariyanaagiya  aaroanin  parisuththa  vasthirangga'laiyum,  avan  kumaararin  vasthirangga'laiyum,  (yaaththiraagamam  31:10)

அபிஷேக  தைலத்தையும்,  பரிசுத்த  ஸ்தலத்துக்குச்  சுகந்தவர்க்கங்களாகிய  தூபவர்க்கத்தையும்,  நான்  உனக்குக்  கட்டளையிட்டபடியே,  அவர்கள்  செய்யவேண்டும்  என்றார்.  (யாத்திராகமம்  31:11)

abisheaga  thailaththaiyum,  parisuththa  sthalaththukkuch  suganthavarkkangga'laagiya  thoobavarkkaththaiyum,  naan  unakkuk  katta'laiyittapadiyea,  avarga'l  seyyavea'ndum  en’raar.  (yaaththiraagamam  31:11)

மேலும்,  கர்த்தர்  மோசேயினிடத்தில்:  (யாத்திராகமம்  31:12)

mealum,  karththar  moaseayinidaththil:  (yaaththiraagamam  31:12)

நீ  இஸ்ரவேல்  புத்திரரை  நோக்கி,  நீங்கள்  என்  ஓய்வுநாட்களை  ஆசரிக்கவேண்டும்;  உங்களைப்  பரிசுத்தப்படுத்துகிற  கர்த்தர்  நான்  என்பதை  நீங்கள்  அறியும்படி,  இது  உங்கள்  தலைமுறைதோறும்  எனக்கும்  உங்களுக்கும்  அடையாளமாயிருக்கும்.  (யாத்திராகமம்  31:13)

nee  israveal  puththirarai  noakki,  neengga'l  en  oayvunaadka'lai  aasarikkavea'ndum;  ungga'laip  parisuththappaduththugi’ra  karththar  naan  enbathai  neengga'l  a’riyumpadi,  ithu  ungga'l  thalaimu’raithoa’rum  enakkum  ungga'lukkum  adaiyaa'lamaayirukkum.  (yaaththiraagamam  31:13)

ஆகையால்,  ஓய்வுநாளை  ஆசரிப்பீர்களாக;  அது  உங்களுக்குப்  பரிசுத்தமானது;  அதைப்  பரிசுத்தக்  குலைச்சலாக்குகிறவன்  கொலையுண்கக்கடவன்;  அதிலே  வேலைசெய்கிற  எந்த  ஆத்துமாவும்  தன்  ஜனத்தின்  நடுவில்  இராதபடிக்கு  அறுப்புண்டுபோவான்.  (யாத்திராகமம்  31:14)

aagaiyaal,  oayvunaa'lai  aasarippeerga'laaga;  athu  ungga'lukkup  parisuththamaanathu;  athaip  parisuththak  kulaichchalaakkugi’ravan  kolaiyu'ngakkadavan;  athilea  vealaiseygi’ra  entha  aaththumaavum  than  janaththin  naduvil  iraathapadikku  a’ruppu'ndupoavaan.  (yaaththiraagamam  31:14)

ஆறுநாளும்  வேலைசெய்யலாம்;  ஏழாம்  நாளோ  வேலை  ஒழிந்திருக்கும்  ஓய்வுநாள்;  அது  கர்த்தருக்குப்  பரிசுத்தமானது;  ஓய்வுநாளில்  வேலைசெய்கிறவன்  எவனும்  கொலைசெய்யப்படவேண்டும்.  (யாத்திராகமம்  31:15)

aa’runaa'lum  vealaiseyyalaam;  eazhaam  naa'loa  vealai  ozhinthirukkum  oayvunaa'l;  athu  karththarukkup  parisuththamaanathu;  oayvunaa'lil  vealaiseygi’ravan  evanum  kolaiseyyappadavea'ndum.  (yaaththiraagamam  31:15)

ஆகையால்,  இஸ்ரவேல்  புத்திரர்  தங்கள்  தலைமுறைதோறும்  ஓய்வுநாளை  நித்திய  உடன்படிக்கையாக  ஆசரிக்கும்படி,  அதைக்  கைக்கொள்ளக்கடவர்கள்.  (யாத்திராகமம்  31:16)

aagaiyaal,  israveal  puththirar  thangga'l  thalaimu’raithoa’rum  oayvunaa'lai  niththiya  udanpadikkaiyaaga  aasarikkumpadi,  athaik  kaikko'l'lakkadavarga'l.  (yaaththiraagamam  31:16)

அது  என்றைக்கும்  எனக்கும்  இஸ்ரவேல்  புத்திரருக்கும்  அடையாளமாயிருக்கும்;  ஆறுநாளைக்குள்ளே  கர்த்தர்  வானத்தையும்  பூமியையும்  உண்டாக்கி,  ஏழாம்  நாளிலே  ஓய்ந்திருந்து  பூரித்தார்  என்றார்.  (யாத்திராகமம்  31:17)

athu  en’raikkum  enakkum  israveal  puththirarukkum  adaiyaa'lamaayirukkum;  aa’runaa'laikku'l'lea  karththar  vaanaththaiyum  boomiyaiyum  u'ndaakki,  eazhaam  naa'lilea  oaynthirunthu  pooriththaar  en’raar.  (yaaththiraagamam  31:17)

சீனாய்மலையில்  அவர்  மோசேயோடே  பேசி  முடிந்தபின்,  தேவனுடைய  விரலினால்  எழுதப்பட்ட  கற்பலகைகளாகிய  சாட்சியின்  இரண்டு  பலகைகளை  அவனிடத்தில்  கொடுத்தார்.  (யாத்திராகமம்  31:18)

seenaaymalaiyil  avar  moaseayoadea  peasi  mudinthapin,  theavanudaiya  viralinaal  ezhuthappatta  ka’rpalagaiga'laagiya  saadchiyin  ira'ndu  palagaiga'lai  avanidaththil  koduththaar.  (yaaththiraagamam  31:18)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!