Wednesday, July 06, 2016

Yaaththiraagamam 3 | யாத்திராகமம் 3 | Exodus 3


மோசே  மீதியான்  தேசத்து  ஆசாரியனாயிருந்த  தன்  மாமனாகிய  எத்திரோவின்  ஆடுகளை  மேய்த்துவந்தான்.  அவன்  ஆடுகளை  வனாந்தரத்தின்  பின்புறத்திலே  ஓட்டி,  தேவபர்வதமாகிய  ஓரேப்மட்டும்  வந்தான்.  (யாத்திராகமம்  3:1)

moasea  meethiyaan  theasaththu  aasaariyanaayiruntha  than  maamanaagiya  eththiroavin  aaduga'lai  meayththuvanthaan.  avan  aaduga'lai  vanaantharaththin  pinpu’raththilea  oatti,  theavaparvathamaagiya  oareabmattum  vanthaan.  (yaaththiraagamam  3:1)

அங்கே  கர்த்தருடைய  தூதனானவர்  ஒரு  முட்செடியின்  நடுவிலிருந்து  உண்டான  அக்கினிஜுவாலையிலே  நின்று  அவனுக்குத்  தரிசனமானார்.  அப்பொழுது  அவன்  உற்றுப்பார்த்தான்;  முட்செடி  அக்கினியால்  ஜுவாலித்து  எரிந்தும்,  அது  வெந்துபோகாமல்  இருந்தது.  (யாத்திராகமம்  3:2)

anggea  karththarudaiya  thoothanaanavar  oru  mudchediyin  naduvilirunthu  u'ndaana  akkinijuvaalaiyilea  nin’ru  avanukkuth  tharisanamaanaar.  appozhuthu  avan  ut’ruppaarththaan;  mudchedi  akkiniyaal  juvaaliththu  erinthum,  athu  venthupoagaamal  irunthathu.  (yaaththiraagamam  3:2)

அப்பொழுது  மோசே:  இந்த  முட்செடி  வெந்துபோகாதிருக்கிறது  என்ன,  நான்  கிட்டப்போய்  இந்த  அற்புதகாட்சியைப்  பார்ப்பேன்  என்றான்.  (யாத்திராகமம்  3:3)

appozhuthu  moasea:  intha  mudchedi  venthupoagaathirukki’rathu  enna,  naan  kittappoay  intha  a’rputhakaadchiyaip  paarppean  en’raan.  (yaaththiraagamam  3:3)

அவன்  பார்க்கும்படி  கிட்ட  வருகிறதைக்  கர்த்தர்  கண்டார்.  முட்செடியின்  நடுவிலிருந்து  தேவன்  அவனை  நோக்கி:  மோசே,  மோசே  என்று  கூப்பிட்டார்.  அவன்:  இதோ,  அடியேன்  என்றான்.  (யாத்திராகமம்  3:4)

avan  paarkkumpadi  kitta  varugi’rathaik  karththar  ka'ndaar.  mudchediyin  naduvilirunthu  theavan  avanai  noakki:  moasea,  moasea  en’ru  kooppittaar.  avan:  ithoa,  adiyean  en’raan.  (yaaththiraagamam  3:4)

அப்பொழுது  அவர்:  இங்கே  கிட்டிச்  சேராயாக;  உன்  கால்களில்  இருக்கிற  பாதரட்சையைக்  கழற்றிப்போடு;  நீ  நிற்கிற  இடம்  பரிசுத்த  பூமி  என்றார்.  (யாத்திராகமம்  3:5)

appozhuthu  avar:  inggea  kittich  searaayaaga;  un  kaalga'lil  irukki’ra  paatharadchaiyaik  kazhat’rippoadu;  nee  ni’rki’ra  idam  parisuththa  boomi  en’raar.  (yaaththiraagamam  3:5)

பின்னும்  அவர்:  நான்  ஆபிரகாமின்  தேவனும்  ஈசாக்கின்  தேவனும்  யாக்கோபின்  தேவனுமாகிய  உன்  பிதாக்களுடைய  தேவனாயிருக்கிறேன்  என்றார்.  மோசே  தேவனை  நோக்கிப்பார்க்கப்  பயந்ததினால்,  தன்  முகத்தை  மூடிக்கொண்டான்.  (யாத்திராகமம்  3:6)

pinnum  avar:  naan  aabirahaamin  theavanum  eesaakkin  theavanum  yaakkoabin  theavanumaagiya  un  pithaakka'ludaiya  theavanaayirukki’rean  en’raar.  moasea  theavanai  noakkippaarkkap  bayanthathinaal,  than  mugaththai  moodikko'ndaan.  (yaaththiraagamam  3:6)

அப்பொழுது  கர்த்தர்:  எகிப்திலிருக்கிற  என்  ஜனத்தின்  உபத்திரவத்தை  நான்  பார்க்கவே  பார்த்து,  ஆளோட்டிகளினிமித்தம்  அவர்கள்  இடுகிற  கூக்குரலைக்  கேட்டேன்,  அவர்கள்  படுகிற  வேதனைகளையும்  அறிந்திருக்கிறேன்.  (யாத்திராகமம்  3:7)

appozhuthu  karththar:  egipthilirukki’ra  en  janaththin  ubaththiravaththai  naan  paarkkavea  paarththu,  aa'loattiga'linimiththam  avarga'l  idugi’ra  kookkuralaik  keattean,  avarga'l  padugi’ra  veathanaiga'laiyum  a’rinthirukki’rean.  (yaaththiraagamam  3:7)

அவர்களை  எகிப்தியரின்  கைக்கு  விடுதலையாக்கவும்,  அவர்களை  அந்தத்  தேசத்திலிருந்து  நீக்கி,  கானானியரும்  ஏத்தியரும்  எமோரியரும்  பெரிசியரும்  ஏவியரும்  எபூசியரும்  இருக்கிற  இடமாகிய  பாலும்  தேனும்  ஓடுகிற  நலமும்  விசாலமுமான  தேசத்தில்  கொண்டுபோய்ச்  சேர்க்கவும்  இறங்கினேன்.  (யாத்திராகமம்  3:8)

avarga'lai  egipthiyarin  kaikku  viduthalaiyaakkavum,  avarga'lai  anthath  theasaththilirunthu  neekki,  kaanaaniyarum  eaththiyarum  emoariyarum  perisiyarum  eaviyarum  eboosiyarum  irukki’ra  idamaagiya  paalum  theanum  oadugi’ra  nalamum  visaalamumaana  theasaththil  ko'ndupoaych  searkkavum  i’rangginean.  (yaaththiraagamam  3:8)

இப்பொழுதும்  இஸ்ரவேல்  புத்திரரின்  கூக்குரல்  என்  சந்நிதியில்  வந்து  எட்டினது;  எகிப்தியர்  அவர்களை  ஒடுக்குகிற  ஒடுக்குதலையும்  கண்டேன்.  (யாத்திராகமம்  3:9)

ippozhuthum  israveal  puththirarin  kookkural  en  sannithiyil  vanthu  ettinathu;  egipthiyar  avarga'lai  odukkugi’ra  odukkuthalaiyum  ka'ndean.  (yaaththiraagamam  3:9)

நீ  இஸ்ரவேல்  புத்திரராகிய  என்  ஜனத்தை  எகிப்திலிருந்து  அழைத்து  வரும்படி  உன்னைப்  பார்வோனிடத்துக்கு  அனுப்புவேன்  வா  என்றார்.  (யாத்திராகமம்  3:10)

nee  israveal  puththiraraagiya  en  janaththai  egipthilirunthu  azhaiththu  varumpadi  unnaip  paarvoanidaththukku  anuppuvean  vaa  en’raar.  (yaaththiraagamam  3:10)

அப்பொழுது  மோசே  தேவனை  நோக்கி:  பார்வோனிடத்துக்குப்  போகவும்,  இஸ்ரவேல்  புத்திரரை  எகிப்திலிருந்து  அழைத்துவரவும்,  நான்  எம்மாத்திரம்  என்றான்.  (யாத்திராகமம்  3:11)

appozhuthu  moasea  theavanai  noakki:  paarvoanidaththukkup  poagavum,  israveal  puththirarai  egipthilirunthu  azhaiththuvaravum,  naan  emmaaththiram  en’raan.  (yaaththiraagamam  3:11)

அதற்கு  அவர்:  நான்  உன்னோடே  இருப்பேன்;  நீ  ஜனத்தை  எகிப்திலிருந்து  அழைத்துவந்தபின்,  நீங்கள்  இந்த  மலையில்  தேவனுக்கு  ஆராதனை  செய்வீர்கள்;  நான்  உன்னை  அனுப்பினேன்  என்பதற்கு  இதுவே  அடையாளம்  என்றார்.  (யாத்திராகமம்  3:12)

atha’rku  avar:  naan  unnoadea  iruppean;  nee  janaththai  egipthilirunthu  azhaiththuvanthapin,  neengga'l  intha  malaiyil  theavanukku  aaraathanai  seyveerga'l;  naan  unnai  anuppinean  enbatha’rku  ithuvea  adaiyaa'lam  en’raar.  (yaaththiraagamam  3:12)

அப்பொழுது  மோசே  தேவனை  நோக்கி:  நான்  இஸ்ரவேல்  புத்திரரிடத்தில்  போய்,  உங்கள்  பிதாக்களுடைய  தேவன்  உங்களிடத்தில்  என்னை  அனுப்பினார்  என்று  அவர்களுக்குச்  சொல்லும்போது,  அவருடைய  நாமம்  என்ன  என்று  அவர்கள்  என்னிடத்தில்  கேட்டால்,  நான்  அவர்களுக்கு  என்ன  சொல்லுவேன்  என்றான்.  (யாத்திராகமம்  3:13)

appozhuthu  moasea  theavanai  noakki:  naan  israveal  puththiraridaththil  poay,  ungga'l  pithaakka'ludaiya  theavan  ungga'lidaththil  ennai  anuppinaar  en’ru  avarga'lukkuch  sollumpoathu,  avarudaiya  naamam  enna  en’ru  avarga'l  ennidaththil  keattaal,  naan  avarga'lukku  enna  solluvean  en’raan.  (yaaththiraagamam  3:13)

அதற்குத்  தேவன்:  இருக்கிறவராக  இருக்கிறேன்  என்று  மோசேயுடனே  சொல்லி,  இருக்கிறேன்  என்பவர்  என்னை  உங்களிடத்துக்கு  அனுப்பினார்  என்று  இஸ்ரவேல்  புத்திரரோடே  சொல்வாயாக  என்றார்.  (யாத்திராகமம்  3:14)

atha’rkuth  theavan:  irukki’ravaraaga  irukki’rean  en’ru  moaseayudanea  solli,  irukki’rean  enbavar  ennai  ungga'lidaththukku  anuppinaar  en’ru  israveal  puththiraroadea  solvaayaaga  en’raar.  (yaaththiraagamam  3:14)

மேலும்,  தேவன்  மோசேயை  நோக்கி:  ஆபிரகாமின்  தேவனும்  ஈசாக்கின்  தேவனும்  யாக்கோபின்  தேவனுமாயிருக்கிற  உங்கள்  பிதாக்களுடைய  தேவனாகிய  கர்த்தர்  என்னை  உங்களிடத்துக்கு  அனுப்பினார்  என்று  நீ  இஸ்ரவேல்  புத்திரருக்குச்  சொல்வாயாக;  என்றைக்கும்  இதுவே  என்  நாமம்,  தலைமுறை  தலைமுறைதோறும்  இதுவே  என்  பேர்ப்பிரஸ்தாபம்.  (யாத்திராகமம்  3:15)

mealum,  theavan  moaseayai  noakki:  aabirahaamin  theavanum  eesaakkin  theavanum  yaakkoabin  theavanumaayirukki’ra  ungga'l  pithaakka'ludaiya  theavanaagiya  karththar  ennai  ungga'lidaththukku  anuppinaar  en’ru  nee  israveal  puththirarukkuch  solvaayaaga;  en’raikkum  ithuvea  en  naamam,  thalaimu’rai  thalaimu’raithoa’rum  ithuvea  en  pearppirasthaabam.  (yaaththiraagamam  3:15)

நீ  போய்,  இஸ்ரவேலின்  மூப்பரைக்கூட்டி,  அவர்களிடத்தில்:  ஆபிரகாம்  ஈசாக்கு  யாக்கோபு  என்பவர்களுடைய  தேவனாயிருக்கிற  உங்கள்  பிதாக்களுடைய  தேவனாகிய  கர்த்தர்  எனக்குத்  தரிசனமாகி,  உங்களை  நிச்சயமாய்ச்  சந்தித்து,  எகிப்தில்  உங்களுக்குச்  செய்யப்பட்டதைக்  கண்டேன்  என்றும்,  (யாத்திராகமம்  3:16)

nee  poay,  isravealin  moopparaikkootti,  avarga'lidaththil:  aabirahaam  eesaakku  yaakkoabu  enbavarga'ludaiya  theavanaayirukki’ra  ungga'l  pithaakka'ludaiya  theavanaagiya  karththar  enakkuth  tharisanamaagi,  ungga'lai  nichchayamaaych  santhiththu,  egipthil  ungga'lukkuch  seyyappattathaik  ka'ndean  en’rum,  (yaaththiraagamam  3:16)

நான்  உங்களை  எகிப்தின்  சிறுமையிலிருந்து  நீக்கி,  பாலும்  தேனும்  ஓடுகிற  தேசமாகிய  கானானியர்  ஏத்தியர்  எமோரியர்  பெரிசியர்  ஏவியர்  எபூசியருடைய  தேசத்துக்குக்  கொண்டுபோவேன்  என்றும்  சொன்னேன்  என்றார்  என்று  சொல்லு.  (யாத்திராகமம்  3:17)

naan  ungga'lai  egipthin  si’rumaiyilirunthu  neekki,  paalum  theanum  oadugi’ra  theasamaagiya  kaanaaniyar  eaththiyar  emoariyar  perisiyar  eaviyar  eboosiyarudaiya  theasaththukkuk  ko'ndupoavean  en’rum  sonnean  en’raar  en’ru  sollu.  (yaaththiraagamam  3:17)

அவர்கள்  உன்  வாக்குக்குச்  செவிகொடுப்பார்கள்;  அப்பொழுது  நீயும்  இஸ்ரவேலின்  மூப்பரும்  எகிப்தின்  ராஜாவினிடத்தில்  போய்:  எபிரெயருடைய  தேவனாகிய  கர்த்தர்  எங்களைச்  சந்தித்தார்;  இப்பொழுதும்  நாங்கள்  வனாந்தரத்தில்  மூன்றுநாள்  பிரயாணம்போய்,  எங்கள்  தேவனாகிய  கர்த்தருக்குப்  பலியிடும்படி  எங்களைப்  போகவிடவேண்டுமென்று  சொல்லுங்கள்.  (யாத்திராகமம்  3:18)

avarga'l  un  vaakkukkuch  sevikoduppaarga'l;  appozhuthu  neeyum  isravealin  moopparum  egipthin  raajaavinidaththil  poay:  ebireyarudaiya  theavanaagiya  karththar  engga'laich  santhiththaar;  ippozhuthum  naangga'l  vanaantharaththil  moon’runaa'l  pirayaa'nampoay,  engga'l  theavanaagiya  karththarukkup  baliyidumpadi  engga'laip  poagavidavea'ndumen’ru  sollungga'l.  (yaaththiraagamam  3:18)

ஆனாலும்,  எகிப்தின்  ராஜா  கைவல்லமை  கண்டாலொழிய,  உங்களைப்  போகவிடான்  என்று  நான்  அறிவேன்.  (யாத்திராகமம்  3:19)

aanaalum,  egipthin  raajaa  kaivallamai  ka'ndaalozhiya,  ungga'laip  poagavidaan  en’ru  naan  a’rivean.  (yaaththiraagamam  3:19)

ஆகையால்,  நான்  என்  கையை  நீட்டி,  எகிப்தின்  நடுவிலே  நான்  செய்யும்  சகலவித  அற்புதங்களாலும்  அதை  வாதிப்பேன்;  அதற்குப்பின்  அவன்  உங்களைப்  போகவிடுவான்.  (யாத்திராகமம்  3:20)

aagaiyaal,  naan  en  kaiyai  neetti,  egipthin  naduvilea  naan  seyyum  sagalavitha  a’rputhangga'laalum  athai  vaathippean;  atha’rkuppin  avan  ungga'laip  poagaviduvaan.  (yaaththiraagamam  3:20)

அப்பொழுது  இந்த  ஜனங்களுக்கு  எகிப்தியரின்  கண்களில்  தயவுகிடைக்கப்பண்ணுவேன்;  நீங்கள்  போகும்போது  வெறுமையாய்ப்  போவதில்லை.  (யாத்திராகமம்  3:21)

appozhuthu  intha  janangga'lukku  egipthiyarin  ka'nga'lil  thayavukidaikkappa'n'nuvean;  neengga'l  poagumpoathu  ve’rumaiyaayp  poavathillai.  (yaaththiraagamam  3:21)

ஒவ்வொரு  ஸ்திரீயும்,  தன்தன்  அயலகத்தாளிடத்திலும்  தன்தன்  வீட்டில்  தங்குகிறவளிடத்திலும்,  வெள்ளியுடைமைகளையும்  பொன்னுடைமைகளையும்  வஸ்திரங்களையும்  கேட்டு  வாங்குவாள்;  அவைகளை  உங்கள்  குமாரருக்கும்  உங்கள்  குமாரத்திகளுக்கும்  தரிப்பித்து,  எகிப்தியரைக்  கொள்ளையிடுவீர்கள்  என்றார்.  (யாத்திராகமம்  3:22)

ovvoru  sthireeyum,  thanthan  ayalagaththaa'lidaththilum  thanthan  veettil  thanggugi’rava'lidaththilum,  ve'l'liyudaimaiga'laiyum  ponnudaimaiga'laiyum  vasthirangga'laiyum  keattu  vaangguvaa'l;  avaiga'lai  ungga'l  kumaararukkum  ungga'l  kumaaraththiga'lukkum  tharippiththu,  egipthiyaraik  ko'l'laiyiduveerga'l  en’raar.  (yaaththiraagamam  3:22)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!