Friday, July 22, 2016

Yaaththiraagamam 29 | யாத்திராகமம் 29 | Exodus 29


அவர்கள்  எனக்கு  ஆசாரிய  ஊழியம்  செய்யும்படி  அவர்களைப்  பரிசுத்தப்படுத்தும்பொருட்டு,  நீ  அவர்களுக்குச்  செய்ய  வேண்டியதாவது:  ஒரு  காளையையும்  பழுதற்ற  இரண்டு  ஆட்டுக்கடாக்களையும்  தெரிந்துகொள்வாயாக.  (யாத்திராகமம்  29:1)

avarga'l  enakku  aasaariya  oozhiyam  seyyumpadi  avarga'laip  parisuththappaduththumporuttu,  nee  avarga'lukkuch  seyya  vea'ndiyathaavathu:  oru  kaa'laiyaiyum  pazhuthat’ra  ira'ndu  aattukkadaakka'laiyum  therinthuko'lvaayaaga.  (yaaththiraagamam  29:1)

புளிப்பில்லா  அப்பத்தையும்,  எண்ணெயிலே  பிசைந்த  புளிப்பில்லா  அதிரசங்களையும்,  எண்ணெய்  பூசப்பட்ட  புளிப்பில்லா  அடைகளையும்  கோதுமையின்  மெல்லிய  மாவினால்  பண்ணி,  (யாத்திராகமம்  29:2)

pu'lippillaa  appaththaiyum,  e'n'neyilea  pisaintha  pu'lippillaa  athirasangga'laiyum,  e'n'ney  poosappatta  pu'lippillaa  adaiga'laiyum  koathumaiyin  melliya  maavinaal  pa'n'ni,  (yaaththiraagamam  29:2)

அவைகளை  ஒரு  கூடையிலே  வைத்து,  கூடையோடே  அவைகளையும்  காளையையும்  இரண்டு  ஆட்டுக்கடாக்களையும்  கொண்டுவந்து,  (யாத்திராகமம்  29:3)

avaiga'lai  oru  koodaiyilea  vaiththu,  koodaiyoadea  avaiga'laiyum  kaa'laiyaiyum  ira'ndu  aattukkadaakka'laiyum  ko'nduvanthu,  (yaaththiraagamam  29:3)

ஆரோனையும்  அவன்  குமாரரையும்  ஆசரிப்புக்  கூடாரத்தின்  வாசல்  முன்பாகச்  சேரப்பண்ணி,  அவர்களைத்  தண்ணீரினால்  கழுவி,  (யாத்திராகமம்  29:4)

aaroanaiyum  avan  kumaararaiyum  aasarippuk  koodaaraththin  vaasal  munbaagach  searappa'n'ni,  avarga'laith  tha'n'neerinaal  kazhuvi,  (yaaththiraagamam  29:4)

அந்த  வஸ்திரங்களை  எடுத்து,  ஆரோனுக்கு  உள்சட்டையையும்,  ஏபோத்தின்  கீழ்  அங்கியையும்,  ஏபோத்தையும்,  மார்ப்பதக்கத்தையும்  தரித்து,  ஏபோத்தின்  விசித்திரமான  கச்சையையும்  அவனுக்குக்  கட்டி,  (யாத்திராகமம்  29:5)

antha  vasthirangga'lai  eduththu,  aaroanukku  u'lsattaiyaiyum,  eaboaththin  keezh  anggiyaiyum,  eaboaththaiyum,  maarppathakkaththaiyum  thariththu,  eaboaththin  visiththiramaana  kachchaiyaiyum  avanukkuk  katti,  (yaaththiraagamam  29:5)

அவன்  தலையிலே  பாகையையும்  வைத்து,  பரிசுத்த  கிரீடத்தைப்  பாகையின்மேல்  தரித்து,  (யாத்திராகமம்  29:6)

avan  thalaiyilea  paagaiyaiyum  vaiththu,  parisuththa  kireedaththaip  paagaiyinmeal  thariththu,  (yaaththiraagamam  29:6)

அபிஷேக  தைலத்தையும்  எடுத்து,  அவன்  தலையின்மேல்  வார்த்து,  அவனை  அபிஷேகஞ்செய்வாயாக.  (யாத்திராகமம்  29:7)

abisheaga  thailaththaiyum  eduththu,  avan  thalaiyinmeal  vaarththu,  avanai  abisheagagnseyvaayaaga.  (yaaththiraagamam  29:7)

பின்பு  அவன்  குமாரரைச்  சேரப்பண்ணி,  ஆசாரிய  ஊழியம்  அவர்களுக்கு  நித்திய  கட்டளையாக  இருக்கும்படி,  அவர்களுக்கும்  அங்கிகளை  உடுத்துவாயாக.  (யாத்திராகமம்  29:8)

pinbu  avan  kumaararaich  searappa'n'ni,  aasaariya  oozhiyam  avarga'lukku  niththiya  katta'laiyaaga  irukkumpadi,  avarga'lukkum  anggiga'lai  uduththuvaayaaga.  (yaaththiraagamam  29:8)

ஆரோனுக்கும்  அவன்  குமாரருக்கும்  இடைக்கச்சைகளைக்  கட்டி,  அவன்  குமாரருக்குக்  குல்லாக்களையும்  தரித்து,  இப்படியே  ஆரோனையும்  அவன்  குமாரரையும்  பிரதிஷ்டைபண்ணுவாயாக.  (யாத்திராகமம்  29:9)

aaroanukkum  avan  kumaararukkum  idaikkachchaiga'laik  katti,  avan  kumaararukkuk  kullaakka'laiyum  thariththu,  ippadiyea  aaroanaiyum  avan  kumaararaiyum  pirathishdaipa'n'nuvaayaaga.  (yaaththiraagamam  29:9)

காளையை  ஆசரிப்புக்  கூடாரத்துக்கு  முன்பாகக்  கொண்டுவருவாயாக;  அப்பொழுது  ஆரோனும்  அவன்  குமாரரும்  தங்கள்  கைகளைக்  காளையினுடைய  தலையின்மேல்  வைக்கக்கடவர்கள்.  (யாத்திராகமம்  29:10)

kaa'laiyai  aasarippuk  koodaaraththukku  munbaagak  ko'nduvaruvaayaaga;  appozhuthu  aaroanum  avan  kumaararum  thangga'l  kaiga'laik  kaa'laiyinudaiya  thalaiyinmeal  vaikkakkadavarga'l.  (yaaththiraagamam  29:10)

பின்பு  நீ  அந்தக்  காளையை  ஆசரிப்புக்  கூடாரத்து  வாசலண்டையிலே  கர்த்தருடைய  சந்நிதானத்தில்  அடித்து,  (யாத்திராகமம்  29:11)

pinbu  nee  anthak  kaa'laiyai  aasarippuk  koodaaraththu  vaasala'ndaiyilea  karththarudaiya  sannithaanaththil  adiththu,  (yaaththiraagamam  29:11)

அதின்  இரத்தத்தில்  கொஞ்சம்  எடுத்து,  உன்  விரலினால்  பலிபீடத்தின்  கொம்புகள்மேல்  இட்டு,  மற்ற  இரத்தம்  முழுவதையும்  பலிபீடத்தின்  அடியிலே  ஊற்றி,  (யாத்திராகமம்  29:12)

athin  iraththaththil  kogncham  eduththu,  un  viralinaal  balipeedaththin  kombuga'lmeal  ittu,  mat’ra  iraththam  muzhuvathaiyum  balipeedaththin  adiyilea  oot’ri,  (yaaththiraagamam  29:12)

குடல்களை  மூடிய  கொழுப்பு  யாவையும்,  கல்லீரலின்மேலுள்ள  சவ்வையும்,  இரண்டு  குண்டிக்காய்களையும்,  அவைகளின்மேலுள்ள  கொழுப்பையும்  எடுத்து,  பலிபீடத்தின்மேல்  தகித்துப்போட்டு,  (யாத்திராகமம்  29:13)

kudalga'lai  moodiya  kozhuppu  yaavaiyum,  kalleeralinmealu'l'la  savvaiyum,  ira'ndu  ku'ndikkaayga'laiyum,  avaiga'linmealu'l'la  kozhuppaiyum  eduththu,  balipeedaththinmeal  thagiththuppoattu,  (yaaththiraagamam  29:13)

காளையின்  மாம்சத்தையும்  அதின்  தோலையும்  அதின்  சாணியையும்  பாளயத்துக்குப்  புறம்பே  அக்கினியால்  சுட்டெரிக்கக்கடவாய்;  இது  பாவநிவாரணபலி.  (யாத்திராகமம்  29:14)

kaa'laiyin  maamsaththaiyum  athin  thoalaiyum  athin  saa'niyaiyum  paa'layaththukkup  pu’rambea  akkiniyaal  sutterikkakkadavaay;  ithu  paavanivaara'nabali.  (yaaththiraagamam  29:14)

பின்பு  அந்த  ஆட்டுக்கடாக்களில்  ஒன்றைக்  கொண்டுவந்து  நிறுத்துவாயாக;  அதினுடைய  தலையின்மேல்  ஆரோனும்  அவன்  குமாரரும்  தங்கள்  கைகளை  வைக்கக்கடவர்கள்.  (யாத்திராகமம்  29:15)

pinbu  antha  aattukkadaakka'lil  on’raik  ko'nduvanthu  ni’ruththuvaayaaga;  athinudaiya  thalaiyinmeal  aaroanum  avan  kumaararum  thangga'l  kaiga'lai  vaikkakkadavarga'l.  (yaaththiraagamam  29:15)

அந்தக்  கடாவை  அடித்து,  அதின்  இரத்தத்தைப்  பிடித்து,  பலிபீடத்தின்மேல்  சுற்றிலும்  தெளித்து,  (யாத்திராகமம்  29:16)

anthak  kadaavai  adiththu,  athin  iraththaththaip  pidiththu,  balipeedaththinmeal  sut’rilum  the'liththu,  (yaaththiraagamam  29:16)

ஆட்டுக்கடாவைச்  சந்துசந்தாகத்  துண்டித்து,  அதின்  குடல்களையும்  அதின்  தொடைகளையும்  கழுவி,  அவைகளை  அந்தத்  துண்டங்களின்மேலும்  அதின்  தலையின்மேலும்  வைத்து,  (யாத்திராகமம்  29:17)

aattukkadaavaich  santhusanthaagath  thu'ndiththu,  athin  kudalga'laiyum  athin  thodaiga'laiyum  kazhuvi,  avaiga'lai  anthath  thu'ndangga'linmealum  athin  thalaiyinmealum  vaiththu,  (yaaththiraagamam  29:17)

ஆட்டுக்கடா  முழுவதையும்  பலிபீடத்தின்மேல்  தகித்துவிடுவாயாக;  இது  கர்த்தருக்குச்  செலுத்தும்  சர்வாங்க  தகனபலி;  இது  சுகந்த  வாசனையும்  கர்த்தருக்குச்  செலுத்தும்  தகனபலியுமாய்  இருக்கும்.  (யாத்திராகமம்  29:18)

aattukkadaa  muzhuvathaiyum  balipeedaththinmeal  thagiththuviduvaayaaga;  ithu  karththarukkuch  seluththum  sarvaangga  thaganabali;  ithu  sugantha  vaasanaiyum  karththarukkuch  seluththum  thaganabaliyumaay  irukkum.  (yaaththiraagamam  29:18)

பின்பு  மற்ற  ஆட்டுக்கடாவையும்  கொண்டுவந்து  நிறுத்துவாயாக;  அதினுடைய  தலையின்மேல்  ஆரோனும்  அவன்  குமாரரும்  தங்கள்  கைகளை  வைக்கக்கடவர்கள்.  (யாத்திராகமம்  29:19)

pinbu  mat’ra  aattukkadaavaiyum  ko'nduvanthu  ni’ruththuvaayaaga;  athinudaiya  thalaiyinmeal  aaroanum  avan  kumaararum  thangga'l  kaiga'lai  vaikkakkadavarga'l.  (yaaththiraagamam  29:19)

அப்பொழுது  அந்தக்  கடாவை  அடித்து,  அதின்  இரத்தத்தில்  கொஞ்சம்  எடுத்து,  ஆரோனின்  வலதுகாது  மடலிலும்,  அவன்  குமாரரின்  வலதுகாது  மடலிலும்,  அவர்கள்  வலதுகையின்  பெருவிரலிலும்,  அவர்கள்  வலதுகாலின்  பெருவிரலிலும்  இட்டு,  மற்ற  இரத்தத்தைப்  பலிபீடத்தின்மேல்  சுற்றிலும்  தெளித்து,  (யாத்திராகமம்  29:20)

appozhuthu  anthak  kadaavai  adiththu,  athin  iraththaththil  kogncham  eduththu,  aaroanin  valathukaathu  madalilum,  avan  kumaararin  valathukaathu  madalilum,  avarga'l  valathukaiyin  peruviralilum,  avarga'l  valathukaalin  peruviralilum  ittu,  mat’ra  iraththaththaip  balipeedaththinmeal  sut’rilum  the'liththu,  (yaaththiraagamam  29:20)

பலிபீடத்தின்மேலிருக்கும்  இரத்தத்திலும்  அபிஷேகதைலத்திலும்  கொஞ்சம்  எடுத்து,  ஆரோனும்  அவன்  வஸ்திரங்களும்  அவனுடைய  குமாரரும்  அவர்களுடைய  வஸ்திரங்களும்  பரிசுத்தமாக்கப்படும்படி,  அவன்மேலும்  அவன்  வஸ்திரங்கள்மேலும்  அவனுடைய  குமாரர்  மேலும்  அவர்களுடைய  வஸ்திரங்கள்  மேலும்  தெளிப்பாயாக.  (யாத்திராகமம்  29:21)

balipeedaththinmealirukkum  iraththaththilum  abisheagathailaththilum  kogncham  eduththu,  aaroanum  avan  vasthirangga'lum  avanudaiya  kumaararum  avarga'ludaiya  vasthirangga'lum  parisuththamaakkappadumpadi,  avanmealum  avan  vasthirangga'lmealum  avanudaiya  kumaarar  mealum  avarga'ludaiya  vasthirangga'l  mealum  the'lippaayaaga.  (yaaththiraagamam  29:21)

அந்த  ஆட்டுக்கடா  பிரதிஷ்டையின்  ஆட்டுக்கடாவானதால்,  அதிலுள்ள  கொழுப்பையும்  வாலையும்  குடல்களை  மூடிய  கொழுப்பையும்  கல்லீரலின்மேலுள்ள  சவ்வையும்  இரண்டு  குண்டிக்காய்களையும்  அவைகளின்மேலுள்ள  கொழுப்பையும்  வலதுபக்கத்து  முன்னந்தொடையையும்,  (யாத்திராகமம்  29:22)

antha  aattukkadaa  pirathishdaiyin  aattukkadaavaanathaal,  athilu'l'la  kozhuppaiyum  vaalaiyum  kudalga'lai  moodiya  kozhuppaiyum  kalleeralinmealu'l'la  savvaiyum  ira'ndu  ku'ndikkaayga'laiyum  avaiga'linmealu'l'la  kozhuppaiyum  valathupakkaththu  munnanthodaiyaiyum,  (yaaththiraagamam  29:22)

கர்த்தருடைய  சந்நிதானத்தில்  வைத்திருக்கிற  புளிப்பில்லா  அப்பங்களுள்ள  கூடையில்  ஒரு  அப்பத்தையும்  எண்ணெயிட்ட  அப்பமாகிய  ஒரு  அதிரசத்தையும்  ஒரு  அடையையும்  எடுத்து,  (யாத்திராகமம்  29:23)

karththarudaiya  sannithaanaththil  vaiththirukki’ra  pu'lippillaa  appangga'lu'l'la  koodaiyil  oru  appaththaiyum  e'n'neyitta  appamaagiya  oru  athirasaththaiyum  oru  adaiyaiyum  eduththu,  (yaaththiraagamam  29:23)

அவைகள்  எல்லாவற்றையும்  ஆரோனின்  உள்ளங்கைகளிலும்  அவன்  குமாரரின்  உள்ளங்கைகளிலும்  வைத்து,  அவைகளைக்  கர்த்தருடைய  சந்நிதானத்தில்  அசைவாட்டப்படும்  காணிக்கையாக  அசைவாட்டி,  (யாத்திராகமம்  29:24)

avaiga'l  ellaavat’raiyum  aaroanin  u'l'langkaiga'lilum  avan  kumaararin  u'l'langkaiga'lilum  vaiththu,  avaiga'laik  karththarudaiya  sannithaanaththil  asaivaattappadum  kaa'nikkaiyaaga  asaivaatti,  (yaaththiraagamam  29:24)

பின்பு  அவைகளை  அவர்கள்  கைகளிலிருந்து  எடுத்து,  பலிபீடத்தின்மேல்  சர்வாங்க  தகனபலியோடு  வைத்து,  கர்த்தருடைய  சந்நிதானத்தில்  சுகந்த  வாசனையாகத்  தகிக்கக்கடவாய்;  இது  கர்த்தருக்குச்  செலுத்தப்படும்  தகனபலி.  (யாத்திராகமம்  29:25)

pinbu  avaiga'lai  avarga'l  kaiga'lilirunthu  eduththu,  balipeedaththinmeal  sarvaangga  thaganabaliyoadu  vaiththu,  karththarudaiya  sannithaanaththil  sugantha  vaasanaiyaagath  thagikkakkadavaay;  ithu  karththarukkuch  seluththappadum  thaganabali.  (yaaththiraagamam  29:25)

ஆரோனுடைய  பிரதிஷ்டையின்  ஆட்டுக்கடாவிலே  மார்க்கண்டத்தை  எடுத்து,  அதைக்  கர்த்தருடைய  சந்நிதானத்தில்  அசைவாட்டப்படும்  காணிக்கையாக  அசைவாட்டக்கடவாய்;  அது  உன்  பங்காயிருக்கும்.  (யாத்திராகமம்  29:26)

aaroanudaiya  pirathishdaiyin  aattukkadaavilea  maarkka'ndaththai  eduththu,  athaik  karththarudaiya  sannithaanaththil  asaivaattappadum  kaa'nikkaiyaaga  asaivaattakkadavaay;  athu  un  panggaayirukkum.  (yaaththiraagamam  29:26)

மேலும்,  ஆரோனுடைய  பிரதிஷ்டைக்கும்  அவன்  குமாரருடைய  பிரதிஷ்டைக்கும்  நியமித்த  ஆட்டுக்கடாவில்  அசைவாட்டப்படுகிற  மார்க்கண்டத்தையும்  ஏறெடுத்துப்  படைக்கப்படுகிற  முன்னந்தொடையையும்  பரிசுத்தப்படுத்துவாயாக.  (யாத்திராகமம்  29:27)

mealum,  aaroanudaiya  pirathishdaikkum  avan  kumaararudaiya  pirathishdaikkum  niyamiththa  aattukkadaavil  asaivaattappadugi’ra  maarkka'ndaththaiyum  ea’reduththup  padaikkappadugi’ra  munnanthodaiyaiyum  parisuththappaduththuvaayaaga.  (yaaththiraagamam  29:27)

அது  ஏறெடுத்துப்  படைக்கிற  படைப்பானதினால்,  இஸ்ரவேல்  புத்திரர்  பலியிடுகிறவைகளில்  அவைகளே  நித்திய  கட்டளையாக  ஆரோனையும்  அவன்  குமாரரையும்  சேர்வதாக;  இஸ்ரவேல்  புத்திரர்  கர்த்தருடைய  சந்நிதானத்தில்  ஏறெடுத்துப்  படைக்கிற  சமாதானபலிகளில்  அவைகளே  ஏறெடுத்துப்  படைக்கும்  படைப்பாயிருக்கவேண்டும்.  (யாத்திராகமம்  29:28)

athu  ea’reduththup  padaikki’ra  padaippaanathinaal,  israveal  puththirar  baliyidugi’ravaiga'lil  avaiga'lea  niththiya  katta'laiyaaga  aaroanaiyum  avan  kumaararaiyum  searvathaaga;  israveal  puththirar  karththarudaiya  sannithaanaththil  ea’reduththup  padaikki’ra  samaathaanabaliga'lil  avaiga'lea  ea’reduththup  padaikkum  padaippaayirukkavea'ndum.  (yaaththiraagamam  29:28)

ஆரோனின்  பரிசுத்த  வஸ்திரங்கள்,  அவனுக்குப்பின்,  அவனுடைய  குமாரரைச்  சேரும்;  அவர்கள்  அவைகளை  உடுத்திக்கொண்டு,  அபிஷேகம்பண்ணப்பட்டுப்  பிரதிஷ்டையாக்கப்படுவார்கள்.  (யாத்திராகமம்  29:29)

aaroanin  parisuththa  vasthirangga'l,  avanukkuppin,  avanudaiya  kumaararaich  searum;  avarga'l  avaiga'lai  uduththikko'ndu,  abisheagampa'n'nappattup  pirathishdaiyaakkappaduvaarga'l.  (yaaththiraagamam  29:29)

அவனுடைய  குமாரரில்  அவன்  பட்டத்திற்கு  வருகிற  ஆசாரியன்  பரிசுத்த  ஸ்தலத்தில்  ஆராதனை  செய்வதற்கு  ஆசரிப்புக்  கூடாரத்தில்  பிரவேசிக்கும்போது,  அவைகளை  ஏழுநாள்மட்டும்  உடுத்திக்கொள்ளக்கடவன்.  (யாத்திராகமம்  29:30)

avanudaiya  kumaararil  avan  pattaththi’rku  varugi’ra  aasaariyan  parisuththa  sthalaththil  aaraathanai  seyvatha’rku  aasarippuk  koodaaraththil  piraveasikkumpoathu,  avaiga'lai  eazhunaa'lmattum  uduththikko'l'lakkadavan.  (yaaththiraagamam  29:30)

பிரதிஷ்டையின்  ஆட்டுக்கடாவைக்  கொண்டுவந்து,  அதின்  மாம்சத்தைப்  பரிசுத்த  இடத்தில்  வேவிப்பாயாக.  (யாத்திராகமம்  29:31)

pirathishdaiyin  aattukkadaavaik  ko'nduvanthu,  athin  maamsaththaip  parisuththa  idaththil  veavippaayaaga.  (yaaththiraagamam  29:31)

அந்த  ஆட்டுக்கடாவின்  மாம்சத்தையும்,  கூடையிலிருக்கிற  அப்பத்தையும்,  ஆரோனும்  அவன்  குமாரரும்  ஆசரிப்புக்  கூடாரத்தின்  வாசலிலே  புசிக்கக்கடவர்கள்.  (யாத்திராகமம்  29:32)

antha  aattukkadaavin  maamsaththaiyum,  koodaiyilirukki’ra  appaththaiyum,  aaroanum  avan  kumaararum  aasarippuk  koodaaraththin  vaasalilea  pusikkakkadavarga'l.  (yaaththiraagamam  29:32)

அவர்களைப்  பிரதிஷ்டைபண்ணிப்  பரிசுத்தப்படுத்தும்பொருட்டு,  அவைகளால்  பாவநிவிர்த்தி  செய்யப்பட்டபடியால்,  அவைகளை  அவர்கள்  புசிக்கக்கடவர்கள்;  அந்நியனோ  அவைகளைப்  புசிக்கலாகாது;  அவைகள்  பரிசுத்தமானவைகள்.  (யாத்திராகமம்  29:33)

avarga'laip  pirathishdaipa'n'nip  parisuththappaduththumporuttu,  avaiga'laal  paavanivirththi  seyyappattapadiyaal,  avaiga'lai  avarga'l  pusikkakkadavarga'l;  anniyanoa  avaiga'laip  pusikkalaagaathu;  avaiga'l  parisuththamaanavaiga'l.  (yaaththiraagamam  29:33)

பிரதிஷ்டையின்  மாம்சத்திலும்  அப்பத்திலும்  ஏதாகிலும்  விடியற்காலம்மட்டும்  மீந்திருந்ததானால்,  அதை  அக்கினியாலே  சுட்டெரிப்பாயாக;  அது  புசிக்கப்படலாகாது,  அது  பரிசுத்தமானது.  (யாத்திராகமம்  29:34)

pirathishdaiyin  maamsaththilum  appaththilum  eathaagilum  vidiya’rkaalammattum  meenthirunthathaanaal,  athai  akkiniyaalea  sutterippaayaaga;  athu  pusikkappadalaagaathu,  athu  parisuththamaanathu.  (yaaththiraagamam  29:34)

இந்தப்பிரகாரம்  நான்  உனக்குக்  கட்டளையிட்டபடி  எல்லாவற்றையும்  நீ  ஆரோனுக்கும்  அவன்  குமாரருக்கும்  செய்வாயாக;  ஏழுநாளளவும்  நீ  அவர்களைப்  பிரதிஷ்டைபண்ணி,  (யாத்திராகமம்  29:35)

inthappiragaaram  naan  unakkuk  katta'laiyittapadi  ellaavat’raiyum  nee  aaroanukkum  avan  kumaararukkum  seyvaayaaga;  eazhunaa'la'lavum  nee  avarga'laip  pirathishdaipa'n'ni,  (yaaththiraagamam  29:35)

பாவநிவிர்த்திக்காக  ஒவ்வொரு  நாளிலும்  ஒவ்வொரு  காளையைப்  பாவநிவாரணபலியாகப்  பலியிட்டு;  பலிபீடத்துக்காகப்  பிராயச்சித்தம்  செய்தபின்,  அந்தப்  பலிபீடத்தைச்  சுத்திசெய்யவேண்டும்;  அதைப்  பரிசுத்தப்படுத்தும்படி  அதை  அபிஷேகம்பண்ணக்கடவாய்.  (யாத்திராகமம்  29:36)

paavanivirththikkaaga  ovvoru  naa'lilum  ovvoru  kaa'laiyaip  paavanivaara'nabaliyaagap  baliyittu;  balipeedaththukkaagap  piraayachchiththam  seythapin,  anthap  balipeedaththaich  suththiseyyavea'ndum;  athaip  parisuththappaduththumpadi  athai  abisheagampa'n'nakkadavaay.  (yaaththiraagamam  29:36)

ஏழுநாளளவும்  பலிபீடத்திற்காகப்  பிராயச்சித்தஞ்செய்து,  அதைப்  பரிசுத்தமாக்கக்கடவாய்;  பலிபீடமானது  மகா  பரிசுத்தமாயிருக்கும்;  பலிபீடத்தைத்  தொடுகிறதெல்லாம்  பரிசுத்தமாகும்.  (யாத்திராகமம்  29:37)

eazhunaa'la'lavum  balipeedaththi’rkaagap  piraayachchiththagnseythu,  athaip  parisuththamaakkakkadavaay;  balipeedamaanathu  mahaa  parisuththamaayirukkum;  balipeedaththaith  thodugi’rathellaam  parisuththamaagum.  (yaaththiraagamam  29:37)

பலிபீடத்தின்மேல்  நீ  பலியிடவேண்டியது  என்னவெனில்;  இடைவிடாமல்  ஒவ்வொருநாளிலும்  ஒரு  வயதான  இரண்டு  ஆட்டுக்குட்டிகளைப்  பலியிடவேண்டும்.  (யாத்திராகமம்  29:38)

balipeedaththinmeal  nee  baliyidavea'ndiyathu  ennavenil;  idaividaamal  ovvorunaa'lilum  oru  vayathaana  ira'ndu  aattukkuttiga'laip  baliyidavea'ndum.  (yaaththiraagamam  29:38)

ஒரு  ஆட்டுக்குட்டியைக்  காலையிலும்,  மற்ற  ஆட்டுக்குட்டியை  மாலையிலும்  பலியிடுவாயாக.  (யாத்திராகமம்  29:39)

oru  aattukkuttiyaik  kaalaiyilum,  mat’ra  aattukkuttiyai  maalaiyilum  baliyiduvaayaaga.  (yaaththiraagamam  29:39)

ஒரு  மரக்காலிலே  பத்திலொரு  பங்கானதும்,  இடித்துப்  பிழிந்த  காற்படி  எண்ணெயிலே  பிசைந்ததுமாகிய  மெல்லிய  மாவையும்,  பானபலியாகக்  கால்படி  திராட்சரசத்தையும்,  ஒரு  ஆட்டுக்குட்டியுடனே  படைப்பாயாக.  (யாத்திராகமம்  29:40)

oru  marakkaalilea  paththiloru  panggaanathum,  idiththup  pizhintha  kaa’rpadi  e'n'neyilea  pisainthathumaagiya  melliya  maavaiyum,  baanabaliyaagak  kaalpadi  thiraadcharasaththaiyum,  oru  aattukkuttiyudanea  padaippaayaaga.  (yaaththiraagamam  29:40)

மற்ற  ஆட்டுக்குட்டியை  மாலையிலே  பலியிட்டு,  காலையிலே  செலுத்தின  போஜனபலிக்கும்  பானபலிக்கும்  ஒத்தபிரகாரம்  அதைக்  கர்த்தருக்குச்  சுகந்த  வாசனையான  தகனபலியாகப்  படைக்கக்கடவாய்.  (யாத்திராகமம்  29:41)

mat’ra  aattukkuttiyai  maalaiyilea  baliyittu,  kaalaiyilea  seluththina  poajanabalikkum  baanabalikkum  oththapiragaaram  athaik  karththarukkuch  sugantha  vaasanaiyaana  thaganabaliyaagap  padaikkakkadavaay.  (yaaththiraagamam  29:41)

உன்னுடனே  பேசும்படி  நான்  உங்களைச்  சந்திக்கும்  இடமாயிருக்கிற  ஆசரிப்புக்  கூடாரத்தினுடைய  வாசலாகிய  கர்த்தருடைய  சந்நிதியிலே,  உங்கள்  தலைமுறைதோறும்  செலுத்தப்படவேண்டிய  நித்திய  சர்வாங்க  தகனபலி  இதுவே.  (யாத்திராகமம்  29:42)

unnudanea  peasumpadi  naan  ungga'laich  santhikkum  idamaayirukki’ra  aasarippuk  koodaaraththinudaiya  vaasalaagiya  karththarudaiya  sannithiyilea,  ungga'l  thalaimu’raithoa’rum  seluththappadavea'ndiya  niththiya  sarvaangga  thaganabali  ithuvea.  (yaaththiraagamam  29:42)

அங்கே  இஸ்ரவேல்  புத்திரரைச்  சந்திப்பேன்;  அந்த  ஸ்தலம்  என்னுடைய  மகிமையினால்  பரிசுத்தமாக்கப்படும்.  (யாத்திராகமம்  29:43)

anggea  israveal  puththiraraich  santhippean;  antha  sthalam  ennudaiya  magimaiyinaal  parisuththamaakkappadum.  (yaaththiraagamam  29:43)

ஆசரிப்புக்  கூடாரத்தையும்  பலிபீடத்தையும்  நான்  பரிசுத்தமாக்குவேன்;  எனக்கு  ஆசாரிய  ஊழியம்  செய்யும்படிக்கு,  ஆரோனையும்  அவன்  குமாரரையும்  பரிசுத்தப்படுத்தி,  (யாத்திராகமம்  29:44)

aasarippuk  koodaaraththaiyum  balipeedaththaiyum  naan  parisuththamaakkuvean;  enakku  aasaariya  oozhiyam  seyyumpadikku,  aaroanaiyum  avan  kumaararaiyum  parisuththappaduththi,  (yaaththiraagamam  29:44)

இஸ்ரவேல்  புத்திரரின்  நடுவே  நான்  வாசம்பண்ணி,  அவர்களுக்குத்  தேவனாயிருப்பேன்.  (யாத்திராகமம்  29:45)

israveal  puththirarin  naduvea  naan  vaasampa'n'ni,  avarga'lukkuth  theavanaayiruppean.  (yaaththiraagamam  29:45)

தங்கள்  நடுவே  நான்  வாசம்பண்ணும்படி,  தங்களை  எகிப்து  தேசத்திலிருந்து  புறப்படப்பண்ணின  நான்  தங்கள்  தேவனாகிய  கர்த்தர்  என்று  அவர்கள்  அறிவார்கள்;  நானே  அவர்கள்  தேவனாகிய  கர்த்தர்.  (யாத்திராகமம்  29:46)

thangga'l  naduvea  naan  vaasampa'n'numpadi,  thangga'lai  egipthu  theasaththilirunthu  pu’rappadappa'n'nina  naan  thangga'l  theavanaagiya  karththar  en’ru  avarga'l  a’rivaarga'l;  naanea  avarga'l  theavanaagiya  karththar.  (yaaththiraagamam  29:46)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!