Friday, July 22, 2016

Yaaththiraagamam 27 | யாத்திராகமம் 27 | Exodus 27


ஐந்து  முழ  நீளமும்  ஐந்து  முழ  அகலமுமாக  சீத்திம்  மரத்தால்  பலிபீடத்தையும்  உண்டுபண்ணுவாயாக;  அது  சதுரமும்  மூன்று  முழ  உயரமுமாயிருப்பதாக.  (யாத்திராகமம்  27:1)

ainthu  muzha  nee'lamum  ainthu  muzha  agalamumaaga  seeththim  maraththaal  balipeedaththaiyum  u'ndupa'n'nuvaayaaga;  athu  sathuramum  moon’ru  muzha  uyaramumaayiruppathaaga.  (yaaththiraagamam  27:1)

அதின்  நாலு  மூலைகளிலும்  நாலு  கொம்புகளை  உண்டாக்குவாயாக;  அதின்  கொம்புகள்  அதனோடே  ஏகமாய்  இருக்கவேண்டும்;  அதை  வெண்கலத்  தகட்டால்  மூடவேண்டும்.  (யாத்திராகமம்  27:2)

athin  naalu  moolaiga'lilum  naalu  kombuga'lai  u'ndaakkuvaayaaga;  athin  kombuga'l  athanoadea  eagamaay  irukkavea'ndum;  athai  ve'ngalath  thagattaal  moodavea'ndum.  (yaaththiraagamam  27:2)

அதின்  சாம்பலை  எடுக்கத்தக்க  சட்டிகளையும்  கரண்டிகளையும்  கிண்ணிகளையும்  முள்துறடுகளையும்  நெருப்புச்சட்டிகளையும்  உண்டாக்குவாயாக;  அதின்  பணிமுட்டுகளையெல்லாம்  வெண்கலத்தால்  பண்ணுவாயாக.  (யாத்திராகமம்  27:3)

athin  saambalai  edukkaththakka  sattiga'laiyum  kara'ndiga'laiyum  ki'n'niga'laiyum  mu'lthu’raduga'laiyum  neruppuchsattiga'laiyum  u'ndaakkuvaayaaga;  athin  pa'nimuttuga'laiyellaam  ve'ngalaththaal  pa'n'nuvaayaaga.  (yaaththiraagamam  27:3)

வலைப்பின்னல்போன்ற  ஒரு  வெண்கலச்  சல்லடையைப்  பண்ணி,  அந்தச்  சல்லடையின்  நாலு  மூலைகளிலும்  நாலு  வெண்கல  வளையங்களை  உண்டாக்கி,  (யாத்திராகமம்  27:4)

valaippinnalpoan’ra  oru  ve'ngalach  salladaiyaip  pa'n'ni,  anthach  salladaiyin  naalu  moolaiga'lilum  naalu  ve'ngala  va'laiyangga'lai  u'ndaakki,  (yaaththiraagamam  27:4)

அந்தச்  சல்லடை  பலிபீடத்தின்  பாதியுயரத்தில்  இருக்கும்படி  அதைத்  தாழப்  பலிபீடத்தின்  சுற்றடைப்புக்குக்  கீழாக  வைப்பாயாக.  (யாத்திராகமம்  27:5)

anthach  salladai  balipeedaththin  paathiyuyaraththil  irukkumpadi  athaith  thaazhap  balipeedaththin  sut’radaippukkuk  keezhaaga  vaippaayaaga.  (yaaththiraagamam  27:5)

பலிபீடத்துக்குச்  சீத்திம்  மரத்தால்  தண்டுகளையும்  பண்ணி,  அவைகளை  வெண்கலத்தகட்டால்  மூடுவாயாக.  (யாத்திராகமம்  27:6)

balipeedaththukkuch  seeththim  maraththaal  tha'nduga'laiyum  pa'n'ni,  avaiga'lai  ve'ngalaththagattaal  mooduvaayaaga.  (yaaththiraagamam  27:6)

பலிபீடத்தைச்  சுமக்கத்தக்கதாக  அந்தத்  தண்டுகள்  அதின்  இரண்டு  பக்கங்களிலும்  வளையங்களிலே  பாய்ச்சப்பட்டிருக்கவேண்டும்.  (யாத்திராகமம்  27:7)

balipeedaththaich  sumakkaththakkathaaga  anthath  tha'nduga'l  athin  ira'ndu  pakkangga'lilum  va'laiyangga'lilea  paaychchappattirukkavea'ndum.  (yaaththiraagamam  27:7)

அதை  உள்  வெளிவிட்டுப்  பலகைகளினாலே  பண்ணவேண்டும்;  மலையில்  உனக்குக்  காண்பிக்கப்பட்டபடியே  அதைப்  பண்ணக்கடவர்கள்.  (யாத்திராகமம்  27:8)

athai  u'l  ve'livittup  palagaiga'linaalea  pa'n'navea'ndum;  malaiyil  unakkuk  kaa'nbikkappattapadiyea  athaip  pa'n'nakkadavarga'l.  (yaaththiraagamam  27:8)

வாசஸ்தலத்துக்குப்  பிராகாரத்தையும்  உண்டுபண்ணுவாயாக;  தெற்கே  தென்திசைக்கு  எதிரான  பிராகாரத்துக்குத்  திரித்த  மெல்லிய  பஞ்சுநூலால்  செய்யப்பட்ட  நூறுமுழ  நீளமான  தொங்குதிரைகள்  இருக்கவேண்டும்.  (யாத்திராகமம்  27:9)

vaasasthalaththukkup  piraagaaraththaiyum  u'ndupa'n'nuvaayaaga;  the’rkea  thenthisaikku  ethiraana  piraagaaraththukkuth  thiriththa  melliya  pagnchunoolaal  seyyappatta  noo’rumuzha  nee'lamaana  thongguthiraiga'l  irukkavea'ndum.  (yaaththiraagamam  27:9)

அவைகளுக்கு  வெண்கலத்தினாலே  இருபது  தூண்களும்,  இருபது  பாதங்களும்  இருக்கவேண்டும்;  தூண்களின்  கொக்கிகளும்  அவைகளின்  பூண்களும்  வெள்ளியினால்  செய்யப்படவேண்டும்.  (யாத்திராகமம்  27:10)

avaiga'lukku  ve'ngalaththinaalea  irubathu  thoo'nga'lum,  irubathu  paathangga'lum  irukkavea'ndum;  thoo'nga'lin  kokkiga'lum  avaiga'lin  poo'nga'lum  ve'l'liyinaal  seyyappadavea'ndum.  (yaaththiraagamam  27:10)

அப்படியே  வடபக்கத்தின்  நீளத்திற்கும்  நூறுமுழ  நீளமான  தொங்குதிரைகள்  இருக்கவேண்டும்;  அவைகளுக்கு  இருபது  தூண்களும்,  அவைகளுக்கு  இருபது  பாதங்களும்  வெண்கலமாயிருக்கவேண்டும்;  தூண்களின்  கொக்கிகளும்  பூண்களும்  வெள்ளியினால்  செய்யப்படவேண்டும்.  (யாத்திராகமம்  27:11)

appadiyea  vadapakkaththin  nee'laththi’rkum  noo’rumuzha  nee'lamaana  thongguthiraiga'l  irukkavea'ndum;  avaiga'lukku  irubathu  thoo'nga'lum,  avaiga'lukku  irubathu  paathangga'lum  ve'ngalamaayirukkavea'ndum;  thoo'nga'lin  kokkiga'lum  poo'nga'lum  ve'l'liyinaal  seyyappadavea'ndum.  (yaaththiraagamam  27:11)

பிராகாரத்தின்  மேற்பக்கமான  அகலத்திற்கு  ஐம்பது  முழ  நீளமான  தொங்குதிரைகள்  இருக்கவேண்டும்;  அவைகளுக்குப்  பத்துத்  தூண்களும்,  அவைகளுக்குப்  பத்துப்  பாதங்களும்  இருக்கவேண்டும்.  (யாத்திராகமம்  27:12)

piraagaaraththin  mea’rpakkamaana  agalaththi’rku  aimbathu  muzha  nee'lamaana  thongguthiraiga'l  irukkavea'ndum;  avaiga'lukkup  paththuth  thoo'nga'lum,  avaiga'lukkup  paththup  paathangga'lum  irukkavea'ndum.  (yaaththiraagamam  27:12)

சூரியன்  உதிக்கிற  திசையாகிய  கீழ்ப்பக்கத்தின்  பிராகாரம்  ஐம்பதுமுழ  அகலமாயிருக்கவேண்டும்.  (யாத்திராகமம்  27:13)

sooriyan  uthikki’ra  thisaiyaagiya  keezhppakkaththin  piraagaaram  aimbathumuzha  agalamaayirukkavea'ndum.  (yaaththiraagamam  27:13)

அங்கே  ஒரு  புறத்திற்குப்  பதினைந்து  முழ  நீளமான  தொங்குதிரைகளும்,  அவைகளுக்கு  மூன்று  தூண்களும்,  அவைகளுக்கு  மூன்று  பாதங்களும்  இருக்கவேண்டும்.  (யாத்திராகமம்  27:14)

anggea  oru  pu’raththi’rkup  pathinainthu  muzha  nee'lamaana  thongguthiraiga'lum,  avaiga'lukku  moon’ru  thoo'nga'lum,  avaiga'lukku  moon’ru  paathangga'lum  irukkavea'ndum.  (yaaththiraagamam  27:14)

மறுபுறத்துக்குப்  பதினைந்து  முழ  நீளமான  தொங்குதிரைகளும்,  அவைகளுக்கு  மூன்று  தூண்களும்,  அவைகளுக்கு  மூன்று  பாதங்களும்  இருக்கவேண்டும்.  (யாத்திராகமம்  27:15)

ma’rupu’raththukkup  pathinainthu  muzha  nee'lamaana  thongguthiraiga'lum,  avaiga'lukku  moon’ru  thoo'nga'lum,  avaiga'lukku  moon’ru  paathangga'lum  irukkavea'ndum.  (yaaththiraagamam  27:15)

பிராகாரத்தின்  வாசலுக்கு  இளநீலநூலாலும்  இரத்தாம்பரநூலாலும்  சிவப்புநூலாலும்  திரித்த  மெல்லிய  பஞ்சுநூலாலும்  சித்திரத்  தையல்வேலையாய்ச்  செய்யப்பட்ட  இருபதுமுழ  நீளமான  ஒரு  தொங்குதிரையும்  அதற்கு  நாலு  தூண்களும்,  அவைகளுக்கு  நாலு  பாதங்களும்  இருக்கவேண்டும்.  (யாத்திராகமம்  27:16)

piraagaaraththin  vaasalukku  i'laneelanoolaalum  iraththaambaranoolaalum  sivappunoolaalum  thiriththa  melliya  pagnchunoolaalum  siththirath  thaiyalvealaiyaaych  seyyappatta  irubathumuzha  nee'lamaana  oru  thongguthiraiyum  atha’rku  naalu  thoo'nga'lum,  avaiga'lukku  naalu  paathangga'lum  irukkavea'ndum.  (yaaththiraagamam  27:16)

சுற்றுப்  பிராகாரத்தின்  தூண்களெல்லாம்  வெள்ளியினால்  பூண்  கட்டப்பட்டிருக்கவேண்டும்;  அவைகளின்  கொக்கிகள்  வெள்ளியினாலும்  அவைகளின்  பாதங்கள்  வெண்கலத்தினாலும்  செய்யப்பட்டிருக்கவேண்டும்.  (யாத்திராகமம்  27:17)

sut’rup  piraagaaraththin  thoo'nga'lellaam  ve'l'liyinaal  poo'n  kattappattirukkavea'ndum;  avaiga'lin  kokkiga'l  ve'l'liyinaalum  avaiga'lin  paathangga'l  ve'ngalaththinaalum  seyyappattirukkavea'ndum.  (yaaththiraagamam  27:17)

பிராகாரத்தின்  நீளம்  நூறுமுழமும்,  இருபுறத்து  அகலம்  ஐம்பது  ஐம்பது  முழமும்,  உயரம்  ஐந்து  முழமுமாயிருப்பதாக;  அதின்  தொங்கல்கள்  திரித்த  மெல்லிய  பஞ்சுநூலினால்  செய்யப்பட்டு,  அதின்  தூண்களின்  பாதங்கள்  வெண்கலமாயிருக்கவேண்டும்.  (யாத்திராகமம்  27:18)

piraagaaraththin  nee'lam  noo’rumuzhamum,  irupu’raththu  agalam  aimbathu  aimbathu  muzhamum,  uyaram  ainthu  muzhamumaayiruppathaaga;  athin  thonggalga'l  thiriththa  melliya  pagnchunoolinaal  seyyappattu,  athin  thoo'nga'lin  paathangga'l  ve'ngalamaayirukkavea'ndum.  (yaaththiraagamam  27:18)

வாசஸ்தலத்துக்கடுத்த  சகல  பணிவிடைக்குத்  தேவையான  எல்லாப்  பணிமுட்டுகளும்,  அதின்  எல்லா  முளைகளும்,  பிராகாரத்தின்  எல்லா  முளைகளும்  வெண்கலமாயிருக்கவேண்டும்.  (யாத்திராகமம்  27:19)

vaasasthalaththukkaduththa  sagala  pa'nividaikkuth  theavaiyaana  ellaap  pa'nimuttuga'lum,  athin  ellaa  mu'laiga'lum,  piraagaaraththin  ellaa  mu'laiga'lum  ve'ngalamaayirukkavea'ndum.  (yaaththiraagamam  27:19)

குத்துவிளக்கு  எப்பொழுதும்  எரிந்துகொண்டிருக்கும்படி  இடித்துப்  பிழிந்த  தெளிவான  ஒலிவ  எண்ணெயை  உன்னிடத்தில்  கொண்டுவரும்படி  இஸ்ரவேல்  புத்திரருக்குக்  கட்டளையிடுவாயாக.  (யாத்திராகமம்  27:20)

kuththuvi'lakku  eppozhuthum  erinthuko'ndirukkumpadi  idiththup  pizhintha  the'livaana  oliva  e'n'neyai  unnidaththil  ko'nduvarumpadi  israveal  puththirarukkuk  katta'laiyiduvaayaaga.  (yaaththiraagamam  27:20)

ஆசரிப்புக்  கூடாரத்தில்  சாட்சி  சந்நிதிக்கு  முன்னிருக்கும்  திரைச்சீலைக்கு  வெளிப்புறமாக  ஆரோனும்  அவன்  குமாரரும்  சாயங்காலம்  தொடங்கி  விடியற்காலம்மட்டும்  கர்த்தருடைய  சந்நிதானத்தில்  அந்த  விளக்கை  எரியவைக்கக்கடவர்கள்;  இது  இஸ்ரவேல்  புத்திரருக்கு  தலைமுறை  தலைமுறையாக  நித்திய  கட்டளையாயிருக்கக்கடவது.  (யாத்திராகமம்  27:21)

aasarippuk  koodaaraththil  saadchi  sannithikku  munnirukkum  thiraichseelaikku  ve'lippu’ramaaga  aaroanum  avan  kumaararum  saayanggaalam  thodanggi  vidiya’rkaalammattum  karththarudaiya  sannithaanaththil  antha  vi'lakkai  eriyavaikkakkadavarga'l;  ithu  israveal  puththirarukku  thalaimu’rai  thalaimu’raiyaaga  niththiya  katta'laiyaayirukkakkadavathu.  (yaaththiraagamam  27:21)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!