Tuesday, July 19, 2016

Yaaththiraagamam 24 | யாத்திராகமம் 24 | Exodus 24

பின்பு  அவர்  மோசேயை  நோக்கி:  நீயும்  ஆரோனும்  நாதாபும்  அபியூவும்  இஸ்ரவேலின்  மூப்பரில்  எழுபதுபேரும்  கர்த்தரிடத்தில்  ஏறிவந்து,  தூரத்திலிருந்து  பணிந்துகொள்ளுங்கள்.  (யாத்திராகமம்  24:1)

pinbu  avar  moaseayai  noakki:  neeyum  aaroanum  naathaabum  abiyoovum  isravealin  moopparil  ezhubathupearum  karththaridaththil  ea’rivanthu,  thooraththilirunthu  pa'ninthuko'l'lungga'l.  (yaaththiraagamam  24:1)

மோசே  மாத்திரம்  கர்த்தரிடத்தில்  சமீபித்து  வரலாம்;  அவர்கள்  சமீபித்து  வரலாகாது;  ஜனங்கள்  அவனோடேகூட  ஏறிவரவேண்டாம்  என்றார்.  (யாத்திராகமம்  24:2)

moasea  maaththiram  karththaridaththil  sameebiththu  varalaam;  avarga'l  sameebiththu  varalaagaathu;  janangga'l  avanoadeakooda  ea’rivaravea'ndaam  en’raar.  (yaaththiraagamam  24:2)

மோசே  வந்து,  கர்த்தருடைய  வார்த்தைகள்  யாவையும்  நியாயங்கள்  யாவையும்  ஜனங்களுக்கு  அறிவித்தான்;  அப்பொழுது  ஜனங்கள்  எல்லாரும்  ஏகசத்தமாய்:  கர்த்தர்  அருளின  எல்லா  வார்த்தைகளின்படியும்  செய்வோம்  என்று  பிரதியுத்தரம்  சொன்னார்கள்.  (யாத்திராகமம்  24:3)

moasea  vanthu,  karththarudaiya  vaarththaiga'l  yaavaiyum  niyaayangga'l  yaavaiyum  janangga'lukku  a’riviththaan;  appozhuthu  janangga'l  ellaarum  eagasaththamaay:  karththar  aru'lina  ellaa  vaarththaiga'linpadiyum  seyvoam  en’ru  pirathiyuththaram  sonnaarga'l.  (yaaththiraagamam  24:3)

மோசே  கர்த்தருடைய  வார்த்தைகளையெல்லாம்  எழுதிவைத்து,  அதிகாலமே  எழுந்து,  மலையின்  அடியில்  ஒரு  பலிபீடத்தைக்  கட்டி,  இஸ்ரவேலுடைய  பன்னிரண்டு  கோத்திரங்களுடைய  இலக்கத்தின்படியே  பன்னிரண்டு  தூண்களை  நிறுத்தினான்.  (யாத்திராகமம்  24:4)

moasea  karththarudaiya  vaarththaiga'laiyellaam  ezhuthivaiththu,  athikaalamea  ezhunthu,  malaiyin  adiyil  oru  balipeedaththaik  katti,  isravealudaiya  pannira'ndu  koaththirangga'ludaiya  ilakkaththinpadiyea  pannira'ndu  thoo'nga'lai  ni’ruththinaan.  (yaaththiraagamam  24:4)

இஸ்ரவேல்  புத்திரரின்  வாலிபரை  அனுப்பினான்;  அவர்கள்  சர்வாங்க  தகனபலிகளைச்  செலுத்தி,  கர்த்தருக்குச்  சமாதானபலிகளாகக்  காளைகளைப்  பலியிட்டார்கள்.  (யாத்திராகமம்  24:5)

israveal  puththirarin  vaalibarai  anuppinaan;  avarga'l  sarvaangga  thaganabaliga'laich  seluththi,  karththarukkuch  samaathaanabaliga'laagak  kaa'laiga'laip  baliyittaarga'l.  (yaaththiraagamam  24:5)

அப்பொழுது  மோசே  அந்த  இரத்தத்தில்  பாதி  எடுத்து,  பாத்திரங்களில்  வார்த்து,  பாதி  இரத்தத்தைப்  பலிபீடத்தின்மேல்  தெளித்து,  (யாத்திராகமம்  24:6)

appozhuthu  moasea  antha  iraththaththil  paathi  eduththu,  paaththirangga'lil  vaarththu,  paathi  iraththaththaip  balipeedaththinmeal  the'liththu,  (yaaththiraagamam  24:6)

உடன்படிக்கையின்  புஸ்தகத்தை  எடுத்து,  ஜனங்களின்  காது  கேட்க  வாசித்தான்;  அவர்கள்  கர்த்தர்  சொன்னபடியெல்லாம்  செய்து,  கீழ்ப்படிந்து  நடப்போம்  என்றார்கள்.  (யாத்திராகமம்  24:7)

udanpadikkaiyin  pusthagaththai  eduththu,  janangga'lin  kaathu  keadka  vaasiththaan;  avarga'l  karththar  sonnapadiyellaam  seythu,  keezhppadinthu  nadappoam  en’raarga'l.  (yaaththiraagamam  24:7)

அப்பொழுது  மோசே  இரத்தத்தை  எடுத்து,  ஜனங்களின்மேல்  தெளித்து,  இந்த  வார்த்தைகள்  யாவையுங்குறித்து  கர்த்தர்  உங்களோடே  பண்ணின  உடன்படிக்கையின்  இரத்தம்  இதுவே  என்றான்.  (யாத்திராகமம்  24:8)

appozhuthu  moasea  iraththaththai  eduththu,  janangga'linmeal  the'liththu,  intha  vaarththaiga'l  yaavaiyungku’riththu  karththar  ungga'loadea  pa'n'nina  udanpadikkaiyin  iraththam  ithuvea  en’raan.  (yaaththiraagamam  24:8)

பின்பு  மோசேயும்  ஆரோனும்  நாதாபும்  அபியூவும்,  இஸ்ரவேலருடைய  மூப்பரில்  எழுபதுபேரும்  ஏறிப்போய்,  (யாத்திராகமம்  24:9)

pinbu  moaseayum  aaroanum  naathaabum  abiyoovum,  isravealarudaiya  moopparil  ezhubathupearum  ea’rippoay,  (yaaththiraagamam  24:9)

இஸ்ரவேலின்  தேவனைத்  தரிசித்தார்கள்.  அவருடைய  பாதத்தின்கீழே  நீலக்கல்லிழைத்த  வேலைக்கு  ஒப்பாகவும்  தெளிந்த  வானத்தின்  பிரபைக்கு  ஒப்பாகவும்  இருந்தது.  (யாத்திராகமம்  24:10)

isravealin  theavanaith  tharisiththaarga'l.  avarudaiya  paathaththinkeezhea  neelakkallizhaiththa  vealaikku  oppaagavum  the'lintha  vaanaththin  pirabaikku  oppaagavum  irunthathu.  (yaaththiraagamam  24:10)

அவர்  இஸ்ரவேல்  புத்திரருடைய  அதிபதிகள்மேல்  தம்முடைய  கையை  நீட்டவில்லை;  அவர்கள்  தேவனைத்  தரிசித்து,  பின்பு  புசித்துக்  குடித்தார்கள்.  (யாத்திராகமம்  24:11)

avar  israveal  puththirarudaiya  athibathiga'lmeal  thammudaiya  kaiyai  neettavillai;  avarga'l  theavanaith  tharisiththu,  pinbu  pusiththuk  kudiththaarga'l.  (yaaththiraagamam  24:11)

அப்பொழுது  கர்த்தர்  மோசேயை  நோக்கி:  நீ  மலையின்மேல்  என்னிடத்திற்கு  ஏறிவந்து,  அங்கே  இரு;  நான்  உனக்குக்  கற்பலகைகளையும்,  நீ  அவர்களுக்கு  உபதேசிப்பதற்கு,  நான்  எழுதின  நியாயப்பிரமாணத்தையும்  கற்பனைகளையும்  கொடுப்பேன்  என்றார்.  (யாத்திராகமம்  24:12)

appozhuthu  karththar  moaseayai  noakki:  nee  malaiyinmeal  ennidaththi’rku  ea’rivanthu,  anggea  iru;  naan  unakkuk  ka’rpalagaiga'laiyum,  nee  avarga'lukku  ubatheasippatha’rku,  naan  ezhuthina  niyaayappiramaa'naththaiyum  ka’rpanaiga'laiyum  koduppean  en’raar.  (yaaththiraagamam  24:12)

அப்பொழுது  மோசே  தன்  ஊழியக்காரனாகிய  யோசுவாவோடே  எழுந்து  போனான்.  மோசே  தேவ  பர்வதத்தில்  ஏறிப்போகையில்,  (யாத்திராகமம்  24:13)

appozhuthu  moasea  than  oozhiyakkaaranaagiya  yoasuvaavoadea  ezhunthu  poanaan.  moasea  theava  parvathaththil  ea’rippoagaiyil,  (yaaththiraagamam  24:13)

அவன்  மூப்பரை  நோக்கி:  நாங்கள்  உங்களிடத்தில்  திரும்பிவருமட்டும்,  நீங்கள்  இங்கே  எங்களுக்காகக்  காத்திருங்கள்;  ஆரோனும்  ஊரும்  உங்களிடத்தில்  இருக்கிறார்கள்;  ஒருவனுக்கு  யாதொரு  காரியம்  உண்டானால்,  அவன்  அவர்களிடத்தில்  போகலாம்  என்றான்.  (யாத்திராகமம்  24:14)

avan  moopparai  noakki:  naangga'l  ungga'lidaththil  thirumbivarumattum,  neengga'l  inggea  engga'lukkaagak  kaaththirungga'l;  aaroanum  oorum  ungga'lidaththil  irukki’raarga'l;  oruvanukku  yaathoru  kaariyam  u'ndaanaal,  avan  avarga'lidaththil  poagalaam  en’raan.  (yaaththiraagamam  24:14)

மோசே  மலையின்மேல்  ஏறினபோது,  ஒரு  மேகம்  மலையை  மூடிற்று.  (யாத்திராகமம்  24:15)

moasea  malaiyinmeal  ea’rinapoathu,  oru  meagam  malaiyai  moodit’ru.  (yaaththiraagamam  24:15)

கர்த்தருடைய  மகிமை  சீனாய்மலையின்மேல்  தங்கியிருந்தது;  மேகம்  ஆறுநாள்  அதை  மூடியிருந்தது;  ஏழாம்  நாளில்  அவர்  மேகத்தின்  நடுவிலிருந்து  மோசேயைக்  கூப்பிட்டார்.  (யாத்திராகமம்  24:16)

karththarudaiya  magimai  seenaaymalaiyinmeal  thanggiyirunthathu;  meagam  aa’runaa'l  athai  moodiyirunthathu;  eazhaam  naa'lil  avar  meagaththin  naduvilirunthu  moaseayaik  kooppittaar.  (yaaththiraagamam  24:16)

மலையின்  கொடுமுடியிலே  கர்த்தருடைய  மகிமையின்  காட்சி  இஸ்ரவேல்  புத்திரருடைய  கண்களுக்குப்  பட்சிக்கிற  அக்கினியைப்போல்  இருந்தது.  (யாத்திராகமம்  24:17)

malaiyin  kodumudiyilea  karththarudaiya  magimaiyin  kaadchi  israveal  puththirarudaiya  ka'nga'lukkup  padchikki’ra  akkiniyaippoal  irunthathu.  (yaaththiraagamam  24:17)

மோசே  மேகத்தின்  நடுவிலே  பிரவேசித்து,  மலையின்மேல்  ஏறி,  இரவும்  பகலும்  நாற்பதுநாள்  மலையில்  இருந்தான்.  (யாத்திராகமம்  24:18)

moasea  meagaththin  naduvilea  piraveasiththu,  malaiyinmeal  ea’ri,  iravum  pagalum  naa’rpathunaa'l  malaiyil  irunthaan.  (yaaththiraagamam  24:18)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!