Tuesday, July 19, 2016

Yaaththiraagamam 22 | யாத்திராகமம் 22 | Exodus 22

ஒருவன்  ஒரு  மாட்டையாவது  ஒரு  ஆட்டையாவது  திருடி,  அதைக்  கொன்றால்,  அல்லது  அதை  விற்றால்,  அவன்  அந்த  மாட்டுக்கு  ஐந்து  மாடுகளையும்,  அந்த  ஆட்டுக்கு  நாலு  ஆடுகளையும்  பதிலாகக்  கொடுக்கக்கடவன்.  (யாத்திராகமம்  22:1)

oruvan  oru  maattaiyaavathu  oru  aattaiyaavathu  thirudi,  athaik  kon’raal,  allathu  athai  vit’raal,  avan  antha  maattukku  ainthu  maaduga'laiyum,  antha  aattukku  naalu  aaduga'laiyum  bathilaagak  kodukkakkadavan.  (yaaththiraagamam  22:1)

திருடன்  கன்னமிடுகையில்  கண்டுபிடிக்கப்பட்டு,  அடிக்கப்பட்டுச்  செத்தால்,  அவன்  நிமித்தம்  இரத்தப்பழி  சுமராது.  (யாத்திராகமம்  22:2)

thirudan  kannamidugaiyil  ka'ndupidikkappattu,  adikkappattuch  seththaal,  avan  nimiththam  iraththappazhi  sumaraathu.  (yaaththiraagamam  22:2)

சூரியன்  அவன்மேல்  உதித்திருந்ததானால்,  அவன்  நிமித்தம்  இரத்தப்பழி  சுமரும்;  திருடன்  பதில்  கொடுத்துத்  தீர்க்கவேண்டும்;  அவன்  கையில்  ஒன்றும்  இல்லாதிருந்தால்,  தான்  செய்த  களவுக்காக  விலைப்படக்கடவன்.  (யாத்திராகமம்  22:3)

sooriyan  avanmeal  uthiththirunthathaanaal,  avan  nimiththam  iraththappazhi  sumarum;  thirudan  bathil  koduththuth  theerkkavea'ndum;  avan  kaiyil  on’rum  illaathirunthaal,  thaan  seytha  ka'lavukkaaga  vilaippadakkadavan.  (yaaththiraagamam  22:3)

அவன்  திருடின  மாடாவது  கழுதையாவது  ஆடாவது  உயிருடனே  அவன்  கையில்  கண்டுபிடிக்கப்பட்டால்,  இரட்டிப்பாய்  அவன்  கொடுக்கவேண்டும்.  (யாத்திராகமம்  22:4)

avan  thirudina  maadaavathu  kazhuthaiyaavathu  aadaavathu  uyirudanea  avan  kaiyil  ka'ndupidikkappattaal,  irattippaay  avan  kodukkavea'ndum.  (yaaththiraagamam  22:4)

ஒருவன்  பிறனுடைய  வயலிலாவது  திராட்சத்தோட்டத்திலாவது  தன்  மிருகஜீவனை  மேயவிட்டால்,  அவன்  தன்  சுயவயலிலும்  திராட்சத்தோட்டத்திலுமுள்ள  பலனில்  உத்தமமானதை  எடுத்து,  பதில்  செலுத்தக்கடவன்.  (யாத்திராகமம்  22:5)

oruvan  pi’ranudaiya  vayalilaavathu  thiraadchaththoattaththilaavathu  than  mirugajeevanai  meayavittaal,  avan  than  suyavayalilum  thiraadchaththoattaththilumu'l'la  palanil  uththamamaanathai  eduththu,  bathil  seluththakkadavan.  (yaaththiraagamam  22:5)

அக்கினி  எழும்பி,  முட்களில்  பற்றி,  தானியப்போரையாவது,  விளைந்த  பயிரையாவது,  வயலிலுள்ள  வேறே  எதையாவது  எரித்துப்போட்டதேயானால்,  அக்கினியைக்  கொளுத்தினவன்  அக்கினிச்  சேதத்திற்கு  உத்தரவாதம்  பண்ணவேண்டும்.  (யாத்திராகமம்  22:6)

akkini  ezhumbi,  mudka'lil  pat’ri,  thaaniyappoaraiyaavathu,  vi'laintha  payiraiyaavathu,  vayalilu'l'la  vea’rea  ethaiyaavathu  eriththuppoattatheayaanaal,  akkiniyaik  ko'luththinavan  akkinich  seathaththi’rku  uththaravaatham  pa'n'navea'ndum.  (yaaththiraagamam  22:6)

ஒருவன்  பிறனுடைய  வசத்தில்  திரவியத்தையாவது,  உடைமைகளையாவது  அடைக்கலமாக  வைத்திருக்கும்போது,  அது  அவன்  வீட்டிலிருந்து  திருடப்பட்டுப்போனால்,  திருடன்  அகப்பட்டானாகில்,  அவன்  அதற்கு  இரட்டிப்பாகக்  கொடுக்கவேண்டும்.  (யாத்திராகமம்  22:7)

oruvan  pi’ranudaiya  vasaththil  thiraviyaththaiyaavathu,  udaimaiga'laiyaavathu  adaikkalamaaga  vaiththirukkumpoathu,  athu  avan  veettilirunthu  thirudappattuppoanaal,  thirudan  agappattaanaagil,  avan  atha’rku  irattippaagak  kodukkavea'ndum.  (yaaththiraagamam  22:7)

திருடன்  அகப்படாதேபோனால்,  அந்த  வீட்டுக்காரன்  தானே  பிறனுடைய  பொருளை  அபகரித்தானோ  இல்லையோ  என்று  அறியும்படி  நியாயாதிபதிகளிடத்தில்  அவனைக்  கொண்டுபோகவேண்டும்.  (யாத்திராகமம்  22:8)

thirudan  agappadaatheapoanaal,  antha  veettukkaaran  thaanea  pi’ranudaiya  poru'lai  abagariththaanoa  illaiyoa  en’ru  a’riyumpadi  niyaayaathibathiga'lidaththil  avanaik  ko'ndupoagavea'ndum.  (yaaththiraagamam  22:8)

காணாமற்போன  மாடு,  கழுதை,  ஆடு,  வஸ்திரம்  முதலியவைகளில்  யாதொன்றைப்  பிறனொருவன்  தன்னுடையது  என்று  சொல்லிக்  குற்றஞ்சாற்றினால்,  இருதிறத்தாருடைய  வழக்கும்  நியாயாதிபதிகளிடத்தில்  வரக்கடவது;  நியாயாதிபதிகள்  எவனைக்  குற்றவாளி  என்று  தீர்க்கிறார்களோ,  அவன்  மற்றவனுக்கு  இரட்டிப்பாகக்  கொடுக்கக்கடவன்.  (யாத்திராகமம்  22:9)

kaa'naama’rpoana  maadu,  kazhuthai,  aadu,  vasthiram  muthaliyavaiga'lil  yaathon’raip  pi’ranoruvan  thannudaiyathu  en’ru  sollik  kut’ragnsaat’rinaal,  iruthi’raththaarudaiya  vazhakkum  niyaayaathibathiga'lidaththil  varakkadavathu;  niyaayaathibathiga'l  evanaik  kut’ravaa'li  en’ru  theerkki’raarga'loa,  avan  mat’ravanukku  irattippaagak  kodukkakkadavan.  (yaaththiraagamam  22:9)

ஒருவன்  தன்  கழுதையையாவது  மாட்டையாவது  ஆட்டையாவது  மற்ற  யாதொரு  மிருகஜீவனையாவது  பிறன்  வசத்தில்  விட்டிருக்கும்போது,  அது  செத்தாலும்,  சேதப்பட்டுப்போனாலும்,  ஒருவரும்  காணாதபடி  ஓட்டிக்கொண்டு  போகப்பட்டாலும்,  (யாத்திராகமம்  22:10)

oruvan  than  kazhuthaiyaiyaavathu  maattaiyaavathu  aattaiyaavathu  mat’ra  yaathoru  mirugajeevanaiyaavathu  pi’ran  vasaththil  vittirukkumpoathu,  athu  seththaalum,  seathappattuppoanaalum,  oruvarum  kaa'naathapadi  oattikko'ndu  poagappattaalum,  (yaaththiraagamam  22:10)

அவன்  தான்  பிறனுடைய  பொருளை  அபகரிக்கவில்லையென்று  கர்த்தர்  பேரில்  இடும்  ஆணை  அவர்கள்  இருவருக்கும்  நடுத்தீர்க்கக்கடவது;  உடையவன்  அதை  அங்கிகரிக்கவேண்டும்;  மற்றவன்  பதிலளிக்கவேண்டுவதில்லை.  (யாத்திராகமம்  22:11)

avan  thaan  pi’ranudaiya  poru'lai  abagarikkavillaiyen’ru  karththar  pearil  idum  aa'nai  avarga'l  iruvarukkum  naduththeerkkakkadavathu;  udaiyavan  athai  anggigarikkavea'ndum;  mat’ravan  bathila'likkavea'nduvathillai.  (yaaththiraagamam  22:11)

அது  அவன்  வசத்திலிருந்து  திருடப்பட்டுப்போயிற்றானால்,  அவன்  அதின்  எஜமானுக்கு  அதற்காக  உத்தரவாதம்  பண்ணக்கடவன்.  (யாத்திராகமம்  22:12)

athu  avan  vasaththilirunthu  thirudappattuppoayit’raanaal,  avan  athin  ejamaanukku  atha’rkaaga  uththaravaatham  pa'n'nakkadavan.  (yaaththiraagamam  22:12)

அது  பீறுண்டுபோயிற்றானால்,  அதற்குச்  சாட்சியை  ஒப்புவிக்கவேண்டும்.  பீறுண்டதற்காக  அவன்  உத்தரவாதம்  பண்ணவேண்டுவதில்லை.  (யாத்திராகமம்  22:13)

athu  pee’ru'ndupoayit’raanaal,  atha’rkuch  saadchiyai  oppuvikkavea'ndum.  pee’ru'ndatha’rkaaga  avan  uththaravaatham  pa'n'navea'nduvathillai.  (yaaththiraagamam  22:13)

ஒருவன்  பிறனிடத்தில்  எதையாகிலும்  இரவலாக  வாங்கினதுண்டானால்,  அதற்கு  உடையவன்  கூட  இராதபோது,  அது  சேதப்பட்டாலும்,  செத்துப்போனாலும்,  அவன்  அதற்கு  உத்தரவாதம்பண்ணவேண்டும்.  (யாத்திராகமம்  22:14)

oruvan  pi’ranidaththil  ethaiyaagilum  iravalaaga  vaangginathu'ndaanaal,  atha’rku  udaiyavan  kooda  iraathapoathu,  athu  seathappattaalum,  seththuppoanaalum,  avan  atha’rku  uththaravaathampa'n'navea'ndum.  (yaaththiraagamam  22:14)

அதற்கு  உடையவன்  கூட  இருந்தானாகில்,  அவன்  உத்தரவாதம்  பண்ணவேண்டுவதில்லை;  அது  வாடகைக்கு  வாங்கப்பட்டிருந்தால்,  அது  அவன்  வாடகைக்கு  வந்த  சேதம்.  (யாத்திராகமம்  22:15)

atha’rku  udaiyavan  kooda  irunthaanaagil,  avan  uththaravaatham  pa'n'navea'nduvathillai;  athu  vaadagaikku  vaanggappattirunthaal,  athu  avan  vaadagaikku  vantha  seatham.  (yaaththiraagamam  22:15)

நியமிக்கப்படாத  ஒரு  கன்னிகையை  ஒருவன்  மோசம்போக்கி  அவளோடே  சயனித்தால்,  அவன்  அவளுக்காகப்  பரிசம்கொடுத்து,  அவளை  விவாகம்பண்ணக்கடவன்.  (யாத்திராகமம்  22:16)

niyamikkappadaatha  oru  kannigaiyai  oruvan  moasampoakki  ava'loadea  sayaniththaal,  avan  ava'lukkaagap  parisamkoduththu,  ava'lai  vivaagampa'n'nakkadavan.  (yaaththiraagamam  22:16)

அவள்  தகப்பன்  அவளை  அவனுக்குக்  கொடுக்கமாட்டேன்  என்றானாகில்,  கன்னிகைகளுக்காகக்  கொடுக்கப்படும்  பரிச  முறைமையின்படி  அவன்  பணத்தை  நிறுத்துக்  கொடுக்கவேண்டும்.  (யாத்திராகமம்  22:17)

ava'l  thagappan  ava'lai  avanukkuk  kodukkamaattean  en’raanaagil,  kannigaiga'lukkaagak  kodukkappadum  parisa  mu’raimaiyinpadi  avan  pa'naththai  ni’ruththuk  kodukkavea'ndum.  (yaaththiraagamam  22:17)

சூனியக்காரியை  உயிரோடே  வைக்கவேண்டாம்.  (யாத்திராகமம்  22:18)

sooniyakkaariyai  uyiroadea  vaikkavea'ndaam.  (yaaththiraagamam  22:18)

மிருகத்தோடே  புணருகிறவன்  எவனும்  கொல்லப்படவேண்டும்.  (யாத்திராகமம்  22:19)

mirugaththoadea  pu'narugi’ravan  evanum  kollappadavea'ndum.  (yaaththiraagamam  22:19)

கர்த்தர்  ஒருவருக்கே  ஒழிய  வேறே  தேவர்களுக்குப்  பலியிடுகிறவன்  சங்கரிக்கப்படக்கடவன்.  (யாத்திராகமம்  22:20)

karththar  oruvarukkea  ozhiya  vea’rea  theavarga'lukkup  baliyidugi’ravan  sanggarikkappadakkadavan.  (yaaththiraagamam  22:20)

அந்நியனைச்  சிறுமைப்படுத்தாமலும்  ஒடுக்காமலும்  இருப்பீர்களாக;  நீங்களும்  எகிப்து  தேசத்தில்  அந்நியர்களாயிருந்தீர்களே.  (யாத்திராகமம்  22:21)

anniyanaich  si’rumaippaduththaamalum  odukkaamalum  iruppeerga'laaga;  neengga'lum  egipthu  theasaththil  anniyarga'laayiruntheerga'lea.  (yaaththiraagamam  22:21)

விதவையையும்  திக்கற்ற  பிள்ளையையும்  ஒடுக்காமல்  இருப்பீர்களாக;  (யாத்திராகமம்  22:22)

vithavaiyaiyum  thikkat’ra  pi'l'laiyaiyum  odukkaamal  iruppeerga'laaga;  (yaaththiraagamam  22:22)

அவர்களை  எவ்வளவாகிலும்  ஒடுக்கும்போது,  அவர்கள்  என்னை  நோக்கி  முறையிட்டால்,  அவர்கள்  முறையிடுதலை  நான்  நிச்சயமாய்க்  கேட்டு,  (யாத்திராகமம்  22:23)

avarga'lai  evva'lavaagilum  odukkumpoathu,  avarga'l  ennai  noakki  mu’raiyittaal,  avarga'l  mu’raiyiduthalai  naan  nichchayamaayk  keattu,  (yaaththiraagamam  22:23)

கோபம்மூண்டவராகி,  உங்களைப்  பட்டயத்தினால்  கொலைசெய்வேன்;  உங்கள்  மனைவிகள்  விதவைகளும்,  உங்கள்  பிள்ளைகள்  திக்கற்ற  பிள்ளைகளுமாவார்கள்.  (யாத்திராகமம்  22:24)

koabammoo'ndavaraagi,  ungga'laip  pattayaththinaal  kolaiseyvean;  ungga'l  manaiviga'l  vithavaiga'lum,  ungga'l  pi'l'laiga'l  thikkat’ra  pi'l'laiga'lumaavaarga'l.  (yaaththiraagamam  22:24)

உங்களுக்குள்  சிறுமைப்பட்டிருக்கிற  என்  ஜனங்களில்  ஒருவனுக்கு  நீங்கள்  பணம்  கடனாகக்  கொடுத்திருந்தால்,  வட்டிவாங்குகிறவர்கள்போல  அவனிடத்தில்  வட்டி  வாங்கவேண்டாம்.  (யாத்திராகமம்  22:25)

ungga'lukku'l  si’rumaippattirukki’ra  en  janangga'lil  oruvanukku  neengga'l  pa'nam  kadanaagak  koduththirunthaal,  vattivaanggugi’ravarga'lpoala  avanidaththil  vatti  vaanggavea'ndaam.  (yaaththiraagamam  22:25)

பிறனுடைய  வஸ்திரத்தை  ஈடாக  வாங்கினால்,  பொழுதுபோகுமுன்னமே  அதை  அவனுக்குத்  திரும்பக்  கொடுத்து  விடுவாயாக.  (யாத்திராகமம்  22:26)

pi’ranudaiya  vasthiraththai  eedaaga  vaangginaal,  pozhuthupoagumunnamea  athai  avanukkuth  thirumbak  koduththu  viduvaayaaga.  (yaaththiraagamam  22:26)

அவன்  போர்வை  அதுதானே,  அதுவே  அவன்  தன்  உடம்பை  மூடிக்கொள்ளுகிற  வஸ்திரம்;  வேறு  எதினாலே  போர்த்துப்  படுத்துக்கொள்ளுவான்?  அவன்  என்னை  நோக்கி  முறையிடும்போது,  நான்  அவனுக்குச்  செவிகொடுப்பேன்,  நான்  இரக்கமுள்ளவராயிருக்கிறேன்.  (யாத்திராகமம்  22:27)

avan  poarvai  athuthaanea,  athuvea  avan  than  udambai  moodikko'l'lugi’ra  vasthiram;  vea’ru  ethinaalea  poarththup  paduththukko'l'luvaan?  avan  ennai  noakki  mu’raiyidumpoathu,  naan  avanukkuch  sevikoduppean,  naan  irakkamu'l'lavaraayirukki’rean.  (yaaththiraagamam  22:27)

நியாயாதிபதிகளைத்  தூஷியாமலும்,  உன்  ஜனத்தின்  அதிபதியைச்  சபியாமலும்  இருப்பாயாக.  (யாத்திராகமம்  22:28)

niyaayaathibathiga'laith  thooshiyaamalum,  un  janaththin  athibathiyaich  sabiyaamalum  iruppaayaaga.  (yaaththiraagamam  22:28)

முதல்  முதல்  பழுக்கும்  உன்  பழத்தையும்,  வடியும்  உன்  இரசத்தையும்  காணிக்கையாகச்  செலுத்தத்  தாமதிக்கவேண்டாம்.  உன்  குமாரரில்  முதற்பேறானவனை  எனக்குக்  கொடுப்பாயாக.  (யாத்திராகமம்  22:29)

muthal  muthal  pazhukkum  un  pazhaththaiyum,  vadiyum  un  irasaththaiyum  kaa'nikkaiyaagach  seluththath  thaamathikkavea'ndaam.  un  kumaararil  mutha’rpea’raanavanai  enakkuk  koduppaayaaga.  (yaaththiraagamam  22:29)

உன்  மாடுகளிலும்  உன்  ஆடுகளிலும்  அப்படியே  செய்வாயாக;  குட்டியானது  ஏழுநாள்  தன்  தாயோடே  இருக்கட்டும்;  எட்டாம்  நாளிலே  அதை  எனக்குச்  செலுத்துவாயாக.  (யாத்திராகமம்  22:30)

un  maaduga'lilum  un  aaduga'lilum  appadiyea  seyvaayaaga;  kuttiyaanathu  eazhunaa'l  than  thaayoadea  irukkattum;  ettaam  naa'lilea  athai  enakkuch  seluththuvaayaaga.  (yaaththiraagamam  22:30)

நீங்கள்  எனக்குப்  பரிசுத்த  மனுஷராயிருக்கக்கடவீர்கள்;  வெளியிலே  பீறுண்ட  மாம்சத்தைப்  புசியாமல்,  அதை  நாய்களுக்குப்  போட்டுவிடுங்கள்.  (யாத்திராகமம்  22:31)

neengga'l  enakkup  parisuththa  manusharaayirukkakkadaveerga'l;  ve'liyilea  pee’ru'nda  maamsaththaip  pusiyaamal,  athai  naayga'lukkup  poattuvidungga'l.  (yaaththiraagamam  22:31)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!