Tuesday, July 19, 2016

Yaaththiraagamam 21 | யாத்திராகமம் 21 | Exodus 21


மேலும்,  நீ  அவர்களுக்கு  அறிவிக்கவேண்டிய  பிரமாணங்களாவன:  (யாத்திராகமம்  21:1)

mealum,  nee  avarga'lukku  a’rivikkavea'ndiya  piramaa'nangga'laavana:  (yaaththiraagamam  21:1)

எபிரெயரில்  ஒரு  அடிமையைக்  கொண்டாயானால்,  அவன்  ஆறுவருஷம்  சேவித்து,  ஏழாம்  வருஷத்திலே  ஒன்றும்  கொடாமல்  விடுதலைபெற்றுப்  போகக்கடவன்.  (யாத்திராகமம்  21:2)

ebireyaril  oru  adimaiyaik  ko'ndaayaanaal,  avan  aa’ruvarusham  seaviththu,  eazhaam  varushaththilea  on’rum  kodaamal  viduthalaipet’rup  poagakkadavan.  (yaaththiraagamam  21:2)

ஒன்றிக்காரனாய்  வந்திருந்தானானால்,  ஒன்றிக்காரனாய்ப்  போகக்கடவன்;  விவாகம்பண்ணினவனாய்  வந்திருந்தானானால்,  அவன்  பெண்ஜாதி  அவனோடேகூடப்  போகக்கடவள்.  (யாத்திராகமம்  21:3)

on’rikkaaranaay  vanthirunthaanaanaal,  on’rikkaaranaayp  poagakkadavan;  vivaagampa'n'ninavanaay  vanthirunthaanaanaal,  avan  pe'njaathi  avanoadeakoodap  poagakkadava'l.  (yaaththiraagamam  21:3)

அவன்  எஜமான்  அவனுக்கு  ஒரு  பெண்ணை  விவாகஞ்செய்துகொடுத்தும்,  அவள்  அவனுக்கு  ஆண்பிள்ளைகளையாவது  பெண்பிள்ளைகளையாவது  பெற்றும்  இருந்தால்,  அந்தப்  பெண்ணும்  அவள்  பிள்ளைகளும்  அவள்  எஜமானைச்  சேரக்கடவர்கள்;  அவன்  மாத்திரம்  ஒன்றியாய்ப்  போகக்கடவன்.  (யாத்திராகமம்  21:4)

avan  ejamaan  avanukku  oru  pe'n'nai  vivaagagnseythukoduththum,  ava'l  avanukku  aa'npi'l'laiga'laiyaavathu  pe'npi'l'laiga'laiyaavathu  pet’rum  irunthaal,  anthap  pe'n'num  ava'l  pi'l'laiga'lum  ava'l  ejamaanaich  searakkadavarga'l;  avan  maaththiram  on’riyaayp  poagakkadavan.  (yaaththiraagamam  21:4)

அந்த  வேலைக்காரன்:  என்  எஜமானையும்  என்  பெண்ஜாதியையும்  என்  பிள்ளைகளையும்  நேசிக்கிறேன்;  நான்  விடுதலை  பெற்றுப்போக  மனதில்லை  என்று  மனப்பூர்வமாய்ச்  சொல்வானானால்,  (யாத்திராகமம்  21:5)

antha  vealaikkaaran:  en  ejamaanaiyum  en  pe'njaathiyaiyum  en  pi'l'laiga'laiyum  neasikki’rean;  naan  viduthalai  pet’ruppoaga  manathillai  en’ru  manappoorvamaaych  solvaanaanaal,  (yaaththiraagamam  21:5)

அவன்  எஜமான்  அவனை  நியாயாதிபதிகளிடத்தில்  அழைத்துக்கொண்டுபோய்,  அவனைக்  கதவின்  அருகேயாவது  கதவுநிலையின்  அருகேயாவது  சேரப்பண்ணி,  அங்கே  அவன்  எஜமான்  அவன்  காதைக்  கம்பியினாலே  குத்தக்கடவன்;  பின்பு  அவன்  என்றைக்கும்  அவனிடத்திலே  சேவித்துக்கொண்டிருக்கக்கடவன்.  (யாத்திராகமம்  21:6)

avan  ejamaan  avanai  niyaayaathibathiga'lidaththil  azhaiththukko'ndupoay,  avanaik  kathavin  arugeayaavathu  kathavunilaiyin  arugeayaavathu  searappa'n'ni,  anggea  avan  ejamaan  avan  kaathaik  kambiyinaalea  kuththakkadavan;  pinbu  avan  en’raikkum  avanidaththilea  seaviththukko'ndirukkakkadavan.  (yaaththiraagamam  21:6)

ஒருவன்  தன்  மகளை  வேலைக்காரியாக  விற்றுப்போட்டானானால்,  வேலைக்காரன்  விடுதலைபெற்றுப்  போவதுபோல  அவள்  போகக்கூடாது.  (யாத்திராகமம்  21:7)

oruvan  than  maga'lai  vealaikkaariyaaga  vit’ruppoattaanaanaal,  vealaikkaaran  viduthalaipet’rup  poavathupoala  ava'l  poagakkoodaathu.  (yaaththiraagamam  21:7)

அவளைத்  தனக்கு  நியமித்துக்  கொண்ட  எஜமானின்  பார்வைக்கு  அவள்  தகாதவளாய்ப்  போனால்,  அவள்  மீட்கப்படலாம்;  அவன்  அவளுக்குத்  துரோகம்பண்ணி,  அவளை  அந்நியர்  கையில்  விற்றுப்போட  அவனுக்கு  அதிகாரம்  இல்லை.  (யாத்திராகமம்  21:8)

ava'laith  thanakku  niyamiththuk  ko'nda  ejamaanin  paarvaikku  ava'l  thagaathava'laayp  poanaal,  ava'l  meedkappadalaam;  avan  ava'lukkuth  thuroagampa'n'ni,  ava'lai  anniyar  kaiyil  vit’ruppoada  avanukku  athigaaram  illai.  (yaaththiraagamam  21:8)

அவன்  தன்  குமாரனுக்கு  அவளை  நியமித்திருந்தானானால்,  தன்  குமாரத்திகளை  நடத்துவதுபோல  அவளையும்  நடத்தக்கடவன்.  (யாத்திராகமம்  21:9)

avan  than  kumaaranukku  ava'lai  niyamiththirunthaanaanaal,  than  kumaaraththiga'lai  nadaththuvathupoala  ava'laiyum  nadaththakkadavan.  (yaaththiraagamam  21:9)

அவன்  வேறொரு  பெண்ணைக்  கொண்டானாகில்,  இவளுக்குரிய  அன்னவஸ்திர  விவாகக்கடமை  ஆகிய  இவைகளில்  குறைவுசெய்யாமல்  இருப்பானாக.  (யாத்திராகமம்  21:10)

avan  vea’roru  pe'n'naik  ko'ndaanaagil,  iva'lukkuriya  annavasthira  vivaagakkadamai  aagiya  ivaiga'lil  ku’raivuseyyaamal  iruppaanaaga.  (yaaththiraagamam  21:10)

இம்மூன்றும்  அவன்  அவளுக்குச்  செய்யாமற்போனால்,  அவள்  பணங்கொடாமல்  விடுதலைபெற்றுப்போகக்கடவள்.  (யாத்திராகமம்  21:11)

immoon’rum  avan  ava'lukkuch  seyyaama’rpoanaal,  ava'l  pa'nangkodaamal  viduthalaipet’ruppoagakkadava'l.  (yaaththiraagamam  21:11)

ஒரு  மனிதனைச்  சாகும்படி  அடித்தவன்,  நிச்சயமாய்க்  கொலைசெய்யப்படக்கடவன்.  (யாத்திராகமம்  21:12)

oru  manithanaich  saagumpadi  adiththavan,  nichchayamaayk  kolaiseyyappadakkadavan.  (yaaththiraagamam  21:12)

ஒருவன்  பதிவிருந்து  கொல்லாமல்,  தேவச்செயலாய்த்  தன்  கைக்கு  நேரிட்டவனைக்  கொன்றால்,  அவன்  ஓடிப்போய்ச்  சேரவேண்டிய  ஸ்தலத்தை  உனக்கு  நியமிப்பேன்.  (யாத்திராகமம்  21:13)

oruvan  pathivirunthu  kollaamal,  theavachseyalaayth  than  kaikku  nearittavanaik  kon’raal,  avan  oadippoaych  searavea'ndiya  sthalaththai  unakku  niyamippean.  (yaaththiraagamam  21:13)

ஒருவன்  பிறனுக்கு  விரோதமாகச்  சதிமோசஞ்செய்து,  அவனைத்  துணிகரமாய்க்  கொன்றுபோட்டால்,  அவனை  என்  பலிபீடத்திலிருந்தும்  பிடித்துக்கொண்டுபோய்க்  கொலைசெய்யவேண்டும்.  (யாத்திராகமம்  21:14)

oruvan  pi’ranukku  viroathamaagach  sathimoasagnseythu,  avanaith  thu'nigaramaayk  kon’rupoattaal,  avanai  en  balipeedaththilirunthum  pidiththukko'ndupoayk  kolaiseyyavea'ndum.  (yaaththiraagamam  21:14)

தன்  தகப்பனையாவது  தன்  தாயையாவது  அடிக்கிறவன்  நிச்சயமாய்க்  கொலைசெய்யப்படக்கடவன்.  (யாத்திராகமம்  21:15)

than  thagappanaiyaavathu  than  thaayaiyaavathu  adikki’ravan  nichchayamaayk  kolaiseyyappadakkadavan.  (yaaththiraagamam  21:15)

ஒருவன்  ஒரு  மனிதனைத்  திருடி  விற்றுப்போட்டாலும்,  இவன்  அவன்  வசத்திலிருக்கக்  கண்டுபிடிக்கப்பட்டாலும்,  அவன்  நிச்சயமாய்க்  கொலைசெய்யப்படக்கடவன்.  (யாத்திராகமம்  21:16)

oruvan  oru  manithanaith  thirudi  vit’ruppoattaalum,  ivan  avan  vasaththilirukkak  ka'ndupidikkappattaalum,  avan  nichchayamaayk  kolaiseyyappadakkadavan.  (yaaththiraagamam  21:16)

தன்  தகப்பனையாவது  தன்  தாயையாவது  சபிக்கிறவன்  நிச்சயமாய்க்  கொலைசெய்யப்படக்கடவன்.  (யாத்திராகமம்  21:17)

than  thagappanaiyaavathu  than  thaayaiyaavathu  sabikki’ravan  nichchayamaayk  kolaiseyyappadakkadavan.  (yaaththiraagamam  21:17)

மனிதர்  சண்டைபண்ணி,  ஒருவன்  மற்றொருவனைக்  கல்லால்  எறிந்ததினாலாவது  கையால்  அடித்ததினாலாவது  அவன்  சாவாமல்  கட்டில்கிடையாய்க்  கிடந்து,  (யாத்திராகமம்  21:18)

manithar  sa'ndaipa'n'ni,  oruvan  mat’roruvanaik  kallaal  e’rinthathinaalaavathu  kaiyaal  adiththathinaalaavathu  avan  saavaamal  kattilkidaiyaayk  kidanthu,  (yaaththiraagamam  21:18)

திரும்ப  எழுந்திருந்து  வெளியிலே  தன்  ஊன்றுகோலைப்  பிடித்துக்கொண்டு  நடமாடினால்,  அடித்தவன்  ஆக்கினைக்கு  நீங்கலாயிருப்பான்;  ஆனாலும்,  அவனுக்கு  வேலை  மினக்கெட்ட  நஷ்டத்தைக்  கொடுத்து,  அவனை  நன்றாய்க்  குணமாக்குவிக்கக்கடவன்.  (யாத்திராகமம்  21:19)

thirumba  ezhunthirunthu  ve'liyilea  than  oon’rukoalaip  pidiththukko'ndu  nadamaadinaal,  adiththavan  aakkinaikku  neenggalaayiruppaan;  aanaalum,  avanukku  vealai  minakketta  nashdaththaik  koduththu,  avanai  nan’raayk  ku'namaakkuvikkakkadavan.  (yaaththiraagamam  21:19)

ஒருவன்  தனக்கு  அடிமையானவனையாவது  தனக்கு  அடிமையானவளையாவது,  கோலால்  அடித்ததினாலே,  அவன்  கையால்  இறந்துபோனால்,  பழிக்குப்பழி  வாங்கப்படவேண்டும்.  (யாத்திராகமம்  21:20)

oruvan  thanakku  adimaiyaanavanaiyaavathu  thanakku  adimaiyaanava'laiyaavathu,  koalaal  adiththathinaalea,  avan  kaiyaal  i’ranthupoanaal,  pazhikkuppazhi  vaanggappadavea'ndum.  (yaaththiraagamam  21:20)

ஒரு  நாளாவது  இரண்டு  நாளாவது  உயிரோடிருந்தால்,  அவர்கள்  அவனுடைய  உடைமையாகையால்,  பழிவாங்கவேண்டியதில்லை.  (யாத்திராகமம்  21:21)

oru  naa'laavathu  ira'ndu  naa'laavathu  uyiroadirunthaal,  avarga'l  avanudaiya  udaimaiyaagaiyaal,  pazhivaanggavea'ndiyathillai.  (yaaththiraagamam  21:21)

மனிதர்  சண்டைபண்ணி,  கர்ப்பவதியான  ஒரு  ஸ்திரீயை  அடித்ததினால்,  அவளுக்கு  வேறே  சேதமில்லாமல்  கர்ப்பம்  விழுந்துபோனால்,  அடிபட்ட  ஸ்திரீயின்  புருஷன்  அடித்தவன்மேல்  சுமத்துகிறதற்குத்தக்கதாயும்  நியாயாதிபதிகள்  செய்யும்  தீர்ப்பின்படியும்  தண்டம்  கொடுக்கவேண்டும்.  (யாத்திராகமம்  21:22)

manithar  sa'ndaipa'n'ni,  karppavathiyaana  oru  sthireeyai  adiththathinaal,  ava'lukku  vea’rea  seathamillaamal  karppam  vizhunthupoanaal,  adipatta  sthireeyin  purushan  adiththavanmeal  sumaththugi’ratha’rkuththakkathaayum  niyaayaathibathiga'l  seyyum  theerppinpadiyum  tha'ndam  kodukkavea'ndum.  (yaaththiraagamam  21:22)

வேறே  சேதமுண்டானால்,  ஜீவனுக்கு  ஜீவன்,  (யாத்திராகமம்  21:23)

vea’rea  seathamu'ndaanaal,  jeevanukku  jeevan,  (yaaththiraagamam  21:23)

கண்ணுக்குக்  கண்,  பல்லுக்குப்  பல்,  கைக்குக்  கை,  காலுக்குக்  கால்,  (யாத்திராகமம்  21:24)

ka'n'nukkuk  ka'n,  pallukkup  pal,  kaikkuk  kai,  kaalukkuk  kaal,  (yaaththiraagamam  21:24)

சூட்டுக்குச்  சூடு,  காயத்துக்குக்  காயம்,  தழும்புக்குத்  தழும்பு  பழி  கொடுக்கவேண்டும்.  (யாத்திராகமம்  21:25)

soottukkuch  soodu,  kaayaththukkuk  kaayam,  thazhumbukkuth  thazhumbu  pazhi  kodukkavea'ndum.  (yaaththiraagamam  21:25)

ஒருவன்  தன்  அடிமையானவன்  கண்ணையாகிலும்  தன்  அடிமைப்பெண்ணின்  கண்ணையாகிலும்  அடித்ததினால்  அதைக்  கெடுத்தால்,  அவன்  கண்ணுக்குப்  பதிலாக  அவனை  விடுதலைபண்ணிவிடவேண்டும்.  (யாத்திராகமம்  21:26)

oruvan  than  adimaiyaanavan  ka'n'naiyaagilum  than  adimaippe'n'nin  ka'n'naiyaagilum  adiththathinaal  athaik  keduththaal,  avan  ka'n'nukkup  bathilaaga  avanai  viduthalaipa'n'nividavea'ndum.  (yaaththiraagamam  21:26)

அவன்  தன்  அடிமையானவன்  பல்லையாவது  தன்  அடிமைப்பெண்ணின்  பல்லையாவது  உதிர  அடித்தால்,  அவன்  பல்லுக்குப்  பதிலாக  அவனை  விடுதலைபண்ணிவிடவேண்டும்.  (யாத்திராகமம்  21:27)

avan  than  adimaiyaanavan  pallaiyaavathu  than  adimaippe'n'nin  pallaiyaavathu  uthira  adiththaal,  avan  pallukkup  bathilaaga  avanai  viduthalaipa'n'nividavea'ndum.  (yaaththiraagamam  21:27)

ஒரு  மாடு  ஒரு  புருஷனையாவது  ஒரு  ஸ்திரீயையாவது  முட்டினதினால்  சாவுண்டானால்,  அந்த  மாடு  கல்லெறியப்படவேண்டும்,  அதின்  மாம்சம்  புசிக்கப்படலாகாது;  அப்பொழுது  மாட்டின்  எஜமான்  ஆக்கினைக்கு  நீங்கலாயிருப்பான்.  (யாத்திராகமம்  21:28)

oru  maadu  oru  purushanaiyaavathu  oru  sthireeyaiyaavathu  muttinathinaal  saavu'ndaanaal,  antha  maadu  kalle’riyappadavea'ndum,  athin  maamsam  pusikkappadalaagaathu;  appozhuthu  maattin  ejamaan  aakkinaikku  neenggalaayiruppaan.  (yaaththiraagamam  21:28)

தன்  மாடு  வழக்கமாய்  முட்டுகிற  மாடாயிருந்து,  அது  அதின்  எஜமானுக்கு  அறிவிக்கப்பட்டும்,  அவன்  அதைக்  கட்டி  வைக்காததினால்,  அது  ஒரு  புருஷனையாவது  ஒரு  ஸ்திரீயையாவது  கொன்றுபோட்டால்,  மாடும்  கல்லெறியப்படவேண்டும்,  அதின்  எஜமானும்  கொலைசெய்யப்படவேண்டும்.  (யாத்திராகமம்  21:29)

than  maadu  vazhakkamaay  muttugi’ra  maadaayirunthu,  athu  athin  ejamaanukku  a’rivikkappattum,  avan  athaik  katti  vaikkaathathinaal,  athu  oru  purushanaiyaavathu  oru  sthireeyaiyaavathu  kon’rupoattaal,  maadum  kalle’riyappadavea'ndum,  athin  ejamaanum  kolaiseyyappadavea'ndum.  (yaaththiraagamam  21:29)

அபராதம்  கொடுக்கும்படி  தீர்க்கப்பட்டதானால்,  அவன்  தன்  ஜீவனை  மீட்கும்பொருளாக  விதிக்கப்பட்ட  அபராதத்தைக்  கொடுக்கக்கடவன்.  (யாத்திராகமம்  21:30)

abaraatham  kodukkumpadi  theerkkappattathaanaal,  avan  than  jeevanai  meedkumporu'laaga  vithikkappatta  abaraathaththaik  kodukkakkadavan.  (yaaththiraagamam  21:30)

அது  ஒருவன்  மகனை  முட்டினாலும்  சரி,  ஒருவன்  மகளை  முட்டினாலும்  சரி,  இந்தத்  தீர்ப்பின்படியே  அவனுக்குச்  செய்யப்படவேண்டும்.  (யாத்திராகமம்  21:31)

athu  oruvan  maganai  muttinaalum  sari,  oruvan  maga'lai  muttinaalum  sari,  inthath  theerppinpadiyea  avanukkuch  seyyappadavea'ndum.  (yaaththiraagamam  21:31)

அந்த  மாடு  ஒரு  அடிமையானவனையாவது  ஒரு  அடிமைப்பெண்ணையாவது  முட்டினால்,  அதற்கு  உடையவன்  அவர்களுடைய  எஜமானுக்கு  முப்பது  சேக்கல்  நிறையான  வெள்ளியைக்  கொடுக்கக்கடவன்;  மாடு  கல்லெறியப்படவேண்டும்.  (யாத்திராகமம்  21:32)

antha  maadu  oru  adimaiyaanavanaiyaavathu  oru  adimaippe'n'naiyaavathu  muttinaal,  atha’rku  udaiyavan  avarga'ludaiya  ejamaanukku  muppathu  seakkal  ni’raiyaana  ve'l'liyaik  kodukkakkadavan;  maadu  kalle’riyappadavea'ndum.  (yaaththiraagamam  21:32)

ஒருவன்  ஒரு  குழியைத்  திறந்து  வைத்ததினாலாவது,  ஒரு  குழியை  வெட்டி  அதை  மூடாதேபோனதினாலாவது,  அதிலே  ஒரு  மாடாவது  ஒரு  கழுதையாவது  விழுந்தால்,  (யாத்திராகமம்  21:33)

oruvan  oru  kuzhiyaith  thi’ranthu  vaiththathinaalaavathu,  oru  kuzhiyai  vetti  athai  moodaatheapoanathinaalaavathu,  athilea  oru  maadaavathu  oru  kazhuthaiyaavathu  vizhunthaal,  (yaaththiraagamam  21:33)

குழிக்கு  உடையவன்  அதற்கு  ஈடாகப்  பணத்தை  மிருகத்தின்  எஜமானுக்குக்  கொடுக்கக்கடவன்;  செத்ததோ  அவனுடையதாகவேண்டும்.  (யாத்திராகமம்  21:34)

kuzhikku  udaiyavan  atha’rku  eedaagap  pa'naththai  mirugaththin  ejamaanukkuk  kodukkakkadavan;  seththathoa  avanudaiyathaagavea'ndum.  (yaaththiraagamam  21:34)

ஒருவனுடைய  மாடு  மற்றவனுடைய  மாட்டை  முட்டினதினால்  அது  செத்தால்,  உயிரோடிருக்கிற  மாட்டை  அவர்கள்  விற்று,  அதின்  கிரயத்தைப்  பங்கிட்டு,  செத்ததையும்  பங்கிட்டுக்கொள்ளக்கடவர்கள்.  (யாத்திராகமம்  21:35)

oruvanudaiya  maadu  mat’ravanudaiya  maattai  muttinathinaal  athu  seththaal,  uyiroadirukki’ra  maattai  avarga'l  vit’ru,  athin  kirayaththaip  panggittu,  seththathaiyum  panggittukko'l'lakkadavarga'l.  (yaaththiraagamam  21:35)

அந்த  மாடு  முன்னமே  முட்டுகிற  மாடென்று  அதின்  எஜமான்  அறிந்திருந்தும்,  அதைக்  கட்டிவைக்காதிருந்தால்,  அவன்  மாட்டுக்கு  மாட்டைக்  கொடுக்கக்கடவன்;  செத்ததோ  அவனுடையதாகவேண்டும்.  (யாத்திராகமம்  21:36)

antha  maadu  munnamea  muttugi’ra  maaden’ru  athin  ejamaan  a’rinthirunthum,  athaik  kattivaikkaathirunthaal,  avan  maattukku  maattaik  kodukkakkadavan;  seththathoa  avanudaiyathaagavea'ndum.  (yaaththiraagamam  21:36)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!