Tuesday, July 19, 2016

Yaaththiraagamam 19 | யாத்திராகமம் 19 | Exodus 19

இஸ்ரவேல்  புத்திரர்  எகிப்து  தேசத்திலிருந்து  புறப்பட்ட  மூன்றாம்  மாதம்  முதலாம்  நாளிலே,  சீனாய்  வனாந்தரத்தில்  சேர்ந்தார்கள்.  (யாத்திராகமம்  19:1)

israveal  puththirar  egipthu  theasaththilirunthu  pu’rappatta  moon’raam  maatham  muthalaam  naa'lilea,  seenaay  vanaantharaththil  searnthaarga'l.  (yaaththiraagamam  19:1)

அவர்கள்  ரெவிதீமிலிருந்து  பிரயாணம்  புறப்பட்டு,  சீனாய்  வனாந்தரத்தில்  சேர்ந்து,  அந்த  வனாந்தரத்தில்  பாளயமிறங்கினார்கள்;  இஸ்ரவேலர்  அங்கே  மலைக்கு  எதிராகப்  பாளயமிறங்கினார்கள்.  (யாத்திராகமம்  19:2)

avarga'l  revitheemilirunthu  pirayaa'nam  pu’rappattu,  seenaay  vanaantharaththil  searnthu,  antha  vanaantharaththil  paa'layami’rangginaarga'l;  isravealar  anggea  malaikku  ethiraagap  paa'layami’rangginaarga'l.  (yaaththiraagamam  19:2)

மோசே  தேவனிடத்திற்கு  ஏறிப்போனான்;  கர்த்தர்  மலையிலிருந்து  அவனைக்  கூப்பிட்டு:  நீ  யாக்கோபு  வம்சத்தாருக்குச்  சொல்லவும்,  இஸ்ரவேல்  புத்திரருக்கு  அறிவிக்கவும்  வேண்டியது  என்னவென்றால்,  (யாத்திராகமம்  19:3)

moasea  theavanidaththi’rku  ea’rippoanaan;  karththar  malaiyilirunthu  avanaik  kooppittu:  nee  yaakkoabu  vamsaththaarukkuch  sollavum,  israveal  puththirarukku  a’rivikkavum  vea'ndiyathu  ennaven’raal,  (yaaththiraagamam  19:3)

நான்  எகிப்தியருக்குச்  செய்ததையும்,  நான்  உங்களைக்  கழுகுகளுடைய  செட்டைகளின்மேல்  சுமந்து,  உங்களை  என்னண்டையிலே  சேர்த்துக்கொண்டதையும்,  நீங்கள்  கண்டிருக்கிறீர்கள்.  (யாத்திராகமம்  19:4)

naan  egipthiyarukkuch  seythathaiyum,  naan  ungga'laik  kazhuguga'ludaiya  settaiga'linmeal  sumanthu,  ungga'lai  enna'ndaiyilea  searththukko'ndathaiyum,  neengga'l  ka'ndirukki’reerga'l.  (yaaththiraagamam  19:4)

இப்பொழுது  நீங்கள்  என்  வாக்கை  உள்ளபடி  கேட்டு,  என்  உடன்படிக்கையைக்  கைக்கொள்வீர்களானால்,  சகல  ஜனங்களிலும்  நீங்களே  எனக்குச்  சொந்த  சம்பத்தாயிருப்பீர்கள்;  பூமியெல்லாம்  என்னுடையது.  (யாத்திராகமம்  19:5)

ippozhuthu  neengga'l  en  vaakkai  u'l'lapadi  keattu,  en  udanpadikkaiyaik  kaikko'lveerga'laanaal,  sagala  janangga'lilum  neengga'lea  enakkuch  sontha  sambaththaayiruppeerga'l;  boomiyellaam  ennudaiyathu.  (yaaththiraagamam  19:5)

நீங்கள்  எனக்கு  ஆசாரிய  ராஜ்யமும்  பரிசுத்த  ஜாதியுமாய்  இருப்பீர்கள்  என்று  நீ  இஸ்ரவேல்  புத்திரரோடே  சொல்லவேண்டிய  வார்த்தைகள்  என்றார்.  (யாத்திராகமம்  19:6)

neengga'l  enakku  aasaariya  raajyamum  parisuththa  jaathiyumaay  iruppeerga'l  en’ru  nee  israveal  puththiraroadea  sollavea'ndiya  vaarththaiga'l  en’raar.  (yaaththiraagamam  19:6)

மோசே  வந்து  ஜனங்களின்  மூப்பரை  அழைப்பித்து,  கர்த்தர்  தனக்குக்  கற்பித்த  வார்த்தைகளையெல்லாம்  அவர்களுக்கு  முன்பாகச்  சொன்னான்.  (யாத்திராகமம்  19:7)

moasea  vanthu  janangga'lin  moopparai  azhaippiththu,  karththar  thanakkuk  ka’rpiththa  vaarththaiga'laiyellaam  avarga'lukku  munbaagach  sonnaan.  (yaaththiraagamam  19:7)

அதற்கு  ஜனங்கள்  எல்லாரும்  ஏகமாய்,  கர்த்தர்  சொன்னவைகளையெல்லாம்  செய்வோம்  என்று  பிரதியுத்தரம்  சொன்னார்கள்.  ஜனங்கள்  சொன்ன  வார்த்தைகளை  மோசே  கர்த்தரிடத்தில்  தெரிவித்தான்.  (யாத்திராகமம்  19:8)

atha’rku  janangga'l  ellaarum  eagamaay,  karththar  sonnavaiga'laiyellaam  seyvoam  en’ru  pirathiyuththaram  sonnaarga'l.  janangga'l  sonna  vaarththaiga'lai  moasea  karththaridaththil  theriviththaan.  (yaaththiraagamam  19:8)

அப்பொழுது  கர்த்தர்  மோசேயை  நோக்கி:  நான்  உன்னோடே  பேசும்போது  ஜனங்கள்  கேட்டு,  உன்னை  என்றைக்கும்  விசுவாசிக்கும்படி,  நான்  கார்மேகத்தில்  உன்னிடத்திற்கு  வருவேன்  என்றார்.  ஜனங்கள்  சொன்ன  வார்த்தைகளை  மோசே  கர்த்தருக்குச்  சொன்னான்.  (யாத்திராகமம்  19:9)

appozhuthu  karththar  moaseayai  noakki:  naan  unnoadea  peasumpoathu  janangga'l  keattu,  unnai  en’raikkum  visuvaasikkumpadi,  naan  kaarmeagaththil  unnidaththi’rku  varuvean  en’raar.  janangga'l  sonna  vaarththaiga'lai  moasea  karththarukkuch  sonnaan.  (yaaththiraagamam  19:9)

பின்னும்  கர்த்தர்  மோசேயை  நோக்கி:  நீ  ஜனங்களிடத்தில்  போய்,  இன்றைக்கும்  நாளைக்கும்  அவர்களைப்  பரிசுத்தப்படுத்து;  அவர்கள்  தங்கள்  வஸ்திரங்களைத்  தோய்த்து,  (யாத்திராகமம்  19:10)

pinnum  karththar  moaseayai  noakki:  nee  janangga'lidaththil  poay,  in’raikkum  naa'laikkum  avarga'laip  parisuththappaduththu;  avarga'l  thangga'l  vasthirangga'laith  thoayththu,  (yaaththiraagamam  19:10)

மூன்றாம்  நாளைக்கு  ஆயத்தப்பட்டிருக்கக்கடவர்கள்;  மூன்றாம்  நாளில்  கர்த்தர்  சகல  ஜனங்களுக்கும்  பிரத்தியட்சமாகச்  சீனாய்மலையின்மேல்  இறங்குவார்.  (யாத்திராகமம்  19:11)

moon’raam  naa'laikku  aayaththappattirukkakkadavarga'l;  moon’raam  naa'lil  karththar  sagala  janangga'lukkum  piraththiyadchamaagach  seenaaymalaiyinmeal  i’rangguvaar.  (yaaththiraagamam  19:11)

ஜனங்களுக்குச்  சுற்றிலும்  நீ  ஒரு  எல்லை  குறித்து,  அவர்கள்  மலையில்  ஏறாதபடிக்கும்,  அதின்  அடிவாரத்தைத்  தொடாதபடிக்கும்  எச்சரிக்கையாய்  இருங்கள்  என்று  அவர்களுக்குச்  சொல்;  மலையைத்  தொடுகிறவன்  எவனும்  நிச்சயமாகவே  கொல்லப்படுவான்.  (யாத்திராகமம்  19:12)

janangga'lukkuch  sut’rilum  nee  oru  ellai  ku’riththu,  avarga'l  malaiyil  ea’raathapadikkum,  athin  adivaaraththaith  thodaathapadikkum  echcharikkaiyaay  irungga'l  en’ru  avarga'lukkuch  sol;  malaiyaith  thodugi’ravan  evanum  nichchayamaagavea  kollappaduvaan.  (yaaththiraagamam  19:12)

ஒரு  கையும்  அதைத்  தொடலாகாது;  தொட்டால்,  நிச்சயமாகக்  கல்லெறியுண்டு,  அல்லது  ஊடுருவ  எய்யுண்டு  சாகவேண்டும்;  மிருகமானாலும்சரி,  மனிதனானாலும்சரி,  உயிரோடே  வைக்கப்படலாகாது;  எக்காளம்  நெடுந்தொனியாய்த்  தொனிக்கையில்,  அவர்கள்  மலையின்  அடிவாரத்தில்  வரக்கடவர்கள்  என்றார்.  (யாத்திராகமம்  19:13)

oru  kaiyum  athaith  thodalaagaathu;  thottaal,  nichchayamaagak  kalle’riyu'ndu,  allathu  ooduruva  eyyu'ndu  saagavea'ndum;  mirugamaanaalumsari,  manithanaanaalumsari,  uyiroadea  vaikkappadalaagaathu;  ekkaa'lam  nedunthoniyaayth  thonikkaiyil,  avarga'l  malaiyin  adivaaraththil  varakkadavarga'l  en’raar.  (yaaththiraagamam  19:13)

மோசே  மலையிலிருந்து  இறங்கி,  ஜனங்களிடத்தில்  வந்து,  அவர்களைப்  பரிசுத்தப்படுத்தினான்;  அவர்கள்  தங்கள்  வஸ்திரங்களைத்  தோய்த்தார்கள்.  (யாத்திராகமம்  19:14)

moasea  malaiyilirunthu  i’ranggi,  janangga'lidaththil  vanthu,  avarga'laip  parisuththappaduththinaan;  avarga'l  thangga'l  vasthirangga'laith  thoayththaarga'l.  (yaaththiraagamam  19:14)

அவன்  ஜனங்களை  நோக்கி:  மூன்றாம்  நாளுக்கு  ஆயத்தப்பட்டிருங்கள்,  மனைவியினிடத்தில்  சேராதிருங்கள்  என்றான்.  (யாத்திராகமம்  19:15)

avan  janangga'lai  noakki:  moon’raam  naa'lukku  aayaththappattirungga'l,  manaiviyinidaththil  searaathirungga'l  en’raan.  (yaaththiraagamam  19:15)

மூன்றாம்  நாள்  விடியற்காலத்தில்  இடிமுழக்கங்களும்  மின்னல்களும்,  மலையின்மேல்  கார்மேகமும்  மகா  பலத்த  எக்காளசத்தமும்  உண்டாயிற்று;  பாளயத்திலிருந்த  ஜனங்கள்  எல்லாரும்  நடுங்கினார்கள்.  (யாத்திராகமம்  19:16)

moon’raam  naa'l  vidiya’rkaalaththil  idimuzhakkangga'lum  minnalga'lum,  malaiyinmeal  kaarmeagamum  mahaa  balaththa  ekkaa'lasaththamum  u'ndaayit’ru;  paa'layaththiliruntha  janangga'l  ellaarum  nadungginaarga'l.  (yaaththiraagamam  19:16)

அப்பொழுது  ஜனங்கள்  தேவனுக்கு  எதிர்கொண்டுபோக,  மோசே  அவர்களைப்  பாளயத்திலிருந்து  புறப்படப்பண்ணினான்;  அவர்கள்  மலையின்  அடிவாரத்தில்  நின்றார்கள்.  (யாத்திராகமம்  19:17)

appozhuthu  janangga'l  theavanukku  ethirko'ndupoaga,  moasea  avarga'laip  paa'layaththilirunthu  pu’rappadappa'n'ninaan;  avarga'l  malaiyin  adivaaraththil  nin’raarga'l.  (yaaththiraagamam  19:17)

கர்த்தர்  சீனாய்மலையின்மேல்  அக்கினியில்  இறங்கினபடியால்,  அது  முழுவதும்  புகைக்காடாய்  இருந்தது;  அந்தப்  புகை  சூளையின்  புகையைப்போல  எழும்பிற்று;  மலை  முழுவதும்  மிகவும்  அதிர்ந்தது.  (யாத்திராகமம்  19:18)

karththar  seenaaymalaiyinmeal  akkiniyil  i’rangginapadiyaal,  athu  muzhuvathum  pugaikkaadaay  irunthathu;  anthap  pugai  soo'laiyin  pugaiyaippoala  ezhumbit’ru;  malai  muzhuvathum  migavum  athirnthathu.  (yaaththiraagamam  19:18)

எக்காளசத்தம்  வரவர  மிகவும்  பலமாய்த்  தொனித்தது;  மோசே  பேசினான்;  தேவன்  அவனுக்கு  வாக்கினால்  மறுமொழி  கொடுத்தார்.  (யாத்திராகமம்  19:19)

ekkaa'lasaththam  varavara  migavum  balamaayth  thoniththathu;  moasea  peasinaan;  theavan  avanukku  vaakkinaal  ma’rumozhi  koduththaar.  (yaaththiraagamam  19:19)

கர்த்தர்  சீனாய்மலையிலுள்ள  கொடுமுடியில்  இறங்கினபோது,  கர்த்தர்  மோசேயை  மலையின்  கொடுமுடியிலே  வரவழைத்தார்;  மோசே  ஏறிப்போனான்.  (யாத்திராகமம்  19:20)

karththar  seenaaymalaiyilu'l'la  kodumudiyil  i’rangginapoathu,  karththar  moaseayai  malaiyin  kodumudiyilea  varavazhaiththaar;  moasea  ea’rippoanaan.  (yaaththiraagamam  19:20)

அப்பொழுது  கர்த்தர்  மோசேயை  நோக்கி:  ஜனங்கள்  பார்க்கிறதற்கு  எல்லையைக்  கடந்து  கர்த்தரிடத்தில்  வராதபடிக்கும்,  அவர்களில்  அநேகர்  அழிந்து  போகாதபடிக்கும்,  நீ  இறங்கிப்போய்,  அவர்களை  உறுதியாக  எச்சரி.  (யாத்திராகமம்  19:21)

appozhuthu  karththar  moaseayai  noakki:  janangga'l  paarkki’ratha’rku  ellaiyaik  kadanthu  karththaridaththil  varaathapadikkum,  avarga'lil  aneagar  azhinthu  poagaathapadikkum,  nee  i’ranggippoay,  avarga'lai  u’ruthiyaaga  echchari.  (yaaththiraagamam  19:21)

கர்த்தரின்  சமுகத்தில்  வருகிற  ஆசாரியர்களும்,  கர்த்தர்  தங்களுக்குள்ளே  சங்காரம்  பண்ணாதபடி,  தங்களைப்  பரிசுத்தப்படுத்திக்கொள்ள  வேண்டும்  என்றார்.  (யாத்திராகமம்  19:22)

karththarin  samugaththil  varugi’ra  aasaariyarga'lum,  karththar  thangga'lukku'l'lea  sanggaaram  pa'n'naathapadi,  thangga'laip  parisuththappaduththikko'l'la  vea'ndum  en’raar.  (yaaththiraagamam  19:22)

அப்பொழுது  மோசே  கர்த்தரை  நோக்கி:  மலையைச்  சுற்றிலும்  எல்லை  குறித்து,  அதைப்  பரிசுத்தப்படுத்துங்கள்  என்று  தேவரீர்  எங்களை  உறுதியாக  எச்சரித்திருக்கிறீர்;  ஆகையால்,  ஜனங்கள்  சீனாய்மலையின்மேல்  ஏறிவரமாட்டார்கள்  என்றான்.  (யாத்திராகமம்  19:23)

appozhuthu  moasea  karththarai  noakki:  malaiyaich  sut’rilum  ellai  ku’riththu,  athaip  parisuththappaduththungga'l  en’ru  theavareer  engga'lai  u’ruthiyaaga  echchariththirukki’reer;  aagaiyaal,  janangga'l  seenaaymalaiyinmeal  ea’rivaramaattaarga'l  en’raan.  (yaaththiraagamam  19:23)

கர்த்தர்  மோசேயை  நோக்கி:  நீ  இறங்கிப்போ;  பின்பு  நீயும்  ஆரோனும்  கூடி  ஏறிவாருங்கள்;  ஆசாரியர்களும்  ஜனங்களும்,  கர்த்தர்  தங்களுக்குள்ளே  சங்காரம்பண்ணாதபடிக்கு,  எல்லையைக்  கடந்து  கர்த்தரிடத்தில்  வராதிருக்கக்கடவர்கள்  என்றார்.  (யாத்திராகமம்  19:24)

karththar  moaseayai  noakki:  nee  i’ranggippoa;  pinbu  neeyum  aaroanum  koodi  ea’rivaarungga'l;  aasaariyarga'lum  janangga'lum,  karththar  thangga'lukku'l'lea  sanggaarampa'n'naathapadikku,  ellaiyaik  kadanthu  karththaridaththil  varaathirukkakkadavarga'l  en’raar.  (yaaththiraagamam  19:24)

அப்படியே  மோசே  இறங்கி  ஜனங்களிடத்தில்  போய்,  அதை  அவர்களுக்குச்  சொன்னான்.  (யாத்திராகமம்  19:25)

appadiyea  moasea  i’ranggi  janangga'lidaththil  poay,  athai  avarga'lukkuch  sonnaan.  (yaaththiraagamam  19:25)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!