Tuesday, July 19, 2016

Yaaththiraagamam 18 | யாத்திராகமம் 18 | Exodus 18

தேவன்  மோசேக்கும்  தமது  ஜனமாகிய  இஸ்ரவேலுக்கும்  செய்த  யாவையும்,  கர்த்தர்  இஸ்ரவேலை  எகிப்திலிருந்து  புறப்படப்பண்ணினதையும்,  மீதியானில்  ஆசாரியனாயிருந்த  மோசேயின்  மாமனாகிய  எத்திரோ  கேள்விப்பட்டபோது,  (யாத்திராகமம்  18:1)

theavan  moaseakkum  thamathu  janamaagiya  isravealukkum  seytha  yaavaiyum,  karththar  isravealai  egipthilirunthu  pu’rappadappa'n'ninathaiyum,  meethiyaanil  aasaariyanaayiruntha  moaseayin  maamanaagiya  eththiroa  kea'lvippattapoathu,  (yaaththiraagamam  18:1)

மோசேயின்  மாமனாகிய  எத்திரோ,  மோசேயினாலே  திரும்பி  அனுப்பிவிடப்பட்டிருந்த  அவன்  மனைவியாகிய  சிப்போராளையும்,  (யாத்திராகமம்  18:2)

moaseayin  maamanaagiya  eththiroa,  moaseayinaalea  thirumbi  anuppividappattiruntha  avan  manaiviyaagiya  sippoaraa'laiyum,  (yaaththiraagamam  18:2)

அவளுடைய  இரண்டு  குமாரரையும்  கூட்டிக்கொண்டு  பிரயாணப்பட்டான்.  நான்  அந்நிய  தேசத்திலே  பரதேசியானேன்  என்று  மோசே  சொல்லி,  ஒரு  மகனுக்குக்  கெர்சோம்  என்று  பேரிட்டிருந்தான்.  (யாத்திராகமம்  18:3)

ava'ludaiya  ira'ndu  kumaararaiyum  koottikko'ndu  pirayaa'nappattaan.  naan  anniya  theasaththilea  paratheasiyaanean  en’ru  moasea  solli,  oru  maganukkuk  kersoam  en’ru  pearittirunthaan.  (yaaththiraagamam  18:3)

என்  பிதாவின்  தேவன்  எனக்குத்  துணைநின்று  பார்வோனின்  பட்டயத்துக்கு  என்னைத்  தப்புவித்தார்  என்று  சொல்லி,  மற்றவனுக்கு  எலியேசர்  என்று  பேரிட்டிருந்தான்.  (யாத்திராகமம்  18:4)

en  pithaavin  theavan  enakkuth  thu'nainin’ru  paarvoanin  pattayaththukku  ennaith  thappuviththaar  en’ru  solli,  mat’ravanukku  eliyeasar  en’ru  pearittirunthaan.  (yaaththiraagamam  18:4)

மோசேயின்  மாமனாகிய  எத்திரோ  மோசேயின்  குமாரரோடும்  அவன்  மனைவியோடுங்கூட,  அவன்  பாளயமிறங்கியிருந்த  தேவ  பர்வதத்தினிடத்தில்  வனாந்தரத்துக்கு  வந்து:  (யாத்திராகமம்  18:5)

moaseayin  maamanaagiya  eththiroa  moaseayin  kumaararoadum  avan  manaiviyoadungkooda,  avan  paa'layami’ranggiyiruntha  theava  parvathaththinidaththil  vanaantharaththukku  vanthu:  (yaaththiraagamam  18:5)

எத்திரோ  என்னும்  உம்முடைய  மாமனாகிய  நானும்,  உம்முடைய  மனைவியும்,  அவளோடேகூட  அவளுடைய  இரண்டு  குமாரரும்  உம்மிடத்திற்கு  வந்திருக்கிறோம்  என்று  மோசேக்குச்  சொல்லியனுப்பினான்.  (யாத்திராகமம்  18:6)

eththiroa  ennum  ummudaiya  maamanaagiya  naanum,  ummudaiya  manaiviyum,  ava'loadeakooda  ava'ludaiya  ira'ndu  kumaararum  ummidaththi’rku  vanthirukki’roam  en’ru  moaseakkuch  solliyanuppinaan.  (yaaththiraagamam  18:6)

அப்பொழுது  மோசே  தன்  மாமனுக்கு  எதிர்கொண்டுபோய்,  அவனை  வணங்கி,  முத்தஞ்செய்தான்;  ஒருவரை  ஒருவர்  சுகசெய்தி  விசாரித்துக்கொண்டு,  கூடாரத்துக்குள்  பிரவேசித்தார்கள்.  (யாத்திராகமம்  18:7)

appozhuthu  moasea  than  maamanukku  ethirko'ndupoay,  avanai  va'nanggi,  muththagnseythaan;  oruvarai  oruvar  sugaseythi  visaariththukko'ndu,  koodaaraththukku'l  piraveasiththaarga'l.  (yaaththiraagamam  18:7)

பின்பு  மோசே  கர்த்தர்  இஸ்ரவேலினிமித்தம்  பார்வோனுக்கும்  எகிப்தியருக்கும்  செய்த  எல்லாவற்றையும்,  வழியிலே  தங்களுக்கு  நேரிட்ட  எல்லா  வருத்தத்தையும்,  கர்த்தர்  தங்களை  விடுவித்து  இரட்சித்ததையும்  தன்  மாமனுக்கு  விவரித்துச்  சொன்னான்.  (யாத்திராகமம்  18:8)

pinbu  moasea  karththar  isravealinimiththam  paarvoanukkum  egipthiyarukkum  seytha  ellaavat’raiyum,  vazhiyilea  thangga'lukku  nearitta  ellaa  varuththaththaiyum,  karththar  thangga'lai  viduviththu  iradchiththathaiyum  than  maamanukku  vivariththuch  sonnaan.  (yaaththiraagamam  18:8)

கர்த்தர்  இஸ்ரவேலரை  எகிப்தியரின்  கைக்குத்  தப்புவித்து,  அவர்களுக்குச்  செய்த  சகல  நன்மைகளையுங்குறித்து  எத்திரோ  சந்தோஷப்பட்டு:  (யாத்திராகமம்  18:9)

karththar  isravealarai  egipthiyarin  kaikkuth  thappuviththu,  avarga'lukkuch  seytha  sagala  nanmaiga'laiyungku’riththu  eththiroa  santhoashappattu:  (yaaththiraagamam  18:9)

உங்களை  எகிப்தியரின்  கைக்கும்  பார்வோனின்  கைக்கும்  தப்புவித்து,  எகிப்தியருடைய  கையின்  கீழிருந்த  ஜனத்தை  விடுவித்த  கர்த்தருக்கு  ஸ்தோத்திரம்.  (யாத்திராகமம்  18:10)

ungga'lai  egipthiyarin  kaikkum  paarvoanin  kaikkum  thappuviththu,  egipthiyarudaiya  kaiyin  keezhiruntha  janaththai  viduviththa  karththarukku  sthoaththiram.  (yaaththiraagamam  18:10)

கர்த்தர்  எல்லாத்  தேவர்களைப்பார்க்கிலும்  பெரியவர்  என்பதை  இப்பொழுது  அறிந்திருக்கிறேன்;  அவர்கள்  இடும்பு  செய்த  காரியத்தில்  அவர்களை  மேற்கொண்டார்  என்று  சொல்லி;  (யாத்திராகமம்  18:11)

karththar  ellaath  theavarga'laippaarkkilum  periyavar  enbathai  ippozhuthu  a’rinthirukki’rean;  avarga'l  idumbu  seytha  kaariyaththil  avarga'lai  mea’rko'ndaar  en’ru  solli;  (yaaththiraagamam  18:11)

மோசேயின்  மாமனாகிய  எத்திரோ  சர்வாங்க  தகனபலியையும்  மற்றப்  பலிகளையும்  தேவனுக்குக்  கொண்டுவந்து  செலுத்தினான்.  பின்பு  ஆரோனும்  இஸ்ரவேல்  மூப்பர்  அனைவரும்  வந்து,  மோசேயின்  மாமனுடனே  தேவசமுகத்தில்  போஜனம்  பண்ணினார்கள்.  (யாத்திராகமம்  18:12)

moaseayin  maamanaagiya  eththiroa  sarvaangga  thaganabaliyaiyum  mat’rap  baliga'laiyum  theavanukkuk  ko'nduvanthu  seluththinaan.  pinbu  aaroanum  israveal  mooppar  anaivarum  vanthu,  moaseayin  maamanudanea  theavasamugaththil  poajanam  pa'n'ninaarga'l.  (yaaththiraagamam  18:12)

மறுநாள்  மோசே  ஜனங்களை  நியாயம்  விசாரிக்க  உட்கார்ந்தான்;  ஜனங்கள்  காலமே  துவக்கிச்  சாயங்காலமட்டும்  மோசேக்கு  முன்பாக  நின்றார்கள்.  (யாத்திராகமம்  18:13)

ma’runaa'l  moasea  janangga'lai  niyaayam  visaarikka  udkaarnthaan;  janangga'l  kaalamea  thuvakkich  saayanggaalamattum  moaseakku  munbaaga  nin’raarga'l.  (yaaththiraagamam  18:13)

ஜனங்களுக்கு  அவன்  செய்த  யாவையும்  மோசேயின்  மாமன்  கண்டு:  நீர்  ஜனங்களுக்குச்  செய்கிற  இந்தக்  காரியம்  என்ன?  நீர்  ஒன்றியாய்  உட்கார்ந்திருக்கவும்,  ஜனங்கள்  எல்லாரும்  காலமே  துவக்கிச்  சாயங்காலமட்டும்  உமக்கு  முன்பாக  நிற்கவும்  வேண்டியது  என்ன  என்றான்.  (யாத்திராகமம்  18:14)

janangga'lukku  avan  seytha  yaavaiyum  moaseayin  maaman  ka'ndu:  neer  janangga'lukkuch  seygi’ra  inthak  kaariyam  enna?  neer  on’riyaay  udkaarnthirukkavum,  janangga'l  ellaarum  kaalamea  thuvakkich  saayanggaalamattum  umakku  munbaaga  ni’rkavum  vea'ndiyathu  enna  en’raan.  (yaaththiraagamam  18:14)

அப்பொழுது  மோசே  தன்  மாமனை  நோக்கி:  தேவனிடத்தில்  விசாரிக்கும்படி  ஜனங்கள்  என்னிடத்தில்  வருகிறார்கள்.  (யாத்திராகமம்  18:15)

appozhuthu  moasea  than  maamanai  noakki:  theavanidaththil  visaarikkumpadi  janangga'l  ennidaththil  varugi’raarga'l.  (yaaththiraagamam  18:15)

அவர்களுக்கு  யாதொரு  காரியம்  உண்டானால்,  என்னிடத்தில்  வருகிறார்கள்;  நான்  அவர்களுக்குள்ள  வழக்கைத்  தீர்த்து,  தேவகட்டளைகளையும்  அவருடைய  பிரமாணங்களையும்  தெரிவிக்கிறேன்  என்றான்.  (யாத்திராகமம்  18:16)

avarga'lukku  yaathoru  kaariyam  u'ndaanaal,  ennidaththil  varugi’raarga'l;  naan  avarga'lukku'l'la  vazhakkaith  theerththu,  theavakatta'laiga'laiyum  avarudaiya  piramaa'nangga'laiyum  therivikki’rean  en’raan.  (yaaththiraagamam  18:16)

அதற்கு  மோசேயின்  மாமன்:  நீர்  செய்கிற  காரியம்  நல்லதல்ல;  (யாத்திராகமம்  18:17)

atha’rku  moaseayin  maaman:  neer  seygi’ra  kaariyam  nallathalla;  (yaaththiraagamam  18:17)

நீரும்  உம்மோடே  இருக்கிற  ஜனங்களும்  தொய்ந்துபோவீர்கள்;  இது  உமக்கு  மிகவும்  பாரமான  காரியம்;  நீர்  ஒருவராய்  அதைச்  செய்ய  உம்மாலே  கூடாது.  (யாத்திராகமம்  18:18)

neerum  ummoadea  irukki’ra  janangga'lum  thoynthupoaveerga'l;  ithu  umakku  migavum  baaramaana  kaariyam;  neer  oruvaraay  athaich  seyya  ummaalea  koodaathu.  (yaaththiraagamam  18:18)

இப்பொழுது  என்  சொல்லைக்கேளும்,  உமக்கு  ஒரு  ஆலோசனை  சொல்லுகிறேன்;  தேவனும்  உம்மோடுகூட  இருப்பார்,  நீர்  தேவசந்நிதியிலே  ஜனங்களுக்காக  இரும்;  விசேஷித்தவைகளைத்  தேவனிடத்தில்  கொண்டுபோய்;  (யாத்திராகமம்  18:19)

ippozhuthu  en  sollaikkea'lum,  umakku  oru  aaloasanai  sollugi’rean;  theavanum  ummoadukooda  iruppaar,  neer  theavasannithiyilea  janangga'lukkaaga  irum;  viseashiththavaiga'laith  theavanidaththil  ko'ndupoay;  (yaaththiraagamam  18:19)

கட்டளைகளையும்  பிரமாணங்களையும்  அவர்களுக்கு  வெளிப்படுத்தி;  அவர்கள்  நடக்கவேண்டிய  வழியையும்,  அவர்கள்  செய்யவேண்டிய  காரியத்தையும்  அவர்களுக்குத்  தெரியப்படுத்தும்.  (யாத்திராகமம்  18:20)

katta'laiga'laiyum  piramaa'nangga'laiyum  avarga'lukku  ve'lippaduththi;  avarga'l  nadakkavea'ndiya  vazhiyaiyum,  avarga'l  seyyavea'ndiya  kaariyaththaiyum  avarga'lukkuth  theriyappaduththum.  (yaaththiraagamam  18:20)

ஜனங்கள்  எல்லாருக்குள்ளும்  தேவனுக்குப்  பயந்தவர்களும்  உண்மையுள்ளவர்களும்  பொருளாசையை  வெறுக்கிறவர்களுமான  திறமையுள்ள  மனிதரைத்  தெரிந்துகொண்டு,  அவர்களை  ஆயிரம்பேருக்கு  அதிபதிகளாகவும்,  நூறுபேருக்கு  அதிபதிகளாகவும்,  ஐம்பதுபேருக்கு  அதிபதிகளாகவும்,  பத்துப்பேருக்கு  அதிபதிகளாகவும்  ஏற்படுத்தும்.  (யாத்திராகமம்  18:21)

janangga'l  ellaarukku'l'lum  theavanukkup  bayanthavarga'lum  u'nmaiyu'l'lavarga'lum  poru'laasaiyai  ve’rukki’ravarga'lumaana  thi’ramaiyu'l'la  manitharaith  therinthuko'ndu,  avarga'lai  aayirampearukku  athibathiga'laagavum,  noo’rupearukku  athibathiga'laagavum,  aimbathupearukku  athibathiga'laagavum,  paththuppearukku  athibathiga'laagavum  ea’rpaduththum.  (yaaththiraagamam  18:21)

அவர்கள்  எப்பொழுதும்  ஜனங்களை  நியாயம்  விசாரித்து,  பெரிய  காரியங்கள்  யாவையும்  உம்மிடத்தில்  கொண்டுவரட்டும்,  சிறிய  காரியங்கள்  யாவையும்  தாங்களே  தீர்க்கட்டும்;  இப்படி  அவர்கள்  உம்மோடேகூட  இந்தப்  பாரத்தைச்  சுமந்தால்,  உமக்கு  இலகுவாயிருக்கும்.  (யாத்திராகமம்  18:22)

avarga'l  eppozhuthum  janangga'lai  niyaayam  visaariththu,  periya  kaariyangga'l  yaavaiyum  ummidaththil  ko'nduvarattum,  si’riya  kaariyangga'l  yaavaiyum  thaangga'lea  theerkkattum;  ippadi  avarga'l  ummoadeakooda  inthap  baaraththaich  sumanthaal,  umakku  ilaguvaayirukkum.  (yaaththiraagamam  18:22)

இந்தப்பிரகாரம்  நீர்  செய்வதும்,  இப்படித்  தேவன்  உமக்குக்  கட்டளையிடுவதும்  உண்டானால்,  உம்மாலே  தாங்கக்கூடும்;  இந்த  ஜனங்கள்  எல்லாரும்  தாங்கள்  போகும்  இடத்துக்குச்  சுகமாய்ப்  போய்ச்  சேரலாம்  என்றான்.  (யாத்திராகமம்  18:23)

inthappiragaaram  neer  seyvathum,  ippadith  theavan  umakkuk  katta'laiyiduvathum  u'ndaanaal,  ummaalea  thaanggakkoodum;  intha  janangga'l  ellaarum  thaangga'l  poagum  idaththukkuch  sugamaayp  poaych  searalaam  en’raan.  (yaaththiraagamam  18:23)

மோசே  தன்  மாமன்  சொல்கேட்டு,  அவன்  சொன்னபடியெல்லாம்  செய்தான்.  (யாத்திராகமம்  18:24)

moasea  than  maaman  solkeattu,  avan  sonnapadiyellaam  seythaan.  (yaaththiraagamam  18:24)

மோசே  இஸ்ரவேலர்  எல்லாரிலும்  திறமையுள்ள  மனிதரைத்  தெரிந்துகொண்டு,  அவர்களை  ஆயிரம்பேருக்கு  அதிபதிகளாகவும்,  நூறுபேருக்கு  அதிபதிகளாகவும்,  ஐம்பதுபேருக்கு  அதிபதிகளாகவும்,  பத்துப்பேருக்கு  அதிபதிகளாகவும்  ஜனங்கள்மேல்  தலைவராக்கினான்.  (யாத்திராகமம்  18:25)

moasea  isravealar  ellaarilum  thi’ramaiyu'l'la  manitharaith  therinthuko'ndu,  avarga'lai  aayirampearukku  athibathiga'laagavum,  noo’rupearukku  athibathiga'laagavum,  aimbathupearukku  athibathiga'laagavum,  paththuppearukku  athibathiga'laagavum  janangga'lmeal  thalaivaraakkinaan.  (yaaththiraagamam  18:25)

அவர்கள்  எப்பொழுதும்  ஜனங்களை  நியாயம்  விசாரித்தார்கள்;  வருத்தமான  காரியங்களைமாத்திரம்  மோசேயினிடத்தில்  கொண்டுவந்தார்கள்;  சிறிய  காரியங்களையெல்லாம்  தாங்களே  தீர்த்தார்கள்.  (யாத்திராகமம்  18:26)

avarga'l  eppozhuthum  janangga'lai  niyaayam  visaariththaarga'l;  varuththamaana  kaariyangga'laimaaththiram  moaseayinidaththil  ko'nduvanthaarga'l;  si’riya  kaariyangga'laiyellaam  thaangga'lea  theerththaarga'l.  (yaaththiraagamam  18:26)

பின்பு  மோசே  தன்  மாமனை  அனுப்பிவிட்டான்;  அவன்  திரும்பத்  தன்  தேசத்துக்குப்  போய்விட்டான்.  (யாத்திராகமம்  18:27)

pinbu  moasea  than  maamanai  anuppivittaan;  avan  thirumbath  than  theasaththukkup  poayvittaan.  (yaaththiraagamam  18:27)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!