Tuesday, July 19, 2016

Yaaththiraagamam 16 | யாத்திராகமம் 16 | Exodus 16

இஸ்ரவேல்  புத்திரராகிய  சபையார்  எல்லாரும்  ஏலிமைவிட்டுப்  பிரயாணம்  பண்ணி,  எகிப்து  தேசத்திலிருந்து  புறப்பட்ட  இரண்டாம்  மாதம்  பதினைந்தாம்  தேதியிலே,  ஏலிமுக்கும்  சீனாய்க்கும்  நடுவே  இருக்கிற  சீன்வனாந்தரத்தில்  சேர்ந்தார்கள்.  (யாத்திராகமம்  16:1)

israveal  puththiraraagiya  sabaiyaar  ellaarum  ealimaivittup  pirayaa'nam  pa'n'ni,  egipthu  theasaththilirunthu  pu’rappatta  ira'ndaam  maatham  pathinainthaam  theathiyilea,  ealimukkum  seenaaykkum  naduvea  irukki’ra  seenvanaantharaththil  searnthaarga'l.  (yaaththiraagamam  16:1)

அந்த  வனாந்தரத்திலே  இஸ்ரவேல்  புத்திரராகிய  சபையார்  எல்லாரும்  மோசேக்கும்  ஆரோனுக்கும்  விரோதமாக  முறுமுறுத்து:  (யாத்திராகமம்  16:2)

antha  vanaantharaththilea  israveal  puththiraraagiya  sabaiyaar  ellaarum  moaseakkum  aaroanukkum  viroathamaaga  mu’rumu’ruththu:  (yaaththiraagamam  16:2)

நாங்கள்  இறைச்சிப்  பாத்திரங்களண்டையிலே  உட்கார்ந்து  அப்பத்தைத்  திர்ப்தியாகச்  சாப்பிட்ட  எகிப்து  தேசத்திலே,  கர்த்தரின்  கையால்  செத்துப்போனோமானால்  தாவிளை;  இந்தக்  கூட்டம்  முழுவதையும்  பட்டினியினால்  கொல்லும்படி  நீங்கள்  எங்களைப்  புறப்படப்பண்ணி,  இந்த  வனாந்தரத்திலே  அழைத்துவந்தீர்களே  என்று  அவர்களிடத்தில்  சொன்னார்கள்.  (யாத்திராகமம்  16:3)

naangga'l  i’raichchip  paaththirangga'la'ndaiyilea  udkaarnthu  appaththaith  thirpthiyaagach  saappitta  egipthu  theasaththilea,  karththarin  kaiyaal  seththuppoanoamaanaal  thaavi'lai;  inthak  koottam  muzhuvathaiyum  pattiniyinaal  kollumpadi  neengga'l  engga'laip  pu’rappadappa'n'ni,  intha  vanaantharaththilea  azhaiththuvantheerga'lea  en’ru  avarga'lidaththil  sonnaarga'l.  (yaaththiraagamam  16:3)

அப்பொழுது  கர்த்தர்  மோசேயை  நோக்கி:  நான்  உங்களுக்கு  வானத்திலிருந்து  அப்பம்  வருஷிக்கப்பண்ணுவேன்;  ஜனங்கள்  போய்,  ஒவ்வொரு  நாளுக்கு  வேண்டியதை  ஒவ்வொரு  நாளிலும்  சேர்த்துக்கொள்ளவேண்டும்;  அதினால்  அவர்கள்  என்  நியாயப்பிரமாணத்தின்படி  நடப்பார்களோ  நடக்கமாட்டார்களோ  என்று  அவர்களைச்  சோதிப்பேன்.  (யாத்திராகமம்  16:4)

appozhuthu  karththar  moaseayai  noakki:  naan  ungga'lukku  vaanaththilirunthu  appam  varushikkappa'n'nuvean;  janangga'l  poay,  ovvoru  naa'lukku  vea'ndiyathai  ovvoru  naa'lilum  searththukko'l'lavea'ndum;  athinaal  avarga'l  en  niyaayappiramaa'naththinpadi  nadappaarga'loa  nadakkamaattaarga'loa  en’ru  avarga'laich  soathippean.  (yaaththiraagamam  16:4)

ஆறாம்  நாளிலோ,  அவர்கள்  நாள்தோறும்  சேர்க்கிறதைப்பார்க்கிலும்  இரண்டத்தனையாய்ச்  சேர்த்து,  அதை  ஆயத்தம்பண்ணிவைக்கக்கடவர்கள்  என்றார்.  (யாத்திராகமம்  16:5)

aa’raam  naa'liloa,  avarga'l  naa'lthoa’rum  searkki’rathaippaarkkilum  ira'ndaththanaiyaaych  searththu,  athai  aayaththampa'n'nivaikkakkadavarga'l  en’raar.  (yaaththiraagamam  16:5)

அப்பொழுது  மோசேயும்  ஆரோனும்  இஸ்ரவேல்  புத்திரர்  எல்லாரையும்  நோக்கி:  கர்த்தர்  உங்களை  எகிப்து  தேசத்திலிருந்து  புறப்படப்பண்ணினவர்  என்பதைச்  சாயங்காலத்தில்  அறிவீர்கள்;  (யாத்திராகமம்  16:6)

appozhuthu  moaseayum  aaroanum  israveal  puththirar  ellaaraiyum  noakki:  karththar  ungga'lai  egipthu  theasaththilirunthu  pu’rappadappa'n'ninavar  enbathaich  saayanggaalaththil  a’riveerga'l;  (yaaththiraagamam  16:6)

விடியற்காலத்தில்  கர்த்தருடைய  மகிமையையும்  காண்பீர்கள்;  கர்த்தருக்கு  விரோதமான  உங்கள்  முறுமுறுப்புகளை  அவர்  கேட்டார்;  நீங்கள்  எங்களுக்கு  விரோதமாய்  முறுமுறுக்கிறதற்கு  நாங்கள்  எம்மாத்திரம்  என்றார்கள்.  (யாத்திராகமம்  16:7)

vidiya’rkaalaththil  karththarudaiya  magimaiyaiyum  kaa'nbeerga'l;  karththarukku  viroathamaana  ungga'l  mu’rumu’ruppuga'lai  avar  keattaar;  neengga'l  engga'lukku  viroathamaay  mu’rumu’rukki’ratha’rku  naangga'l  emmaaththiram  en’raarga'l.  (yaaththiraagamam  16:7)

பின்னும்  மோசே:  சாயங்காலத்தில்  நீங்கள்  புசிக்கிறதற்குக்  கர்த்தர்  உங்களுக்கு  இறைச்சியையும்,  விடியற்காலத்தில்  நீங்கள்  திர்ப்தியடைகிறதற்கு  அப்பத்தையும்  கொடுக்கையில்  இது  விளங்கும்;  கர்த்தருக்கு  விரோதமாக  நீங்கள்  முறுமுறுத்த  உங்கள்  முறுமுறுப்புகளை  அவர்  கேட்டார்;  நாங்கள்  எம்மாத்திரம்?  உங்கள்  முறுமுறுப்புகள்  எங்களுக்கு  அல்ல,  கர்த்தருக்கே  விரோதமாய்  இருக்கிறது  என்றான்.  (யாத்திராகமம்  16:8)

pinnum  moasea:  saayanggaalaththil  neengga'l  pusikki’ratha’rkuk  karththar  ungga'lukku  i’raichchiyaiyum,  vidiya’rkaalaththil  neengga'l  thirpthiyadaigi’ratha’rku  appaththaiyum  kodukkaiyil  ithu  vi'langgum;  karththarukku  viroathamaaga  neengga'l  mu’rumu’ruththa  ungga'l  mu’rumu’ruppuga'lai  avar  keattaar;  naangga'l  emmaaththiram?  ungga'l  mu’rumu’ruppuga'l  engga'lukku  alla,  karththarukkea  viroathamaay  irukki’rathu  en’raan.  (yaaththiraagamam  16:8)

அப்பொழுது  மோசே  ஆரோனைப்  பார்த்து;  நீ  இஸ்ரவேல்  புத்திரராகிய  சபையார்  எல்லாரையும்  நோக்கி:  கர்த்தருடைய  சந்நிதியில்  சேருங்கள்,  அவர்  உங்கள்  முறுமுறுப்புகளைக்  கேட்டார்  என்று  சொல்  என்றான்.  (யாத்திராகமம்  16:9)

appozhuthu  moasea  aaroanaip  paarththu;  nee  israveal  puththiraraagiya  sabaiyaar  ellaaraiyum  noakki:  karththarudaiya  sannithiyil  searungga'l,  avar  ungga'l  mu’rumu’ruppuga'laik  keattaar  en’ru  sol  en’raan.  (yaaththiraagamam  16:9)

ஆரோன்  இஸ்ரவேல்  புத்திரராகிய  சபையாருக்கெல்லாம்  இதைச்  சொல்லுகிறபோது,  அவர்கள்  வனாந்தரதிசையாகத்  திரும்பிப்பார்த்தார்கள்;  அப்பொழுது  கர்த்தருடைய  மகிமை  மேகத்திலே  காணப்பட்டது.  (யாத்திராகமம்  16:10)

aaroan  israveal  puththiraraagiya  sabaiyaarukkellaam  ithaich  sollugi’rapoathu,  avarga'l  vanaantharathisaiyaagath  thirumbippaarththaarga'l;  appozhuthu  karththarudaiya  magimai  meagaththilea  kaa'nappattathu.  (yaaththiraagamam  16:10)

கர்த்தர்  மோசேயை  நோக்கி:  (யாத்திராகமம்  16:11)

karththar  moaseayai  noakki:  (yaaththiraagamam  16:11)

இஸ்ரவேல்  புத்திரரின்  முறுமுறுப்புகளைக்  கேட்டிருக்கிறேன்;  நீ  அவர்களோடே  பேசி,  நீங்கள்  சாயங்காலத்தில்  இறைச்சியைப்  புசித்து,  விடியற்காலத்தில்  அப்பத்தால்  திர்ப்தியாகி,  நான்  உங்கள்  தேவனாகிய  கர்த்தர்  என்பதை  அறிந்துகொள்வீர்கள்  என்று  சொல்  என்றார்.  (யாத்திராகமம்  16:12)

israveal  puththirarin  mu’rumu’ruppuga'laik  keattirukki’rean;  nee  avarga'loadea  peasi,  neengga'l  saayanggaalaththil  i’raichchiyaip  pusiththu,  vidiya’rkaalaththil  appaththaal  thirpthiyaagi,  naan  ungga'l  theavanaagiya  karththar  enbathai  a’rinthuko'lveerga'l  en’ru  sol  en’raar.  (yaaththiraagamam  16:12)

சாயங்காலத்தில்  காடைகள்  வந்து  விழுந்து  பாளயத்தை  மூடிக்கொண்டது.  விடியற்காலத்தில்  பாளயத்தைச்  சுற்றி  பனி  பெய்திருந்தது.  (யாத்திராகமம்  16:13)

saayanggaalaththil  kaadaiga'l  vanthu  vizhunthu  paa'layaththai  moodikko'ndathu.  vidiya’rkaalaththil  paa'layaththaich  sut’ri  pani  peythirunthathu.  (yaaththiraagamam  16:13)

பெய்திருந்த  பனி  நீங்கினபின்,  இதோ,  வனாந்தரத்தின்மீதெங்கும்  உருட்சியான  ஒரு  சிறிய  வஸ்து  உறைந்த  பனிக்கட்டிப்  பொடியத்தனையாய்த்  தரையின்மேல்  கிடந்தது.  (யாத்திராகமம்  16:14)

peythiruntha  pani  neengginapin,  ithoa,  vanaantharaththinmeethenggum  urudchiyaana  oru  si’riya  vasthu  u’raintha  panikkattip  podiyaththanaiyaayth  tharaiyinmeal  kidanthathu.  (yaaththiraagamam  16:14)

இஸ்ரவேல்  புத்திரர்  அதைக்  கண்டு,  அது  இன்னது  என்று  அறியாதிருந்து,  ஒருவரை  ஒருவர்  பார்த்து,  இது  என்ன  என்றார்கள்;  அப்பொழுது  மோசே  அவர்களை  நோக்கி:  இது  கர்த்தர்  உங்களுக்குப்  புசிக்கக்கொடுத்த  அப்பம்.  (யாத்திராகமம்  16:15)

israveal  puththirar  athaik  ka'ndu,  athu  innathu  en’ru  a’riyaathirunthu,  oruvarai  oruvar  paarththu,  ithu  enna  en’raarga'l;  appozhuthu  moasea  avarga'lai  noakki:  ithu  karththar  ungga'lukkup  pusikkakkoduththa  appam.  (yaaththiraagamam  16:15)

கர்த்தர்  கட்டளையிடுகிறது  என்னவென்றால்,  அவரவர்  புசிக்கும்  அளவுக்குத்தக்கதாக  அதில்  எடுத்துச்  சேர்க்கக்கடவீர்கள்;  உங்களிலுள்ள  ஆத்துமாக்களின்  இலக்கத்தின்படி,  அவனவன்  தன்  தன்  கூடாரத்தில்  இருக்கிறவர்களுக்காகத்  தலைக்கு  ஒரு  ஓமர்  அளவு  எடுத்துக்கொள்ளக்கடவன்  என்றான்.  (யாத்திராகமம்  16:16)

karththar  katta'laiyidugi’rathu  ennaven’raal,  avaravar  pusikkum  a'lavukkuththakkathaaga  athil  eduththuch  searkkakkadaveerga'l;  ungga'lilu'l'la  aaththumaakka'lin  ilakkaththinpadi,  avanavan  than  than  koodaaraththil  irukki’ravarga'lukkaagath  thalaikku  oru  oamar  a'lavu  eduththukko'l'lakkadavan  en’raan.  (yaaththiraagamam  16:16)

இஸ்ரவேல்  புத்திரர்  அப்படியே  செய்து,  சிலர்  மிகுதியாயும்  சிலர்  கொஞ்சமாயும்  சேர்த்தார்கள்.  (யாத்திராகமம்  16:17)

israveal  puththirar  appadiyea  seythu,  silar  miguthiyaayum  silar  kognchamaayum  searththaarga'l.  (yaaththiraagamam  16:17)

பின்பு,  அதை  ஓமரால்  அளந்தார்கள்:  மிகுதியாய்ச்  சேர்த்தவனுக்கு  மீதியானதும்  இல்லை,  கொஞ்சமாய்ச்  சேர்த்தவனுக்குக்  குறைவானதும்  இல்லை;  அவரவர்  தாங்கள்  புசிக்கும்  அளவுக்குத்தக்கதாகச்  சேர்த்தார்கள்.  (யாத்திராகமம்  16:18)

pinbu,  athai  oamaraal  a'lanthaarga'l:  miguthiyaaych  searththavanukku  meethiyaanathum  illai,  kognchamaaych  searththavanukkuk  ku’raivaanathum  illai;  avaravar  thaangga'l  pusikkum  a'lavukkuththakkathaagach  searththaarga'l.  (yaaththiraagamam  16:18)

மோசே  அவர்களை  நோக்கி:  ஒருவனும்  விடியற்காலம்மட்டும்  அதில்  ஒன்றும்  வைக்கக்கூடாது  என்று  அவர்களுக்குச்  சொல்லியும்;  (யாத்திராகமம்  16:19)

moasea  avarga'lai  noakki:  oruvanum  vidiya’rkaalammattum  athil  on’rum  vaikkakkoodaathu  en’ru  avarga'lukkuch  solliyum;  (yaaththiraagamam  16:19)

மோசேயின்  சொல்  கேளாமல்,  சிலர்  அதில்  விடியற்காலம்மட்டும்  கொஞ்சம்  மீதியாய்  வைத்தார்கள்;  அது  பூச்சி  பிடித்து  நாற்றமெடுத்தது.  அவர்கள்மேல்  மோசே  கோபங்கொண்டான்.  (யாத்திராகமம்  16:20)

moaseayin  sol  kea'laamal,  silar  athil  vidiya’rkaalammattum  kogncham  meethiyaay  vaiththaarga'l;  athu  poochchi  pidiththu  naat’rameduththathu.  avarga'lmeal  moasea  koabangko'ndaan.  (yaaththiraagamam  16:20)

அதை  விடியற்காலந்தோறும்  அவரவர்  புசிக்கும்  அளவுக்குத்தக்கதாகச்  சேர்த்தார்கள்,  வெயில்  ஏறஏற  அது  உருகிப்போம்.  (யாத்திராகமம்  16:21)

athai  vidiya’rkaalanthoa’rum  avaravar  pusikkum  a'lavukkuththakkathaagach  searththaarga'l,  veyil  ea’raea’ra  athu  urugippoam.  (yaaththiraagamam  16:21)

ஆறாம்  நாளில்  தலைக்கு  இரண்டு  ஓமர்  வீதமாக  இரண்டத்தனையாய்  ஆகாரம்  சேர்த்தார்கள்;  அப்பொழுது  சபையின்  தலைவர்  எல்லாரும்  வந்து,  அதை  மோசேக்கு  அறிவித்தார்கள்.  (யாத்திராகமம்  16:22)

aa’raam  naa'lil  thalaikku  ira'ndu  oamar  veethamaaga  ira'ndaththanaiyaay  aagaaram  searththaarga'l;  appozhuthu  sabaiyin  thalaivar  ellaarum  vanthu,  athai  moaseakku  a’riviththaarga'l.  (yaaththiraagamam  16:22)

அவன்  அவர்களை  நோக்கி:  கர்த்தர்  சொன்னது  இதுதான்;  நாளைக்குக்  கர்த்தருக்குரிய  பரிசுத்த  ஓய்வுநாளாகிய  ஓய்வு;  நீங்கள்  சுடவேண்டியதைச்சுட்டு,  வேவிக்கவேண்டியதை  வேவித்து,  மீதியாயிருக்கிறதையெல்லாம்  நாளைமட்டும்  உங்களுக்காக  வைத்துவையுங்கள்  என்றான்.  (யாத்திராகமம்  16:23)

avan  avarga'lai  noakki:  karththar  sonnathu  ithuthaan;  naa'laikkuk  karththarukkuriya  parisuththa  oayvunaa'laagiya  oayvu;  neengga'l  sudavea'ndiyathaichsuttu,  veavikkavea'ndiyathai  veaviththu,  meethiyaayirukki’rathaiyellaam  naa'laimattum  ungga'lukkaaga  vaiththuvaiyungga'l  en’raan.  (yaaththiraagamam  16:23)

மோசே  கட்டளையிட்டபடியே,  அதை  மறுநாள்வரைக்கும்  வைத்துவைத்தார்கள்;  அப்பொழுது  அது  நாறவும்  இல்லை,  அதிலே  பூச்சிபிடிக்கவும்  இல்லை.  (யாத்திராகமம்  16:24)

moasea  katta'laiyittapadiyea,  athai  ma’runaa'lvaraikkum  vaiththuvaiththaarga'l;  appozhuthu  athu  naa’ravum  illai,  athilea  poochchipidikkavum  illai.  (yaaththiraagamam  16:24)

அப்பொழுது  மோசே:  அதை  இன்றைக்குப்  புசியுங்கள்;  இன்று  கர்த்தருக்குரிய  ஓய்வுநாள்;  இன்று  நீங்கள்  அதை  வெளியிலே  காணமாட்டீர்கள்.  (யாத்திராகமம்  16:25)

appozhuthu  moasea:  athai  in’raikkup  pusiyungga'l;  in’ru  karththarukkuriya  oayvunaa'l;  in’ru  neengga'l  athai  ve'liyilea  kaa'namaatteerga'l.  (yaaththiraagamam  16:25)

ஆறுநாளும்  அதைச்  சேர்ப்பீர்களாக;  ஏழாம்நாள்  ஓய்வுநாளாயிருக்கிறது;  அதிலே  அது  உண்டாயிராது  என்றான்.  (யாத்திராகமம்  16:26)

aa’runaa'lum  athaich  searppeerga'laaga;  eazhaamnaa'l  oayvunaa'laayirukki’rathu;  athilea  athu  u'ndaayiraathu  en’raan.  (yaaththiraagamam  16:26)

ஏழாம்நாளில்  ஜனங்களில்  சிலர்  அதைச்  சேர்க்கப்  புறப்பட்டார்கள்;  அவர்கள்  அதைக்  காணவில்லை.  (யாத்திராகமம்  16:27)

eazhaamnaa'lil  janangga'lil  silar  athaich  searkkap  pu’rappattaarga'l;  avarga'l  athaik  kaa'navillai.  (yaaththiraagamam  16:27)

அப்பொழுது  கர்த்தர்  மோசேயை  நோக்கி:  என்  கட்டளைகளையும்  என்  பிரமாணங்களையும்  கைக்கொள்ள  எந்தமட்டும்  மனதில்லாதிருப்பீர்கள்?  (யாத்திராகமம்  16:28)

appozhuthu  karththar  moaseayai  noakki:  en  katta'laiga'laiyum  en  piramaa'nangga'laiyum  kaikko'l'la  enthamattum  manathillaathiruppeerga'l?  (yaaththiraagamam  16:28)

பாருங்கள்,  கர்த்தர்  உங்களுக்கு  ஓய்வுநாளை  அருளினபடியால்,  அவர்  உங்களுக்கு  ஆறாம்  நாளில்  இரண்டுநாளுக்கு  வேண்டிய  ஆகாரத்தைக்  கொடுக்கிறார்;  ஏழாம்நாளில்  உங்களில்  ஒருவனும்  தன்  தன்  ஸ்தானத்திலிருந்து  புறப்படாமல்,  அவனவன்  தன்  தன்  ஸ்தானத்திலே  இருக்கவேண்டும்  என்றார்.  (யாத்திராகமம்  16:29)

paarungga'l,  karththar  ungga'lukku  oayvunaa'lai  aru'linapadiyaal,  avar  ungga'lukku  aa’raam  naa'lil  ira'ndunaa'lukku  vea'ndiya  aagaaraththaik  kodukki’raar;  eazhaamnaa'lil  ungga'lil  oruvanum  than  than  sthaanaththilirunthu  pu’rappadaamal,  avanavan  than  than  sthaanaththilea  irukkavea'ndum  en’raar.  (yaaththiraagamam  16:29)

அப்படியே  ஜனங்கள்  ஏழாம்நாளில்  ஓய்ந்திருந்தார்கள்.  (யாத்திராகமம்  16:30)

appadiyea  janangga'l  eazhaamnaa'lil  oaynthirunthaarga'l.  (yaaththiraagamam  16:30)

இஸ்ரவேல்  வம்சத்தார்  அதற்கு  மன்னா  என்று  பேரிட்டார்கள்;  அது  கொத்துமல்லி  அளவாயும்  வெண்மைநிறமாயும்  இருந்தது,  அதின்  ருசி  தேனிட்ட  பணிகாரத்திற்கு  ஒப்பாயிருந்தது.  (யாத்திராகமம்  16:31)

israveal  vamsaththaar  atha’rku  mannaa  en’ru  pearittaarga'l;  athu  koththumalli  a'lavaayum  ve'nmaini’ramaayum  irunthathu,  athin  rusi  theanitta  pa'nigaaraththi’rku  oppaayirunthathu.  (yaaththiraagamam  16:31)

அப்பொழுது  மோசே:  கர்த்தர்  கட்டளையிட்ட  காரியம்  என்னவென்றால்,  நான்  உங்களை  எகிப்து  தேசத்திலிருந்து  புறப்படப்பண்ணினபோது,  வனாந்தரத்தில்  உங்களுக்குப்  புசிக்கக்கொடுத்த  அப்பத்தை  உங்கள்  சந்ததியார்  பார்க்கும்படிக்கு,  அவர்களுக்காக  அதைக்  காப்பதற்கு,  அதிலே  ஒரு  ஓமர்  நிறைய  எடுத்து  வைக்கவேண்டும்  என்றான்.  (யாத்திராகமம்  16:32)

appozhuthu  moasea:  karththar  katta'laiyitta  kaariyam  ennaven’raal,  naan  ungga'lai  egipthu  theasaththilirunthu  pu’rappadappa'n'ninapoathu,  vanaantharaththil  ungga'lukkup  pusikkakkoduththa  appaththai  ungga'l  santhathiyaar  paarkkumpadikku,  avarga'lukkaaga  athaik  kaappatha’rku,  athilea  oru  oamar  ni’raiya  eduththu  vaikkavea'ndum  en’raan.  (yaaththiraagamam  16:32)

மேலும்,  மோசே  ஆரோனை  நோக்கி:  நீ  ஒரு  கலசத்தை  எடுத்து,  அதிலே  ஒரு  ஓமர்  அளவு  மன்னாவைப்  போட்டு,  அதை  உங்கள்  சந்ததியாருக்காகக்  காப்பதற்குக்  கர்த்தருடைய  சந்நிதியிலே  வை  என்றான்.  (யாத்திராகமம்  16:33)

mealum,  moasea  aaroanai  noakki:  nee  oru  kalasaththai  eduththu,  athilea  oru  oamar  a'lavu  mannaavaip  poattu,  athai  ungga'l  santhathiyaarukkaagak  kaappatha’rkuk  karththarudaiya  sannithiyilea  vai  en’raan.  (yaaththiraagamam  16:33)

கர்த்தர்  மோசேக்குக்  கட்டளையிட்டபடியே  அது  காக்கப்படும்படி  ஆரோன்  அதைச்  சாட்சி  சந்நிதியில்  வைத்தான்.  (யாத்திராகமம்  16:34)

karththar  moaseakkuk  katta'laiyittapadiyea  athu  kaakkappadumpadi  aaroan  athaich  saadchi  sannithiyil  vaiththaan.  (yaaththiraagamam  16:34)

இஸ்ரவேல்  புத்திரர்  குடியிருப்பான  தேசத்துக்கு  வருமட்டும்  நாற்பது  வருஷமளவும்  மன்னாவைப்  புசித்தார்கள்;  அவர்கள்  கானான்  தேசத்தின்  எல்லையில்  சேரும்வரைக்கும்  மன்னாவைப்  புசித்தார்கள்.  (யாத்திராகமம்  16:35)

israveal  puththirar  kudiyiruppaana  theasaththukku  varumattum  naa’rpathu  varushama'lavum  mannaavaip  pusiththaarga'l;  avarga'l  kaanaan  theasaththin  ellaiyil  searumvaraikkum  mannaavaip  pusiththaarga'l.  (yaaththiraagamam  16:35)

ஒரு  ஓமரானது  எப்பாவிலே  பத்தில்  ஒரு  பங்கு.  (யாத்திராகமம்  16:36)

oru  oamaraanathu  eppaavilea  paththil  oru  panggu.  (yaaththiraagamam  16:36)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!