Monday, July 18, 2016

Yaaththiraagamam 15 | யாத்திராகமம் 15 | Exodus 15

அப்பொழுது  மோசேயும்  இஸ்ரவேல்  புத்திரரும்  கர்த்தரைப்  புகழ்ந்துபாடின  பாட்டு:  கர்த்தரைப்  பாடுவேன்;  அவர்  மகிமையாய்  வெற்றிசிறந்தார்;  குதிரையையும்  குதிரைவீரனையும்  கடலிலே  தள்ளினார்.  (யாத்திராகமம்  15:1)

appozhuthu  moaseayum  israveal  puththirarum  karththaraip  pugazhnthupaadina  paattu:  karththaraip  paaduvean;  avar  magimaiyaay  vet’risi’ranthaar;  kuthiraiyaiyum  kuthiraiveeranaiyum  kadalilea  tha'l'linaar.  (yaaththiraagamam  15:1)

கர்த்தர்  என்  பெலனும்  என்  கீதமுமானவர்;  அவர்  எனக்கு  இரட்சிப்புமானவர்;  அவரே  என்  தேவன்,  அவருக்கு  வாசஸ்தலத்தை  ஆயத்தம்பண்ணுவேன்;  அவரே  என்  தகப்பனுடைய  தேவன்,  அவரை  உயர்த்துவேன்;  (யாத்திராகமம்  15:2)

karththar  en  belanum  en  keethamumaanavar;  avar  enakku  iradchippumaanavar;  avarea  en  theavan,  avarukku  vaasasthalaththai  aayaththampa'n'nuvean;  avarea  en  thagappanudaiya  theavan,  avarai  uyarththuvean;  (yaaththiraagamam  15:2)

கர்த்தரே  யுத்தத்தில்  வல்லவர்;  கர்த்தர்  என்பது  அவருடைய  நாமம்.  (யாத்திராகமம்  15:3)

karththarea  yuththaththil  vallavar;  karththar  enbathu  avarudaiya  naamam.  (yaaththiraagamam  15:3)

பார்வோனின்  இரதங்களையும்  அவன்  சேனைகளையும்  சமுத்திரத்திலே  தள்ளிவிட்டார்;  அவனுடைய  பிரதான  அதிபதிகள்  சிவந்த  சமுத்திரத்தில்  அமிழ்ந்து  போனார்கள்.  (யாத்திராகமம்  15:4)

paarvoanin  irathangga'laiyum  avan  seanaiga'laiyum  samuththiraththilea  tha'l'livittaar;  avanudaiya  pirathaana  athibathiga'l  sivantha  samuththiraththil  amizhnthu  poanaarga'l.  (yaaththiraagamam  15:4)

ஆழி  அவர்களை  மூடிக்கொண்டது;  கல்லைப்போல  ஆழங்களில்  அமிழ்ந்துபோனார்கள்.  (யாத்திராகமம்  15:5)

aazhi  avarga'lai  moodikko'ndathu;  kallaippoala  aazhangga'lil  amizhnthupoanaarga'l.  (yaaththiraagamam  15:5)

கர்த்தாவே,  உம்முடைய  வலதுகரம்  பலத்தினால்  மகத்துவம்  சிறந்திருக்கிறது;  கர்த்தாவே,  உம்முடைய  வலதுகரம்  பகைஞனை  நொறுக்கிவிட்டது.  (யாத்திராகமம்  15:6)

karththaavea,  ummudaiya  valathukaram  balaththinaal  magaththuvam  si’ranthirukki’rathu;  karththaavea,  ummudaiya  valathukaram  pagaignanai  no’rukkivittathu.  (yaaththiraagamam  15:6)

உமக்கு  விரோதமாய்  எழும்பினவர்களை  உமது  முக்கியத்தின்  மகத்துவத்தினாலே  நிர்மூலமாக்கினீர்;  உம்முடைய  கோபாக்கினியை  அனுப்பினீர்,  அது  அவர்களைத்  தாளடியைப்போலப்  பட்சித்தது.  (யாத்திராகமம்  15:7)

umakku  viroathamaay  ezhumbinavarga'lai  umathu  mukkiyaththin  magaththuvaththinaalea  nirmoolamaakkineer;  ummudaiya  koabaakkiniyai  anuppineer,  athu  avarga'laith  thaa'ladiyaippoalap  padchiththathu.  (yaaththiraagamam  15:7)

உமது  நாசியின்  சுவாசத்தினால்  ஜலம்  குவிந்து  நின்றது;  வெள்ளம்  குவியலாக  நிமிர்ந்து  நின்றது;  ஆழமான  ஜலம்  நடுக்கடலிலே  உறைந்துபோயிற்று.  (யாத்திராகமம்  15:8)

umathu  naasiyin  suvaasaththinaal  jalam  kuvinthu  nin’rathu;  ve'l'lam  kuviyalaaga  nimirnthu  nin’rathu;  aazhamaana  jalam  nadukkadalilea  u’rainthupoayit’ru.  (yaaththiraagamam  15:8)

தொடருவேன்,  பிடிப்பேன்,  கொள்ளையாடிப்  பங்கிடுவேன்,  என்  ஆசை  அவர்களிடத்தில்  திர்ப்தியாகும்,  என்  பட்டயத்தை  உருவுவேன்,  என்  கை  அவர்களைச்  சங்கரிக்கும்  என்று  பகைஞன்  சொன்னான்.  (யாத்திராகமம்  15:9)

thodaruvean,  pidippean,  ko'l'laiyaadip  panggiduvean,  en  aasai  avarga'lidaththil  thirpthiyaagum,  en  pattayaththai  uruvuvean,  en  kai  avarga'laich  sanggarikkum  en’ru  pagaignan  sonnaan.  (yaaththiraagamam  15:9)

உம்முடைய  காற்றை  வீசப்பண்ணினீர்,  கடல்  அவர்களை  மூடிக்கொண்டது;  திரளான  தண்ணீர்களில்  ஈயம்போல  அமிழ்ந்துபோனார்கள்.  (யாத்திராகமம்  15:10)

ummudaiya  kaat’rai  veesappa'n'nineer,  kadal  avarga'lai  moodikko'ndathu;  thira'laana  tha'n'neerga'lil  eeyampoala  amizhnthupoanaarga'l.  (yaaththiraagamam  15:10)

கர்த்தாவே,  தேவர்களில்  உமக்கு  ஒப்பானவர்  யார்?  பரிசுத்தத்தில்  மகத்துவமுள்ளவரும்,  துதிகளில்  பயப்படத்தக்கவரும்,  அற்புதங்களைச்  செய்கிறவருமாகிய  உமக்கு  ஒப்பானவர்  யார்?  (யாத்திராகமம்  15:11)

karththaavea,  theavarga'lil  umakku  oppaanavar  yaar?  parisuththaththil  magaththuvamu'l'lavarum,  thuthiga'lil  bayappadaththakkavarum,  a’rputhangga'laich  seygi’ravarumaagiya  umakku  oppaanavar  yaar?  (yaaththiraagamam  15:11)

நீர்  உமது  வலதுகரத்தை  நீட்டினீர்;  பூமி  அவர்களை  விழுங்கிப்போட்டது.  (யாத்திராகமம்  15:12)

neer  umathu  valathukaraththai  neettineer;  boomi  avarga'lai  vizhunggippoattathu.  (yaaththiraagamam  15:12)

நீர்  மீட்டுக்கொண்ட  இந்த  ஜனங்களை  உமது  கிருபையினாலே  அழைத்து  வந்தீர்;  உம்முடைய  பரிசுத்த  வாசஸ்தலத்துக்கு  நேராக  அவர்களை  உமது  பலத்தினால்  வழிநடத்தினீர்.  (யாத்திராகமம்  15:13)

neer  meettukko'nda  intha  janangga'lai  umathu  kirubaiyinaalea  azhaiththu  vantheer;  ummudaiya  parisuththa  vaasasthalaththukku  nearaaga  avarga'lai  umathu  balaththinaal  vazhinadaththineer.  (yaaththiraagamam  15:13)

ஜனங்கள்  அதைக்  கேட்டுத்  தத்தளிப்பார்கள்;  பெலிஸ்தியாவின்  குடிகளைத்  திகில்  பிடிக்கும்.  (யாத்திராகமம்  15:14)

janangga'l  athaik  keattuth  thaththa'lippaarga'l;  pelisthiyaavin  kudiga'laith  thigil  pidikkum.  (yaaththiraagamam  15:14)

ஏதோமின்  பிரபுக்கள்  கலங்குவார்கள்;  மோவாபின்  பராக்கிரமசாலிகளை  நடுக்கம்  பிடிக்கும்;  கானானின்  குடிகள்  யாவரும்  கரைந்துபோவார்கள்.  (யாத்திராகமம்  15:15)

eathoamin  pirabukka'l  kalangguvaarga'l;  moavaabin  baraakkiramasaaliga'lai  nadukkam  pidikkum;  kaanaanin  kudiga'l  yaavarum  karainthupoavaarga'l.  (yaaththiraagamam  15:15)

பயமும்  திகிலும்  அவர்கள்மேல்  விழும்.  கர்த்தாவே,  உமது  ஜனங்கள்  கடந்துபோகும்வரையும்,  நீர்  மீட்ட  ஜனங்களே  கடந்துபோகும்வரையும்,  அவர்கள்  உம்முடைய  புயத்தின்  மகத்துவத்தினால்  கல்லைப்போல  அசைவற்றிருப்பார்கள்.  (யாத்திராகமம்  15:16)

bayamum  thigilum  avarga'lmeal  vizhum.  karththaavea,  umathu  janangga'l  kadanthupoagumvaraiyum,  neer  meetta  janangga'lea  kadanthupoagumvaraiyum,  avarga'l  ummudaiya  puyaththin  magaththuvaththinaal  kallaippoala  asaivat’riruppaarga'l.  (yaaththiraagamam  15:16)

நீர்  அவர்களைக்  கொண்டுபோய்,  கர்த்தராகிய  தேவரீர்  வாசம்பண்ணுகிறதற்கு  நியமித்த  ஸ்தானமாகிய  உம்முடைய  சுதந்தரத்தின்  பர்வதத்திலும்,  ஆண்டவராகிய  தேவரீருடைய  கரங்கள்  ஸ்தாபித்த  பரிசுத்த  ஸ்தலத்திலும்  அவர்களை  நாட்டுவீர்.  (யாத்திராகமம்  15:17)

neer  avarga'laik  ko'ndupoay,  karththaraagiya  theavareer  vaasampa'n'nugi’ratha’rku  niyamiththa  sthaanamaagiya  ummudaiya  suthantharaththin  parvathaththilum,  aa'ndavaraagiya  theavareerudaiya  karangga'l  sthaabiththa  parisuththa  sthalaththilum  avarga'lai  naattuveer.  (yaaththiraagamam  15:17)

கர்த்தர்  சதாகாலங்களாகிய  என்றென்றைக்கும்  ராஜரிகம்  பண்ணுவார்.  (யாத்திராகமம்  15:18)

karththar  sathaakaalangga'laagiya  en’ren’raikkum  raajarigam  pa'n'nuvaar.  (yaaththiraagamam  15:18)

பார்வோனின்  குதிரைகள்  அவனுடைய  இரதங்களோடும்  குதிரைவீரரோடும்  சமுத்திரத்தில்  பிரவேசித்தது;  கர்த்தர்  சமுத்திரத்தின்  ஜலத்தை  அவர்கள்மேல்  திரும்பப்பண்ணினார்;  இஸ்ரவேல்  புத்திரரோ  சமுத்திரத்தின்  நடுவே  வெட்டாந்தரையிலே  நடந்துபோனார்கள்  என்று  பாடினார்கள்.  (யாத்திராகமம்  15:19)

paarvoanin  kuthiraiga'l  avanudaiya  irathangga'loadum  kuthiraiveeraroadum  samuththiraththil  piraveasiththathu;  karththar  samuththiraththin  jalaththai  avarga'lmeal  thirumbappa'n'ninaar;  israveal  puththiraroa  samuththiraththin  naduvea  vettaantharaiyilea  nadanthupoanaarga'l  en’ru  paadinaarga'l.  (yaaththiraagamam  15:19)

ஆரோனின்  சகோதரியாகிய  மிரியாம்  என்னும்  தீர்க்கதரிசியானவளும்  தன்  கையிலே  தம்புரை  எடுத்துக்கொண்டாள்;  சகல  ஸ்திரீகளும்  தம்புருகளோடும்  நடனத்தோடும்  அவளுக்குப்  பின்னே  புறப்பட்டுப்போனார்கள்.  (யாத்திராகமம்  15:20)

aaroanin  sagoathariyaagiya  miriyaam  ennum  theerkkatharisiyaanava'lum  than  kaiyilea  thamburai  eduththukko'ndaa'l;  sagala  sthireega'lum  thamburuga'loadum  nadanaththoadum  ava'lukkup  pinnea  pu’rappattuppoanaarga'l.  (yaaththiraagamam  15:20)

மிரியாம்  அவர்களுக்குப்  பிரதிவசனமாக:  கர்த்தரைப்  பாடுங்கள்,  அவர்  மகிமையாய்  வெற்றிசிறந்தார்;  குதிரையையும்  குதிரைவீரனையும்  கடலிலே  தள்ளினார்  என்று  பாடினாள்.  (யாத்திராகமம்  15:21)

miriyaam  avarga'lukkup  pirathivasanamaaga:  karththaraip  paadungga'l,  avar  magimaiyaay  vet’risi’ranthaar;  kuthiraiyaiyum  kuthiraiveeranaiyum  kadalilea  tha'l'linaar  en’ru  paadinaa'l.  (yaaththiraagamam  15:21)

பின்பு  மோசே  இஸ்ரவேல்  ஜனங்களைச்  சிவந்த  சமுத்திரத்திலிருந்து  பிரயாணப்படுத்தினான்.  அவர்கள்  சூர்வனாந்தரத்துக்குப்  புறப்பட்டுப்போய்,  மூன்றுநாள்  வனாந்தரத்தில்  தண்ணீர்  கிடையாமல்  நடந்தார்கள்.  (யாத்திராகமம்  15:22)

pinbu  moasea  israveal  janangga'laich  sivantha  samuththiraththilirunthu  pirayaa'nappaduththinaan.  avarga'l  soorvanaantharaththukkup  pu’rappattuppoay,  moon’runaa'l  vanaantharaththil  tha'n'neer  kidaiyaamal  nadanthaarga'l.  (yaaththiraagamam  15:22)

அவர்கள்  மாராவிலே  வந்தபோது,  மாராவின்  தண்ணீர்  கசப்பாயிருந்ததினால்  அதைக்  குடிக்க  அவர்களுக்குக்  கூடாதிருந்தது;  அதினால்  அவ்விடத்துக்கு  மாரா  என்று  பேரிடப்பட்டது.  (யாத்திராகமம்  15:23)

avarga'l  maaraavilea  vanthapoathu,  maaraavin  tha'n'neer  kasappaayirunthathinaal  athaik  kudikka  avarga'lukkuk  koodaathirunthathu;  athinaal  avvidaththukku  maaraa  en’ru  pearidappattathu.  (yaaththiraagamam  15:23)

அப்பொழுது  ஜனங்கள்  மோசேக்கு  விரோதமாய்  முறுமுறுத்து:  என்னத்தைக்  குடிப்போம்  என்றார்கள்.  (யாத்திராகமம்  15:24)

appozhuthu  janangga'l  moaseakku  viroathamaay  mu’rumu’ruththu:  ennaththaik  kudippoam  en’raarga'l.  (yaaththiraagamam  15:24)

மோசே  கர்த்தரை  நோக்கிக்  கூப்பிட்டான்;  அப்பொழுது  கர்த்தர்  மோசேக்கு  ஒரு  மரத்தைக்  காண்பித்தார்;  அதை  அவன்  தண்ணீரில்  போட்டவுடனே,  அது  மதுரமான  தண்ணீராயிற்று.  அவர்  அங்கே  அவர்களுக்கு  ஒரு  நியமத்தையும்  ஒரு  நியாயத்தையும்  கட்டளையிட்டு,  அங்கே  அவர்களைச்  சோதித்து:  (யாத்திராகமம்  15:25)

moasea  karththarai  noakkik  kooppittaan;  appozhuthu  karththar  moaseakku  oru  maraththaik  kaa'nbiththaar;  athai  avan  tha'n'neeril  poattavudanea,  athu  mathuramaana  tha'n'neeraayit’ru.  avar  anggea  avarga'lukku  oru  niyamaththaiyum  oru  niyaayaththaiyum  katta'laiyittu,  anggea  avarga'laich  soathiththu:  (yaaththiraagamam  15:25)

நீ  உன்  தேவனாகிய  கர்த்தரின்  சத்தத்தைக்  கவனமாய்க்  கேட்டு,  அவர்  பார்வைக்குச்  செம்மையானவைகளைச்  செய்து,  அவர்  கட்டளைகளுக்குச்  செவிகொடுத்து,  அவருடைய  நியமங்கள்  யாவையும்  கைக்கொண்டால்,  நான்  எகிப்தியருக்கு  வரப்பண்ணின  வியாதிகளில்  ஒன்றையும்  உனக்கு  வரப்பண்ணேன்;  நானே  உன்  பரிகாரியாகிய  கர்த்தர்  என்றார்.  (யாத்திராகமம்  15:26)

nee  un  theavanaagiya  karththarin  saththaththaik  kavanamaayk  keattu,  avar  paarvaikkuch  semmaiyaanavaiga'laich  seythu,  avar  katta'laiga'lukkuch  sevikoduththu,  avarudaiya  niyamangga'l  yaavaiyum  kaikko'ndaal,  naan  egipthiyarukku  varappa'n'nina  viyaathiga'lil  on’raiyum  unakku  varappa'n'nean;  naanea  un  parigaariyaagiya  karththar  en’raar.  (yaaththiraagamam  15:26)

பின்பு  அவர்கள்  ஏலிமுக்கு  வந்தார்கள்;  அங்கே  பன்னிரண்டு  நீரூற்றுகளும்  எழுபது  பேரீச்சமரங்களும்  இருந்தது;  அங்கே  தண்ணீர்  அருகே  பாளயமிறங்கினார்கள்.  (யாத்திராகமம்  15:27)

pinbu  avarga'l  ealimukku  vanthaarga'l;  anggea  pannira'ndu  neeroot’ruga'lum  ezhubathu  peareechchamarangga'lum  irunthathu;  anggea  tha'n'neer  arugea  paa'layami’rangginaarga'l.  (yaaththiraagamam  15:27)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!