Monday, July 18, 2016

Yaaththiraagamam 12 | யாத்திராகமம் 12 | Exodus 12

கர்த்தர்  எகிப்து  தேசத்தில்  மோசேயையும்  ஆரோனையும்  நோக்கி:  (யாத்திராகமம்  12:1)

karththar  egipthu  theasaththil  moaseayaiyum  aaroanaiyum  noakki:  (yaaththiraagamam  12:1)

இந்த  மாதம்  உங்களுக்குப்  பிரதான  மாதம்;  இது  உங்களுக்கு  வருஷத்தின்  முதலாம்  மாதமாயிருப்பதாக.  (யாத்திராகமம்  12:2)

intha  maatham  ungga'lukkup  pirathaana  maatham;  ithu  ungga'lukku  varushaththin  muthalaam  maathamaayiruppathaaga.  (yaaththiraagamam  12:2)

நீங்கள்  இஸ்ரவேல்  சபையார்  யாவரையும்  நோக்கி:  இந்த  மாதம்  பத்தாம்  தேதியில்  வீட்டுத்தலைவர்கள்,  வீட்டுக்கு  ஒரு  ஆட்டுக்குட்டியாக,  ஒவ்வொருவரும்  ஒவ்வொரு  ஆட்டுக்குட்டியைத்  தெரிந்து  கொள்ளக்கடவர்கள்.  (யாத்திராகமம்  12:3)

neengga'l  israveal  sabaiyaar  yaavaraiyum  noakki:  intha  maatham  paththaam  theathiyil  veettuththalaivarga'l,  veettukku  oru  aattukkuttiyaaga,  ovvoruvarum  ovvoru  aattukkuttiyaith  therinthu  ko'l'lakkadavarga'l.  (yaaththiraagamam  12:3)

ஒரு  வீட்டில்  இருக்கிறவர்கள்  ஒரு  ஆட்டுக்குட்டியைப்  புசிக்கிறதற்குப்  போதுமான  பேர்களாயிராமற்போனால்,  அவனும்  அவன்  சமீபத்திலிருக்கிற  அவனுடைய  அயல்வீட்டுக்காரனும்,  தங்களிடத்திலுள்ள  ஆத்துமாக்களின்  இலக்கத்திற்குத்தக்கதாக  ஒரு  ஆட்டுக்குட்டியைத்  தெரிந்துகொள்ளவேண்டும்;  அவனவன்  புசிப்புக்குத்தக்கதாக  இலக்கம்  பார்த்து,  ஆட்டுக்குட்டியைத்  தெரிந்துகொள்ளவேண்டும்.  (யாத்திராகமம்  12:4)

oru  veettil  irukki’ravarga'l  oru  aattukkuttiyaip  pusikki’ratha’rkup  poathumaana  pearga'laayiraama’rpoanaal,  avanum  avan  sameebaththilirukki’ra  avanudaiya  ayalveettukkaaranum,  thangga'lidaththilu'l'la  aaththumaakka'lin  ilakkaththi’rkuththakkathaaga  oru  aattukkuttiyaith  therinthuko'l'lavea'ndum;  avanavan  pusippukkuththakkathaaga  ilakkam  paarththu,  aattukkuttiyaith  therinthuko'l'lavea'ndum.  (yaaththiraagamam  12:4)

அந்த  ஆட்டுக்குட்டி  பழுதற்றதும்  ஆணும்  ஒரு  வயதுள்ளதுமாய்  இருக்க  வேண்டும்;  செம்மறியாடுகளிலாவது  வெள்ளாடுகளிலாவது  அதைத்  தெரிந்து  கொள்ளலாம்.  (யாத்திராகமம்  12:5)

antha  aattukkutti  pazhuthat’rathum  aa'num  oru  vayathu'l'lathumaay  irukka  vea'ndum;  semma’riyaaduga'lilaavathu  ve'l'laaduga'lilaavathu  athaith  therinthu  ko'l'lalaam.  (yaaththiraagamam  12:5)

அதை  இந்த  மாதம்  பதினாலாம்  தேதிவரைக்கும்  வைத்திருந்து,  இஸ்ரவேல்  சபையின்  ஒவ்வொரு  கூட்டத்தாரும்  சாயங்காலத்தில்  அதை  அடித்து,  (யாத்திராகமம்  12:6)

athai  intha  maatham  pathinaalaam  theathivaraikkum  vaiththirunthu,  israveal  sabaiyin  ovvoru  koottaththaarum  saayanggaalaththil  athai  adiththu,  (yaaththiraagamam  12:6)

அதின்  இரத்தத்தில்  கொஞ்சம்  எடுத்து,  தாங்கள்  அதைப்  புசிக்கும்  வீட்டுவாசல்  நிலைக்கால்கள்  இரண்டிலும்  நிலையின்  மேற்சட்டத்திலும்  தெளித்து,  (யாத்திராகமம்  12:7)

athin  iraththaththil  kogncham  eduththu,  thaangga'l  athaip  pusikkum  veettuvaasal  nilaikkaalga'l  ira'ndilum  nilaiyin  mea’rsattaththilum  the'liththu,  (yaaththiraagamam  12:7)

அன்று  ராத்திரியிலே  அதின்  மாம்சத்தை  நெருப்பினால்  சுட்டு,  புளிப்பில்லா  அப்பத்தோடும்  கசப்பான  கீரையோடும்  அதைப்  புசிக்கக்கடவர்கள்.  (யாத்திராகமம்  12:8)

an’ru  raaththiriyilea  athin  maamsaththai  neruppinaal  suttu,  pu'lippillaa  appaththoadum  kasappaana  keeraiyoadum  athaip  pusikkakkadavarga'l.  (yaaththiraagamam  12:8)

பச்சையாயும்  தண்ணீரில்  அவிக்கப்பட்டதாயும்  அல்ல;  அதின்  தலையையும்  அதின்  தொடைகளையும்  அதற்குள்ள  யாவையும்  ஏகமாய்  நெருப்பினால்  சுட்டதாய்  அதைப்  புசிப்பீர்களாக.  (யாத்திராகமம்  12:9)

pachchaiyaayum  tha'n'neeril  avikkappattathaayum  alla;  athin  thalaiyaiyum  athin  thodaiga'laiyum  atha’rku'l'la  yaavaiyum  eagamaay  neruppinaal  suttathaay  athaip  pusippeerga'laaga.  (yaaththiraagamam  12:9)

அதிலே  ஒன்றையும்  விடியற்காலம்மட்டும்  மீதியாக  வைக்காமல்,  விடியற்காலம்மட்டும்  அதிலே  மீதியாய்  இருக்கிறதை  அக்கினியால்  சுட்டெரிப்பீர்களாக.  (யாத்திராகமம்  12:10)

athilea  on’raiyum  vidiya’rkaalammattum  meethiyaaga  vaikkaamal,  vidiya’rkaalammattum  athilea  meethiyaay  irukki’rathai  akkiniyaal  sutterippeerga'laaga.  (yaaththiraagamam  12:10)

அதைப்  புசிக்கவேண்டிய  விதமாவது,  நீங்கள்  உங்கள்  அரைகளில்  கச்சை  கட்டிக்கொண்டும்,  உங்கள்  கால்களில்  பாதரட்சை  தொடுத்துக்கொண்டும்,  உங்கள்  கையில்  தடி  பிடித்துக்கொண்டும்  அதைத்  தீவிரமாய்ப்  புசிக்கக்கடவீர்கள்;  அது  கர்த்தருடைய  பஸ்கா.  (யாத்திராகமம்  12:11)

athaip  pusikkavea'ndiya  vithamaavathu,  neengga'l  ungga'l  araiga'lil  kachchai  kattikko'ndum,  ungga'l  kaalga'lil  paatharadchai  thoduththukko'ndum,  ungga'l  kaiyil  thadi  pidiththukko'ndum  athaith  theeviramaayp  pusikkakkadaveerga'l;  athu  karththarudaiya  paskaa.  (yaaththiraagamam  12:11)

அந்த  ராத்திரியிலே  நான்  எகிப்துதேசம்  எங்கும்  கடந்துபோய்,  எகிப்துதேசத்திலுள்ள  மனிதர்முதல்  மிருகஜீவன்கள்மட்டும்,  முதற்பேறாயிருக்கிறவைகளையெல்லாம்  அதம்பண்ணி,  எகிப்து  தேவர்களின்மேல்  நீதியைச்  செலுத்துவேன்;  நானே  கர்த்தர்.  (யாத்திராகமம்  12:12)

antha  raaththiriyilea  naan  egipthutheasam  enggum  kadanthupoay,  egipthutheasaththilu'l'la  manitharmuthal  mirugajeevanga'lmattum,  mutha’rpea’raayirukki’ravaiga'laiyellaam  athampa'n'ni,  egipthu  theavarga'linmeal  neethiyaich  seluththuvean;  naanea  karththar.  (yaaththiraagamam  12:12)

நீங்கள்  இருக்கும்  வீடுகளில்  அந்த  இரத்தம்  உங்களுக்காக  அடையாளமாய்  இருக்கும்;  அந்த  இரத்தத்தை  நான்  கண்டு,  உங்களைக்  கடந்துபோவேன்;  நான்  எகிப்து  தேசத்தை  அழிக்கும்போது,  அழிக்கும்  வாதை  உங்களுக்குள்ளே  வராதிருக்கும்.  (யாத்திராகமம்  12:13)

neengga'l  irukkum  veeduga'lil  antha  iraththam  ungga'lukkaaga  adaiyaa'lamaay  irukkum;  antha  iraththaththai  naan  ka'ndu,  ungga'laik  kadanthupoavean;  naan  egipthu  theasaththai  azhikkumpoathu,  azhikkum  vaathai  ungga'lukku'l'lea  varaathirukkum.  (yaaththiraagamam  12:13)

அந்த  நாள்  உங்களுக்கு  நினைவுகூருதலான  நாளாய்  இருக்கக்கடவது;  அதைக்  கர்த்தருக்குப்  பண்டிகையாக  ஆசரிப்பீர்களாக;  அதை  உங்கள்  தலைமுறைதோறும்  நித்திய  நியமமாக  ஆசரிக்கக்கடவீர்கள்.  (யாத்திராகமம்  12:14)

antha  naa'l  ungga'lukku  ninaivukooruthalaana  naa'laay  irukkakkadavathu;  athaik  karththarukkup  pa'ndigaiyaaga  aasarippeerga'laaga;  athai  ungga'l  thalaimu’raithoa’rum  niththiya  niyamamaaga  aasarikkakkadaveerga'l.  (yaaththiraagamam  12:14)

புளிப்பில்லா  அப்பத்தை  ஏழுநாளளவும்  புசிக்கக்கடவீர்கள்;  முதலாம்  நாளில்தானே  புளித்தமாவை  உங்கள்  வீடுகளிலிருந்து  நீக்கவேண்டும்;  முதலாம்  நாள்  தொடங்கி  ஏழாம்  நாள்வரைக்கும்  புளித்த  அப்பம்  புசிக்கிறவன்  எவனோ  அந்த  ஆத்துமா  இஸ்ரவேலரிலிருந்து  அறுப்புண்டுபோவான்.  (யாத்திராகமம்  12:15)

pu'lippillaa  appaththai  eazhunaa'la'lavum  pusikkakkadaveerga'l;  muthalaam  naa'lilthaanea  pu'liththamaavai  ungga'l  veeduga'lilirunthu  neekkavea'ndum;  muthalaam  naa'l  thodanggi  eazhaam  naa'lvaraikkum  pu'liththa  appam  pusikki’ravan  evanoa  antha  aaththumaa  isravealarilirunthu  a’ruppu'ndupoavaan.  (yaaththiraagamam  12:15)

முதலாம்  நாளில்  பரிசுத்த  சபை  கூடுதலும்,  ஏழாம்  நாளிலும்  பரிசுத்த  சபைகூடுதலும்  இருக்கவேண்டும்;  அவைகளில்  ஒரு  வேலையும்  செய்யப்படலாகாது;  அவரவர்  சாப்பிடுகிறதற்குத்  தேவையானதுமாத்திரம்  உங்களால்  செய்யப்படலாம்.  (யாத்திராகமம்  12:16)

muthalaam  naa'lil  parisuththa  sabai  kooduthalum,  eazhaam  naa'lilum  parisuththa  sabaikooduthalum  irukkavea'ndum;  avaiga'lil  oru  vealaiyum  seyyappadalaagaathu;  avaravar  saappidugi’ratha’rkuth  theavaiyaanathumaaththiram  ungga'laal  seyyappadalaam.  (yaaththiraagamam  12:16)

புளிப்பில்லா  அப்பப்பண்டிகையை  ஆசரிப்பீர்களாக;  இந்த  நாளில்தான்  நான்  உங்கள்  சேனைகளை  எகிப்து  தேசத்திலிருந்து  புறப்படப்பண்ணினேன்;  ஆகையால்,  உங்கள்  தலைமுறைதோறும்  நித்திய  நியமமாக  இந்த  நாளை  ஆசரிக்கக்கடவீர்கள்.  (யாத்திராகமம்  12:17)

pu'lippillaa  appappa'ndigaiyai  aasarippeerga'laaga;  intha  naa'lilthaan  naan  ungga'l  seanaiga'lai  egipthu  theasaththilirunthu  pu’rappadappa'n'ninean;  aagaiyaal,  ungga'l  thalaimu’raithoa’rum  niththiya  niyamamaaga  intha  naa'lai  aasarikkakkadaveerga'l.  (yaaththiraagamam  12:17)

முதலாம்  மாதம்  பதினாலாம்  தேதி  சாயங்காலந்தொடங்கி  மாதத்தின்  இருபத்தோராம்  தேதி  சாயங்காலம்வரைக்கும்  புளிப்பில்லா  அப்பம்  புசிக்கக்கடவீர்கள்.  (யாத்திராகமம்  12:18)

muthalaam  maatham  pathinaalaam  theathi  saayanggaalanthodanggi  maathaththin  irubaththoaraam  theathi  saayanggaalamvaraikkum  pu'lippillaa  appam  pusikkakkadaveerga'l.  (yaaththiraagamam  12:18)

ஏழுநாளளவும்  உங்கள்  வீடுகளில்  புளித்த  மா  காணப்படலாகாது;  எவனாகிலும்  புளிப்பிடப்பட்டதைப்  புசித்தால்,  அவன்  பரதேசியானாலும்  சுதேசியானாலும்,  அந்த  ஆத்துமா  இஸ்ரவேல்  சபையில்  இராமல்  அறுப்புண்டுபோவான்.  (யாத்திராகமம்  12:19)

eazhunaa'la'lavum  ungga'l  veeduga'lil  pu'liththa  maa  kaa'nappadalaagaathu;  evanaagilum  pu'lippidappattathaip  pusiththaal,  avan  paratheasiyaanaalum  sutheasiyaanaalum,  antha  aaththumaa  israveal  sabaiyil  iraamal  a’ruppu'ndupoavaan.  (yaaththiraagamam  12:19)

புளிப்பிடப்பட்ட  யாதொன்றையும்  நீங்கள்  புசிக்கவேண்டாம்;  உங்கள்  வாசஸ்தலங்களிலெல்லாம்  புளிப்பில்லா  அப்பம்  புசிக்கக்கடவீர்கள்  என்று  சொல்  என்றார்.  (யாத்திராகமம்  12:20)

pu'lippidappatta  yaathon’raiyum  neengga'l  pusikkavea'ndaam;  ungga'l  vaasasthalangga'lilellaam  pu'lippillaa  appam  pusikkakkadaveerga'l  en’ru  sol  en’raar.  (yaaththiraagamam  12:20)

அப்பொழுது  மோசே  இஸ்ரவேல்  மூப்பர்  யாவரையும்  அழைப்பித்து:  நீங்கள்  உங்கள்  குடும்பங்களுக்குத்  தக்கதாக  உங்களுக்கு  ஆட்டுக்குட்டியைத்  தெரிந்தெடுத்துக்கொண்டு,  பஸ்காவை  அடித்து,  (யாத்திராகமம்  12:21)

appozhuthu  moasea  israveal  mooppar  yaavaraiyum  azhaippiththu:  neengga'l  ungga'l  kudumbangga'lukkuth  thakkathaaga  ungga'lukku  aattukkuttiyaith  therintheduththukko'ndu,  paskaavai  adiththu,  (yaaththiraagamam  12:21)

ஈசோப்புக்  கொழுந்துகளின்  கொத்தை  எடுத்துக்  கிண்ணியில்  இருக்கும்  இரத்தத்தில்  தோய்த்து,  அதில்  இருக்கும்  அந்த  இரத்தத்தை  வாசல்  நிலைக்கால்களின்  மேற்சட்டத்திலும்  வாசலின்  நிலைக்கால்கள்  இரண்டிலும்  தெளியுங்கள்;  விடியற்காலம்வரைக்கும்  உங்களில்  ஒருவரும்  வீட்டு  வாசலைவிட்டுப்  புறப்படவேண்டாம்.  (யாத்திராகமம்  12:22)

eesoappuk  kozhunthuga'lin  koththai  eduththuk  ki'n'niyil  irukkum  iraththaththil  thoayththu,  athil  irukkum  antha  iraththaththai  vaasal  nilaikkaalga'lin  mea’rsattaththilum  vaasalin  nilaikkaalga'l  ira'ndilum  the'liyungga'l;  vidiya’rkaalamvaraikkum  ungga'lil  oruvarum  veettu  vaasalaivittup  pu’rappadavea'ndaam.  (yaaththiraagamam  12:22)

கர்த்தர்  எகிப்தியரை  அதம்பண்ணுகிறதற்குக்  கடந்துவருவார்;  நிலையின்  மேற்சட்டத்திலும்  வாசலின்  நிலைக்கால்கள்  இரண்டிலும்  அந்த  இரத்தத்தைக்  காணும்போது,  கர்த்தர்  சங்காரக்காரனை  உங்கள்  வீடுகளில்  உங்களை  அதம்பண்ணுகிறதற்கு  வரவொட்டாமல்,  வாசற்படியை  விலகிக்  கடந்துபோவார்.  (யாத்திராகமம்  12:23)

karththar  egipthiyarai  athampa'n'nugi’ratha’rkuk  kadanthuvaruvaar;  nilaiyin  mea’rsattaththilum  vaasalin  nilaikkaalga'l  ira'ndilum  antha  iraththaththaik  kaa'numpoathu,  karththar  sanggaarakkaaranai  ungga'l  veeduga'lil  ungga'lai  athampa'n'nugi’ratha’rku  varavottaamal,  vaasa’rpadiyai  vilagik  kadanthupoavaar.  (yaaththiraagamam  12:23)

இந்தக்  காரியத்தை  உங்களுக்கும்  உங்கள்  பிள்ளைகளுக்கும்  நித்திய  நியமமாகக்  கைக்கொள்ளக்கடவீர்கள்.  (யாத்திராகமம்  12:24)

inthak  kaariyaththai  ungga'lukkum  ungga'l  pi'l'laiga'lukkum  niththiya  niyamamaagak  kaikko'l'lakkadaveerga'l.  (yaaththiraagamam  12:24)

கர்த்தர்  உங்களுக்குத்  தாம்  சொன்னபடி  கொடுக்கப்போகிற  தேசத்திலே  நீங்கள்  போய்ச்  சேரும்போது,  இந்த  ஆராதனையைக்  கைக்கொள்ளக்கடவீர்கள்.  (யாத்திராகமம்  12:25)

karththar  ungga'lukkuth  thaam  sonnapadi  kodukkappoagi’ra  theasaththilea  neengga'l  poaych  searumpoathu,  intha  aaraathanaiyaik  kaikko'l'lakkadaveerga'l.  (yaaththiraagamam  12:25)

அப்பொழுது  உங்கள்  பிள்ளைகள்:  இந்த  ஆராதனையின்  கருத்து  என்ன  என்று  உங்களைக்  கேட்டால்,  (யாத்திராகமம்  12:26)

appozhuthu  ungga'l  pi'l'laiga'l:  intha  aaraathanaiyin  karuththu  enna  en’ru  ungga'laik  keattaal,  (yaaththiraagamam  12:26)

இது  கர்த்தருடைய  பஸ்காவாகிய  பலி;  அவர்  எகிப்தியரை  அதம்பண்ணி,  நம்முடைய  வீடுகளைத்  தப்பப்பண்ணினபோது,  எகிப்திலிருந்த  இஸ்ரவேல்  புத்திரருடைய  வீடுகளைக்  கடந்துபோனார்  என்று  நீங்கள்  சொல்லவேண்டும்  என்றான்.  அப்பொழுது  ஜனங்கள்  தலைவணங்கிப்  பணிந்துகொண்டார்கள்.  (யாத்திராகமம்  12:27)

ithu  karththarudaiya  paskaavaagiya  bali;  avar  egipthiyarai  athampa'n'ni,  nammudaiya  veeduga'laith  thappappa'n'ninapoathu,  egipthiliruntha  israveal  puththirarudaiya  veeduga'laik  kadanthupoanaar  en’ru  neengga'l  sollavea'ndum  en’raan.  appozhuthu  janangga'l  thalaiva'nanggip  pa'ninthuko'ndaarga'l.  (yaaththiraagamam  12:27)

இஸ்ரவேல்  புத்திரர்  போய்  அப்படியே  செய்தார்கள்;  கர்த்தர்  மோசேக்கும்  ஆரோனுக்கும்  கட்டளையிட்டபடியே  செய்தார்கள்.  (யாத்திராகமம்  12:28)

israveal  puththirar  poay  appadiyea  seythaarga'l;  karththar  moaseakkum  aaroanukkum  katta'laiyittapadiyea  seythaarga'l.  (yaaththiraagamam  12:28)

நடுராத்திரியிலே  சிங்காசனத்தின்மேல்  வீற்றிருக்கும்  பார்வோனுடைய  தலைப்பிள்ளைமுதல்  காவல்  கிடங்கிலிருக்கும்  சிறைப்பட்டவனின்  தலைப்பிள்ளைவரைக்கும்,  எகிப்து  தேசத்தில்  இருந்த  முதற்பேறனைத்தையும்  மிருகஜீவன்களின்  தலையீற்றனைத்தையும்  கர்த்தர்  அழித்தார்.  (யாத்திராகமம்  12:29)

naduraaththiriyilea  singgaasanaththinmeal  veet’rirukkum  paarvoanudaiya  thalaippi'l'laimuthal  kaaval  kidanggilirukkum  si’raippattavanin  thalaippi'l'laivaraikkum,  egipthu  theasaththil  iruntha  mutha’rpea’ranaiththaiyum  mirugajeevanga'lin  thalaiyeet’ranaiththaiyum  karththar  azhiththaar.  (yaaththiraagamam  12:29)

அப்பொழுது  பார்வோனும்  அவனுடைய  சகல  ஊழியக்காரரும்  எகிப்தியர்  யாவரும்  இராத்திரியிலே  எழுந்திருந்தார்கள்;  மகா  கூக்குரல்  எகிப்திலே  உண்டாயிற்று;  சாவில்லாத  ஒரு  வீடும்  இருந்ததில்லை.  (யாத்திராகமம்  12:30)

appozhuthu  paarvoanum  avanudaiya  sagala  oozhiyakkaararum  egipthiyar  yaavarum  iraaththiriyilea  ezhunthirunthaarga'l;  mahaa  kookkural  egipthilea  u'ndaayit’ru;  saavillaatha  oru  veedum  irunthathillai.  (yaaththiraagamam  12:30)

இராத்திரியிலே  அவன்  மோசேயையும்  ஆரோனையும்  அழைப்பித்து:  நீங்களும்  இஸ்ரவேல்  புத்திரரும்  எழுந்து,  என்  ஜனங்களைவிட்டுப்  புறப்பட்டுப்போய்,  நீங்கள்  சொன்னபடியே  கர்த்தருக்கு  ஆராதனைசெய்யுங்கள்.  (யாத்திராகமம்  12:31)

iraaththiriyilea  avan  moaseayaiyum  aaroanaiyum  azhaippiththu:  neengga'lum  israveal  puththirarum  ezhunthu,  en  janangga'laivittup  pu’rappattuppoay,  neengga'l  sonnapadiyea  karththarukku  aaraathanaiseyyungga'l.  (yaaththiraagamam  12:31)

நீங்கள்  சொன்னபடியே  உங்கள்  ஆடுமாடுகளையும்  ஓட்டிக்கொண்டுபோங்கள்;  என்னையும்  ஆசீர்வதியுங்கள்  என்றான்.  (யாத்திராகமம்  12:32)

neengga'l  sonnapadiyea  ungga'l  aadumaaduga'laiyum  oattikko'ndupoangga'l;  ennaiyum  aaseervathiyungga'l  en’raan.  (yaaththiraagamam  12:32)

எகிப்தியர்:  நாங்கள்  எல்லாரும்  சாகிறோமே  என்று  சொல்லித்,  தீவிரமாய்  ஜனங்களைத்  தேசத்திலிருந்து  அனுப்பிவிட  அவர்களை  மிகவும்  துரிதப்படுத்தினார்கள்.  (யாத்திராகமம்  12:33)

egipthiyar:  naangga'l  ellaarum  saagi’roamea  en’ru  sollith,  theeviramaay  janangga'laith  theasaththilirunthu  anuppivida  avarga'lai  migavum  thurithappaduththinaarga'l.  (yaaththiraagamam  12:33)

பிசைந்தமா  புளிக்குமுன்  ஜனங்கள்  அதைப்  பாத்திரத்துடனே  தங்கள்  வஸ்திரங்களில்  கட்டி,  தங்கள்  தோள்மேல்  எடுத்துக்கொண்டு  போனார்கள்.  (யாத்திராகமம்  12:34)

pisainthamaa  pu'likkumun  janangga'l  athaip  paaththiraththudanea  thangga'l  vasthirangga'lil  katti,  thangga'l  thoa'lmeal  eduththukko'ndu  poanaarga'l.  (yaaththiraagamam  12:34)

மோசே  சொல்லியிருந்தபடி  இஸ்ரவேல்  ஜனங்கள்  எகிப்தியரிடத்தில்  வெள்ளியுடைமைகளையும்  பொன்னுடைமைகளையும்  வஸ்திரங்களையும்  கேட்டார்கள்.  (யாத்திராகமம்  12:35)

moasea  solliyirunthapadi  israveal  janangga'l  egipthiyaridaththil  ve'l'liyudaimaiga'laiyum  ponnudaimaiga'laiyum  vasthirangga'laiyum  keattaarga'l.  (yaaththiraagamam  12:35)

கர்த்தர்  ஜனங்களுக்கு  எகிப்தியரின்  கண்களில்  தயவு  கிடைக்கும்படி  செய்ததினால்,  கேட்டதை  அவர்களுக்குக்  கொடுத்தார்கள்;  இவ்விதமாய்  அவர்கள்  எகிப்தியரைக்  கொள்ளையிட்டார்கள்.  (யாத்திராகமம்  12:36)

karththar  janangga'lukku  egipthiyarin  ka'nga'lil  thayavu  kidaikkumpadi  seythathinaal,  keattathai  avarga'lukkuk  koduththaarga'l;  ivvithamaay  avarga'l  egipthiyaraik  ko'l'laiyittaarga'l.  (yaaththiraagamam  12:36)

இஸ்ரவேல்  புத்திரர்  ராமசேசை  விட்டுக்  கால்நடையாய்ப்  பிரயாணம்பண்ணி,  சுக்கோத்துக்குப்  போனார்கள்;  அவர்கள்,  பிள்ளைகள்தவிர  ஆறுலட்சம்  புருஷராயிருந்தார்கள்.  (யாத்திராகமம்  12:37)

israveal  puththirar  raamaseasai  vittuk  kaalnadaiyaayp  pirayaa'nampa'n'ni,  sukkoaththukkup  poanaarga'l;  avarga'l,  pi'l'laiga'lthavira  aa’ruladcham  purusharaayirunthaarga'l.  (yaaththiraagamam  12:37)

அவர்களோடே  கூடப்  பல  ஜாதியான  ஜனங்கள்  அநேகர்  போனதும்  அன்றி,  மிகுதியான  ஆடுமாடுகள்  முதலான  மிருகஜீவன்களும்  போயிற்று.  (யாத்திராகமம்  12:38)

avarga'loadea  koodap  pala  jaathiyaana  janangga'l  aneagar  poanathum  an’ri,  miguthiyaana  aadumaaduga'l  muthalaana  mirugajeevanga'lum  poayit’ru.  (yaaththiraagamam  12:38)

எகிப்திலிருந்து  அவர்கள்  கொண்டு  வந்த  பிசைந்தமாவைப்  புளிப்பில்லா  அப்பங்களாகச்  சுட்டார்கள்;  அவர்கள்  எகிப்தில்  தரிக்கக்கூடாமல்  துரத்திவிடப்பட்டதினால்,  அது  புளியாதிருந்தது;  அவர்கள்  தங்களுக்கு  வழிக்கென்று  ஒன்றும்  ஆயத்தம்பண்ணவில்லை.  (யாத்திராகமம்  12:39)

egipthilirunthu  avarga'l  ko'ndu  vantha  pisainthamaavaip  pu'lippillaa  appangga'laagach  suttaarga'l;  avarga'l  egipthil  tharikkakkoodaamal  thuraththividappattathinaal,  athu  pu'liyaathirunthathu;  avarga'l  thangga'lukku  vazhikken’ru  on’rum  aayaththampa'n'navillai.  (yaaththiraagamam  12:39)

இஸ்ரவேல்  புத்திரர்  எகிப்திலே  குடியிருந்த  காலம்  நானூற்றுமுப்பது  வருஷம்.  (யாத்திராகமம்  12:40)

israveal  puththirar  egipthilea  kudiyiruntha  kaalam  naanoot’rumuppathu  varusham.  (yaaththiraagamam  12:40)

நானூற்றுமுப்பது  வருஷம்  முடிந்த  அன்றைத்தினமே  கர்த்தருடைய  சேனைகள்  எல்லாம்  எகிப்து  தேசத்திலிருந்து  புறப்பட்டது.  (யாத்திராகமம்  12:41)

naanoot’rumuppathu  varusham  mudintha  an’raiththinamea  karththarudaiya  seanaiga'l  ellaam  egipthu  theasaththilirunthu  pu’rappattathu.  (yaaththiraagamam  12:41)

கர்த்தர்  அவர்களை  எகிப்து  தேசத்திலிருந்து  புறப்படப்பண்ணினதினால்,  இது  அவருக்கென்று  முக்கியமாய்  ஆசரிக்கத்தக்க  ராத்திரியாயிற்று;  இஸ்ரவேல்  சந்ததியார்  எல்லாரும்  தங்கள்  தலைமுறைதோறும்  கர்த்தருக்கு  முக்கியமாய்  ஆசரிக்கவேண்டிய  ராத்திரி  இதுவே.  (யாத்திராகமம்  12:42)

karththar  avarga'lai  egipthu  theasaththilirunthu  pu’rappadappa'n'ninathinaal,  ithu  avarukken’ru  mukkiyamaay  aasarikkaththakka  raaththiriyaayit’ru;  israveal  santhathiyaar  ellaarum  thangga'l  thalaimu’raithoa’rum  karththarukku  mukkiyamaay  aasarikkavea'ndiya  raaththiri  ithuvea.  (yaaththiraagamam  12:42)

மேலும்,  கர்த்தர்  மோசேயையும்  ஆரோனையும்  நோக்கி:  பஸ்காவின்  நியமமாவது,  அந்நிய  புத்திரன்  ஒருவனும்  அதைப்  புசிக்கவேண்டாம்.  (யாத்திராகமம்  12:43)

mealum,  karththar  moaseayaiyum  aaroanaiyum  noakki:  paskaavin  niyamamaavathu,  anniya  puththiran  oruvanum  athaip  pusikkavea'ndaam.  (yaaththiraagamam  12:43)

பணத்தினால்  கொள்ளப்பட்ட  அடிமையானவன்  எவனும்,  நீ  அவனுக்கு  விருத்தசேதனம்பண்ணினபின்,  அவன்  அதைப்  புசிக்கலாம்.  (யாத்திராகமம்  12:44)

pa'naththinaal  ko'l'lappatta  adimaiyaanavan  evanum,  nee  avanukku  viruththaseathanampa'n'ninapin,  avan  athaip  pusikkalaam.  (yaaththiraagamam  12:44)

அந்நியனும்  கூலியாளும்  அதிலே  புசிக்கவேண்டாம்.  (யாத்திராகமம்  12:45)

anniyanum  kooliyaa'lum  athilea  pusikkavea'ndaam.  (yaaththiraagamam  12:45)

அதை  ஒவ்வொரு  வீட்டிற்குள்ளும்  புசிக்கவேண்டும்;  அந்த  மாம்சத்தில்  கொஞ்சமாகிலும்  வீட்டிலிருந்து  வெளியே  கொண்டுபோகக்கூடாது;  அதில்  ஒரு  எலும்பையும்  முறிக்கக்கூடாது.  (யாத்திராகமம்  12:46)

athai  ovvoru  veetti’rku'l'lum  pusikkavea'ndum;  antha  maamsaththil  kognchamaagilum  veettilirunthu  ve'liyea  ko'ndupoagakkoodaathu;  athil  oru  elumbaiyum  mu’rikkakkoodaathu.  (yaaththiraagamam  12:46)

இஸ்ரவேல்  சபையார்  எல்லாரும்  அதை  ஆசரிக்கக்கடவர்கள்.  (யாத்திராகமம்  12:47)

israveal  sabaiyaar  ellaarum  athai  aasarikkakkadavarga'l.  (yaaththiraagamam  12:47)

அந்நியன்  ஒருவன்  உன்னிடத்திலே  தங்கி,  கர்த்தருக்குப்  பஸ்காவை  ஆசரிக்கவேண்டுமென்று  இருந்தால்,  அவனைச்  சேர்ந்த  ஆண்பிள்ளைகள்  யாவரும்  விருத்தசேதனம்பண்ணப்படவேண்டும்;  பின்பு  அவன்  சேர்ந்து  அதை  ஆசரிக்கவேண்டும்;  அவன்  சுதேசியைப்போல்  இருப்பான்;  விருத்தசேதனம்  இல்லாத  ஒருவனும்  அதில்  புசிக்கவேண்டாம்.  (யாத்திராகமம்  12:48)

anniyan  oruvan  unnidaththilea  thanggi,  karththarukkup  paskaavai  aasarikkavea'ndumen’ru  irunthaal,  avanaich  searntha  aa'npi'l'laiga'l  yaavarum  viruththaseathanampa'n'nappadavea'ndum;  pinbu  avan  searnthu  athai  aasarikkavea'ndum;  avan  sutheasiyaippoal  iruppaan;  viruththaseathanam  illaatha  oruvanum  athil  pusikkavea'ndaam.  (yaaththiraagamam  12:48)

சுதேசிக்கும்  உங்களிடத்தில்  தங்கும்  பரதேசிக்கும்  ஒரே  பிரமாணம்  இருக்கக்கடவது  என்றார்.  (யாத்திராகமம்  12:49)

sutheasikkum  ungga'lidaththil  thanggum  paratheasikkum  orea  piramaa'nam  irukkakkadavathu  en’raar.  (yaaththiraagamam  12:49)

இப்படியே  இஸ்ரவேல்  புத்திரர்  எல்லாரும்  செய்தார்கள்;  கர்த்தர்  மோசேக்கும்  ஆரோனுக்கும்  கட்டளையிட்டபடியே  செய்தார்கள்.  (யாத்திராகமம்  12:50)

ippadiyea  israveal  puththirar  ellaarum  seythaarga'l;  karththar  moaseakkum  aaroanukkum  katta'laiyittapadiyea  seythaarga'l.  (yaaththiraagamam  12:50)

அன்றைத்தினமே  கர்த்தர்  இஸ்ரவேல்  புத்திரரை  அணியணியாய்  எகிப்து  தேசத்திலிருந்து  புறப்படப்பண்ணினார்.  (யாத்திராகமம்  12:51)

an’raiththinamea  karththar  israveal  puththirarai  a'niya'niyaay  egipthu  theasaththilirunthu  pu’rappadappa'n'ninaar.  (yaaththiraagamam  12:51)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!