Saturday, July 16, 2016

Yaaththiraagamam 10 | யாத்திராகமம் 10 | Exodus 10

பின்பு  கர்த்தர்  மோசேயை  நோக்கி:  நீ  பார்வோனிடத்தில்  போ,  அவர்கள்  நடுவே  நான்  இந்த  என்  அடையாளங்களைச்  செய்யும்படிக்கும்,  (யாத்திராகமம்  10:1)

pinbu  karththar  moaseayai  noakki:  nee  paarvoanidaththil  poa,  avarga'l  naduvea  naan  intha  en  adaiyaa'langga'laich  seyyumpadikkum,  (yaaththiraagamam  10:1)

நான்  எகிப்திலே  நடப்பித்ததையும்  நான்  அவர்களுக்குள்  செய்த  என்  அடையாளங்களையும்,  நீ  உன்  பிள்ளைகளின்  செவிகள்  கேட்கவும்,  உன்  பிள்ளைகளுடைய  பிள்ளைகளின்  செவிகள்  கேட்கவும்  விவரித்துச்  சொல்லும்படிக்கும்,  நானே  கர்த்தர்  என்பதை  நீங்கள்  அறியும்படிக்கும்,  நான்  அவன்  இருதயத்தையும்  அவன்  ஊழியக்காரரின்  இருதயத்தையும்  கடினப்படுத்தினேன்  என்றார்.  (யாத்திராகமம்  10:2)

naan  egipthilea  nadappiththathaiyum  naan  avarga'lukku'l  seytha  en  adaiyaa'langga'laiyum,  nee  un  pi'l'laiga'lin  seviga'l  keadkavum,  un  pi'l'laiga'ludaiya  pi'l'laiga'lin  seviga'l  keadkavum  vivariththuch  sollumpadikkum,  naanea  karththar  enbathai  neengga'l  a’riyumpadikkum,  naan  avan  iruthayaththaiyum  avan  oozhiyakkaararin  iruthayaththaiyum  kadinappaduththinean  en’raar.  (yaaththiraagamam  10:2)

அப்படியே  மோசேயும்  ஆரோனும்  பார்வோனிடத்தில்  வந்து:  உன்னைத்  தாழ்த்த  நீ  எதுவரைக்கும்  மனதில்லாதிருப்பாய்?  என்  சமுகத்தில்  எனக்கு  ஆராதனைசெய்ய  என்  ஜனங்களைப்  போகவிடு.  (யாத்திராகமம்  10:3)

appadiyea  moaseayum  aaroanum  paarvoanidaththil  vanthu:  unnaith  thaazhththa  nee  ethuvaraikkum  manathillaathiruppaay?  en  samugaththil  enakku  aaraathanaiseyya  en  janangga'laip  poagavidu.  (yaaththiraagamam  10:3)

நீ  என்  ஜனங்களைப்  போகவிடமாட்டேன்  என்பாயாகில்,  நான்  நாளைக்கு  உன்  எல்லைகளுக்குள்ளே  வெட்டுக்கிளிகளை  வரப்பண்ணுவேன்.  (யாத்திராகமம்  10:4)

nee  en  janangga'laip  poagavidamaattean  enbaayaagil,  naan  naa'laikku  un  ellaiga'lukku'l'lea  vettukki'liga'lai  varappa'n'nuvean.  (yaaththiraagamam  10:4)

தரை  காணாதபடிக்கு  அவைகள்  பூமியின்  முகத்தை  மூடி,  கல்மழைக்குத்  தப்பி  மீதியாக  வைக்கப்பட்டதைப்  பட்சித்து,  வெளியிலே  துளிர்க்கிற  செடிகளையெல்லாம்  தின்றுபோடும்.  (யாத்திராகமம்  10:5)

tharai  kaa'naathapadikku  avaiga'l  boomiyin  mugaththai  moodi,  kalmazhaikkuth  thappi  meethiyaaga  vaikkappattathaip  padchiththu,  ve'liyilea  thu'lirkki’ra  sediga'laiyellaam  thin’rupoadum.  (yaaththiraagamam  10:5)

உன்  வீடுகளும்  உன்  ஊழியக்காரருடைய  வீடுகளும்  எகிப்தியரின்  வீடுகளும்  எல்லாம்  அவைகளால்  நிரம்பும்;  உன்  பிதாக்களும்  உன்  பிதாக்களின்  பிதாக்களும்  தாங்கள்  பூமியில்  தோன்றின  நாள்முதல்  இந்நாள்வரைக்கும்  அப்படிப்பட்டவைகளைக்  கண்டதில்லை  என்று  எபிரெயரின்  தேவனாகிய  கர்த்தர்  சொல்லுகிறார்  என்று  சொல்லி,  திரும்பிக்கொண்டு  பார்வோனை  விட்டுப்  புறப்பட்டான்.  (யாத்திராகமம்  10:6)

un  veeduga'lum  un  oozhiyakkaararudaiya  veeduga'lum  egipthiyarin  veeduga'lum  ellaam  avaiga'laal  nirambum;  un  pithaakka'lum  un  pithaakka'lin  pithaakka'lum  thaangga'l  boomiyil  thoan’rina  naa'lmuthal  innaa'lvaraikkum  appadippattavaiga'laik  ka'ndathillai  en’ru  ebireyarin  theavanaagiya  karththar  sollugi’raar  en’ru  solli,  thirumbikko'ndu  paarvoanai  vittup  pu’rappattaan.  (yaaththiraagamam  10:6)

அப்பொழுது  பார்வோனுடைய  ஊழியக்காரர்  அவனை  நோக்கி:  எந்தமட்டும்  இந்த  மனிதன்  நமக்குக்  கண்ணியாயிருப்பான்?  தங்கள்  தேவனாகிய  கர்த்தருக்கு  ஆராதனைசெய்ய  அந்த  மனிதரைப்  போகவிடும்;  எகிப்து  அழிந்துபோனதை  நீர்  இன்னும்  அறியவில்லையா  என்றார்கள்.  (யாத்திராகமம்  10:7)

appozhuthu  paarvoanudaiya  oozhiyakkaarar  avanai  noakki:  enthamattum  intha  manithan  namakkuk  ka'n'niyaayiruppaan?  thangga'l  theavanaagiya  karththarukku  aaraathanaiseyya  antha  manitharaip  poagavidum;  egipthu  azhinthupoanathai  neer  innum  a’riyavillaiyaa  en’raarga'l.  (yaaththiraagamam  10:7)

அப்பொழுது  மோசேயும்  ஆரோனும்  பார்வோனிடத்துக்குத்  திரும்ப  அழைக்கப்பட்டார்கள்.  அவன்  அவர்களை  நோக்கி:  நீங்கள்  போய்  உங்கள்  தேவனாகிய  கர்த்தருக்கு  ஆராதனை  செய்யுங்கள்  என்று  சொல்லி;  யாரார்  போகிறார்கள்  என்று  கேட்டான்.  (யாத்திராகமம்  10:8)

appozhuthu  moaseayum  aaroanum  paarvoanidaththukkuth  thirumba  azhaikkappattaarga'l.  avan  avarga'lai  noakki:  neengga'l  poay  ungga'l  theavanaagiya  karththarukku  aaraathanai  seyyungga'l  en’ru  solli;  yaaraar  poagi’raarga'l  en’ru  keattaan.  (yaaththiraagamam  10:8)

அதற்கு  மோசே:  எங்கள்  இளைஞரோடும்,  எங்கள்  முதியோரோடும்,  எங்கள்  குமாரரோடும்,  எங்கள்  குமாரத்திகளோடும்,  எங்கள்  ஆடுகளையும்  எங்கள்  மாடுகளையும்  கூட்டிக்கொண்டுபோவோம்;  நாங்கள்  கர்த்தருக்குப்  பண்டிகை  கொண்டாடவேண்டும்  என்றான்.  (யாத்திராகமம்  10:9)

atha’rku  moasea:  engga'l  i'laignaroadum,  engga'l  muthiyoaroadum,  engga'l  kumaararoadum,  engga'l  kumaaraththiga'loadum,  engga'l  aaduga'laiyum  engga'l  maaduga'laiyum  koottikko'ndupoavoam;  naangga'l  karththarukkup  pa'ndigai  ko'ndaadavea'ndum  en’raan.  (yaaththiraagamam  10:9)

அப்பொழுது  அவன்:  நான்  உங்களையும்  உங்கள்  குழந்தைகளையும்  எப்படி  விடுவேனோ,  அப்படியே  கர்த்தர்  உங்களோடிருப்பாராக;  எச்சரிக்கையாயிருங்கள்,  உங்களுக்குப்  பொல்லாப்பு  நேரிடும்;  (யாத்திராகமம்  10:10)

appozhuthu  avan:  naan  ungga'laiyum  ungga'l  kuzhanthaiga'laiyum  eppadi  viduveanoa,  appadiyea  karththar  ungga'loadiruppaaraaga;  echcharikkaiyaayirungga'l,  ungga'lukkup  pollaappu  nearidum;  (yaaththiraagamam  10:10)

அப்படி  வேண்டாம்;  புருஷராகிய  நீங்கள்  போய்,  கர்த்தருக்கு  ஆராதனை  செய்யுங்கள்;  இதுதானே  நீங்கள்  விரும்பிக்  கேட்டது  என்று  சொன்னான்.  அவர்கள்  பார்வோன்  சமுகத்தினின்று  துரத்திவிடப்பட்டார்கள்.  (யாத்திராகமம்  10:11)

appadi  vea'ndaam;  purusharaagiya  neengga'l  poay,  karththarukku  aaraathanai  seyyungga'l;  ithuthaanea  neengga'l  virumbik  keattathu  en’ru  sonnaan.  avarga'l  paarvoan  samugaththinin’ru  thuraththividappattaarga'l.  (yaaththiraagamam  10:11)

அப்பொழுது  கர்த்தர்  மோசேயை  நோக்கி:  வெட்டுக்கிளிகள்  எகிப்து  தேசத்தின்மேல்  வந்து,  கல்மழையினால்  அழியாத  பூமியின்  பயிர்வகைகளையெல்லாம்  பட்சிக்கும்படிக்கு,  எகிப்து  தேசத்தின்மேல்  உன்  கையை  நீட்டு  என்றார்.  (யாத்திராகமம்  10:12)

appozhuthu  karththar  moaseayai  noakki:  vettukki'liga'l  egipthu  theasaththinmeal  vanthu,  kalmazhaiyinaal  azhiyaatha  boomiyin  payirvagaiga'laiyellaam  padchikkumpadikku,  egipthu  theasaththinmeal  un  kaiyai  neettu  en’raar.  (yaaththiraagamam  10:12)

அப்படியே  மோசே  தன்  கோலை  எகிப்து  தேசத்தின்மேல்  நீட்டினான்;  அப்பொழுது  கர்த்தர்  அன்று  பகல்  முழுவதும்  அன்று  இராமுழுவதும்  கீழ்க்காற்றைத்  தேசத்தின்மேல்  வீசப்பண்ணினார்;  விடியற்காலத்திலே  கீழ்க்காற்று  வெட்டுக்கிளிகளைக்  கொண்டுவந்தது.  (யாத்திராகமம்  10:13)

appadiyea  moasea  than  koalai  egipthu  theasaththinmeal  neettinaan;  appozhuthu  karththar  an’ru  pagal  muzhuvathum  an’ru  iraamuzhuvathum  keezhkkaat’raith  theasaththinmeal  veesappa'n'ninaar;  vidiya’rkaalaththilea  keezhkkaat’ru  vettukki'liga'laik  ko'nduvanthathu.  (yaaththiraagamam  10:13)

வெட்டுக்கிளிகள்  எகிப்து  தேசம்  எங்கும்  பரம்பி,  எகிப்தின்  எல்லையில்  எங்கும்  மிகவும்  ஏராளமாய்  இறங்கிற்று;  அப்படிப்பட்ட  வெட்டுக்கிளிகள்  அதற்குமுன்  இருந்ததும்  இல்லை,  அதற்குப்பின்  இருப்பதும்  இல்லை.  (யாத்திராகமம்  10:14)

vettukki'liga'l  egipthu  theasam  enggum  parambi,  egipthin  ellaiyil  enggum  migavum  earaa'lamaay  i’ranggit’ru;  appadippatta  vettukki'liga'l  atha’rkumun  irunthathum  illai,  atha’rkuppin  iruppathum  illai.  (yaaththiraagamam  10:14)

அவைகள்  பூமியின்  முகம்  முழுதையும்  மூடிற்று;  தேசம்  அவைகளால்  அந்தகாரப்பட்டது;  கல்மழைக்குத்  தப்பியிருந்த  நிலத்தின்  பயிர்வகைகள்  யாவையும்  மரங்களின்  கனிகள்  யாவையும்  அவைகள்  பட்சித்துப்போட்டது;  எகிப்து  தேசம்  எங்குமுள்ள  மரங்களிலும்  வயல்வெளியின்  பயிர்வகைகளிலும்  ஒரு  பச்சிலையும்  மீதியாயிருக்கவில்லை.  (யாத்திராகமம்  10:15)

avaiga'l  boomiyin  mugam  muzhuthaiyum  moodit’ru;  theasam  avaiga'laal  anthagaarappattathu;  kalmazhaikkuth  thappiyiruntha  nilaththin  payirvagaiga'l  yaavaiyum  marangga'lin  kaniga'l  yaavaiyum  avaiga'l  padchiththuppoattathu;  egipthu  theasam  enggumu'l'la  marangga'lilum  vayalve'liyin  payirvagaiga'lilum  oru  pachchilaiyum  meethiyaayirukkavillai.  (yaaththiraagamam  10:15)

அப்பொழுது  பார்வோன்  மோசேயையும்  ஆரோனையும்  தீவிரமாய்  அழைப்பித்து:  உங்கள்  தேவனாகிய  கர்த்தருக்கும்  உங்களுக்கும்  விரோதமாகப்  பாவம்  செய்தேன்.  (யாத்திராகமம்  10:16)

appozhuthu  paarvoan  moaseayaiyum  aaroanaiyum  theeviramaay  azhaippiththu:  ungga'l  theavanaagiya  karththarukkum  ungga'lukkum  viroathamaagap  paavam  seythean.  (yaaththiraagamam  10:16)

இந்த  ஒரு  முறைமாத்திரம்  நீ  என்  பாவத்தை  மன்னிக்கவேண்டும்;  உங்கள்  தேவனாகிய  கர்த்தர்  இந்தச்  சாவைமாத்திரம்  என்னைவிட்டு  விலக்க  அவரை  நோக்கி  விண்ணப்பம்பண்ணுங்கள்  என்றான்.  (யாத்திராகமம்  10:17)

intha  oru  mu’raimaaththiram  nee  en  paavaththai  mannikkavea'ndum;  ungga'l  theavanaagiya  karththar  inthach  saavaimaaththiram  ennaivittu  vilakka  avarai  noakki  vi'n'nappampa'n'nungga'l  en’raan.  (yaaththiraagamam  10:17)

அவன்  பார்வோனை  விட்டுப்  புறப்பட்டுப்போய்,  கர்த்தரை  நோக்கி  விண்ணப்பம்பண்ணினான்.  (யாத்திராகமம்  10:18)

avan  paarvoanai  vittup  pu’rappattuppoay,  karththarai  noakki  vi'n'nappampa'n'ninaan.  (yaaththiraagamam  10:18)

அப்பொழுது  கர்த்தர்  மகா  பலத்த  மேல்காற்றை  வீசும்படி  செய்தார்;  அது  வெட்டுக்கிளிகளை  அடித்துக்கொண்டுபோய்ச்  செங்கடலிலே  போட்டது;  எகிப்தின்  எல்லையில்  எங்கும்  ஒரு  வெட்டுக்கிளியாகிலும்  மீதியாயிருந்ததில்லை.  (யாத்திராகமம்  10:19)

appozhuthu  karththar  mahaa  balaththa  mealkaat’rai  veesumpadi  seythaar;  athu  vettukki'liga'lai  adiththukko'ndupoaych  sengkadalilea  poattathu;  egipthin  ellaiyil  enggum  oru  vettukki'liyaagilum  meethiyaayirunthathillai.  (yaaththiraagamam  10:19)

கர்த்தரோ  பார்வோனின்  இருதயத்தைக்  கடினப்படுத்தினார்;  அவன்  இஸ்ரவேல்  புத்திரரைப்  போகவிடவில்லை.  (யாத்திராகமம்  10:20)

karththaroa  paarvoanin  iruthayaththaik  kadinappaduththinaar;  avan  israveal  puththiraraip  poagavidavillai.  (yaaththiraagamam  10:20)

அப்பொழுது  கர்த்தர்  மோசேயை  நோக்கி:  தடவிக்கொண்டிருக்கத்தக்கதான  இருள்  எகிப்து  தேசத்தின்மேல்  உண்டாகும்படிக்கு,  உன்  கையை  வானத்திற்கு  நேராக  நீட்டு  என்றார்.  (யாத்திராகமம்  10:21)

appozhuthu  karththar  moaseayai  noakki:  thadavikko'ndirukkaththakkathaana  iru'l  egipthu  theasaththinmeal  u'ndaagumpadikku,  un  kaiyai  vaanaththi’rku  nearaaga  neettu  en’raar.  (yaaththiraagamam  10:21)

மோசே  தன்  கையை  வானத்திற்கு  நேராக  நீட்டினான்;  அப்பொழுது  எகிப்து  தேசம்  எங்கும்  மூன்றுநாள்மட்டும்  காரிருள்  உண்டாயிற்று.  (யாத்திராகமம்  10:22)

moasea  than  kaiyai  vaanaththi’rku  nearaaga  neettinaan;  appozhuthu  egipthu  theasam  enggum  moon’runaa'lmattum  kaariru'l  u'ndaayit’ru.  (yaaththiraagamam  10:22)

மூன்றுநாள்மட்டும்  ஒருவரை  ஒருவர்  காணவும்  இல்லை,  ஒருவரும்  தம்மிடத்தைவிட்டு  எழுந்திருக்கவும்  இல்லை;  இஸ்ரவேல்  புத்திரர்  யாவருக்குமோவெனில்  அவர்கள்  வாசஸ்தலங்களிலே  வெளிச்சம்  இருந்தது.  (யாத்திராகமம்  10:23)

moon’runaa'lmattum  oruvarai  oruvar  kaa'navum  illai,  oruvarum  thammidaththaivittu  ezhunthirukkavum  illai;  israveal  puththirar  yaavarukkumoavenil  avarga'l  vaasasthalangga'lilea  ve'lichcham  irunthathu.  (yaaththiraagamam  10:23)

அப்பொழுது  பார்வோன்  மோசேயை  அழைப்பித்து:  நீங்கள்  போய்க்  கர்த்தருக்கு  ஆராதனைசெய்யுங்கள்;  உங்கள்  ஆடுகளும்  உங்கள்  மாடுகளும்மாத்திரம்  நிறுத்தப்படவேண்டும்;  உங்கள்  குழந்தைகள்  உங்களுடன்  போகலாம்  என்றான்.  (யாத்திராகமம்  10:24)

appozhuthu  paarvoan  moaseayai  azhaippiththu:  neengga'l  poayk  karththarukku  aaraathanaiseyyungga'l;  ungga'l  aaduga'lum  ungga'l  maaduga'lummaaththiram  ni’ruththappadavea'ndum;  ungga'l  kuzhanthaiga'l  ungga'ludan  poagalaam  en’raan.  (yaaththiraagamam  10:24)

அதற்கு  மோசே:  நாங்கள்  எங்கள்  தேவனாகிய  கர்த்தருக்குப்  படைக்கும்  பலிகளையும்  சர்வாங்க  தகனபலிகளையும்  நீர்  எங்கள்  கையிலே  கொடுக்கவேண்டும்.  (யாத்திராகமம்  10:25)

atha’rku  moasea:  naangga'l  engga'l  theavanaagiya  karththarukkup  padaikkum  baliga'laiyum  sarvaangga  thaganabaliga'laiyum  neer  engga'l  kaiyilea  kodukkavea'ndum.  (yaaththiraagamam  10:25)

எங்கள்  மிருகஜீவன்களும்  எங்களோடேகூட  வரவேண்டும்;  ஒரு  குளம்பும்  பின்வைக்கப்படுவதில்லை;  எங்கள்  தேவனாகிய  கர்த்தருக்கு  ஆராதனை  செய்கிறதற்கு  அவைகளிலிருந்து  எடுக்கவேண்டும்;  இன்னதைக்கொண்டு  கர்த்தருக்கு  ஆராதனை  செய்வோம்  என்பது  நாங்கள்  அங்கே  போய்ச்  சேருமளவும்  எங்களுக்குத்  தெரியாது  என்றான்.  (யாத்திராகமம்  10:26)

engga'l  mirugajeevanga'lum  engga'loadeakooda  varavea'ndum;  oru  ku'lambum  pinvaikkappaduvathillai;  engga'l  theavanaagiya  karththarukku  aaraathanai  seygi’ratha’rku  avaiga'lilirunthu  edukkavea'ndum;  innathaikko'ndu  karththarukku  aaraathanai  seyvoam  enbathu  naangga'l  anggea  poaych  searuma'lavum  engga'lukkuth  theriyaathu  en’raan.  (yaaththiraagamam  10:26)

கர்த்தர்  பார்வோனுடைய  இருதயத்தைக்  கடினப்படுத்தினார்;  அவன்  அவர்களைப்  போகவிட  மனதில்லாதிருந்தான்.  (யாத்திராகமம்  10:27)

karththar  paarvoanudaiya  iruthayaththaik  kadinappaduththinaar;  avan  avarga'laip  poagavida  manathillaathirunthaan.  (yaaththiraagamam  10:27)

பார்வோன்  அவனை  நோக்கி:  என்னை  விட்டு  அப்பாலே  போ;  நீ  இனி  என்  முகத்தைக்  காணாதபடி  எச்சரிக்கையாயிரு;  நீ  இனி  என்  முகத்தைக்  காணும்  நாளில்  சாவாய்  என்றான்.  (யாத்திராகமம்  10:28)

paarvoan  avanai  noakki:  ennai  vittu  appaalea  poa;  nee  ini  en  mugaththaik  kaa'naathapadi  echcharikkaiyaayiru;  nee  ini  en  mugaththaik  kaa'num  naa'lil  saavaay  en’raan.  (yaaththiraagamam  10:28)

அப்பொழுது  மோசே:  நீர்  சொன்னது  சரி;  இனி  நான்  உம்முடைய  முகத்தைக்  காண்பதில்லை  என்றான்.  (யாத்திராகமம்  10:29)

appozhuthu  moasea:  neer  sonnathu  sari;  ini  naan  ummudaiya  mugaththaik  kaa'nbathillai  en’raan.  (yaaththiraagamam  10:29)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!