Wednesday, July 06, 2016

Yaaththiraagamam 1 | யாத்திராகமம் 1 | Exodus 1

எகிப்துக்குப்  போன  இஸ்ரவேலுடைய  குமாரரின்  நாமங்களாவன:  ரூபன்,  சிமியோன்,  லேவி,  யூதா,  (யாத்திராகமம்  1:1)

egipthukkup  poana  isravealudaiya  kumaararin  naamangga'laavana:  rooban,  simiyoan,  leavi,  yoothaa,  (yaaththiraagamam  1:1)

இசக்கார்,  செபுலோன்,  பென்யமீன்,  (யாத்திராகமம்  1:2)

isakkaar,  sebuloan,  benyameen,  (yaaththiraagamam  1:2)

தாண்,  நப்தலி,  காத்,  ஆசேர்  என்பவைகளே.  (யாத்திராகமம்  1:3)

thaa'n,  napthali,  kaath,  aasear  enbavaiga'lea.  (yaaththiraagamam  1:3)

இவர்கள்  யாக்கோபுடனே  தங்கள்  தங்கள்  குடும்பத்தோடுங்கூடப்  போனார்கள்.  (யாத்திராகமம்  1:4)

ivarga'l  yaakkoabudanea  thangga'l  thangga'l  kudumbaththoadungkoodap  poanaarga'l.  (yaaththiraagamam  1:4)

யோசேப்போ  அதற்கு  முன்னமே  எகிப்தில்  போயிருந்தான்.  யாக்கோபின்  கர்ப்பப்பிறப்பாகிய  யாவரும்  எழுபது  பேர்.  (யாத்திராகமம்  1:5)

yoaseappoa  atha’rku  munnamea  egipthil  poayirunthaan.  yaakkoabin  karppappi’rappaagiya  yaavarum  ezhubathu  pear.  (yaaththiraagamam  1:5)

யோசேப்பும்  அவனுடைய  சகோதரர்  யாவரும்,  அந்தத்  தலைமுறையார்  எல்லாரும்  மரணமடைந்தார்கள்.  (யாத்திராகமம்  1:6)

yoaseappum  avanudaiya  sagoatharar  yaavarum,  anthath  thalaimu’raiyaar  ellaarum  mara'namadainthaarga'l.  (yaaththiraagamam  1:6)

இஸ்ரவேல்  புத்திரர்  மிகுதியும்  பலுகி,  ஏராளமாய்ப்  பெருகிப்  பலத்திருந்தார்கள்;  தேசம்  அவர்களால்  நிறைந்தது.  (யாத்திராகமம்  1:7)

israveal  puththirar  miguthiyum  palugi,  earaa'lamaayp  perugip  balaththirunthaarga'l;  theasam  avarga'laal  ni’rainthathu.  (yaaththiraagamam  1:7)

யோசேப்பை  அறியாத  புதிய  ராஜன்  ஒருவன்  எகிப்தில்  தோன்றினான்.  (யாத்திராகமம்  1:8)

yoaseappai  a’riyaatha  puthiya  raajan  oruvan  egipthil  thoan’rinaan.  (yaaththiraagamam  1:8)

அவன்  தன்  ஜனங்களை  நோக்கி:  இதோ,  இஸ்ரவேல்  புத்திரராகிய  ஜனங்கள்  நம்மிலும்  ஏராளமானவர்களும்,  பலத்தவர்களுமாய்  இருக்கிறார்கள்.  (யாத்திராகமம்  1:9)

avan  than  janangga'lai  noakki:  ithoa,  israveal  puththiraraagiya  janangga'l  nammilum  earaa'lamaanavarga'lum,  balaththavarga'lumaay  irukki’raarga'l.  (yaaththiraagamam  1:9)

அவர்கள்  பெருகாதபடிக்கும்,  ஒரு  யுத்தம்  உண்டானால்,  அவர்களும்  நம்முடைய  பகைஞரோடே  கூடி,  நமக்கு  விரோதமாக  யுத்தம்பண்ணி,  தேசத்தைவிட்டுப்  புறப்பட்டுப்போகாதபடிக்கும்,  நாம்  அவர்களைக்குறித்து  ஒரு  உபாயம்  பண்ணவேண்டும்  என்றான்.  (யாத்திராகமம்  1:10)

avarga'l  perugaathapadikkum,  oru  yuththam  u'ndaanaal,  avarga'lum  nammudaiya  pagaignaroadea  koodi,  namakku  viroathamaaga  yuththampa'n'ni,  theasaththaivittup  pu’rappattuppoagaathapadikkum,  naam  avarga'laikku’riththu  oru  ubaayam  pa'n'navea'ndum  en’raan.  (yaaththiraagamam  1:10)

அப்படியே  அவர்களைச்  சுமைசுமக்கிற  வேலையினால்  ஒடுக்கும்படிக்கு,  அவர்கள்மேல்  விசாரணைக்காரரை  வைத்தார்கள்;  அப்பொழுது  அவர்கள்  பார்வோனுக்காகப்  பித்தோம்,  ராமசேஸ்  என்னும்  பண்டசாலைப்  பட்டணங்களைக்  கட்டினார்கள்.  (யாத்திராகமம்  1:11)

appadiyea  avarga'laich  sumaisumakki’ra  vealaiyinaal  odukkumpadikku,  avarga'lmeal  visaara'naikkaararai  vaiththaarga'l;  appozhuthu  avarga'l  paarvoanukkaagap  piththoam,  raamaseas  ennum  pa'ndasaalaip  patta'nangga'laik  kattinaarga'l.  (yaaththiraagamam  1:11)

ஆனாலும்  அவர்களை  எவ்வளவு  ஒடுக்கினார்களோ  அவ்வளவாய்  அவர்கள்  பலுகிப்  பெருகினார்கள்.  ஆகையால்  அவர்கள்  இஸ்ரவேல்  புத்திரரைக்குறித்து  எரிச்சல்  அடைந்தார்கள்.  (யாத்திராகமம்  1:12)

aanaalum  avarga'lai  evva'lavu  odukkinaarga'loa  avva'lavaay  avarga'l  palugip  peruginaarga'l.  aagaiyaal  avarga'l  israveal  puththiraraikku’riththu  erichchal  adainthaarga'l.  (yaaththiraagamam  1:12)

எகிப்தியர்  இஸ்ரவேல்  புத்திரரைக்  கொடுமையாய்  வேலைவாங்கினார்கள்.  (யாத்திராகமம்  1:13)

egipthiyar  israveal  puththiraraik  kodumaiyaay  vealaivaangginaarga'l.  (yaaththiraagamam  1:13)

சாந்தும்  செங்கலுமாகிய  இவைகளைச்  செய்யும்  வேலையினாலும்,  வயலில்  செய்யும்  சகலவித  வேலையினாலும்,  அவர்களுக்கு  அவர்கள்  ஜீவனையும்  கசப்பாக்கினார்கள்;  அவர்களைக்கொண்டு  செய்வித்த  மற்ற  எல்லா  வேலைகளிலும்,  அவர்களைக்  கொடுமையாய்  நடத்தினார்கள்.  (யாத்திராகமம்  1:14)

saanthum  senggalumaagiya  ivaiga'laich  seyyum  vealaiyinaalum,  vayalil  seyyum  sagalavitha  vealaiyinaalum,  avarga'lukku  avarga'l  jeevanaiyum  kasappaakkinaarga'l;  avarga'laikko'ndu  seyviththa  mat’ra  ellaa  vealaiga'lilum,  avarga'laik  kodumaiyaay  nadaththinaarga'l.  (yaaththiraagamam  1:14)

அதுவுமன்றி,  எகிப்தின்  ராஜா,  சிப்பிராள்  பூவாள்  என்னும்  பேருடைய  எபிரெய  மருத்துவச்சிகளோடே  பேசி:  (யாத்திராகமம்  1:15)

athuvuman’ri,  egipthin  raajaa,  sippiraa'l  poovaa'l  ennum  pearudaiya  ebireya  maruththuvachchiga'loadea  peasi:  (yaaththiraagamam  1:15)

நீங்கள்  எபிரெய  ஸ்திரீகளுக்கு  மருத்துவம்  செய்யும்போது,  அவர்கள்  மணையின்மேல்  உட்கார்ந்திருக்கையில்  பார்த்து,  ஆண்பிள்ளையானால்  கொன்றுபோடுங்கள்,  பெண்பிள்ளையானால்  உயிரோடிருக்கட்டும்  என்றான்.  (யாத்திராகமம்  1:16)

neengga'l  ebireya  sthireega'lukku  maruththuvam  seyyumpoathu,  avarga'l  ma'naiyinmeal  udkaarnthirukkaiyil  paarththu,  aa'npi'l'laiyaanaal  kon’rupoadungga'l,  pe'npi'l'laiyaanaal  uyiroadirukkattum  en’raan.  (yaaththiraagamam  1:16)

மருத்துவச்சிகளோ,  தேவனுக்குப்  பயந்ததினால்,  எகிப்தின்  ராஜா  தங்களுக்கு  இட்ட  கட்டளைப்படி  செய்யாமல்,  ஆண்பிள்ளைகளையும்  உயிரோடே  காப்பாற்றினார்கள்.  (யாத்திராகமம்  1:17)

maruththuvachchiga'loa,  theavanukkup  bayanthathinaal,  egipthin  raajaa  thangga'lukku  itta  katta'laippadi  seyyaamal,  aa'npi'l'laiga'laiyum  uyiroadea  kaappaat’rinaarga'l.  (yaaththiraagamam  1:17)

அதினால்  எகிப்தின்  ராஜா  மருத்துவச்சிகளை  அழைப்பித்து:  நீங்கள்  ஆண்பிள்ளைகளை  உயிரோடே  காப்பாற்றுகிற  காரியம்  என்ன  என்று  கேட்டான்.  (யாத்திராகமம்  1:18)

athinaal  egipthin  raajaa  maruththuvachchiga'lai  azhaippiththu:  neengga'l  aa'npi'l'laiga'lai  uyiroadea  kaappaat’rugi’ra  kaariyam  enna  en’ru  keattaan.  (yaaththiraagamam  1:18)

அதற்கு  மருத்துவச்சிகள்  பார்வோனை  நோக்கி:  எபிரெய  ஸ்திரீகள்  எகிப்திய  ஸ்திரீகளைப்போல்  அல்ல,  அவர்கள்  நல்ல  பலமுள்ளவர்கள்;  மருத்துவச்சி  அவர்களிடத்துக்குப்  போகுமுன்னமே  அவர்கள்  பிரசவித்தாகும்  என்றார்கள்.  (யாத்திராகமம்  1:19)

atha’rku  maruththuvachchiga'l  paarvoanai  noakki:  ebireya  sthireega'l  egipthiya  sthireega'laippoal  alla,  avarga'l  nalla  balamu'l'lavarga'l;  maruththuvachchi  avarga'lidaththukkup  poagumunnamea  avarga'l  pirasaviththaagum  en’raarga'l.  (yaaththiraagamam  1:19)

இதினிமித்தம்  தேவன்  மருத்துவச்சிகளுக்கு  நன்மைசெய்தார்.  ஜனங்கள்  பெருகி  மிகுதியும்  பலத்துப்போனார்கள்.  (யாத்திராகமம்  1:20)

ithinimiththam  theavan  maruththuvachchiga'lukku  nanmaiseythaar.  janangga'l  perugi  miguthiyum  balaththuppoanaarga'l.  (yaaththiraagamam  1:20)

மருத்துவச்சிகள்  தேவனுக்குப்  பயந்ததினால்,  அவர்களுடைய  குடும்பங்கள்  தழைக்கும்படி  செய்தார்.  (யாத்திராகமம்  1:21)

maruththuvachchiga'l  theavanukkup  bayanthathinaal,  avarga'ludaiya  kudumbangga'l  thazhaikkumpadi  seythaar.  (yaaththiraagamam  1:21)

அப்பொழுது  பார்வோன்,  பிறக்கும்  ஆண்பிள்ளைகளையெல்லாம்  நதியிலே  போட்டுவிடவும்,  பெண்பிள்ளைகளையெல்லாம்  உயிரோடே  வைக்கவும்  தன்  ஜனங்கள்  எல்லாருக்கும்  கட்டளையிட்டான்.  (யாத்திராகமம்  1:22)

appozhuthu  paarvoan,  pi’rakkum  aa'npi'l'laiga'laiyellaam  nathiyilea  poattuvidavum,  pe'npi'l'laiga'laiyellaam  uyiroadea  vaikkavum  than  janangga'l  ellaarukkum  katta'laiyittaan.  (yaaththiraagamam  1:22)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!