Thursday, July 14, 2016

Thaaniyeal 9 | தானியேல் 9 | Daniel 9

கல்தேயருடைய  ராஜ்யத்தின்மேல்  ராஜாவாக்கப்பட்ட  மேதிய  குலத்தானாகிய  அகாஸ்வேருவின்  புத்திரனான  தரியு  ராஜ்யபாரம்பண்ணுகிற  முதலாம்  வருஷத்திலே,  (தானியேல்  9:1)

kaltheayarudaiya  raajyaththinmeal  raajaavaakkappatta  meathiya  kulaththaanaagiya  agaasvearuvin  puththiranaana  thariyu  raajyabaarampa'n'nugi’ra  muthalaam  varushaththilea,  (thaaniyeal  9:1)

தானியேலாகிய  நான்  எருசலேமின்  பாழ்க்கடிப்புகள்  நிறைவேறித்தீர  எழுபதுவருஷம்  செல்லுமென்று  கர்த்தர்  எரேமியா  தீர்க்கதரிசியோடே  சொல்லிய  வருஷங்களின்  தொகையைப்  புஸ்தகங்களால்  அறிந்துகொண்டேன்.  (தானியேல்  9:2)

thaaniyealaagiya  naan  erusaleamin  paazhkkadippuga'l  ni’raivea’riththeera  ezhubathuvarusham  sellumen’ru  karththar  ereamiyaa  theerkkatharisiyoadea  solliya  varushangga'lin  thogaiyaip  pusthagangga'laal  a’rinthuko'ndean.  (thaaniyeal  9:2)

நான்  உபவாசம்பண்ணி,  இரட்டிலும்  சாம்பலிலும்  உட்கார்ந்து,  தேவனாகிய  ஆண்டவரை  ஜெபத்தினாலும்  விண்ணப்பங்களினாலும்  தேட  என்முகத்தை  அவருக்கு  நேராக்கி,  (தானியேல்  9:3)

naan  ubavaasampa'n'ni,  irattilum  saambalilum  udkaarnthu,  theavanaagiya  aa'ndavarai  jebaththinaalum  vi'n'nappangga'linaalum  theada  enmugaththai  avarukku  nearaakki,  (thaaniyeal  9:3)

என்  தேவனாகிய  கர்த்தரை  நோக்கி  ஜெபம்பண்ணி,  பாவ  அறிக்கைசெய்து:    ஆண்டவரே,  உம்மில்  அன்புகூர்ந்து,  உம்முடைய  கற்பனைகளைக்  கைக்கொள்ளுகிறவர்களுக்கு  உடன்படிக்கையையும்  கிருபையையும்  காக்கிற  மகத்துவமும்  பயங்கரமுமான  தேவனே,  (தானியேல்  9:4)

en  theavanaagiya  karththarai  noakki  jebampa'n'ni,  paava  a’rikkaiseythu:  aa  aa'ndavarea,  ummil  anbukoornthu,  ummudaiya  ka’rpanaiga'laik  kaikko'l'lugi’ravarga'lukku  udanpadikkaiyaiyum  kirubaiyaiyum  kaakki’ra  magaththuvamum  bayanggaramumaana  theavanea,  (thaaniyeal  9:4)

நாங்கள்  பாவஞ்செய்து,  அக்கிரமக்காரராயிருந்து,  துன்மார்க்கமாய்  நடந்து,  கலகம்பண்ணி,  உம்முடைய  கற்பனைகளையும்  உம்முடைய  நியாயங்களையும்  விட்டு  அகன்றுபோனோம்.  (தானியேல்  9:5)

naangga'l  paavagnseythu,  akkiramakkaararaayirunthu,  thunmaarkkamaay  nadanthu,  kalagampa'n'ni,  ummudaiya  ka’rpanaiga'laiyum  ummudaiya  niyaayangga'laiyum  vittu  agan’rupoanoam.  (thaaniyeal  9:5)

உமது  நாமத்தினாலே  எங்கள்  ராஜாக்களோடும்  எங்கள்  பிரபுக்களோடும்  எங்கள்  பிதாக்களோடும்  தேசத்தினுடைய  சகல  ஜனங்களோடும்  பேசின  தீர்க்கதரிசிகளாகிய  உம்முடைய  ஊழியக்காரருக்குச்  செவிகொடாமற்போனோம்.  (தானியேல்  9:6)

umathu  naamaththinaalea  engga'l  raajaakka'loadum  engga'l  pirabukka'loadum  engga'l  pithaakka'loadum  theasaththinudaiya  sagala  janangga'loadum  peasina  theerkkatharisiga'laagiya  ummudaiya  oozhiyakkaararukkuch  sevikodaama’rpoanoam.  (thaaniyeal  9:6)

ஆண்டவரே,  நீதி  உமக்கே  உரியது;  உமக்கு  விரோதமாகச்  செய்த  துரோகத்தினிமித்தம்  உம்மாலே  சமீபமும்  தூரமுமான  எல்லா  தேசங்களிலும்  துரத்தப்பட்டிருக்கிற  யூதமனுஷரும்  எருசலேமின்  குடிகளும்  சகல  இஸ்ரவேலருமாகிய  நாங்கள்  இந்நாளில்  இருக்கிறபடியே,  வெட்கம்  எங்களுக்கே  உரியது.  (தானியேல்  9:7)

aa'ndavarea,  neethi  umakkea  uriyathu;  umakku  viroathamaagach  seytha  thuroagaththinimiththam  ummaalea  sameebamum  thooramumaana  ellaa  theasangga'lilum  thuraththappattirukki’ra  yoothamanusharum  erusaleamin  kudiga'lum  sagala  isravealarumaagiya  naangga'l  innaa'lil  irukki’rapadiyea,  vedkam  engga'lukkea  uriyathu.  (thaaniyeal  9:7)

ஆண்டவரே,  உமக்கு  விரோதமாகப்  பாவஞ்செய்தபடியால்,  நாங்களும்  எங்கள்  ராஜாக்களும்  எங்கள்  பிரபுக்களும்  எங்கள்  பிதாக்களும்  வெட்கத்துக்குரியவர்களானோம்.  (தானியேல்  9:8)

aa'ndavarea,  umakku  viroathamaagap  paavagnseythapadiyaal,  naangga'lum  engga'l  raajaakka'lum  engga'l  pirabukka'lum  engga'l  pithaakka'lum  vedkaththukkuriyavarga'laanoam.  (thaaniyeal  9:8)

அவருக்கு  விரோதமாக  நாங்கள்  கலகம்பண்ணி,  அவர்  தீர்க்கதரிசிகளாகிய  தம்முடைய  ஊழியக்காரரைக்கொண்டு  எங்களுக்கு  முன்பாகவைத்த  அவருடைய  நியாயப்பிரமாணங்களின்படி  நடக்கத்தக்கதாக  நாங்கள்  அவருடைய  சத்தத்துக்குச்  செவிகொடாமற்போனோம்.  (தானியேல்  9:9)

avarukku  viroathamaaga  naangga'l  kalagampa'n'ni,  avar  theerkkatharisiga'laagiya  thammudaiya  oozhiyakkaararaikko'ndu  engga'lukku  munbaagavaiththa  avarudaiya  niyaayappiramaa'nangga'linpadi  nadakkaththakkathaaga  naangga'l  avarudaiya  saththaththukkuch  sevikodaama’rpoanoam.  (thaaniyeal  9:9)

ஆனாலும்  எங்கள்  தேவனாகிய  ஆண்டவரிடத்தில்  இரக்கங்களும்  மன்னிப்புகளும்  உண்டு.  (தானியேல்  9:10)

aanaalum  engga'l  theavanaagiya  aa'ndavaridaththil  irakkangga'lum  mannippuga'lum  u'ndu.  (thaaniyeal  9:10)

இஸ்ரவேலர்  எல்லாரும்  உமது  நியாயப்பிரமாணத்தை  மீறி,  உமது  சத்தத்துக்குச்  செவிகொடாமல்  விலகிப்போனார்கள்.  அவருக்கு  விரோதமாகப்  பாவஞ்செய்தோம்;  ஆகையால்  தேவனுடைய  தாசனாகிய  மோசேயின்  நியாயப்பிரமாணப்  புஸ்தகத்தில்  எழுதியிருக்கிற  சாபமும்  ஆணையாக்கினையும்  எங்கள்மேல்  சொரியப்பட்டன.  (தானியேல்  9:11)

isravealar  ellaarum  umathu  niyaayappiramaa'naththai  mee’ri,  umathu  saththaththukkuch  sevikodaamal  vilagippoanaarga'l.  avarukku  viroathamaagap  paavagnseythoam;  aagaiyaal  theavanudaiya  thaasanaagiya  moaseayin  niyaayappiramaa'nap  pusthagaththil  ezhuthiyirukki’ra  saabamum  aa'naiyaakkinaiyum  engga'lmeal  soriyappattana.  (thaaniyeal  9:11)

எருசலேமில்  சம்பவித்ததுபோல  வானத்தின்கீழ்  எங்கும்  சம்பவியாதிருக்கிற  பெரிய  தீங்கை  எங்கள்மேல்  வரப்பண்ணினதினால்,  அவர்  எங்களுக்கும்  எங்களை  நியாயந்தீர்த்த  நியாயாதிபதிகளுக்கும்  விரோதமாகச்  சொல்லியிருந்த  தம்முடைய  வார்த்தைகளை  நிறைவேற்றினார்.  (தானியேல்  9:12)

erusaleamil  sambaviththathupoala  vaanaththinkeezh  enggum  sambaviyaathirukki’ra  periya  theenggai  engga'lmeal  varappa'n'ninathinaal,  avar  engga'lukkum  engga'lai  niyaayantheerththa  niyaayaathibathiga'lukkum  viroathamaagach  solliyiruntha  thammudaiya  vaarththaiga'lai  ni’raiveat’rinaar.  (thaaniyeal  9:12)

மோசேயின்  நியாயப்பிரமாணப்  புஸ்தகத்தில்  எழுதியிருக்கிறபடியே  இந்தத்  தீங்கெல்லாம்  எங்கள்மேல்  வந்தது;  ஆனாலும்  நாங்கள்  எங்கள்  அக்கிரமங்களை  விட்டுத்  திரும்புகிறதற்கும்,  உம்முடைய  சத்தியத்தைக்  கவனிக்கிறதற்கும்,  எங்கள்  தேவனாகிய  கர்த்தரின்  முகத்தை  நோக்கிக்  கெஞ்சினதில்லை.  (தானியேல்  9:13)

moaseayin  niyaayappiramaa'nap  pusthagaththil  ezhuthiyirukki’rapadiyea  inthath  theenggellaam  engga'lmeal  vanthathu;  aanaalum  naangga'l  engga'l  akkiramangga'lai  vittuth  thirumbugi’ratha’rkum,  ummudaiya  saththiyaththaik  kavanikki’ratha’rkum,  engga'l  theavanaagiya  karththarin  mugaththai  noakkik  kegnchinathillai.  (thaaniyeal  9:13)

ஆதலால்  கர்த்தர்  கவனமாயிருந்து,  அந்தத்  தீங்கை  எங்கள்மேல்  வரப்பண்ணினார்;  எங்கள்  தேவனாகிய  கர்த்தர்  தாம்  செய்துவருகிற  தம்முடைய  கிரியைகளில்  எல்லாம்  நீதியுள்ளவர்;  நாங்களோ  அவருடைய  சத்தத்துக்குச்  செவிகொடாமற்போனோம்.  (தானியேல்  9:14)

aathalaal  karththar  kavanamaayirunthu,  anthath  theenggai  engga'lmeal  varappa'n'ninaar;  engga'l  theavanaagiya  karththar  thaam  seythuvarugi’ra  thammudaiya  kiriyaiga'lil  ellaam  neethiyu'l'lavar;  naangga'loa  avarudaiya  saththaththukkuch  sevikodaama’rpoanoam.  (thaaniyeal  9:14)

இப்போதும்  உமது  ஜனத்தைப்  பலத்த  கையினால்  எகிப்துதேசத்திலிருந்து  புறப்படப்பண்ணி,  இந்நாள்வரைக்கும்  இருக்கிறபடி,  உமக்குக்  கீர்த்தியை  உண்டாக்கின  எங்கள்  தேவனாகிய  ஆண்டவரே,  நாங்கள்  பாவஞ்செய்து,  துன்மார்க்கராய்  நடந்தோம்.  (தானியேல்  9:15)

ippoathum  umathu  janaththaip  balaththa  kaiyinaal  egipthutheasaththilirunthu  pu’rappadappa'n'ni,  innaa'lvaraikkum  irukki’rapadi,  umakkuk  keerththiyai  u'ndaakkina  engga'l  theavanaagiya  aa'ndavarea,  naangga'l  paavagnseythu,  thunmaarkkaraay  nadanthoam.  (thaaniyeal  9:15)

ஆண்டவரே,  உம்முடைய  சர்வநீதியின்படியே,  உமது  கோபமும்  உமது  உக்கிரமும்  உம்முடைய  பரிசுத்த  பர்வதமாகிய  எருசலேம்  என்னும்  உம்முடைய  நகரத்தை  விட்டுத்  திரும்பும்படி  செய்யும்;  எங்கள்  பாவங்களினாலும்  எங்கள்  பிதாக்களின்  அக்கிரமங்களினாலும்  எருசலேமும்  உம்முடைய  ஜனமாகிய  நாங்களும்  எங்கள்  சுற்றுப்புறத்தார்  யாவருக்கும்  நிந்தையானோம்.  (தானியேல்  9:16)

aa'ndavarea,  ummudaiya  sarvaneethiyinpadiyea,  umathu  koabamum  umathu  ukkiramum  ummudaiya  parisuththa  parvathamaagiya  erusaleam  ennum  ummudaiya  nagaraththai  vittuth  thirumbumpadi  seyyum;  engga'l  paavangga'linaalum  engga'l  pithaakka'lin  akkiramangga'linaalum  erusaleamum  ummudaiya  janamaagiya  naangga'lum  engga'l  sut’ruppu’raththaar  yaavarukkum  ninthaiyaanoam.  (thaaniyeal  9:16)

இப்போதும்  எங்கள்  தேவனே,  நீர்  உமது  அடியானுடைய  விண்ணப்பத்தையும்  அவனுடைய  கெஞ்சுதலையும்  கேட்டு,  பாழாய்க்  கிடக்கிற  உம்முடைய  பரிசுத்த  ஸ்தலத்தின்மேல்  ஆண்டவரினிமித்தம்  உமது  முகத்தைப்  பிரகாசிக்கப்பண்ணும்.  (தானியேல்  9:17)

ippoathum  engga'l  theavanea,  neer  umathu  adiyaanudaiya  vi'n'nappaththaiyum  avanudaiya  kegnchuthalaiyum  keattu,  paazhaayk  kidakki’ra  ummudaiya  parisuththa  sthalaththinmeal  aa'ndavarinimiththam  umathu  mugaththaip  piragaasikkappa'n'num.  (thaaniyeal  9:17)

என்  தேவனே,  உம்முடைய  செவியைச்  சாய்த்துக்  கேட்டருளும்;  உம்முடைய  கண்களைத்  திறந்து,  எங்கள்  பாழிடங்களையும்,  உமது  நாமம்  தரிக்கப்பட்டிருக்கிற  நகரத்தையும்  பார்த்தருளும்;  நாங்கள்  எங்கள்  நீதிகளை  அல்ல,  உம்முடைய  மிகுந்த  இரக்கங்களையே  நம்பி,  எங்கள்  விண்ணப்பங்களை  உமக்கு  முன்பாகச்  செலுத்துகிறோம்.  (தானியேல்  9:18)

en  theavanea,  ummudaiya  seviyaich  saayththuk  keattaru'lum;  ummudaiya  ka'nga'laith  thi’ranthu,  engga'l  paazhidangga'laiyum,  umathu  naamam  tharikkappattirukki’ra  nagaraththaiyum  paarththaru'lum;  naangga'l  engga'l  neethiga'lai  alla,  ummudaiya  miguntha  irakkangga'laiyea  nambi,  engga'l  vi'n'nappangga'lai  umakku  munbaagach  seluththugi’roam.  (thaaniyeal  9:18)

ஆண்டவரே  கேளும்,  ஆண்டவரே  மன்னியும்,  ஆண்டவரே  கவனியும்;  என்  தேவனே,  உம்முடைய  நிமித்தமாக  அதைத்  தாமதியாமல்  செய்யும்;  உம்முடைய  நகரத்துக்கும்  உம்முடைய  ஜனத்துக்கும்  உம்முடைய  நாமம்  தரிக்கப்பட்டிருக்கிறதே  என்றேன்.  (தானியேல்  9:19)

aa'ndavarea  kea'lum,  aa'ndavarea  manniyum,  aa'ndavarea  kavaniyum;  en  theavanea,  ummudaiya  nimiththamaaga  athaith  thaamathiyaamal  seyyum;  ummudaiya  nagaraththukkum  ummudaiya  janaththukkum  ummudaiya  naamam  tharikkappattirukki’rathea  en’rean.  (thaaniyeal  9:19)

இப்படி  நான்  சொல்லி,  ஜெபம்பண்ணி,  என்  பாவத்தையும்  என்  ஜனமாகிய  இஸ்ரவேலின்  பாவத்தையும்  அறிக்கையிட்டு,  என்  தேவனுடைய  பரிசுத்த  பர்வதத்துக்காக  என்  விண்ணப்பத்தை  என்  தேவனாகிய  கர்த்தருக்கு  முன்பாகச்  செலுத்திக்கொண்டிருந்தேன்.  (தானியேல்  9:20)

ippadi  naan  solli,  jebampa'n'ni,  en  paavaththaiyum  en  janamaagiya  isravealin  paavaththaiyum  a’rikkaiyittu,  en  theavanudaiya  parisuththa  parvathaththukkaaga  en  vi'n'nappaththai  en  theavanaagiya  karththarukku  munbaagach  seluththikko'ndirunthean.  (thaaniyeal  9:20)

அப்படி  நான்  ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கும்போதே,  முதல்  தரிசனத்திலே  நான்  கண்ட  புருஷனாகிய  காபிரியேல்,  வேகமாய்ப்  பறந்துவந்து,  அந்திப்பலியின்  நேரமாகிய  வேளையிலே  என்னைத்  தொட்டான்.  (தானியேல்  9:21)

appadi  naan  jebampa'n'nikko'ndirukkumpoathea,  muthal  tharisanaththilea  naan  ka'nda  purushanaagiya  kaabiriyeal,  veagamaayp  pa’ranthuvanthu,  anthipbaliyin  nearamaagiya  vea'laiyilea  ennaith  thottaan.  (thaaniyeal  9:21)

அவன்  எனக்குத்  தெளிவுண்டாக்கி,  என்னோடேபேசி:  தானியேலே,  உனக்கு  அறிவை  உணர்த்தும்படி  இப்போது  புறப்பட்டுவந்தேன்.  (தானியேல்  9:22)

avan  enakkuth  the'livu'ndaakki,  ennoadeapeasi:  thaaniyealea,  unakku  a’rivai  u'narththumpadi  ippoathu  pu’rappattuvanthean.  (thaaniyeal  9:22)

நீ  மிகவும்  பிரியமானவன்,  ஆதலால்,  நீ  வேண்டிக்கொள்ளத்  தொடங்கினபோதே  கட்டளை  வெளிப்பட்டது,  நான்  அதை  அறிவிக்கவந்தேன்;  இப்போதும்  சொல்லுகிற  வார்த்தையை  நீ  கவனித்துக்கேட்டு,  தரிசனத்தை  அறிந்துகொள்.  (தானியேல்  9:23)

nee  migavum  piriyamaanavan,  aathalaal,  nee  vea'ndikko'l'lath  thodangginapoathea  katta'lai  ve'lippattathu,  naan  athai  a’rivikkavanthean;  ippoathum  sollugi’ra  vaarththaiyai  nee  kavaniththukkeattu,  tharisanaththai  a’rinthuko'l.  (thaaniyeal  9:23)

மீறுதலைத்  தவிர்க்கிறதற்கும்,  பாவங்களைத்  தொலைக்கிறதற்கும்,  அக்கிரமத்தை  நிவிர்த்திபண்ணுகிறதற்கும்,  நித்திய  நீதியை  வருவிக்கிறதற்கும்,  தரிசனத்தையும்  தீர்க்கதரிசனத்தையும்  முத்திரிக்கிறதற்கும்,  மகா  பரிசுத்தமுள்ளவரை  அபிஷேகம்பண்ணுகிறதற்கும்,  உன்  ஜனத்தின்மேலும்  உன்  பரிசுத்த  நகரத்தின்மேலும்  எழுபது  வாரங்கள்  செல்லும்படி  குறிக்கப்பட்டிருக்கிறது.  (தானியேல்  9:24)

mee’ruthalaith  thavirkki’ratha’rkum,  paavangga'laith  tholaikki’ratha’rkum,  akkiramaththai  nivirththipa'n'nugi’ratha’rkum,  niththiya  neethiyai  varuvikki’ratha’rkum,  tharisanaththaiyum  theerkkatharisanaththaiyum  muththirikki’ratha’rkum,  mahaa  parisuththamu'l'lavarai  abisheagampa'n'nugi’ratha’rkum,  un  janaththinmealum  un  parisuththa  nagaraththinmealum  ezhubathu  vaarangga'l  sellumpadi  ku’rikkappattirukki’rathu.  (thaaniyeal  9:24)

இப்போதும்  நீ  அறிந்து  உணர்ந்துகொள்ளவேண்டியது  என்னவென்றால்:  எருசலேமைத்  திரும்ப  எடுப்பித்துக்  கட்டுகிறதற்கான  கட்டளை  வெளிப்படுவதுமுதல்,  பிரபுவாகிய  மேசியா  வருமட்டும்  ஏழு  வாரமும்,  அறுபத்திரண்டு  வாரமும்  செல்லும்;  அவைகளில்  வீதிகளும்  அலங்கங்களும்  மறுபடியும்  கட்டப்படும்;  ஆனாலும்  இடுக்கமான  காலங்களில்  இப்படியாகும்.  (தானியேல்  9:25)

ippoathum  nee  a’rinthu  u'narnthuko'l'lavea'ndiyathu  ennaven’raal:  erusaleamaith  thirumba  eduppiththuk  kattugi’ratha’rkaana  katta'lai  ve'lippaduvathumuthal,  pirabuvaagiya  measiyaa  varumattum  eazhu  vaaramum,  a’rubaththira'ndu  vaaramum  sellum;  avaiga'lil  veethiga'lum  alanggangga'lum  ma’rupadiyum  kattappadum;  aanaalum  idukkamaana  kaalangga'lil  ippadiyaagum.  (thaaniyeal  9:25)

அந்த  அறுபத்திரண்டு  வாரங்களுக்குப்  பின்பு  மேசியா  சங்கரிக்கப்படுவார்;  ஆனாலும்  தமக்காக  அல்ல;  நகரத்தையும்  பரிசுத்த  ஸ்தலத்தையும்  வரப்போகிற  பிரபுவின்  ஜனங்கள்  அழித்துப்போடுவார்கள்;  அதின்  முடிவு  ஜலப்பிரவாகம்போல  இருக்கும்;  முடிவுபரியந்தம்  யுத்தமும்  நாசமும்  உண்டாக  நியமிக்கப்பட்டது.  (தானியேல்  9:26)

antha  a’rubaththira'ndu  vaarangga'lukkup  pinbu  measiyaa  sanggarikkappaduvaar;  aanaalum  thamakkaaga  alla;  nagaraththaiyum  parisuththa  sthalaththaiyum  varappoagi’ra  pirabuvin  janangga'l  azhiththuppoaduvaarga'l;  athin  mudivu  jalappiravaagampoala  irukkum;  mudivupariyantham  yuththamum  naasamum  u'ndaaga  niyamikkappattathu.  (thaaniyeal  9:26)

அவர்  ஒரு  வாரமளவும்  அநேகருக்கு  உடன்படிக்கையை  உறுதிப்படுத்தி,  அந்த  வாரம்  பாதி  சென்றபோது  பலியையும்  காணிக்கையையும்  ஒழியப்பண்ணுவார்;  அருவருப்பான  செட்டைகளோடே  பாழாக்குகிறவன்  வந்து  இறங்குவான்,  நிர்ணயிக்கப்பட்டிருக்கிற  நிர்மூலம்  பாழாக்குகிறவன்மேல்  தீருமட்டும்  சொரியும்  என்றான்.  (தானியேல்  9:27)

avar  oru  vaarama'lavum  aneagarukku  udanpadikkaiyai  u’ruthippaduththi,  antha  vaaram  paathi  sen’rapoathu  baliyaiyum  kaa'nikkaiyaiyum  ozhiyappa'n'nuvaar;  aruvaruppaana  settaiga'loadea  paazhaakkugi’ravan  vanthu  i’rangguvaan,  nir'nayikkappattirukki’ra  nirmoolam  paazhaakkugi’ravanmeal  theerumattum  soriyum  en’raan.  (thaaniyeal  9:27)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!