Thursday, July 14, 2016

Thaaniyeal 8 | தானியேல் 8 | Daniel 8

தானியேலாகிய  எனக்கு  முதலில்  காண்பிக்கப்பட்ட  தரிசனத்துக்குப்  பின்பு,  ராஜாவாகிய  பெல்ஷாத்சார்  ராஜ்யபாரம்பண்ணின  மூன்றாம்  வருஷத்திலே  வேறொரு  தரிசனம்  எனக்குக்  காண்பிக்கப்பட்டது.  (தானியேல்  8:1)

thaaniyealaagiya  enakku  muthalil  kaa'nbikkappatta  tharisanaththukkup  pinbu,  raajaavaagiya  belshaathsaar  raajyabaarampa'n'nina  moon’raam  varushaththilea  vea’roru  tharisanam  enakkuk  kaa'nbikkappattathu.  (thaaniyeal  8:1)

தரிசனத்திலே  நான்  கண்டது  என்னவென்றால்:  நான்  பார்க்கையில்  ஏலாம்  தேசத்திலுள்ள  சூசான்  அரமனையில்  இருந்தேன்;  அங்கே  நான்  ஊலாய்  என்னும்  ஆற்றங்கரையில்  இருந்ததாகத்  தரிசனத்திலே  கண்டேன்.  (தானியேல்  8:2)

tharisanaththilea  naan  ka'ndathu  ennaven’raal:  naan  paarkkaiyil  ealaam  theasaththilu'l'la  soosaan  aramanaiyil  irunthean;  anggea  naan  oolaay  ennum  aat’rangkaraiyil  irunthathaagath  tharisanaththilea  ka'ndean.  (thaaniyeal  8:2)

நான்  என்  கண்களை  ஏறெடுத்துப்  பார்த்தேன்;  இதோ,  இரண்டு  கொம்புகளுள்ள  ஒரு  ஆட்டுக்கடா  ஆற்றிற்கு  முன்பாக  நின்றது;  அதின்  இரண்டு  கொம்புகளும்  உயர்ந்தவைகளாயிருந்தது;  ஆகிலும்  அவைகளில்  ஒன்று  மற்றதைப்பார்க்கிலும்  உயர்ந்திருந்தது;  உயர்ந்தகொம்பு  பிந்தி  முளைத்தெழும்பிற்று.  (தானியேல்  8:3)

naan  en  ka'nga'lai  ea’reduththup  paarththean;  ithoa,  ira'ndu  kombuga'lu'l'la  oru  aattukkadaa  aat’ri’rku  munbaaga  nin’rathu;  athin  ira'ndu  kombuga'lum  uyarnthavaiga'laayirunthathu;  aagilum  avaiga'lil  on’ru  mat’rathaippaarkkilum  uyarnthirunthathu;  uyarnthakombu  pinthi  mu'laiththezhumbit’ru.  (thaaniyeal  8:3)

அந்த  ஆட்டுக்கடா  மேற்கும்  வடக்கும்  தெற்கும்  பாய்கிறதைக்  கண்டேன்;  ஒரு  மிருகமும்  அதின்  முன்னே  நிற்கக்கூடாதிருந்தது;  அதின்  கைக்குத்  தப்புவிப்பாருமில்லை;  அது  தன்  இஷ்டப்படியே  செய்து  வல்லமைகொண்டது.  (தானியேல்  8:4)

antha  aattukkadaa  mea’rkum  vadakkum  the’rkum  paaygi’rathaik  ka'ndean;  oru  mirugamum  athin  munnea  ni’rkakkoodaathirunthathu;  athin  kaikkuth  thappuvippaarumillai;  athu  than  ishdappadiyea  seythu  vallamaiko'ndathu.  (thaaniyeal  8:4)

நான்  அதைக்  கவனித்துக்கொண்டிருக்கையில்,  இதோ,  மேற்கேயிருந்து  ஒரு  வெள்ளாட்டுக்கடா  நிலத்திலே  கால்  பாவாமல்  தேசத்தின்மீதெங்கும்  சென்றது;  அந்த  வெள்ளாட்டுக்கடாவின்  கண்களுக்கு  நடுவே  விசேஷித்த  ஒரு  கொம்பு  இருந்தது.  (தானியேல்  8:5)

naan  athaik  kavaniththukko'ndirukkaiyil,  ithoa,  mea’rkeayirunthu  oru  ve'l'laattukkadaa  nilaththilea  kaal  paavaamal  theasaththinmeethenggum  sen’rathu;  antha  ve'l'laattukkadaavin  ka'nga'lukku  naduvea  viseashiththa  oru  kombu  irunthathu.  (thaaniyeal  8:5)

நான்  ஆற்றின்  முன்பாக  நிற்கக்கண்ட  இரண்டு  கொம்புகளுள்ள  ஆட்டுக்கடாவினிடமட்டும்  அது  வந்து,  தன்  பலத்தின்  உக்கிரத்தோடே  அதற்கு  எதிராகப்  பாய்ந்தது.  (தானியேல்  8:6)

naan  aat’rin  munbaaga  ni’rkakka'nda  ira'ndu  kombuga'lu'l'la  aattukkadaavinidamattum  athu  vanthu,  than  balaththin  ukkiraththoadea  atha’rku  ethiraagap  paaynthathu.  (thaaniyeal  8:6)

அது  ஆட்டுக்கடாவின்  கிட்டச்  சேரக்கண்டேன்;  அது  ஆட்டுக்கடாவின்மேல்  கடுங்கோபங்கொண்டு,  அதை  முட்டி,  அதின்  இரண்டு  கொம்புகளையும்  முறித்துப்போட்டது;  அதின்  முன்  நிற்க  ஆட்டுக்கடாவுக்குப்  பலமில்லாமையால்,  வெள்ளாட்டுக்கடா  அதைத்  தரையிலே  தள்ளி  மிதித்துப்போட்டது;  அதின்  கைக்கு  ஆட்டுக்கடாவைத்  தப்புவிப்பார்  இல்லை.  (தானியேல்  8:7)

athu  aattukkadaavin  kittach  searakka'ndean;  athu  aattukkadaavinmeal  kadungkoabangko'ndu,  athai  mutti,  athin  ira'ndu  kombuga'laiyum  mu’riththuppoattathu;  athin  mun  ni’rka  aattukkadaavukkup  balamillaamaiyaal,  ve'l'laattukkadaa  athaith  tharaiyilea  tha'l'li  mithiththuppoattathu;  athin  kaikku  aattukkadaavaith  thappuvippaar  illai.  (thaaniyeal  8:7)

அப்பொழுது  வெள்ளாட்டுக்கடா  மிகுதியும்  வல்லமைகொண்டது;  அது  பலங்கொண்டிருக்கையில்,  அந்தப்  பெரிய  கொம்பு  முறிந்துபோயிற்று;  அதற்குப்  பதிலாக  ஆகாயத்தின்  நாலு  திசைகளுக்கும்  எதிராய்  விசேஷித்த  நாலுகொம்புகள்  முளைத்தெழும்பினது.  (தானியேல்  8:8)

appozhuthu  ve'l'laattukkadaa  miguthiyum  vallamaiko'ndathu;  athu  balangko'ndirukkaiyil,  anthap  periya  kombu  mu’rinthupoayit’ru;  atha’rkup  bathilaaga  aagaayaththin  naalu  thisaiga'lukkum  ethiraay  viseashiththa  naalukombuga'l  mu'laiththezhumbinathu.  (thaaniyeal  8:8)

அவைகளில்  ஒன்றிலிருந்து  சின்னதான  ஒரு  கொம்பு  புறப்பட்டு,  தெற்குக்கும்,  கிழக்குக்கும்  எதிராகவும்,  சிங்காரமான  தேசத்துக்கு  நேராகவும்  மிகவும்  பெரியதாயிற்று.  (தானியேல்  8:9)

avaiga'lil  on’rilirunthu  sinnathaana  oru  kombu  pu’rappattu,  the’rkukkum,  kizhakkukkum  ethiraagavum,  singgaaramaana  theasaththukku  nearaagavum  migavum  periyathaayit’ru.  (thaaniyeal  8:9)

அது  வானத்தின்  சேனைபரியந்தம்  வளர்ந்து,  அதின்  சேனையாகிய  நட்சத்திரங்களில்  சிலவற்றைப்  பூமியிலே  விழப்பண்ணி,  அவைகளை  மிதித்தது.  (தானியேல்  8:10)

athu  vaanaththin  seanaipariyantham  va'larnthu,  athin  seanaiyaagiya  nadchaththirangga'lil  silavat’raip  boomiyilea  vizhappa'n'ni,  avaiga'lai  mithiththathu.  (thaaniyeal  8:10)

அது  சேனையினுடைய  அதிபதி  பரியந்தமும்  தன்னை  உயர்த்தி,  அவரிடத்திலிருந்து  அன்றாட  பலியை  நீக்கிற்று;  அவருடைய  பரிசுத்த  ஸ்தானம்  தள்ளுண்டது.  (தானியேல்  8:11)

athu  seanaiyinudaiya  athibathi  pariyanthamum  thannai  uyarththi,  avaridaththilirunthu  an’raada  baliyai  neekkit’ru;  avarudaiya  parisuththa  sthaanam  tha'l'lu'ndathu.  (thaaniyeal  8:11)

பாதகத்தினிமித்தம்  அன்றாட  பலியோடுங்கூடச்  சேனையும்  அதற்கு  ஒப்புக்கொடுக்கப்பட்டது;  அது  சத்தியத்தைத்  தரையிலே  தள்ளிற்று;  அது  கிரியைசெய்து  அநுகூலமடைந்தது.  (தானியேல்  8:12)

paathagaththinimiththam  an’raada  baliyoadungkoodach  seanaiyum  atha’rku  oppukkodukkappattathu;  athu  saththiyaththaith  tharaiyilea  tha'l'lit’ru;  athu  kiriyaiseythu  anugoolamadainthathu.  (thaaniyeal  8:12)

பரிசுத்தவானாகிய  ஒருவன்  பேசக்கேட்டேன்;  அப்பொழுது  வேறொரு  பரிசுத்தவான்  பேசினவரை  நோக்கி:  அன்றாட  பலியைக்குறித்தும்,  பாழ்க்கடிப்பை  உண்டாக்கும்  பாதகத்தைக்குறித்தும்,  பரிசுத்த  ஸ்தலமும்  சேனையும்  மிதிபட  ஒப்புக்கொடுக்கப்படுவதைக்குறித்தும்,  உண்டான  தரிசனம்  எதுவரைக்கும்  இருக்கும்  என்று  கேட்டான்.  (தானியேல்  8:13)

parisuththavaanaagiya  oruvan  peasakkeattean;  appozhuthu  vea’roru  parisuththavaan  peasinavarai  noakki:  an’raada  baliyaikku’riththum,  paazhkkadippai  u'ndaakkum  paathagaththaikku’riththum,  parisuththa  sthalamum  seanaiyum  mithipada  oppukkodukkappaduvathaikku’riththum,  u'ndaana  tharisanam  ethuvaraikkum  irukkum  en’ru  keattaan.  (thaaniyeal  8:13)

அவன்  என்னை  நோக்கி:  இரண்டாயிரத்து  முந்நூறு  இராப்பகல்  செல்லும்வரைக்கும்  இருக்கும்;  பின்பு  பரிசுத்தஸ்தலம்  சுத்திகரிக்கப்படும்  என்றான்.  (தானியேல்  8:14)

avan  ennai  noakki:  ira'ndaayiraththu  munnoo’ru  iraappagal  sellumvaraikkum  irukkum;  pinbu  parisuththasthalam  suththigarikkappadum  en’raan.  (thaaniyeal  8:14)

தானியேலாகிய  நான்  இந்தத்  தரிசனத்தைக்கண்டு,  அதின்  பொருளை  அறிய  வகைதேடுகையில்,  இதோ,  மனுஷசாயலான  ஒருவன்  எனக்கு  எதிரே  நின்றான்.  (தானியேல்  8:15)

thaaniyealaagiya  naan  inthath  tharisanaththaikka'ndu,  athin  poru'lai  a’riya  vagaitheadugaiyil,  ithoa,  manushasaayalaana  oruvan  enakku  ethirea  nin’raan.  (thaaniyeal  8:15)

அன்றியும்  காபிரியேலே,  இவனுக்குத்  தரிசனத்தை  விளங்கப்பண்ணென்று  ஊலாயின்  மத்தியிலே  கூப்பிட்டுச்  சொல்லுகிற  ஒரு  மனுஷ  சத்தத்தையும்  கேட்டேன்.  (தானியேல்  8:16)

an’riyum  kaabiriyealea,  ivanukkuth  tharisanaththai  vi'langgappa'n'nen’ru  oolaayin  maththiyilea  kooppittuch  sollugi’ra  oru  manusha  saththaththaiyum  keattean.  (thaaniyeal  8:16)

அப்பொழுது  அவன்  நான்  நின்ற  இடத்துக்கு  வந்தான்;  அவன்  வருகையில்  நான்  திடுக்கிட்டு  முகங்குப்புற  விழுந்தேன்;  அவன்  என்னை  நோக்கி:  மனுபுத்திரனே  கவனி;  இந்தத்  தரிசனம்  முடிவுகாலத்துக்கு  அடுத்தது  என்றான்.  (தானியேல்  8:17)

appozhuthu  avan  naan  nin’ra  idaththukku  vanthaan;  avan  varugaiyil  naan  thidukkittu  mugangkuppu’ra  vizhunthean;  avan  ennai  noakki:  manupuththiranea  kavani;  inthath  tharisanam  mudivukaalaththukku  aduththathu  en’raan.  (thaaniyeal  8:17)

அவன்  என்னோடே  பேசுகையில்,  நான்  தரையில்  முகங்குப்புறக்  கிடந்து,  அயர்ந்த  நித்திரைகொண்டேன்;  அவனோ  என்னைத்  தொட்டு,  நான்  காலூன்றி  நிற்கும்படி  செய்து:  (தானியேல்  8:18)

avan  ennoadea  peasugaiyil,  naan  tharaiyil  mugangkuppu’rak  kidanthu,  ayarntha  niththiraiko'ndean;  avanoa  ennaith  thottu,  naan  kaaloon’ri  ni’rkumpadi  seythu:  (thaaniyeal  8:18)

இதோ,  கோபத்தின்  முடிவுகாலத்திலே  சம்பவிப்பதை  உனக்குத்  தெரிவிப்பேன்;  இது  குறிக்கப்பட்ட  முடிவுகாலத்துக்கு  அடுத்தது.  (தானியேல்  8:19)

ithoa,  koabaththin  mudivukaalaththilea  sambavippathai  unakkuth  therivippean;  ithu  ku’rikkappatta  mudivukaalaththukku  aduththathu.  (thaaniyeal  8:19)

நீ  கண்ட  இரண்டு  கொம்புள்ள  ஆட்டுக்கடா  மேதியா  பெர்சியா  தேசங்களின்  ராஜாக்கள்;  (தானியேல்  8:20)

nee  ka'nda  ira'ndu  kombu'l'la  aattukkadaa  meathiyaa  persiyaa  theasangga'lin  raajaakka'l;  (thaaniyeal  8:20)

ரோமமுள்ள  அந்த  வெள்ளாட்டுக்கடா  கிரேக்கு  தேசத்தின்  ராஜா;  அதின்  கண்களுக்கு  நடுவே  இருந்த  பெரிய  கொம்பு  அதின்  முதலாம்  ராஜா;  (தானியேல்  8:21)

roamamu'l'la  antha  ve'l'laattukkadaa  kireakku  theasaththin  raajaa;  athin  ka'nga'lukku  naduvea  iruntha  periya  kombu  athin  muthalaam  raajaa;  (thaaniyeal  8:21)

அது  முறிந்துபோனபின்பு  அதற்குப்  பதிலாக  நாலு  கொம்புகள்  எழும்பினது  என்னவென்றால்,  அந்த  ஜாதியிலே  நாலு  ராஜ்யங்கள்  எழும்பும்;  ஆனாலும்  அவனுக்கு  இருந்த  வல்லமை  அவைகளுக்கு  இராது.  (தானியேல்  8:22)

athu  mu’rinthupoanapinbu  atha’rkup  bathilaaga  naalu  kombuga'l  ezhumbinathu  ennaven’raal,  antha  jaathiyilea  naalu  raajyangga'l  ezhumbum;  aanaalum  avanukku  iruntha  vallamai  avaiga'lukku  iraathu.  (thaaniyeal  8:22)

அவர்களுடைய  ராஜ்யபாரத்தின்  கடைசிக்காலத்திலோவென்றால்,  பாதகருடைய  பாதகம்  நிறைவேறும்போது,  மூர்க்க  முகமும்  சூதான  பேச்சுமுள்ள  சாமர்த்தியமான  ஒரு  ராஜா  எழும்புவான்.  (தானியேல்  8:23)

avarga'ludaiya  raajyabaaraththin  kadaisikkaalaththiloaven’raal,  paathagarudaiya  paathagam  ni’raivea’rumpoathu,  moorkka  mugamum  soothaana  peachchumu'l'la  saamarththiyamaana  oru  raajaa  ezhumbuvaan.  (thaaniyeal  8:23)

அவனுடைய  வல்லமை  பெருகும்;  ஆனாலும்  அவனுடைய  சுயபலத்தினால்  அல்ல,  அவன்  அதிசயமானவிதமாக  அழிம்புண்டாக்கி,  அநுகூலம்  பெற்றுக்கிரியைசெய்து,  பலவான்களையும்  பரிசுத்த  ஜனங்களையும்  அழிப்பான்.  (தானியேல்  8:24)

avanudaiya  vallamai  perugum;  aanaalum  avanudaiya  suyabalaththinaal  alla,  avan  athisayamaanavithamaaga  azhimbu'ndaakki,  anugoolam  pet’rukkiriyaiseythu,  balavaanga'laiyum  parisuththa  janangga'laiyum  azhippaan.  (thaaniyeal  8:24)

அவன்  தன்  உபாயத்தினால்  வஞ்சகத்தைக்  கைகூடிவரப்பண்ணி,  தன்  இருதயத்தில்  பெருமைகொண்டு,  நிர்விசாரத்தோடிருக்கிற  அநேகரை  அழித்து,  அதிபதிகளுக்கு  அதிபதியாயிருக்கிறவருக்கு  விரோதமாய்  எழும்புவான்;  ஆனாலும்  அவன்  கையினாலல்ல  வேறுவிதமாய்  முறித்துப்போடப்படுவான்.  (தானியேல்  8:25)

avan  than  ubaayaththinaal  vagnchagaththaik  kaikoodivarappa'n'ni,  than  iruthayaththil  perumaiko'ndu,  nirvisaaraththoadirukki’ra  aneagarai  azhiththu,  athibathiga'lukku  athibathiyaayirukki’ravarukku  viroathamaay  ezhumbuvaan;  aanaalum  avan  kaiyinaalalla  vea’ruvithamaay  mu’riththuppoadappaduvaan.  (thaaniyeal  8:25)

சொல்லப்பட்ட  இராப்பகல்களின்  தரிசனம்  சத்தியமாயிருக்கிறது;  ஆதலால்  இந்தத்  தரிசனத்தை  நீ  மறைத்துவை;  அதற்கு  இன்னும்  அநேகநாள்  செல்லும்  என்றான்.  (தானியேல்  8:26)

sollappatta  iraappagalga'lin  tharisanam  saththiyamaayirukki’rathu;  aathalaal  inthath  tharisanaththai  nee  ma’raiththuvai;  atha’rku  innum  aneaganaa'l  sellum  en’raan.  (thaaniyeal  8:26)

தானியேலாகிய  நான்  சோர்வடைந்து,  சிலநாள்  வியாதிப்பட்டிருந்தேன்;  பின்பு  நான்  எழுந்திருந்து,  ராஜாவின்  வேலையைச்  செய்து,  அந்தத்  தரிசனத்தினால்  திகைத்துக்கொண்டிருந்தேன்;  ஒருவரும்  அதை  அறியவில்லை.  (தானியேல்  8:27)

thaaniyealaagiya  naan  soarvadainthu,  silanaa'l  viyaathippattirunthean;  pinbu  naan  ezhunthirunthu,  raajaavin  vealaiyaich  seythu,  anthath  tharisanaththinaal  thigaiththukko'ndirunthean;  oruvarum  athai  a’riyavillai.  (thaaniyeal  8:27)


1 comment:

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!