Thursday, July 14, 2016

Thaaniyeal 7 | தானியேல் 7 | Daniel 7

பாபிலோன்  ராஜாவாகிய  பெல்ஷாத்சாரின்  முதலாம்  வருஷத்திலே  தானியேல்  ஒரு  சொப்பனத்தையும்  தன்  படுக்கையின்மேல்  தன்  தலையில்  தோன்றின  தரிசனங்களையும்  கண்டான்.  பின்பு  அவன்  அந்தச்  சொப்பனத்தை  எழுதி,  காரியங்களின்  தொகையை  விவரித்தான்.  (தானியேல்  7:1)

baabiloan  raajaavaagiya  belshaathsaarin  muthalaam  varushaththilea  thaaniyeal  oru  soppanaththaiyum  than  padukkaiyinmeal  than  thalaiyil  thoan’rina  tharisanangga'laiyum  ka'ndaan.  pinbu  avan  anthach  soppanaththai  ezhuthi,  kaariyangga'lin  thogaiyai  vivariththaan.  (thaaniyeal  7:1)

தானியேல்  சொன்னது:  இராத்திரிகாலத்தில்  எனக்கு  உண்டான  தரிசனத்திலே  நான்  கண்டது  என்னவென்றால்:  இதோ,  வானத்தின்  நாலு  காற்றுகளும்  பெரிய  சமுத்திரத்தின்மேல்  அடித்தது.  (தானியேல்  7:2)

thaaniyeal  sonnathu:  iraaththirikaalaththil  enakku  u'ndaana  tharisanaththilea  naan  ka'ndathu  ennaven’raal:  ithoa,  vaanaththin  naalu  kaat’ruga'lum  periya  samuththiraththinmeal  adiththathu.  (thaaniyeal  7:2)

அப்பொழுது  வெவ்வேறு  ரூபமுள்ள  நாலு  பெரிய  மிருகங்கள்  சமுத்திரத்திலிருந்து  எழும்பின.  (தானியேல்  7:3)

appozhuthu  vevvea’ru  roobamu'l'la  naalu  periya  mirugangga'l  samuththiraththilirunthu  ezhumbina.  (thaaniyeal  7:3)

முந்தினது  சிங்கத்தைப்போல  இருந்தது;  அதற்குக்  கழுகின்  செட்டைகள்  உண்டாயிருந்தது;  நான்  பார்த்துக்கொண்டிருக்கையில்,  அதின்  இறகுகள்  பிடுங்கப்பட்டது;  அது  தரையிலிருந்து  எடுக்கப்பட்டு,  மனுஷனைப்போல  இரண்டு  காலின்மேல்  நிமிர்ந்து  நிற்கும்படி  செய்யப்பட்டது;  மனுஷ  இருதயம்  அதற்குக்  கொடுக்கப்பட்டது.  (தானியேல்  7:4)

munthinathu  singgaththaippoala  irunthathu;  atha’rkuk  kazhugin  settaiga'l  u'ndaayirunthathu;  naan  paarththukko'ndirukkaiyil,  athin  i’raguga'l  pidunggappattathu;  athu  tharaiyilirunthu  edukkappattu,  manushanaippoala  ira'ndu  kaalinmeal  nimirnthu  ni’rkumpadi  seyyappattathu;  manusha  iruthayam  atha’rkuk  kodukkappattathu.  (thaaniyeal  7:4)

பின்பு,  கரடிக்கு  ஒப்பாகிய  வேறே  இரண்டாம்  மிருகத்தைக்  கண்டேன்;  அது  ஒரு  பக்கமாய்ச்  சாய்ந்துநின்று,  தன்  வாயின்  பற்களுக்குள்ளே  மூன்று  விலாவெலும்புகளைக்  கவ்விக்கொண்டிருந்தது;  எழும்பி  வெகு  மாம்சம்  தின்னென்று  அதற்குச்  சொல்லப்பட்டது.  (தானியேல்  7:5)

pinbu,  karadikku  oppaagiya  vea’rea  ira'ndaam  mirugaththaik  ka'ndean;  athu  oru  pakkamaaych  saaynthunin’ru,  than  vaayin  pa’rka'lukku'l'lea  moon’ru  vilaavelumbuga'laik  kavvikko'ndirunthathu;  ezhumbi  vegu  maamsam  thinnen’ru  atha’rkuch  sollappattathu.  (thaaniyeal  7:5)

அதின்பின்பு,  சிவிங்கியைப்போலிருக்கிற  வேறொரு  மிருகத்தைக்  கண்டேன்;  அதின்  முதுகின்மேல்  பட்சியின்  செட்டைகள்  நாலு  இருந்தது;  அந்த  மிருகத்துக்கு  நாலு  தலைகளும்  உண்டாயிருந்தது;  அதற்கு  ஆளுகை  அளிக்கப்பட்டது.  (தானியேல்  7:6)

athinpinbu,  sivinggiyaippoalirukki’ra  vea’roru  mirugaththaik  ka'ndean;  athin  muthuginmeal  padchiyin  settaiga'l  naalu  irunthathu;  antha  mirugaththukku  naalu  thalaiga'lum  u'ndaayirunthathu;  atha’rku  aa'lugai  a'likkappattathu.  (thaaniyeal  7:6)

அதற்குப்பின்பு,  இராத்தரிசனங்களில்  நாலாம்  மிருகத்தைக்  கண்டேன்;  அது  கெடியும்  பயங்கரமும்  மகா  பலத்ததுமாயிருந்தது;  அதற்குப்  பெரிய  இருப்புப்பற்கள்  இருந்தது;  அது  நொறுக்கிப்  பட்சித்து,  மீதியானதைத்  தன்  கால்களால்  மிதித்துப்போட்டது;  அது  தனக்கு  முன்னிருந்த  எல்லா  மிருகங்களைப்பார்க்கிலும்  வேற்றுருவமாயிருந்தது,  அதற்குப்  பத்துக்  கொம்புகள்  இருந்தது.  (தானியேல்  7:7)

atha’rkuppinbu,  iraaththarisanangga'lil  naalaam  mirugaththaik  ka'ndean;  athu  kediyum  bayanggaramum  mahaa  balaththathumaayirunthathu;  atha’rkup  periya  iruppuppa’rka'l  irunthathu;  athu  no’rukkip  padchiththu,  meethiyaanathaith  than  kaalga'laal  mithiththuppoattathu;  athu  thanakku  munniruntha  ellaa  mirugangga'laippaarkkilum  veat’ruruvamaayirunthathu,  atha’rkup  paththuk  kombuga'l  irunthathu.  (thaaniyeal  7:7)

அந்தக்  கொம்புகளை  நான்  கவனித்திருக்கையில்,  இதோ,  அவைகளுக்கு  இடையிலே  வேறொரு  சின்ன  கொம்பு  எழும்பிற்று;  அதற்கு  முன்பாக  முந்தின  கொம்புகளில்  மூன்று  பிடுங்கப்பட்டது;  இதோ,  அந்தக்  கொம்பிலே  மனுஷகண்களுக்கு  ஒப்பான  கண்களும்  பெருமையானவைகளைப்  பேசும்  வாயும்  இருந்தது.  (தானியேல்  7:8)

anthak  kombuga'lai  naan  kavaniththirukkaiyil,  ithoa,  avaiga'lukku  idaiyilea  vea’roru  sinna  kombu  ezhumbit’ru;  atha’rku  munbaaga  munthina  kombuga'lil  moon’ru  pidunggappattathu;  ithoa,  anthak  kombilea  manushaka'nga'lukku  oppaana  ka'nga'lum  perumaiyaanavaiga'laip  peasum  vaayum  irunthathu.  (thaaniyeal  7:8)

நான்  பார்த்துக்கொண்டிருக்கையில்,  சிங்காசனங்கள்  வைக்கப்பட்டது;  நீண்ட  ஆயுசுள்ளவர்  வீற்றிருந்தார்;  அவருடைய  வஸ்திரம்  உறைந்த  மழையைப்போலவும்,  அவருடைய  சிரசின்  மயிர்  வெண்மையாகவும்  பஞ்சைப்போலத்  துப்புரவாகவும்  இருந்தது;  அவருடைய  சிங்காசனம்  அக்கினிஜுவாலையும்,  அதின்  சக்கரங்கள்  எரிகிற  நெருப்புமாயிருந்தது.  (தானியேல்  7:9)

naan  paarththukko'ndirukkaiyil,  singgaasanangga'l  vaikkappattathu;  nee'nda  aayusu'l'lavar  veet’rirunthaar;  avarudaiya  vasthiram  u’raintha  mazhaiyaippoalavum,  avarudaiya  sirasin  mayir  ve'nmaiyaagavum  pagnchaippoalath  thuppuravaagavum  irunthathu;  avarudaiya  singgaasanam  akkinijuvaalaiyum,  athin  sakkarangga'l  erigi’ra  neruppumaayirunthathu.  (thaaniyeal  7:9)

அக்கினி  நதி  அவர்  சந்நிதியிலிருந்து  புறப்பட்டு  ஓடினது;  ஆயிரமாயிரம்பேர்  அவரைச்  சேவித்தார்கள்;  கோடாகோடிபேர்  அவருக்கு  முன்பாக  நின்றார்கள்;  நியாயசங்கம்  உட்கார்ந்தது;  புஸ்தகங்கள்  திறக்கப்பட்டது.  (தானியேல்  7:10)

akkini  nathi  avar  sannithiyilirunthu  pu’rappattu  oadinathu;  aayiramaayirampear  avaraich  seaviththaarga'l;  koadaakoadipear  avarukku  munbaaga  nin’raarga'l;  niyaayasanggam  udkaarnthathu;  pusthagangga'l  thi’rakkappattathu.  (thaaniyeal  7:10)

அப்பொழுது  நான்  பார்த்தேன்;  நான்  பார்த்துக்கொண்டிருக்கையில்  அந்தக்  கொம்பு  பெருமையான  பேச்சுகளைப்  பேசினதினிமித்தம்  அந்த  மிருகம்  கொலைசெய்யப்பட்டது;  அதின்  உடல்  அழிக்கப்பட்டு,  எரிகிற  அக்கினிக்கு  ஒப்புக்கொடுக்கப்பட்டது.  (தானியேல்  7:11)

appozhuthu  naan  paarththean;  naan  paarththukko'ndirukkaiyil  anthak  kombu  perumaiyaana  peachchuga'laip  peasinathinimiththam  antha  mirugam  kolaiseyyappattathu;  athin  udal  azhikkappattu,  erigi’ra  akkinikku  oppukkodukkappattathu.  (thaaniyeal  7:11)

மற்ற  மிருகங்களுடைய  ஆளுகையோவென்றால்,  அவைகளை  விட்டு  நீக்கப்பட்டது;  ஆனாலும்,  அவைகளுக்குக்  காலமும்  சமயமும்  ஆகுமட்டும்  அவைகள்  உயிரோடே  இருக்கும்படி  கட்டளையிடப்பட்டது.  (தானியேல்  7:12)

mat’ra  mirugangga'ludaiya  aa'lugaiyoaven’raal,  avaiga'lai  vittu  neekkappattathu;  aanaalum,  avaiga'lukkuk  kaalamum  samayamum  aagumattum  avaiga'l  uyiroadea  irukkumpadi  katta'laiyidappattathu.  (thaaniyeal  7:12)

இராத்தரிசனங்களிலே  நான்  பார்த்துக்கொண்டிருக்கையில்,  இதோ,  மனுஷகுமாரனுடைய  சாயலான  ஒருவர்  வானத்து  மேகங்களுடனே  வந்தார்;  அவர்  நீண்ட  ஆயுசுள்ளவர்  இடமட்டும்  வந்து,  அவர்  சமீபத்தில்  கொண்டுவரப்பட்டார்.  (தானியேல்  7:13)

iraaththarisanangga'lilea  naan  paarththukko'ndirukkaiyil,  ithoa,  manushakumaaranudaiya  saayalaana  oruvar  vaanaththu  meagangga'ludanea  vanthaar;  avar  nee'nda  aayusu'l'lavar  idamattum  vanthu,  avar  sameebaththil  ko'nduvarappattaar.  (thaaniyeal  7:13)

சகல  ஜனங்களும்  ஜாதியாரும்,  பாஷைக்காரரும்  அவரையே  சேவிக்கும்படி,  அவருக்குக்  கர்த்தத்துவமும்  மகிமையும்  ராஜரிகமும்  கொடுக்கப்பட்டது;  அவருடைய  கர்த்தத்துவம்  நீங்காத  நித்திய  கர்த்தத்துவமும்,  அவருடைய  ராஜ்யம்  அழியாததுமாயிருக்கும்.  (தானியேல்  7:14)

sagala  janangga'lum  jaathiyaarum,  baashaikkaararum  avaraiyea  seavikkumpadi,  avarukkuk  karththaththuvamum  magimaiyum  raajarigamum  kodukkappattathu;  avarudaiya  karththaththuvam  neenggaatha  niththiya  karththaththuvamum,  avarudaiya  raajyam  azhiyaathathumaayirukkum.  (thaaniyeal  7:14)

தானியேலாகிய  நான்  என்  தேகத்தினுள்  என்  ஆவியிலே  சஞ்சலப்பட்டேன்;  என்  தலையில்  தோன்றின  தரிசனங்கள்  என்னைக்  கலங்கப்பண்ணினது.  (தானியேல்  7:15)

thaaniyealaagiya  naan  en  theagaththinu'l  en  aaviyilea  sagnchalappattean;  en  thalaiyil  thoan’rina  tharisanangga'l  ennaik  kalanggappa'n'ninathu.  (thaaniyeal  7:15)

சமீபத்தில்  நிற்கிறவர்களில்  ஒருவனிடத்தில்  நான்  போய்,  இதன்  பொருள்  எல்லாவற்றையும்  எனக்குச்  சொல்லும்படி  அவனை  வேண்டிக்கொண்டேன்;  அவன்  அந்தக்  காரியங்களின்  அர்த்தத்தை  எனக்கு  அறிவித்துச்  சொன்னது  என்னவென்றால்:  (தானியேல்  7:16)

sameebaththil  ni’rki’ravarga'lil  oruvanidaththil  naan  poay,  ithan  poru'l  ellaavat’raiyum  enakkuch  sollumpadi  avanai  vea'ndikko'ndean;  avan  anthak  kaariyangga'lin  arththaththai  enakku  a’riviththuch  sonnathu  ennaven’raal:  (thaaniyeal  7:16)

அந்த  நாலு  பெரிய  மிருகங்களும்  பூமியிலிருந்து  எழும்புகிற  நாலு  ராஜாக்கள்.  (தானியேல்  7:17)

antha  naalu  periya  mirugangga'lum  boomiyilirunthu  ezhumbugi’ra  naalu  raajaakka'l.  (thaaniyeal  7:17)

ஆனாலும்  உன்னதமானவருடைய  பரிசுத்தவான்கள்  ராஜரிகத்தைப்  பெற்று,  என்றென்றைக்குமுள்ள  சதாகாலங்களிலும்  ராஜ்யத்தைச்  சுதந்தரித்துக்கொள்வார்கள்  என்றான்.  (தானியேல்  7:18)

aanaalum  unnathamaanavarudaiya  parisuththavaanga'l  raajarigaththaip  pet’ru,  en’ren’raikkumu'l'la  sathaakaalangga'lilum  raajyaththaich  suthanthariththukko'lvaarga'l  en’raan.  (thaaniyeal  7:18)

அப்பொழுது  மற்றவைகளையெல்லாம்  பார்க்கிலும்  வேற்றுருவும்  கெடியுமுள்ளதுமாய்,  இருப்புப்  பற்களும்,  வெண்கல  நகங்களுமுடையதாய்  நொறுக்கிப்  பட்சித்து,  மீதியானதைத்  தன்  கால்களால்  மிதித்துப்போட்டதுமாயிருந்த  நாலாம்  மிருகத்தைக்குறித்தும்,  (தானியேல்  7:19)

appozhuthu  mat’ravaiga'laiyellaam  paarkkilum  veat’ruruvum  kediyumu'l'lathumaay,  iruppup  pa’rka'lum,  ve'ngala  nagangga'lumudaiyathaay  no’rukkip  padchiththu,  meethiyaanathaith  than  kaalga'laal  mithiththuppoattathumaayiruntha  naalaam  mirugaththaikku’riththum,  (thaaniyeal  7:19)

அதின்  தலைமேலுள்ள  பத்துக்  கொம்புகளைக்குறித்தும்,  தனக்கு  முன்பாக  மூன்று  கொம்புகள்  விழுந்துபோக  எழும்பினதுமாய்,  கண்களையும்  பெருமையானவைகளைப்  பேசும்  வாயையுமுடையதுமாய்,  மற்றவைகளைப்பார்க்கிலும்  பருமனாகத்  தோன்றினதுமாயிருந்த  அந்த  வேறே  கொம்பைக்குறித்தும்,  அவற்றின்  பொருளை  அறிய  மனதாயிருந்தேன்.  (தானியேல்  7:20)

athin  thalaimealu'l'la  paththuk  kombuga'laikku’riththum,  thanakku  munbaaga  moon’ru  kombuga'l  vizhunthupoaga  ezhumbinathumaay,  ka'nga'laiyum  perumaiyaanavaiga'laip  peasum  vaayaiyumudaiyathumaay,  mat’ravaiga'laippaarkkilum  parumanaagath  thoan’rinathumaayiruntha  antha  vea’rea  kombaikku’riththum,  avat’rin  poru'lai  a’riya  manathaayirunthean.  (thaaniyeal  7:20)

நீண்ட  ஆயுசுள்ளவர்  வருமட்டாகவும்,  நியாயவிசாரிப்பு  உன்னதமானவருடைய  பரிசுத்தவான்களுக்குக்  கொடுக்கப்பட்டு,  பரிசுத்தவான்கள்  ராஜ்யத்தைச்  சுதந்தரித்துக்கொள்ளும்  காலம்  வருமட்டாகவும்,  (தானியேல்  7:21)

nee'nda  aayusu'l'lavar  varumattaagavum,  niyaayavisaarippu  unnathamaanavarudaiya  parisuththavaanga'lukkuk  kodukkappattu,  parisuththavaanga'l  raajyaththaich  suthanthariththukko'l'lum  kaalam  varumattaagavum,  (thaaniyeal  7:21)

இந்தக்  கொம்பு  பரிசுத்தவான்களோடே  யுத்தம்பண்ணி,  அவர்களை  மேற்கொண்டது  என்று  கண்டேன்.  (தானியேல்  7:22)

inthak  kombu  parisuththavaanga'loadea  yuththampa'n'ni,  avarga'lai  mea’rko'ndathu  en’ru  ka'ndean.  (thaaniyeal  7:22)

அவன்  சொன்னது:  நாலாம்  மிருகம்  பூமியிலே  உண்டாகும்  நாலாம்  ராஜ்யமாம்;  அது  எல்லா  ராஜ்யங்களைப்பார்க்கிலும்  வேறாயிருந்து,  பூமியை  எல்லாம்  பட்சித்து,  அதை  மிதித்து,  அதை  நொறுக்கிப்போடும்.  (தானியேல்  7:23)

avan  sonnathu:  naalaam  mirugam  boomiyilea  u'ndaagum  naalaam  raajyamaam;  athu  ellaa  raajyangga'laippaarkkilum  vea’raayirunthu,  boomiyai  ellaam  padchiththu,  athai  mithiththu,  athai  no’rukkippoadum.  (thaaniyeal  7:23)

அந்தப்  பத்துக்கொம்புகள்  என்னவென்றால்,  அந்த  ராஜ்யத்திலே  எழும்பும்  பத்து  ராஜாக்களாம்;  அவர்களுக்குப்பின்பு  வேறொருவன்  எழும்புவான்;  அவன்  முந்தினவர்களைப்பார்க்கிலும்  வேறாயிருந்து,  மூன்று  ராஜாக்களைத்  தாழ்த்திப்போட்டு,  (தானியேல்  7:24)

anthap  paththukkombuga'l  ennaven’raal,  antha  raajyaththilea  ezhumbum  paththu  raajaakka'laam;  avarga'lukkuppinbu  vea’roruvan  ezhumbuvaan;  avan  munthinavarga'laippaarkkilum  vea’raayirunthu,  moon’ru  raajaakka'laith  thaazhththippoattu,  (thaaniyeal  7:24)

உன்னதமானவருக்கு  விரோதமாக  வார்த்தைகளைப்  பேசி,  உன்னதமானவருடைய  பரிசுத்தவான்களை  ஒடுக்கி,  காலங்களையும்  பிரமாணங்களையும்  மாற்ற  நினைப்பான்;  அவர்கள்  ஒரு  காலமும்,  காலங்களும்,  அரைக்காலமும்  செல்லுமட்டும்  அவன்  கையில்  ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்.  (தானியேல்  7:25)

unnathamaanavarukku  viroathamaaga  vaarththaiga'laip  peasi,  unnathamaanavarudaiya  parisuththavaanga'lai  odukki,  kaalangga'laiyum  piramaa'nangga'laiyum  maat’ra  ninaippaan;  avarga'l  oru  kaalamum,  kaalangga'lum,  araikkaalamum  sellumattum  avan  kaiyil  oppukkodukkappaduvaarga'l.  (thaaniyeal  7:25)

ஆனாலும்  நியாயசங்கம்  உட்காரும்;  அப்பொழுது  முடிவுபரியந்தம்  அவனைச்  சங்கரிக்கும்படியாகவும்  அழிக்கும்படியாகவும்  அவனுடைய  ஆளுகையை  நீக்கிப்போடுவார்கள்.  (தானியேல்  7:26)

aanaalum  niyaayasanggam  udkaarum;  appozhuthu  mudivupariyantham  avanaich  sanggarikkumpadiyaagavum  azhikkumpadiyaagavum  avanudaiya  aa'lugaiyai  neekkippoaduvaarga'l.  (thaaniyeal  7:26)

வானத்தின்  கீழெங்குமுள்ள  ராஜ்யங்களின்  ராஜரிகமும்  ஆளுகையும்  மகத்துவமும்  உன்னதமானவருடைய  பரிசுத்தவான்களாகிய  ஜனங்களுக்குக்  கொடுக்கப்படும்;  அவருடைய  ராஜ்யம்  நித்திய  ராஜ்யம்;  சகல  கர்த்தத்துவங்களும்  அவரைச்  சேவித்து,  அவருக்குக்  கீழ்ப்பட்டிருக்கும்  என்றான்.  (தானியேல்  7:27)

vaanaththin  keezhenggumu'l'la  raajyangga'lin  raajarigamum  aa'lugaiyum  magaththuvamum  unnathamaanavarudaiya  parisuththavaanga'laagiya  janangga'lukkuk  kodukkappadum;  avarudaiya  raajyam  niththiya  raajyam;  sagala  karththaththuvangga'lum  avaraich  seaviththu,  avarukkuk  keezhppattirukkum  en’raan.  (thaaniyeal  7:27)

அவன்  சொன்ன  வார்த்தை  இத்தோடே  முடிந்தது.  தானியேலாகிய  நான்  என்  நினைவுகளால்  மிகவும்  கலங்கினேன்;  என்  முகம்  வேறுபட்டது;  இந்தக்  காரியத்தை  என்  மனதிலே  வைத்துக்கொண்டேன்.  (தானியேல்  7:28)

avan  sonna  vaarththai  iththoadea  mudinthathu.  thaaniyealaagiya  naan  en  ninaivuga'laal  migavum  kalangginean;  en  mugam  vea’rupattathu;  inthak  kaariyaththai  en  manathilea  vaiththukko'ndean.  (thaaniyeal  7:28)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!